World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Delphi crisis: Socialism and the American autoworker

டெல்பி நெருக்கடி: சோசலிசமும் அமெரிக்க மோட்டார் வாகன தொழிலாளியும்

11 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க நாடாளுமன்ற 12 வது மாவட்டமான மிச்சிகனிலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜெரோம் ஒயிட் 2006 ஏப்ரல் 11ல் வெளியிட்ட அறிக்கை.

அமெரிக்க மோட்டார் வாகன பாகங்கள் தயாரிக்கும் டெல்பி தனது தொழிலாளர் ஒப்பந்தங்களை செல்லுபடியாகாது என்று அறிவிக்குமாறு திவால் நீதிமன்றத்திடம் (Bankruptcy court) முறையிடுவது என்ற முடிவு, மணித்தியால ஊதியங்களை 27 டாலரிலிருந்து 12.50 டாலர்களாக குறைக்க அந்த நிறுவனத்தை அனுமதிக்க வகை செய்யும் ஒரு முயற்சியாகும். இது அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பெருநிறுவன தாக்குதல்களின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.

அமெரிக்காவில் தொழில்துறை தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு காரணமான 1930களில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களுக்கு முன்னர் வழக்கத்திலிருந்த கடுமையாக உழைக்கும் நிலைமைகளை திரும்ப திணிப்பதற்கும், தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக பாரிய வேலை நீக்கங்களை முன்னெடுக்கப்படுகின்ற ஒரு பிரச்சாரத்தில் மூன்று பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களிற்கும் Wall Street இற்கும் டெல்பி நிறுவனம் முன்னின்று செயல்படுகிறது. ஒரு உயிர்வாழ்வதற்கான ஊதியம், உத்திரவாத நேரங்கள், வேலை பாதுகாப்பு, சுகாதார பயன்கள் மற்றும் ஓய்வூதியங்கள் அனைத்தையுமே சிதைத்துவிட இலக்குவைக்கப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம் ஜெனரல் மோட்டார்ஸ், டெல்பி மற்றும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் 125,000 தொழிலாளர்கள் தங்களது பணிகளை விட்டு வெளியேறுவதற்கு வேறு ஒரு நிறுவனம் டெல்பியை வாங்கவிருப்பதாக ஒரு திட்டத்தை அறிவித்தபோது இது தெளிவாக்கப்பட்டது. இது வேலைப்பாதுகாப்பு, ஒப்பீட்டளவில் உயர் ஊதியங்கள் மற்றும் பயன்களின் வழிவகைகளை அடைந்திருக்கும் பழைய தலைமுறை தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.

இந்த அறைகூவலை மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு விடுத்திருப்பதன் மூலம் --நீண்ட நெடுங்காலமாக அமெரிக்காவில் மிக உயர்ந்த அளவிற்கு ஊதியம் பெற்றுவந்த தொழிற்துறை தொழிலாளர்களை-- டெல்பி பொருளாதாரம் முழுவதிலும் ஏழ்மை-மட்ட ஊதியங்களை திணிப்பதற்கான ஒரு புதிய குறியளவை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் ஊதிய வெட்டுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை தகர்க்கும் நடவடிக்கையாக றேகன் பெற்கோ (PATCO) விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது எப்படி ஒரு கட்டத்தை உருவாக்கியதோ, அதே போன்று இருபத்தியோராம் நூற்றாண்டில் டெல்பியின் அரசாங்க ஆதரவுடனான தாக்குதல் புதிய பெருநிறுவன தாக்குதல்களுக்கான சமிக்கையாகும்.

இது உடனடியாகவும், நேரடியாகவும், இனி புறக்கணித்துவிட முடியாத அல்லது தவிர்த்துவிட முடியாத அடிப்படை அரசியல் பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தின் முன் எழுப்புகிறது.

மோட்டார் வாகன தொழிலாளர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக, சூறையாடும் முதலாளியை எதிர்கொள்ளவில்லை, ஆனால் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், ஒரு ஒட்டுமொத்த பொருளாதார முறையை, அதாவது இந்த முதலாளித்துவ இலாப முறையை எதிர்க்கொள்கிறது. அது ஆளும் செல்வந்தத்தட்டின் தேவைகளை திருப்திப்படுத்துவதற்காகவும், செயல்படுவதற்காகவும், சமூகத்தில் துன்பமும், வறுமையும் மிகவும் கொடூரமான சுரண்டல் வடிவங்களும் பரவுவதற்கான அவசியமாகியுள்ளது.

