World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US pushes for larger UN intervention in western Sudan

மேற்கு சூடானில் ஐ. நா. தலையீட்டை அதிகரிப்பதற்கு அமெரிக்கா அழுத்தம்

By Brian Smith and Chris Talbot
10 March 2006

Back to screen version

ஐக்கிய நாடுகள் செயலாளர் கோபி அன்னானுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பெப்ரவரியில் இரகசியமாக கூட்டம் நடத்திய சில நாட்களுக்கு பின்னர் அவர் மேற்கு சூடானிலுள்ள, டார்புர் பிராந்தியத்தில் துருப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். துருப்புக்கள் ''ஐக்கிய நாடுகளின் கீழ்'' அநேகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த தலையீட்டை திட்டமிடுவதிலும் உதவிசெய்வதிலும் நேட்டோ ஒரு பெரும் பங்கை வகிக்க அழைப்புவிட்டார்.

சென்ற ஆண்டு டார்புர் பற்றி சிறிய கருத்துக்களை வெளியிட்ட பின்னர் அமெரிக்க நிர்வாகம் இப்போது, சூடானில் தனது கொள்கையை மிகவும் மூர்க்கத்தனத்தோடு பின்தொடர்வதற்கு தற்போது முடிவு செய்திருக்கிறது என்பதை அவரது அறிக்கைகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

மிக அண்மைக்காலம் வரை டார்புர் பிராந்தியத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தின் (AU) அமைதிகாப்பு பணியை ஆதரிப்பது தான் அமெரிக்காவின் அதிகாரபூர்வமான கொள்கையாக இருந்தது. அவரது கருத்தில் ஆபிரிக்க ஒன்றியம் பாதுகாப்பு வழங்குவதற்கு தவறிவிட்டது என்று புஷ் குறிப்பிட்டார். "முயற்சி மேதகமை வாய்ந்தது, ஆனால் அது அதன் குறிக்கோளை நிறைவேற்றவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

டார்புரில் குடிமக்கள் மீது தாக்குதல்கள் நீடித்துக் கொண்டிருப்பதால் அங்கு மனிதநேய நிலவரம் மோசமடைந்து வருகிறது. பெப்ரவரி 2003 இல் தற்போதைய மோதல்கள் தொடங்கிய பின்னர் வன்முறை நோய் அல்லது பட்டினியிலிருந்து 180,000 மக்கள் இறந்துவிட்டதாக ஐ.நா கூறுகிறது. தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 2 மில்லியன் மக்கள் ஐ.நா வினதும் அரசு சாரா அமைப்புகளிலிருந்து உணவு உதவியை சார்ந்திருக்கின்றனர்.

டார்புரிலிருந்து குடிப்படைகள் எல்லை தாண்டி பக்கத்து நாடான சாட்டிற்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்துவது அதிகரித்திருப்பதுடன், பயிர்களையும் கிராமங்களையும் தாக்கி, மாடுகளையும் கால்நடைகளையும் சூறையாடி வருகின்றனர். சாட்டும் சூடானும், அரசாங்கத்திற்கு எதிரான குடிப்படைகளை ஆதரித்து வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் எல்லை தாண்டிய பழங்குடி குழுக்கழுக்கிடையிலான இணைப்பு டார்புர் மோதல்கள் சர்வதேசமயமாவதற்கான ஒரு உண்மையான ஆபத்து உள்ளதுடன் பக்கத்து நாடுகளுக்கிடையில் பகிரங்க மோதல்களுக்கான ஒரு சாத்தியக்கூறு உண்டு.

மேற்கு சூடானில் புஷ் நிர்வாகத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, என்றாலும் புதியதாக வந்த நலன்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நலன்களோடு பின்னிப்பிணைந்து உள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக கவலைகள் வளர்ந்திருக்கின்றன. பல ஆண்டுகளாகவே, சூடானிலிருந்து எண்ணெய்யை முக்கியமாக பெற்றுக்கொண்டு வந்த சீனா தற்போது முதலீட்டை அதிகரித்திருப்பதுடன் கார்டூமுடன் தனது அரசியல் உறவுகளை மேம்படுத்தி வருகிறது.

