:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
More than a million march in Los Angeles, other US
cities in defense of immigrant rights
குடியேறுபவர்கள் உரிமைகளை பாதுகாக்க லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பல அமெரிக்க
நகரங்களில் மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அணிவகுப்பு
By Ramon Valle and Rafael Azul
27 March 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் அரை மில்லியனுக்கும்
மேலான மக்கள் மார்ச் 25, சனிக்கிழமை அன்று லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத் தெருக்களில் பேரணி நடத்தினர்; இது
புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைக் காக்கவும் குறிப்பாக ஆவணமற்று இருக்கும் தொழிலாளர்கள் மற்றும்
புலம்பெயர்ந்தோர்மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரானது ஆகும்.
தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு திங்களன்று அமெரிக்க
செனட் மன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட இருக்கும் ஒரு புதிய கூட்டாட்சி சட்டத்திற்கு எதிராக நிகழ்ந்த எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களின் உச்ச கட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது; இச்சட்டத்தின்படி சட்டவிரோதமாக
பலம்பெயர்தல் ஒரு குற்றமாகிவிடும்; மேலும் சட்ட விரோத புலம்பெயர்தலுக்கு துணையாக நிற்பவர்களும் குற்றவாளிகளாக
கருதப்படுவர் -- அதில் குறைந்த கட்டணத்திற்கு கஞ்சி ஊற்றும் விடுதிகள், வீடில்லாதவர்களுக்கு உறைவிடம் தரும்
இல்லங்கள், அவசர மருத்துவமனைகள் ஆகியவற்றை நடத்தும் சமூகப் பணி மற்றும் அறக்கட்டளை தொழிலாளர்களும்
அடங்குவர்.
ஆர்ப்பாட்டத்தின் அளவு அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தை திகைப்பில் தள்ளிவிட்டது;
அதே நேரத்தில் இது அமெரிக்க செய்தி ஊடகத்தால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வாகியுள்ளது. சனிக்கிழமை
மிகப் பெரிய முறையில் மக்கள் லொஸ் ஏஞ்சல்ஸில் திரண்டதும்தான் தேசிய தொலைக்காட்சி இணையங்கள் எதிர்ப்புக்களை
பற்றித் தகவல்களையே கொடுக்க ஆரம்பித்தன.
சனிக்கிழமையன்று இன்னும் 50,000 மக்கள் கொலராடோவிலுள்ள டென்வரில், அந்நகர
வரலாற்றில் இதுகாறும் இல்லாத மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்துச் சென்றனர். அரிசோனாவிலுள்ள
பினிக்ஸில் 20,000 மக்கள் குடியேறுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொந்தமாக சட்ட வரைவை
கொண்டுவந்த அமெரிக்க செனட் உறுப்பினர் Jon Kyl
இன் அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பரித்தனர். அந்நாட்டு வரலாற்றிலேயே இது மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாகும்.
மிகத் தொலைவில் உள்ள வட கரோலினாவின்
Charnotte, விஸ்கான்சில் உள்ள மிலுவாக்கீ மற்றும் கலிஃபோர்னியாவின்
சாக்ரமென்டோ ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். லொஸ்
ஏஞ்சல்சில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு முன் 100,000 குடியேறிய தொழிலாளர்களும் அவர்களுடைய
ஆதரவாளர்களும் மார்ச் 11 அன்று சிகாகோவில் அணிவகுத்து நின்றனர்.