முதலாளித்துவம் ஒரு அறிவிற்கொவ்வாத மற்றும் தோல்வியுற்ற முறையாகும். தொழிலாளர்களது தேவைகளான கண்ணியமான ஊதியம் தரும், பாதுகாப்பான வேலைகள், சுகாதார சேவை ஒரு கண்ணியமான பணி ஓய்வு, கல்வி மற்றும் தங்களது குழந்தைகளுக்கான ஒரு எதிர்காலம் ஆகியவை, பெருநிறுவங்களை மூடுவதற்கு காரணமாக செயல்பட்டவர்கள் உட்பட பில்லியனர்களான முதலீட்டாளர்கள் மற்றும் விரல்விட்டு எண்ணத்தக்க பெருநிறுவன நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு வெகுமதியை வழங்குவதற்கு பலியிடப்பட்டு வருகின்றன.

உற்பத்தி மற்றும் முதலீட்டின் பூகோளமயமாக்கல் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியிருக்கிறது. வேலைகளை வெட்டுதல் மற்றும் தொழிலாளர் செலவினக் குறைப்பிற்கான போரில் அவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்ற வகையிலும் சுருங்கிக்கொண்டு வருகின்ற சந்தைகளையும் இலாபத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மிக பிரம்மாண்டமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தற்போது போரில் ஈடுபட்டிருக்கின்றன. அமெரிக்க கார் தயாரிப்பாளர்களைப்போன்று ஜேர்மனியின் கார் தயாரிப்பாளர்களான மெர்சிடஸ், வோல்ஸ்வேகன் மற்றும் ஓப்பல் ஆகியவை அண்மையில் 29,000 வேலை வெட்டுகளை அறிவித்துடன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் குறைந்த செலவின பிராந்தியங்களுக்கு உற்பத்தியை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

பூகோளமயமாக்கல் தேசிய அடிப்படையில் அமைந்த தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் முதலாளித்துவ முறையை சீர்திருத்தம் செய்வதற்கான அவர்களது முயற்சியின் திவால்தன்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு தேசியரீதியான உழைப்பு சந்தையை முதலாளிகள் நம்பியிருந்தபோது அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்து வந்த செல்வாக்கு பறிக்கப்பட்ட நிலையில், வேறு நாடுகளுக்கு வேலைத்தலங்கள் மாற்றப்படும்போது பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, இதுவரை இல்லாத அளவிற்கு ஊதியங்களையும், சலுகைகளையும் விட்டுக்கொடுத்து பணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்கங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

மெக்சிகோ, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் குறைந்த ஊதியங்களும், மற்றும் கொடூரமான பணி நிலைமைகளும், பூகோள மோட்டார் வாக தொழிற்துறைகளுக்கு, புதிய அளவுகோல் என்று டெல்பி உயர் நிர்வாக அதிகாரி ரொபர்ட் ''ஸ்டீவ்'' மில்லர் தெளிவுப்படுத்தியுள்ளார். ஒரு அமெரிக்க ஆலை தொழிலாளி ஒரே தொழிற்சாலையில் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி ஒரு ''நடுத்தர வர்க்க வாழ்கை பாணிகளை'' அனுபவிக்க முடியும் என்று எதிர்ப்பார்த்த காலம் மலை ஏறிவிட்டது என்று மில்லர் அறிவித்தார். அதற்கு பதிலாக, பூகோள சந்தையில் இடம் பெறுவதற்கு போட்டி போடுவதற்காக, அமெரிக்க மோட்டார் வாகன, எஃகு, மற்றும் விமான நிறுவனங்கள், தங்களது காலாவதியாகிவிட்ட தொழிலாளர் ஒப்பந்தங்களையும் மற்றும் பல தசாப்தங்கள் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வென்றெடுத்த உயர்ந்த ''சலுகை செலவினங்களையும்'' அதாவது, ஊதியங்கள், வாழ்நாள் முழுமைக்குமான மருத்துவ செலவினங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவை இல்லாதுசெய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