சீனா தற்போது முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுவதற்கு காரணம், "பொருளாதார மட்டத்தில் மட்டுமல்ல, அரசியல் மட்டத்திலும்" என்று ஒரு சூடான் அதிகாரி தெரிவித்ததாக அண்மையில் பினான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையின்படி, "போர் விமானங்கள் உட்பட சீனா ஆயுத விற்பனைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. சூடானில் சீன ஆயுதங்களும் தளவாடங்களும் தயாரிக்கப்படுவது டார்புரில் குடிப்படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து ஒரு ஐ.நா தடையை அமுலாக்குவதில் சிக்கலுக்குள்ளாகும். சீனாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களும் வானொலிகளும் எல்லையை தாண்டி, பிரான்சு ஒரு படைப்பிரிவை வைத்திருக்கும் சாட் நாட்டில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு கிளர்ச்சிக்காரர்கள் சூடான் ஆதரவோடு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது."

சூடான் அரசாங்கம் டார்புரிலும் சாட்டிலும் தலையிட்டிருப்பதை மேற்கு நாடுகள் விமர்சிப்பதை புறக்கணிப்பதில் அதற்கு துணிச்சல் வளர்ந்திருப்பதற்கு இதுதான் அரசியல் பின்னணியாகும், மற்றும் தெற்கு சூடானுக்கான விரிவான சமாதான உடன்படிக்கையிலிருந்து (CPA) அது பின்வாங்குவதற்கும் இதுதான் மிகவும் அடிப்படையாகும்.

சூடான் அரசாங்கத்திற்கும் தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் (SPLM) இடையில் அமெரிக்கா தரகராக இருந்து உருவாக்கிய ஒப்பந்தம் 2005 ஜனவரியில் அந்த நாட்டின் 21 ஆண்டு உள்நாட்டுப்போருக்கு முற்று புள்ளி வைத்தது. குறிப்பாக, நீண்டகால SPLM தலைவரான ஜோன் கராங் சென்ற ஆண்டு மடிந்ததிலிருந்து விரிவான சமாதான உடன்படிக்கையின் பேரம் மிகப்பெருமளவிற்கு ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

அந்த பேரத்தின் ஒரு முக்கியமான பகுதி சூடானின் எண்ணெய் செல்வத்தை தென் பகுதியுடன் பகிர்ந்து கொள்வதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு திறந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுமாகும். சூடானின் எண்ணெய் இருப்புகள் 660 மில்லியன் முதல் 1.2 பில்லியன் பீப்பாய்கள் வரை மதிப்பிடப்பட்டிருக்கிறது. Africa Confidential தகவலின்படி, கார்டூம் ஆட்சி எண்ணெய் வருவாய்கள், தென்பகுதிக்கு போவதை தடுத்திருக்கிறது மற்றும் தெற்குப்பகுதியில் அரசாங்க ஆதரவு குடிப்படைகள் இயங்குவதை கலைத்துவிடவும் மறுத்துள்ளது---- இவை விரிவான சமாதான உடன்படிக்கையின் முக்கிய பகுதியாகும்.

அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் சூடான் தொடர்பாக பெப்ரவரி தொடக்கத்தில் தெளிவாயிற்று. தற்போது செயல்பட்டு வரும் AMIS அமைதிகாப்புப் படையை, ஒரு ஐ. நா கட்டுப்பாட்டு பணியாக மாற்றுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையினால் கொள்கையளவில் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதில் அப்போது வாஷிங்டனும் லண்டனும் வெற்றி பெற்றது.

விரிவான சமாதான உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கு 2004 நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட AMIS இனை தற்போது செயல்பட்டு வருகின்ற UN படையான (UNMIS) இணைக்கப்படுவதற்கு பாதுகாப்பு சபை கருதியது. டார்புருக்கான ஐநாவின் பணிகளை முடிப்பதற்கு 4 ஆண்டுகளும் 20,000 வரை போர்வீரர்களும் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது AMIS இல் 7,000 அமைதிகாப்பு வீரர்கள் உள்ளனர்.

கோபி அன்னானை புஷ் சந்தித்தது இந்த நடைமுறையை விரைவுப்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான் என்று தோன்றுகிறது. அன்னனின் தகவலின்படி ஐ.நா படை, ''அதிக மிகவும் பலமுள்ள தரைப்படையாக '' இருக்கவேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது. சூடான் துருப்புக்கள் மற்றும் கிளர்ச்சி படைகளோடு மோதிக்கொள்கின்ற நிலவரத்திற்கு இட்டுச் செல்லும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் கடமை ஆபிரிக்க ஒன்றிய படைகளுக்கு நடப்பு விதியில் உள்ளது.

