ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: University and high school students continue
anti-government protests
பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை
தொடர்கின்றனர்
By Rick Kelly
23 March 2006
Back to screen
version
கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தம் (CPE)"
சட்டத்திற்கு எதிராக பிரான்சின் பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி
வருகின்றனர்.
இச்சட்டத்தின்படி எந்தக் காரணமும் இல்லாமல் முதல் இரண்டு ஆண்டு வேலைக் காலத்தில் முதலாளிகள் தொழிலாளர்களை
பணி நீக்கம் செய்ய முடியும். இப்பொழுது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள்
CPE ஐ திரும்பப்பெற
மறுக்கும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
செவ்வாய் அன்று பிரான்ஸ் முழுவதும் மாணவர்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த எட்டு நாட்களில் இது அத்தகைய நான்காவது நடவடிக்கையாகும். இந்த அணிகளில் குறைந்தது 40,000 உயர்நிலைப்பள்ளிகள்
மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு பெற்றதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர். 5,000 த்தில் இருந்து 15,000
வரையிலான இளைஞர்கள் பாரிசின் இடது கரையின் வழியே அணிவகுத்து
சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் போலீசாருடன் கைகலப்பு நடத்தினர்; 37 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
தேசிய மாணவர்கள் சங்கமான (UNL)
பிரான்சில் நான்கில் ஒரு உயர்நிலைப்பள்ளி வேலைநிறுத்தம் செய்துள்ள மாணவர்களால் தடைக்குட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரான்சின் பல்கலைக்கழகங்களில் பாதிக்கும் மேலானவை வேலை நிறுத்தத்தில் உள்ளன; குறைந்தது 15 பல்கலைக்கழகங்கள்
மாணவர்களின் மறியலினாலும், ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்களினாலும் மூடப்பட்டுள்ளன.
ஒரு தேசிய மாணவர் வேலைநிறுத்தம் இன்றும் நடக்க இருக்கிறது; கிட்டத்தட்ட 100,000
பேர் பாரிஸ் தெருக்களில் அணிவகுத்துச் செல்லுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான பொதுத் துறைப் பிரிவு
தொழிற்சங்கங்களும் "ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், வேலையை நிறுத்துதல்" என்று அடுத்த செவ்வாய்
நடத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளன. ஆற்றல் துறையில் உள்ள தொழிலாளர்களும் --
Gaz de France, Electricitie de France --
வேலை நிறுத்த அறிக்கை கொடுத்துள்ளனர்; அதேபோல் இரயில்வே ஊழியர்களும்
பாரிஸ் சுரங்க இரயில் ஊழியர்களும் வேலை நிறுத்த முன்னறிவிப்பு கொடுத்துள்ளனர்.
Air France உடன்
தொடர்புடைய எட்டு தொழிற்சங்கங்களும் ஒரு 24 மணி நேர வேலைநிறுத்த முன்னறிவிப்பு கொடுத்துள்ளனர். தனியார்
பிரிவில் உள்ள தொழிலாளர்கள் எத்தனை பேர், பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ள "பகுதி தேசிய
வேலைநிறுத்தத்தில்" பங்கு பெற உள்ளனர் என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படி ஆர்ப்பாட்டங்களும் பெருகிய முறையில்
CPE க்கு எதிர்ப்புக்களும்
பிரெஞ்சு மக்களிடையே இருந்தபோதிலும், அரசாங்கம் பின்வாங்க மறுத்துள்ளது. "இந்தச் சட்டத்துடன் மூன்று விஷயங்கள்
முடியாதவை" என்று வில்ப்பன் Union for a Popular
Movement (UMP) -ன் சக கட்சி உறுப்பினர்களிடம் செவ்வாயன்று
கூறினார். "முதலாவது இதைத் திரும்பப் பெறுதல் என்பது, ஏனெனில் அப்படிச் செய்தால் இறுதி எச்சரிக்கைகள்,
முன்னிபந்தனைகளுக்கு நாங்கள் சரணடைதலுக்கு ஒப்பாகிவிடும்; எங்கள் ஆதரவுத் தளம் அதை விரும்பாது; எங்களை
அப்படிச் செய்தால் அது மன்னிக்காது. இரண்டாவது இதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் என்பது; அது நடக்காது,
ஏனென்றால் அது எமது அரசியலமைப்பிற்கு முரணானது. மூன்றாவதாக முடியாதது நம்முடைய சட்டத்தை திரித்தல், ஒரு
திட்டத்தின் சமசீர்நிலையை இழப்பது என்பது அது வெற்றிபெறும் வாய்ப்பை மறுப்பதற்கு ஒப்பானதாகி விடும்."
