World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
North American protests mark third anniversary of Iraq war ஈராக் போரின் மூன்றாண்டு நிறைவைக் குறிக்கும் வட அமெரிக்க கண்டனங்கள் By our correspondents வடக்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ஈராக் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவை குறிக்கும் கண்டனப் பேரணிகள் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்றன. சான் பிரான்சிஸ்கோ, சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் மற்றும் இதர அமெரிக்க மற்றும் கனடா நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணிகளில் கலந்து கொண்டனர். கலிபோர்னியாவிலுள்ள ஹாலிவுட்டின் நடுவில் ஏறத்தாழ 4,000 பேர் கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர். பல பேரணிகளிலும் அதன் அமைப்பாளர்களும் மற்றும் பல பேச்சாளர்களும் ஜனநாயகக் கட்சிக்கு பின்னால் போருக்கான எதிர்ப்பை திருப்பி விட முயற்சித்தனர். உரையாற்றியவர்களில் பல்வேறு ஹாலிவுட் நட்சத்திரங்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் மற்றும் கலிபோர்னியா செனட் சபை ஜனநாயகவாதியான குளோரியா ரோமிரோவும் அடங்கியிருந்தனர். பங்கெடுத்துக் கொண்டவர்களில் பலர், அமைப்பாளர்களின் ஜனநாயகக் கட்சியை சார்ந்திருப்பது பற்றிய தமது விரோதப்போக்கை தெரிவித்தனர். லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்திருந்த ஒரு இளம் ஊடக அபிவிருத்தியாளர் WSWS இடம் "நான் எந்தவித அரசியல் கட்சியையும் சேர்ந்தவனல்ல" ஏற்கனவே பேசிய பழைய ஒன்றைப்பற்றி பேச்சாளர்கள் பேசுகின்றனர். ஜனநாயகவாதிகளுக்கு ''முதுகெலும்பு இல்லை.'' என்று அவர் குறிப்பிட்டார். அவர்களிடம் ஏற்கெனவே இருக்கின்ற அளவற்ற ஆதாரங்களை கொண்டு அவர்கள் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும், ஆனால் வேறு யாராவது ஒருவர் ஒரு விவாதத்தை துவக்க வேண்டும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அவர்கள், இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறிய பிரச்சனைகளை எழுப்புகின்றனர், மற்றும் இறுதியில் அத்துடன் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். அவர்கள் போராடவில்லை." என தெரிவித்தார். திரைப்படம் மற்றும் வீடியோவில் உற்பத்திக்கு பிந்திய, பணிகளை செய்கின்ற ஒரு தொழிலாளி அரசியலில் வலதுசாரி திருப்பத்தின் சர்வதேச தன்மைக் குறித்து எடுத்துரைத்தார்: "உலகில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போகும் திசையை எதிர்க்கின்ற காரணத்தினால், இன்றைய தினம் நான் இங்கு வந்திருக்கிறேன். அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கங்கள், பெரும் நிறுவனங்களாகவும் வணிகங்களாகவும் அதிக அளவில் உள்ளனவே தவிர அவை மக்களால் நடத்தப்படுவதாக இல்லை. குறிப்பாக, நமது அரசாங்கம் ஒரு பெரும் நிறுவனமே தவிர வேறு ஒன்றுமில்லை. உலக மக்கள் இந்த உலகை நடத்த வேண்டும்''. "அமெரிக்க மக்களது கருத்துக்களை ஜனநாயகக் கட்சி வெளிப்படுத்துவதாக நான் கருதவில்லை." "வேறு எந்த அரசியல் கட்சியும் மக்களது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. குடியரசுக் கட்சியுடன் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்து கொண்டு, தங்களது சொந்த வணிக நலன்களின் எண்ணத்தைக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்" என்றார். தெற்கு-மத்திய லொஸ் ஏஞ்சல்ஸிருந்து வந்திருந்த ஒரு ஆசிரியரான கிறிஸ்ரீனா "அமெரிக்காவில் என்ன நடைபெற வேண்டும் என்று உண்மையிலேயே மக்கள் விரும்புவதை ஜனநாயகக் கட்சி வெளிப்படுத்தவில்லை என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்." என குறிப்பிட்டார். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் கண்டனங்களில் சில சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியாவில் நடைபெற்றன. அங்கு 10,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர் மற்றும் சிக்காகோவில் 7,000 பேர் பேரணிகளில் கலந்து கொண்டனர். நியூயோர்க்கில் மான்ஹாட்டனிலுள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 1,000 பேர் திரண்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியின் பங்கு மீது வெறுப்பையும், தொடரும் ஆக்கிரமிப்பிற்கும் போருக்கு பின்னணியாக அமைந்த பொய் அம்பலமானது உறுதிப்படுத்தப்படுவது தொடர்பான கோபங்களின் உணர்வுகள் மேலோங்கியிருந்தது. கண்டனக்காரர்கள் பலர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்தனர். ஒரு கணக்கரான ரவுல் "புஷ் பதவிக்கு வந்த நாள் முதல் ஈராக்கை கைப்பற்ற விரும்பினார். அதில் 9/11 இற்கும் பேரழிவுகரமான ஆயுதங்கள் அல்லது ஜனநாயகத்திற்குத் ஒரு தொடர்புமில்லை. எண்ணெய் வளத்தையும், மத்தியக் கிழக்கு முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அந்த போர் நடைபெற்றது''. "ஈராக் எளிதாக பிடித்துக் கொள்ளக்கூடிய ஒரு இலக்கு என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்த நிர்வாகத்திற்கு அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்றைக்கும் கற்பனைக்கூட செய்திருக்க முடியாத அளவிற்கு மிக கடினமாக ஆகிவிட்டது. இந்த அரசாங்கம், கட்டுப்படுத்துவதற்கு மேலாக ஈராக் சென்று கொண்டிருக்கிறது என்பது என்னுடைய கருத்து. புஷ் பதவிக்கு வருவதற்கு முன் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கவில்லை, ஆனால் இப்போது படுமோசமாகிவிட்டது. ஈராக்கில் ஒரு உள்நாட்டுப் போர் உருவாகக் கூடும். அந்த போர் மிக எல்லாவித துயரங்களுக்குமான பெட்டியை (Pandora's Box) திறந்துவிட்டுள்ளது. இந்த உலகம் நிச்சயமாக மிகவும் ஆபத்து நிறைந்ததாக ஆகிவிட்டது. "அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும், மிகப்பெரும்பாலான மக்கள் இந்த போரை எதிர்க்கின்றனர். இந்த நாடு ஒரு ஜனநாயகம் என்று கருதப்படுகிறது, ஆனால் புஷ் நம்மைப் பற்றியோ அல்லது நாம் சிந்திப்பதைப் பற்றியோ கவலைப்படவில்லை." என ரவுல் மேலும் கூறினார். நியூயோர்க்கிலிருந்து வந்திருந்த ஒரு நடிகை லாரன்ஸ் அந்தப் பேரணியில் கலந்துக்கொண்டதற்கான காரணத்தை விளக்கினார்: "இந்த போர் மற்றும் அரசாங்கம் பற்றிய எனது உணர்வு முற்றிலும் பயனற்றவை" என்று அவர் குறிப்பிட்டார். "ஜனநாயகத்தை விரும்பாத மக்கள் மீது அதை கொண்டு வருவதாக அங்கு சென்றோம் என்று அரசாங்கம் கூறுகிறது. அமெரிக்கா 10 ஆண்டுகள் வரை அங்கிருந்தாலும், அது எந்த மாற்றத்தையும், அங்கு கொண்டு வராது மற்றும் ஜனநாயகத்தையும் கொண்டு வர முடியாது. எண்ணெய் வளத்திற்காக அங்கு நாம் சென்றோம்." "ஜனநாயகவாதிகள் மத்திக்கு வந்துவிட்டார்கள், கடந்த சில தேர்தல்களில் எங்களுக்கு எவ்வித மாற்றீடும் இல்லாமல் வேறு வழியில்லாமல் குறைந்த தீங்கிற்கு வாக்களித்தோம். நான் இப்போது எனது கட்சியான