அமைப்பாளர்களின் கருத்தின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் பங்கு பெற்ற ஆர்பாட்டக்காரர்களின்
எண்ணிக்கை ஒரு மில்லியனையும் தாண்டியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய
எதிர்ப்பாளர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்; இதையொட்டி ஸ்பெயின் மொழி இணைய தளமான
UNIVISION 2
மில்லியன் மக்கள் பங்கு பெற்றிருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தது. இந்த ஆர்ப்பாட்டம்
CARECEN ஆல் (Central
American Resosurce Centre (மத்திய அமெரிக்க
உதவிவாய்ப்பு மையம்), மெக்சிகன் அமெரிக்கன் அரசியல் சங்கம், கத்தோலிக்க திருச்சபை மரபினர் மற்றும் இலத்தின்
அமெரிக்க, ஆசிய அமெரிக்க சமூகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மிகப் பெரிய அளவில் லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பேரணி அமைப்பாளர்களையும்,
போலீசாரையும் வியப்பில் ஆழ்த்திய தன்மையை கொண்டிருந்தது; போலீசார் முதலில் பிராட்வேயில்தான் அணிவகுப்பு
நடக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்; பின்னர் அடுத்த தெருக்களையும் ஏற்பாடு செய்து முடிவில்லா மக்கள்
வெள்ளம் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தனர்; மக்கள் வெள்ளம் அருகில் இருந்த
Spring மற்றும்
Main
தெருக்களையும் நிரப்பியது.
ஆர்வத்துடன் நிகழ்ந்த அணிவகுப்பு பெரும்பான்மையில் ஹிஸ்பானிய மற்றும் இலத்தீன் அமெரிக்க
இளந்தொழிலாளர்கள், ஆண்கள் பெண்கள் என்று உள்ளடக்கியிருந்தது; அவர்கள் கார் மெக்கானிக்குகளாகவும்,
dry-wall
பொருத்துபவர்கள், பல பொருட்களை தயாரிப்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தாதிகள், இல்லக்கார்கள்
நிறுத்துமிட காவலாளிகள், தெருக் கூட்டுபவர்கள், விடுதிப் பணியாளர்கள், பேருந்து நடத்துனர்கள், கார்கள் நிறுத்துமிடக்
காவலாளிகள், உதவிப் பெண்கள், கட்டிட காவலர்கள் என்று இருந்தனர்; உண்மையில் தெற்கு கலிஃபோர்னியாவின்
தொழிலாளர் தொகுப்பின் பிரதிநிதிகளாக இருந்தனர்; பேரணி ஒலிம்பிக் முனையில் தொடங்கி 20 தொகுப்புக்கள்
தள்ளி நகர மன்றத்தில் முடிவடைந்தது.
முக்கியமாகவும் அடிக்கடியும் அணிவகுத்தவர்களால் காட்டப்பட்ட முழக்க அட்டைகள்
"தயை செய்யுங்கள், நாங்களும் உங்கள் கனவுகளில் பங்கு கொள்ளுகிறோம்", "நாம் அனைவரும் ஒன்று; உங்களை
போலச் சாதாரண மனிதர்கள்தாம்." "நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல", "பொதுமன்னிப்பு, அனைத்துக்
குடியேறுபவர்களுக்கும் முழு உரிமை", "நாங்கள் குற்றவாளிகள் அல்ல; நாங்கள் மாணவர்கள், பெற்றோர்கள்,
அண்டைவீடுகளில் இருப்பவர்கள்", "நான் என்னுடைய சொந்தவீட்டில்தான் உள்ளேன்.", "நாங்கள் விரோதிகளல்ல,
தீர்வின் ஒரு பகுதிதான்", "விடுதலை நாடான அமெரிக்க நாடு, குடியேறுபவர்களின் நாடும் கூட", "நாம் அனைவரும்
இந்நாட்டில் குடியேறியவர்கள்தாம்", "வேலை செய்தல் ஒரு குற்றமாகாது", மற்றும் "HR
3447 வேண்டாம்" என்று இருந்தன.
இந்த அணிவகுப்பில் உலக சோசலிச வலைத் தளம் பல தொழிலாளர்களை பேட்டி
கண்டது:
HR 3447 ஐக் குறிப்பிட்டு -
சட்டமன்றத்தில் உள்ள குடியேற்ற எதிர்ப்புச் சட்டம் --
R.D. என்னும்
ரிவர்சைட் வட்டத்தில் இருந்து வந்த
drywall
முடித்துக் கொடுப்பவர் கூறினார்: "நான் சரியான ஆவணங்கள் இல்லாத ஒரு தொழிலாளி. எனக்கும் என்
குடும்பத்திற்கும் ஒரு நல்ல வாழ்வை நாடி வந்துள்ளேன். இது ஒரு சுதந்திரமான நாடு என்று கூறப்படுகிறது. நான்
கடுமையாக வேலை செய்கிறேன்; வரிகளைக் கட்டுகிறேன். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நான் உதவுகிறேன்.
நான் ஏன் இங்கு வேலை பார்க்கக் கூடாது? நான் அமெரிக்காவின் ஒரு பகுதிதான். ஆனால் வேலைபார்ப்பவர்கள்
பயத்தில் வாழவேண்டி உள்ளது. இங்கு நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? இப்பொழுது, அவர்கள் கொண்டுவரும்
புதிய சட்டத்தின்படி, இன்னும் மோசமாகத்தான் நிலைமை போகும். எனவேதான் நான் இன்று இங்குள்ளேன்.
அமெரிக்காவில் சுதந்திரத்திற்காக ஆர்ப்பாட்ட அணியில் இருக்க வேண்டும் என்று நான் கற்பனை கூட
செய்ததில்லை."
எதிர்ப்பாளர்களின் முக்கிய இலக்குகளில்
HR 3447 ம்
ஒன்றாகும். இது Sensenbrenner-King Bill
என்றும் அழைக்கப்படுகிறது; கடந்த டிசம்பரில் பிரதிநிதிகள் மன்றம் விஸ்கான்சின் குடியரசு உறுப்பினர்
James Sensenbrenner
அறிமுகப்படுத்திய அளவில் நிறைவேற்றியது. இது ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு நியமிக்கும்
முதலாளிகளையும் வணிகளர்களையும்கூட தண்டிக்கும் என்பதோடு, அவர்களுக்கு எவ்வகையிலும் உதவுபவர்கள், மற்றும்
சட்டவிரோதமாக நாட்டில் நுழைபவர்களையும் குற்றவாளிகளாக நடத்தும். அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும்
இடையே இருக்கும் எல்லை முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்படும்; அதாவது 700 மைல்
நீளமுள்ள வேலி அமைக்கப்படும்.
மன்றத்தின் குடியரசுக் கட்சித் தலைமையின் ஆதரவை சட்டவரைவு கொண்டிருந்தாலும்,
செனட் குடியரசுத் தலைமையும், புஷ் நிர்வாகமும் சில தயக்கங்களை காட்டியுள்ளன; அவை இரண்டு அக்கறைகளின்
அடிப்படையில் உள்ளன: வணிக நலன்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன; அவற்றிற்கு வணிகத்தை நடத்த புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள் தேவை; தடுப்பு இருந்தால் தேர்தல்களில் இலத்தீன் மற்றும் ஆசிய வாக்குகள் எதிராகப்
போகலாம், குறிப்பாக கலிஃபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில், நிறைய புலம்பெயர்ந்த மக்கள்
உள்ள இடங்களில், எதிர்ப்பு இருக்கக் கூடும்.
இருகட்சிகளுடைய ஆதரவுடனும் மாசச்சூசட்சின் ஜனநாயகக் கட்சி எட்வர்ட் கென்னடி
மற்றும், அரிசோனாவின் குடியரசுக் கட்சியின் John
Mccain இருவரும் கொண்டுவந்துள்ள சட்டவரைவு பெரும்பாலான
ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவையும் ஒரு சில குடியரசுக் கட்சியினரின் ஆதரவையும் கொண்டுள்ளது. இதன்
கூறுபாடுகள் புஷ் நிர்வாகத்தாலும் ஏற்கப்பட்டுள்ளன; இதில் தற்காலிக விருந்தாளி போன்ற தொழிலாளித் திட்டம்
உள்ளது; இது மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை குறுகிய காலத்திற்கு ஏற்கும்; அவர்கள் எளிதில்
சுரண்டப்படும் தொழிலாளர் தொகுப்பினர் ஆவார்கள்.
இரு பெரிய கட்சிகளிலும் பெருவணிக அரசியல்வாதி எவரும் புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் நாட்டில் வாழவும் வேலைபார்க்கவுமான ஜனநாயக உரிமைக்கு ஆதரவு
கொடுக்கவில்லை. அவர்கள் அனைவருமே "நம்முடைய எல்லையைக் காப்போம்" என்று தேவையை
வலியுறுத்துகின்றனர்; இது ஏதோ ஒரு விரோதிப் படை அமெரிக்காவை தாக்குவது போன்றும், வலதுசாரியின்
புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்விற்கு முறையீடு செய்வதைப் போலும் உள்ளது. அதேநேரத்தில் அவர்கள்
இத்தகைய முறையீடுகளுடன் பெருவணிகத்தின் தேவையான குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை தக்க வைத்துக்
கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் சமரசம் காண விரும்புகின்றனர்.
குடியரசு, ஜனநாயகக் கட்சியினரின் பூசல்கள் முறியாத எந்த அளவிற்கு ஆவணம் அற்ற
தொழிலாளர்களை துன்புறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுதல் நடைமுறையில் சாத்தியம் என்பதில் வேறுபட்ட
மதிப்புக்களை கொண்டுள்ள கட்சிநிலைப்பாட்டின் அடிப்படையில் முறித்துக் கொள்ளவில்லை.
McCain-Kennedy
சட்டவரைவின்படி முதலாளிகள், தொழிலாளர்களை நிரந்தர குடியேறுபவர் என்ற அந்தஸ்த்தில் நியமிக்கும்
அதிகாரத்தை பெறுவர். நாட்டில் ஏற்கனவே இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்கள் இதையொட்டி
புலம்பெயர்ந்தவர்கள், குடிமக்கள் என்ற தகுதியை சில ஆண்டுகளுக்கு பின்னர் பெறுவர்; இதற்கு அவர்கள் ஒரு
அபராதத் தொகை செலுத்த வேண்டும்; சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்; ஆங்கிலம் பேசக் கற்றுக்
கொள்ள வேண்டும்.
செனட் மன்றத்தின் நீதிக் குழுவின் தலைவரான
Arlen Specter
ஒரு சமரச சட்ட வரைவை முன்வைத்துள்ளார்; இதன்படி விருந்தாளி தொழிலாளர் திட்டத்தில் பங்குபெறுவோர்
அமெரிக்காவை விட்டு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கிவிட வேண்டும். தங்கள் நாட்டில் ஓராண்டு கழித்தபின்னர்தான்
மீண்டும் அமெரிக்காவிற்கு வர அவர்கள் அனுமதிக்கப்படுவர். இது வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டிற்கு அருகில்
உள்ளது; ஆனாலும்கூட முதலாளிகள் குழுக்களில் இருந்து இதற்கு எதிர்ப்பு உள்ளது; ஏனெனில் இதையொட்டி
அவர்களுடைய தொழிலாளர் தொகுப்பு எண்ணிக்கையில் தடங்கல்கள் ஏற்படும்.
கலிஃபோர்னியாவின் மூத்த ஜனநாயகக்கட்சி செனட்டரான
Dianne Feinstein
வலதுசாரி, சட்டம் ஒழுங்கு, பேச்சின்மூலம் திருப்திப்படுத்துவோர் மற்றும் வேளாண்மை வணிக நலன்களை
சார்ந்தவர்கள் என்று இருபுறத்தாரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு கருத்தைக் கொண்டுள்ளார். குடியேற்றச்
சட்டங்களைச் செயல்படுத்துவதில் தக்க கவனம் இல்லை என்பதை அவர் கண்டித்தார்; "நம்மிடைய
பல்லாயிரக்கணக்கான அயல்நாட்டு குற்றவாளிகள் உள்ளனர்; அவர்களில் நம்முடைய சமூகங்களில் தெருக்களில்
சுதந்திரமாக நடந்து கொண்டிருக்கின்றனர்; ஏனெனில் காலம் முடிந்த பின்னர் அவர்களை வெளியேற்றப்படாமல்
மீண்டும் சமூகத்திற்குள்ளேயே இன்னும் குற்றம் புரிவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்." அதேநேரத்தில் இவர்
புதிய சட்டத்தில் பண்ணை தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கூறியுளார்; ஏனெனில் உலகின் ஆறாவது
பெரிய பொருளாதாரமான கலிஃபோர்னிய பொருளாதாரம் அத்தகைய விலக்கு கொடுக்கப்படவில்லை என்றால்
"சரிந்துவிடும்".
