WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Condoleezza Rice visits Australia and Indonesia to
tighten US ties against China
சீனாவிற்கு எதிராக அமெரிக்க உறவுகளை இறுக்கமாக்குவதற்கு கொண்டாலிசா ரைஸ்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா பயணம்
By Peter Symonds
21 March 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பயணம்
செய்த சில வாரத்திற்கு பின்னர் குறிப்பாக சீனாவிற்கு எதிராக நேரடியாக-ஆசியா முழுவதிலும் வாஷிங்டனின் முக்கிய
கூட்டணிகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு சென்றவாரம் ஆஸ்திரேலியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும்
வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டாலீசா ரைசினால் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவுடன் முக்கியமான மூலோபாய பங்கு என்று வெள்ளை மாளிகை கருதுகின்ற
உறவுகளை வலுப்படுத்துவது புஷ் விஜயத்தின் மையமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி புதுடெல்லியில் பல ஒப்பந்தங்களில்
கையெழுத்திட்டார். 1998 இல் இந்தியா அணு பரிசோதனை செய்தபோதிலும் மற்றும் அது அணுஆயுத பரவல் தடை
ஒப்பந்தத்தில் (NPT)
கையெழுத்திட மறுத்த போதிலும் இந்தியாவின் பொதுதேவைக்கான அணுக்கரு
திட்டங்களுக்கு உதவுவதற்கான ஒரு பேரத்தை நடத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கைமாறாக, இந்திய
பொருளாதாரம் விரிவடைவதற்கு பெரிய வழி திறந்துவிடப்பட்டதுடன் சீனாவிற்கு எதிராக ஒரு மூலோபாய எதிர்-எடையாக
புதுடெல்லியை சுரண்டிக்கொள்ளவும் வாஷிங்டன் முயன்று வருகிறது.
சென்ற சனிக்கிழமையன்று சிட்னியில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்ஸ்ாண்டர்
டவுனர் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ ஆஷோவுடன் ஒரு முத்தரப்பு கூட்டத்தை நடத்துவது
ரைசுடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். ஆசிய பிராந்தியத்தில் "சமகாலத்திய பாதுகாப்பு பிரச்சனைகள்"
தொடர்பாக மூன்று நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டுள்ள உயர்மட்ட மூலோபாய பேச்சு வார்த்தைகளை
உருவாக்குவது தொடக்க கூட்டத்தின் முக்கிய அம்சமாக இடம் பெற்றது. ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன்
சம்பிரதாய இராணுவ உடன்படிக்கையை வைத்திருக்கின்றன.
சிட்னி கூட்டத்திற்கு முன்னர் சீனாவிற்கு எதிராக நேரடியாக குறிப்பான கருத்துக்கள்
பலவற்றை ரைஸ் தெரிவித்தார். முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார
விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் என்று, அதற்கு முந்திய வாரத்தில் அவர் அறிவித்தார். "இந்த
பிராந்தியத்திலுள்ள நாம் அனைவரும் குறிப்பாக நீண்டகால நேச நாடுகள் சீனாவின் எழுச்சி சர்வதேச அரசியலில்
ஆக்கபூர்வமான சக்தியாக உருவாவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும் அதற்கான முயற்சிகளுக்கும் ஒரு கூட்டுப்
பொறுப்பும் கடமையும் பெற்றிருக்கிறோம். ஆனால் எதிர்மறை சக்தியாக செயல்படுவதற்கு அல்ல" என்று அவர்
குறிப்பிட்டார்
ஐயத்திற்கிடமின்றி ரைஸின் கருத்துக்கள் இராஜதந்திர மறைமொழியில்
அமைந்திருக்கிறது. குறைந்தபட்சம் தற்காலிகமாக அமெரிக்க நிர்வாகம் 2000 ஜனாதிபதி தேர்தலின்பொழுது
சீனா "ஒரு மூலோபாய போட்டியாளர்" என்று புஷ் குறிப்பிட்ட வாய்வீச்சை நிறுத்தி வைத்திருக்கிறது.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற வாஷிங்டனின் மோசடிக்கும் ஈராக் படையெடுப்பிற்கும் பெய்ஜிங் தடை
சொல்லாது உடன்பட்டதும் அதேபோல் வடகொரியாவிற்கு ஆயுத்தங்கள் கொடுப்பதில் அதன் உதவியும்
அமெரிக்காவிற்கு பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், வாஷிங்டனின் நீண்டகால மூலோபாயம்
தொடர்ந்து நீடித்திருக்கிறது. அமெரிக்க அதிகாரிகள், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்,
இந்தோனேஷியாவுடன் கூட "மூலோபாய உறவுகள் பற்றி" பேசிக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் அமெரிக்க
நிர்வாகத்திலுள்ள எவரும், சீனா ஒரு மூலோபாய நட்பு நாடு என்று குறிப்பிடவில்லை.
