ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Students and workers prepare mobilisation
against government's "First Job Contract"
பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு"
எதிராக திரள்வதற்கு தயாராகின்றனர்
By WSWS correspondents
27 March 2006
Use this
version to print | Send this link by
email | Email the author |
Featured Articles
கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் பிரான்ஸ் முழுவதும் நாளை பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின்படி நிறுவனங்கள் இளந் தொழிலாளர்களை முதல் இரண்டு ஆண்டு வேலைக் காலத்தில் எந்தக் காரணமும்
காட்டாமல் பணிநீக்கம் செய்துவிடமுடியும். பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்புக்களை 71
நகரங்களிலும், சிற்றூர்களிலும் கொடுத்துள்ளனர்; 135 ஆர்ப்பாட்டங்கள் இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீது
தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும்.
தேசிய இரயில் இணையங்கள், பாரிஸ் உட்பட போக்குவரத்து தொழிலாளர்களும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். ஆசிரியர்கள், அஞ்சல் ஊழியர்கள், ஆட்சிப் பணித்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்,
Agence France Presse
மற்றும் பொதுத் தொலைக்காட்சி இணைய ஊழியர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். மற்றும் பாதிக்கப்படவுள்ள
நிறுவனங்களில் Total (எண்ணெய்
நிறுவனம்), எயர் பிரான்ஸ் மற்றும் பிரான்ஸ் டெலிகொம் ஆகியவை அடங்கியுள்ளன.
CPE எதிர்ப்பு இயக்கம் பிரதம
மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடன் ஓர் உடன்பாட்டை காணவேண்டும் என்ற தொழிற் சங்கங்களின் முயற்சியையும் மீறி
பெரும் ஊக்கத்தை தொடர்ந்து பெற்றுள்ளது. CGT (தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு
ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு), FO (தொழிலாளர்
சக்தி), இரண்டு நிர்வாகத்தினரின் தொழிற்சங்கங்கள்
CFTC, CFE-CGS என்று 5 தொழிற்சங்கங்களும் வெள்ளியன்று
வில்ப்பனுடன் CPE
பற்றி விவாதித்தன.
உடன்பாடு காண்பதில் தோல்வி அடைந்ததை அடுத்து, பல தொழிற்சங்க தலைவர்களும்
அரசாங்கம் CPE
ஐ திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் வரை தாங்கள் வில்ப்பனை சந்திக்க
மாட்டோம் என்று அறிக்கை விடுத்தனர். தொழிற்சங்கங்களுடைய விடையிறுப்பு சாதாரண மக்களுடைய மிகப்பெரும்
ஆதரவை அனுபவித்து வரும் போர்க்குணமிக்க இளைஞர்களால் தலைமை தாங்கப்படும் இயக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை
இழந்து விடுவோமோ என்ற பயத்தால் உந்தப்படுகிறது.
"ஒரு நாட்டில் சீர்திருத்தத்தை எதிர்ப்பதற்கு இளைஞர்கள் மிகுந்த தீவிரமய
போக்குடன் திரண்டு நிற்கும்போது, ஒரு பிரதம மந்திரி நிலைமையின் அவசரத்தை உணர்ந்து தக்க நடவடிக்கை
எடுப்பார் என்று பொதுவாக நாம் எதிர்பார்ப்போம்." என்று ஸ்ராலினிச ஆதரவு
CGT இன் தலைவர்
Bernard Thibault
அறிவித்தார்.
"பரீட்சார்த்த இரண்டாண்டு காலம் பற்றிய விவாதம் என்ற கருத்தை முன்வைத்த
பிரதம மந்திரி, மற்றும் அவர் கூறும் பணிநீக்கத்திற்கு எக்காரணமும் தேவையில்லை என்ற கருத்தும் பயனற்றவை."
என்று தொழிற்சங்க அதிகாரத்துவம் தொடர்ந்தது. "ஒன்று
CPE
நிறுவப்பட்டதின் கூறுபாட்டை அகற்ற முற்படுகின்றது; அதாவது பிரான்சின் சட்டமியற்றலில்
CPE க்கு
இடமில்லை என்பதுபோலாகும். அவர் CPE
ஐ திரும்பப்பெறவேண்டும்; CNE
பற்றியும் மீளவும் விவாதிக்க வேண்டும்."
திடீரென்று Thibault
ன்,
CNE (புதிய வேலை ஒப்பந்தம்) பற்றிய கண்டுபிடிப்பு சமீபத்தில்
"கடுமையான நிலைப்பாட்டை" கொண்டிருப்பதாக அவர் காண்பித்துக் கொண்டதன் ஏமாற்றுத்தனத்தை விளக்கமாய்
காட்டுகிறது. வில்ப்பன் அரசாங்கத்தால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட
CNE 20க்கும்
குறைவான தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் அவற்றின் தொழிலாளர்களை முதல் ஆண்டுகளில் பணிநீக்கம்
செய்யலாம் என்ற விதியை கொண்டுள்ளது. CPE
இன் நேரடி முன்னோடியான அச்சட்டம் தொழிற்சங்கங்களின் தீவிர எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படாத நிலையிலேயே
இயற்றப்பட்டது. இப்பொழுது பிரெஞ்சு தொழிலாளர்கள் அரசாங்கத்தின் வலதுசாரி திட்டத்தை விரட்ட வேண்டும்
என்ற உறுதியை பார்க்கும்போது, CGT
தலைவர் CNE
உம் "மறுபடியும் விவாதிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார்.
மாணவர்களுடைய சங்கங்களும் தங்கள் நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளன. வெள்ளிக்
கிழமை பிரதம மந்திரியை சந்தித்த தொழிற்சங்கங்கள் மாணவர்கள் சங்க தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும்
இடையே சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தன. அன்று சற்று முன்னர் முக்கிய உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக
அமைப்புக்களின் தலைவர்கள் (UNEF, Ce, FIDL,
UNL) ஆகியவை எட்டு தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து ஒரு
கூட்டறிக்கையை வெளியிட்டன; அதில் "அவர்கள் நாடு ஆழ்ந்துள்ள நிலைமையின் தீவிரத்தன்மை பற்றி நன்கு
அறிந்துள்ளதாகவும், மற்றும் "கூடியிருக்கும் தொழிற்சங்கங்கள் பிரதம மந்திரியை தாங்கள் அமைத்துள்ள கூட்டுத்
தொழிற்சங்க குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறும்" கேட்டுக்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமையன்று, நான்கு மாணவர் சங்கங்கள், வில்ப்பனிடம் அவர்
CPE ஐ
திரும்ப பெறுவதாக உறுதியளிக்கும் வரை தாங்கள் அவரைச் சந்திப்பதாக இல்லை என்று ஒரு விளக்கக் கடிதத்தை
அனுப்பி வைத்துள்ளன.
"எதிர்ப்பு இயக்கம் ஒன்றும் பலவீனமடையவில்லை" என்று நேற்று
Le Figasro
அறிவித்துள்ளது. "நிலைமை இதற்கு மாறானதுதான். திரட்டப்பட்ட பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய தேசிய
மாணவர் ஒருங்கிணைப்பு தீவிரத்தன்மை கொண்டுவிட்டது என்பதற்கு அடையாளமாக, அது ஞாயிறன்று அரசாங்கம் இராஜிநாமா
செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக
Aid-en-Provence
யில் கூடிய 300 பிரதிநிதிகள் அனைத்து முக்கிய மோட்டார், இரயில் போக்குவரத்து ஊழியர்களையும் வியாழனன்று
வேலைத்தடைகளில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்து, அதுவரை சட்டம் திரும்பப் பெறாவிட்டால் ஏப்ரல் 4ம் தேதியில்
இருந்து தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் சேர வேண்டும் என்றும் கோரியுள்ளது."
* * *
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், பல்கலைக்கழக, உயர்நிலைப்பள்ளி
மாணவர்களுடன் கடந்த வியாழனன்று பாரிசில் அவர்கள் 100,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தை
நடத்தியபோது பேட்டி கண்டனர்.
விஞ்ஞான சிறப்பு பயிற்சி பெறும் காப்ரியல் என்னும் உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு
மாணவர் தன்னுடைய பள்ளி இரண்டு நாட்களாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வகையில் மூடியுள்ளது என்று
குறிப்பிட்டார். "வில்ப்பன் மிகவும் திமிர் பிடித்தவர். தான்தான் சரியென்று அவர் நினைக்கிறார். பின்
இளைஞர்களை பார்ப்போம். அவர்கள் "வேண்டாம்" என்கின்றனர்; பாதுகாப்பற்ற வேலைகள் வேண்டாம் என்று
கூறுவதோடு ஊதியம் இல்லாமல் வேலைசெய்யவும் மறுக்கின்றனர். மற்றவர்கள் இன்னும் கூடுதலாக பணம் பெறுவதற்கு
இளைஞர்கள் தியாகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
CPE ஒன்றும்
கடைசி சீர்திருத்தம் அல்ல; அவர்கள் இன்னும் அதிகமாகத்தான் கொண்டு வருவார்கள்."
கடந்த ஆண்டு புறநகரில் விளைந்த இளைஞர்களுடைய கலகங்கள் பற்றி
WSWS காப்ரியலிடம்
கேட்டது. "இது இன்னும் அரசியல் தன்மையுடையது. புறநகர்க் கலவரங்கள் கூடுதலான சமூகப் பிரச்சினையாக
இருந்தன; இளைஞர்களுக்கு பலவிதத்திலும் வெறுப்புத்தான் மிஞ்சியுள்ளது... இப்பொழுது பிரான்சில் ஓர் அரசியல்
நெருக்கடி உள்ளது. மக்களுக்கு யாருக்கு --இடதிற்கா, வலதிற்கா-- வாக்குப்போட வேண்டும் என்று தெரியவில்லை.
எதற்கு போட்டாலும் ஒன்றுதான் என்ற நினைப்பும் ஏற்படுகிறது.
"பாடுபட்டு அடையப்பட்ட சமூக உரிமைகள் ஒரு காலத்தில் இருந்தன.
தொழிலாளர்களுக்கு பல உரிமைகள் இருந்தன; ஆனால் இன்று அவர்கள் தொழிலாளர்கள் பெரிதும் வளைந்து
கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது ஒரு தடையற்ற சந்தை முறையினால் என்று கூறலாம் -- இது
கூடுதலான வகையில் அமெரிக்க முறைபோல் ஆகிறது. இப்பொழுது பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகள், ஏழை
நாடுகள், மூன்றாம் உலக நாடுகளை இகழ்வுடன் கருதுகின்றன. அவர்களுக்கு கடன் கொடுத்து, அந்த
தொழிலாளர்களை சுரண்டி இவர்கள் செல்வந்தராகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும்."
St.Denis பல்கலைக்கழகத்தில்
படிக்கும் ஜூலியன் கூறினார்: "நான் ஒரு கல்லூரியில் (11வயது முதல் 15 வயதானவர்களுக்கு நடத்தப்படுவது)
நிர்வாக உதவியாளராக உள்ளேன்; அப்பொழுதுதான் என் படிப்பிற்கு உதவியாக இருக்கும். அங்கு என்னுடன் வேலைபார்க்கும்
இளவயதினர் அனைவரும் குறுகிய கால, பாதுகாப்பற்ற ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேலை பார்க்கின்றனர்;
மாதத்திற்கு 300ல் இருந்து 400 யூரோக்கள்தான் சம்பாதிக்கின்றனர். பாரிசில் வாழ்க்கை நடத்துவதற்கு அது
மிகவும் குறைவானதாகும்."
"வில்ப்பன் ஒரு பிற்போக்காளர்" என்று ஜூலியன் தொடர்ந்தார்: "ஒரு பின்தங்கிய,
19ம் நூற்றாண்டு பிரான்சின் கருத்தை அவர் கொண்டிருக்கிறார்; அதாவது தொழிலாளர்கள் எப்பொழுதும் தாழ்ந்து
வர வேண்டும்; முதலாளிகள் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று ... இளைஞர்களும், மாணவர்களும்
CPE ஐ
வில்ப்பனுடைய சமூக எதிர்ப்பு திட்டத்தின் ஒரு கூறு என்று அறியவேண்டும்; அது ஒன்றும் இளைஞர்களுக்கு சீர்திருத்தச்
சட்டம் அல்ல; அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானது. முதலாளித்துவம் கூடுதலான முறையில் மிருகத்தனமாகி
கொண்டு வருகிறது."
உலக சோசலிச வலைத் தளம் கோமாவில் இன்னும் இருக்கும் சிரில் பெரெஸ் என்னும்
39 வயது தொழிலாளரை போலீசார் தாக்கியமை பற்றிக் கேட்டது. "இது மிகவும் இழிவுகரமான செயல் --
மிகவும் வெட்கம் கெட்ட செயல். போலீசார் வருகின்றனர்; அடிக்கின்றனர்; ஒரு தொழிற்சங்க உறுப்பினரை
மிதிக்கின்றனர்; இதில் இருந்தே வில்ப்பன் ஒரு தீவிர பிற்போக்காளர் என்று அறிந்துகொள்ளலாம். மூலதனத்தை
பாதுகாக்கத்தான் போலீசார் இங்கு உள்ளனர்; உயரடுக்கினரின் அதிகாரத்தை காக்க உள்ளனர்; மக்களைக்
காக்க அல்ல."
மாணவர்களின் தேசிய நடவடிக்கை தினத்துடன் இணைந்து வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை
விடுக்க மறுத்த தொழிற்சங்கங்கள் பற்றியும் ஜூலியன் விமர்சனத்தை கொண்டிருந்தார். "அது இன்னொரு ஊழல்
--தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தங்களுடைய வசதியான நிலைமைகளை தக்க வைத்துக்கொள்ளத்தான்
விரும்புகின்றனர்."
See Also:
பிரான்ஸ் :
"முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.
பிரான்சில் மாபெரும்
மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன
1936ம் ஆண்டு
பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்
பிரான்ஸ்
: மே-ஜூன் 1968ம் இன்றும்
பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை
தொடர்கின்றனர்
பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது
பிரான்ஸ்:
இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்
பிரான்ஸ்:
இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள்
ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ்: கலவரத் தடுப்புப்
போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது
CPEக்கு
எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை
பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்
Top of page |