World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A socialist response to the massive rise in fuel prices

எரிபொருள் விலைகள் பாரியளவு உயர்ந்து வருவதற்கு ஒரு சோசலிச பதிலீடு

A statement by the Socialist Equality Party
26 April 2006

Back to screen version

காஸோலின் எரிவாயு விலை மலைப்பூட்டும் அளவிற்கு உயர்ந்துகொண்டு வருவது அமெரிக்காவிலுள்ள தொழிலாளர் குடும்பங்களில் ஒரு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்தக் குடும்பங்களின் மாதாந்திர வருவாய் கல்வி, வீட்டுவசதி, உணவு, மருத்துவச்செலவு ஆகிய இதர விலைவாசி உயர்வுகளால் ஏற்கனவே பெருமளவு கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே எரிவாயு விற்பனை நிலையங்களில் ஒரு காலனுக்கு (Gallon) 25 செண்ட்டுக்கள் விலை உயர்ந்துவிட்டது, கலிபோர்னியா நியூ யோர்க் மற்றும் இதர மாநிலங்களில் விலைகள் 3.10 டாலர் அளவிற்கு உயர்ந்துவிட்டதுடன் சராசரியாக காலனுக்கு 2.91 டாலர்கள் உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டு முதல் காஸோலின் எரிவாயு விலை, 31 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தங்களது குடும்பச் செலவுகளில் துன்பத்தை விளைவித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட கணிப்பில் 70 சதவீத அமெரிக்க இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச்செல்பவர்கள், நிரந்தர வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வயதான முதியவர்கள், கிராமப்புறத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் சிறுவர்த்தக உரிமையாளர்களான அமெரிக்காவில் உள்ள பல-பத்து மில்லியன் மக்கள் இப் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். மற்றும் இந்த நெருக்கடி விமான மற்றும் பார வண்டி தொழில்துறையில் வெகுஜன ஆட்குறைப்பிற்கு உள்ளாக்கும் மற்றும் பொருளாதாரம் முழுவதையும் நெருக்கடிக்குட்படுத்தும்.

இந் நெருக்கடி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவ இலாப முறைகளின் சமூக உறவுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அடிப்படை முரண்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. இது பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை நிலைநாட்டுவது மனிதனது தேவைகளோடும் அவனது வாழ்க்கையோடும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் பொருந்திவராது போய்க்கொண்டிருப்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் மாதங்களில் காலன் ஒன்றிற்கு 4.00 டாலருக்கு மேல் விலைகள் உயரலாம் அது, ''வழங்கீடுகளின் இறுக்கமான'' நிலையால் வந்தது என்று பழிபோட்டு, அமெரிக்கர்கள் ஒரு ''கடுமையான கோடைகாலத்தை'' சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்த பின்னர், ஜனாதிபதி புஷ் இந்த பெருகிவரும் ஆத்திரமூட்டலுக்கு பதலளிக்கும் விதமாக செவ்வாயன்று அதிகளவில் பயனற்ற பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார். இந்த முன்மொழிவுகள் காஸோலின் எரிவாயு சுத்திகரிப்பு ஆலைகளை கட்டுப்படுத்தும் சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, அரசாங்க அவசர கையிருப்பிற்காக கொள்முதலை நிறுத்துவது, மற்றும் கச்சா எண்ணெய் இருப்புக்களின் அடிப்படையில் முன்னர் பெறப்பட்ட கடன்களை திரும்ப செலுத்துவதற்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்குவதுஆகியவை விலைகள் சற்று தளர உதவும் அல்லது எதுவிதபாதிப்பும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் எரிசக்தி பெருநிறுவனங்களின் இலாபநோக்கு உந்துதலுக்கு மேலும் தீனி போடுவதாக அமைந்துவிடும்.

இதற்கிடையில் செனட்டின் பெரும்பான்மை தலைவர் பில் பிரிஸ்ட், விலைவாசிகளை குறைப்பதற்கு "பொன் முட்டைகளை இட" இங்கு எதுவுமில்லை என அறிவித்தார், மற்றும் அமெரிக்கர்கள் தங்களது கார்களை மிக மெதுவாக செலுத்தி குறைந்த செலவில் நெடுந்தொலைவு பயணம் செய்ய உகந்ததாக மாற்றிவிட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். நெடுந்தொலைவு பயண செலவுகளால் தங்களது உண்மையான ஊதியங்கள் குறைந்து கொண்டு வருவதை காண்கின்ற தொழிலாளர்களுக்கு, பிரிஸ்ட் கூறுகின்ற ஆலோசனை; "முதலில் உங்களது பசியை போக்கிக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.