உண்மையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளின்பொழுது, புஷ் நிர்வாகம், சீனாவின்
எல்லைகளை, ஒட்டியுள்ள நாடுகளில் தனது மூலோபாய நிலைகளை திட்டமிட்டு வலுப்படுத்தி வந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு தலைமை வகித்து நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்
பென்டகன், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் சம்பிரதாயமாக இடம் பெற்றிருந்த பல மத்திய ஆசிய
குடியரசுகளோடு முதல் தடவையாக உடன்படிக்கைகளையும், இராணுவத்தளங்களையும் நிறுவியது. ஜப்பான் மற்றும்
இந்தியா அதேபோல் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நேபாள், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடன் வாஷிங்டன்
நெருக்கமான இராணுவ உறவுகளையும் வலுப்படுத்தியது.
இந்தோனேஷியாவிற்கு ரைஸ் விஜயம் மேற்கொண்டதற்கான முக்கிய நோக்கம்
ஜக்கார்த்தாவுடன் "மூலோபாய பங்காண்மையை" வலுப்படுத்துவதற்குத்தான், மற்றும், குறிப்பாக, இந்தோனேஷிய
ஆயுதப் படைகளை (TNI)
அமெரிக்கா சுஹார்டோ சர்வாதிகாரத்தின்பொழுது ஒரு முக்கிய பிராந்திய
முண்டுக்கொடுப்பாக அதை நம்பியிருந்தது. 1990களில் கிழக்கு தீமோரில் இந்தோனேஷிய இராணுவத்தின்
கொலைவெறி நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தோனேஷிய ஆயுதப் படைகளுக்கும் பென்டனுக்கும் இடையில் உறவுகள்
தொடர்பாக தடைகள் ஏற்கனவே ஒருதலைப்பட்சமாக புஷ் நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது. ரைஸின்
பயணத்தின்போது சில விவரங்கள் தான் வெளியிடப்பட்டன என்றாலும் அமெரிக்க இராணுவம் இந்தோனேஷிய ஆயுதப்
படைகளை "நவீனமயமாக்குவதில்" உதவுவதற்கும், பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளில் கடற்பகுதி பாதுகாப்பு
மற்றும் பேரழிவு நிவாரணங்களில் உதவுவதற்கு 40 இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு அமெரிக்க இராணுவம் பயிற்சியை
தொடக்கவிருக்கிறது.
