World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Sudden resignation of CIA Director Goss: Another tremor in Bush administration

CIA இயக்குனர் கோஸ் திடீர் இராஜிநாமா: புஷ் நிர்வாகத்தில் மற்றொரு அதிர்வு

By Patrick Martin
8 May 2006

Back to screen version

புஷ் நிர்வாகத்திற்குள் கடுமையான உட்பூசல்களும் உறுதியற்ற தன்மையும் உள்ளன என்பதற்கு வெள்ளை மாளிகை திடீரென வெள்ளியன்று CIA மத்திய உளவுத்துறை பிரிவின் இயக்குனர் போர்ட்டர் கோஸ் இராஜிநாமா செய்துள்ளார் என்று அறிவித்தமை மற்றொரு நிரூபணமாகும். ஒப்புமையில் குறைவான 18 மாத கால பதவி காலத்தை உளவுத்துறை பிரிவில் கோஸ் முடிவிற்குக் கொண்டுவந்துள்ளார்; இக்காலக்கட்டத்தில் அவர் ஓர் அரசியல் களையெடுப்பை மேற்கொண்டு குறைந்தது ஒரு டஜன் CIA உயர் அதிகாரிகளையாவது விரட்டியடித்துள்ளார்.

தேசிய உளவுத்துறையின் முதல் இயக்குனராக புஷ்ஷின் விருப்பப்படி நியமிக்கப்பட்டிருந்த ஜோன் நெக்ராபொன்ட் சம்பந்தப்பட்ட, பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய துணைவர் ஸ்டீபன் காம்போனின் தலைமையில் இருந்த இராணுவ உளவுத்துறை எந்திரத்திற்குள்ளேயும், மத்திய உளவுத்துறைக்குள்ளேயே இருக்கும் பல (கன்னைகளின்) பிரிவுகளுக்குள்ளும் நீடித்த, தெளிவற்ற பூசலின் விளைவுதான் கோஸ் இராஜிநாமா ஆகும்.

இந்த உட்பூசலில் தன்னுடைய துணைவரான விமானப்படை துணைத் தலைவர் மைக்கேல் வி. ஹேடனுடன், நெக்ரோபொன்ட்தான் வெளிப்படையாக வெற்றி பெற்றுள்ளார்; தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஹேடன், வெள்ளை மாளிகை அதிகாரிகளால் மத்திய உளவுத்துறையில் கோஸுக்கு அடுத்து பொறுப்பு ஏற்பார். பூசல் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில், மன்ற உளவுத்துறை குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் பீட்டர் ஹோக்ஸ்ட்ரா Fox News Sunday யில் தோன்றி இன்னமும் அறிவிக்கப்படாத தேர்வான ஹேடனின் பதவி பற்றி எதிர்த்து பேசினார்; இந்த இராணுவ உளவுத்துறை அதிகாரி மின்னணு வகை தகவல் சேகரிப்பில்தான் அனுபவம் கொண்டுள்ளாரே அன்றி இரகசிய நடவடிக்கைகளில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

நெக்ரோபொன்ட், ரம்ஸ்பெல்ட், காம்போன் மற்றும் கோஸ் இடையை தெளிவான கொள்கை வேறுபாடுகள் ஏதும் கிடையாது. ஈராக்கில் புஷ் நிர்வாகம் நடத்தும் குற்றம் சார்ந்த ஆக்கிரமிப்புப் போருக்கு இவர்கள் அனைவருமே பொறுப்புக் கொண்டவர்கள்தான்; அதேபோல் எண்ணெய் வளம் மிகுந்த அந்நாட்டில் அமெரிக்க ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுள்ள பெரும் சங்கடத்திற்கும் இவர்கள்தான் பொறுப்பு ஆவர். ஓரளவிற்கு உளவுத்துறை செலவினங்களில் பரந்துள்ள 85 சதவிகிதத்தை கட்டுப்படுத்தும் பென்டகனுக்கும் 2005ம் ஆண்டு CIA உட்பட அனைத்து 15 அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களையும் மையப்படுத்திய வகையில் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நெக்ரோபொன்ட் இன் புதிய அமைப்பிற்கும் இடையே உள்ள நிறுவனப் பூசல்தான் இது.