குடியரசு வலது சாரிப் பிரிவினர் குடியேறுபவர்களை தாக்குவதை 2006
தேர்தல்களில் "பிளவிற்கு பயன்படும் பிரச்சினை" என்று காண்கின்றனர். ஒரு குடியரசுக் கட்சியை சேர்ந்த கீழ்மன்ற
உறுப்பினரான Tom Tancredo (
கொலராடோவைச் சேர்ந்தவர்), அந்த அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை கொள்ளலாமா
என்றுகூட சிந்தித்து வருகிறார். பல மாநிலங்களிலும் சட்ட மன்றங்கள் சட்ட வரைவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன;
இவற்றின்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறலுக்காக கைது செய்யப்படலாம் என்று உள்ளது; இதனால்
புலம்பெயர்தல் கூட்டாட்சி விஷயம் என்பதைவிட மாநில விஷயமாகிவிடும்; அல்லது ஆவணங்கள் அற்ற தொழிலாளர்கள்
வீடுகள் வாங்குதல், சுகாரதார வசதிகளை பெறுதல் அல்லது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் ஆகியவை
சட்டவிரோதம் என்று செய்யலாமா என்று நினைக்கப்படுகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸில் அணிவகுத்துச் சென்றவர்கள், உலக சோசலிச வலைத் தளத்துடன்
பேசியவர்கள், புலம்பெயர்பவர்கள் குற்றவாளிகளை போல் நடத்தப்படவேண்டும் என்ற முன்னோக்கை
நிராகரித்துள்ளனர். சார் பெர்நர்டினோவில் இருந்து வந்துள்ள 28 வயது லாரி மெக்கானிக் ஒருவர், "சட்டம்
இனவெறித் தன்மை கொண்டுள்து; அதிலும் இது மற்றவவர்களை காட்டிலும் மெக்சிகர்களுக்கு எதிரான இலக்கை
கொண்டுள்ளது. அமெரிக்காவிற்குள் எல்லை கடந்து மக்களை குற்றவாளியாக்கும்; அவர்களுக்கு உதவுபவர்களையும்
குற்றவாளிகளாக்கும், முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை கொடுக்கும். இன்னும் சட்டத்தின் பல விதிகள் முடிவு
செய்யப்படவில்லை; ஆனால் பொதுவாக சட்டவிரோதமாக இங்கு வருபவர்களை அது தண்டிக்கும்.
"இப்பொழுது ஓர் அச்சம் தரும் சூழ்நிலை பணியிடங்களில் வந்துவிட்டது; ஏனெனில்
நடப்பதெல்லாம் அப்படி இருக்கிறது; ஏனெனில் குடியேற்ற எதிர்ப்பு அலை அமெரிக்காவில் அவ்வாறு உள்ளது."
26 வயதான புலம்பெயர்ந்த மற்றும் மெக்சிகோவிலுள்ள
Michoacan ல்
இருந்து வந்தவர் இந்நாட்டில் சட்டபூர்வமாக ஆறு ஆண்டுகளாக உள்ளார். அவர்
WSWS இடம்
கூறினார்: "நான் ஒரு இராசாயன ஆலையில் உள்ளேன். நான் ஒரு இயந்திர இயக்குபவர். இயந்திரங்களை தக்க
முறையில் பாதுகாப்பவர். கோடையில் நான் 60 மணி நேரம் வரை உழைப்பேன். நான் ஒரு மணிக்கு 15
டாலர்கள் வரை சம்பாதிப்பேன். ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அது ஒன்றுமில்லை. வேலைச்சூழ்நிலை நன்றாக உள்ளது.
என்னுடைய முதலாளி ஒரு நல்ல பெண்மணி. ஹிஸ்பானிய சமூகத்திற்கு அவர் பாராட்டுக்களை கூறியுள்ளார்.
"எங்கள் ஆலையில் புலம்பெயர்ந்தோர் பற்றி சோதனை வரவில்லை. நாங்கள்
நன்றாக இருக்கிறோம். இன்று நான் இங்கிருப்பதற்கு காரணம் மக்களுக்கு என்னுடைய ஆதரவை காட்டுவதற்காகத்தான்.
நான் கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறேன். ஆனால் நாம் அனைவரும் இதில் தொடர்பு கொண்டுள்ளோம். நாம்
ஒன்றுபடவில்லை என்றால், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. நம்மில் சிலர் வசதியுடன் இருக்கலாம்; ஆனால்
நம்மைவிட எளியவர்களுக்கு உதவாவிட்டால், அவர்களுக்கு என்ன நேரும்? நம்மைத் தவிர மற்றபேரையும் நாம்
கருத்திற் கொள்ள வேண்டும். அதனால்தான் நான் இங்குள்ளேன். என்னுடைய நலனைக் காப்பதுடன் என்னைச் சுற்றியிருப்பவர்களுடைய
நலன்களையும் காக்க விரும்புகிறேன்.
"ஜனநாயகக் கட்சி எங்களுக்கு உதவுமா என்று கூறுவது கடினம். எல்லா அரசியல்வாதிகளையும்
போலவே, தேர்தலுக்கு முன்பு அவர்கள் வேறுவித முகத்தைத்தான் காட்டுகின்றனர். பலவற்றைக் கூறுகின்றனர்; நமக்கு
உதவுவதாக கூறுகின்றனர்; ஆனால் பதவிக்கு வந்த பின்னர், அவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாகி விடுகின்றனர்;
அவர்கள் பறந்து விடுகின்றனர்.
"அமெரிக்க தொழிலாளர்களில் மற்றவர்களுக்கு என்னுடைய செய்தி எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்பதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்; எங்களை உங்கள் சகோதரர்களாக பாருங்கள்; ஏனெனில் நாம்
அனைவரும் தொழிலாளர்கள். அத்தொழிலாளர்கள் செய்வதை நாங்களும் செய்யமுடியும். உண்மையில் அவர்கள் மறுக்கும்
வேலையைச் செய்ய நாங்கள் பயப்படுவதில்லை. நாம் அனைவரும் சமமானவர்களே என்று நினைக்கிறேன். நமக்குத்
தேவையானது வாய்ப்புத்தான்."
ஆர்ப்பாட்ட அணிக்கு ஏற்பாடு செய்தவர்களின் அரசியல் முன்னோக்கு தங்கள்
குடியுரிமை அரசியல் உரிமைகள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொடுத்துள்ள மகத்தான
ஆதரவை ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வெளிப்பட்டுள்ளது.
நகர மன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் பட்டியலில் லொஸ் ஏஞ்சல்ஸின் மேயர்
Antonio Villarraigosa
வும் மற்ற இலத்தீன் இன ஜனநாயகக் கட்சியினரும் இருந்தனர்.
ஆனால், சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான், அவர்களுடைய சட்டபூர்வ அந்தஸ்து
எப்படி இருந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை
நிபந்தனையற்ற முறையில் காக்கிறது; இலாபமுறைக்கு எதிரான
பொதுப் போராட்டத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களை இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, மற்றும் உலகெங்கிலும்
இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதர, சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்குப் போராடுகிறது.
Top of page |