World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Tensions between Japan and South Korea heighten over island dispute

தீவு தகராறு தொடர்பாக தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் பதட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன

By John Chan
3 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

கொரியாவில் ''டாக்டோ'' என்றும் ஜப்பானில் ''டாக்ஷிமா'' என்றும் அழைக்கப்படும் இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள 30 சிறிய தீவுக்குழுக்களின் தகராறு தொடர்பாக தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்குமிடையில் சென்ற மாதம் எழுந்த சீற்றங்கள் மீண்டும் பதட்டங்களை உருவாக்கிவிட்டன .

தென்கொரியாவின் உள்ளங் தீவிற்கு கிழக்கே 87 கிலோ மீட்டர் அப்பால் டாக்டோ அமைந்திருக்கிறது மற்றும் ஜப்பானின் ஓகீ தீவுகளுக்கு வடமேற்கே 157 கிலோ மீட்டர் அப்பால் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப்பின்னர் அந்த தீவுக்குழுக்களை தென்கொரியா திறமையுடன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் அங்கே ஒரு சிறிய அளவிற்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் ஜப்பான் டாக்ஷிமா தனக்கே சொந்தம் என்று வலியுறுத்தி வருகிறது. 1905-ல் அந்தக் குழுக்களை ஜப்பானோடு இணைத்துக்கொண்டதையும் 1910 முதல் 1945 வரை ஒட்டுமொத்த கொரியா தீபகற்பமும் தனது காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.

போருக்குப்பிந்தைய காலக்கட்டத்தில் ஜப்பானின் இந்த உரிமைக் கோரிக்கை பழைய காலனித்துவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது தெளிவாகிவிட்ட நிலையில் சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. என்றாலும் 1990-களில், பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்னர், ஜப்பான் வட கிழக்கு ஆசியாவில் சச்சரவுக்குரிய கடல்பகுதி எல்லைகள் உட்பட தனது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை மிகவும் வலுவாக மீண்டும் வலியுறுத்த தொடங்கியது. உள்நாட்டில் வலதுசாரி தேசியவாதத்தை வளர்க்கும் தனது நிலைப்பாட்டை ஒட்டி பிரதமர் ஜீனிசிரோ கொய்ஷூமி குறிப்பாக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

டாக்டோ தொடர்பாக 1966-க்கும் 2000-திற்கும் இடைப்பட்ட காலத்தில் சியோலும் டோக்கியோவும் பல சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தின, அவை அந்த தீவுகளைகளை சுற்றிலும் ஒரு கூட்டு மீன் பிடிப்பு வளாகத்திற்கான ஒரு தற்காலிக உடன்பாட்டை மட்டுமே உருவாக்கியது. என்றாலும், ஜப்பான் அந்தப் பகுதியிலுள்ள எரிவாயு இருப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. கொரியாவின் எரிவாயு கழகம் டாக்டோவின் அருகாமையில் கடலுக்கு அடியில் பெருமளவிற்கு மீத்தேன் ஹைட்ரேட் படிவங்கள் இருப்பதாகவும், அவை வரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தென்கொரியாவின் எரிவாயுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானது என்றும் மதிப்பிட்டிருக்கிறது. தென்கொரியா அடுத்த ஆண்டு துறப்பணத்தால் துளையிடுவதை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

தைவானுக்கு வடக்கே கிழக்கு சீன கடலுக்கு அருகில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய செங்காகூ (அல்லது டியாயூ) தீவுக்கூட்டங்களில் எரிவாயு கிணறுகள் தொடர்பாக சீனாவுடன் ஜப்பான் ஒரு கடுமையான போக்கை மேற்கொண்டதால் அது ஆயுத மோதல்களில் முடிந்தது. ஜப்பான் அதிகாரிகள் அந்தத் தீவு குழுக்களை ஓக்கினாவா ஆட்சித்துறையின் ஓர் அங்கமாக அறிவித்தனர், மக்கள் வாழாத அந்தத் தீவுக்கூட்டத்தில் ஜப்பானிய 'குடியிருப்பாளர்களை'' பதிவு செய்தனர் மற்றும் தைவான் மீனவர்களுக்கு அந்தப் பகுதிகளில் தொந்தரவு கொடுப்பதற்காக கப்பற்படை கப்பல்களை அனுப்பினர்.

ஜேர்மனியில் ஜுன் மாதம் நடைபெற்ற சர்வதேச ஹைடிரோகிராபிக் அமைப்பின் மாநாட்டில் (IHO) ஜப்பானோடு சம்மந்தப்பட்ட கடற்பகுதி பெயர்களை மாற்றுவதற்கு முன்மொழிவு செய்தபோது, டாக்டோ தொடர்பான பதட்டங்கள் வெடித்தன. 1980-கள் முதல் டோக்கியோ டாக்டோ அருகிலுள்ள கடற்படுகைகளின் பகுதிகளுக்கான பெயர்களை ஜப்பானில் பதிவு செய்தது. இப்போது ''ஜப்பான் கடலை'' ''கிழக்கு கடல்'' என்று மாற்றுவது உட்பட பல்வேறு கொரியா பெயர்களை பதிவு செய்வதற்கு சியோல் முயன்று வருகிறது. இப்படி பெயர் மாற்றம் செய்வதன் உட்குறிப்பு பரந்த கடல் சார்ந்த உரிமைக் கோரிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்பதாகும்.

மார்ச் 29-ல், ஜப்பானின் கல்வி அமைச்சகம் புதிய வரலாற்று பாடநூல்களுக்கு ஒப்புதல் அளித்தது, அவை ஜப்பானின் போர்க்கால அட்டூழியங்களை மேலும் குறைத்து மதிப்பிடுவதாக அமைந்தது மட்டுமல்லாமல் வெளிப்படையாக டாக்டோ மற்றும் செங்காக்கூகளில் ஜப்பானின் இறையாண்மையை குறிப்பிடுவதாக அமைந்தது. புதிய பாடநூல்கள் டாக்டோ தென்கொரியாவின் "சட்டவிரோத ஆக்கிரமிப்பில்" இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றன.

ஏப்பிரல் 4-ல் ஜப்பான் டாக்டோ அருகில் ஒரு கடல் சார்ந்த ஆய்வு நடத்துவதற்காக, இரண்டு கப்பல்களை ஏப்பிரல் 18 முதல் ஜுன் 30 வரை அனுப்பப்போவதாக அறிவித்தது. ஜப்பானிய கப்பல்கள் அந்தப் பகுதியை அடைவதற்கு முன்னரே தென்கொரியா அவற்றை தடுப்பதற்கு ரோந்து விமானத்தையும் 20 துப்பாக்கி சுடும் படகுகளையும் அனுப்பியது. ஜப்பானிய கப்பல்கள் விலகிச் செல்லாவிட்டால் பலாத்காரத்தை பயன்படுத்த வேண்டி வரும் என்று தென்கொரியா கடல் காவல் படை எச்சரிக்கின்ற அளவிற்கு உயர்ந்தளவில் மோதல் முற்றியது. ஜப்பானிய கப்பல்களை பிடித்து வைப்பதற்கு, தென்கொரியா எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஆகும் என்று ஜப்பான் தென்கொரியாவை எச்சரித்தது.

ஏப்பிரல் 21-ல் நிலவரம் மேலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது அப்போது 96 ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் --பெரும்பாலும் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள்-- ஜப்பானின் போரில் மடிந்தவர்களுக்கான கருத்துவேறுபாடு கொண்ட இடமான யாசுக்குமி புனிதத்தலத்திற்கு விஜயம் செய்தனர். இரண்டு நாட்கள் துணை அமைச்சர்கள் மட்டத்தில் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்துவிடும் என்ற விளிம்பு நிலையில் தொங்கிய நேரத்தில் கடைசி நிமிட சமரசம் ஒன்று ஏப்பிரல் 22-ல் உருவாயிற்று. சியோல் கடல் சார்ந்த பகுதிகளுக்கு மறுபெயர் சூட்டும் தனது திட்டங்களை தாமதப்படுத்த சம்மதித்தது மற்றும் ஜுன் மாதம் வரை தனது ஆய்வை தள்ளிவைக்க டோக்கியோ சம்மதித்தது. ஜப்பான் கடலில் தங்களது கடல் எல்லைகளுக்கிடையில் எல்லைகளை வரையறுப்பதற்கு மே மாதம் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த இரண்டு தரப்புக்களும் சம்மதித்தன.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவை டோக்கியோ "ஒரு நிதானமான முடிவு" என்று வரவேற்றாலும் எந்தப் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படவில்லை. "ஒரு தகுந்த நேரத்தில்" கொரிய பெயர்களை பதிவு செய்வதற்கு சியோல் முயலும் என்று அந்த சமரசப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தென்கொரியாவை சேர்ந்த யூ மியங் ஹிவான் தெளிவுபடுத்தினார். உள்ளாங் தீவிற்கு பதிலாக தென்கொரியாவின் தனி பொருளாதார வளாகம் தொடக்க நிலையை டோக்டோவில் உருவாக்கவும் அது பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இப்படி டோக்டோ எல்லையை மாற்றுவது தென்கொரியாவின் கடல் சார்ந்தப்பகுதிகளை நடப்பு ஜப்பானிய தண்ணீருக்குள் கிழக்கு நோக்கி ஆழமாக விரிவுபடுத்துவதாக அமையும்.

ஏப்பிரல் 25 அன்று ஒரு சிறப்பு தொலைக்காட்சி உரையில் தென்கொரியா ஜனாதிபதி ரோ மூ ஷியன் தனது அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார், "டோக்டோ பிரச்சினை ஒரு அமைதியான விதத்தில் சமாளிக்க முடியும் என்று இனி கருத முடியாத அளவிற்கு அமைந்துவிட்ட ஒரு விவகாரமாக ஆகிவிட்டது. [ஜப்பானிடமிருந்து] எந்த பலாத்கார ஆத்திரமூட்டலுக்கு எதிராகவும் வலுவாக மற்றும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். என்ன விலை கொடுப்பதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு தியாகம் செய்ய வேண்டி வந்தாலும் இந்த ஒரு பிரச்சினையை விட்டுவிடவோ அல்லது சமரசம் செய்துவிடவோ முடியாது" என்று அவர் அறிவித்தார்.

டோக்கியோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் இதே போன்று போர்வெறியோடு அமைந்திருக்கின்றன. ஏப்பிரல் 26-ல் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம், டாக்ஷிமா, தென்கொரியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது, "ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு" என்று அறிவித்தது.

ஜப்பானிய பேராசிரியர் சுஞ்சி ஹிரய்வா பழமைவாத தினசரியான யோமியுரி சிம்பனுக்கு ஏப்பிரல் 24-ல் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்: "இந்த உடன்படிக்கையில் இரண்டு நாடுகளும் திருப்திபடுத்தப்படக்கூடும் என்ற சாத்தியக்கூறில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு கடுமையான நேரத்தை ஜப்பானும் தென்கொரியாவும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. தென்கொரியாவின் ஜனாதிபதி ரோ மு ஹியானின் நிர்வாகம், ஜப்பான்-தென்கொரியா உறவுகளில் [ஜப்பானிய காலனித்துவ ஆட்சியின் கீழ்] வரலாற்றை இணைப்பதற்கு கவனித்துப்பார்க்கிறது மற்றும்பிரச்சினைகளுக்கு யதார்த்தபூர்வமான தீர்வுகளைத் தவிர்க்கிறது."

இரண்டு சம்பிரதாய அமெரிக்க கூட்டணிகளான----ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி--------வாஷிங்டனில் கவலையை தோற்றுவித்திருக்கிறது. ஏப்பிரல் 19 அன்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்திற்கு ஒரு அமெரிக்க அரசுத்துறை அதிகாரி கூறினார்: "இரண்டு மோதிக் கொள்ளும் நாடுகள் இடையே தலையிடவேண்டாம் என்பதுதான் அமெரிக்காவின் நீண்டகால நிலையாகும். என்றாலும் அந்த இரண்டு நாடுகளும் இந்தப் பிரச்சினையை சமாதானமாகவும் சமரசமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும்." உண்மையிலேயே, வட கிழக்கு ஆசியாவில் குறிப்பாக சீனாவிற்கு எதிராக மிகவும் உறுதியான பங்கை வகிப்பதற்கு ஜப்பானை ஊக்குவிப்பதனால் பதட்டங்கள் கொழுந்துவிட்டு எரிவதற்கான பொறுப்பு வாஷிங்டனைத்தான் சாரும்.

பிற்போக்குத்தனமான தேசியவாத பிரச்சாரங்கள்

தமது பதவிக் காலம் முழுவதிலும், ஆசியாவிலும், சர்வதேச ரீதியாகவும் மிகவும் மூர்க்கத்தனமான வெளியுறவு கொள்கையை கடைபிடிப்பதன் ஓர் பாகமாக மற்றும் உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களிலிருந்து திசை திருப்புவது ஆகிய இரண்டிலிருந்தும் திசைதிருப்பும் முகமாக பிரதமர் கொய்சுமி திட்டமிட்டே தேசியவாத உணர்வை தூண்டிவிட்டார். போருக்கு முந்திய ஏகாதிபத்திய ஜப்பானின் சின்னங்களை அவரது அரசாங்கம் முன்னிலைப்படுத்தியதன் மூலமும் ஆசியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் பள்ளிப்பாடநூல்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலமும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கைகளினால் துயரங்களை அனுபவித்த சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் புரிந்து கொள்ளக்கூடிய ஆத்திரத்தையும் அச்ச உணர்வுகளையும் அது கிளறிவிட்டது.

என்றாலும், சீனா மற்றும் கொரிய அரசாங்கங்கள் இந்த ஆத்திர மூட்டலை தங்களது சொந்த நோக்கங்களுக்காக சுரண்டிக்காண்டன. டோக்கியோவைப் போன்று, பெய்ஜிங்கும், சியோலும் அந்த இரு நாடுகளிலும் ஆழமடைந்து வரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கத் தவறிய தங்களது சொந்த தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக ஜப்பான்-எதிர்ப்பு விரோதப்போக்கைத் தூண்டிவிட்டன.

ஓராண்டிற்கு முன்னர் ஆயிரக்கணக்கான பெரும்பாலும் மத்தியதர-வர்க்க இளைஞர்கள், ஏராளமான சீன நகரங்களின் தெருக்களில் ஜப்பான்-எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வந்தனர் மற்றும் அப்பாவி ஜப்பானிய குடிமக்களை தாக்கினர். புதிய ஜப்பானிய வரலாற்று பாடநூல்களுக்கு எதிராகவும், ஐ. நா. பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர இருக்கையை பெறுவதற்கு ஜப்பான் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராகவும் தென்கொரியாவில் இதே போன்ற கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. இந்த மூன்று தேசியவாத முத்திரைகளுமே பிற்போக்குத்தனத்தை கொண்டவை. அவை வட கிழக்கு ஆசியாவில் போரின் ஆபத்தை உக்கிரமடையச் செய்யவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த மட்டுமே சேவை செய்கின்றன.

டாக்டோ தொடர்பாக சென்ற மாதம் பதட்டங்கள் முற்றிய நேரத்தில் 30 பேர் அடங்கிய தென் கொரியாவின் கண்டனக்காரர்கள் குழு ஒன்று ஜப்பானிய கொடிகளை எரித்தது, மற்றும் சியோலில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைய முயன்றது. ஜப்பான்-தென்கொரியாவிற்கு இடையில் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற ஒரு ஓட்டலுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிரக் வண்டியிலிருந்து, தேசபக்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன மற்றும் ஜப்பானிய பொருட்களை கொரியா மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் துண்டு அறிக்கைகள் ஒட்டப்பட்டிருந்தன.

ஜனாதிபதி ரோ இந்த தேசியவாத சக்திகளை ஊக்குவித்தார். 2002-ல் பதவிக்கு வந்த அவர், தென்கொரியாவில் அமெரிக்க இராணுவம் இருப்பதற்கு நிலவுகின்ற பரந்தரீதியான விரோதப்போக்கிற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது அரசாங்கம் தொழிலாளர் சந்தை ''சீர்திருத்தங்கள்'' தொடர்பாக IMF-ன் கோரிக்கைகளை அமுல்படுத்தி வந்ததால் சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து வளர்ந்துவரும் விரோதப்போக்கை சந்திக்க வேண்டி வந்தது.

"ஒரு சமூக 'டைம் பாம்"' என்ற தலைப்பிட்டு ஜனவரியில் நியூஸ்வீக் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது, அது 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு பின்னர் தென்கொரியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் இடைவெளியை சுட்டிக்காட்டியது. 1995-ல், மக்களில் அடிமட்டத்திலிருந்த 10 சதவீதம் பேர் சராசரி வருமானத்தில் 41 சதவீதத்தை சம்பாதித்தனர். 2003 வாக்கில் இந்த புள்ளி விவரம் 34 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. வறுமையின் எண்ணிக்கை 7 மில்லியன் மக்களுக்கும் அதிகமான நிலைச்சான்றை (மாதம் ஒன்றிற்கு 1,360-க்கும் குறைவான வருமானத்தை பெறுகின்ற நான்கு நபர்களை கொண்ட குடும்பம் என வரையறுக்கப்பட்டுள்ளது) எட்டியுள்ளது அல்லது 2003ம் ஆண்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை எட்டிவிட்டது.

இதற்கிடையில் தலைமையில் இருக்கும் 10 சதவீதம் பேர் பெறுகின்ற வருமானம் 1995-ல் தேசிய சராசரியில் 199 சதவீதமாக இருந்தது 2003-ல் 225 சதவீதமாக உயர்ந்துவிட்டது. தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் ஏராளமான தற்காலிக தொழிலாளர்களை உருவாக்கிவிட்டது-----இவர்கள் 2001-ல் 27 சதவீதமாக இருந்து 2004-ல் 37 சதவீதமாக அதிகரித்துவிட்டனர். இந்த தற்காலிக தொழிலாளர்கள், முழுநேர ஊழியர்களின் வருவாயில் 65 சதவீதத்திற்கும் குறைவான தொகையைப் பெறுகின்றனர் மற்றும் அவர்களுக்கு முதலாளி-சந்தா செலுத்துகின்ற சுகாதாரக் காப்பீடு இல்லை அல்லது சொற்பமாக உள்ளது.

இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை ரோ மற்றும் அவரது ஊரிக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்றதாகும். ஊரிக் கட்சியின் சட்டமியற்றுபவரான கிம் ஜென் டே, "நவீன-தாராளவாதம் தங்களை அனைத்து பொருளாதாரத்தையும் வென்றெடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது'' என்பதை ஒப்புக்கொண்டார்.

இது நிர்மூலமாக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு போரை நடத்திக்கொண்டிருக்கும் ஜப்பானின் குற்றவியல் வரலாற்றை நியாயப்படுத்துவதை உள்ளடக்கமாக கொண்ட செயலாகும்.டாக்டோ தீவுக்கூட்டங்கள் தொடர்பான ஜப்பானின் உரிமைக் கோரிக்கையை ஏப்பிரல் 25-ல் போர் வெறியோடு தொலைக்காட்சி உரையில் ரோ கண்ணடனம் செய்தார்: "இது நிர்மூலமாக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு போரை நடத்திக்கொண்டிருந்த, அத்துடன் 40 ஆண்டுகளாக சுரண்டல், சித்ரவதை, சிறையில் அடைப்பது, தொழிலாளர்கள் மீது வன்முறையை கையாண்டது, மற்றும் இராணுவத்திலும் கூட செக்ஸ் அடிமைகளை வைத்திருந்தது போன்ற ஜப்பானின் குற்றவியல் வரலாற்றை நியாயப்படுத்துவதை உள்ளடக்கமாக கொண்ட செயலாகும். நாங்கள் இனி இதை எதற்காகவும் சகித்துக் கொள்ள முடியாது" என்றார்.

இதற்கு இதே பாணியில் காய்சுமி செப்டம்பரில் பதவி விலகும் முன்னர் பதிலளிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஜப்பானின் இரண்டாம் உலகப்போரில் சரணடைந்த நாளான ஆகஸ்டு 15 அன்று, யாசுக்மி புனித தளத்திற்கு ஒரு விஜயம் மேற்கொள்வார் என்ற காட்சியை, ஜப்பானிய ஊடகங்கள் சித்தரித்துள்ளன. அவர் பதவியிலிருந்து விலகும் முன்னர் அத்தகையதொரு விஜயத்தை மேற்கொள்ளப் போவதாக இதற்கு முன்னர் உறுதியளித்திருந்தார். அத்தகையதொரு ஆத்திரமூட்டும் செயலின் உள்ளார்ந்த கருத்து என்னவென்றால், ஜப்பான் இனி 1945 தோல்விக்கு பின்னர் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளுக்கு கீழ் படிந்து நடக்காது என்பதுதான். இந்த விஜயம் தென்கொரியாவிலும் சீனாவிலும் ஆவேசமான கண்டனங்களை தூண்டிவிடும் என்பது தவிர்க்க முடியாததாகும்.

டாக்டோ தொடர்பாக நீடித்துக் கொண்டிருக்கும் தகராறு வட கிழக்கு ஆசியாவில் மோதல் ஆபத்துக்கள் வளர்ந்து கொண்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. சென்ற மாதம் தென்கொரியாவும் ஜப்பானும் ஒரு இராணுவ மோதலில் இருந்து பின்வாங்கிக் கொண்டன என்றாலும், எதிர்கால மோதல்களில் அதேபோன்று நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

Top of page