கோஸை வெளியே அனுப்பியதற்கான உடனடி உந்துதல் அவருக்கு முன்னாள் குடியரசு சட்டமன்ற உறுப்பினரான ராண்டி கன்னிங்ஹாமிடம் இருந்த தொடர்பாக இருக்கக் கூடும்; அவர் பாலியல் மற்றும் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருந்து, கடந்த இலையுதிர்காலத்தில் காங்கிரசில் இருந்து இராஜிநாமா செய்ய நேர்ந்தது; அவருக்கு இராணுவ ஒப்பந்தங்களை சில விருப்பப்பட்ட நிறுவனங்களுக்கு பணத்திற்காகவும் மற்ற சலுகைகளுக்காகவும் கொடுத்ததற்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் சான் டியாகோ யூனியன் டிரிபூன் என்ற மூன்று முக்கிய செய்தித்தாட்களும் கடந்த 10 நாட்களில் சில பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுடன் நின்றிருந்த கன்னிங்ஹாமின் ஊழல் நடவடிக்கைகள் இன்னும் கூடுதலான வகையில் விரிவாகச் செயல்பட்டு மற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகளையும் இழுத்திருந்தது என்று தகவல்கள் கொடுத்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் மத்திய உளவுத் துறையின் மூன்றாம் உயரதிகாரியான நிர்வாக இயக்குனர் Kyle (Dusty) Foggo என்பவரும் - கோஸினால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் -- அடங்குவார் என்று கூறப்படுகிறது.

கன்னிங்ஹாம் வழக்கில் இன்னும் குற்றம் சாட்டப்படாத ஆனால் சதியில் இணைந்தவர் எனக் கூறப்படும் ஓர் ஒப்பந்தக்காரரான கலிபோர்னியாவின் சான் டியாகோ வில்க்கிஸ் என்பவர் கன்னிங்காமிற்கு விலை மாதர்களை அழைத்துச் செல்வதற்கு வாஷிங்டன் பகுதியில் இருக்கும் உயர்ந்த கார்களுக்கு ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தகைய பணிகள் தலைநகரத்தில் வாராந்தர போக்கர் விளையாட்டுக்களுடன் இணைந்து கொடுக்கப்பட்டன; இவற்றில் குடியரசுக் கட்சி அரசியல் வாதிகள், அரசாங்க அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோர் கலந்து கொள்வர்; வில்க்கிஸ் இதை 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். மத்திய உளவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வில்க்கிசின் இளவயது நண்பரான பாக்கோ என்பவர் இந்த விருந்துகளில் வாடிக்கையாக பங்கு கொள்ளுவார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்விருந்துகளுக்கு சிறப்பு கார்களை வாடகைக்கு கொடுத்துவந்த Shirlington Limousine and Transportation Inc. என்னும் நிறுவனத்தின் தலைவரான கிறிஸ்டோபர் பேக்கருக்கு கடந்த ஆண்டு உயர்மட்ட DHS அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதிகள் அளிப்பதற்காக உள்நாட்டுப்பாதுகாப்பு துறை $2.1 மில்லியன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. பேக்கருடைய குற்றம் சார்ந்த போதைப்பொருள் வைத்திருந்த சான்றுகள், சிறு குற்றங்கள் நடத்தும் முயற்சி, ஒரு கொள்ளை, கார் திருட்டு ஆகியவற்றில் பொய் கூறிய வழக்குகள் இரண்டு, இரண்டு தனிப்பட்ட திவால் வழங்குகள், இவருடைய வீட்டை 1998ல் கையகப்படுத்திய வருமான வரித் துறையில் இருந்து வரி தொடர்புடைய வழக்கு ஆகியவை இருந்தபோதிலும்கூட இவ்வொப்பந்தம் அளிக்கப்பட்டது.

அவில்க்கிஸ் மற்றும் பேக்கருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களுக்கு ஆதராம் கொடுத்தவர் கன்னிங்ஹாமிற்கு இலஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களில் ஒருவரான மிட்சல் ஜே. வேட் ஆவார் என்று போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த வழக்கில் குற்றங்களை ஒப்புக் கொண்டிருந்தார். "ஆடம்பரக் கார்கள் கன்னிங்ஹாமையும் ஒரு விலைமாதையும் அழைந்து வந்து வாஷிங்டனில் வெஸ்டின் கிராண்ட் பகுதியில் உள்ள வாட்டர் கேட் ஓட்டலுக்கு இட்டுச் செல்லும்" என்று செய்தித்தாள் கூறியுள்ளது. பேக்கர், வில்க்கிசின் போக்கர் விருந்துகளுக்கு ஆடம்பரக்கார்களை 1990ல் இருந்து வாடகைக்கு கொடுத்து வந்ததாக பேக்கரின் வக்கீல் உறுதிபடுத்தியுள்ளார் என்று யூனியன்-ட்ரிபூன் ஏடு கூறியுள்ளது; ஆனால் விலைமாது தொடர்பை மறுத்துள்ளது.

பேக்கருடைய DHS உடனான வணிகத் தொடர்புகள் மிகவும் அசாதாரணமானவை ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போக்குவரத்து தரும் ஒப்பந்தத்தை பெறுவதற்கு இலாயக்கில்லாமல் பொதுவாக செய்துவிடும் குற்றச் சான்றுகள் இருந்ததைத் தவிர, ஷர்லிங்டன் லிமோசினுடைய நிதிநிலையும் மோசமாக இருந்தது. ஒழுங்காகப் பணிகள் கொடுக்கவில்லை என்பதற்காக ஹோவர்ட் பல்கலைக் கழகம் இதன் ஒப்பந்தத்தை நிறுத்தியதோடு, பலமுறையும் பணத்தைத் திருப்பிப் பெற வழக்குகளும் தொடரப்பட்டன. ஒரு முக்கியமான நேரத்தில், ஏப்ரல் 2004ல், பேக்கர் திவாலாகாமல் தன்னுடைய கடன்காரர்களுக்கு $125,000 பணம் கொடுத்து தப்பித்தார். அக்டோபர் 2005ல் அவருடைய நிறுவனத்திற்கு இன்னும் கூடுதலான, பெரிய ஒராண்டு ஒப்பந்தம் $21.2 மில்லியனுக்கு அளிக்கப்பட்டது.

அனைத்து ஆடம்பரக்கார் ஓட்டுனர்களின் குற்றம் சார்ந்த பின்னணி பற்றி துறை விசாரித்ததாலும், அத்தகைய சோதனை நிறுவனத்தின் சொந்தக்காரர் பற்றி நடத்தப்படவில்லை என்ற அக்கிரமமான கூற்றை DHS செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தத் தொடர்பு பற்றிக் கூறுகையில் விளக்கினார். பேக்கரின் நீண்ட கால சிறு குற்றங்கள் சான்று பற்றி நிறுவனத்திற்கு ஏதும் தெரியாது என்று அதிகாரி கூறினார்.

பாக்கோவிற்கும் கன்னிங்ஹாமிற்கும் இடையே உள்ள தொடர்புகள் சூதாட்டம் மற்றும் விபச்சாரத்திற்கும் அப்பாலும் இருக்கலாம். மத்திய உளவுத்துறையின் தலைமை ஆய்வாளர் வில்க்கிஸ் உடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொள்ளுவதற்கு தவறான செயல்களில் பாக்கோ ஈடுபட்டாரா என ஆய்ந்து வருவதாக சில செய்தித்தாட்கள் தகவல் கூறுகின்றன. கோஸை தொடர்ந்து தானும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறப் போவதாக பாக்கோ தன்னுடைய CIA கூட்டாளிகளிடம் கூறியுள்ளார்.