இதற்கு முன், வில்ப்பன், பாரிசின் மேற்குப் பகுதியில்
Poissy என்ற இடத்தில்
வேலையில்லாத இளைஞர்களுடன் செய்தி ஊடகத்திற்கு நிழற்படத்திற்காக நின்றார். "சட்டம் நல்ல முறையில்
செய்யப்பட்டுள்ளது" என்று அவர் அறிவித்தார். ஆனால் பின்னர் அவர் "குறைகூறுபவர்கள் ஒன்றாக மேசையில் உட்கார்ந்து
விவாதிக்கலாம்" என்றும், அரசாங்கத்துடன் சட்டம் "முன்னேற்றப்படுவதற்காக" விவாதிக்கலாம் என்றும் சேர்த்துக்
கொண்டார். நியூ யோர்க் டைம்சின் கருத்தின்படி,
UMP க்குள்ளேயே "எதிர்ப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில்
CPE
திருத்தப்படவேண்டும் என்று பெருகிய ஒருமித்த கருத்து உள்ளது."
இப்பொழுது குறிக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு "சோதனைக் காலம்", இளைஞர்கள்
எக்காரணமும் இன்றி பதவிநீக்கம் செய்யப்படலாம் என்பது ஒராண்டு எனக் குறைக்கப்படலாம் என்று கருத்துக்கள்
வந்துள்ளன. வில்ப்பன் தன்னுடைய சக மந்திரிகளிடம் கூறியதாவது: "சமூகப் பங்காளிகள் [அதாவது
தொழிற்சங்கத்தினர், மற்றும் வணிகத்தினர்] இந்த காலத்தை எங்கு மிகவும் பொருத்தமோ, அங்கு குறைத்துக் கொள்ளும்
முழு சுதந்திரத்தையும் கொண்டுள்ளனர்."
அப்படி சமரசம் செய்து கொள்ளுதல் என்பது
CPE சட்டத்தின் மையக்
கருத்தை மாற்றாமல் விட்டுவிடுவதோடு இன்னும் கூடுதலான முறையில் பணி நிலைமைகள் மீது தாக்குதல் நடத்த
வழிவகுக்கும்; இளைஞர்களுக்கு என்றில்லாமல் அனைத்து பிரெஞ்சு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் முறையில் அப்படி
வரும். முழுத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் சீரழிக்க வேண்டும் என்னும் அரசாங்கத்தின் உறுதி
உந்துதல் பெற்றுள்ளதற்குக் காரணம் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவுடன் கூடுதலான
போட்டித் தன்மைக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
பிரான்சின் "இடது" கொண்டிருக்கும் பங்கு ---அதாவது தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட்
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்டிருக்கும் பங்கு-- எது பணயம் வைக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. அரசியல்
ஸ்தாபனத்தின் முக்கிய கூறுபாடாக இருக்கும் இந்த அமைப்புக்கள், தங்களால் இயன்ற அளவிற்கு அரசாங்கத்திற்கு உறுதித்
தன்மை கொடுப்பதற்கும் CPE
எதிர்ப்பு இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்கும் முயன்று வருகின்றன. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வில்ப்பனுடைய
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டமானது, இச்சக்திகளின் அரசியல் ஆதிக்கத்திற்குள் இயக்கம் இருக்கும் வரை
ஆபத்தைத்தான் எதிர்கொள்ளும். (See: "France:
Political issues in the fight against the government's First Job
Contract'")
சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுடைய ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளும்
வகையில் அரசாங்கத்தை அமைதியுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. "வெளிப்படையாக தெரிவதை உணர்ந்து
கொண்டு நூறாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்கள் கொடுக்கும் தகவலை செயல்படுத்துவதை விடுத்து, வில்ப்பன் பலப்
பரீட்சையில் ஈடுபட்டுள்ளார்" என்று ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
அறிவித்துள்ளது. "இது முற்றிலும் பொறுப்பற்ற தேர்வாகும்."
