World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்How the French government treats older workers from the colonies காலனிகளிலிருந்து வந்த மூத்த தொழிலாளர்களை பிரான்ஸ் அரசாங்கம் எப்படி நடத்துகிறது By Françoise Thull 1960-களிலும் 1970-களிலும் பிரான்ஸ் தொழில்துறையின் தேவைக்காக கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு காலனிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூக விவகாரங்களுக்கான பொது சோதனையினால் (IGAS) 2002-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மேக்ரப்லிருந்து (அல்ஜீரியா, துனீஷியா மற்றும் மொராக்கோ) வந்த 65 வயதுகளை கடந்த ஏறத்தாழ 90,000 தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆண்கள் (அரபு பேச்சு வழக்கில் ''வெள்ளை முடிக்காரர்கள்'' என்று கூறப்படுபவர்கள்) பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மலிவான திறமைகுன்றிய தொழிலாளர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள், நாடு முழுவதிலும் குறைந்த ஊதிய வேலைகளில் பணிபுரிகின்றனர், கட்டுமானத்தளங்களிலும் எஃகு ஆலைகளிலும், அட்லாண்டிக் கடற்கரை கப்பல் செப்பனிடப்படும் தளங்களிலும் மற்றும் லோரைனிலுள்ள நிலக்கரி சுரங்கங்களிலும் மிகவும் கடுமையான பணிகளை செய்கின்றனர். அவர்கள் கடுமையாக கோரப்படும் வேலை நிலைமைகளுக்கிடையே அவசரமாக கட்டப்பட்ட மிகவும் புராதான காலத்து வீட்டு நிலைமைகளில் நீடித்திருப்பதையும் பொறுத்துக்கொள்ள வேண்டி இருந்தது, அங்கு ஒரே அறையில் ஐந்து அல்லது ஆறு பேர் வசித்தனர் அல்லது, நலிவுற்ற ஓட்டல் அறைகளில் வாழ்ந்தனர். தங்களது நாடுகளில் உள்ள குடும்பங்களை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரான்சிற்கு வந்து வசதிக்குறைவாக வாழ்ந்து வந்த அவர்கள், ஓய்வு பெற்றதும் தங்களது குடும்பங்களில் மீண்டும் சேர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக நின்றனர். ஆனால் இந்த ''வெள்ளை முடிக்காரர்கள்'' நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டது. அவர்களது நம்பிக்கைக்கு மாறாக இப்போது அவர்கள் வறுமையிலும், நோயிலும் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் தள்ளப்பட்டனர். அவர்கள் ஓய்வூதியத்திற்கான மனுவைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்ததும், இந்த பெரும்பாலான தொழிலாளர்கள் பணியாற்றிய காலம் திறமைகுன்றிய ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு தாவிக் கொண்டிருப்பதாகவே அமைந்திருந்தது. இப்போது அவர்கள் கண்டுபிடித்திருப்பது என்னவென்றால் தங்களது முந்தைய முதலாளிகள் சிலர், தங்களது ஓய்வூதிய நிதிய தொடர்பான சட்டப்பூர்வ தேவை சந்தாக்களை செலுத்த தவறிவிட்டது என்பதுதான். இப்படிப்பட்ட மக்களுக்கு, முதலாவது அலை போன்ற, புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இருந்து இதுவரை வந்துள்ள தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படுகின்ற விளைவுகள் மிக பயங்கரமானவை. மிகப்பெரும்பாலானவர்கள், இத்தனை ஆண்டுகள் பணியாற்றிவிட்ட பின்னரும் பெறுகின்ற ஓய்வூதியம் 450 யுரோக்களுக்கும், (568 டாலர்களுக்கும்) குறைவான தொகையாகும். வாழ்நாள் முழுவதும் கடுமையாக பணியாற்றிவிட்டு, இந்தத் தொழிலாளர்கள் மிகப்பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மாதம் 589 யுரோக்கள் (744 டாலர்கள்) என்ற குறைந்தபட்ச முதுமைக்கால ஓய்வூதியத்தை பெறுவதை தவிர வேறு தேர்வில்லை. (உடல் ஊனமுற்றவர்கள் 60 வயதிற்கு மேலாகவும்) மற்றவர்கள் 65 வயதை அடைந்ததும் இந்தத் தொகை கிடைக்கிறது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் சமூக பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தின் ஓர் அங்கமாக முடிவு செய்யப்படுகிறது. செனட் சபையிலுள்ள சமூக விவகார கமிஷனிற்கான பேச்சாளரான, அலன் வாஷல் 2005 நவம்பர் 9-ல் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், "இந்தத் தொகை இன்னும் சமூக நிதிகளில் ஒரு அதிக செலவு பிடிப்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார். 2006-க்கான சமூக பாதுகாப்பு வரவு செலவு திட்ட நகலில் ஒரு புதிய நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டது: பிரிவு 46 இந்த ''திட்டத்தை'' குறிப்பாக நீக்குவதாக அமைந்திருக்கிறது. பிரிவு 46 குறைந்தபட்ச முதியோர் ஓங்வூதிய ஊதியம் பற்றி அக்கறை கொள்கிறது மற்றும் முக்கியமாக இது "வெள்ளை முடியர்களை'' பாதிக்கிறது. குறைந்தபட்ச முதுமைக்கால ஊதியம் இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது: முதல் பகுதி ஒரு துணை ஓய்வூதிய பகுதியான மாதம் 290 யுரோக்கள் (289 டாலர்கள்) மற்றும் இரண்டாவது பகுதி மாதத்திற்கு 299 யுரோக்கள் (298 டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துணை ஓய்வூதியம் ஒரு தொழிலாளி பிரான்சிற்கு வெளியில் வாழ்ந்தாலும் இந்த 290 யுரோக்களை பெற முடியும். சமூக ஓய்வூதிய குறைந்தபட்ச அளவுகளை எளிமையாக்குகிறோம் என்ற சாக்குப் போக்கில், நிதி மசோதாவில் சேர்க்கப்பட்ட 46-வது பிரிவு (வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடிய) குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை நீக்கிவிடுவதாக அமைந்திருக்கிறது. அவற்றில்தான் ''வெள்ளை முடியர்கள்'' நம்பியிருக்கின்றனர். இதனால் அரசாங்கத்திற்கு ஓராண்டிற்கு கிடைக்கின்ற தொகை 10 மில்லியன் யுரோக்கள் (11,260,000 டாலர்கள்) ஆனால் தாங்கள் பிறந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்கின்ற 8,000 ஓய்வூதியர்களை ஒவ்வொரு ஆண்டும் இந்த மாற்றம் பாதிக்கிறது. வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு அமைச்சர் Philippe Bas முன்னெடுத்து வைத்திருக்கும் வாதங்கள் ஆளும் வர்க்கத்தின் அகந்தைப் போக்கையும் இரட்டை வேடத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது: "குறைந்தபட்ச முதியோருக்கான ஊதியம் பிரான்சிற்கு வெளியில் இருப்பவர்கள் பெற முடியாது, அப்படிப்பட்டவர்கள் RMI (வாழ்வதற்கான பயன்கள்) அல்லது உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைகள் ஆகியவற்றைத்தான் பெற முடியும், ஏனென்றால் அவை பிரான்சில் வாழ்க்கை செலவினத்தோடு சேர்த்து கணக்கிடப்படுகிறது, பிற இடங்களில் வாழ்க்கைச் செலவினம் பிரான்சைவிட 10 மடங்கு குறைவாக உள்ளது! இந்த சூழ்நிலையில் குறைந்தபட்ச முதியோர் ஊதியம் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் பிரான்சிலிருந்து பெறுவது ஒரு முரண்பாடு ஆகும். நாங்கள் இதை உணர்ந்து கொண்டவுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முடிவு செய்தோம்! இதுதவிர அது ஏற்றத்தாழ்வை உருவாக்குவது, ஏனெனில், பிரான்சில் மிகக் குறுகிய காலம் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எடுத்துக்காட்டாக, 1970-களில் சில மாதங்களே பணியாற்றும் நபர் மிக அதிகமான தொகையைப் பெறுகிறார்!" இந்தப் பிரிவு தனிப்பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டு 2006 ஜனவரி 1 முதல் செயல்படத் தொடங்கியது. அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் தாங்கள் பிறந்த நாட்டிற்கும், பிரா |