WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The implications of the immigrant demonstrations for
the class struggle in America
அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்திற்கான புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களின்
உட்குறிப்புக்கள்
Statement of the Socialist Equality Party
4 May 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
அமெரிக்க முழுவதிலும் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள்,
வேலைநிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புக்கள் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் உள்ள வர்க்கப் போராட்டம்
கூர்மையடைவதின் அடையாளம் ஆகும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூ யோர்க், மியாமியில் இருந்து சியாட்டில் வரை, மற்றும்
இடைப்பட்ட ஏராளமான நகரங்களில் உண்மையில் மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்.
மார்ச்சில் இருந்து நடைபெற்று வரும் இந்த வெகுஜன கண்டன இயக்கம் அளவிலும், அதன் தேசிய வரம்பிலும்
முன்னோடியில்லாத வகையில் அதிகமாகும்.
தங்கள் பணியில் இருந்து வந்து கலந்து கொண்டவர்களும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும்
ஜனாதிபதி புஷ் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளின் எச்சரிக்கையை மீறி பங்கேற்றனர். அரசாங்கத்தால்
நாடு முழுவதும் ஆலைகள் அண்மையில் திடீர்சோதனையிடப்பட்டதால் முன்வைக்கப்பட்ட அப்பட்டமான மிரட்டல் மற்றும்
அதேபோல கைது செய்யப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் நாடு கடத்தல் மற்றும் தீவிர வலது மூலங்களினால் ஆன
வன்முறை இவற்றை எதிர்கொள்கையில் அவர்களும் கூட இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அரசாங்கத்தால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்ட
தொழிலாளர்களின் தட்டு திடீரென்று ஒரு போர்க்குணமிக்க, சக்தி வாய்ந்த மற்றும் சமூக சக்தியின் குரல் கொடுப்பாளானாக
வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட
பிரிவின் இந்த நடவடிக்கைகள் மிக ஆழ்ந்த சமூக அரசியல் வேர்களை கொண்டிருப்பதுடன், தொலைவிளைவு
தரக்கூடிய புறநிலை முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், வெற்றிகொள்ள வேண்டிய, தொழிலாள வர்க்கம்
ஒட்டுமொத்தத்திற்குள்ளுமான அரசியல் நனவின் வளர்ச்சி பற்றிய பிரச்சினைகளை இந்த ஆர்ப்பாட்டங்கள்
அவசரமாக எழுப்புகின்றன.
அமெரிக்காவிற்குள் பெருகிய முறையில் பதட்டம் தரும் உறுதியற்ற அரசியல் நிலைமைகளையும்
இந்த ஆர்ப்பாட்டங்கள் காட்டியுள்ளன. தொடர்ச்சியான கருத்துக் கணிப்புக்கள், புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களில்
மூன்றில் ஒரு பகுதியின் ஆதரவைத்தான் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய முன்னர் என்றுமிருந்திராத
அரசியல் பொறிவிற்கு என்ன காரணம் கூற முடியும்? வெகுஜன ஊடகமோ அல்லது பெயரளவு எதிர்க்கட்சியினரான
ஜனநாயகக் கட்சியினரோ போர் அல்லது ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலுக்கு அல்லது பரந்த
உழைக்கும் மக்களிலிருந்து, உயர்மட்ட 1 சதவிகிதத்திற்கு செல்வத்தை மாற்றிக் கொண்டிருக்கும் உள்நாட்டுக்
கொள்கைக்கு எந்தவித தொடர்ச்சியான அல்லது தீவிர சவாலையும் வெள்ளை மாளிகைக்கு காட்டவில்லை.