அத்தகைய உணர்வுகள் அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பெருநிறுவன நிர்வாகக் குழுவிலும் எதிரொலிக்கின்றன, நார்த் வெஸ்ட் ஏர்-லைன்ஸ், டெல்டா ஏர் லைன்ஸ் போன்ற இதர திவாலாகிவிட்ட நிறுவனங்களில் மட்டுமல்ல, ஆனால் IBM போன்ற மிக உயர்ந்த இலாபம் பெறுகின்ற நிறுவனங்களில் இருந்தும் இது எதிரொலிக்கின்றன. அமெரிக்க பொருளாதாரம் இனி உழைக்கும் மக்களது அடிப்படைத் தேவைகளை ''வழங்குவதற்கு'' இயலாது என்று வாதிடுகின்றனர்.

இது ஒரு பொய். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை கூர்மையாக உயர்த்தியுள்ளன மற்றும் வரலாற்றில் முன்னர் எந்தக்காலத்திலும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்கள் அதிக செல்வத்தை உற்பத்தி செய்கின்ற வல்லமையை பெருக்கியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு சமுதாயம் என்று பார்க்கும்போது, நல்ல ஊதியம் வழங்குகின்ற வேலைகள், சுகாதார நலன்கள், பாதுகாப்பான ஓய்வூதியங்கள் மற்றும் கண்ணியமான பொது சேவை வசதிகள் ஆகியவற்றை தருவது எளிதானதே தவிர அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல.

என்றாலும், பெருகிய செல்வத்தை அமெரிக்க சமுதாயத்தின் உயர்ந்த மட்டத்திலிருக்கும் ஒரு சிறிய குழுவினர் ஏகபோகத்தை வைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, 1979 முதல் அனைத்து அமெரிக்கர்களில் மிகப்பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு நூற்றுக்கு ஒருவர் ஓராண்டிற்கு 6 மில்லியன் டாலர் மற்றும் அதற்கு மேல் சம்பாதிதிப்பவர்களாக உள்ளனர் ----அவர்கள் வருமானம் 500 சதவீதம் அதிகரித்திருப்பதை கண்டனர். சென்ற ஆண்டு மட்டுமே, தலைமை நிர்வாக அதிகாரியின் சராசரி ஊதியம் 27 சதவீதம் உயர்ந்து 11.3 மில்லியன் அளவிற்கு - சராசரி உற்றபத்தி தொழிலாளர்களின் ஆண்டு வருமானத்தைவிட 330 மடங்கு அதிகரித்தது. தொழிலாளர்களின் வாராந்திர வருமானம் 2005ல் 2.9 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. இது பணவீக்க விகிதத்தைவிட குறைவாகும்.

டெல்பியின் முன்னாள் உயர் தலைமை அதிகாரி J.T.பட்டன்பர்க், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 21 மில்லியன் டாலர்கள் சேகரித்துள்ளார். அதே நேரத்தில் நிறுவனத்தின் ஓய்வூதிய நிதியில் 11 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த நிறுவனமே திவாலின் விளிம்பிற்கு சென்றுவிட்டது. சென்ற ஆண்டு அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது முதல் மில்லர் 3.75 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றிருந்தும் ''முக்கிய ஊழியர்களை'' (அதாவது பெருநிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை) பணியாற்ற வைத்திருப்பதற்காக, 400 மில்லியன் டாலர்கள் மிகையூதியம் வழங்குவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

போர்ட் மோட்டார் வாகன நிறுவனம் தனது வட அமெரிக்க மோட்டார் வாகனப் பிரிவில் பண இழப்பை சந்தித்த பின்னர் அண்மையில் 30,000 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதற்கு அறிவித்தது, அது 2005ல் தனது ஐந்து தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு 26 மில்லியன் டாலர்களை வழங்கியது. இதில் William Clay Ford Jr இற்கு வழங்கப்பட்ட 13 மில்லியன் டாலர்களும் அடங்கும்.

