World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The Clearstream affair: French right wing in crisis

கிளியர்ஸ்ட்ரீம் விவகாரம்: பிரெஞ்சு வலதுசாரியினர் நெருக்கடியில்

By Peter Schwarz
17 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

"முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (CPE) எதிராக பல வாரங்கள் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த பின்னர், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்குள் ஒரு வன்முறையிலான பூசல் வெடித்துள்ளது. பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய நிலை இன்னும் கூடுதலான உறுதியற்ற தன்மை உடையதாகத் தோன்றுகிறது; ஜனாதிபதி ஜாக் சிராக் கூடுதலான முறையில் பூசலுக்குள் தள்ளப்படுகிறார்.

இந்தப் பூசல் வெளிப்படையான அரசியல் வடிவமைப்பை இன்னும் பெறவில்லை; மாறாக அது இன்னும் பரந்த வட்டங்களில் அவதூறாக வெளிப்பட்டுள்ளது. செய்தி ஊடகத்தில் இரகசிய உளவுத்துறை கொடுக்கும் ஆவணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவதூறுகளை அம்பலப்படுத்தி வெளிவந்த வண்ணம் உள்ளன; இவை சதிகளும் இரகசியத் திட்டக்களும் உடைய, எளிதில் புகுந்து காண முடியாத வலைப்பின்னலை வெளிப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில் அரசியல் போர்க்கோலம் தன்னுடைய முதல் பாதிப்பளாரைக் கொண்டுவிட்டது. EADS என்னும் விமானம் மற்றும் ஆயுதங்கள் நிறுவனத்தின் துணைத் தலைவரான Jean Louis Gergorin "தன்னுடைய தற்காப்பிற்கு நேரம் செலவழிக்க வேண்டிய முழு கவனத்தின் காரணமாக" வேலையில் இருந்து விலகியுள்ளார். மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள அரசியல் தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளியர்ஸ்ட்ரீம் விவகாரம்

பல நாட்களாக பிரான்சின் செய்தி ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் இப்பூசலின் மையத்தானத்தில் கிளியர்ஸ்ட்ரீம் விவகாரம் என அழைக்கப்படும் நிகழ்வு உள்ளது. சுருக்கமாக அதன் தன்மை கீழே கொடுக்கப்படுகிறது.

ஜனவரி 2004 ஆரம்பத்தில் வெளியுறவு மந்திரியாக அப்பொழுது இருந்த டொமினிக் டு வில்ப்பன், பிரான்சின் இராணுவ உளவுத்துறையில் இருந்து அண்மையில் பணிஓய்வு பெற்றிருந்த Philippe Rondot, மற்றும் EADS துணைத்தலைவர் Jean Louis Gergorin இருவரையும் சந்தித்தார். ஜெர்கோறன் வில்ப்பனுடைய பழைய நம்பிக்கைக்குகந்த நண்பராவார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவிவகாரத் துறையில் அவர் தலைவராக பணியாற்றியிருந்தபோது, ஜெர்கோறன் இளம் ராஜீயதூதர்களை நியமித்து அவர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டியிருந்தார்.

இந்த சந்திப்பின்பொழுது ஜெர்கோறன், லக்சம்பேர்க் நிதி நிறுவனமான கிளியர்ஸ்ட்ரீமில் பல பிரெஞ்சு அரசியல் வாதிகள் மற்றும் மேலாளர்கள் வைத்திருக்கும் இரகசிய வங்கிக் கணக்குகளின் பட்டியல் ஒன்றை அளித்ததாகக் கூறப்படுகிறது. றொண்டோக்கு இதைப்பற்றிய விசாரணை நடத்த தூண்டுதல் நிகழ்த்தும் பணி கொடுக்கப்பட்டது. றொண்டோ பொறுப்புக்கூற வேண்டிய பாதுகாப்புத்துறைக்கு இந்தக் கூட்டம் பற்றியோ அதில் விவாதிக்கப்பட்டது பற்றியோ தகவல் கொடுக்கப்படவில்லை.

இந்த பட்டியல் தவறுகள் நிறைந்தது எனப் போயிற்று; இதுவரை யார் இதற்கு பின்னால் இருந்தவர் என்பதும் தெரியவில்லை. இதில் முக்கியமாக சந்தேகிக்கப்படுபவர்கள் ஜெர்கோறனும் EADS மற்றும் பிரெஞ்சு உளவுத்துறையை சேர்ந்த மற்றொரு ஊழியருமான Imad Lahoud ம் ஆவர்.

கிளியர்ஸ்டீரீம் பட்டியலில் வந்துள்ள மிக முக்கியமான பெயர்கள் Paul de Nagy, மற்றும் Stephane Bosca ஆகும். இப்பெயர்கள் வில்ப்பனுடைய கட்சியிலேயே அவருடைய கடுமையான போட்டியாளராக இருக்கும் நிக்கோலா சார்க்கோசியைத்தான் குறிக்கும். ஒரு ஹங்கேரிய பிரபுவின் மகனான சார்க்கோசியுடைய முழுப்பெயர் நிக்கோலா போல் ஸ்ரெபான் சார்க்கோசி டு நாகி-போஸ்கோ என்பது ஆகும். வில்ப்பன் சார்க்கோசியிடம் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சந்தேகங்கள் மற்றும் றொண்டோ எடுத்துக் கொண்ட விசாரணைகள் பற்றி தெரிவிக்கவில்லை.

தன்னுடைய சக மந்திரியை ஓர் ஊழல் அவதூறில் சிக்க வைக்க வேண்டும் என்று கருதி வெளிப்படையான முயற்சியை வில்ப்பன் மேற்கொண்டார்; ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. வில்ப்பன் மற்றும் அவருடைய ஆசான் சிராக் இருவருடைய விருப்பத்திற்கும் எதிராக சார்க்கோசி நவம்பர் 2004ல் ஆளும் UMP கட்சியின் தலைமையை எடுத்துக் கொண்டார்.

உளவுத்துறை அதிகாரியான பிலிப் றொண்டோ நிகழ்வுகளை பற்றி விரிவான சான்றுகளை கொடுத்துள்ளார். அவை இப்பொழுது "அவதூறான குற்றச்சாட்டுக்கள்" பற்றி விசாரணை நடத்தும் இரண்டு நீதிபதிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குறிப்புக்கள் கடந்த வியாழனன்று Le Monde செய்தித்தாளில் அம்பலப்படுத்தப்பட்டன. ஜனாதிபதிக்கு முழுமையாக தெரிந்து, ஒருவேளை அவரால் கேட்டுக்கொள்ளப்பட்ட விதத்தில் வில்ப்பன் சார்க்கோசிக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார் என்பதை குறிப்புக்கள் காட்டுகின்றன.

Le Monde முடிவுரையாகக் கூறுவதாவது: "நாட்டின் தலைவருடைய தொடர்பு தவறுக்கு இடமின்றி இச்சான்றில் இருந்து வெளிப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்புக்களுக்கு மாறாக ஜாக் சிராக் இவ்விஷயத்தில் "உத்தரவுகள்" இட்டார் எனக் கூற இடம் உண்டு.... இதுகாறும் பிரதம மந்திரி இதைப் பற்றி என்ன கூறியிருந்தாலும், UMP தலைவரை இழிவிற்குட்படுத்தும் வகையில் முரட்டுத்தனமான சோதனையின் கூறுபாடுகள் இருந்தன என்பது பிழைக்கு இடமின்றித் தெளிவாக உள்ளது."

இச்சதித்திட்டம் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளியுறவுத் துறையுடன் நின்றுவிடவில்லை. வில்ப்பன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு நான்கு மாதங்களுக்கு பின்னர், கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல் அனாமதேய முறையில் நீதிபதி Renaud van Ruymbeke க்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது; அவர்தான் தைவானுக்கு அனுப்பப்பட்ட பாதுகாப்புக் கப்பல்கள் விற்பனையில் கொடுக்கப்பட்ட தொகைகள் பற்றி விசாரணை நடத்திவருகிறார். நீதிபதி van Ruymbeke முன்னதாக ஜெர்கோறனுடன் ஒரு இரகசிய சந்திப்பு நிகழ்த்தியதாக வாராந்திர ஏடான Le Canard enchaîné இதன் பின்னர் தெரிவித்துள்ளது. எனவே இத்தகைய "அனாமதேய" கடிதத்தின் ஆதாரம் எங்கு உள்ளது என்பது பற்றி அவருக்கு நன்கு தெரிந்திருக்கக் கூடும்; இக்குறிப்பு ஒரு நீதிபதி மற்றும் தகவல் தெரிவிக்கக் கூடியவர்களுடைய பங்கு பற்றியும் சில வினாக்களை எழுப்புகிறது.

Le Canard enchaîné மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது. அடிக்கடி பல ஊழல்களை அம்பலப்படுத்தும் இந்த அங்கதச் செய்தி ஏடு சிராக்கே தன்னுடைய சட்டவிரோத கணக்கை ஜப்பானிய வங்கியான Tokyo Sowa ல் கொண்டுள்ளார் என்றும் அதில் 46 மில்லியன் யூரோக்கள் உண்டு என்றும் அது குறிப்பிட்டுள்ளது. சிராக் இந்தக் குற்றச் சாட்டை மறுத்துள்ளார்; குடியரசு ஒன்றும் "வதந்திகளின் சர்வாதிகார தன்மையையோ அல்லது அவதூறுகளின் சர்வாதிகார தன்மையையோ கொண்டது" இல்லை என்றும் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இத்தகயை ஊழல்களில் பெரும்பாலாக இருப்பது போலவே, பெரும்பாலானவை தொடர்ந்து இருண்ட பகுதிகளாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி திரைக்குப் பின்னால் நூல்களை இழுத்து இயக்குபவர் யார், விசாரணை ஆவணங்களை ஊடகத்திற்கு அனுப்புவது யார், அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்களுடைய பங்கு என்ன என்பன போன்றவை இன்னும் தெளிவற்ற முறையில்தான் உள்ளன.

அரசியல் கேள்விகள்

பிரான்சின் முக்கியமான அரசியல்வாதிகள் ஆதாரக் குறிப்புக்களைக் கொண்டுள்ளனர் என்பதை அறிவதில் வியப்பு ஏதும் இல்லை. 1970களில் இருந்தே ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி கூட ஒரு பெரிய ஊழலில் தொடர்பு கொண்டிராமல் இல்லை.

Markovic விவகாரம் எனப்பட்ட குற்றம்சார் நிழல் உலகுடன் தொடர்பு கொண்டிருந்தாக Georges Pompidou சந்தேகிக்கப்பட்டிருந்தார். Valéry Giscard d'Estaing ஆபிரிக்க அரசுகளிடம் இருந்து சந்தேகத்திற்குரிய முறையில் நிதிய அளிப்புக்களை பெற்று வந்தார். ஒரு முழு புத்தகத்தையும் நிரப்பக்கூடிய வகையில் செயல்பாடுகளை கொண்டிருந்த François Mitterrand கணக்கிலடங்கா சக ஊழியர்கள்மீது ஒற்று வேலை நடத்தினார். பாரிஸ் மேயராக இருந்த காலத்தில் தொடங்கிய பல ஊழல் குற்றச் சாட்டுக்களில் ஜாக் சிராக் தப்ப முடிந்ததே, 2001 ம் ஆண்டு ஓர் உயர்நீதி மன்றம் அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை ஒன்றும் செய்யக்கூடாது எனத் தடைவிதித்ததால்தான். ஒரு சாட்சி என்ற முறையில் கூட அவர் விசாரிக்கப்பபட முடியாது.

இப்படி ஆதாரக்குறிப்புகள் செய்தி ஊடகத்தால் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும்போது, பொதுவாக அரசியல் காரணங்கள் அவற்றிற்கு பின்னால் இருக்கும். இப்பொழுதும் அப்படித்தான் தோன்றுகிறது. சிராக், வில்ப்பன் மற்றும் சார்க்கோசி ஆகியோருக்கு இடையே நீண்டகாலமாக புகைந்து கொண்டிருக்கும் பூசலின் உயர்கட்டத்தைத்தான் கிளியர்ஸ்ட்ரீம் விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.

CPE க்கு எதிரான வெகுஜன இயக்கத்தால் வில்ப்பனுடைய அதிகாரமே கடுமையான குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது. எதிர்ப்புக்களுக்கு சற்றும் பணிந்து கொடுக்காத நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்ததுடன் எந்தச் சலுகைகளையும் கொடுக்கவும் மறுத்துவிட்டார்; ஆனால் இறுதியில் அவர் பின்வாங்கி அவருடைய சட்டத்தில் விவாதத்திற்குரிய வகையில் இருந்த கூறுபாட்டை திரும்பப் பெறவேண்டியதாயிற்று. அரசாங்கம் மரியாதையைக் காப்பாற்றும் வகையில் உடன்பாட்டை காண அனுமதித்த தொழிற்சங்கங்களுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார்; இது சார்க்கோசியின் தலைமையின் கீழ் நடந்த பேச்சுவார்த்தைகளால் ஏற்பட்டதாகும்.

இப்பொழுது கிளியர்ஸ்ட்ரீம் விவகாரம் வில்ப்பனுடைய நம்பகத்தன்மைக்கு மரண அடி கொடுத்துள்ளது; சார்க்கோசி ஜனாதிபதி வேட்பாளராவதற்கு இப்பொழுது அதிக தடைகள் இல்லை. தான் நிரபராதி என்று பெருந்திகைப்பை வில்ப்பன் காட்டுவதற்கு ஜனாதிபதி சிராக்கும் கடந்த புதனன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஆதரவைக் கொடுத்தார். ஆனால் இருவருக்கும் எதிரான சான்றுகள் அதிகரித்துக் கொண்டு போகின்றன.

இதற்கிடையில், சார்க்கோசி வெற்றி நடையோடு தான் பாதிப்பாளர் எனக் காட்டும் வகையில் உலவி வருகிறார். கடந்த செவ்வாயன்று அவர் 5,000 கட்சி உறுப்பினர்களிடம் "வதந்தி சமையலறைகளில் தயாரிக்கப்படும் தீய சதிகளுக்கு எதிராகவும், இழிவை பரப்பும் நாசகார சதிகாரர்களிடம் இருந்தும்" தன்னை காத்துக் கொள்ளுவேன் என்று அறிவித்தார். "உண்மையை கண்டறிவதில் அரைகுறை நடவடிக்கைகளுடன் திருப்தி அடைந்துவிட மாட்டேன்" என்றும் அவர் அச்சுறுத்தினார். கிளியர்ஸ்ட்ரீம் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அனைவருக்கும் அவர் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது நன்கு தெரியும்.

சார்க்கோசி யதார்த்தத்தில் அவர் கூறும் வகையில் ஒன்றும் நிரபராதியான பாதிப்பாளர் அல்ல. செய்தி ஏடான லிபரேஷன் பல குறிப்புக்களை மேற்கோளிட்டு அவருக்கு ஏற்கனவே அக்டோபர் 2004 லேயே தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. செய்தித்தாள் கூறுவதாவது: சில காலத்திற்கு முன்பே றொண்டோ விசாரணை பற்றி உள்துறை மந்திரிக்கு தெரியாதா என்றுதான் முதலில் கேட்கவேண்டும். தன்னை ஒரு பாதிப்பாளராகக் காட்டி நலம் பெறும் வகையில் அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதும் கேட்கப்பட வேண்டிய வினாவாகும்."

சார்க்கோசியின் அரசியல் போக்கு

சார்க்கோசிக்கும் வில்ப்பனுக்கும் இடையே உள்ள பூசல் தனிநபர் கருத்து வேறுபாடுகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. தன்னுடைய போக்கை மேம்படுத்திக்கொள்ள எதையும் செய்யும் திறனுடைய பேரவா மிகுந்த அரசியலில் ஏற்றம் காணும் கருத்தை உரியவர்தான் சார்க்கோசி; ஆனால் இதே தன்மை சிராக்கின் அபிமானியான வில்ப்பனுக்கும் உண்டு என்றும் கூறப்படலாம். ஆயினும்கூட, வலதுசாரிக்குள் சார்க்கோசியின் ஏற்றம் என்பது பிரெஞ்சு அரசியலில் ஏற்பட்டுள்ள அடிப்படையான மறுநோக்குநிலையை பிரதிபலிப்பதாகும்.

ஏனைய பெரும்பாலான பிரெஞ்சு அரசியல்வாதிகளுக்கு மாறுபட்டவகையில், 51-வயது சார்க்கோசி பிரான்சின் அரசியல் ஆட்சியாளர்களுக்கு பல தலைமுறைகளாக அடித்தளமாக இருந்து வந்திருக்கும் ENA என்னும் உயர்தட்டினரின் பள்ளியில் படித்தவர் அல்ல. சார்க்கோசியின் தந்தையார் ஒரு பிரபுவாவார்; அவர் 1944ம் ஆண்டு அந்நாடு செம்படையால் தாக்கப்பட்டபோது ஹங்கேரியில் இருந்து வெளியேறி French Foreign Legion -ல் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். நிக்கோலா நான்கு வயதாக இருந்தபோது அவருடைய தந்தையார் அவருடைய குடும்பத்தையும் மூன்று குழந்தைகளையும் விட்டுச் சென்றிருந்தார். சார்க்கோசியின் தாயார் சட்டப்படிப்பை மேற்கொண்டு ஒரு வக்கீலாக பணி புரிந்துவந்தார்.

குழந்தைப் பிராயத்தில் இருந்தே தற்போதைய உள்துறை மந்திரி தன்னுடைய சுய தேவைகளை, அவருடைய பிழைப்பு தொழிலை திட்டமிடவும் உயர் நிலைக்கு வரவேண்டும் என்பதற்கும் சாதகமாகன வகையில் கீழ்ப்படுத்திக் கொண்டார் - இச்சூழ்நிலையை, தற்போது அமைதியாய் தன்வேலையை தொடர்கிற சாதாரண ஒருவராக தன்னை காட்டிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் இவர் செல்வந்தர்கள், புகழ்பெற்றவர்கள் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளார். பாரிஸ் நகரின் செல்வக் கொழிப்புடைய புறநகரான Neuilly sur Seine ல் வளர்ந்த இவர் அம்மாவட்டத்தின் மேயராகவும் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

உள்நாட்டு விவகாரங்களை பொறுத்தவரையில், சார்க்கோசி ஒரு வலுவான, எதேச்சாதிகார அரசிற்காக வாதிடுகிறார். பிரான்சில் பெரும் ஆயுதங்கள் கொண்ட CRS போலீஸ் பிரிவு உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர் ஆவார். CPE எதிர்ப்புக்கள் காலத்தில், வெளிநாட்டு பயணம் முடித்து விமானத்தில் திரும்பிவந்துகொண்டிருகின்ற போதே, சோர்போனில் இருந்த பாரிஸ் பல்கலைக் கழகத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள் வெளியேற்றப்படுவதற்கு நேரடியான உத்தரவை பிறப்பித்தார். கடந்த கோடைகாலத்தில் இளைஞர்கள் பிரெஞ்சுப் புறநகரங்களில் எழுச்சி செய்தபோது சார்க்கோசி அவர்களை இழிவானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை தெருக்களில் இருந்து உயரழுத்த நீர்க்குழாய்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தவேண்டும் என்று கூறினார்.

இத்தகைய சொல்வெடிப்புக்கள், நாடுகடத்தல்கள், மிருகத்தனமான முறையில் புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிராக போலீஸ் பயன்படுத்தப்பட்டமை ஆகியவை அதிவலதுசாரியுடனான அவரது நிலைப்பாட்டை அதிகரிக்கும் வகையில் சார்க்கோசியால் வேண்டுமேன்றே உபயோகிக்கப்பட்டிருந்திருக்கின்றன. ஆயினும் முதல்தரமான அர்த்தத்தில் அவர் இனவெறியர் அல்லர். அரசு எந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர் புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் பழமைவாத அடுக்குளை வென்றெடுக்கவும் அவர்களை பயன்படுத்தவும் கூட தயாரிப்புகளை செய்திருந்தார். உள்துறை மந்திரி என்னும் முறையில் அவர் அரசாங்கத்திற்கும் முஸ்லீம் மதகுருக்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு பிரெஞ்சு முஸ்லிம் குழுவை அமைத்தார். அமெரிக்க பாணியிலான "உடன்பாடான பாரபட்ச முறைக்கு" அவர் ஆதரவாக வாதிட்டுள்ளார்; இது பிரான்சின் குடியரசு மரபை அவமதிக்கிறது; இது அனைத்துக் குடிகளையும் சமமாக நடத்தவேண்டும் என்ற கொள்கையை மீறும் நடவடிக்கைகளை பயனற்றதென ஒதுக்கிவிடுகிறது.

தேசிய அரசியலில், சார்க்கோசி தன்னுடைய அரசியல் போக்கை Edouard Balladur இன் ஆதரவாளராக ஆரம்பித்து, 1993ம் ஆண்டு அவருடைய வரவுசெலவுத் திட்ட மந்திரியாகவும் ஆனார். சிராக்கிற்கு எதிராக 1995 தேர்தல்களில் பல்லாடூர் நின்று தோற்றும் போனார். இருவருக்கும் இடையே, குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளில், பெருத்த வேறுபாடு இருந்தது. சிராக்கும் அவருடைய கடந்தகால பிரதம மந்திரி அலன் யூப்பேயும், பலடூர் மற்றும் சார்க்கோசி இருவரும் வாக்காளர்களுக்கு ஜனரஞ்சக சலுகைகளை செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன், ஒரு வரவு-செலவு திட்டம் சார்ந்த கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

ஆயினும், இதன் பின்னர் தன்னுடைய கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்பொழுது யூப்பே கிட்டத்தட்ட ஒர் கிளர்ச்சியையே தூண்டிவிட்டார். சமூகப் பாதுகாப்பு நலன்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரக் காப்பீட்டுத் தொகை, வேலைகள் ஆகியவற்றின் மீதான அவருடைய தாக்குதலுக்கு நூறாயிரக்கணக்கான மக்கள் மூன்றரை வார வேலைநிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்ற வகையில் எதிர்ப்புத் தெரிவித்தனர்; இறுதியில் இவை யூப்பேயின் வேலையை பறித்தன.

வரவு-செலவு திட்டக் கொள்கை பற்றிய பூசல், நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளின் மந்திரியாக சார்க்கோசி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பு ஏற்றபோது மீண்டும் எரியூட்டப்பட்டது. முதலில் இவர் ஐரோப்பிய உறுதிப்பாட்டு உடன்படிக்கையை எதிர்த்தார்; அவற்றின்படி பிரான்சின்மீது கடுமையான வரவு-செலவு திட்டம் சார்ந்த கட்டுப்பாடுகள் வந்திருக்கும்; ஆனால் இவர் பின்னர் ஜனாதிபதியினால் கட்டுப்படுத்தப்பட்டார்.

வெளிநாட்டு விவகாரங்களில் சார்க்கோசி நயம்வாய்ந்த கோலிச மரபு வகையில் வலுவான பிரான்ஸ் என்ற கொள்கையை பின்பற்றுகிறார். ஆனால் இவருடைய நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டுடன் குறைந்த வகையில்தான் பிணைந்திருக்கிறது; அது பிரான்சில் மரபார்ந்த வகையில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் வகையாகவும், தன்னுடைய ஜேர்மனிய அண்டை நாட்டையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வகையாகவும் பார்க்கப்படுகிறது. சார்க்கோசியோ கூடுதலான வகையில் அமெரிக்கச் சார்பு வழிவகையை வில்ப்பன் மற்றும் சிராக்கை விட அதிகமான முறையில் பின்பற்றுகிறார்; இரக்கமற்ற முறையில் ஐரோப்பாவிற்கு எதிராக பிரெஞ்சு நலன்களையும் காக்கிறார். தன்னுடைய மந்திரி அலுவலகத்தில் இருந்தே அவர் ஜேர்மனியின் பகாசுர இரசாயன மற்றும் மருந்துப்பொருள் நிறுவனமான Avdntis ஐ பிரெஞ்சு நிறுவனமான Sanofi Synthélabo நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முயற்சியை ஏற்பாடு செய்தபொழுது தெளிவாய் தெரிந்தது. இது ஜேர்மனிய அரசாங்கத்திற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது.

ஜேர்மனியில் சார்கோசி, ஜேர்மன் அதிபரான அங்கேலா மேர்க்கலின் தலைமையில் உள்ள கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU) விடக் கூடுதலான முறையில் எட்மோண்ட் ஸ்ரொய்பரின் பவேரிய கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) உடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளார். சார்க்கோசியை போலவே ஸ்ரொய்பரும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அவநம்பிக்கை நிறைந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளார்; குறிப்பாக அவர் பிராந்திய நலன்களுக்காக அதிகம் போராடுபவர் ஆவார்.

CPE பூசலின் போதே இரண்டு போட்டியாளர்களுக்கும் இடையே UMP க்குள் முக்கியமான வேறுபாடுகள் எழுந்தன. வில்ப்பன் தொழிற்சங்கங்களுக்கு அலட்சியப் போக்கை காட்டிய நிலையில், சார்க்கோசி அவர்களையும் இணைத்து மக்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றார். அவருடைய கணக்குகள் தப்பாமல் பலனளித்தன.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், வலுவான, தேசியப் பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றுடன் பெருநிறுவனக் கூறுபாடுகளையும் இணைத்த -- அதாவது, தொழிற்சங்கங்கள் மற்ற சமூக அமைப்புக்கள் அரச எந்திரத்துடன் ஒருக்கிணைந்த வகையில், எதேச்சாதிகார அரசையும் சேர்த்த ஒரு அரசியல் போக்கை சார்க்கோசி பிரதிநிதித்துவம் செய்கிறார். இத்தகைய கூறுபாடுகள் பல ஏதேச்சாதிகாரம் கொண்ட, ஏன் சர்வாதிகார ஆட்சிகளுடைய தன்மைகளும் ஆகும்.

ஆனால் இத்தகைய பிரிவுகளில் கடுமையான வேறுபாடுகள் ஏதும் கிடையாது. சார்க்கோசியும் சிராக்கும் சடுதியில் அரசியலில் தலைகீழான மாற்றத்தை செய்யும் திறன் படைத்தவர்கள் ஆவர். ஆயினும் கூட, பிரெஞ்சு வலதுசாரியின் கேள்விக்கிடமற்ற வேட்பாளராக ஆவதற்கு சார்க்கோசி உயர்ந்துள்ளார் என்பது புதிய வடிவிலான ஆட்சியை அபிவிருத்தி செய்வதற்கு பிரான்சின் ஆளும் வர்க்கம் பெருமுயற்சி செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தொழிலாள வர்க்த்திற்கு எதிராக ஒவ்வொரு வகைத் தாக்குதலும் நடத்துள்ள 10 ஆண்டு காலத்தில், வாரக்கணக்கில் மில்லியன் கணக்கில் மக்கள் பங்கு பெற்ற எதிர்ப்பு அலைகள் புயலென வெளிவந்துள் நிலையில், ஆளும் உயரடுக்கிற்கு இன்னும் கடுமையான அடக்குமுறை ஆட்சி தேவைப்படுகிறது.

சார்க்கோசி பெருமதிப்பு அடையும் ஏற்றத்தை தடுக்கும் வகையில் ஜாக் சிராக் பல காலமும் முயன்றுள்ளார்; ஆனால் சார்க்கோசிக்கு இப்பொழுது ஆளும் உயரடுக்கின் செல்வாக்கு மிக்க பிரிவுகளின் ஆதரவு கிடைத்துள்ளது; UMP உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கட்சி உறுப்பினர்களில் 85 சதவிகிதத்தினர் கட்சித் தலைமைக்காக சார்க்கோசிக்கு வாக்களித்தனர். இத்தேர்தலை தடுக்கும் வகையில் சிராக் ஒரு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்: ஆதாவது அவர் கட்சித் தலைவராக இருக்கலாம் அல்லது மந்திரியாக இருக்கலாம், இரண்டு பொறுப்புக்கையும் கொள்ளக் கூடாது. இதற்கு விடையிறுக்கும் வகையில் சார்க்கோசி சடுதியில் மந்திரி பதிவியை இராஜிநாமா செய்தார் ஆனால் ஆறுமாதங்களுக்கு பின்னர் சிராக் அவரை மீண்டும் அரசாங்கத்தில் ஏற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

UMP யில் சார்க்கோசி கொண்ட புகழுக்கு இணையாக மக்கட் தொகையியின் ஒட்டுமொத்தத்திலிருந்தும் எந்த ஆதரவும் இல்லை. இந்த வலதுசாரி, சட்ட ஒழுங்கு அரசியல்வாதி இளைஞர்களாலும் தொழிலாள வர்க்கத்தாலும் வெறுக்கப்படுகிறார். கிளியர்ஸ்ட்ரீம் ஊழலின் மற்றொரு கூறுபாடு வில்ப்பனையும் சிராக்கையும் கீழே இறக்கும் அச்சத்தை மட்டும் கொண்டிருக்காமல் முழு UMP ஐயும் கீழிறக்கும் தன்மையை கொண்டுள்ளது.

"சோசலிஸ்ட் கட்சியின்" அச்சமும் இதுதான்; அது முழு அரசியல் ஸ்தாபனமும் செல்வாக்கிழந்துள்ள நிலையில் அரசாங்க பொறுப்பை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கடந்த புதனன்று ஆறு சோசலிஸ்ட் கட்சி தேசிய சட்ட மன்றப் பிரதிநிதிகள் சிராக் இராஜிநாமா செய்யவேண்டும், புதிய தேர்தல்கள் வேண்டும் என்று கோரிய பின், அவர்கள் கடுமையான முறையில் கட்சித் தலைமையினால் சாடப்பட்டனர். கட்சித் தலைவரான Francois Hollande மற்றும் உத்தியோகபூர்வ இடதின் தலைவரான Henri Emmanuelli இருவரும் உடனே தாங்கள் "தேர்தல்கால உடன்பாடுகளை மதிக்க வேண்டும்" என்ற பெயரில் இக்கோரிக்கையில் இருந்து உடனடியாக தங்களை விலக்கிக் கொள்ளுவதாக அறிவித்துவிட்டனர்.

Top of page