ஜப்பானை பொறுத்தவரை பிரதமர் ஜீனிச்சிரோ கொய்ஷூமி தேசியவாத
உணர்வுகளை தூண்டிவிடவும், வடகிழக்கு ஆசியாவில் ஜப்பானின் இராணுவ நிலையை மிக மூர்க்கத்தனமாக கொண்டு
செல்வதை நியாயப்படுத்துவதற்கு சீனா என்கிற துருப்புச் சீட்டை செயல்படுத்தி வருகிறார். அவரது வெளியுறவு
அமைச்சர் டாரே ஆஷோ குறிப்பாக, ஆத்திரமூட்டும் வகையில் சென்ற டிசம்பரில், சீனா "ஒரு கணிசமான
அச்சுறுத்தலாகிக்'' கொண்டு வருகிறது என்று கூறினார். சிட்னியில் முத்தரப்பு கூட்டத்திற்கு முன்னர் ஆஷோ ரைஸின்
கருத்துக்களை எதிரொலித்தார் தனது இராணுவ செலவினங்கள் தொடர்பாக "மிகவும் வெளிப்படையாக" சீனா
நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
என்றாலும், ஆஸ்திரேலிய அரசாங்கம் சீனா தொடர்பாக ஒரு அடிப்படையான
இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. ஆசியாவில் ஆஸ்திரேலியாவின் நலன்களுக்காக அமெரிக்க ஆதரவை
திரட்டுகின்ற நோக்கத்தில் பிரதமர் ஜோன் ஹோவார்ட், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான
போரை" மிகத்தீவிரமாக ஆதரிப்பதுடன் மற்றும் ஆப்கனிஸ்தான், ஈராக் ஆகிய இரண்டிலும் அமெரிக்க இராணுவ
தலையீடுகளுக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளார். ஆஸ்திரேலிய ஆளும் செல்வந்தத்தட்டினர் தங்களது விசுவாசத்தை
லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு மாற்றிக் கொண்ட இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து நியூசிலாந்து, அமெரிக்கா
மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் உருவான ANZUS
உடன்படிக்கை கான்பராவின் மூலோபாயக் கொள்கையின்
அடித்தளமாக விளங்கி வந்தது.
அதே நேரத்தில், ஹோவார்ட் அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலமே அது
தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை கணிசமான அளவிற்கு கொண்டு வந்தது என்ற கூற்றில்தான் தங்கியுள்ளது.
விரிவடையும் சீன பொருளாதாரத்திற்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதால் ஆஸ்திரேலியா பொருளாதாரம்
பெருமளவு விரிவடைந்து சார்புரீதியில் பூரிப்பிற்கான ஓரு பெரிய காரணமாகும். எடுத்துக்காட்டாக 15
மாதங்களுக்கு முன்னர், சீனாவிற்கு 25 பில்லியன் டாலர் மதிப்பிற்கான இயற்கை வாயுவை விற்பதற்கான ஒரு
பேரத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டது----இதுவரையில்லாத மிகப்பெரிய ஏற்றுமதி ஒப்பந்தம் அது. இயற்கை
வாயு, இரும்புத்தாது, நிலக்கரி மற்றும் இதர ஆஸ்திரேலிய பொருட்கள் விற்பனையை மேலும் விரிவுப்படுத்துகின்ற
அதன் முயற்சியின் காரணமாக, பெய்ஜிங்கிற்கு வெறுப்பூட்ட வேண்டாம் என்பதில் கன்பெரா மிக கவனமாக உள்ளது.
என்றாலும், வாஷிங்டன் சீனாவை சுற்றி தனது மூலோபாய சுருக்கு கயிற்றை இறுக்கிக் கொண்டு வருவதால், அதன்
சூழ்ச்சி திட்டங்களுக்களான இடைவெளி அதிகரித்தளவில் குறுகலாகிவிட்டது.
சீனா தொடர்பாக ரைஸின் கருத்துக்களை மறுக்கின்ற முயற்சியில் அவரது வருகைக்கு
முன்னர், வெளியுறவு அமைச்சர் டவுன்னர் ஒரு பேட்டியில்:
"சீனாவை, கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையை
நாங்கள் ஆதரிக்கவில்லை என்பது தான் எங்களது செய்தியாகும்'' என்று அறிவித்தார். சீனாவை
கட்டுப்படுத்துவதற்கான ஒரு கொள்கை என்பது ஒரு மிகப்பெரும் தவறாகும் என்று நான் நினைக்கிறேன். முத்தரப்பு
பேச்சு வார்த்தைகள் சீனாவிற்கு எதிரானது என்று எந்த வகையிலும் கருதப்படக்கூடாது" என்று குறிப்பிட்டார்.
