:
ஆசியா
:
சீனா
China's National People's Congress focusses on social
instability
சமூக ஸ்திரமற்ற தன்மையில் குவிமையப்படுத்திய சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ்
By John Chan
15 March 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இந்த ஆண்டு தேசிய மக்கள் காங்கிரஸ் (National
People's Congress -NPC) பெய்ஜிங்கில் மார்ச் 5-ல்
ஆரம்பித்து நேற்று முடிவடைந்தது, வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையின் ஸ்திரமற்ற விளைவுகள் குறித்து சீன
அரசாங்கத்தின் கவலைகளை குவிமையப்படுத்துவதாக இருந்தது.
NPC- யை சுற்றி கடுமையான
பாதுகாப்பு நடவடிக்கையினால் வர்க்க பதட்டங்களின் சூழ்நிலை விளக்கிக்காட்டப்பட்டது. தங்களது மனக்குறைகளை
எடுத்துரைக்க முயன்ற பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த நூற்றுக்கணக்கான மனுதாரர்கள்,
NPC தொடங்குவதற்கு
முன்னரே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். எந்தவித கண்டனங்களையும் தடுப்பதற்காக மத்திய பெய்ஜிங்கிலுள்ள,
மக்கள் மண்டபத்தில் நிகழும் கூட்டத்தை சுற்றி 15,000- வலுவான பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
முன்னணி சீன அதிருப்தியாளர்கள் போலீஸ் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டிருப்பதாக,
தகவல் தந்தனர். வெளிப்படையாக எழுதுகின்ற எழுத்தாளரான, லியூ ஜியாபோ, போலீஸ் அதிகாரிகள் தனது
வீட்டில் காவல் புரிந்து வருவதாகவும் பெப்ரவரி 13 முதல் தன்னை வெளியில் செல்ல முடியாமல் தடுத்து வருவதாகவும்,
நிருபர்களிடம் தெரிவித்தார். "அவர்கள் குறிப்பாக இந்த ஆண்டு பதற்றத்துடன் காணப்படுகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதான அறிக்கையை வழங்கிய சீனப்பிரதமர் வென் ஜியாபோ, 2,927
NPC பிரதிநிதிகளுக்கும்
ஏன் பெய்ஜிங் தலைமை அவ்வளவு பதற்றத்துடன் காணப்படுகிறது என்பதை விளக்கினார். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும்
இடையில் விரிவடைந்து வருகின்ற இடைவெளியும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் வளர்ந்து வருகின்ற கிளர்ச்சியினாலும்
சமூக ஸ்திரத்தன்மை கீழறுக்கப்பட்டு வருகிறது.
"சந்தை சீர்திருத்தம்'' ஒரு பெரும் சங்கடமான காலக்கட்டத்தை'' கடந்து
கொண்டிருக்கிறது என்று வென் எச்சரித்தார். சென்ற ஆண்டு பொருளாதாரம், 9.9 சதவீதம் வளர்ந்தது, வெளிவர்த்தகம்
23.2 சதவீதம் உயர்ந்து 1.42 திரில்லியன் டாலர்களை எட்டியது மற்றும் நாடு வெளிநாட்டு நேரடி முதலீடாக
60.3 பில்லியன் டாலர்களை பெற்றது. என்றாலும் இந்த புள்ளிவிவரங்கள், சீனாவின் வெகுஜனங்களின் சமூக நிலைமைகள்
மோசமடைந்து வருவதன் செலவில் முயன்று பெற்றவை.
"பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் பல கடும் துன்பங்களும் பிரச்சனைகளும் உள்ளன
என்பதை தெளிவாக பார்க்க வேண்டியது நமக்கு அவசியமாகும். பல நீண்ட காலமாக நிலவுகின்ற மற்றும் ஆழமாக
வேரூன்றிவிட்ட மோதல்கள் அடிப்படையிலேயே இன்னும் தீர்த்து வைக்கப்பட வேண்டியுள்ளது மற்றும் புறக்கணித்துவிட
முடியாத புதிய பிரச்சனைகளும் எழுந்துள்ளன" என்று வென் தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.
