World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Government launches assault on immigrants

பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் மீது அரசாங்கம் தாக்குதலை தொடங்குகிறது

By Antoine Lerougetel and Pierre Mabut
29 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் மீது மிகப் பெரிய அளவிலான ஒரு இனவெறி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE என்னும் சட்டம், இளந்தொழிலாளர்களை தன்விருப்பப்படி வெளியேற்ற முதலாளிகளுக்கு உரிமை கொடுத்திருந்தது), பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களின் பெரும்பகுதியில் பரந்த, உறுதியான முறையில் எதிர்ப்பு இயக்கம் வெளிப்பட்ட நிலையில், 3 மில்லியன் பல்கலைக்கழக மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த போதிலும்கூட, அரசாங்கம் குடிவரவு மசோதாவுடன் தன்னுடைய பிற்போக்கு தன்மை நிறைந்த சட்டமியற்றும் திட்டத்தை தொடர்கிறது. இச்சட்டம் புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் வேலைப் பாதுகாப்பற்ற தன்மையை அதிகரிக்கும்; பாராளுமன்றத்தில் மே 2ம் தேதி அது நிறைவேற்றப்படும்போது எத்தடையும் இருக்காது.

சார்க்கோசியினால் கொண்டுவரப்படும் குடிவரவு மசோதா இன்னும் கூடுதலான வகையில் புலம்பெயர்பவர்களை குற்றவாளிகளாக காட்டும் தன்மையை கொண்டுள்ளது; தற்போதுள்ள "நீடித்த குடிவரவு" என்பதை எதிர்த்து "தேர்ந்தெடுக்கப்பட்ட குடிவரவு" என்ற முறை வரவேண்டும் என்று சார்க்கோசி அழைப்பு விடுத்துள்ளார். 10 ஆண்டுகள் பிரான்சில் வசித்தால் இயல்பாக குடியுரிமை அளிக்கப்படும் நிலை இனி தடுத்துநிறுத்தப்படும்.

குடும்பத்தின் உறுப்பினர்கள் பிரான்சில் சட்டபூர்வமாக வசிப்பவர்களுடன் சேர்ந்து கொளும் உரிமை மிகப் பெரிய முறையில் குறைக்கப்பட்டுவிடும். தங்களுக்கு பிரியமானவர்களுக்கு போதுமான வசதிகள் அளிக்க முடியும் என்று குடும்பங்கள் நிரூபிக்க வேண்டும்; "பிரெஞ்சு சமூகத்தின் குடியாட்சி தன்மையுடன் இணைந்து கொள்ளுவதற்கு" தக்க பொருத்தம் இருப்பதாக நிரூபிக்கும் சோதனையில் உறுப்பினர்கள் தேர்ச்சி அடையவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் குடிமக்களை திருமணம் செய்து கொள்ளும் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவிக்கு பிரான்சில் வசிக்கும் உரிமையைக் கொடுத்துவிடமுடியாது; பிரெஞ்சு அதிகாரிகளுடைய திருப்திக்கு ஏற்ப தங்கள் திருமணத்தின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் நீண்ட காலம் விசாவில் தங்கிய பிறகு தம் தாய்நாட்டிற்கு திரும்பிவிட வேண்டும். பல நாடுகளில் உள்ள அரசியல் நிலைமைகளின் காரணமாக பெருஞ்செலவு பிடிக்கும் இந்த தேவை அடிக்கடி ஆபத்தானதாக இருக்கும்.

ஒரு தொழிலாளி முதலாளியால் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டால் ஓராண்டு தற்காலிக பணி உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுவிடும். "நுட்பம், திறமைகள்" உடைய மூன்று ஆண்டு வசிக்கும் உரிமங்கள், "பிரெஞ்சு பொருளாதாரம் அல்லது உலகில் பிரெஞ்சு செல்வாக்கின் வளர்ச்சியில் பங்கு பெறுவோருக்கு" மட்டுமே அளிக்கப்படும்.

இத்தகைய முன்முயற்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஐரோப்பிய கோட்டை" எனப்படும் குடிவரவு கொள்கைகளுடன் முற்றிலும் பொருந்தும், ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவிற்கு கள்ளத்தனமான முறையில் குறிப்பாக ஆபிரிக்காவில் இருந்து வரும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறப்பதற்கு காரணமாக இருக்கும் இம்முறையானது, ஏராளமாக மக்கள் சட்டவிரோதமானவராக அறிவிக்கும், ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 25,000 பேரையாவது பிரான்சில் இருந்து வெளியேற்றும் சார்க்கோசியின் இலக்கிற்கு பங்களிப்பு செய்யும்.

இப்பிரச்சாரத்தோடு கூட, அரசாங்கப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் பர்தாக்கள் அணிவதற்கு எதிரான சட்டத்துடனும், ஆபிரிக்க குடும்பங்களின் பலதார திருமண முறையினால் பெருகிய குழந்தைகள்தான் இலையுதிர்கால புறநகர் எழுச்சியில் கணிசமாக இருந்தனர் என்ற அரசாங்க அமைச்சர்களின் ஏற்கமுடியாத திகைப்பான கூற்றுக்களும், பிரான்சில் கடந்த 30 ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் சமூக சிதைவில் இருந்து திசை திருப்ப அரசாங்கத்தால் இனவாத நெருப்பு கிளறிவிடுவதாகவும் தொழிலாளர்கள், சமுக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மறைமுக திரைஆகவும் உள்ளன. ஏப்ரல் 22 அன்று UMP கட்சியின் 2000 புதிய உறுப்பினர்களுக்கு வழங்கிய உரை ஒன்றில் சார்க்கோசி மிகத் தீவிர வலதுசாரி வாக்காளர்களுக்கு வெளிப்படையான அழைப்பை முன்வைத்தார். குடியேறும் மக்களுக்கு அவர் கீழ்க்கண்ட எச்சரிக்கையை விடுத்தார். "பிரான்சில் வாழ்வது நலமாக இல்லை என்று அவர்கள் கருதினால், அவர்களுக்கு பிடிக்காத நாட்டைவிட்டு வெளியேறுவது அவர்களுக்கு வசதியின்மையைக் கொடுக்காது... ஒரு மிகச்சிறிய சிறுபான்மையை திருப்தி செய்வதற்காக ஒரு நாடு தன்னுடைய சட்டங்கள், பழக்க வழக்கங்கள், மரபுகள் அனைத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கோரக்கூடாது. பிரெஞ்சுக்காரர்களாக இருப்பதற்காக நாம் ஏதோ மன்னிப்புக்கோரி வாழவேண்டும் என்ற உணர்வை நாம் இத்துணை காலம் பொறுத்து வந்தது போதும்."

ஜோன் மரி லூ பென்னுடைய National Front (FN), பிலிப் டு வில்லியே இன் இனவெறியாளர் இயக்கமான MPF இன் ஆதரவாளர்களை இலக்கு கொண்டதோடு மட்டும் இல்லாமல், சார்க்கோசி தொடர்ச்சியாக வலது இடது என்று மாறிமாறி வந்துள்ள அரசாங்கங்களினால் பல தசாப்தங்களாக பெருகும் வேலையின்மை மற்றும் சமூக சீரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள இடதுசாரி வாக்காளர்களையும் திகைக்க வகைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்; இவர்கள், குறிப்பாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் கோட்டைகளாக பிரான்சின் தொழில் வளர்ச்சி அடைந்த நகர்ப்பகுதிகளின் மக்கள் ஆவர். "கம்யூனிஸ்ட் கட்சியின் மீது நம்பிக்கை வைத்திருந்த சாதாரண இடதுசாரி வாக்காளர்களுக்கும் நான் கூறவிரும்புவது என்னவென்றால், அவர்களில் பலரும் எங்களுடன் சேர்ந்து கொண்டு, மாறுதல்கள் வரவுள்ளன என கருதலாம்." என்று சார்க்கோசி கூறினார்.

இஸ்லாம் பற்றிய அச்சம் மற்றும் வெறுப்பு என்ற சூழ்நிலைக்கு ஊக்கமளிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தனக்கு வாக்கு வேண்டும் என்பதற்காக பிலிப் டு வில்லியே தனது தளத்தை உருவாக்கி வருகிறார். இந்த வாரம் The Mosques of Roissy என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகம் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று இழிவான முத்திரை கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. கடந்த ஞாயிறன்று இவர் வானொலியில் பேசும்போது, "இஸ்லாம் என்பது நம் குடியரசுடன் இயைந்து இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் இருப்பதோ மிகக் குறைந்த அளவில் இல்லாமல் உண்மையான ஆழ்ந்த ஆபத்தை தரும் வகையில் உள்ள நிலைமையாகும்" என்று கூறினார் என Le Monde தகவலை வெளியிட்டுள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான Francois Hollande இந்த இனவெறி இழி சொற்களுக்கு தன்னுடைய வகையிலான நாட்டுப்பற்றை கொண்டு எதிர்கொள்ளும் வகையில் கூறியதாவது: "பிரான்சின் மீதான பற்று என்பதற்கு வலதுசாரியினர் ஏகபோக உரிமையை கொண்டாட முடியாது." உண்மையில் சோசலிஸ்ட் கட்சியின் வலைத் தளத்தில் சார்க்கோசியின் சட்டம் பற்றி விரிவான விமர்சனம் ஏதும் கொடுக்கப்படவில்லை. அவ்வப்பொழுது அது கொடுக்கும் சிறு குறிப்புக்கள் இப்பொழுதுள்ள அரசாங்கத்தைவிட குடியேற்ற பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கு சோசலிஸ்ட் கட்சியால் முடியும் என்றுதான் வலியுறுத்துகின்றன. "எமது நாடு மற்றும் குடியேறுபவர்களின் தாய்நாடுகள் ஆகியவற்றின் சீரான, திறமையான மதிப்பிற்குரிய தன்மைகளை கருத்திற்கொண்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்" என்று அது கூறியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவிற்குட்பட்ட இடதுசாரி அரசாங்கங்கள் 1981ம் ஆண்டில் இருந்து குடியேறுபவர்களை கட்டுப்படுத்துதல், சட்டவிரோதமாக வந்துள்ள குடியேறிகளை துரத்தியடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய குடிவரவுச் சட்டம் பற்றி இடது கட்சிகளால் கூறப்படும் எந்த விமர்சனங்களும் மட்டும், உலக அரங்கில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பெருவணிகப் போட்டி நலன்களை பெருக்குவதற்காக தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் ஆழ்ந்த தாக்குதல்களை கொள்ள தயாரிக்கப்பட்டு வரும் இனவெறித்தாக்குதல் முறை நடவடிக்கைகளை சார்க்கோசி புதுப்பிப்பதிலும், இப்பொழுதுள்ள அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியிலும் குற்றச்செயலுக்கான தங்களது உடந்தை நிலையை இணைந்து இடது கட்சிகள் மூடி மறைக்க இயலாது.

ஒரு மாதத்திற்கு முன்புதான் டு வில்ப்பன் மற்றும் சார்கோசியின் அரசாங்கம், அரசாங்கத்தையே பதவியில் இருந்து இறக்கிவிடும் திறனை கொண்டிருந்த பல்கலைக்கழக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வெகுஜன இயக்கத்தால் முற்றுகையிடப்பட்டது. இப்பொழுது அது தன்னுடைய வலதுசாரி செயற்பட்டியலை தொடர்வதற்கு வலுவுடன் இருப்பதாக நினைப்பதற்கே, இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள்தான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

போராட்டத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டிருந்த (National Student Coordination) தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு அமைப்பு, தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்தபோது, Intersyndicale என்னும் அமைப்பில் இணைந்திருந்த தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புக்களும், CPE திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மட்டும் இயக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு வலியுறுத்தின. உண்மையில் CPE என்பது வேலைப் பாதுகாப்பு, சமூக உரிமைகள், குடியேற்ற-எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கூறுபாடுதான்.

சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, Ligue Communiste Revolutionnaire (LCR) உட்பட இடதின் 11 கட்சிகளும் இதே நிலைப்பாட்டைத்தான் ஏற்றிருந்தன. அக்கருத்தரங்கு Riposte Collective ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவை அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்று அழைப்புவிடவில்லை; இதையொட்டி அரசாங்கம் தன்னுடைய வலதுசாரி செயற்திட்டத்தை தொடர முடிந்தது. LCR ஆவணம் ஒன்று, முழு இடதும் கோலிச ஆட்சி பற்றிய சந்தர்ப்பவாத அரசியலை எப்படிக் கொண்டுள்ளது என்று சுருக்கமாக கூறியது: "LCR இன் தேசியக்குழு தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட முன்னோக்கை ஆராய்ந்தது; இயக்கத்தின் தற்போதைய கட்டத்திற்கு அது பொருந்தா கருத்து என்று உணர்கிறது."

மே-ஜூன் 1968ல் கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவாளர்கள் அனைவருமே டு கோலை அரசாங்கத்தில் இருந்து விரட்டி அதற்கு பதிலாக தொழிலாளர் அரசாங்கம் ஒன்றை பதவியில் இருத்துவதற்கான அரசியல் தாக்குதலை நடத்துவதற்கான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்ட பரந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. டு கோல் பின்னர் முன்முயற்சி எடுத்துக் கொள்ள முடிந்ததுடன், பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் இன்னும் 13 ஆண்டுகளுக்கு வலதுசாரி அரசாங்கத்தை சுமக்க வேண்டியதாயிற்று.

இன்று பிரெஞ்சு அரசாங்கம் Intersyndicale மற்றும் Riposte Collective ஆகியவற்றின் தயவினால் வெகுஜன இயக்கத்தால் தற்காலிகமாக பின்தள்ளப்பட்ட நிலையில் இருந்து மீண்டு, அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஜனாதிபதி சிராக்கும், பிரதம மந்திரி வில்ப்பனும் மக்களிடையே கொண்டுள்ள ஆதரவு நிலை 29, 24 சதவிகதம்தான் முறையே என்று IFOP இன் சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது; இது ஏப்ரல் 10 CPE அதிகாரபூர்வமாக திரும்பப் பெறப்பட்ட பின்னர் இருந்த ஆதரவு நிலையை விட முறையே 10, 13 சதவிகிதம் குறைவு ஆகும்.

ஆனால் CPE க்கு பதிலாக குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம், முதலாளிகளுக்கு ரொக்க ஊக்கத்தோகை ஆகியவற்றை ஏற்ற நிலையிலும், அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு நிக்கோலா சார்க்கோசி விடுத்த அழைப்பை ஏற்ற வகையிலும், தொழிற்சங்கங்கள் சார்க்கோசி தலைமையில் இருக்கும் அரசாங்கத்தின் மிக அதிக வலதுசாரி சார்புடைய சக்திகளுக்கு தொடக்க முயற்சியை மீண்டும் விட்டுக் கொடுத்துள்ளன.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் (Union for a Popular Movement) UMP கட்சியின் முன்னணி வேட்பாளராக சார்க்கோசி உள்ளார் மற்றும் இனவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினால் வென்றெடுக்கப்பட்ட சமூக நலன்கள் அனைத்தையும் அழித்தல் என்ற அடிப்படையிலான அவரது செயற்பட்டியலை தொடங்க உள்ளார். "சமூகப் பங்காளிகள்" எனப்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் வேண்டும் என இப்போது குழுவிசைக்கும் இம்மனிதர் உண்மையில் தொழிலாளர்களை இனவாதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தத்தான் முயன்று வருகிறார்.

குடியேறுபவர்கள் மற்றும் சமூக, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு இப்பொழுது மிக அவசரமாக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகர தலைமை அமைக்கப்பட வேண்டிய பணி உள்ளது. அத்தகைய புதிய தலைமையை கட்டமைக்கும் மத்திய கருவியான உலக சோசலிச வலைத் தளம் உள்ளது. WSWS, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய தள பதிப்பாகும்; இவை இரண்டும் பல தசாப்தங்களாக மார்க்சிசத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அளிப்பையும் பாதுகாத்து வருவதாகும்.

தாங்கள் விரும்பும் எந்த நாட்டிலும் முழு, சம, சட்டபூர்வ உரிமைகளுடன் வசித்து, வாழ்ந்து, கற்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு என்பதை WSWS ஆதரிக்கிறது. இந்த முதலாளித்துவ உலகந்தழுவிய முறை சகாப்தத்தில் உலகளாவிய முறையில் தொழிலாளர்களுடைய உரிமைகளும் வாழ்க்கை தரங்களும் தாக்கப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் ஒரு பகுதியேயாகும் இது. இதற்கு அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள், இனத்தை சேர்ந்தவர்கள், மதத்தை சேர்ந்தவர்கள் என்று தொழிலாளர்கள் அனைவரும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை கொண்ட சர்வதேச வெகுஜன இயக்கம் கட்டியமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

நாம் ஏகாதிபத்திய போரை எதிர்த்து, ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும் அனைத்து வெளிநாட்டு படைகளும் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

மிகப் பெரிய நிதிய, தொழில்துறை, வணிக அமைப்புக்கள் ஜனநாயக முறையில், பொதுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, வறுமை அகற்றப்படுவதற்கும், பாதுகாப்பான வேலை மற்றும் அனைத்து மக்களுக்கும் தரமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அளிப்பதற்கு ஒரு சர்வதேச மற்றும் அறிவார்ந்த அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவில் இருக்கும் தொழிலாள வர்க்கம் முழுவதும் அதன் சொந்த வேலைத் திட்டமான ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் மீதாக கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும்.

அனைத்து இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களையும் பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள நான்காம் அகிலத்தின் பகுதிகளை கட்டியமைக்கும் பணியில் சேருமாறும், WSWS ஐ படிக்குமாறும் அழைக்கிறோம்.

Top of page