ஆயினும் கூட, விரைவாக வாழ்க்கைத் தரங்கள் மோசமடைந்துள்ளநிலை மற்றும்
வரலாற்று ரீதியாக முன்என்றுமிருந்திராத அளவில் சமூக துருவமுனைப்பு இவற்றோடு இணைந்த வகையில், ஈராக்கின்
மீதான சட்டவிரோதப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளில் புஷ் நிர்வாகத்தால் நிகழ்த்தப்பட்ட நடவடிக்கைகள்,
மக்களுடைய நனவின் மீது ஆழ்ந்த விளைவை காட்டத் தொடங்கியுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள வெகுஜன இயக்கத்தை
வடிவமைத்ததில் இந்த மாற்றம் ஒன்றும் சிறிய பங்கை வகிக்கவில்லை. ஜனநாயகக் கட்சி அல்லது தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின் செல்வாக்கிற்கு வெளியேதான் அதிகமாக இது வெளிப்பட்டுள்ளது; அதனால்தான் துல்லியமாக
அத்தகைய ஒரு வெகுஜன மற்றும் வெடிப்புத் தன்மை உடைய வடிவமைப்பை அது எடுத்துள்ளது. பெருவணிக
ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளுடனான கூட்டில், சிதைந்த தொழிற்சங்க கருவியானது உண்மையான சமூக
எதிர்ப்பு இயக்கங்களை கருச்சிதைக்கவும் மூச்சுத்திணறடிப்பதற்கும் மட்டும்தான் சேவை செய்கிறது.
புலம்பெயர்ந்த உழைக்கும் சக்தியின் வளர்ச்சி அமெரிக்கா முழுவதும் உள்ள
தொழிலாள வர்க்கத்தின் சமூக அமைப்பில் இடம் பெற்று வரும் தீவிர மாறுதல்களில் ஒரு பகுதியாகத்தான் உள்ளது.
ஒருகாலத்தில் அமெரிக்க "மத்தியதர வர்க்கத்தின்" கணிசமான அடுக்குகள் என்று கருதப்பட்ட நிலையில் இருந்து
மாறி சமூக அந்தஸ்த்தில் சரிவை பெற்று, உறுதியான வேலை, ஓய்வூதியங்கள், நிறுவனச் செலவில் சுகாதாரப்
பாதுகாப்பு மற்றும் ஏனைய அடிப்படை சமூக வசதிகள் ஆகியவை மறுக்கப்பட்டுள்ள நிலைமையில், இதன் எண்ணிக்கை
மிகப் பரந்த அளவில் விரிந்துள்ளது.
மக்கட்தொகையில் மிகப் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களுக்கும்
தலைமை நிர்வாக அதிகாரிகள் என்னும் நிதியாதிக்க ஒருசிலவராட்சி, வால் ஸ்ரீட் நிதியாளர்கள் மற்றும் பெரும்
செல்வக் கொழிப்பு கொண்டு சமுதாயத்தால் தோற்றுவிக்கப்படும் செல்வத்தில் இன்னும் கூடுதலான பங்கை,
ஏகபோக உரிமையைக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் ஆகியோருக்கும் இடையே இந்த நிகழ்வுப்போக்கு
மகத்தான பிளவை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு
CEO க்கள்
சரசாரி தொழிலாளி வாங்கும் 1 டாலர் ஊதியத்திற்கு 10 டாலர்கள் ஊதியமாக பெற்றனர்; இன்றோ அந்த
விகிதாச்சாரம் 1 டாலருக்கு 431 டாலர்களாக உள்ளது.
இந்த கூர்மையான சமூகப் பிளவு அமெரிக்காவில் சமூக எழுச்சிகளுக்கு ஏற்ற
நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தோர் கண்டனங்கள் உலகின் முதலாளித்துவ மையத்தில்
பாரியளவிலான வர்க்கப் போர்களுக்கு முகவுரையாக காண்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிய வரும்.
"புலம்பெயர்ந்தோரின் நாடு" என்ற அமெரிக்காவை பற்றிய உலகறிந்த உண்மை
எப்பொழுதுமே அமெரிக்காவிற்குள் வெகுஜன புலம்பெயர்தலை பண்பிடும் கடுமையான பூசல்கள், ஆழ்ந்த சமுதாய
முரண்பாடுகள் ஆகியவற்றை மறைக்கத்தான் சேவை செய்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஐரோப்பாவில் இருந்து வந்த புலம்பெயர்ந்தோரின் அலை அமெரிக்க
உற்பத்தித் துறையில் வெடிப்புத் தன்மை வாய்ந்த வளர்ச்சியுடைய தொழிலாளர் சக்திக்கு முக்கிய ஆதாரத்தை
வழங்கியுள்ளது. அவர்கள் தீவிரமயமாக்கப்பட்ட நிலையானது நவீன அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் முதலாவது
மாபெரும் போராட்ட அலைகளைத் தோற்றுவித்துள்ளது.
முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் தாக்கம்
புதிய புலம்பெயர்தல் அலையானது ஐயத்திற்கு இடமின்றி அத்தகைய ஆழ்ந்த விளைவை
கொடுக்கும். ஆனால் இது தீவிரமாய் மாறியிருக்கும் நிலைமைகளில் இடம் பெறுகிறது. அமெரிக்கா ஒன்றும்
இப்பொழுது ஏறுமுகம் அடையும் முதலாளித்துவ வல்லரசு அல்ல; ஆனால் மாறாக உலகின் மிகப் பெரிய கடனாளி
நாடாக அது இருப்பதுடன், உலகச் சந்தைகளில் தன்னுடைய நிலையின் ஒப்பீட்டளவிலான சரிவை மாற்றுவதற்கான
முயற்சியில் பூகோள இராணுவவாதத்தை மீண்டும் கையாள்கிறது.
மேலும், உண்மையான உலகந்தழுவிய அளவில் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கை ஒழுங்கமைக்க,
நாடுகடந்த நிறுவனங்களாலும் சர்வதேச வங்கிகளாலும் கணனி தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள் மற்றும்
போக்குவரத்து துறைகளில் வளர்ச்சி ஆகியன பயன்படுத்தப்பட்டு, உலக முதலாளித்துவ உற்பத்தியில் மகத்தான மாறுதல்கள்
ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த புலம்பெயர்தல் நடைபெற்று வருகிறது.
பூகோளரீதியாக நடமாடும் மூலதனத்திற்கு தேசிய எல்லைகளை திறந்துவிடுவது
தேவையாகிறது பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் சந்தைகள், மூலப்பொருட்களுக்காகவும்
தொழிலாளர்களை சுரண்டுவதற்காகவும் அவர்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கவேண்டியுள்ளது. இதன்
விளைவு, குறிப்பாக அமெரிக்காவின் ஆவணமற்ற தொழிலாளர்களின் பெரும்பான்மையானோருக்கு பிறப்பிடப்
பகுதிகளான மெக்சிகோவிலும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தேசிய தொழில்துறைகள் பேரழிவிற்கு
ஆளாதல், வேலைகள் அழிக்கப்படல், வாழ்க்கைத் தரங்களில் பேரழிவுகரமான வீழ்ச்சியாக இருந்து வருகின்றன.
இந்த நிலைமைகள்தாம் புலம்பெயர்தல் முன்னோக்கி செல்வதற்கு பயன்படுகின்றன.
ஆயினும்கூட, எல்லைகள் தங்களுடைய முதலீடுகளுக்காக திறக்கப்பட வேண்டும் என்று
கோரும் இதே அமெரிக்கத் தளத்தைக் கொண்டுள்ள பெருநிறுவனங்களின் அரசியல் பிரதிநிதிகள், வேலையைத் தேடி
அமெரிக்க எல்லைக்குள் புக முயற்சிக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராக பீதியுணர்வை தூண்டிவிடுவதுடன்,
மெக்சிகோவுடன் உள்ள 2,000 மைல் நீள எல்லைக்கு சுவர் எழுப்ப வேண்டும், அது இராணுவமயமாக்கப்பட
வேண்டும் எனக் கோருகின்றனர்.
மூலதனத்திற்காக திறந்த எல்லைகள் வேண்டும், தொழிலாளர்களை நகரவிடாமல்
சுவர் எழுப்புதல் ஆகிய இந்த கோரிக்கை அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை மட்டும் அல்ல; ஒவ்வொரு பெரிய
முதலாளித்துவ வல்லரசுகளினாலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் இக்கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அரசியல் ஸ்தாபனங்கள், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக்களால்
முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஒரு முற்போக்கான பாணியில் தீர்த்து வைக்க இயலாதவையாகும். இந்த
எதிர்ப்புக்களை ஒரு ''புதிய சிவில் உரிமைகள் இயக்கத்தின்" எழுச்சி என்று ஜனநாயகக் கட்சி மற்றும்
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவினர் சித்திரிக்க முற்படுகையில், தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம்
நடத்துபவர்களுடைய கோரிக்கையில் ஆழ்ந்த சமூக தன்மை, தொழிலாளர்கள் என்ற முறையில் அவர்களுடைய
உரிமைகளை கோருதல் என்ற யதார்த்தம்தான் இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஆளும் உயரடுக்கு 1960களில் சிவில் உரிமை போராட்டங்களின்
விளைவாய் வழங்குவதாய் இருந்த அந்தவகை மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை - "வறுமையின் மீதான போர்"
என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை கிட்டத்தட்ட அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும்
பெற்றிருக்கவில்லை. பெரும்பாலும் இத்திட்டங்கள் ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய நலன்களும்
தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்விதக் கடுமையோடு தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்
என்ற பிற்போக்கான விவாதத்தில்தான் அமெரிக்க தேசியச்சட்ட மன்றம் புலம்பெயர்ந்தோர் பற்றிய "சீர்திருத்தங்களை"
விவாதிப்பதில் பிளவுற்றுள்ளது. ஒரே ஒரு சட்டத்தை இயற்றியுள்ள பிரதிநிதிகள் மன்றம் ஆவணமற்ற தொழிலாளர்களை
குற்றம்புரியும் பாதகனாக நடத்த வேண்டும் என்றும் எல்லைகளில் ஊடுருவாது தடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோரும் சமரசம் என அழைக்கப்படும்
தாக்குதலை குடியரசுக் கட்சியின் வலதுசாரியினர் மேற்கொண்டபின்னர், செனட் மன்றம் எந்த மசோதாவையும்
இயற்றத் தவறிவிட்டது; அதேநேரத்தில் மிக நீண்ட காலமாக வசித்துவரும் அத்தகைய தொழிலாளர்களுக்கு சட்டரீதியான
அங்கீகாரம் அளிப்பதற்கு காலதாமதம் நிறைந்த வழியைத்தான் வழங்கிக்கொண்டிருக்கிறது.
செனட் மன்றத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, புலம்பெயர்ந்தோர் பிரச்சினையில்
தீர்வு காணமுடியாத அரசியல் முரண்பாடுகளை அமெரிக்க ஆளும் உயரடுக்கு கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது. ஒரு
புறத்தில் பெருவணிகம், குறைவூதிய, சுரண்டலுக்கு பயன்படும் தொழிலாளர் தொகுப்பு தொடர்ச்சியாக வரவேண்டும்
என விரும்புகிறது. மறுபுறத்தில் அது தேசியவாதத்தையும், இனவெறியையும் வளர்க்கிறது; இவை இரண்டும்
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற அதன் உலகந்தழுவிய இராணுவவாத பிரச்சாரத்தை மேலும்
முன்னெடுக்கும் வகையிலும், உள்நாட்டிலுள்ள தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வகைசெய்கின்றன.
தேசிய சட்டமன்றத்தில் தடை ஏற்பட்டுள்ளதை அடுத்து நாடெங்கிலும் மாநிலச் சட்ட
மன்றங்கள் தங்களுடைய புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்புச் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டதாக வாஷிங்டன்
போஸ்ட் செவ்வாயன்று தகவல் கொடுத்துள்ளது; 43 மாநிலங்களில் 463 சட்டவரைவுகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களை கைது செய்தல்,
அவர்களுக்கு அடிப்படை பணிகளை மறுத்தல், வாகனம் ஓட்டும் உரிமையை மறுத்தல் போன்ற தண்டனைகள்
கொடுப்பதாக உள்ளன; மேலும் மாநில, உள்ளூர் போலீசார் சிறு போக்குவரத்து விதிமீறலுக்காகக் கூட
புலம்பெயர்ந்தோர்களின் அந்தஸ்தை சோதிக்கும் உரிமையும் கொடுக்கப்பட உள்ளது.
"அமெரிக்கக் கனவை" புலம்பெயர்ந்தோர்கள் தழுவும் நிலை பற்றியும் செய்தி
ஊடகத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
இத்தகயை பாரியளவு மற்றும் அரசியல்ரீதியாக தெளிவற்ற நிலையை கொண்டுள்ள
எதிர்ப்பு இயக்கம் பல பிரமைகளினால் அவதியுற்றுள்ளது; ஜனநாயகக் கட்சியில், சீர்திருத்தங்களை அழுத்தம் மூலம்
கொண்டுவரலாம் என்ற நினைப்பிலும்----அதேபோல் அமெரிக்க சமூகத்தின் இயல்பு பற்றி வெகுளித்தனமாகவும்
உள்ளது. இந்த பிரமைகள்தாம் உண்மையான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன; இவை அரசியல் போராட்டத்தின்
மூலம்தான் வெற்றிகொள்ளப்பட முடியும்.
ஆனால் உண்மை என்னவென்றால் புலம்பெயர்ந்தவர்கள் ஓர் ஆழ்ந்த அமெரிக்க தீய
கனாவில்தான் பங்கேற்றுள்ளனர். ஈராக்கிய போரில் இலத்தீன் அமெரிக்க துருப்புக்கள் நூற்றுக்கணக்கில்
மடிந்துள்ளனர். எரிவாயு, எரிபொருட்களில் பெரிய அளவில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது மற்றும் தேக்க நிலை
அல்லது சரிவைக் கொண்டுள்ள ஊதியங்கள் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு, தொழிலாள வர்க்கத்தின்
மற்ற பிரிவினரை போன்றே பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளன.
இந்தப் பொது அக்கறைதான் ஆளும் உயரடுக்கின் விரோதப் போக்கிற்கு காரணமாகும்;
இதையொட்டித்தான் நாடு முழுவதும் பணி மற்றும் கடைகளை மே 1ம் தேதி ''புறக்கணிக்க வேண்டும்'' என்ற அழைப்பு
விடுக்கப்பட்டது; இந்த நிர்பந்தத்தினால் அமெரிக்க இறைச்சி பதனிடும் தொழில்துறை உட்பட, பரந்த எண்ணிக்கையிலான
வணிகங்கள், மூடப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கையைக் காணும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகள் "நாமும்
ஏன் இதைச் செய்யக் கூடாது?" என்று கருத வைத்துள்ள அச்சமும் தோன்றியுள்ளது.
புலம்பெயர்ந்தோர்- எதிர்ப்பின் மீது திட்டமிட்ட ''கடுமையான எதிர்த்தாக்குதல்''
புலம்பெயர்ந்தோரின் நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டமிட்டு "கடுமையான
எதிர்த்தாக்குதல்" தொடுக்கும் முயற்சிகளின் பின்னணி இதுதான். மிகவும் பிற்போக்கான, பாசாங்குத்தனமான,
அரசியலில் ஆபத்து விளைவிக்கக் கூடிய இயல்நிகழ்வின் வெளிப்பாடு புஷ்ஷின் வெள்ளை மாளிகையில் இருந்தே
வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் தேசிய கீதம் ஸ்பெயின் மொழியில் பல இலத்தின் மொழிப் புகழ்பெற்ற
பாடகர்களால் இசைக்கப்பட்டு, இசைத்தட்டுக்களாக வெளிவந்துள்ளது பற்றி பெரும் பிரச்சினையை வெள்ளை
மாளிகையே தூண்டி விட்டுள்ளது.
"Star Spangled
Banner" என்னும் ஸ்பெயின் மொழி மாற்றப் பாடல்கள்
முதன்மைப்படுத்தி ஒலிக்கப்பெற்ற பிரச்சாரப் பேரணிகளில் தொடர்ச்சியாக புஷ்ஷே பங்கு பெற்றார் எனக்
கூறப்படுவதையும் பொருட்படுத்த தேவையில்லை; அப்பொழுது ஒன்றும் இந்த மொழி அக்கறை வெளிப்படவில்லை.
நிர்வாகத்தின் முக்கிய அரசியல் தளமாக விளங்கும் குடியரசுக் கட்சியின் வலதுசாரி இனவெறி அடுக்கிற்கு முறையீடு
செய்யும் வகையில் தற்பொழுது இந்தப் பிரச்சினை குடியரசுக் கட்சி அரசியல் நடவடிக்கையினால்
தோற்றுவிக்கப்பட்டு, முடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய அழைப்பீட்டின் முட்டாள்தனமும் பொறுப்பற்ற தன்மையும் வியப்படைய
வைக்கின்றன. ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழி என வளர்க்கும் அமெரிக்க ஜனாதிபதி கருத்துரு --அப்படி
ஒன்றும் அமெரிக்க அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை-- சில நாடுகளில் உள்நாட்டுபோருக்கு
வழிவகுத்த, ஆழ்ந்த சமூகப் பூசல்களை ஏற்படுத்திய தன்மையை தூண்டும் அச்சுறுத்தலைத்தான் கொண்டுள்ளது.
இத்தகைய பிற்போக்கான தேசியவாத அழைப்பீட்டிற்கு இணையாக வலதுசாரி
ஜனரஞ்சகவாத கிளர்ச்சிகள் ஒரு தேசிய அரசியல் பிரமுகர் என்ற மாற்றம் கொடுக்கப்பட்ட
CNN
வர்ணனையாளர் Lou Dobbs,
முதல் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில பகுதிகள் வரையிலான முற்றிலும் வேறுபட்ட கூறுபாடுகளினால்
நடத்தப்படுகிறது; இவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிராக கொண்டுள்ள விரோதப்போக்கு
அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின்பால் கொண்டுள்ள அக்கறையினால் உந்துதல் பெற்றுள்ளது என்று பாசாங்கு
காட்டுகின்றனர்; அமெரிக்க தொழிலாளர்களுடைய வேலைகள் புலம்பெயர்ந்தோர்களால் பறிக்கப்படுவதாகவும்,
அவர்களுடைய ஊதியங்கள் அமெரிக்காவிலுள்ள 12 மில்லியன் ஆவணமற்ற தொழிலாளர்களால் பாதிக்கப்படுவதாகவும்
அவர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு பிற்போக்குத்தனமான பொய்யாகும். வேலைகள், வாழ்க்கைத் தரங்கள்,
சமூக பயன்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை புலம்பெயர்ந்தோர்களின் தவறினால் விளைந்தது அல்ல; இது
முதலாளித்துவ முறையின் உலகந்தழுவிய நெருக்கடியின் விளைவு ஆகும்---- அந்த பொருளாதார முறையைக் காக்க
விரும்புகிறவர்கள் ஆவணமற்ற தொழிலாளர்களை பலிகடாவாக்க முற்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தேசியப் பொருளாதாரத்தை சுவரிட்டு மூடும்
முறையை ஆதரிப்பதின் மூலம் அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டிலோ தொழிலாள வர்க்கம் அடைந்துள்ள
உரிமைகள் அல்லது பழைய சலுகைகளை காத்தல் என்பது இயலாததாகும். அத்தகைய அணுகுமுறையின் பயனற்ற
தன்மை உத்தியோகபூர்வ தொழிற்சங்க இயக்கங்கள் அமெரிக்காவில் பரிதாபத்திற்குரிய முறையில் தோல்வி
அடைந்ததில் மூலம் நன்கு நிரூபணம் ஆகியுள்ளது; அவை பல தசாப்தங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும்
தொழிலாளர்களிடம் இருந்து "அமெரிக்க வேலைகளை" பாதுகாத்துக் கொள்ளவதற்கு பெருவணிகத்துடன் பொது
அக்கறைகள் இருப்பதாக அவர்கள் தொழிலாளர்களை நம்பவைக்க முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு உள்ள
மெக்சிகோ, சீனா மற்ற பகுதிகளுக்கு உற்பத்தியை மாற்றியது போலவே நூறாயிரக்கணக்கான வேலைகளை
அழிப்பதற்கும் ஆலைக்களுக்குப்பிறகு ஆலைகளை மூடவும் செய்துள்ளனர்.
ஒரு சர்வதேச அடிப்படையில் உலகரீதியாக நகரக்கூடிய மூலதனத்தை எதிர்ப்பதற்கு
தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்டால்தான் வெற்றிகரமான போராட்டத்தை தொடுக்க
முடியும். தொழிலாளர்கள் பெருமளவு ஊதிய வெட்டிற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், பணி நிலைமைகளுக்கு உட்படவேண்டும்
இல்லாவிட்டால் அவர்களுடைய வேலைகள் குறைவூதிய நாடுகளுக்கு சென்றுவிடும் என்னும் முதலாளிகளால் வைக்கப்படும்
இடைவிடாத கோரிக்கைக்கு, தொழிலாளர்கள் சர்வதேச அளவில் மற்றும் சோசலிச முன்னோக்கு அடிப்படையில்
ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டம் தவிர வேறு சரியான விடை எதுவும்
கிடையாது.
அமெரிக்கா உட்பட ---- தாங்கள் விரும்பும் எந்த நாட்டிலும் குடியுரிமையின் முழு
ஜனநாயக உரிமை மற்றும் சமூக உரிமைகளுடன், வசிப்பதற்கும் உழைப்பதற்குமான உழைக்கும் மக்களின் உரிமையை,
தணியாத வேட்கைகொண்ட பாதுகாப்புடன் இது கட்டாயம் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்.
இளம் தொழிலாளர்களின் உரிமைகளை தாக்குதல், மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ
நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் முழுவதுமாக விலை கொடுக்க வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட சிராக்
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக, மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இளைஞர்கள்
ஆகியோர் பங்கு பெற்ற பரந்த வெகுஜன எதிர்ப்புக்கள் நடந்த சில வாரங்களுக்கு பின்னர், அமெரிக்காவிலும்
பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல.
உலகந்தழுவிய முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த,
ஒன்றுபட்ட தாக்குதலுக்கான நிலைமைகள் தோன்றத்தொடங்கியுள்ளன. பூகோளமயமாக்கல், தொழிற்சங்கங்களின்
பழைய தேசிய சீர்திருத்தவாத நோக்குநிலையை மட்டும் திறமையற்றதாக்கவில்லை; மேலும் அது வியத்தகு முறையில்
உலகம் முழுவதும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெருக்கியுள்ளது; அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிலும்
ஒருபோதும் இல்லாத வகையில் ஒரேமாதிரியான நிலைமைகளை உழைக்கும் மக்கள் மீது திணித்துள்ளது.
அமெரிக்க உழைக்கும் மக்களை ஐரோப்பா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா இன்னும்
பிற இடங்களில் உள்ள அவர்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு பொது சோசலிச மற்றும் சர்வதேசக்
கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்கான போராட்டத்திற்கு ஜனநாயகக் கட்சியுடன் சமரசப்படுத்தமுடியாத
ஒரு உடைவு தேவைப்படுகிறது. புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள், வேலைகள்,
வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதையும் கடப்பாடாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன
சோசலிச இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும்.
அத்தகைய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அஸ்திவாரங்களை அமைப்பதற்காகத்தான்
அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்தி 2006 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி தலையிடுகிறது. இந்த
பிரச்சாரத்தில் அனைத்து விதமான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரினவாதத்தை தளர்வின்றி நாம் எதிர்த்து
போராடுவோம் என்பதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசியல் குரல் கொடுக்கவும்
முயற்சிப்போம்; அவர்களுடைய போராட்டத்தை அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும்
உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்டத்துடன் ஒன்றிணைப்போம்.
புலம்பெயர்ந்தோருடைய உரிமைகளுக்கு ஆதரவு தருபவர்கள், மற்றும் உழைக்கும் மக்கள்
ஒட்டுமொத்தத்தினதும் நோக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரையும் எமது
வேலைத்திட்டத்தைப் படிக்குமாறும், பிரச்சாரத்தில் பங்கு பெறுமாறும், எமது வேட்பாளர்களை வாக்குச்சீட்டில்
இடம் பெறச்செய்யுமாறும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான
போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணையுமாறும் வலியுறுத்துகின்றோம்.
Top of page |