அவர்களது கூட்டு பத்திரிக்கை மாநாட்டில், ரைஸ் அந்தப் பிரச்சனையை அமுக்கி வாசித்தார். பனிப் போர்
காலத்தில் மேற்கொள்ளப்பட்ட "கட்டுப்படுத்துவது" என்ற வழியில் அமெரிக்காவின் செயல்திட்டம்
அமைந்திருக்கவில்லை என்று அறிவித்தார் ஆனால் தனது இராணுவ வரவுசெலவு தொடர்பாக "மிக வெளிப்படையாக"
பெய்ஜிங் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். இரகசியமாக நடைபெற்ற விவாதங்களில் இந்தக்
கோரிக்கை மழுங்கலாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
ஏஜ்
செய்தி பத்திரிகையில் ஒரு கருத்தை எழுதியுள்ள, ஆஸ்திரேலிய
மூலோபாய ஆய்வாளர் ஹூக் ஓயிட் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், சனிக்கிழமை டவுனருக்கு "ஒரு கடுமையான
நாட்களாக" இருக்கப்போகிறது. "இந்த [முத்தரப்பு]
பேச்சு வார்த்தைகள் வழக்கமான இராஜதந்திரமாக இருக்கப்போவதில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சரும்,
ஜப்பானின் வெளியுறவு அமைச்சரும் இன்றைய கூட்டத்தொடரில் இங்கே கலந்து கொள்வதற்கு பெரும் சிரமத்தை எடுத்துக்
கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் ஒரு கடுமையான நோக்கம் உள்ளது:
ஆஸ்திரேலியா சீனாவின் பக்கம், சாய்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் கருதுவதை, தடுத்துநிறுத்துவது. சீனப்பொருளாதாரத்தின்
ஒளிவீச்சாலும், அதன் இராஜதந்திரத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டும் நாம் பெய்ஜிங்கிற்கு மிக நெருக்கமாக சென்று
கொண்டிருக்கிறோம் என்பதில் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்."
சர்வதேச அரசியலில் சீனா "ஒரு ஆக்கப்பூர்வமான பங்கை'' வகிக்க வேண்டும்
என்று ரைஸ் கூறுவதன் பொருள் என்ன என்பதையும் ஒயிட் சுருக்கமாக தந்திருக்கிறார். "சீன-சார்பு
அமெரிக்கர்களே கூட பிராந்திய விவகாரங்களை நிர்வகிப்பதில் பெய்ஜிங்கை, ஒரு சம பங்காண்மையாக
நடத்துவதற்கு கற்பனைக்கூட செய்து பார்ப்பது கடினமானது என்று கருதுகின்றனர். அமெரிக்காவின் விதிகளின்படி
செயல்படப்போகிறதா அல்லது அமெரிக்காவின் ஆத்திரத்தை எதிர்கொள்ளப் போகிறதா என்பதை சீனா முடிவு
செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். சீனா ஒரு "மூலோபாய முட்டுச்சந்தியில்" உள்ளது என்று
பென்டகன் கூறுவதன் பொருள் அதுதான்" என்று அவர் விளக்கியுள்ளார்.
அதேபோன்றதொரு பிரச்சனையை கான்பராவும் எதிர்கொண்டுள்ளது.
மிகப்பொதுவாக, ஆசியாவிலும் சீனாவுடன் ஆஸ்திரேலிய பொருளாதார உறவுகளுக்கும் மற்றும் அமெரிக்காவுடன்
அதன் மூலோபாய கூட்டணிக்கும் இடையில் ஒரு துன்பம் நிறைந்த முடிவை எடுப்பதை தவிர்ப்பதற்கு ஹோவர்ட்
அரசாங்கம் தந்திரோபாய முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறது. "ஆஸ்திரேலியர்கள், இடரார்ந்த
நிலையில் இருக்கின்றனர்" என்று ஹாங்கொங்கை தளமாகக்கொண்ட சீனாவின் பன்னாட்டு உறவுகள் தொடர்பான
மையத்தின் இயக்குனர் டேவிட் சுவீக் குறிப்பிட்டார்.