"இது எதில் முடியுமோ என்ற கவலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம்" என்று
சோசலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரும் முக்கிய "இடது"மான
Arnaud Montebourg
கூறியுள்ளார். "இப்பொழுது நிலைமை தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அரசியல் அமைப்புக்கள் செல்வாக்கிழந்துள்ள
வெடிப்புத் தன்மை உடைய நிலைமையாகும்."
UMP உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்
இருந்து செவ்வாயன்று தேசியச் சட்டமன்றத்தின் சோசலிஸ்ட் தலைவர்
Jean-Marc Ayrault
ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர். "நாடு முழுவதுமே பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளது; இது
ஆபத்தாகப் போகக் கூடும்" என்று Ayrault
அறிவித்தார். "அகந்தையினால் உந்தப்பெற்றுள்ள டொமினிக் டு வில்ப்பன் பிரான்சை தன்னுடைய சொந்த விதிக்குள்
சிறையிட்டுள்ளார். பிரான்சே உடைந்தாலும் அவர் சிறிதும் பொருட்படுத்தமாட்டார்."
"அரசாங்கத்தின் பங்கு நெருக்கடி தீயை பரப்புவது அல்ல" என்று சோசலிச பிரதிநிதி
Laurent Fabius
கூறினார்; இவர்தான் கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பில் "வேண்டாம்"
பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கியவராவார். நேற்று அவர் மேலும் கூறியதாவது: "அமைதியை காக்க வேண்டிய காலம்
வந்துள்ளது. புத்திசாலித்தனமான விஷயம் CPE
ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளுவது ஆகும்." ஜனாதிபதி ஜாக் சிராக், மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா
சார்க்கோசி இருவரும் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் இருவரும்தான் "இப்பிரச்சினையில் முடிவு கொடுக்கக் கூடிய
காரணிகள்" என்று விளக்கினார்.
CPE சட்டம் ஆறு மாதங்களுக்கு
பரிசோதனைக்காலம் கொடுக்கப்படலாம் என்று சார்க்கோசி ஆலோசனை கூறியுள்ளார். "நான் வில்ப்பன்னுடன், சில
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையை காட்டுகிறேன் என்பது வேறு விஷயம். அந்த வேறுபாட்டை எங்கு நிலைமை
சரியில்லையோ அங்கு காட்டுவதைவிட, எங்கு நன்கு உள்ளதோ அங்கு காட்டுவதுதான் சரி" என்று நேற்று வெளியிடப்பட்ட
Paris Match
இல் கொடுத்த பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார்.
Le Parisien
ல் வந்த முந்தைய அறிக்கை ஒன்றில், வில்ப்பன் தொழிற்சங்கங்கள்பால் "குறிப்பிடும் வகையில் இறங்கிவரவில்லை" என்றால்
தான் இராஜிநாமா செய்யக்கூடும் என்று வந்ததை அவர் மறுத்தார்.
சார்க்கோசியும், வில்ப்பனும் அடுத்த ஆண்டுத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களாக
UMP யின்
போட்டியாளர்கள் ஆவர்; சார்க்கோசியின் நட்பு அமைப்புக்களில் சில பிரதம மந்திரியை தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல்
சட்டத்தை இயற்றி செயல்படுத்துவதற்கு குறை கூறியுள்ளன. உள்துறை மந்திரி அரசாங்கத்திற்குள் தடையற்ற சந்தை
சீர்திருத்தத்தின் மிக வலுவான ஆதரவாளர் ஆவார்; ஜனாதிபதி ஜாக் சிராக்குடன் சேர்ந்து கொண்டு எப்படியும்
CPE செயல்படுத்தப்பட
வேண்டும் என்று உள்ளார்.
Paris Match க்கு
கொடுத்துள்ள பேட்டியில், சார்க்கோசி மாணவர்களுடைய ஆர்ப்பாட்டங்கள் "புறநகர் பிரிவின் போராட்டத்தை எழுப்பிவிடக்கூடும்;
அவை இப்பொழுதும் அழுத்தத்துடன்தான் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இது கடந்த ஆண்டு பெரும்பாலும் வேலைகிடைக்காத
அரேபிய, கறுப்பு இன இளைஞர்கள் பாரிசின் வறிய புறநகர்ப்பகுதிகளில் நிகழ்த்திய எழுச்சிக்களை குறிக்கிறது. அப்பொழுது
போலீசார் தீவிரமாக கலகங்களை ஒடுக்கியதையும், மூன்றுமாத அவசரகால சட்டம் சுமத்தப்பெற்றதையும் சார்க்கோசிதான்
மேற்பார்வையிட்டார். மீண்டும் வெடிப்புக்கள் நேரிடலாம் என்ற அவருடைய எச்சரிக்கை பிரெஞ்சு சமூக உறவுகளில் உள்ள
பற்றியெரியக்கூடிய சூழலின் வெடிப்புத் தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
பாரிசில் கடந்த சனிக்கிழமையன்று 39 வயது சிரில் பெரெஸ் தாக்கப்பட்டதில், கலவரத்
தடுப்பு போலீசாரின் தீங்குவிளைப்பதில் ஆர்வம் கொண்ட வன்முறைத் தொடர்பு கொண்டிருப்பதற்கு இதற்கிடையில் இன்னும்
கூடுதலான சான்றுகள் வந்துள்ளன. ஒரு தொலைத் தொடர்பு தொழிலாளியான பெரெஸ் தலையில் பலத்த காயங்கள்
உண்டாகி மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார். ஆரம்ப சாட்சியங்கள் போலீஸ் இவரைப் பலமுறையும் தடிகளால்
அடித்து, தலையில் மிதித்த வகையில் இந்நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கின்றன; ஆனால் போலீசார் மருத்துவ உதவிக்கு
அழைப்புவிட 20 நிமிஷங்கள் மறுத்துவிட்டனர்.
பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த நிழற்படக்காரரான
Bruno Stevens, AFP இடம் நேற்று தான்
Place de la Nation
அருகில் இருந்தபோது போலிசார் ஒரு மனிதனை துரத்தியதை கண்டதாகக் கூறினார். "ஐந்து அல்லது ஆறு பேர்
தொடர்ந்து வந்து அவரைப்பிடித்து உடனடியாக தட்டுத்தடங்கலின்றி குண்ணடாந்தடிகளால் அவரைத் தாக்கினர்; தப்பியோடிய
மனிதன் ஒன்றும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை." மேலும் தான், "அந்நபரின் தலைமீது வலது
கண் மட்டத்தில் வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை பார்த்தாகவும், தரையில் அவர் கிடந்தபோது இன்னும் பல அடிகள்
கொடுக்கப்பட்டன" என்றும் கூறியுள்ளார்.
அந்த இடத்தில் இருந்த AFP
நிழற்படக்காரரான Thomas Coex,
பின்னர் ஒரு போலீஸ்காரரிடம் மிகவும் காயமுற்றுள்ள ஒரு மனிதன், மருத்துவக் கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய நிலையில்
உள்ளார் என்று தெரிவித்தார். "இங்கு நான் அதற்காக இல்லை; வழியை விட்டுச் சென்றுவிடுங்கள். எனக்கு வேறு வேலைகள்
உள்ளன" அதற்கு அந்த அதிகாரி கூறினார்.
Reuters உடைய தகவல்படி அரசாங்க
வழக்கறிஞர் அலுவலகம் "அம்மனிதனுடைய காயங்களுக்கு போலீஸ்தான் காரணம் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை"
என்று கூறியுள்ளது. |