தொழிலாளர்களுக்கு மிக சொற்பமான சமூக உரிமைகள்தான் உள்ள மற்றும் தொழிலாளர்கள் மீது வேலைக்கொடுப்பவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு அதிகாரம் வேறு எந்த தொழில்மயமாக்கப்பட்ட நாட்டிலும் முதலாளிகளுக்கு வழங்கப்படவில்லை. பிரான்சில் அரசாங்கமும், வேலைக்கொடுப்பவர்களும் அமெரிக்க பாணியில் ''சுதந்திரச்சந்தை'' கொள்கைகளை இறக்குமதி செய்ய முயன்று வருகின்றனர். அவற்றில், எந்தவிதமான காரணமும் காட்டாமல் இளம் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குகின்ற ''வளைந்து கொடுக்கும்'' தன்மையும் அடங்கும். இவற்றிற்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு மாதமாக பாரியளவு கண்டனப் பேரணிகளையும் வேலை நிறுத்தங்களையும் நடத்தி வருகின்றனர். பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பெரும் பகுதியிலும் பத்து மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடம், சோசலிச கருத்துக்கள் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன, நிதியாதிக்க ஒருசிலவராட்சிகளுக்கு அல்லாமல் மக்களின் நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைக்கவேண்டும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க வேலைக்கொடுப்பவர்கள் ஆட்குறைப்பு செய்யவும், தங்களது ஓய்வூதியக் கடமைகளை குழிதோண்டிப் புதைக்கவும், வாழ்க்கை தரத்தை அழிக்கவும், மிக எளிதாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு என்ன காரணம்?

மிக ஆரம்ப காலத்திலிருந்தே, அமெரிக்காவின் உழைக்கும் மக்களிடம், சோசலிச-எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது மற்றும் முதலாளித்துவம்தான் தலைசிறந்த மற்றும் ஒரே சாத்தியமான முறை என்று தொடர்ந்து பல்லவி பாடி வருகிறது. சோசலிசம் என்றால் கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்டவை என்றும் பற்றாக்குறை என்றும் ஸ்ராலினிச ஒடுக்குமுறை என்றும் நம்மிடம் கூறி வந்தார்கள். இந்த அடிப்படையில் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதைத்தவிர வேறு தேர்வு தொழிலாளர்களுக்கு இல்லை என்றும், அது இலாப அமைப்புமுறைக்குள் தொழிலாளர்களது தேவைகளை பாதுகாக்கும் என்று கூறிவந்தனர்.

இந்தக் கொள்கை, தொழிலாள வர்க்கத்திற்கே ஒரு பேரழிவை ஏற்படுத்திவிடும் என்றாலும், இப்போது தொடுக்கப்படும் இடைவிடாத தாக்குதல்கள் மீண்டும் வெகுஜன போராட்டத்தை தூண்டிவிடும். இந்தப் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கு, சில அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

சோசலிசமும் எதிர் தொழிற்சங்கவாதமும்

1930களில் நடைபெற்ற வெகுஜன இயக்கத்தில் சோசலிச மற்றும் இடதுசாரி தொழிலாளர்கள் ஒரு முக்கிய பங்கை வகித்ததுடன், அதனால் தொழிற்துறை தொழிற்சங்கங்கள் நிறுவப்பட்டது. அதில் United Auto Workers தொழிற்சங்கமும் அடங்கும். அதில், தொடக்கத்திலிருந்தே புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்துறை அமைப்புக்களுக்கான காங்கிரசில் (CIO) இடம் பெற்றிருந்த தலைவர்கள் முதலாளித்துவ உரிமையாளர்கள முடிவுகளை எடுப்பதில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதையும், அவர்களது சொத்துடமை உரிமைகளுக்கும் அறைகூவல் விடுத்து தொழிற்துறை ஜனநாயகத்திற்கு தீவிரமான கோரிக்கைகள் எதையும் விலக்கியே வைத்து விட்டனர்.