முத்தரப்பு பேச்சுக்கள் இராஜதந்திர வாணவேடிக்கை எதையும் ஏற்படுத்தவில்லை.
அதிகாரபூர்வமான கூட்டறிக்கையுள்ள வாஷிங்டனின் செயற்திட்ட முதன்மை பிரச்சனைகள் தொடர்பான உடன்படிக்கையின்
அம்சங்களை வலியுறுத்தியது. அது, ஈரானின் அணுத்திட்டங்கள் தொடர்பாக "பெரும் கவலைகளை" வெளியிட்டது,
மற்றும் தெஹ்ரான் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படுவது தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு
சபையினால் "ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான" அவசியத்தையும் வலியுறுத்தியது. உடனடியாக, வடகொரியா அதன்
அணுத்திட்டங்கள் தொடர்பாக 6 நாடுகள் தரப்பு பேச்சு வார்த்தைக்கு மீண்டும் வர வேண்டும் என்று மூன்று
அமைச்சர்களும் கேட்டுக் கொண்டனர்.
சர்வதேச பரவல் (proliferation)
ஆட்சியை விரிவடைவதை நோக்கிய ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
"இந்தியாவுடன் நமது பூகோள பங்காண்மையை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை'' அந்த அறிக்கை
வலியுறுத்துவதாக அமைந்தது மற்றும் இந்தியாவுடன் அமெரிக்க அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அது "சர்வதேச
பரவல் ஆட்சியை விரிவடைவதை நோக்கிய ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை" என்று குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்க
- இந்திய பேரம் முற்றிலும் எதிரானவையாகும். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியாவிற்கு, அணு ஆயுத தடை
ஒப்பந்தத்திலிருந்து ஒரு விதிவிலக்கு அளித்திருக்கும் அதே நேரத்தில், ஈரானையும் வடகொரியாவையும் சர்வதேச
அளவில் தீண்டத்தகாதவர்கள் என்று நடத்துவதன் மூலம் புஷ் நிர்வாகம் அணு ஆயுதப்பரவல்கள் தடுப்பிற்கு இதற்கு
முன்னர் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த கட்டமைப்பையும் கீழறுக்கிறது.
ஆசியாவில் அமெரிக்கா-ஆதரித்துள்ள "பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில்'' இந்தியா
ஒரு எதிர்கால பங்காண்மையாக செயல்படக்கூடும் என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வாஷிங்டனின் வழியை பின்பற்றி
செல்வதற்கு கான்பராவிற்கு கிடைத்துள்ள மற்றொரு கூடுதல் ஊக்குவிப்பு இந்தியாவிற்கு இலாபம் தருகின்ற
யுரேனியத்தை விற்பதற்கான சாத்தியக்கூறுதான்.
ஹோவேர்டு, புஷ் இந்தியாவிலிருந்து கிளம்பியவுடன் புது டெல்லிக்கு
விமானத்தில் வந்த போது யுரேனியம் விற்பனை தொடர்பான ஆஸ்திரேலியாவின் கொள்கையை ஏறத்தாழ
மாற்றிவிட்டார். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு
யுரேனியம் விற்பதில் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்ததை தவிர்ப்பதற்கு ஒரு வழி கண்டு
பிடித்துவிட முடியும் என்று இந்தியாவில் கோடிட்டுக் காட்டினார்.
முக்கிய பிரச்சனையான சீனா தொடர்பாக அந்த அறிக்கை ஏறத்தாழ மெளனம்
சாதித்தது. "இந்த பிராந்தியத்தில், சீனாவின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வரவேற்பதாக," குறிப்பிட்டிருந்த
கருத்து மட்டும் இடம்பெற்றிருந்தது. ஹக் ஒயிட் பைனான்சியல் டைம்சிற்கு பேட்டியளித்த போது, இந்த
''சொற்ப'' மொழியின் அநேக பொருள் "அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கடுமையான வார்த்தைகளை
பயன்படுத்துவதில் உடன்படவில்லை, மற்றும் இறுதியில் அறிக்கையிலிருந்து சீனாவை நீக்கி விடுவது எளிதானது என்று
முடிவிற்கு வந்தனர்."
