:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Belarus: imperialist intervention in presidential
election
பேலாருஸ்: ஜனாதிபதி தேர்தலில் ஏகாதிபத்திய தலையீடு
By Niall Green
18 March 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
முன்னாள் சோவியத் குடியரசான பேலாருசில் மார்ச் 19, ஞாயிறன்று நடைபெறவிருக்கும்
ஜனாதிபதி தேர்தலில் தற்போது பதவியிலிருக்கும் அலெக்ஸான்டர் லூக்காசென்கோ மூன்று போட்டி வேட்பாளர்களை
எதிர்கொள்கிறார்.
1994 முதல் ஜனாதிபதி பதவியிலிருக்கும் லூக்காசென்கோ தேர்தல் வாக்கெடுப்பில்
வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2004 தேர்தலில் நாட்டின் தலைநகரமான மின்ஸ்க்கில் கண்டனக்காரர்களுக்கு
எதிராக வன்முறைகள் நடைபெற்றன. அப்போது, மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு லூக்காசென்கோவை
அனுமதிப்பதற்கான ஒரு பொதுஜனவாக்கெடுப்பின் முடிவை கண்டிப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டபோது
கலவரத்தடுப்பு போலீசார் தாக்கினர் மற்றும் பேரணி நடத்தியவர்களை கைது செய்தனர்.
அத்தகைய குறிப்பிடத்தக்க ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை பயன்படுத்துவதை
வாஷிங்டனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் லூக்காசென்கோவிற்கு எதிரான நகர்வுகளை நியாயப்படுத்தவே தவிர
பேலாரஸ் மக்களது உரிமைகளுக்கான எந்த கவலையினாலும் அல்ல. மாறாக அந்த ஆட்சி ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டினின் கடைசி மற்றும், மிக நெருக்கமான கூட்டணியினராக இருக்கும் காரணத்தால் மாஸ்கோவிற்கு
எதிரான பூகோளஅரசியல் தந்திரோபாயங்களில் அவர்களுக்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது என்று கருதுவதால்தான்.
லித்துவேனியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நேட்டோ
மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
கொண்டலிசா ரைஸ், பேலாருஸ் தொடர்பான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை விளக்கிக்கூறினார்.
அதிக அமெரிக்க-சார்பு ஆட்சி கொண்டுவருதற்கு உக்ரைனில் "ஆரஞ்சு புரட்சி" என்றழைக்கப்பட்டது நடைப்பெற்ற
பின்னர் ஒரு சில மாதங்களில் பேசிய ரைஸ் பேலாருஸ்தான், மத்திய ஐரோப்பாவில் "உண்மையான கடைசி சர்வாதிகாரம்"
மற்றும் "பேலாருஸில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது'' என்றும் குறிப்பிட்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சராகியவுடன் அவரது முதல் உரை ஒன்றில் ரைஸ் அமெரிக்க
ஆக்கிரமிப்பின் இதர இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள---- ஈரான், கியூபா, பர்மா, மற்றும் ஜிம்பாப்வேயுடன்
சேர்த்து "கொடுங்கோன்மையின் காவலிடம்" ஒன்றாக பேலாருசை பட்டியலிட்டுருந்தார்
2001இன் பொழுது எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் விளாடிமிர் கொன்சரிக் வெற்றி
பெறுவதற்காக ஒரு ஒத்திசைவான முயற்சியில் தொடக்கி, அவருக்கு ஆதரவாக பேலாருஸ் தேர்தலை
உறுதிப்படுவதற்கான முயற்சியில் ஏற்கனவே வாஷிங்டன் தோல்வியுற்றது. மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதர்,
மைக்கேல் கோசக், லூக்காசென்கோவிற்கு-எதிர்ப்பு பிரசாரத்தில் தேசிய ஜனநாயக அமைப்பு, சர்வதேச குடியரசு
அமைப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை, அமெரிக்க உதவி நிறுவனம் மற்றும் பில்லியனரான ஜோர்ஜ் சரோஸ்சின்
Open Society Institute
ஆகியவற்றினால் எதிர்ப்பு குழுக்களுக்கு நிதிகளை வழங்குவதற்கு ஏற்படு செய்தார்.
கோசக் 1980 களில் மத்திய அமெரிக்காவில் குறிப்பாக, நிக்கராகுவாவில் அமெரிக்க
தலையீடுகளின் போது தனது பற்களை உடைத்துக்கொண்ட ஒரு தூதர். அவர் பேலாருஸில் எதிர்க்கட்சி மாணவர் இயக்கமான
Zubr
உறுப்பினர்களை 2000ல் சேர்பிய ஜனாதிபதி சுலோபோடான் மிலோசுவிக்கிற்கு எதிராக அதன் ஆட்சி கவிழ்ப்பிற்கு
உதவுதற்கு வாஷிங்டனால் பயன்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய-சார்பு மாணவர் அமைப்பான சேர்பியன் குழுவான
Otpor
பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
2001 பேலாருஸ் ஜனாதிபதி தேர்தலும், 2004ல் பொதுஜனவாக்கெடுப்பும்
மோசடியானவை என்ற குற்றச்சாட்டுக்களுக்கு பின்னரும் உக்ரைனின் குச்மா மற்றும் ஜோர்ஜியாவின் செவார்நாட்ஷே
போன்ற இதர தலைவர்களை காட்டிலும் பேலாருஸ் ஜனாதிபதியின் நிலை எளிதில் ஆட்டம்காணக்கூடியது என்று வாஷிங்டன்
அறிந்துகொண்டது. எவ்வாறாயினும் அமெரிக்கா தொடர்ந்து, பல்வேறு சுதந்திரச் சந்தை மற்றும் அமெரிக்க-சார்பு
எதிர்க்கட்சி குழுக்களுக்கு பணத்தை நிரப்பியது.
2004 அக்டோபரில் அமெரிக்க நாடாளுமன்றம் "பேலாருஸில் ஜனநாயகம்"
சட்டத்தை நிறைவேற்றியது. அது, எதிர்க்கட்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை அதிகரிக்கச் செய்ததுடன்,
பேலாருஸ் மீது, வர்த்தக மற்றும் நிதிக்கட்டுப்பாடுகளை விதித்து மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக
வேவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
பேலாருசில் தனது பிரசன்னத்தை உணர வைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமும்
முயற்சிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம்
தனது செல்வாக்கை அந்த நாட்டில் விரிவாக்குவதில் ஆர்வத்துடனும் மற்றும்
மாஸ்கோவுடன் தனது பேரம்பேசுவதில் வலிமையை பெருக்குவதற்கும் மற்றும் ஐரோப்பிய பெருவர்த்தகங்களால்
பயன்படுத்தாமல் விடப்பட்டிருந்த திறமையுள்ள, மற்றும் குறைந்த-ஊதிய உழைக்கும் சக்தியை பிரநிதித்துவப்படுத்தும்
பேலாருஸ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை முன்னேறச் செய்வதுமாகும்.
பேலாருஸ் மீது அமெரிக்காவின் அதிகரித்தளவில் போரிடுவதற்கான முயற்சிக்கு ஐரோப்பிய
ஒன்றியமும்
செயலூக்கத்துடன் பதிலளித்தது. 2004ல் லூக்காசென்கோ அரசாங்கத்துடன்,
உறவுகளை மேம்படுத்துவதற்கு தற்காலிக முயற்சிகளுக்கு பின்னர் சென்ற ஆண்டு மின்ஸ்க்கிற்கு எதிராக ஐரோப்பிய
ஒன்றியம்
கட்டுப்படுத்தப்பட்ட தடைகளை அறிமுகப்படுத்தியது.
2005 ஆகஸ்டில் வெளிவிவகாரங்கள்
தொடர்பு ஆணையாளர் பெனிட்டா பெர்ரேரோ-வால்ட்னர் ஐரோப்பிய ஒன்றியம்,
ஜேர்மனி தலைமையிலான ஒரு நிதி நிறுவன அமைப்பு ஊடாக
பேலாருஸிற்கு, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புவதற்காக ஆண்டிற்கு ஏறத்தாழ 2
மில்லியன் யூரோக்களை வழங்கும் என்று அறிவித்தார். தேவைப்பட்டால், ''மேலும் நிதியளிக்க'' ஐரோப்பிய
ஒன்றியம்
விருப்பங்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஞாயிறன்று, நடைபெறும் தேர்தல் வாக்கெடுப்பின் பிரதான எதிர்க்கட்சி
வேட்பாளரான அலெக்ஸாண்டர் மிலின்கேவிச்சிற்கு அண்மை மாதங்களில்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விருந்தூட்டி மகிழ்விக்கப்படுகிறது.
ஜனவரியில் ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் ஜோசப் போரல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்
கொள்கை பிரதான ஆலோசகர் ஜேவியர் சோலனா, மற்றும் பெர்ரேரோ - வால்டினர் ஆகியோருடனான பல
உயர்மட்ட கூட்டங்களுக்கு பிரூஸ்சிற்கு அவர் அழைக்கப்பட்டார்.
முன்னாள் பேராசிரியரான மிலின்கேவிச் பல்வேறு எதிர்க்கட்சி குழுக்களின் ஒரு சமரச
வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர், பிரதான ஐரோப்பிய அரசு சார அமைப்புகளுடன்
கலந்துரையாடல்களை நடத்துவதற்கு முன்னர், 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்
கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
என்றாலும் மிலிங்கேவிச் பின்னால் அதன் முழுபலத்தையும் செலுத்துவதற்கு ஐரோப்பிய
ஒன்றியம்
தயக்கம் காட்டி வருகிறது. தனது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பெரும்
பகுதிக்கு ரஷ்யாவையே நம்பியிருக்கும் (அவற்றில் பெருமளவில் பேலாருஸ் வழியாக மேற்கு திசைநோக்கி
குழாய்களில் அனுப்பப்பட்டு வருகிறது) ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பாக ஜேர்மனியும், மாஸ்கோவின் கூட்டான
மின்ஸ்கிற்கு எதிராக மிகவும் பலமாக திரும்பி மாஸ்கோவுடன் தங்களது உறவுகளை பாதித்துவிடாது தடுப்பதில்
அக்கறை கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் எரிவாயு விலைகள் தொடர்பான
தகராறு, ரஷ்யாவிலிருந்து தனது எரிசக்தி அளிப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான
கவலையை தூண்டுவிட்டுள்ளது. அப்போதிருந்த ஜேர்மனியின் பசுமைக்கட்சி மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் கூட்டணி
அமெரிக்க ஆதரவு "ஆரஞ்சு புரட்சிக்கு" குறித்து எச்சரிக்கையாயிருந்ததற்கு காரணம் அதனால் மாஸ்கோவுடன் பெரிய
பதட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவற்றால் உக்ரேன் வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு அளிப்புகளுக்கு
அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனாலும்தான்.
அதுபோன்ற காரணங்களுக்காக பேலாருஸில் "ஆட்சி மாற்றத்திற்கு" ஒரு மிகவும்
விழிப்பான அணுகுமுறையை ஐரோப்பிய ஒன்றியம்
எடுத்து வருகிறது மற்றொரு ''வண்ணப்புரட்சி" வழியாக பேலாருஸில்
அமெரிக்க-சார்பு ஆதரவு ஆட்சி வருமானால், ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகங்களுக்கு மிகுந்த ஆபத்து
ஏற்படும் என்று அது கருதுகிறது.
2004 உக்ரேனில் செய்ததுபோல், தனது சொந்த அரசுசாரா அமைப்புக்கள்
மற்றும் ஊடக அமைப்புகளின் ஊடாக நிதியளித்தும் ஆதரவளித்தும்
பேலாருஸ் எதிர்க்கட்சிகளை ஆட்சிக்கு கொண்டுவருவது மூலம் பேலாருசில் அமெரிக்க தலையீட்டிற்கு பதிலளிக்கலாம்
என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.
கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள்-ஸ்ராலினிச கிழக்கு உறுப்பு நாடுகள் தங்களது
உண்மையான வடிவத்தில், ஐரோப்பிய ஒன்றிய அரைமனது கண்டனங்களை விட வாஷிங்டனின் போர்வெறி போக்கிற்கு
நெருங்கி வருகின்ற வகையில் பேலாருஸ் மீது தங்களது அணுகுமுறையை கொண்டுள்ளன.
பேலாருஸிலுள்ள மேற்கு-சார்பு எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு பக்கத்து நாடுகளான,
போலந்து, லாத்வியா மற்றும் லுத்வேனியா வழியாக அல்லது நேரடியாக அவற்றிலிருந்து நிதி கிடைத்து வருவதாக
பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை எதிர்க்கட்சியினர்களுக்கு அரசியல் ஆதரவையும் வழங்கி வருகின்றன.
தேசியவாதத்தையும் சுதந்திரச்சந்தை கருத்தியல்களையும் வளர்ப்பதற்காக 1992ல்
மின்ஸ்க்கில் பேலாருஸ் மாணவர்களுக்காக ஒரு வெளிநாட்டு-நிதி வழங்கப்படும் தனியார் அமைப்பால் ஐரோப்பிய
மனிதவியல் பல்கலைக்கழகம் லுத்வேனியாவின் ஆதரவுடன் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அதை, 2004ல்
லூக்காசென்கோ மூடிவிட்டார். தீவிர வலதுசாரி லித்வேனிய தாய்நாட்டு ஒன்றியம், ஒரு பிரச்சாரத்தை நடத்தி
வந்ததை தொடர்ந்து 2006 பெப்ரவரியில் அந்த பல்கலைக்கழகம் மறுபடியும் திறக்கப்பட்டது, அது பேலாருஸிற்கு
எதிராக வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை நெருக்கமாக எதிரொலித்து வருகிறது மற்றும் லூக்காசென்கோ அரசாங்கத்தை,
மாற்றுவதற்கு, தேவைப்படுகின்ற நபர்களுக்கு பயிற்சி தரும் தளமாக அந்த பல்கலைக்கழகத்தை கருதி வருகின்றது.
போலந்து லூக்காசென்கோ ஆட்சிக்கு எதிரான ஐரோப்பிய பிரசாரத்திற்கு தலைமை
வகிக்கிறது. பேலாருசுடன் ஒரு எல்லையை பகிர்ந்து கொள்ளுவதுடன் மற்றும் அந்நாட்டில் கணிசமான போலந்து
மொழி பேசுகின்ற சிறுபான்மையினர் உள்ளனர். வார்சோ தனது பக்கத்து நாடு போலந்து சிறுபான்மையினரை ஒடுக்கி
வருகின்ற ஒரு எதேச்சதிகார சமுதாயம் என்று அடிக்கடி கண்டித்து வருகிறது.
ரைசுடைய "கடைசி சர்வாதிகாரம்" உரையின் பின்னர் குறிப்பாக, இரண்டு நாடுகளுக்கும்
இடையில் கொந்தளிப்பு முற்றி வருகிறது பல வலுவான இராஜதந்திர தாக்குதல்களை போலந்தும் பேலாருசும் பரிமாறிக்
கொண்டிருக்கின்றன.
போலந்தின் பேலாருஸ் ஒன்றியத்தை
(SPB) ஒடுக்குவதையும்,
பேலாருசின் அரசியல் தலையீட்டையும் போலந்து கண்டிக்கிறது. போலந்தின் பேலாருஸ் ஒன்றியம் போலந்து அரசாங்கத்தின்
ஒரு முன்னணி நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக லூக்காசென்கோ கூறினார். போலந்தின் பேலாருஸ்
ஒன்றியத்தில் 10,000 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அது ஏறத்தாழ 400,000 வலுவான போலந்து
சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்படுகிறது, அவர்கள் நாட்டின் வடமேற்கிலுள்ள ஹிரோட்னா
ஒப்லாஸ்ட்டில் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனது சொந்த வேட்பாளர்களுடன் போலந்தின் பேலாருஸ் ஒன்றியத்தின் முன்னணி
உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களை பதிலாய் நியமிக்க லூக்காசென்கோவால் கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர்
போலந்து, மின்ஸ்க்கிலுள்ள தனது தூதரை விலக்கிக் கொண்டது. அந்த நேரத்தில், போலந்து ஜனாதிபதியாக பணியாற்றி
வந்த அலெக்ஸாண்டர் காவனிஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் பேலாருஸ் மீது அழுத்தங்களை கொடுக்கவில்லை என்று விமர்சித்தார்
ஐரோப்பாவிடம் ''இரட்டை தன்மையான நிலையிலிருந்து சுதந்திரமான ஒரு துணிவான கொள்கை'' இல்லை என்று
கூறினார்.
போலந்தின் ஒருமைப்பாடு இயக்கத்தின் முன்னாள் தலைவராக இருந்து பின்னர் ஜனாதிபதியான
லெச் வலேசா வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தார். லூக்காசென்கோ ஆட்சி தொடர்பாக, அமெரிக்காவின்
நிலையை எதிரொலிக்கின்ற வகையில் 2005 ஆகஸ்டில்
BBC இற்கு பேட்டியளித்த நேரத்தில், உக்ரைனிலும், ஜோர்ஜியாவிலும்
நடைபெற்றது போன்ற "மக்கள் புரட்சியை" அவர் ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
அண்மையில் போலந்து நாடாளுமன்றத்தில் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு இடையில் உரையாற்றுவதற்கு,
அனுமதித்ததன் மூலம், ஜனாதிபதி போட்டியில் அலெக்ஸாண்டர் மிலின்கேவிச்சை போலந்து வெளிப்படையாக ஆதரித்தது.
பேலாருஸிற்குள் ஒலி பரப்புவதற்காக அது ஒரு வானொலி நிலையத்தையும் அமைத்திருக்கிறது.
பக்கத்து நாடுகளான ஜேர்மனி மற்றும் ரஷ்யாவோடு ஒப்பிடும்போது, தனது பலவீனத்தை
சமாளிப்பதற்கு போலந்து செல்வந்தத்தட்டினர், மத்திய ஐரோப்பாவில் வாஷிங்டனின் தலைமை துணை அதிகாரியாக
ஆகிவிட முடியும் என்ற அபிலாஷைகளை நம்பிக்கொண்டிருக்கின்றனர் பிரதான நேட்டோ இராணுவ தளங்களுக்கு இடம்
கொடுத்திருக்கின்றனர் மற்றும் இந்த பிராந்தியத்தில் சிறிய முன்னாள் ஸ்ராலினிச அரசுகளை பின்பற்றி வருகின்றனர்.
அமெரிக்கா நிதியளித்ததன் மூலம் மின்ஸ்கில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் அது
அந்த பிராந்தியத்தில் தனது பூகோள அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்று போலந்து கருதுகிறது. இது, பிரதானமாக
ரஷ்யாவிற்கு, பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமையுமென்றாலும் மின்ஸ்கில் ஒரு புதிய ஆட்சி மீதான போலந்தின்
செல்வாக்கு அதிகரிப்பானது ஜேர்மனியின் உறவுகளில் தனக்கு ஆளுமையை வழங்கும் என்றும் வார்சோ நம்புகிறது.
ஞாயிறன்று, நடைபெறும் தேர்தலில் லூக்காசென்கோ வெற்றி பெற்றுவிடுவாரானால்
அந்த சம்பவத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
- குறிப்பாக,
ஜேர்மனியும் போலந்தும் - பேலாருஸிலும், மற்றும் இந்த பிராந்திய முழுவதிலும் ஸ்திரமற்றத்தன்மையை மேலும்
உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும். ஏனென்றால், அவைகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளேயும் மற்றும் ரஷ்யாவுடனும்
பூகோள அரசியல் சாதகமான நிலைமைக்காக போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன.
மத்திய ஐரோப்பாவில் தீமை விளைவித்துக்கொண்டிருந்த நூற்றாண்டுகால தேசியவாத
போட்டிகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவதற்கு, ஏகாதிபத்திய வல்லரசுகளும் அவர்களது உள்நாட்டு பிரதிநிதிகளும் மேற்கொண்டிருக்கின்ற
இந்த தந்திரோபாயங்கள் இந்த பிராந்தியத்தில் புதிய மோதல்களின் ஒரு வளரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
Top of page
|