பெப்ரவரியில் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதர் ஜோன் போல்ட்டன் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஒரு மாத அமெரிக்க தலைவர் பதவியை பயன்படுத்தி சூடான் தொடர்பாக கவலையை எழுப்பினார் மற்றும் எதிர்காலத்தில் உடனடியாக ஐ. நா. அமைதிகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தினார். பிரிட்டன் உட்பட இதர பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் அனைவரும் அவரை எதிர்த்தனர். ஒரு ஐ.நா. படைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆபிரிக்க யூனியன் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்கலாம் என்றும் மேலும் இராஜதந்திர ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அது ஆலோசனை கூறியது. ஆபிரிக்க ஒன்றியம் அந்த மாற்றத்திற்கு சம்மதிக்கும் என்று அது எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சூடான் அரசாங்கம் அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தாமதம் ஏற்படக்கூடும்.

அந்த பிராந்தியத்தில் இராணுவ மோதல் தொடர்வதில் தங்கள் பங்கிற்காக முக்கிய தனிநபர்களுக்கு எதிராக தடை விதிப்பதற்கு பாதுகாப்பு சபைகளில் ஒப்புதலை கொண்டு வருவதற்கு போல்டன் முயற்சித்தார். சூடான் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய தகவல்துறை தலைவர் உட்பட குறிவைப்பதற்கு தனிநபர்களின் பட்டியலை வரைவதற்கு நிபுணர்கள் குழு அமைத்ததுடன், மற்றும் அத்தகைய தடைகளை விதிப்பதற்கு ஐ.நா. சென்ற ஆண்டு சம்மதித்தது. ஆனால் அந்தக் குழுவின் முன்மொழிவுகளை சீனா ரஷ்யா மற்றும் கட்டார் போன்றவை புறக்கணித்துவிட்டன.

AMIS இற்கான போக்குவரத்து வழங்குவதில் நேட்டோ ஏற்கனவே சம்மந்தப்பட்டிருக்கிறது ஆனால் தற்போது அதன் பங்களிப்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. வெளியுறவு அமைச்சரான கொண்டலிசா ரைசின் துணை அதிகாரியான ரொபேர்ட் சோயலிக் "ஐ. நா. தனது படைகளை தயாரிக்கின்றவரை நேட்டோ தேவைப்படுகிறது" என்று கூறினார் ஏனென்றால் ஐ. நா. படை செயலாற்ற தொடங்குவதற்கு ஓராண்டு ஆகும்.

நேட்டோவின் இவ்வாறான பங்கு அனைத்து மேற்கு நாடுகளாலும் ஆதரிக்கப்படவில்லை. ஒரு ஆபிரிக்க நாட்டில் நடவடிக்கை எடுப்பதற்கு நேட்டோவை விட ஐரோப்பிய ஒன்றிய (EU) படைகள் சிறப்பானவை எனவே, ஒரு நேட்டோ படைப்பிரிவு, பணி, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் பங்களிப்பை குறைத்துவிடும் மற்றும் ஒரு முக்கிய மற்றும் உணர்வுபூர்வமான பகுதியில் தமது கண்காணிப்பை குறைந்துவிடும் என்று பிரெஞ்சு தூதர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள்

டார்புரில் "இனக்கொலை" நடந்து வருவதாக அமெரிக்க நிர்வாகம் பல மாதங்களாக பெரும்பாலும் குறிப்பிடவேயில்லை. 2004 இல் சூடான் அரசாங்கத்தின் மீது பரவலான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நேரத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சரான கொலின் பவல் அந்தச் சொல்லை பயன்படுத்தினார். சர்வதேச சட்டத்தின்படி இனக்கொலை நடந்திருக்குமானால் ஐ.நா தலையிட்டிருக்கவேண்டும்.

சென்ற ஆண்டு BBC இன் ''Panorama'' நிகழ்ச்சியில் ஒரு பேட்டியளித்த அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா தூதர் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் மதவாத வலதுசாரிகளை திருப்திபடுத்துவதற்காக கொலின் பவல் இனக்கொலை பிரகடனத்தை வெளியிட்டார் என்பதை ஒப்புக்கொண்டார். உள்நாட்டு காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், புஷ் நிர்வாகம், கார்டூம் அரசாங்கம் விரிவான சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு அழுத்தம் கொடுக்கவும் அச்சுறுத்தவும் இனக்கொலை என்ற முத்திரையை பயன்படுத்த முயன்றது.

அதற்குப் பின்னர் குடி மக்கள் பலியாவது தொடர்பான பாசாங்குத்தன்மை கைவிடப்பட்டது மற்றும் பயனற்ற ஆபிரிக்க ஒன்றியப்படையினால் டார்புரை கண்காணிக்கப்படுவதற்கு அமெரிக்க நிர்வாகம் சந்தோசமடைகிறது. ஆபிரிக்க ஒன்றியம் நன்கொடை தரும் அரசுகளை நிதிக்காக நம்பியிருந்தது மற்றும் அந்தப்படை செயல்பட்டு வந்த அதன் குறுகிய காலத்தில், போதுமான நிதியில்லாமல் அதன் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. தற்போது செலவில் மூன்றில் இருபங்கை ஐரோப்பிய ஒன்றியம் செலுத்துகிறது அதே நேரத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மசோதாவில், அமெரிக்கா தனது பங்கை வெட்டியது.

2005 ஏப்ரலில் அமெரிக்க நிர்வாகம் பவலின் இனக்கொலை கருத்துகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. ஜோயலிக் பதிலாக ஐ.நா "மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற சொல்லை பயன்படுத்தினார். ஜன்ஜவீத் குடிப்படைகள் என்றழைக்கப்படுபவை டார்புரில் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக, கூறப்படுவது குறித்து கார்டூமின் நிலைப்பாட்டை ஆதரிப்பதற்கான அம்சத்தை ஜோயலிக் உருவாக்கினார். "பழங்குடியினரின் சண்டைகள் எவரது கட்டுப்பாட்டின் கீழும் இல்லாமல் இருக்கக் கூடும்," என்று அவர் குறிப்பிட்டார் இது சூடான் அரசாங்கம், இந்தக் குடிப்படைகளை ஆதரித்து வருகிறது என்பதற்கு கிடைத்துள்ள ஏராளமான சாட்சியத்திற்கு முரண்பாடானதாகும்.

இதன் பின்னணியில், அமெரிக்க நிர்வாகம் சூடானின் இரகசிய சேவையான முக்காபரத்துடன் (Mukhabarat) நல்ல தொடர்புகளை செய்து வருகின்றது. அது கிழக்கு ஆபிரிக்கா தொடர்பான விரிவான புலனாய்வு தகவல்களை CIA இற்கு வழங்கி வருகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் CIA முக்காபரத்துடன் 9/11-க்கு முன்னரே நல்லுறவு கொண்டிருப்பதாகவும் (இந்த உறவு அதற்குப்பின்னர், மிக ஆழமாக வளர்ந்துவிட்டது) மற்றும் 2001 நவம்பர் முதல் கார்டூமில் CIA இன் ஒரு செயல்படும் அலுவலகம் உள்ளது. முக்காபரத் சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்து அவர்களை CIA உடன் புலன்விசாரணைக்காக ஒப்படைத்தது, மற்றும் சோமாலியா உட்பட இதர நாடுகளிலும், CIA சார்பில் உளவு வேலைகளை செய்தது.

புலனாய்வு ஒத்துழைப்பிற்கு அப்பாலும் அமெரிக்கா சென்று கொண்டிருப்பதாக Africa Confidential நம்புகிறது, மற்றும் கார்டூமில் ஒரு பெரிய புதிய தூதரகத்தை விரும்புகிறது---- வடக்கு ஆபிரிக்காவில் நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய தளமாக செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர் CIA சூடானில் நிலைநாட்டி வந்த மிகப்பெரிய அலுவலகமான "listening-post" மூலம் இது புத்துயிரூட்டப்படுகிறது.

தற்போது, வாஷிங்டன் சூடான் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை முடுக்கி விடுவதற்கு மீண்டும் ஒரு முறை முயன்று வருகிறது. அண்மையில், மேற்கு சூடான் தொடர்பாக ''இனக்கொலை'' என்பதை பயன்படுத்தி புத்துயிர் கொடுத்திருக்கிறார் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, தனது சிறப்பு இராணுவ வரவுசெலவுதிட்ட கோரிக்கையில் ஒரு பகுதியாக டார்புருக்கு 500 மில்லியன் டாலர்களும் முன்மொழிவு செய்திருக்கிறார்.

சூடானின் பிரதான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நான்கு பூகோள அரசியல் துணையமைப்புகளான செங்கடல், மேக்ரப், மத்திய ஆப்பிரிக்கா மற்றும் ஆபிரிக்க முனை ஆகியவற்றுடன் இணைக்கும் மூலோபாய நிலையின் காரணமாகவும் மற்றும் அதன் எண்ணெய் கிணறுகளையும், கருதிப்பார்க்கும்போது, அந்த பிராந்தியத்தில் பெருகிக் கொண்டுள்ள ஸ்திரமற்ற தன்மையை சீனா தனக்கு சாதகமாக்கிக் கொள்வதை, அமெரிக்கா பொறுத்துக்கொண்டு அனுமதிக்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved