WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
The ETA ceasefire, the Catalan Statute and the fracturing of Spain
ETA
போர்நிறுத்தம் கட்டலான் சட்டம் மற்றும் ஸ்பெயினின் உடைவு
பகுதி 1 |பகுதி 2
By Paul Mitchell
18 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இது ஸ்பெயினில் பெரிய பிராந்திய தன்னாட்சியின் சமீபத்திய நகர்வை விளக்கும் இரு
பகுதி கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும் .
மேலெழுந்தவாரியாக பார்த்தால் தொழிலாளர்கள் கட்டலான் தேசியவாதத்தை முழு
மனத்தில் ஏற்றதாக தோன்றும் என்றாலும், லியோன் ட்ரொட்ஸ்கி இந்த இயல்நிகழ்வு "அவர்களுடைய சமூக
எழுச்சியில் புறத்தோற்றத்தை மட்டும்தான்'' பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று வலியுறுத்தியிருந்தார்.
ஒரு தேசத்துள் மக்களை கட்டாயமாக தொடர்ந்து வைத்திருத்தல் அவர்களுடைய
ஜனநாயக உரிமைகள் எவ்விதத்திலும் ஒடுக்கப்படுதல் ஆகியவற்றை லெனினை போலவே ட்ரொட்ஸ்கியும் எதிர்த்தார்
என்றாலும், பிரிவினைவாதத்திற்கு அவர் வாதிடவில்லை. தனி அரசுகள் அமைப்பது உட்பட சுய-நிர்ணய உரிமைக்கு
அவர் ஆதரவு கொடுத்தாலும், அத்தகைய அமைப்புக்கள் தோற்றுவிப்பதற்கு அவர் வாதிடவில்லை. ஏனெனில் அது
பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலைமையை உருவாக்குவதற்கே வழிவகுக்கும் என்றும் தொழிலாளர்களுக்கு
இடையே தேசியப் பிளவுகளை பலப்படுத்தும் என்றும் கருதினார். மாறாக சுய-நிர்ணயத்தின் இந்த எதிர்மறையான
ஆதரவை தொழிலாள வர்க்கத்தின் சுயமான மற்றும் ஜனநாயக ஐக்கியத்திற்கு போராடுகின்ற ஒரு வழிவகையாக
அவர் கண்டார். "நாட்டின் பொருளாதார ஒற்றுமை, தேசிய பிராந்தியங்களில் பரந்த அளவில் தன்னாட்சி
நீட்டித்திருப்பது'' பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்கான பெரிய நலன்களுக்கு வழிவகுக்கும் என்று
விளக்குவது தேவை என்று அவர் எழுதினார்.
பெப்பிரவரி 1936 தேர்தல்களை அடுத்து சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE),
கம்யூனிஸ்ட் கட்சி (PCE),
மற்றும் கட்டலோனியாவின் குடியரசு இடது
(Esquerra Republicana de Catalunya, ERC).
ஆகியவை கொண்ட ஒரு மக்கள் முன்னணி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது.
மக்கள் முன்னணி (Popular
Front) கொள்கை, 1935ம் ஆண்டு கம்யூனிச அகிலத்தின்
வேலைத்திட்டமாக வந்தது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கான காலம்கடந்த முதலாளித்துவ
வளர்ச்சியை கொண்டிருந்த நாடுகளில், "ஜனநாயகத்தையும் தேசிய விடுதலையையும் அடைவதற்கான
முற்றுமுழுதானதும் மற்றும் உண்மையான தீர்வுக்கான தமது கடமைகளை நிறைவேற்றுவது, தனது விவசாய
வெகுஜனங்களுக்கு மேலாக, ஒடுக்கப்பட்ட நாட்டின் தலைவன் என்ற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின்
மூலம் மட்டும்தான் அடையப்படும்" என்பது ஸ்ராலினிசத்தின் ஆதிக்கத்தினால் கைவிடப்பட்டது. 1917ம் ஆண்டு
போல்ஷிவிக்குகளுக்கு அக்டோபர் புரட்சியை நடத்த வழிகாட்டியிருந்த இந்த முன்னோக்கை புறக்கணித்த
ஸ்ராலினிஸ்டுகள் இதற்கு மாறாக இரண்டு-கட்ட புரட்சி தத்துவத்தை ஏற்றனர்; அதன்படி உள்ளூர் கம்யூனிஸ்ட்
கட்சிகள் முதலாளித்துவ சக்திகளுடன் ஒன்றிணைந்து அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கத்தை அவற்றிற்கு
கீழ்ப்படித்தியதை நியாயப்படுத்தின.
பாஸ்க் பிராந்தியத்தில், மக்கள் முன்னணி அரசாங்கம் ஒரு தன்னாட்சி சட்டத்திற்கு (Statute
of Autonomy) ஒப்புதல் கொடுத்தது; இதன்படி அதிகாரம்
Bilbao
இன் தொழிலாளர்களிடம் இருந்து அதிகாரம் பாஸ்க் தேசியவாதக்கட்சிக்கு (Basque
Nationalist Party, PNV) மாற்றப்பட்டது. சில
மாதங்களுக்குள்ளேயே பிராங்கோ தன்னுடைய இராணுவ ஆட்சி கவிழ்ப்பை தொடக்கினார்; பாஸ்க்
தேசியவாதக்கட்சி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளை எவ்வித போராட்டமும் இன்றி பாசிஸ்டுகளிடம்
ஒப்படைத்தது.
கட்டலோனியாவில் மக்கள் முன்னணி அரசாங்கம் திடீரென்று பல்கிப்பெருகிய இரட்டை
அதிகார சூழ்நிலையை மாற்ற முற்பட்டது; மாகாணத்தில் முக்கிய அதிகாரத்தை கொண்டிருந்த கட்டலோனியாவின்
பாசிச-எதிர்ப்பு குடிப்படைகளின் மத்திய குழுவை (Central
Committee of Antifascist Militias of Catanonia)
கலைத்துவிடும் முயற்சியிலும் இறங்கியது. இரண்டு இடைநிலைவாதகட்சிகளான
Andres Nin
தலைமையின் கீழ் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக்கொண்ட (POUM)
மார்க்சிச ஒன்றிணைப்பு கட்சி (Party of Marxist
Unification) மற்றும்
Anarcho-syndicalist
union federation
ஆன தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பு
(CNT) இரண்டும்
கட்டலான் பிராந்திய சமூக பொதுச்சபையில் (Generalitat)
இணைந்தன; இது மே 1937 எழுச்சியை காட்டிக் கொடுத்ததுடன்
அரசாங்க படைகள் நகரத்தை ஆக்கிரமிக்க அனுமதித்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளினால்
கைப்பற்றப்பட்டிருந்த பண்ணைகளையும், ஆலைகளையும் முதலாளித்துவத்தினரிடம் திரும்ப கையளித்தது..
அராஜகவாதிகள்
(Anarchists) மற்றும்
POUM இன் ஒரு
ஐக்கிய முன்னணிக்காகவும் சோசலிச புரட்சியை செய்வதற்காக சோவியத்துக்களை உருவாக்க வேண்டும் என்றும்
ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் மட்டும்தான் அழைப்பு விடுத்தனர்.
பிராங்கோ சர்வாதிகாரமும் "ஜனநாயகத்திற்கு இடைமருவுதலும்"
பலாஞ்சிஸ்ட் சர்வாதிகாரம்
(Falangist dictatorship) (1939-1975)
பிராங்கோவின் எதிர்ப்பாளர்கள், முன்னாள் கட்டலான் பிராந்திய சமூக பொதுச்சபையின்
(Generalitat)
தலைவர் லிறீuணs சிஷீனீஜீணீஸீஹ்s
உட்பட, நூறாயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தமை மேலும்
தொழிலாளர் அமைப்புக்களும், ஜனநாயக உரிமைகளும் அடக்கப்பட்டன. தன்னாட்சி சட்டங்களை நீக்கிய
பிராங்கோ, கட்டலான், பாஸ்க் அடையாளத்தின் வெளிப்பாடுகள் அனைத்திற்கும் கிட்டதட்ட தடைவிதித்தார்.
1959ம் ஆண்டு செயலற்றிருந்த பாஸ்க் தேசியவாத கட்சியில் இருந்து பிளவுற்ற ஓர்
அமைப்பாக ETA
தோற்றுவிக்கப்பட்டு, விடுதலை பெறுவதற்கு பிராங்கோ அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்கலாம் என்று
நினைத்து 1961ல் ஆயுதப்போராட்டத்தை தொடங்கியது. பிராங்கோ மரணம் அடைய இருந்த காலத்திலும் பாசிச
ஆட்சி 1975ல் முடிவுற்ற தறுவாயிலும் அதன் பெரும் வளர்ச்சியையும், புகழையும் அடைந்தது. அக்கால கட்டத்தில்
ETA வின் பாதிக்கப்பட்டவர்கள்
(victims)
அனைவரும் அரசாங்கத்தில், வெறுப்புக்குரிய பாதுகாப்புக் குழு
(Hated civil guard)
மற்றும் இராணுவத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் மிகப்புகழ் பெற்ற நடவடிக்கை பிரோங்கோ பெரிதும்
தனக்குப் பின்னார் வரவேண்டியவர் எனக் கூறியிருந்த
Luis Carrero Blancoவை 1973ல் குண்டுவீச்சில் கொன்றதாகும்.
பிராங்கோ ஆட்சியின் பிந்தைய ஆண்டுகளில், ஸ்பெயினின் பொருளாதாரமானது,
விவசாயத்துறையில் நவீனமயப்படுத்துதல், அதிகரித்த தொழில்மயமாக்கப்பட்டமை மற்றும் வெகுஜன சுற்றுலாக்கள்
ஆரம்பம் ஆகியவற்றை சந்தித்தது. பிராங்கோவிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மீண்டும்
தோன்றியது; குறிப்பாக தொழிலாளர்களின் குழுக்கள்
(Comisiones Obreras) அமைக்கப்பட்ட விதத்தில் அதன்
வெளிப்பாட்டை கண்டது. இக்காலக்கட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி பாசிஸ்டுகளிடம் "மறப்போம், மன்னிப்போம்"
(Forgive and Forget)
என்ற சமரசக் கொள்கைக்காக வாதிட்டது; மேலும் மூடிய கதவுகளுக்கு பின்னால் பாசிசத்தில் இருந்து
முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான ஒரு "அமைதியான மாற்றம்" பற்றியும் பேச்சுவார்த்தையை நடத்தியது.
1978ம் ஆண்டு அரசியலமைப்பு நாட்டை 17 தன்னாட்சி பிராந்தியங்களாகப் பிரித்தது;
இதற்கு காரணம் பாசிசத்துடனான ஒரு புரட்சிகர கணக்குதீர்த்தலை தடுப்பதற்கும் தேசியவாதத்தின் முட்டுச்சந்திற்கு
எதிர்ப்பை திசை திருப்புவதற்குமாகும். பாஸ்க் தேசியவாதக்கட்சி பாஸ்க் சமூகத்திற்கான தன்னாட்சி
முன்மொழிவுகளை ஏற்றது; பாஸ்க் தேசிய சட்டமன்றம் என்ற கருத்தையும் ஏற்றது; ஆனால்
ETA மற்றும் அதன்
அரசியல் பிரிவான Herri Batasuna
அவற்றை புறக்கணித்தது. ஸ்பானிய பிராந்தியமான
Navarre மற்றும்
பிரெஞ்சு மாகாணங்களான Labourd, Soule,
Basse ஆகியவற்றை பாஸ்க் நாட்டின் பகுதியாக
ETA கொள்ள கருதியது:
இவற்றை தவிர உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த
Alava, Vizcaya Guipuzcoa ஆகியவையும் பாஸ்க்
நாட்டின் பகுதியாக இருக்க வேண்டும் என்று அது விரும்பியது.
தொடர்ந்து வந்திருந்த ஸ்பானிய அரசாங்கங்கள், எவ்விதமான உள்ளூர் அரசியல்
கிளர்ச்சியையும் அடக்குவதை நோக்கமாகக் கொண்டு பாஸ்க் பிராந்தியத்தை ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை
சோதிக்கும் களமாக தொடர்ந்து பயன்படுத்தின. 1982ம் ஆண்டு
PSOE
முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நிரபராதிகளான பார்வையாளர்கள் உட்பட முக்கியமாக
ETA
உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தத்தில் 23 பேரை படுகொலை செய்த, விடுதலை பயங்கரவாத-எதிர்ப்புக்
குழு (GAL)
என்ற ஒரு கொலைப்படைக்கு ஆதரவு கொடுத்தது.
ஆனால் ETA
இன் ஆதரவு மிகப்பரந்த அளவில் அதற்கு விரோதப்போக்காக மாறியது; இதற்கு காரணம் கண்மூடித்தனமான
முறையில் அது பல நிராபராதிகளை கொன்றதும், அதனிடம் எந்தவித உண்மையான முற்போக்கான சமூக
வேலைதிட்டம் இல்லாமல் இருந்ததும்தான்.
1996ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டபின், அஸ்நார்
ETA மீது இருந்த
பரந்த விரோதப்போக்கை பயன்படுத்திக் கொண்டு அவ்வமைப்பை தடைசெய்யும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார்.
அப்பிராந்தியத்தில் மக்கள் கட்சியின் கொள்கைகள் கடந்த கால பிராங்கோயிச கட்சியின் அடையாளங்களை
கொண்டிருந்தன. மையப்படுத்தப்பட்ட ஸ்பானிய அரசை மீறக்கூடாது என்பதை அஸ்நார் வலியுறுத்தினார். பெரிய
பிராந்திய தன்னாட்சி மற்றும் பிரிவினை ஆகியவற்றிற்கு வாதிடல் துரோகத்திற்கு சமமானது என்று முத்திரையிட்ட மக்கள்
கட்சி, ETA
இனால் கொடுத்த அரசியல் அச்சுறுத்தல், அதன் பிற்போக்குத்தனமான
பயங்கரவாதக் குண்டு வீச்சுக்களை பயன்படுத்தி ஸ்பெயின் முழுவதுமே ஜனநாயக உரிமைகளின்மீது பொதுத்
தாக்குதலை நடத்தியது.
பல ETA
குழுக்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன; அதன் நிதிய வலைப்பின்னல் தடைக்குட்பட்டது; தேர்தல் பிரச்சாரத்தின்
போது ETA
ஒளிப்பதிவு காட்சி ஒன்றைக் காட்டிய
Herri Batasuna
தலைமை முழுவதுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.
Herri Batasuna
இன் நாளிதழான Egin
மூடப்பட்டு, அதன் ஆசிரியர் குழு ETA
உடன் ''ஒத்துழைத்ததற்காக'' சிறையில் அடைக்கப்பட்டது; மாற்றத்திற்கு
பின்னர் முதல் தடவையாக ஸ்பெயினில் தடைக்குட்படுத்தப்பட்ட செய்தித்தாளாகும். கடந்த ஏழு ஆண்டுகளில்
கிட்டத்தட்ட ஆயிரம் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவற்றில் மிகுந்த அனுபவமுடைய தலைவர்களும் அடங்குவர்.
செப்டம்பர் 11, 2001 நியூ யோர்க்கின் பயங்கரவாத தாக்குதல், மற்றும்
மார்ச் 2004 ல் மாட்ரிட் மீதான குண்டுவீச்சுக்களை தொடர்ந்து,
ETA விற்கான
ஆதரவு பெரிதும் சேதத்திற்கு உட்பட்டுள்ளது. மக்கள் கட்சி அரசாங்கமும் அதன்
PSOE
பின்தோன்றலும் கொடூரமான சட்டங்களை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையில்
கொண்டுவந்துள்ளன; இவற்றில் அரசியல் கட்சி சட்டத்தின் கீழ்
Batasuna
தடைசெய்யப்பட்டது. ஒரே அதிரடியில் அப்பிராந்தியத்தில் பத்து சதவிகித மக்கள் வாக்குரிமையை இழந்தனர்;
Batasuna
வின் ஏழு பிரதிநிதிகள் பதவியை இழந்தனர்; நூற்றுக்கணக்கான உள்ளூர் நகர
மன்ற உறுப்பினர்களும் பதவியை இழந்தனர். நவம்பர் 2005ல் ஸ்பெயினின் வரலாற்றிலேயே மிகப் பெரிய குற்ற
விசாரணை தொடங்கியது; இதல் 56 பேர் ''ETA
வின் வயிறு, இதயம், தலை'' போன்று இருந்தவர்கள் குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ளனர். இந்நிகழ்வுகள் அனைத்தும்
கடந்த ஆண்டு முன்னாள் ETA
உறுப்பினர்கள் அமைப்பை கலைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுப்பதற்கு வழிவகுத்தன.
தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியத்திற்காக
45 ஆண்டுகளுக்கு பின்னர்
ETA தன்னுடைய இலக்கான ஒன்றுபட்ட பாஸ்க் நாடு அடைவதில்
ஆரம்பத்தில் இருந்ததைவிட எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது தெளிவானது. இது சாதித்தது எல்லாம்
பிராந்தியத்தில் உள்ள குட்டி முதலாளித்துவத்தின் சமூக நிலைமையை வலுப்படுத்தியதும், தொழிலாள வர்க்கத்திடையே
பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியதும்தான். பல ஆண்டுகள் ஆயுதமேந்தி போராடியதானது, அரசாங்கத்தின் அடக்குமுறை
கருவியை வலிமையாக்கவும், ஜனநாயக உரிமைகளின் மீது பாரியளவு தாக்குதல் நடத்தவும்தான் சேவை செய்துள்ளன.
பாஸ்க், கட்டலன் தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பிராந்தியவாதம்
தொடர்ச்சியாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை இல்லாதொழிப்பதற்கு காரணமாகியது. ஸ்பெயினின்
பல பிராந்தியத்திற்குள்ளும் உடன்பிறப்பு கொலை போட்டியைத்தான் ஏற்படுத்தியுள்ளதுடன், இன்னும் சர்வதேச
அளவிலான மிகவும் குறைவான ஊதியங்கள், வேலைநிலைமைகளை உருவாக்கியது.
சீனா உலகத்தின் உற்பத்தி மையமாகவும், இந்தியா தகவல் தொழில்நுட்பம்,
சேவைகள் ஆகியவற்றின் மையமாகவும் மாறியபின், அனைத்து பெரிய முதலாளித்துவ நாடுகளிலும் வர்க்க உறவுகள்
பலவந்தமாய் பிளவுபட்டுள்ளன. ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளின்பால் மிகத் தீவிர அழுத்தம்
கொடுக்கப்படுகிறது. ஐரோப்பாவில், ஆளும் உயரடுக்கு தொடர்ந்து போட்டிமிக்கதாக இருப்பதற்கு தீவிர
சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது; சபடேரோ தன்னுடைய அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை, ஐரோப்பிய
அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை "2010 அளவில் மிகுந்த போட்டி மிக்கதாகவும், செயலாற்றல் மிக்க
அறிவால் உந்தப்படும் பொருளாதாரமாக" மாற்ற உறுதிபூண்டுள்ள, மார்ச் 2000ல் இயற்றப்பட்ட லிஸ்பன்
மூலோபாயத்துடன் ஒத்துப்போவதற்கு சமிக்கை காட்டியுள்ளார் மற்றும் ஸ்பெயினின் போட்டித்தன்மையை
அதிகரிக்கவும் தொழிலாளர் சந்ததையில் சீர்திருத்த்தம் கொண்டு வரவும் முயல்கிறார்.
இத்தகைய பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள்
பூகோள ஒருங்கிணைப்பை துரிதப்படுத்தியதால், பழைய தொழிலாள வர்க்கம் மற்றும் தேசிய முன்னோக்கு மற்றும்
கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் சிதைத்துள்ளன.
ETA போர்நிறுத்தம் மற்றும்
காடலன் சட்டத்தில் உடன்பாடு ஆகியவற்றை முற்போக்கான நடவடிக்கை என்று தாராளவாதிகளும்
தீவிரபோக்கினரும் கூறியிருக்கின்றனர். உதாரணமாக,
Militante group போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளது;
ஆனால் Batasunaவின்
ETA
அரசியல் பிரிவான "Abertzale Left"ஐ
புகழ்ந்துள்ளது. அவ்வமைப்பு வேறு வகைகளில் சுய-நிர்ணயத்திற்குப் போராடும் என்று அது நம்புகிறது.
இத்தகைய கூற்றுகள், பூகோளமயமாக்கலினால் விளைந்துள்ள முக்கிய மாறுதல்களை
புறக்கணிப்பது மட்டும் அல்லாமல், கடந்த தசாப்தங்கள் பற்றிய முதலாளித்துவ தேசியவாதத்துடனான சர்வதேச
மற்றும் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களையும் புறக்கணிக்கிறது. சுயநிர்ணயம் என்ற பெயரில் பிரிவினைக்கு
போராடுவது என்பது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு கீழ்ப்படுத்துவதாகவும்;
இது முற்றிலும் எதிர்மறையான விளைவுகளைத்தான் கொடுக்கும். இதன் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமை
பலவீனமடையும்; மற்றும் நாடுகளும் பிராந்தியங்களும் துண்டாடப்படும் நிலையும் ஏற்படும்---- முன்னாள் யூகோஸ்லாவியா
பெரிதும் மிருகத்தனமான முறையில் துண்டாடப்பட்டதும் இதைத்தான் காட்டுகிறது. அத்துண்டாடல் ஏகாதிபத்திய வல்லரசுகளின்
மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டது;
இதற்கு முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரும் வகுப்புவாத அரசியல்வாதிகளும்
உதவினர்; அவர்கள் ஆழமடைந்துள்ள வறுமை, உயர்ந்துள்ள வேலையின்மை என்று அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ
பொருளாதார கொள்கைகளால் விளைந்த நிலையை, யூகோஸ்லாவிய தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதை
தடை செய்ய விரும்புகின்றனர். இன்று பால்கன்களில் உள்ள தொழிலாள வர்க்கம் இனவழியில் பிளவுபட்டுள்ள அரசுகளின்
கீழ் வாழ்கின்றனர்; நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெருகிய சமூக வறுமை மிக்க நிலையில் ஏகாதிபத்திய
ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்திற்கான அரசியல் எதிர்ப்பின் முன்னிபந்தனையாக தொழிலாள வர்க்கம்
ஐக்கியப்படவேண்டும். ஆனால் அது தேசியவாத முதலாளித்துவ அரசுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் பொருளாகிவிடாது.
மாறாக, ஸ்பானிய, ஐரோப்பிய, சர்வேதச தொழிலாள வர்க்த்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்திற்காக
அனைத்து தேசிய பிளவுகளும் கடக்கப்பட வேண்டும். தேசிய அரசின் நெருக்கடிக்கு சிறியநாடுகளாக மற்றும் பிற்போக்குவாத
கருத்தான இனத்தை அடிப்படையாக கொண்ட உயிர்வாழமுடியாத அலகுகளாக பிளவுறச்செய்வதன் மூலமாகவும்
முற்போக்கான தீர்வை காணமுடியாது. ஆனால் அதற்கு பதிலாக மிகவும் அறிவார்ந்த, பூகோளமயமாக்கப்பட்ட
உற்பத்தியின் உலகந்தழுவிய வடிவமைப்புடன் நேரடியாக பொருத்தமான ஒரு உலக சமூக பொருளாதார அமைப்பான
ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளால் பதிலீடு செய்யப்படவேண்டும்.
முற்றும்
Top of page |