ஜனநாயகக் கட்சியை திரும்பிப் பார்க்கிறேன். நிச்சயமாக நான் ஒரு மாற்றீட்டை ஆராய்வேன்." என்று லாரன்ஸ் கூறினார். "அலபாமாவிலுள்ள மொபைலில் துவங்கி லூசியானாவிலுள்ள நியூ ஓர்லியன்சில் முடிவடைந்த ஐந்து நாள் அணிவகுப்பில் 200க்கு மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அந்த பகுதி சென்ற ஆண்டு காத்தரீனா சூறாவளியால் பேரழிவிற்குள்ளானது. பேரணியாளர்கள் ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதற்காகும் செலவை, மக்களது நலன் கருதி நியூ ஓர்லியன்சை மறுபடியும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஈராக் போரில் தனது மகன் கொல்லபட்டது முதல், போருக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்திவருபவரான சிந்தி சீஹன் உட்பட படையினரின் உறவினர்களும், பல முன்னாள் ஈராக் படையினரும் பேரணியில் கலந்துக் கொண்டனர். டெட்ராய்ட் நகரத்தில் சனிக்கிழமையன்று சுமார் 250 பேர் அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்டனர். காத்தரீனா சூறாவளியில் பாதிக்கப்பட்ட பலர் பங்கெடுத்துக் கொண்டனர், சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று கண்டித்தனர். "தடுப்பு அணைகளை கட்டுங்கள், போர் வேண்டாம்" என்ற வாசகம் அடங்கிய பதாகை ஒன்று கொண்டு வரப்பட்டது. கண்டனக்காரர்களின் பெரும்பாலானோர் சட்ட விரோதமான அமெரிக்க-பிரிட்டிஷ் படையெடுப்பு, மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பை கூடுதலாக எதிர்த்தனர். தெற்கு ஆப்கானிஸ்தானுக்கு கனடா துருப்புக்கள் அனுப்பப்பட்டிருப்பதையும் புஷ் நிர்வாகத்துடனான கனடாவின் புதிய பழமைவாத அரசாங்கத்தின் விருப்பமான உறவுகளுக்கு எதிர்ப்பை கண்டனக்காரர்கள் எழுப்பினர். அங்கு அமெரிக்கா நியமித்திருக்கும் ஹமீத் கர்சாயின் அரசாங்கத்தை முண்டு கொடுக்க அவர்கள் உதவி வருகின்றனர். மிகப்பெரிய பேரணிகள் டோரன்டோவில் நடைபெற்றது. அங்கு சுமார் 1,500 பேர் அமெரிக்க தூதரகத்திற்கு முன் திரண்டு பின்னர் நகரின் மத்திய பகுதிக்கு சென்றனர். மாணவர்கள், வேலை நிறுத்தம் செய்யும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிற்சங்கவாதிகள் தவிர இந்த பேரணியில் பல அமெரிக்க "போர் எதிர்ப்பாளர்கள்" கலந்து கொண்டனர். இந்த போர் எதிர்ப்பாளர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் கலந்து கொள்ள மறுத்து தப்பி ஓடி கனடா வந்த அமெரிக்க படையினராவர். டோரன்டோவில் நடைபெற்ற பேரணிக்கு சிந்தி சீகன் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் புஷ் நிர்வாகம் நடத்தி வருகின்ற போர்களை எதிர்ப்பதற்கான அவரது பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக டோரன்டோ வருகிறார். நாடாளுமன்ற புதிய ஜனநாயகக் கட்சி (NDP) உறுப்பினர் பெக்கி நாஸ் அந்த பிராந்தியத்தில் கனடாவின் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பவர் போன்று இரட்டைவேடமிட்டார். உண்மையிலேயே சமூக ஜனநாயக NDP அத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மறைப்பின் கீழ் முன்னெடுப்பதற்கு ஆதரித்தது. மொன்ட்ரியலில், சுமார் 1200 பேர் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் போருக்கும், தொடர்ந்து நீடித்து வரும் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கண்டனம் தெரிவித்தனர். போர் எதிர்பாளரான பிரன்டன் ஹக்லி பேரணியில் உரையாற்றும்போது தமது அரசாங்கம் ஈராக் மக்கள் மீது