ஜோன் L. லூயிஸ் போன்ற CIO தலைவர்கள், தொழிற்சங்கங்கள் ''வேலைவாய்ப்பு உறவை'' மற்றும் தொழிலாளர்களின் நிலைகளை கீழ்படியச்செய்யவதை ஏற்றுக்கொள்ளும் என்று பெருவர்த்தக நிறுவனங்களுக்கு மீண்டும் உறுதியளித்தனர். தொழிற்சங்கவாதம் சோசலிசத்திற்கு எதிரானது என்று லூயிஸ் 1937ல் அறிவித்தார். "அது ஊதிய முறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இலாபத்தை முதலீடு செய்வதற்கான உரிமையையும் தனியார் சொத்துடமையையும் சந்தேகத்திற்கிடமின்றி அது முழுமையாக அங்கீகரிப்பதாகும் '' என்று அறிவித்தார். பெருநிறுவன அமெரிக்கா கூட்டு பேரத்திற்கு சம்மதிக்குமானால் தொழிற்சங்கங்கள் சோசலிசம் என்கின்ற ''வெளிநாட்டு தத்துவங்களுக்கு எதிரான மிகப்பெரிய அரணாக,'' செயல்படும் என்று லூயிஸ் உறுதியளித்தார்.

1940களின் இறுதியில் UAW தலைவர் வால்ட்டர் ரூத்தரும், மற்றும் இதர தொழிற்சங்க அதிகாரிகளும் தொழிற்சங்கங்களுக்குள் இருந்த சோசலிஸ்ட்டுக்களை ஓரங்கட்டுவதற்கும், மிரட்டுவதற்கும் ஒரு கம்யூனிச எதிர்ப்பு பழிவாங்கும் நடவடிக்கையை தொடக்கினர். அதே நேரத்தில், ரூத்தர், ஜனநாயகக் கட்சியுடன் தொழிற்சங்கத்தின் உறவுகளை வலுப்படுத்தினார். UAW இற்குள் தொழிற்கட்சி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று வளர்ந்து வந்த கோரிக்கைகளை எதிர்த்தார். ஐரோப்பாவை போன்று அல்லாமல் அமெரிக்கா ஒரு ''கண்டிப்பான வர்க்கப் பிளவுகள்'' நிலவுகின்ற நாடு அல்ல, மற்றும் எனவே அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தங்களது சொந்தக்கட்சி தேவையில்லை என்று வாதாடினார்.

மோட்டார் வாகன ஏகபோகங்களோடு UAW ஒரு மோசமான பேரத்தை செய்தது: தொழிலாளர்கள் கட்டுப்பாடாக நடந்து கொள்வதற்கும் பெறுநிறுவன நிர்வாக தனியுரிமைகளுக்கு எந்தவிதமான சவால்களும் ஏற்படாமல் தடுப்பதற்கு தொழிற்சங்கம் உறுதியளித்ததற்கு பரிமாற்றமாக நிறுவனங்கள், மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வுகளையும், நீண்டகால வேலைவாய்ப்பையும் மற்றும் இதர சலுகைகளையும் வழங்க முன்வந்தன. இதன் சாராம்சம் என்னவென்றால் ரூத்தரும் மற்றவர்களும் அமெரிக்க முதலாளித்துவமும், அமெரிக்காவில் இயங்கும் மோட்டார் வாகன நிறுவனங்களும் உலகச்சந்தையில் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்தும் என்ற சந்தேகத்திற்குரிய நம்பிக்கையில் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பணையம் வைத்தன.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய செழுமைகாலம் முடிவுக்கு வந்ததுடன் மற்றும் 1970களிலும், 1980களிலும் அமெரிக்க பெருநிறுவனங்கள் உலகச்சந்தையிலும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயும், ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களிடமிருந்து அதிக அளவில் அழுத்தங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியை அமெரிக்க தொழிலதிபர்களுக்கு ''கட்டுப்படியாகும்'' நிலையோடு முடிச்சுப்போட்டுவிட்ட UAW அதிகாரத்துவம் அமெரிக்க மோட்டார் வாகன தொழிற்துறைகளில் ஏற்பட்ட நெருக்கடியை, சமாளிக்கும் வகையில் தன்னை தொழிற்துறை போலீஸ்காரர்களாக மாற்றிக்கொண்டு, 1978க்கு பின்னர், 6,00,000 வேலைகள் பாதிக்கின்ற வகையில் நிர்வாகங்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தற்காலிக வேலைநீக்கம் மற்றும் தொழிற்சாலைகள் மூடுவதற்கு உறுப்பினர்களிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பை ஒடுக்குவதிலும், தொழிலாளர் செலவினத்தை வெட்டுவதிலும் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான அனைத்தையும் செய்தனர்.

புஷ் நிர்வாகம், திவால் நீதிமன்றம் மற்றும் டெல்பிக்கு எதிராக, ஒரு கடுமையான போராட்டத்தை நடத்துவதற்கு UAW வல்லமையில்லாதது என்பதை மோட்டார் வாகன தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாக புரிந்துக்கொண்டிருக்கின்றனர். என்றாலும், பல தொழிற்சங்க அதிருப்தியாளர்கள் கூறுவது என்னவென்றால் இப்போது தேவைப்படுவதெல்லாம், ஒரு முந்திய காலக்கட்டத்து தொழிற்சங்க போராட்டங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதுதான் மற்றும் ''அரசியல் இல்லாமல்'' தொழிலாளர்கள் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியும் என்பதுதான். .

என்றாலும், UAW இன் வரலாற்றை சுருக்கமாக ஆராய்ந்தால் புலப்படுத்துவது, தொழிற்சங்க அதிகாரத்துவம் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சி மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அரசியலில் இருந்து தொழிலாளர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாகும். தொழிலாளர்கள் இந்த முட்டுச்சந்தி முன்னோக்கை புறக்கணிக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியிடமிருந்து முறித்துக்கொண்டு செல்வந்தத்தட்டினரின் பொருளாதார மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்டுவதற்கு நனவுபூர்வமான அரசியல் போராட்டம் நடத்துவதுதான் தொழிலாள வர்க்கத்தை முன்னோக்கி செல்வதற்கான ஒரு வழியைத் வழங்குவதாகும்.

இந்த அமைப்புமுறை மனிதனது அடிப்படைத் தேவைகளை வழங்க முடியவில்லை என்றால் தொழிலாளர்களை ஏழைகளாக்குவதற்கு மாறாக இந்த அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு இதுவே ஒரு வாதமாகும். தொழிலாள வர்க்கத்தினால் உருவாக்கிய பரவலான செல்வம் உட்பட சமுதாயத்தின், வளங்களை ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அறிவார்ந்த பாணியில் பயன்படுத்தப்படுமானால், சோசலிச அடித்தளத்தில் உலக மக்கள் அனைவரது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் நியாயமான சமத்துவத்தை உருவாக்குவதற்கும் தேவைப்படுகின்ற அளவிற்கு மேல் வளங்கள் உள்ளன. எனவே உழைக்கும் மக்களது உரிமைகள் ஆளும் செல்வந்தத்தட்டினரின் ''உரிமைகளை'' விட முன்னுரிமை பெற்றதாக இருக்கவேண்டும்.

முன்னோக்கி செல்வதற்கான வழி: போராட்டத்திற்கான ஒரு புதிய மூலோபாயம்

மோட்டார் வாகன தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மோட்டார் வாகன தொழிலாளர்கள் பொறுப்பல்ல. முதலாளித்தவ, "சுதந்திரத் தொழில்துறை'' முறையின் கீழ் பெருநிறுவன நிர்வாகிகளும் மற்றும் Wall Street முதலீட்டாளர்களும் முடிவுகளை எடுக்கும் நிகழ்வுப்போக்கில் ஒரு ஏகபோக உரிமையை பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களது பேரழிவுகரமான தேர்வுகளுக்கான செலவை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தங்களை, பணக்காரர்களாக ஆக்கிக்கொள்ளும் ஒரே நோக்கில் மேற்கொள்கின்ற முயற்சி நீண்டகால அடிப்படையில் அந்த நிறுவனங்களின் ஆரோக்கியத்தை கீழறுக்கின்றது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.

உழைக்கும் மக்களது நலன்களை பாதுகாப்பதற்கு தேவைப்படும் முதல் நடவடிக்கையாக வேலை, பாதுகாப்பு, ஊதியங்கள், வேலையில் அமர்த்துவது மற்றும் பணியாற்றும் நேரம் பற்றிய அனைத்து வணிக முடிவுகள் ஜனநாயக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்படவேண்டும். இந்த முடிவுகள் சில பணக்காரர்களால் உருவாக்கப்பட முடியாது. அவர்களது நலன்கள் உழைக்கும் மக்களது தேவைகளுக்கு எதிரானது. ஆனால் தொழிற்சாலை தளங்களின் தொழிலாளர்கள் குழுவினால், தொழில்நுட்பாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களில் உறுதியான பிடிப்புள்ள இதர நிபுணர்களின் குழுக்களால் இதுபற்றி முடிவு செய்யப்பட வேண்டும். தொழிற்துறை ஜனநாயகத்தை நிறுவுவதற்கு முன்னிபந்தனையாக அனைத்து பெருநிறுவனங்களின் கணக்குவழக்கு புத்தகங்களை தொழிலாளர்களினால் திறந்து சோதனையிடுவதும் மற்றும் பெருநிறுவனத்தலைமை அங்கீகரிக்கப்படுவது அனைத்து ஊழியர்களும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும்.

பாரியளவு தொழில்துறைகளை நம்பித்தான் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் உள்ளனர். எனவே அவை இனி தங்களது விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்கின்ற அமெரிக்க செல்வந்தத்தட்டினரின் தனிச் சொத்தாக இருக்கக்கூடாது. கடந்த மூன்று தசாப்தங்களாக, நடைபெற்றுவிட்ட தொழிற்துறை சிதைவு டெட்ராய்ட், கிளீவ்லாந்து மற்றும் இதர ''துருப்பிடித்த'' நகரங்கள் மற்றும் Enron, Global Crossing ஆகிய பெருநிறுவனங்களின் குற்றவியல் நடவடிக்கைகளின் காரணமாக இந்த மனிதர்கள் அந்தப் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

தனிப்பட்ட இலாபத்திற்காக அல்லாமல் சமுதாயத்தின் நலனுக்காகத்தான் மோட்டார் வாகன தொழில்துறை நடத்தப்படுகிறது என்றால், அது பொது நிறுவன சொத்தாக மாற்றப்பட வேண்டும். அது, கார் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், நல்ல தரமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருவது மட்டுமல்லாமல், பாதுகாப்பான, தரம்மிக்க மற்றும் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் வாகனங்களை தயாரிக்க முடியும். நீண்ட நெடுங்காலமாக செல்வம் அமெரிக்க சமுதாயத்தில், ஒரு சதவீதமாக உள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் பைகளில் குவிவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும் மற்றும் நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளை மற்றும் பரவலான தேவைகளை தீர்த்து வைப்பதற்கு புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பூகோள ஒருங்கிணைப்பு உற்பத்தியை பயன்படுத்தபட வேண்டும்.

UAW அதிகாரத்துவத்தின் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கொடியசைக்கும் பேரினவாதத்தை அமெரிக்க மோட்டார் வாகன தொழிலாளர்கள் புறக்கணிப்பது அவசியமாகும். அவை தொழிலாளர்களை பிளவுப்படுத்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்துவதற்கு மட்டும் தான் சேவை செய்யும். எனவே ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள வர்க்க சகோதர சகோதரிகளோடு ஒன்றிணைந்து உழைக்கும் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும், வேலைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு பொதுப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

இந்த சோசலிச மற்றும் சர்வதேசிய கொள்கைக்காக போராடுவதற்கு பெரு வணிகத்தின் இரண்டாவது கட்சியும் போரையும் சமூக சமத்துவமின்மையையும் ஆதரிக்கும் ஜனநாயக கட்சியிலிருந்து முறித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு வெகுஜன சோசலிசக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். 2006 தேர்தல் பிரச்சாரத்தில் இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கமாகும் மற்றும், எங்களது வேலைதிட்டங்களை கவனமாக ஆராயுமாறு மோட்டார் வாகன தொழிலாளர்களை நான் கேட்டுக் கொள்வதுடன், வாக்குப்பதிவு தகுதியை பெறுவதற்கு எங்களது போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு புதிய புரட்சிகரத்தலைமையை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியில் சேரும் முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Top of page