"ஒரு சட்டமன்ற ஊழல் உறுப்பினருக்கு இலஞ்சமும் விலைமாதர்களும் கொடுக்கப்பட்ட வாட்டர்கேட் போக்கர் விருந்துகளில் கோசும் பங்கு கொண்டிருக்கலாம்" என்று சனிக்கிழமையன்று நியூ யோர்க் டெய்லி நியூஸ் தகவல் கொடுத்துள்து. மேலும் இவ்வழக்கில் பாக்கோ மீதும் குற்றம் சாட்டப்படலாம் என்றும் அது தெரிவிக்கிறது. புஷ் நிர்வாகத்தின்மீது பலமுறையும் குறைகூறியுள்ள முன்னாள் CIA உளவுத்துறையைச் சேர்ந்த லாரி ஜோன்சன் கோசும் பாக்கோவும் "போக்கர் விளையாட்டு மற்றும் விலையுயர்ந்த சுருட்டுக்கள் ஆகியவற்றின்மீது ஆர்வமாக இருந்தனர்" என்று கூறியுள்ளார்; வில்க்கிஸ் கொடுத்த விருந்துகளில் சிலநேரம் கோஸ் பங்கு பெற்றதாக தான் அறியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். "FBI விசாரணையில் ஒரு பொருள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் CIA ஒற்றர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்ற பொருட்களை வழங்கும் $3 மில்லியன் ஒப்பந்தம் வில்க்கிசுக்கு அளிக்கப்பட்டதா என்பதாகும்" என்றும் செய்தித்தாள் கூறியுள்ளது.

பரபரப்பு ஏடுகள் பாலியல் மற்றும் ஊழலின் மீது கவனத்தை குவித்திருக்கையில், இன்னும் கூடுதலான நடைமுறை ஏடுகள், குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்றவை, இந்த வழக்கின் மட்டமான விவரங்களில் இருந்து கோசின் ராஜிநாமாவை ஒதுக்கி வைப்பதில் கவனம் காட்டியுள்ளன. புஷ் நிர்வாகத்தினுள் இருக்கும் அரசியல் பூசல்களை அதன் இயல்பான, அடிப்படையான பகுதியான பெரும் ஊழலில் இருந்து பிரித்து ஆராயமுடியும் என்பதுபோல், நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று இரண்டு தகவல்கள் பற்றி தனித்தனி கட்டுரைகளாக எழுதும் அளவிற்கு சென்றது.

மத்திய உளவுத்துறை நிறுவனத்தின் நடுத்தர அதிகாரியான பாக்கோ திடீரென்று கோஸ் இயக்குனராக வந்தவுடன் உயர்பதவியாளர்களுக்கு இடையே உயர்த்தப்பட்டார்; இதற்காக முன்னாள் மூன்றாம் உயர் அதிகாரியாக இருந்த மைக்கேல் கோஸ்டிவ் கூட நிர்வாகத்தின் உயரிடங்களில் புஷ் எதிர்ப்பாளர்களை நீக்கிய செயலின் ஒரு பகுதியாக வெளியேற்றப்பட்டார். ஜேர்மனியில் பிராங்போர்ட்டில் CIA நிலையத்தில் செயற்பாடுகளின் தலைவராக பணியாற்றுகையில் கோசின் நெருக்கமான நண்பராக பாக்கோ ஆனார் என்று கூறப்படுகிறது; அக்காலக் கட்டத்தில் மன்ற உளவுத்துறை குழுவின் தலைவராக கோஸ் இருந்து மத்திய உளவுத்துறை அலுவலங்கள் அயல்நாடுகளில் செயல்படுவதை ஆய்வு நடத்தியிருந்தார்.