"கல்வியை பெறுவதிலும், மருத்துவ சிகிச்சைகளை அடைவதிலும் சிக்கல் குறித்து
பொதுமக்களிடையே வலுவான கவலை நிலவுகிறது மற்றும் நிலம் பறிமுதல் வீடுகள் இடிப்பு, வீடுகள் இடம்பெயர்வு,
பெருநிறுவனங்கள் மறுசீரமைப்பு, மாசுபடுத்துதல் மற்றும் உற்பத்தியின்போது பாதுகாப்பதில் கடுமையான
பிரச்சனைகள் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் மீறப்படுவதால் மக்களது நலன்கள் கடுமையாக
பாதிக்கப்படுகின்றன" என்று அவர் எச்சரித்தார். குறிப்பாக சென்ற ஆண்டு நிலக்கரி சுரங்கங்களில் ஏறத்தாழ
6,000 தொழிலாளர்கள் இறந்தது உட்பட சீனாவின் பயமுறுத்தும் தொழிற்துறை பாதுகாப்பு நிலைச்சான்றை அவர்
சுட்டிக்காட்டினார். இந்த சாவு எண்ணிக்கை, பெய்ஜிங் அவற்றை குறைப்பதாக மோசடியாக, உறுதிமொழிகளை
தந்த பின்னரும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கூடுதலாக குறிப்பிட்டாக வேண்டும்.
ஆட்சியின் மீது பரவலாக நிலவுகின்ற எதிர்ப்பை திருப்திபடுத்துகின்ற நோக்கில்
எடுக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை முடிவில் பிரதமர் வழங்கினார். அதில் முக்கியமாக
குவிமையப்படுத்தியிருப்பது கிராமப்புறங்களை, அங்கு தங்களது நிலம் பறித்துக் கொள்ளப்படுவது, வருமானங்கள்
வீழ்ச்சியடைந்து வருவது, வரிகள் அதிகம் விதிக்கப்படுவது, சேவைகள் இல்லாதது தொடர்பாகவும் குறிப்பாக
அண்மை ஆண்டுகளில் ஏழை விவசாயிகளின் கண்டனங்கள் நடைப்பெற்றுள்ளன
"ஒரு புதிய சோசலிச கிராமப்புறத்தை" உருவாக்குவதாக சீன அரசாங்கத்தின்
உறுதிமொழியை, வென் திரும்பவும் கூறினார். உண்மையிலேயே, 1949-ல் பதவிக்கு வந்தது முதல் ஆட்சி
சார்ந்திருக்கும் கிராமப்புற சமூக அடித்தளம் நொறுங்கிக் கொண்டு வருவதை ஒருங்கிணைப்பதற்கு அது தீவிரமாக
முயன்று கொண்டிருக்கிறது. விவசாயிகளை தளமாகக் கொண்ட மக்கள் விடுதலை இராணுவம்தான் இன்றைக்கும்
பெய்ஜிங் சர்வாதிகாரத்தின் அஸ்திவாரமாக உள்ளது. வென் வடிவமாக்கிய புதிய கிராமக்கொள்கை "அதிகம்
வழங்குவது, குறைவாக எடுத்துக் கொள்வது, மற்றும் கட்டுப்பாட்டை தளர்த்துவது".
"அதிகம் தருவது" என்றால் அதன் பொருள் 2006-ல் கிராமப்பகுதிகளில் அரசாங்க
செலவினத்தை ஒரு 14 சதவீதம் உயர்த்தி 339.7 பில்லியன் யுவான்கள் அல்லது 42.3 பில்லியன் டாலர்களாக
உயர்த்துவதாகும். இந்த பணம் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை தீவிரப்படுத்துவதற்கும், இரண்டு ஆண்டுகளுக்குள்
கிராமபுற மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணங்களை நீக்கிவிடுவதற்கும், செலவிடப்படும் மற்றும் இதர மானியங்களும்
வழங்கப்படும். "குறைவாக, எடுத்துக்கொள்வது" என்பது இந்த ஆண்டு நாடு முழுவதிலும் விவசாய வரியை, ஒழித்துக்
கட்டுவது---- இந்த வரி அரசாங்க வருவாய்களில் தற்போது மிக மிகக்குறைவாகும்.
நூறு மில்லியன் கணக்கான சீன விவசாயிகளுக்கு இந்த நடவடிக்கைகள் சமுத்திரத்தில்
கலந்த ஒரு துளியாகும். கிராமப்புறங்களில் கிடைக்கின்ற சராசரி வருமான விகிதம் நகர பகுதிகளோடு ஒப்பிடும்போது
சுமார் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் உள்ளது. இந்த இடைவெளி குறையாது என்று தோன்றுகிறது. அடுத்த ஐந்து
ஆண்டுகளில் கிராமப்புற ஆண்டு வருமானங்கள், 4,250 யுவான்களுக்கு (1530 டாலர்கள்) உயர வேண்டும், என்று
அரசாங்கம் அழைப்பு விடுத்தாலும், ஆண்டு நகர்புற வருமானம் 13,390 யுவான் அளவிற்கு (1660 டாலருக்கு)
உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ஆய்வு அலுவலகமே கூட திட்டமிட்டதன்படி
2020 வாக்கில் கிராம-நகர்ப்புற வருமான இடைவெளி ஒன்றிற்கு நான்கு என்ற அளவிற்கு அதிகரிக்கும், கிராமப்பகுதிகளில்
சேவைகள் கிடைக்காத நிலையும் மாறப்போவதில்லை.
சீனாவின், 160 மில்லியன் பள்ளி செல்லும்-வயதுள்ள கிராமப்புற குழந்தைகளில்
நாட்டின் ஆரம்ப, இளநிலை நடுத்தர பள்ளி மாணவர்கள் ஏறத்தாழ 80 சதவீத பேர் என்று கணக்கிடப்படுகிறது.
பெய்ஜிங் இந்த சேவைகளுக்கு நிதியளிப்பதை உள்ளூர் அரசாங்கங்களுக்கு 1990-களில் மாற்றியது கட்டாயக் கல்வி
கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு பெரும் சுமையாக மாறிவிட்டது. 2005-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பக்கல்வி
மற்றும் உயர்நிலைக் கல்வி படிப்புக் கட்டணம் ஒரு சராசரியாக 100 டாலராக இருந்தது அல்லது ஒரு விவசாயி
சராசரி வருமானத்தில் கால்பங்காகும். இத்தகைய, நிதி கடினங்களால் படிப்பைவிடும் விகிதம் அதிகரிக்கவும்
ஆசிரியர்களை இழக்கவும் வழிவகுத்தது. பள்ளிக்கு அப்பால், குறிப்பாக அதிக செலவு பிடிக்கும், கல்லூரி மற்றும்
பல்கலைக் கழக கல்வி மிகப்பெரும்பாலான கிராமப்புற இளைஞர்களுக்கு அடையப்படமுடியாததாக இருந்தன.
சீன விவசாயிகள் ஐந்து பேரில் நான்கு பேர் மருத்துவ செலவினங்களை தாங்களே
ஏற்றுக்கொள்ள வேண்டும். நகரங்களில் குடிப்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் 10 மில்லியன் கணக்கான
கிராமப்புற மக்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதியும் இல்லை. 1949 புரட்சியில் கிடைத்த பலன்களில் ஒன்று
கிராமப் பகுதிகளில் பொது மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதாகும். அவை, அடிப்படை வசதிக்குறைவானவை
என்றாலும், சீன விவசாயிகளுக்கு மருத்துவ சிகிச்சை வசதியை வழங்கி வந்தன. 1980-களில் சுகாதார
சேவைகளுடன் கூட்டுப்பண்ணை விவசாயமும் ஒழித்துக்கட்டப்பட்டது மில்லியன் கணக்கான கிராமக்குடும்பங்கள்
படுமோசமான வறுமைநிலைக்கு தள்ளப்படுவதற்கான ஒரு பெரிய காரணியாக அமைந்தது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள மிக அண்மைக்கால புள்ளி விவரத்தின்படி
கிராமப்புற நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை மற்றும் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்ட 45 சதவீத விவசாயிகள், முழுமையாக, உடல்நிலை தேறுவதற்கு முன்னரே மருத்துவமனைகளில்
இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
தலைச்சிறந்த உதாரணம் செங் என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு விவசாயப் பெண்,
சியாசுன் மாகாணத்தை சேர்ந்த பெங்கியன் கிராமத்தை சேர்ந்தவரான அவர் தனது கர்ப்பப்பை புற்றுநோயால்
இறந்துகொண்டிருக்கிறார். தனது சேமிப்புக்கள் அனைத்தையும் செலவிட்ட பின்னர் அவர் சிகிச்சையை
நிறுத்திவிட்டதாக, BBC-யிடம்
தெரிவித்தார். அவரது மகன் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக வேலை தேடி சென்றதால் பள்ளிப்படிப்பை
இடையில் விட்டுவிட்டான். "எங்களது வாழ்நாள் சேமிப்பான 1000 டாலருக்கு மேற்பட்ட தொகையை
சிகிச்சைக்காக செலவிட்டு விட்டோம். ஆனால் செலவு அதை விட மூன்று மடங்காக ஆகிவிட்டது. எங்களது அனைத்து
உறவினர்களும் நண்பர்களும் பணம் கொடுத்தனர் ஆனால் அது மருத்துவ செலவினத்தை நெருங்கிக்கூட வரவில்லை"
என்று அவரது கணவர் விளக்கினார்.
புதிதாக அரசாங்கம் நிறுவியுள்ள கூட்டுறவு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் விவசாயிகள்
ஒவ்வொருவருக்கும் ஓர் ஆண்டிற்கு அதில் பங்கெடுத்துக் கொள்வதற்காக 10 யுவான்களை (1.25 டாலர்களை)
செலுத்த தேவைப்படும் அரசாங்கம் மற்றொரு 40 யுவான்களை செலுத்தும். இந்த திட்டத்தால் மருத்துவ
செலவினங்களில் 65 சதவீதத்தை ஈடுகட்ட முடியும், மீதி இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு பல விவசாயிகள்
மிகுந்த சிரமப்படுகின்றனர். ஏழ்மை நிலையிலுள்ள விவசாயிகள் மிகக்குறைந்த தொகையான 10 யுவான்களைக்கூட
செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர் என்று அரசு ஊடகம் தகவல் தந்திருக்கிறது.
சந்தை சக்திகள்
வென் கூறியுள்ள "கட்டுப்பாட்டை தளர்த்துவது" என்பது, விவசாயத்தில், மேலும்,
"சந்தை சீர்திருத்தத்தை" கொண்டு வருவதை குறிக்கும், அது, அரசாங்கம், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள
குறைந்தபட்ச சலுகைகளையும் தவிர்க்க முடியாத அளவிற்கு கீழறுப்பதாக அமையும். 2001-ல் உலக வர்த்தக
அமைப்பில் (WTO)
சேர்வதற்கு தந்த உறுதிமொழிகளின் ஒரு பகுதியாக சீனாவை வெளிநாட்டு
விவசாய இறக்குமதிகளுக்கு பெய்ஜிங் திறந்துவிட்டமை நாட்டின் போட்டியிட முடியாத நிலைமை, பின் தங்கிய
நிலைமை மற்றும் சிறிய அளவிலான விவசாயத்தால் ஆழமான நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
உணவு பற்றாக்குறைகளின் அச்சுறுத்தலை குறிப்பிட்ட வென், விவசாயிகளை
உற்பத்தியிலிருந்து, உற்சாகத்தை இழக்கச் செய்கின்ற அளவிற்கு உற்பத்தி செலவினங்கள் அதிகரித்து வருகின்றன,
மற்றும், அதே நேரத்தில் உணவுதானிய விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டார்.
நிலத்தகராறுகள் வெடித்துச் சிதறும் பிரச்சனைகளாக, அதிகரித்துக் கொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.
NPC-க்கு
முனனர் சீன அரசாங்கம் வெளியிட்ட புதிய நெறிமுறைகளின்படி வெளியேற்றப்படுகின்ற குடியிருப்பாளர்களுக்கு
முறையான இழப்பீடு வழங்க உறுதிசெய்து தருவதாக கருதப்பட்டது.
1970-களின் கடைசியில் கிராமப்புற கம்யூன்களின் கூட்டுப்பண்ணை முறை கைவிடப்பட்ட
பின்னர், பெய்ஜிங் வெளிநாட்டு முதலீட்டை தொழிற்துறை மண்டலங்களுக்கு கவர்வதற்கு மற்றும் உள்கட்டமைப்புகளை
கட்டுவதற்கான நடவடிக்கையில் நிலங்களை அரசு சொத்துடமையாக வைத்துக் கொண்டது. இதன் ஒரு விளைவாக
சீன அதிகாரிகள் மில்லியன் கணக்கான மக்களை தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றினர் இழப்பீடு கிடைக்காதது
குறித்து கண்டனங்கள் வளர்வது கிளறிவிடப்பட்டது.
நிலத்தகராறுகளுக்கு ஒரு தீர்வாக, நிலங்களை தனியார் சொத்துடமைக்கு
அனுமதிக்கலாம் என்று சில சீன பேராசிரியர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் பெய்ஜிங் தலைமை,
தேசியமயமாக்கப்பட்ட நிலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது கிராமப்பகுதியிலுள்ள மிச்சமிருக்கும் ஒரே சமூக
பாதுகாப்பு வளையத்தையும் அழித்துவிடும் என்று அஞ்சுகிறது. தனியார் நிலச்சொத்துடமை கிராமங்களில் பழைய
உறவுகளை அழிப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு தீவிரப்படுத்தும் மில்லியன்கணக்கில் நிலமற்ற விவசாயிகள்
தோன்றுவர், செல்வந்தத்தட்டினர் கைகளில் நிலம் குவிந்துவிடும்.
நிலத்தை தனியார்மயமாக்குவது கிராமப்புறங்களில் ஸ்திரமற்றத்தன்மையை
தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் பல கிராமப்புற ஏழை மக்கள் நகரங்களை நோக்கி வேலை தேடி
நகர்கின்ற கட்டாயத்தை ஏற்படுத்திவிடும். ஏற்கனவே நகரங்களில் பெருகி வருகின்ற கிளர்ச்சிகளுக்கு
நகரப்பகுதிகளில் வேலையில்லாதிருப்போர் ஒரு பிரதான காரணியாகும். தற்போதைய மட்டத்தில் நகரப்
பகுதிகளில் வேலையில்லாதிருப்போர் எண்ணிக்கையை நிலைநாட்டுவதற்கு இந்த ஆண்டு அரசாங்கம், 9 மில்லியன் புதிய
வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று வென் விளக்கினார்.
தனியார்மயமாக்கப்பட்டதாலும், நவீன மயமாக்கப்பட்டதாலும் தொழிலாள வர்க்க
சமுதாயங்கள், சீரழிந்துவிட்ட இடங்களிலும் சீனாவின் வடகிழக்கு மாகாணங்களிலும், மற்றும் அரசாங்கத்திற்கு
சொந்தமான தொழிற்துறை ஆதிக்கம் செலுத்துகின்ற இதர பிராந்தியங்களிலும், "புதுதெம்பு" ஊட்ட வேண்டும் என்று
வென் கேட்டுக் கொண்டார். தனியார் முதலீட்டாளர்களுக்கான, மலிவுக்கூலிகளின் ஆதாரமாக அரசு ஊழியர்களில்
மில்லியன் கணக்கில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மறுவேலைவாய்ப்பிற்கான மானியங்களை அரசாங்கம்
உயர்த்தித்தர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
NPC பிரதிநிதிகளுக்கிடையில்
விவாதிக்கப்படுவதற்கான முக்கியமான தலைப்பாக சமூக சமத்துவமின்மைகள் இருந்தன. சீன தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பின் ஒரு முன்னாள் செயலர், லீ-யோங்காய், சீன யூத் டெய்லிக்கு பேட்டியளித்தபோது,
"ஒரு சிலர் கைகளில் மிக வேகமாக செல்வம் குவிந்து வருகின்ற உலக முன்னணி இடங்களில் ஒன்றாக இந்த நாடு
உருவாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். அவர் 2003-ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அப்போது
2,36,000 தனிநபர்கள் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்களை தங்கள் கரங்களில்
வைத்திருந்தனர் என்ற புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டினார். இந்த சூப்பர் பணக்கார தட்டினர் தங்களது சொந்த
சொத்தாக, வைத்திருப்பது, 969 பில்லியன் டாலர்கள்- 2003 சீனாவின்
GDP-யில் இது
சுமார் மூன்றில் இரண்டு பங்கிற்கு சமமாகும்.
170 மில்லியன் மக்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் காப்பீடு உள்ளது மற்றும் 130 மில்லியன்
மக்களுக்குதான் சுகாதார சேவை இழப்பீடு உள்ளது இது, மக்கள் தொகையில் பத்தில் ஒரு சதவீதம் தான்
என்பதை லீ சுட்டிக்காட்டினார். சீனாவில் உற்பத்தியில் மற்றும் சேவை தொழிற்துறைகளில் பணியாற்றுகின்ற 399
மில்லியன் ஊழியர்களில் பெரும்பாலோர் தற்போது புலம பெயர்ந்து வந்த கிராமப்புற தொழிலாளர்களாக உள்ளனர்,
சீன தரத்தின்படியே கூட அவர்களின் ஊதியமும் சலுகைகளும் படுமோசமானவை. "ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும்
இடையில் நிலவுகின்ற இடைவெளி பயங்கரத்தை ஊட்டுவதாக உள்ளது மற்றும் அதுதான் சமூக கிளர்ச்சிகளுக்கு காரணமாக
இருக்கிறது" என்று அவர் எச்சரித்தார்.
2004-ல் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் சுகாதார சேவைகளுக்காக
GDP-யில்
3 சதவீதம் மட்டுமே பெய்ஜிங் செலவிட்டது, ஒப்பிடும்பொழுது சமூக நலன்புரி சலுகைகள் இல்லாதது என்பதில்
இழிபுகழ்பெற்ற அமெரிக்காவில் 5 சதவீதம் GDP-யை
செலவிட்டிருக்கிறார்கள், சீன தொழிலாளர்களுக்கு அவசரமாக தேவைப்படும் நிதியுதவியை வழங்குவதற்காக
GDP-யில்
4-5 சதவீதத்திற்கு அரசாங்கம் இந்ந செலவினங்களை உயர்த்த வேண்டும் என்று லீ வலியுறுத்திக்
கேட்டுக்கொண்டார்.
மற்றொரு பிரதிநிதியான ஷெங் கொங்செங், தற்போதுள்ள பொருளாதார
கட்டமைப்பு தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் வணிக உரிமையாளர்களுக்கு பயன் அளிப்பதாகவும் உள்ளது, என்று
குறிப்பிட்டார். குவாங்டாங் மாகாணம், --வேகமாக வளர்ந்து வருகின்ற ஏற்றுமதி மண்டலம், அங்கு, ஒரு
தசாப்தத்தில் கிராமப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 60 யுவான்
அளவிற்குதான் உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். பணவீக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், அவர்களது
உண்மையான ஊதியம் வீழ்ச்சியடைந்துவிட்டது.
சமூக பதட்டங்கள் தீவிரமடைந்து வருவது, தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு அரசியல்
வெடிப்புக்கு வழிவகுக்கும் என்ற ஆழமான கவலை சீனாவின் ஆளும் செல்வந்தத்தட்டினரிடம் நிலவுவதை, இந்த விவாதங்கள்
எதிரொலிக்கின்றன. என்றாலும், அதே நேரத்தில் சீனாவில் சர்வதேச முதலீடுகள் முதலீடு செய்ததன் காரணங்களால்
அதிருப்தி உருவாக்கப்பட்டது---குறைந்த ஊதியங்கள், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் உள்கட்டமைப்பில்
அரசாங்க முதலீடு, சமூக சேவைகளைவிட வணிக ஊக்குவிப்பு என்பதை பெய்ஜிங் நன்றாகவே அறிந்திருக்கிறதுதான்.
மார்ச் 8-ல் பைனான்சியல் டைம்ஸ் தனது தலையங்கத்தில், பெய்ஜிங்
வழங்குகின்ற கிராமப்புற மானியங்கள், "புத்திசாலித்தனமானவை" என்றாலும் அவை, ஒரு நீண்டகால கொள்கையாக
இருக்கக் கூடாது என்று அறிவித்தது. "எப்படியோ 450 மில்லியன் மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தி வருமான
ஏற்றதாழ்வை, சமாளித்துவிட முடியும், என்று கருதுவதை
[சீன அரசாங்கம்]
கைவிடுவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். சீனாவில் பயிரிடத்தக்க நிலம், அவ்வளவு
பேரையும் தாங்குகின்ற அளவிற்கு உள்ளவை அல்ல, மிகக்குறைந்த அளவிற்குதான் நிலம் உள்ளது. பாரம்பரிய பயிர்களுக்கு
மானியம் வழங்குவது, மிகப்பெரும் அளவிற்கு, திறமைக்குறைவான நடவடிக்கையாகும். கிராமப்புறங்களில்
வாழ்கின்றவர்கள், நகரங்களில், நல்ல ஊதியம் தருகின்ற வேலைகளை தேடினாலும், அல்லது வேலைகள், அவர்களை
நோக்கி வந்தாலும், அவர்களது, எதிர்காலம், பெரும்பாலும், விவசாயத்திற்கு வெளியில்தான் உள்ளது. அரசாங்கக்
கொள்கை, என்பது இந்த மாற்றத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, அதை, தடுக்க முயலக்கூடாது."
இந்த தலையங்கத்தின் கவலை மக்கள் மீதல்ல ஆனால், நகரங்களில் உள்ள கடும் உழைப்பு
தொழிற்கூடங்களுக்கு மலிவான கிராமப்புற தொழிலாளிகளின் உழைப்பின் அளிப்பை குறைக்கின்ற வகையில் பெய்ஜிங்கின்
கொள்கைகள் அமைந்துவிடக்கூடாது, என்பதை உறுதி செய்து கொள்வதற்குத்தான். அதைப்பற்றி,
Financial Times,
இதர நாடுகளில் நடப்பதைப்போல், சந்தைச் செயல்பாடும், பூகோள முதலீடுகள்
பாய்வதும், சீனாவில் கிராமப்புற வறுமையையும் துன்பத்தையும், தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது மில்லியன் கணக்கான
மக்களை நிலத்திலிருந்து விரட்டிக்கொண்டிருக்கிறது, அதுபற்றி அளவிற்கு அதிகமாக கவலைப்படவேண்டியதில்லை
என்றது. கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வெடித்துச் சிதறும் சமூக நிலைமைகள் உருவாகிக்கொண்டிருப்பதை,
தடுத்து நிறுத்துவதற்கு NPCTM
கடைசியாக அறிவித்துள்ள, நடவடிக்கைகள் எதையும் செய்யாது.
Top of page |