World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

As support for Bush plummets, no alternative from Democrats

புஷ்ஷிற்கான ஆதரவு வீழ்ச்சியடைகையில், ஜனநாயகக் கட்சியிடமிருந்து மாற்றீடு இல்லை

By Bill Van Auken, Socialist Equality Party candidate for US Senate from New York
28 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

அண்மை வாரங்களில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் புஷ் நிர்வாகத்திற்கு பொதுமக்களது எதிர்ப்பு பாரியவிற்கு உயர்ந்திருப்பதை காட்டுகிறது. வாட்டர்கேட் மோசடி தொடர்பாக பதவி விலகிய நேரத்தில் ரிச்சர்ட் நிக்சனுக்கு ஒத்த நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் ஏற்றுக் கொள்ளும் சதவீதம் மூன்றில் ஒன்று என்ற அளவிற்கு குறைந்துவிட்டது.

Wall Street Journal மற்றும் NBC News உம் நடத்திய ஒரு கருத்துகணிப்பின் கடைசி முடிவுகள் வியாழனன்று வெளியிடப்பட்டன. இதில் பதிலளித்த 36 சதவீதம் பேர் மட்டுமே புஷ்சையும் அவரது கொள்கைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர் (இது ஓராண்டிற்கு முன்னர் 48 சதவீதமாக இருந்தது). அதே கருத்துக்கணிப்பு 67 சதவீதம் பேர், அமெரிக்கா "தவறான வழியில் சென்று கொண்டிருப்பதாக'' நம்புகின்றனர் என்று கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இதே கருத்துக்கணிப்பில் காங்கிரசின் படுமோசமான விளைவை சந்தித்தது. 22 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக்கொண்டனர், மற்றும் ஆய்விற்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊழல்மிக்கவர்கள் என்று விவரித்தனர்.

இந்த முடிவுகளுக்கு பின்னர், Fox News/Opinion Dynamics கருத்துக்கணிப்பு புஷ்ஷை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விகிதம் 33 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டதையும் காங்கிரசை ஏற்பவர்கள் விகிதம் 25 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது.

தனது சொந்த கருத்துக்கணிப்பில் CNN, புஷ்சை ஏற்பவர்கள் விகிதம் 32 சதவீதம் என்று குறிப்பிட்டது.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரியை 2004 ஜனாதிபதி தேர்தலில் புஷ் தோற்கடித்த மாநிலங்களில், 43 சதவீதம்பேர் மட்டுமே புஷ்சை ஏற்றுக் கொள்கின்றனர், என்று வாஷிங்டன் போஸ்ட் -ABC நியூஸ் கருத்துக் கணிப்பில் காட்டியது மற்றும் 57 சதவீதம் பேர் அவரது செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏறத்தாழ 300 மில்லியன் அமெரிக்கர்களில் 6 மில்லியனுக்கு குறைந்த மக்களைக் கொ0ண்ட-- இடாஹோ, நெப்ரஸ்கா, உட்டா மற்றும் வயோமிங் ஆகிய----4 மாநிலங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் விகிதத்தின் உயர்ந்தளவான 50 சதவீதத்தை புஷ் நிலைநாட்டியுள்ளார்.புஷ் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பொதுமக்களது கருத்து பாரியளவிற்கு திரும்பிக்கொண்டிருப்பதற்கான காரணங்கள் தெளிவானது. ஈராக்கிற்கு எதிராக சட்டவிரோதமான போரை அமெரிக்கா தொடக்கி தற்போது 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் போர் 2,400 அமெரிக்க துருப்புக்களையும் நூறாயிரக்கணக்கான ஈராக் பொதுமக்களின் உயிரையும் பறித்திருக்கிறது. அதே கருத்துக்கணிப்புக்கள் தெளிவாக காட்டும் வகையில் பெரும்பாலானவர்கள், அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்திருக்கக் கூடாது என்றும் அந்த நாட்டிலிருந்து தனது துருப்புக்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்க உழைக்கும் மக்கள் தங்களது நாட்டில் தங்களது வாழ்க்கைத் தரங்களின் மீதான ஒரு முன்னணித் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். Wall Street Journal-NBC News கருத்துக்கணிப்பில், 77 சதவீதம் பேர் அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றி "அதிருப்தியான நிலையில் இருப்பதாக" கூறியுள்ளனர்.

உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து கொண்டுள்ள உண்மையான வருவாயை வெட்டிக்குறைத்து வருவதாக சீற்றம் தீவிரமாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. Washington Post-ABC News நடத்திய கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் "அண்மையில் எரிபொருளின் விலை உயர்வு" தங்களது குடும்பங்களுக்கு, "நிதி நெருக்கடியை" ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளனர்.

Washington Post-ABC News கருத்துக்கணிப்பு எண்ணிக்கை ஆழமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடிக்கு புஷ்ஷின் வெள்ளைமாளிகை கையாளும் விதத்தை 74 சதவீதம் பேர் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது.

இதில் மிகவும் அம்பலத்திற்கு வந்திருப்பது CNN கருத்துகணிப்பின் குற்றச்சாட்டின் அளவாகும், 49 சதவீதமான அதிகளவினர் எரிவாயு விலை உயர்விற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மீதும், புஷ் நிர்வாகத்தின் மீது 38 சதவீதம் பேரும் பழி போட்டிருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான 31 சதவீதம் பேர் மட்டுமே, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நெருக்கடிக்கு ஒரு ''அதிகளவு காரணமாக'' இருக்கின்ற மோட்டார் வாகன நிறுவனங்கள் மீது பழியைபோட்டிருக்கும், 27 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.

ஒரு கலன் எரிபொருளின் விலை 3 டாலரை எட்டியிருப்பதில் ஏற்பட்டுள்ள நியாயமான வெறுப்பை அடிப்படையாக கொண்டவை இந்த புள்ளி விவரங்கள். Exxon-Mobil இன் Lee Raymond போன்ற எண்ணெய் பெருநிறுவன உயர் நிர்வாக அதிகாரிகள் நூறு மில்லியன் கணக்கான ஊதியங்களை பெறுகின்ற சூழ்நிலைகளில் தொழிலாள வர்க்க வாழ்க்கைத்தரங்களின் மீது இந்த விலைகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு நடந்திருக்கிறது. நாளாந்த வாழ்க்கையிலும் மற்றும் அமெரிக்க அரசியலின் ஒவ்வொரு அம்சங்களிலும் அதிகரித்தளவில் ஊடுருவிப்பரவி வரும் பொதுவான சமூக துருவப்படுத்தல் மீதும் மற்றும் பெருகிவரும் சமத்துவமின்மை மீதும் வளர்ந்து வரும் ஆத்திரத்தையும் இந்த கருத்துக்கணிப்பு எண்ணிக்கைகள் பிரதிபலிக்கிறது.

நடைபெறவிருக்கின்ற 2006 இடைக்கால நாடாளுமன்ற தேர்தல்களில் குடியரசு கட்சியைவிட ஜனநாயக கட்சிக்கு பொது மக்களது ஆதரவு இரட்டை இலக்க அளவிற்கு உள்ளதை மிகப்பெரும்பாலான கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. Pew கருத்துக்கணிப்பு குடியரசு கட்சியின் 41 சதவீதத்தோடு ஒப்பிடும் பொழுது ஜனநாயகக் கட்சிக்கு 51 சதவீத ஆதரவு இருப்பதாக காட்டியுள்ளது. Post-ABC News ஆய்வு இந்த ஆதரவு வீச்சு 55 சதவீதத்திற்கும் 40 சதவீதத்திற்கும் இடையில் உள்ளதாக கூறுகிறது. அதே நேரத்தில், இந்த மாதம் நடத்தப்பட்ட AP-Ipsos கருத்துக்கணிப்பு, 33 சதவீதம் பேர் குடியரசுக் கட்சிக்காரர்களை ஆதரித்ததை ஒப்பிடும் பொழுது 49 சதவீதம் பேர் காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையை ஆதரித்தனர்.

இரண்டு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்பு

எவ்வாறிருந்தபோதிலும், மிக அண்மையில் நடத்தப்பட்ட Wall Street Journal-NBC கருத்துக் கணிப்பில் ஒரு வியப்பளிக்கும் முரண்பாடு உள்ளது. அது, புஷ்ஷை ஏற்றுக்கொள்பவர்களது விகிதம் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து வருகின்றபோதிலும், யார் காங்கிரஸை கட்டுப்படுத்துவது என்பதில் குடியரசுக் கட்சியைவிட கூடுதலாக இருந்த ஜனநாயக கட்சியின் ஏற்பு விகிதம் சென்ற மாதம் 13புள்ளிகளில் இருந்து 6 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துவிட்டன.

கணிப்பெடுப்பு 33 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக உள்ளதை காட்டுகின்றது, இது 35 விகிதம் குடியரசுகட்சியினருக்கு சாதகமாக உள்ள புள்ளிவிபரரீதியாக ஒப்பிட்டுபார்க்கமுடியாது உள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்புக்களில் வெளிப்படும் இரண்டு போக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. அமெரிக்காவில் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையான ஜனாதிபதி, காங்கிரஸ், நாடாளுமன்றம் மற்றும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளிலிருந்து உழைக்கும் மக்களின் பரந்தபிரிவினரின் அந்நியப்படலும், அதிகரித்துவரும் பரந்த கோபமும், அமைதியின்மையும் வளர்ந்து வருவதை காட்டுகின்றது.
புஷ்ஷையும் குடியரசுக் கட்சிக்காரர்களையும் தண்டிக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தோடு நவம்பரில் நடக்கவிருக்கும் வாக்குப்பதிவில் மில்லியன் கணக்கான வாக்காளர்கள் கலந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இந்தத் தேர்தலின் விளைவாக காங்கிரஸின் இரண்டு சபைகளிலும், அல்லது ஏதாவது ஒரு சபையில் தனது கட்டுப்பாட்டை இழக்க வேண்டிவரும் என்ற அச்சம் குடியரசுக்கட்சி தலைமைக்குள் தெளிவான அச்சம் நிலவுகிறது. புஷ் நிர்வாகத்தின் கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாக பாதிப்பை ஏற்படுத்தும் புலன்விசாரணைகளுக்கு வழி திறந்துவிடப்படும் என்ற அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது நிச்சயமல்ல. கடந்த காலத்தில் இடைக்கால தேர்தல்கள் நடைபெற்றதைப் போன்று தகுதி வாய்ந்த வாக்காளர்களில் பெரும்பாலோர் ஒட்டுமொத்த அரசியல் நிர்வாகம் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு தங்களது விரோதப்போக்கை வெளிப்படுத்துவதற்காக வாக்குப்பதிவிலேயே கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கலாம்.

எதிர்க்கட்சி என்று வெளிவேடம் காட்டிக்கொண்டுள்ள ஜனநாயகக் கட்சி எந்த அரசியல் மாற்றீட்டையும் வழங்கவில்லை மற்றும் போரின் இருகட்சி கொள்கைகள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மற்றும் சமூக பிற்போக்குதனத்திற்கு அமெரிக்காவின் மில்லியன்கணக்கான உண்மையான பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குயிடுவதற்கு நியாயமான வழி எதுவுமில்லை.

நியூ ஓர்லியன்சில் அண்மையில் முடிவடைந்த கூட்டத்தில் ஜனநாயகக் கட்சி தேசியக்குழு தாம் நடத்தவிருக்கின்ற பிரச்சாரத்தில் ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை வாபஸ் பெறுவதற்கான அழைப்பு விடுப்பதற்கோ அல்லது புஷ் நிர்வாகத்தை எதிர்ப்பதற்கான திட்டவட்டமான கொள்கையை முன்னெடுத்து வைக்கவோ தவறிவிட்டது. கட்சித் தலைவர்கள் போர் பற்றிய ஒரு விவாதத்தைக்கூட தடுத்துவிட்டனர், அதன்மூலம் தேர்தல் முடியும் வரை அது காத்திருக்கும் என்று கோடிட்டு காட்டிவிட்டனர்.

சென்ற இடைக்கால தேர்தலின் போது 2002ல் ஜனநாயகக் கட்சி தலைமை மேற்கொண்ட இழிவான முடிவையே இது எதிரொலிக்கிறது. அந்த முடிவு அப்போது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த செனட் சபை, குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த அமெரிக்க கீழ்சபையோடு இணைந்து புஷ் ஈராக்கிற்கு எதிராக ஆத்திரமூட்டல் எதுவும் இல்லாமல் போர் தொடுப்பதற்கு முழு அதிகாரம் தந்து இசைவளிப்பதாக அமைந்திருந்தது. கட்சியின் முதன்மை கொடி பிடித்துச் செல்பவர்களான செனட்டர்கள் ஹில்லரி கிளிண்டன், ஜோன் கெர்ரி, ஹரி ரீடு, ஜோன் எட்வர்ட்ஸ் ஆகிய அனைவரும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு புஷ், சென்னி, ரம்ஸ்பெல்ட் மற்றும் நிர்வாகத்திலுள்ள மற்றவர்களோடு சேர்ந்து சர்வதேச சட்டத்தின் கீழ் அது ஒரு போர்க் குற்றமான ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதில் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றனர்.

2002 நவம்பரில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நெருங்கி வந்து கொண்டிருந்த போரை புறக்கணித்துவிட்டு, உள்நாட்டு பிரச்சினைகளை மட்டும் முன்வைத்து தேர்தலில் போட்டியிட முடியும் என்ற கட்சியின் கோழைத்தனமான முன்னோக்கிற்கு அது ஒரு படுதோல்வியாக நிரூபணமாகிவிட்டது. இதன் விளைவாக செனட்டை இழந்ததுடன் கீழ்சபையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2004ல் போருக்கு வாக்களித்த கெர்ரி மற்றும் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக நியமிக்க முடிவு செய்தது. அடிக்கடி கட்சி போரிற்கான வெகுஜன எதிர்ப்பிலிருந்து புஷ் நிரிவாகத்தை பாதுகாக்க இயங்கியது மட்டுமல்லாமல் அந்தத் தேர்தலை ஈராக்கிற்கு எதிரான குற்றவியல் ஆக்கிரமிப்பின் மீது ஒரு சர்வஜனவாக்கெடுப்பாக மாற்றப்படுவதையும் தடுத்தனர்.

அதே போன்று அண்மையில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி தேசியக்குழு கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பிரச்சினை தொடர்பாக எந்த நிலைபாட்டையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்தப் பிரச்சினை, அண்மை வாரங்களில் மில்லியன்கணக்கான உழைக்கும் மக்களை தெருக்களில் அணிவகுத்து வரச்செய்தது.

மாறாக, கட்சி தெளிவற்ற முழக்கங்கள் அடங்கிய பல்வேறு திட்டங்களை அறிவித்தது, அவை "ஜனநாயகக் கட்சி தொலைநோக்கு" திட்டம் என்று மகுடம் சூட்டப்பட்டது, அதில் "நேர்மையான வெளிப்படையான அரசாங்கத்தின்" சிறப்புக்கள், ''பாதுகாப்பு'' மற்றும் "பொருளாதார செல்வச்செழிப்பு" ஏற்றிப்போற்றப்பட்டது.

இந்த அரங்கின் விளைபயன்கள் தெளிவானவை. ஈராக்கில் புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர்க் கொள்கை நீடிப்பதையோ அல்லது உள்நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதும், உழைக்கும் மக்களது வாழ்க்கை தரத்தின் மீதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதலையோ ஜனநாயகக் கட்சி கடுமையாக எதிர்க்காது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்திருக்கிறது.

புஷ் நிர்வாகத்தின் மீதான மில்லியன் கணக்கான மக்களது அதிகரித்துவரும் ஆத்திரத்திற்கும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கிடையில் அனைத்து அத்தியாவசிய கொள்கைகளிலும் இருகட்சி உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதற்கும் இடையில் நிலவுகின்ற மகத்தான இடைவெளி அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற இதுவரைகண்டிராத சமூக துருவப்படுத்தலின் ஒரு பிரதிபலிப்பாகும். உயர் மட்டத்தில் உள்ள அதியுயர் பணக்காரர்களாகிய சிறிய தட்டினர் இரண்டு கட்சிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதே நேரத்தில், அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்கள் அரசியல்ரீதியாக வாக்குரிமை இழந்தவர்களாக உள்ளனர்.

ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற பரந்த கோரிக்கை, தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன் இணைந்த உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈடுகளின் பொருத்தமற்ற மட்டம் ஆகியவற்றிற்கான எதிர்ப்புடன் மற்றும் இரண்டு கட்சிகளும் முன்னெடுத்து வைக்கும் பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகள் மீது வளர்ந்து வரும் விரோதப்போக்கு ஆகியவற்றிற்கு ஒரு அரசியல் வெளிப்பாடு ஜனநாயகக் கட்சியிலிருந்து திட்டவட்டமாக முறித்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சுயாதீனமான அரசியல் கட்சி தோன்றுவதன் மூலம்தான் இயலும்.

2006 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி தலையிடுவது வாக்குகளை மட்டுமே வென்றெடுப்பதற்காக மட்டுமல்ல (நாங்கள் முடிந்த வரை அதிகளவு வாக்குகளை பெற முயல்வோம்) ஆனால் எதிர்வரும் சமூகப் போராட்டங்களில் உழைக்கும் மக்களை வழிநடத்திச் செல்கின்ற வல்லமை கொண்டதாகவும், ஒரு சோசலிச வேலைதிட்டத்தால் ஆயுதபாணியாக்கிய அத்தகையதொரு இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடித்தளங்களை அமைப்பதற்குத்தான். ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் அனைத்துமே, உடனடியாகவும், நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக ஐயத்திற்கிடமின்றி அழைப்புவிடுவதற்கான ஒரு அரங்கில் எங்களது வேட்பாளர்கள் நிற்பார்கள். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் வறுமையை ஒழித்து சமூக சமத்துவத்தை நிறுவதற்கான தீவிர பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் நிற்பர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களும், எங்களது ஆதரவாளர்களும் எங்களது வேட்பாளர்கள் வாக்குப்பதிவில் இடம் பெறுவதற்கான பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொண்டு, எங்களது கட்சியின் வேலைதிட்டங்களை, முடிந்தவரை பரவலாக பரப்புவதற்கு உதவுமாறு நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Top of page