எண்ணெய் நிறுவனங்களும் அதற்கு வாஷிங்டனில் வக்காலத்து வாங்குபவர்களும், விலைவாசி உயர்வுகளுக்கு, உலக கச்சா எண்ணெய் விலை மற்றுத் சுற்றுப்புற சூழல் நெறிமுறைகளின் மீது பழிபோட்டு வந்தாலும், சாதனை அளவிற்கு திடீரென்று எதிர்பாராத இலாபங்களை பெற்று வருகின்ற எண்ணெய் நிறுவனங்களின் இலாப வேட்டைதான் பிரதான காரணமாகும். கடந்த தசாப்தத்திற்கு மேலாக எண்ணெய் தொழில்துறையில் அலை போன்ற இணைத்தல் மற்றும் ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டன, இவற்றின் மூலம் ஒரு சில ஏகபோக நிறுவனங்கள், வழங்கீடுகளில் தங்களது பிடியை இறுக்க முடிந்தது, உற்பத்தி மட்டங்களில் மோசடி செய்ய முடிந்தது மற்றும் விலைவாசிகளை உயர்த்த முடிந்தது. தற்போதைய நெருக்கடி சந்தைச் சட்டங்களுடைய சில இயற்கை செயல்பாட்டின் ஒரு விளைவு அல்ல ஆனால் மாறாக, இந்த விவகாரத்தில் பாரிய தன் நலன்கொண்ட பெருநிறுவனங்களின் நிர்வாகிகள் எடுத்த திட்டவட்டமான முடிவுகளின் விளைவு ஆகும்.

1990-களில், எண்ணெய் சுத்திகரிப்புத்திறன் அளவிற்கு அதிகமாக உள்ளது, குறைந்துவிடவில்லை என புகார் கூறினர், மற்றும் எண்ணெய்யின் ''அதிக வழங்கீட்டால்'' இலாபவரம்புகள் குறைந்து வருகின்றன, என்றும் புகார் கூறினர். இதற்கு தொழிற்துறை பதிலளிக்கின்ற வகையில் 1995 முதல் அமெரிக்காவில் 25 எண்ணெய் சுத்திகரிப்பை மூடிவிட்டன. மற்றும் ஒரு நாளைக்கு 830,000 பீப்பாய்கள் அளவிற்கு வெட்டப்பட்டது. இத்துடன் போட்டி நிறுவனங்கள் சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையை கட்டுப்படுத்த சதி செய்தன, அதன்மூலம் சுதந்திர உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டிவிட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களின் கைகளில் வழங்கீடுகளையும் விலைகளையும் கட்டுப்படுத்த ஒப்படைத்தனர்.

2005-ல் முதன்மை ஐந்து எண்ணெய் நிறுவனங்களானஎக்ஸான் மொபில், BP, ராயல் டச் செல், செவ்ரோன், மற்றும் கொனோகோ பிலிப்ஸ்ஆகிய நிறுவனங்கள் தங்களது லாபங்கள் 111 பில்லியன் டாலர்களுக்கு மேல் வளர்ந்ததை கண்டனர். உலகின் மிகப்பெரும் எண்ணெய் பெருநிறுவனமான எக்ஸான் மொபில் 36.1 பில்லியன் டாலர்களை பெற்றது இது அமெரிக்க பெருநிறுவன வரலாற்றில் மிக உயர்ந்த தொகையாகும் மற்றும் பார்சூன் 500 பட்டியலில் இடம் பெற்றுள்ள அடுத்த நான்கு நிறுவனங்களின் மொத்த லாபத்தைவிட அதிகமாகும். அதன் வருவாயான 339 பில்லியன் தைவான் நோர்வே மற்றும் அர்ஜண்டினாடிவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட உயர்வாகும்.

மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் எரிவாயு விலை உயர்வுகளால் கசக்கிப்பிழியப்பட்ட நிலையில், எக்ஸான் மொபைல் தலைமை நிர்வாகிகளும் முதலீட்டாளர்களும், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ஊதியமாகவும், பங்குவிலை உயர்வுகளாலும் அறுவடை செய்தனர். டிசம்பரில் ஓய்வுபெற்ற லீ. R. ரேமண்ட் தனது நிறுவனத்திலிருந்து இறுதி ஆண்டில் 400 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையை பெற்றார். 1993-க்கும், 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த டெக்சாசை அடித்தளமாக கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றிய ஒவ்வொரு நாளுக்கும் 1,44,573 டாலர்கள் அல்லது, 686 மில்லியனுக்கும், மேற்பட்ட மொத்தத்தொகை வழங்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ரேமண்ட், மொபிலை 81 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டார்அதன்மூலம் எக்ஸான் மொபில் குவைத் நாடு தயாரிப்பதைவிட இரண்டு மடங்கு உற்பத்தித்திறனை பெருக்கியதுமற்றும் அதன்மூலம் 10,000 வேலைகளை ஒழித்துக்கட்டினார்.

ரேமண்டிற்கு அடுத்து பதவிக்கு வந்த ரெக்ஸ் டில்லர்சன் ஊதியம் சென்ற ஆண்டு 33 சதவீதமாக உயர்ந்து 13 மில்லியனாக இருந்தது. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்த்தால், 2005-ல் இந்த எக்ஸான் நிறுவனத்தில் 5 தலைமை நிர்வாகிகள், 130 மில்லியன் டாலருக்கு மேல் ஊதியம் பெற்றனர், கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் 280 மில்லியன் டாலர் அளவிற்கும், விருப்பப் பங்குகள் 113 மில்லியன் டாலர் அளவிற்கும் பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, எண்ணெய் விலைகள் இரட்டிப்பானதை தொடர்ந்து, தொழில்துறை முழுவதிலும் அதன் எண்ணெய் நிர்வாகிகளுக்கு இதுபோன்று வெகுமதிகள் வழங்கப்பட்டன.

இந்த பெருநிறுவனங்களும் தனிநபர்களும், நடப்பு நெருக்கடியை சுரண்டிக்கொள்ளவதன் மூலமும் தூண்டிவிடுவதன் மூலமும் பாரியளவிற்கு செல்வத்தை அறுவடை செய்தனர். இவர்களில் எவரும், நடப்பு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் பரவலான சமுதாய முயற்சியை மேற்கொள்வதில் சிறிது கூட அக்கறையில்லாமல் செயல்பட்டனர். ஆனால் மிக அடிப்படையாக பாதுகாப்பான மற்றும் நீடித்து வரக்கூடிய எரிசக்தி வளங்களை உருவாக்குவதில் சிறிதும் அக்கறைகாட்டவில்லை.

பெட்ரோலியத்தை இப்போது நம்பியிருப்பது, நிலையில்லாதது மற்றும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தல் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. உலகின் கச்சா எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்துவிடக் கூடியவை மற்றும் உற்பத்தியை, பெருக்க மிகவும் வேகமான நடவடிக்கை எடுத்தால் அவை தீர்ந்துவிடும். அதே நேரத்தில் இந்த புதை படிவமான (fossil) எரிபொருளை பயன்படுத்துவதால் பூகோள வெப்பநிலை உயர்வதற்கு அதுவே முக்கிய காரணமாகும் அறிவியலை ஒடுக்குவதற்கு புஷ் நிர்வாகம் மேற்கொண்டு வருவதற்கு அப்பால் இது பூமியில் வாழமுடியாதளவிற்கு அச்சுறுதலை உருவாக்குகிறது.

மேலும், இந்த தீர்ந்து போகின்ற வளத்தை நாடிச் செல்வதால், இராணுவவாதம் பேரழிவை உண்டுபண்ணும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் ஈராக்கில் அமெரிக்காவின் குற்றவியல் போருக்கு பிரதான காரணமாகும். அது நூறாயிரக்கணக்கான ஈராக்கியர், மற்றும் 2500-க்கு மேற்பட்ட அமெரிக்க துருப்புக்களின் உயிர்களை பலி கொண்டது. அதே போன்று ஈரானுக்கு எதிரான புதிய போருக்கும், தனது பூகோள எரிசக்தி வழங்கீடுகளை கட்டுப்படுத்துவதற்கான போட்டியாளராக விரிவடைந்து வரும் சீன பொருளாதார நிலையால் சீனாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கும் திட்டங்களை வெளிப்படையாக தயாரிப்பு செய்து வருவது இந்த உந்துதலினாலாகும்.

எண்ணெய் பணம் வாங்கக்கூடிய சிறந்த அரசாங்கம்

எரிவாயு விலைகள் உயர்ந்து கொண்டே வருவது, அரசியல்வாதிகளை ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளைவிலையை உயர்த்துவது பற்றி புலனாய்வு செய்வதற்கும், சில சந்தர்ப்பங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மீது ''ஒரு திடீர் இலாப வரி'' விதிப்பதற்கு சட்டம் இயற்றுவது பற்றியும் கோரிக்கை விடுக்கத்துக்கொண்டியிருக்கிறது. இந்த நடிப்பினால் எதுவும் விளையப் போவதில்லை, அது நுகரும் மக்களுக்காக மட்டுமே கூறப்படுவதாகும்.

பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வாஷிங்டனிலுள்ள இரண்டு அரசியல் கட்சிகள் மீதும் நீண்டகாலமாக மகத்தான ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, ஆனால் இந்தக் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில், அந்த சகாப்தத்தை சார்ந்த ஜோன் D. ரோக்பெல்லரும் அவரது ஸ்டாண்டர்டு எண்ணெய் நிறுவனமும் உடமையாய் பெற்றிருந்தோடு ஒப்புநோக்கும்போது இன்றைய நிறுவனங்களின் அரசியல் ஆதிக்கம் மிக அற்பமானதாகவே ஆகிவிடுகிறது. இரண்டு முன்னாள் டெக்ஸாஸ் எண்ணெய் நிர்வாகிகள் வெள்ளை மாளிகையில் உள்ளனர் மற்றும் செனட்டர்களின் வாக்குகளுக்காக, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்திலும் லாபி நடவடிக்கைகளிலும் இரண்டு கட்சிகளையும் குறி வைத்து மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்ட எணணெய் பெருநிறுவனங்கள், அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. ஜனநாயக மற்றும் குடியரசு நிர்வாகங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாரியளவு மானியத் தொகைகளையும் வரிச்சலுகைகளையும் வழங்கியுள்ளன, சுற்றுப்புறச்சூழல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை தளர்த்தியுள்ளன மற்றும் பூகோளம் முழுவதிலும் எண்ணெய் கிணறுகள் மற்றும் குழாய் இணைப்புக்களை பாதுகாப்பதில் அமெரிக்க ராணுவத்தை ஒரு தனியார் இராணுவ அளவிற்கு வழங்கியுள்ளது.

எக்ஸான் மொபில் முன்னாள் CEO ரேமாண்ட், புஷ் நிர்வாகத்தின் ஒரு நெருக்கமான கூட்டணியினர் ஆவர், ஆர்டிக் தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் எண்ணெய் கிணறுகள் தோண்டுவது தொடர்பான கொள்கை வகுப்பதில் உதவியவர் மற்றும் பூகோள வெப்பநிலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும், எதிர்ப்பவர். 2001-ல், அந்த நிறுவனம், துணை ஜனாதிபதி செனியின் எரிசக்தி பணிக்குழுவில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்தது, அவை நடத்திய, பல்வேறு விவாதங்களில் ஈராக்கில் உள்ள எண்ணெய் கிணறுகள் பற்றியும் ஐ. நா. தடை நடவடிக்கைகள் முடிவிற்கு வந்த பின்னர் அந்த நாட்டின் தோண்டப்படாத பெரும் எண்ணெய் இருப்புக்கள் ரஷ்யா, சீனா அல்லது பிரான்ஸ் நாட்டு போட்டி நிறுவனங்கள் கையில் சிக்கிக் கொள்கின்ற ஆபத்து இருப்பதாகவும், அவை அமெரிக்க அல்லது பிரிட்டனின், எண்ணெய் நிறுவனங்களின் கையில் வராது என்றும் விவாதிக்கப்பட்டது.

சென்ற மார்ச்சில், செனட் சபையின் நீதி நிர்வாகக்குழு, எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை செயற்கையாக, உயர்த்தி வருவது பற்றி ''புலன்விசாரணையை'' வெளிப்படையாக நடத்தியது. மீண்டும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் ''பெருநிறுவனங்களின் பேராசைகளுக்கு'' போதனை செய்தனர், மற்றும் விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியமளித்த எண்ணெய் நிறுவன தலைவர்கள்மீது தங்களது விரல்களை நீட்டினர். அவரது கருத்துகளில், எக்ஸான் மொபைல் புதிய CEO-வான ரெக்ஸ்டில்லர்சன் அந்த ஆண்மையற்ற நடிப்பை எள்ளி நகையாடினர். அப்போது அவர் செனட்டர்களிடம், நினைவுபடுத்தியது, "சென்ற ஆண்டு எங்களது வெற்றியால் இந்தக் குழுவிலுள்ள சிலர் பயனடைந்தனர் என்று நான் சந்தேகிக்கிறேன்" என்று குறிப்பிட்டார். வாழ்நாள் முழுவதும் எண்ணெய் தொழிலில் உள்ளவர்கள் அவர் என்ன பேசினார் என்பதை அறிவார்கள்: அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பணக்கார செனட்டர்களில் அரிஜோனாவை சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் ஜான் கைல் இடம் பெற்றிருந்தார், அவர் எக்ஸான் நிறுவனத்தில் ஒரு பெரும் பங்குதாரர் அவர் நீண்டகாலம் அந்தத் தொழில்துறையின் நலன்களுக்காக போராடியவர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைதிட்டம்

வளர்ந்துவரும் எரிபொருள் விலைகளால் அமெரிக்காவிலுள்ள, நூற்றுக்கணக்கான மில்லியன் உழைக்கும் மக்களது வாழ்க்கைத் தரங்கள், வீழ்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.

அதே நேரத்தில், மிகப்பெரும் பணியான மாற்று எரிபொருள் வளங்களை மேம்படுத்துவதையும், பூகோள வெப்பநிலை பெருகிவருவதால் எழுந்துள்ள பெருகிவரும் அச்சுறுத்தலை சமாளிப்பதையும், தள்ளிப்போட்டுவிட முடியாது.

எரிவாயு விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடிக்கு ஒரு உடனடி விடை காண்பதோ, அல்லது ஒரு ஈடாட்டம்மிக்க பெட்ரோலிய-அடிப்படை பொருளாதாரத்தை பிரதியீடுசெய்ய ஒரு நிலைத்து நிற்கக்கூடிய தீர்வினை வைப்பதோ, முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக மற்றும் சக்திவாய்ந்த சமூக, நிதி மற்றும் அரசியல் நலன்களை பின்புலமாகக் கொண்ட பெரு எண்ணை நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் ஒரு நேரடி தாக்குதலை தொடுப்பதற்கு அப்பால் சாத்தியப்படமுடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி இலாப நலன்களுக்கு மேலாக சமூக தேவைகளை முன் வைக்கின்ற ஒரு கொள்கையை முன்னெடுக்கின்றது. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் சிறியது முதல் நடு-அளவு வணிகங்கள் வரை ஒரு காலனுக்கு 1.50 டாலர் என்ற எரிவாயு விலைகளின் உச்சவரம்பிற்காக நாங்கள் ஓர் உடனடி அழைப்பினை விடுக்கிறோம்.

இந்த நெருக்கடியை பயன்படுத்தி பெருநிறுவனங்களின் இலாப மற்றும் தனியார் செல்வ குவிப்பின் நோக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெரிய எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் எனெனவென புறநிலையாக அணுக வேண்டும்; அவை குற்றவியல், சமூக-எதிர் நடத்தையை அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து முன்னணி நிர்வாகிகளது, தனிப்பட்ட கணக்குகளை கண்காணிப்பு செய்வது உட்பட பெரிய எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து கிரிமினல் புலன்விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டின் பொழுது எண்ணெய் நிறுவனங்கள் பெற்ற பாரியளவு இலாப சாதனைகளையும் அத்துடன் கம்பெனி நிர்வாகிகளுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் வழங்கப்பட்ட பல மில்லியன் டாலர் ஊதியத்தையும் பறிமுதல் செய்து ஒரு பொது கட்டுப்பாட்டில் உள்ள நிதியில் சேர்க்க வேண்டும்.

இந்த குறுகிய கால நடவடிக்கைகளோடு இணைந்து, ஆற்றல் தொழில்துறை அமைப்பிலும், நிதிக்கட்டுக்கோப்பிலும், அடிப்படையானதொரு மாற்றம், கொண்டு வரப்படவேண்டும். போர், சுற்றுப்புறச்சூழல் பேரழிவு, வாழ்க்கை தர வீழ்ச்சிகளுடன் பூகோளத்தை அச்சுறுத்திக் கொண்டுள்ள பெரிய ஆற்றல் பெருநிறவனங்கள் இலாப நலன்களுக்கு அமெரிக்க மக்களையும் உண்மையிலேயே உலக மக்களையும் பிணைக் கைதிகளாக பிடித்துவைத்திருக்கின்றனர். ஆற்றல் பெருநிறுவனங்களை தேசியமயமாக்குவதன் மூலம் இந்த மரணப்பிடியை முறியடிப்பது அவசியமாகும்-----அதாவது, எக்சின் மொபில், செவ்வரான், கான்கோபிலிப்ஸ் முதலிய நிறுவனங்களை, பொது சொத்துடமையாக்கி ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட சேவைகளாக மாற்ற வேண்டும்.

இது, ஒரு மாற்றீடான சக்கதி வளங்களை அபிவிருத்தி தெய்வதற்கும் சுற்றுப்புற சூழல்மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்கொள்வதற்குமாக, சர்வதேசரீதியாக ஒன்றிணைந்த முறையில் செயற்படுவதற்கு தேவையான பல திரிலியன் டாலர் நிதி வளங்களைப் பெறுவதற்கு ஓர் தொடக்கமாக அமையும்.

செல்வந்தத் தட்டினர் சுவீக, இத்துப் பெருக்கிக்கொள்ளும் வகையில் கரிசனையுடன் "ஒழுங்கு" செய்யப்பட்டுள்ள சந்தைநின் கேழ்விக்கு எதிரான வகையில், தொழிலாளர் வர்க்கத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனநாயகரீதியாக மற்றும் பகிரங்கமாக விவாதிக்கப்படும் ஒர் அறிவார்ந்த முறையில் சர்வதேச திட்டத்தினால் வழிகாட்டப்பட்டு ஆற்றல் வழங்கீடுகளை பயன்படுத்தவேண்டும் மற்றும் எண்ணெய் கண்டுபிடிப்பு, மேம்படுத்தலை உருவாக்க வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு பாதுகாப்பானதாக, மீழவம் புதுப்பிக்கப்படத்தக்க சக்கதிவழங்கு திட்டமாக மற்றும் குறைந்த செலவிற்ல் உலக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இந்த திட்டம் அமையவேண்டும்.

பெரும் லாபத்தை பெறுகின்ற தங்களது முயற்சிகளில் ஆற்றல் ஏகபோக நிறுவனங்களும், மோட்டார் வாகன தொழில்துறைகளும் இணைந்து நீண்டகாலமாக சதி செய்து நம்பகத்தன்மையுள்ள பொது போக்குவரத்து வளர்வதை தடுத்துவிட்டன மற்றும் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த போக்குவரத்து முறைகளை தகர்த்துவிட்டன. ஒரு அறிவார்ந்த ஆற்றல் திட்டத்தில் நகர்புற ரயில் போக்குவரத்து மற்றும் வெகுஜன பஸ் போக்குவரத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படவேண்டும் அத்துடன் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துகின்ற வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் கற்பனாவாதம் அல்ல இவை மனிதகுலத்திலன் எதிர்காலத்திற்கு இன்றியமாயாததாகும். எனினும், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைகளைகண்ணியமான வாழ்க்கைத்தரம், பாதுகாப்பான வேலைகள், தூய்மையான சுற்றுச்சூழல் போர் அற்ற எதிர்காலம் வலியுறுத்துவதனையே வேண்டிநிற்கின்றன. இவை அமெரிக்க ஆளும் தட்டினரின் தனிச்சொத்துடமைகள் மற்றும் இலாபங்களுக்கு மேலாக முன்னுரிமை பெற வேண்டும். இதை வென்றெடுப்பதற்கு தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த அரசியல் கருவியை கட்டியெழுப்ப வேண்டும்அது ஒரு வெகுஜன சோசலிசக் கட்சியாகும்காலாவதியான மற்றும் திவாலான முதலாளித்துவ முறையை பாதுகாக்கும் இரண்டு பெரு வணிக கட்சிகளின், ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பவற்றையே அவை வேண்டிநிற்கின்றன. இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்காகவும் 2006ல் தேர்தல்களில் போட்டியிடும் நமது வேட்பாளர்களின் முன்னோக்காகவும் அமைந்திருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved