World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Background to the recent events in France The "Lisbon Strategy" and the European trade unions பிரான்சின் அண்மை நிகழ்வுகளுடைய பின்னணி "லிஸ்பன் மூலோபாயமும்" ஐரோப்பிய தொழிற்சங்கங்களும் By Rick Kelly இரண்டு மாதங்களுக்கும் மேலாக பிரெஞ்சு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட கண்டனங்கள், வேலைநிறுத்தங்களை தொடர்ந்து கோலிச அரசாங்கம் "முதல் வேலை ஒப்பந்தத்தை" திரும்ப பெற்றுக் கொண்டதானது, ஐரோப்பிய ஆளும் உயரடுக்கினருக்குள் வேலைப்பாதுகாப்புக்களை அகற்றும் முயற்சிகளை இருமடங்காக அதிகரித்தல் மற்றும் அமெரிக்க முறையிலான "தடையற்ற சந்தை'' பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை தூண்டிவிட்டுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும் பின்வாங்கியுள்ளமை இருவருக்கும் அரசியல் ரீதியாக மதிப்பிழப்புதான். ஆனால் இதையொட்டிய முக்கிய உள்ளடக்கமானது, பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது கட்சிகள் --சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி-- வெகுஜன கண்டன இயக்கத்தை முடிவுறச் செய்ததில் அவர்களது சேவையை பயன்படுத்திக்கொள்வதாகும், அதன் மூலம் தொழிலாளர்களுடைய நிலைமைகள், உரிமைகள் இவற்றின் மீது புதிய தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும் கால அவகாசம் வாங்குவதற்கும்தான். தங்களுடைய தொழிலாள வர்க்க எதிர்ப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்கும் என்று பிரெஞ்சு ஆளும் உயரடுக்கினர் சரியான காரணத்துடன்தான் கணக்கிடுகின்றனர். பிரெஞ்சு நிறுவனங்கள் இளந்தொழிலாளர்களை எக்காரணமும் இன்றி அவர்களுடைய முதல் இரண்டாண்டு பணிக்காலத்தில் வேலையில் இருந்து நீக்கலாம் என்று அனுமதித்த CPE ஆனது, சமூக செலவினங்களை வெட்டுதல் மற்றும் தொழிலாளர் ஊதியங்களை குறைத்தல் உந்துதலினால் அமெரிக்கா, ஆசியாவிற்கு எதிரான சர்வதேச போட்டியை நிலைநாட்டுவதற்கு, ஐரோப்பிய முதலாளித்துவம் ஆழ்ந்து விவாதித்து, கூட்டாக விரிவுபடுத்தியிருக்கும் கொள்கையின் ஒரு சிறிய பகுதியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. 2010க்குள் அடையப்பட வேண்டிய பொருளாதார இலக்குகள் என பட்டியலிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் (EU), மார்ச் 2000ல் அதன் லிஸ்பன் மூலோபாயம் என்று அழைக்கப்படுவதில் இந்த நோக்குநிலையை விவரித்துள்ளது. "மற்றைய பிராந்தியங்களை போலவே, இன்று ஐரோப்பிய ஒன்றியமும் பூகோளமயமாக்கல் மற்றும் புதிய பொருளாதார அறிவால் உந்தப்பட்ட ஒரு மாதிரிமாற்றத்தை எதிர்கொள்ளுகிறது. வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டையும் இது தாக்குதலுக்குட்படுத்தும்; மற்றும் இதற்காக ஐரோப்பிய பொருளாதாரம், மற்றும் சமுதாயத்தில் தீவிரத்தன்மை வாய்ந்த மாற்றம் தேவைப்படும்" என்றும் ஆவணம் அறிவித்துள்ளது. வறுமையை குறைக்கவும், சுற்றுச்சூழலை முன்னேற்றுவிக்கவும் பல தெளிவற்ற உறுதிமொழிகளை லிஸ்பன் மூலோபாயம் உள்ளடக்கியிருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தல், தனியார்மயமாக்கல் மற்றும் குறைவான பெருநிறுவன வரிகள் மூலம் ஐரோப்பிய வணிகத்தின் இலாப மட்டங்களை அதிகரித்தல் என்றுதான் உள்ளது. "ஸ்திரப்பாடு" என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகளை குறைக்க வேண்டும் என்றும் இருக்கும் ஓய்வூதிய மற்றும் நலன்புரி வேலைதிட்டங்களை பெரிதும் வெட்டவேண்டும் என்றும் உறுதி பூண்டுள்ளது. 2010அளவில் இருக்கும் தொழிலாளர்களில் 70 சதவிகிதம் வேலைகொடுக்கப்பட வேண்டும்; 2000ல் இந்த சதவிகிதம் 60 ஆக இருந்தது. ஓய்வூதியம் மற்றும் நலன்புரி சலுகைகளை பெறக்கூடிய பெண்கள் மற்றும் வயதான தொழிலாளர்கள் குறிப்பாக தொழில்களில் பங்குபெறசெய்ய குறிவைக்கப்பட்டுள்ளனர். லிஸ்பன் மூலோபாயம் "சமூக பங்காண்மைகள்" பற்றி, அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக அமைப்புக்கள் பற்றி----சிறப்பாக குறிப்பிட்டுள்ளது; "இவற்றின் பங்கு, தொழில் உலகில் தீவிர மாற்றத்தை விளைவாக கொண்டுவருவதற்கு தேவை என்று மட்டுமின்றி, ஒரு செயலாற்றல் மிக்க பொருளாதாரத்திற்கு தேவையான கூறுபாடுகளை அனைத்தையும் பொதுவாக அறிந்து செயல்படுவதற்கும் இன்றியமையாததாகும்." வேறுவிதமாகக் கூறினால், ஆளும் உயரடுக்கினரின் கோரிக்கைகளான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்காக தொழிலாளர்களுடைய எதிர்ப்பை ஒடுக்குவதற்கு உதவும் ஒரு கடத்தும் பகுதியாக (Transmission belt) தொழிற்சங்கங்கள் செயல்படவேண்டும். பிரஸ்ஸல்ஸை தளமாகக்கொண்ட அமைப்பான ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (European Trade Union Confederation -ETUC), 81 தேசிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாள வர்க்க எதிர்ப்பு மூலோபாயத்தை இயற்றவும் வளர்க்கவும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. 1992ம் ஆண்டின் மாஸ்டிரிச்ட் உடன்படிக்கை ETUC யை முறையாக முதலாளிகளின் கூட்டமைப்பான UNICE ("ஐரோப்பாவில் வணிகத்தின் குரல்") உடன் "ஒரு சமூகப் பங்காண்மை" என புனிதமாக பேணி, அனைத்து முக்கிய சமூக மற்றும் பொருளாதார கொள்கை பிரச்சினைகளில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ETUC ஒரு அதிகாரத்துவ அமைப்பாக இருந்து தேசிய தொழிற்சங்கங்களுடன் ஒரு ஆலோசனை உறவை மட்டுமே கொண்டிருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அதன் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது லிஸ்பன் மூலோபாயத்தை ஆதரித்து மற்றும் "சுதந்திர சந்தை" வழியிலான ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கும் ஆதரவாக பிரச்சாரத்தை நடத்தியது அது பிரான்ஸ் மற்றும் டச் வாக்காளர்களால் கடந்த ஆண்டு கருத்தெடுப்பில் புறக்கணிக்கப்பட்டது.முன்னாள் பிரிட்டிஷ் தொழிற்சங்க பேரவையின் தலைவராகவும் இருந்த ETUC இன் பொதுச் செயலாளரான ஜோன் மொங்ஸ், தொழிற்சங்கங்கள் பெருவணிகத்துடன் இணைந்து, அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக ஐரோப்பிய முதலாளித்துவத்தை பலப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். "ஐரோப்பிய இடது உட்பட பலர், ஐரோப்பாவை அமெரிக்காவிற்கு எதிர்எடையாக, குறைந்த ஆக்கிரோஷத் தன்மை, குறைந்த இரணுவத்தன்மை கொண்ட ஆனால் பொருளாதார சக்தியின் ஒரு பலமானதாக மாற்ற விரும்புவோர் உள்ளனர்" என்று கடந்த ஆண்டு அவர் கூறினார். "நானே அத்தகைய கண்ணோட்டத்தைத்தான் கொண்டுள்ளேன். அமெரிக்காவை தக்க முறையில் கையாள வேண்டும் என்று விரும்புகிறோம்; அத்துடன் சம அந்தஸ்த்தில் பழக வேண்டும் என விழைகிறோம். ஆனால் இது அமெரிக்கா என்று மட்டும் அல்ல. சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் ஒருவேளை இந்தோனேஷியா மற்றும் பிரேசில் போன்ற --புதிய வல்லரசுகளின்-- எழுச்சியை கையாள்வதற்கு சாத்தியமாக இப்பிராந்தியத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்." மொங்ஸ் மற்றும் ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் ஆளும் உயரடுக்கினருடைய கொள்கைக்கு எதிராக இடையிடையே எழுப்பும் ஆட்சேபனைகள் தந்திரோபாய தன்மையை கொண்டவை; அவற்றின் அடிப்படை உள்ளடக்கத்திற்கு மாறாக "சுதந்திர சந்தை" சீர்திருத்தங்கள் அமுல்படுத்துவதை பற்றிய வழிவகையை அக்கறையாகக் கொண்டுள்ளது. அடிக்கடி தொழிற்சங்கங்களின் வெளியீடுகளில் வரும் கருத்தானது, இந்த நடவடிக்கைகள் தக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை என்றால், தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி தொழிலாளர்களின் விரோதப்போக்கு வெடித்துவிடும் என்ற பயமாகும். "இன்று, இன்னும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், வேலை நிலைமைகள், சமூக நலன்புரிகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலாகவே ஐரோப்பாவை காண்கின்றனர்" என்று ETUC நிர்வாக குழு கடந்த மாதம் கூறியுள்ளது. "இதை ஐரோப்பிய தலைவர்கள் உணர்ந்து அதற்கு தக்கபடி நடந்துகொள்ள வேண்டும். ஐரோப்பா என்பது போட்டி மற்றும் சந்தைகள் ஆகியவற்றை பற்றி மட்டுமே கொண்டுள்ளவை மட்டுமல்லாது சமூகப் பரிமாணம் கொண்டுள்ள உள்சந்தையை பற்றியதும்தான் என்று தெளிவான அடையாளத்தை காட்ட வேண்டும்." லிஸ்பன் மூலோபாயம் "மறுபடியும் தொடக்கப்படல்" நவம்பர் 2004ல் வெளிவந்த ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று பொருளாதார இலக்குகளை அடைவதற்கான மூலோபாயங்களில் சில மட்டுமே 2010 அளவில் அடையப்படலாம் என்று முடிவாக கூறிய பின்னர், 2005 ஆரம்பத்தில் லிஸ்பன் மூலோபாயம் ''மீண்டும் தொடக்கப்பட்டது". ஐரோப்பிய ஒன்றியமானது லிஸ்பன் மூலோபாயத்தின் சமூக, சுற்றுச் சூழல் இலக்குகள் பெரும்பாலானவற்றை ஒதுக்கித் தள்ளியதன் மூலமும், பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படவேண்டும் என்று கோரியதன் மூலமும் கிலியூட்டும் மதிப்பீட்டிற்கு விடையளித்தது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த மாற்றம் லிஸ்பன் மூலோபாயம் தொடக்கத்தில் வந்தபோது இருந்ததைவிட சர்வதேச அரசியல் நிலைமையில் ஏற்பட்ட மாறுதல்களுடன் பிணைந்துள்ளது ஆகும். ஜனவரி 2001ல் புஷ் நிர்வாகம் பதவியில் அமர்த்தப்பட்டமை கூடுதலான ஆக்கிரோஷம் மற்றும் ஒருதலைப்பட்சமான அமெரிக்க வெளியுறவிற்கு தொடக்கமாயிற்று; இதன் முழுப் பரிமாணங்களும் செப்டம்பர் 11 2001ல் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் டி.சி ஆகியவற்றின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் வெளிவந்த "பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போர்" என்று அழைக்கப்பட்டதுடன் வெளிப்பட்டன. அமெரிக்க பூகோள மேலாதிக்கத்திற்காக ஒரு தீவிர உந்துதலின் இடக்கரடக்கல்தான் "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்பதாகும். இந்த தலையீட்டால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு ஏற்பட்டதுடன், ஐரோப்பாவில் குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்சில் வாஷிங்டனுடைய பெயரளவுக் கூட்டணிகளுடன் மிகவும் மோதலை நிலைப்படுத்திக்கொண்டது. ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் முதல் தடவையாக அமெரிக்கா ஐரோப்பிய பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டத்தை தடைசெய்ய செயலூக்கத்துடன் செயல்பட்டது, புதிதாக நிறுவப்பட்டுள்ள யூரோ நாணயமுறையானது அமெரிக்க டாலர், உலகச் சந்தைகளில் மேலாதிக்கம் கொண்டிருப்பதை அச்சுறுத்துமோ என்ற பயமும் இதற்கு ஓரளவு காரணமாகும். அமெரிக்காவை நேரடியாக சவாலுக்குட்படுத்த முடியாத நிலையைக் கொண்டிருந்த ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு இதற்கு பதில் கூறும் வகையில் தன்னுடைய பொருளாதாரச் ''சீர்திருத்த" நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது. இதனால் லிஸ்பன் மூலோபாயம் மறுபடி தொடக்கப்பட்டபோது, ஐரோப்பிய தொழிலாளர்களின் கூடுதலான "நெகிழ்ச்சித் தன்மை" மையக் கூறுபாடு ஆயிற்று. 2004 லிஸ்பன் மூலோபாய மீளாய்வு அப்பட்டமாக கூறியுள்ளபடி, "வாழ்நாள் முழுவதும் வேலைப் பாதுகாப்பு என்ற கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தில் இருந்து நகர்ந்து வேறு வடிவங்களில் பாதுகாப்பை முன்னெடுப்பதுதான் தற்போதைய பணி ஆகும்." இவை அனைத்திற்கும் ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொடக்கப்பட்ட லிஸ்பன் மூலோபாயம் பற்றி ETUC, வணிகக் குழுக்களான UNICE, CEEP (பொது மக்கள் பங்குபெறும் நிறுவனத்தின் ஐரோப்பிய மையம்) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆவணம் "லிஸ்பன் மூலோபாயம் 2000த்தில் இருந்தது போலவே உண்மைத்தன்மையையும் தேவையையும் கொண்டுள்ளது" என்று அறிவித்தது. தங்களுடைய ஆதரவை ''உற்பத்தித்திறன் வளர்ச்சியுடன் பொருந்தக் கூடிய உறுதியான உண்மை ஊதியங்களுடன் மற்றும் சமூகப்பங்காளர்களால் நிறுவப்படும் தன்னாட்சி ஊதியக் கொள்கைகளுக்கிடையில் நல்ல பரஸ்பரத்தையும் நிதியளவில் தாக்குப் பிடிக்கூடிய பலமான பெரும் பொருளாதார கொள்கையையும் கொண்ட திறமையான சமூகப் பாதுகாப்பு முறைகளுக்கு'' தொழிற்சங்கங்கள் உறுதிகூறின. வேறுவிதமாகக் கூறினால், அவை தொழிலாளர்களுடைய வேலை நிலைமைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களுடைய சமூகப் பாதுகாப்புக்கள் மோசமான அளவில் குறைக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டன. ETUC, ஐரோப்பிய பெரு வணிகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி பிரதிநிதிகளுடன் அடிக்கடி விவாதங்களை நடத்துகிறது. இதன் செயற்பாடுகள் பலவும் மூடிய கதவுகளுக்கு பின்னால், தான் பெயரளவிற்கு பிரதிநிதித்துவம் கொண்ட தொழிலாளர்களின் முதுகிற்கு பின்னால்தான் நடைபெறுகின்றன. உதாரணமாக கடந்த மாதம் ''லிஸ்பன் செயற்பட்டியலில் தொழிலாளர் சந்தை சீர்திருத்தமும் பெரும் பொருளாதாரக் கொள்கை" (ETUC "Labour Market Reorms and Macro-Economic Policies in the Lisbon Agenda) என்பது பற்றி ஒரு இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது. நிறைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், கல்வியாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்.இம்மாநாட்டிற்கு முக்கிய உரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நாணய விவகாரங்களுக்கான யிஷீணீஹீuணஸீ கிறீனீuஸீவீணீ வால் அளிக்கப்பட்டது. Almunia மற்றும் ETUC வின் செய்தித் தொடர்பாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் ஆணையாளர் உரையோ அல்லது அதைத் தொடர்ந்த குழுவிவாதங்களின் குறிப்புக்கள் அல்லது ஒலிப்பதிவோ இல்லை என்று தெரிவித்தனர்; குழு விவாதங்கள் ஜேர்மனிய நிதிய அமைச்சரகத்தின் Willi Koll தலைமையில் நிகழ்ந்தன. இக்கூட்டம் வணிகத் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தொழிற்சங்க செய்தித் தொடர்பாளர்கள் கொள்கைகளை விவாதித்துக் கொண்டிருந்தபோதே பிரான்சில் வெகுஜன கண்டனங்களும் வேலைநிறுத்தங்களும் மிக உச்ச கட்டத்தில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்பன் மூலோபாயமும் பிரான்சும் 2005 முற்பகுதியில், "தேசிய சீர்திருத்த வேலைதிட்டங்கள்'' (National Reform Programmes-NRP) இயற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய உறுப்பு நாடுகளைக் கோரியது; அதில் நாட்டின்-குறிப்பிட்ட சீர்த்திருத்த இலக்குகள் மற்றும் லிஸ்பன் மூலோபாயத்தை ஒவ்வொரு நாடும் எவ்வாறு நிறைவேற்றுவது என்ற வருடாந்த மதிப்பீடும் அடங்கும். பிரான்சின் NRP யில் மத்தியக் கூறுபாடுகளில் ஒன்றாக தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் இருந்தது. ஜனாதிபதி சிராக் மற்றும் பிரதம மந்திரி வில்ப்பனுடைய அரசாங்கம் CPE ஐ முன்வைத்து அது லிஸ்பன் மூலோபாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளது என்றும் கூறியது. ஐரோப்பிய குழுவின் பிரான்சிற்கான 2005ம் ஆண்டு அறிக்கை, "வேலைக்குத் திரும்புவதற்கு கூடுதலான நிதிய ஊக்க உதவிகள், உதவி கொடுக்கப்படும் ஒப்பந்தங்கள் வளர்ச்சியடைதல், நலன்புரி ஊதியங்கள் சம்பந்தமான தீவிர தொழிலாளர் சந்தை கொள்கை அமைக்கப்படுதல், வேலை தேடுபவர்களுக்கு கூடுதலான ஆதரவு, அவர்களுடைய சொந்தப் பொறுப்பின் மீதாக கூடுதல் வலியுறுத்தல்" ஆகியவை இருக்க வேண்டும் எனக் கூறியது. CNE ("புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கான ஒப்பந்தம்'') அறிமுகப்படுத்தவேண்டும் என்று அறிக்கை குறிப்பாகக் கூறியிருந்தது; இதுதான் CPE க்கு நேரடியான முன்னோடியாகும். CNE பெயரின்படி, 20 தொழிலாளர்களுக்கும் குறைவாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் எக்காரணமும் இன்றி, தாம் விரும்பும்போது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யலாம் எனக் கூறியது. (ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை CNE பற்றி இடக்கரடக்கலாக விளக்கம் ஒன்றைக் கொடுத்து "20 தொழிலாளர்கள் வரை நியமிக்கும் வணிகங்களை ஊக்குவிக்கும் எண்ணங்கொண்டவை" என விவரித்தது.பிரான்சின் NRP யில் வேறு சில கூறுபாடுகள், வரவுசெலவு பற்றாக்குறை மற்றும் பொதுக் கடன் குறைப்பு, சமூக பாதுகாப்பு, ஓய்வூதிய சீர்திருத்தங்கள் அமுல்படுத்துதல், வணிக வரிக் குறைப்பு மற்றும் பல தொழில்துறைகள், பொது துறைகளில் சந்தைப் போட்டியை அதிகரித்தல் ஆகியவை அடங்கியிருந்தன. ETUC இன் நீண்டகால புகார், கோலிச அரசாங்கம் பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவில்லை என்பதாகும். பிரான்சின் ஐந்து முன்னணி தொழிற்சங்கங்கள் ETUC உடன் இணைந்தவை ஆகும்; இதல் CGT (தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) மற்றும் FO (தொழிலாளர்கள் சக்தி) ஆகியவை அடங்கும்.பல ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்காண்டிநேவியாவில், லிஸ்பன் மூலோபாயம் தொடர்பான கொள்கையானது, தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான ஆலோசனைகள் கொண்ட பின்னரே அபிவிருத்தி செய்யப்படுகின்றது. ஆனால், ETUC இன் சமீபத்திய ஆய்வு ஒன்று, பிரான்சில் "தேசிய வேலைவாய்ப்பு கொள்கைகள் தொடர்பானதில் சமூகப் பங்காளர்கள் பாரம்பரிய ரீதியாக கலந்து ஆலோசிக்கப்படுவதில்லை...... நிலவுகின்ற தேசிய வேலைவாய்ப்பு மூலோபாயத்திற்கு தாங்கள் பொருத்தமானவர்களாக இருந்தால் மட்டுமே [அரசாங்கத்திடம் இருந்து] தாங்கள் பதிலைப்பெற முடியும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கினர்" என்று குறிப்பிடுகிறது. "சமூகப் பங்காண்மைகளுடன்" பெயரளவிற்குக் கலந்து ஆலோசிப்பதைக்கூட அவர் செய்யாது CPE ஐ அவசரமாக இயற்றிய முயற்சியின் மூலம் பிரதம மந்திரி வில்ப்பன் தொழிற்சங்கங்களை ஆத்திரமூட்டினார். பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை சட்டத்திற்கு எதிராக ஏற்பாடு செய்த பின்னர், தொடர்ச்சியாக செயல்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுத்தன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் CPE எதிர்ப்பு இயக்கம் பிரான்சின் ஆளும் உயரடுக்கினரின் பரந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாக வளர்ச்சி அடைந்துவிடாமலும், கோலிச அரசாங்கத்தை பதவியில் இருந்து இறக்கிவிடும் முயற்சியாக மாறிவிடாமலும் பார்த்துக் கொண்டன. 1936ம் ஆண்டுப் பொதுவேலை நிறுத்தத்தின்போது, பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் நிலை பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி ஆய்வுசெய்திருந்த மதிப்பீடு 70 வருடங்களுக்கு பின்னர் CPE எதிர்ப்பு இயக்கத்தில் அவை கொண்டிருந்த அணுகுமுறைக்கும் முற்றிலும் பொருந்தும். "முடிந்துவிட்ட உண்மையை எதிர்கொள்ளும்போதுதான், உத்தியோகபூர்வ தலைவர்கள் வேலைநிறுத்தத்தை "உணர்கின்றனர்"; அதுவும் உடனடியாக அதன் குரல் வளையை முறிப்பதற்காக." * CPE க்கு எதிராக பாரிசில் ஏப்ரல் 4ம் தேதி நடந்த கூட்டு இறுதி ஆர்ப்பாட்டத்தில், ETUC பொதுச் செயலாளரான John Monks 700,000வலுவான கூட்டத்துடன் CGT தலைவரான Bernard Thibault மற்றும் CFDT தலைவரான Francois Chereque ஆகியோருடன் கைகளோடு கை கோர்த்து அணிவகுத்துச் சென்றார்.பாரிசின் கணடனங்களில் மொங்க்ஸ் கலந்து கொண்டமை, ஐரோப்பிய தொழிற்சங்க அதிகாரத்துவம் பிரான்சின் வெகுஜன இயக்கத்தை எப்படிக் காண்கிறது என்பதை நிரூபணம் செய்தது. ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்கங்கள் தங்களுடன் இணைந்துள்ள பிரெஞ்சு தொழிற்சங்கங்களுடன் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று விரும்பின. அரசாங்கத்தின் வலதுசாரி வேலைதிட்டத்தை எதிர்க்க அவர்கள் உறுதிபூண்டிருந்த சாதாரண தொழிலாளர்கள், மாணவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த உணர்வுகளுக்கு எதிராக, மேலும் தொழிலாளர்களுடைய நிலைமைகளை தாக்குவதை அறிமுகப்படுத்துவற்கு முன் தங்களை முறையாக கலந்தாலோசிக்க அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என்பதாகத்தான் தொழிற்சங்கங்களின் கோரிக்கை இருந்தது. அரசாங்கம் CPE க்கு பதிலீடாக பெயரளவிற்கு வேலை மானிய திட்டத்தை அறிவித்து ஒரே நாள் கடந்தபோது, நெருக்கடியிலிருந்து ''படிப்பினையை பெற்றுக்கொள்வதற்கான'' பேச்சுவார்த்தைக்கு முன்னணி முதலாளிகள் அமைப்பான Medef இனால் உருவாக்கப்பட்ட ஒரு முன்மொழிவிற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன. * Leon Trotsky, "The New Revolutionary Upsurge and the Tasks of the Fourth International," in Leon Trotsky on France (New York, Monad Press, 1979), p. 174. * Leon Trotsky, "The New Revolutionary Upsurge and the Tasks of the Fourth International," in Leon Trotsky on France (New York, Monad Press, 1979), p. 174. |