வெளிப்படையாகவும் மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலும் கருத்துத் தெரிவிக்கும்
வல்லமையுள்ள ரைஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுப்பதற்காக அவர் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை அந்தக் கூட்டறிக்கையின்
வாசகம் காட்டியது. மாறாக அவர் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயன்றார். அதனுள் தம் வழியில் கொண்டு வர
தேவை ஏற்படும் நேரத்தில் கான்பராவிற்கு அழுத்தங்களை கொடுப்பதாகும். அதில், அவர் வெற்றி பெற்றார்.
மாற்றங்ள்கள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் வரும்போது டோக்கியோ மற்றும் வாஷிங்டனுடன் தனது உறவுகள் மற்றும்
சீனாவுடன் தனது உறவுகளுக்கு இடையில் தேர்ந்தெடுப்பதற்கு கன்பெரா கட்டாயப்படுத்தப்படும். இவற்றில் சீனா
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.
மூலோபாய நேச நாடுகளுடன் சூழ்ந்துக்கொண்டு வாஷிங்டனால் எடுக்கப்படும் சமீபத்திய
நடவடிக்கைக்கு பெய்ஜிங் எப்படி செயலாற்றும் என்பது இன்னும் தெரியவில்லை. தனக்கு எதிராக அமெரிக்காவும்
ஜப்பானும், ஆஸ்திரேலியாவும், "ஒரு சதி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றன" என்று சீனா கருதக்கூடாது என்பதை
மிகுந்த சிரமப்பட்டு சனிக்கிழமையன்று வெளியுறவு அமைச்சர் டவுனர் வலியுறுத்தினார். ஆனால், சீனத்தலைமை வாஷிங்டன்
சதிகளில் கான்பராவின் சம்மந்தம் குறித்து உண்மையிலேயே என்ன கருதுகிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு அவர் நீண்ட
நாள் காத்திருக்க வேண்டியதில்லை. சீனப் பிரதமர், வென் ஜியா-போ அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுடன்
ஆண்டிற்கு 10,000 டன் யுரேனியம் வாங்குவதற்கான உயர் லாபம் தரும் பேரத்தில் கையெழுத்திடுவதற்காக வருகிறார்.
அமெரிக்காவின் ஆசியாவில் பொருளாதார மற்றும் மூலோபாயத்தை முனைப்பாக நிலைநிறுத்துவதற்கு
புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள மூர்க்கத்தனமான முயற்சிகள் ஒரு பாரிய ஸ்திரமற்ற விளைவுகளை
உருவாக்கியுள்ளது. தெற்கு ஆசியாவிற்கு புஷ்ஷின் பயணத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆட்சி ஏற்கனவே பகிரங்கமாக,
தனது நீண்டகால எதிரியான இந்தியாவிற்கு கீழே தன்னை இரண்டாம் தர அந்தஸ்த்திற்கு தள்ளுகின்ற வகையில் வாஷிங்டன்
தொடர்ந்து செயல்பட்டு வருமானால் அது சீனாவின் பக்கம் திரும்ப வேண்டிவரும் என்று கோடிட்டுக் காட்டியுள்ளது.
படிப்படியாக, கான்பராவை சீனா தொடர்பாக ஒரு வலைக்குள் தள்ளுவதன் மூலம் ஆஸ்திரேலியா - அமெரிக்க,
உறவுகளில் மட்டுமல்ல, ஆனால் இந்த பிராந்தியம் முழுவதிலுமே ரைஸ் தவிர்க்க முடியாத அளவிற்கு உயர்ந்தளவில்
பதட்டங்களை பெருக்கியுள்ளார்.
Top of page |