தொடுத்துள்ள போரைக் கண்டித்தார். வான்கூவர் மற்றும் ஹாலிபாக்சிலும் பெரியளவிற்கு பேரணிகள் நடைபெற்றன. ஞாயிறன்று, மிச்சிகன் அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சுமார் 500 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். அன் ஆர்பரில் பல பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களின் அரசியல் நோக்குநிலை தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. ஜனநாயகக் கட்சிக்காரர்களை சார்ந்த இதர அமைப்பின் பலரும் கல்லூரி ஜனநாயகக் கட்சியினராலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கப்பட்டது. அந்த பேரணியில் கலந்துக்கொண்ட பேச்சாளர்கள் எவரும் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு சவால் விடவில்லை அல்லது அமெரிக்காவிலுள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் அமெரிக்கா போரை ஆதரிப்பதை சுட்டிக்காட்டவில்லை. கல்லூரி ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரியா கோயல், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு சர்வதேச ஆதரவை பெறுவதற்கு கிடைத்த "ஒரு வாய்ப்பை வீணாக்கிவிட்டது" என்பதை வலியுறுத்துவதில் தனது பிரதான விமர்சனத்தை தெரிவித்தார். நிர்வாகம் ஈராக் போரை கையாளுகின்ற விதம் குறிப்பாக ஈரான் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு போதுமான போர் வீரர்கள் இல்லை என்பதை காட்டுவதாக தெரிவித்தார். ஒரு படையெடுப்பை தொடங்குவதற்கு போதுமான மேலதிக துருப்புக்கள் அமெரிக்க இராணுவத்திடம் இல்லை என்பதை ஈரான் அறிந்திருப்பதால், ஈரான் மீது போதுமான அளவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு முடியாதுள்ளது என ஞாயிறன்று ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோசப் பைடன் வெளியிட்டிருந்த விமர்சனங்களை அவர் சுட்டிக்காட்டினார். முந்திய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கண்டனப் பேரணிகள் சிறியவையாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களிடையே எந்தவிதமான மாற்றீடான அரசியல் முன்னோக்கும் இல்லாததாகும். அமெரிக்காவில், போருக்கான எதிர்ப்பு குறைந்துவிடவில்லை, ஆனால் மாறாக எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. என்றாலும், இந்த எதிர்ப்பு இரண்டு-கட்சி முறைக்குள் எதிர்ப்பு எதையும் வெளிப்படுத்த இயலவில்லை. அரசியல் நிர்வாகத்திற்குள் யாரை நோக்கி எதிர்ப்புக்களை திருப்பிவிடுவது என்பதில் இலக்கு எதுவுமில்லாததாலும், அவற்றால் மாற்றம் எதுவும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்திருக்கின்றதாலும் பேரணியில் கலந்து கொள்பவர்களது எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பேரணிகளில் நாடு முழுவதிலும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும், WSWS வாசகர்களும் ஒரு சர்வதேச முன்னோக்கில், ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் புதிய அரசியல் இயக்கத்தை தொழிலாள வர்க்கத்திற்காக உருவாக்குவதற்கும் இருகட்சி முறையிலிருந்து முறிப்பதற்கான அழைப்பு துரிதப்படுத்தும் ஒரு அறிக்கையை வினியோகித்தனர். போரை எதிர்ப்பவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியையும், அதன் 2006 தேர்தல் பிரசாரத்தையும் ஆதரிக்குமாறு அது வலியுறுத்தியது, ("(See "For the immediate withdrawal of all US troops") என்ற கட்டுரையை காண்க). |