CIA இயக்குனராக கோஸ் இருந்த காலம், தொடர்ந்து எப்பொழுதும் நெருக்கடியை கண்ட காலமாகும்; குறிப்பாக கடந்த எட்டு மாதங்களில், வாஷிங்தன் போஸ்ட் வெளிநாடுகளில் உள்ள CIA தடுப்புக் காவல் மையங்கள் அமைப்பை அம்பலப்படுத்தியிருந்தது. இதன் பின்னர் கசிவுக்கு எதிரான பிரச்சாரம் கோசின் நேரடி மேற்பார்வையினால் நிகழ்த்தப்பட்டது; இதற்குக் காரணம் போஸ்ட்டின் தகவலுக்கு சான்று கொடுத்தது யார் என்பதாகும். கடந்த மாதம் ஒரு மூத்த CIA அதிகாரி, தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் இருக்கும், மேரி மக்கார்த்தி என்பவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரம் முன் பணிநீக்கம் செய்யப்பட்டார்; போஸ்ட் உட்பட செய்தி ஊடகத்துடன் தொடர்பு பற்றிய விசாரணையில் உண்மை கண்டறியும் இயந்திரம் அவருடைய பொய்யை வெளிக் கொண்டுவந்தது. ஆனால் இதன் பின்னர் தனக்கு இரகசிய சிறைகள் பற்றி ஏதும் தெரியாது என்றும் அவற்றிற்கு தான் காரணம் அல்ல என்றும் மக்கார்த்தி மறுத்துள்ளார்; மத்திய உளவுத்துறை பிரிவு அதிகாரிகளும் அவருக்கு எதிராக கசிவில் சான்றுகள் ஏதும் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஹேடன் நியமனம் நிர்வாகத்திற்கு அரசியல் அளவில் ஒரு காலக் கெடு உடைய குண்டு போல் ஆகலாம்; ஏனெனில் NSA வில் அவருடைய பணிகள் பற்றி வினாக்கள் வேலை உறுதிப்பாடு நேரத்தில் எழுப்பப்படலாம்; NSA வில் அவர் இருந்தபோது அமெரிக்கக் குடிமக்கள்மீது மின்னணு ஒற்றுவேலைக்கு அவர்தான் பொறுப்பாக இருந்தார்; டிசம்பர் மாதம் நியூ யோர்க் டைம்சிற்கு இது பற்றிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்தக்கசிவு மற்றொரு உயரழுத்த உட்பாதுகாப்பு விசாரணைக்கு வழிவிட்டது; ஆனால் அதற்குக் காரணம் என்று இதுவரை எவரும் வெளியே அனுப்பப்படவும் இல்லை; குற்றம் சாட்டப்படவும் இல்லை.

கசிவுகள், எதிர்மறைக் கசிவுகளும் அதிகாரபூர்வ வாஷிங்டனில் பெருகிய முறையில் பைசன்டைன் பேரரசுச் சூழ்நிலை உள்ளது என்பதை நிரூபிக்கின்றன. குடியரசுக் கட்சிக்கு மாற்று ஏதும் கொடுக்காத பெயரளவு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உள்ள இருகட்சி முறையின் செயலற்ற தன்மை மூலம் அனைத்து அரசியல் பிரச்சினைகளும் வடிகட்டப்படுவதால், ஆளும் வர்க்கத்தின் கொள்கைப்பூசல்கள் பகிரங்கமான விவாதம் என்ற வெளிப்பாட்டிற்கு வருவதில்லை.

"பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற அதிகாரபூர்வ சொற்பூச்சுக்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் எண்ணெய் வளங்கள், மூலோபாயச் சிறப்பு நிலைகளை கொள்கைமுறையில் எடுத்துக் கொள்ளும் உண்மைக்கும் இடையே இருக்கும் பிளவு மிகப் பெரிய வகையில் இருப்பதால், புஷ் நிர்வாகம், சட்ட மன்றம் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்து ஊடகம் ஆகியவற்றில் எவரும் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை உண்மையான வகையில், தீவிரமான வகையில் விவாதிக்க இயலாது.

இவ்விவாதங்களுக்கெல்லாம் மேலாக 9/11 தாக்குதல்கள் பிரச்சினை மற்றும் இராணுவமும் உளவுத்துறை பிரிவுகளும் முன்பே அதுபற்றித் தகவல் பெற்றன என்பதற்கான போதுமான எச்சரிக்கைகளும் உள்ளன. சிறிதும் பயனற்ற பல ஆய்வுகளுக்கு பின்னர் மகத்தான திறமையின்மை அல்லது வேண்டுமென்றே இணங்கி நின்றது என்ற செயலுக்காக எந்த உயர்மட்ட அதிகாரியும் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக, உளவுத்துறைக் கருவிக்குள் இருக்கும் பூசல்கள் அரண்மனை தர்பாரில் மறைந்த தன்மையுடைய பூசல்களின் தன்மையை பெற்று வருகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved