World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French demonstrators: "What we say is ignored, they don't give a damn about us

பிரெஞ்சு ஆர்ப்பாட்டக்காரர்கள்: "நாங்கள் கூறுவது புறக்கணிக்கப்படுகிறது, அவர்கள் எங்களுக்கு சபிக்க முடியாது"

By a WSWS reporting team
20 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

ஒரு முதலாளி இளவயதுத் தொழிலாளர்களை எந்தக் காரணமும் காட்டாமல் வேலையில் இருந்து நீக்கலாம் என்று அனுமதிக்கும், பிரெஞ்சு அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தச் சட்டத்திற்கு" (CEP) எதிராக கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் உரையாடினர். (See "பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்")

இந்த எதிர்ப்புப் போராட்டம் தெருக்களில் ஒரு விழாக் கோலத்தை கொண்டுவந்தது. தேசிய நடவடிக்கை தினத்திற்கு முன்பாக எதிர்ப்பு அணியில் ஈடுபட்ட பல உயர்நிலைப்பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் பல நாட்களாக வேலைநிறுத்தத்திலுள்ளனர்; சிலர் சில வாரங்களாக ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை அன்று, அவர்கள் தொழிற்சங்கவாதிகள் மற்றும் பிற தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கைக்குழந்தைகளுடனும் சிறுவர் சிறுமியருடனும் வந்த தாய்மார்கள் உள்பட, பல குடும்பங்களுடன் சேர்ந்து கொள்ளப்பட்டனர்.

பெரும்பாலானவர்கள் அரசாங்கம் அடிபணியாது என்று கருதினாலும்கூட, ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடுவதில் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர். CPE க்கு மக்கள் எதிர்ப்பிற்குப் பின்னால் அரசாங்கத்தின் பொருளாதார, சமூக சீர்திருத்தங்களில் சமுதாயத்திற்கு உரிய இடம் இல்லை என்ற பொது உணர்வு அடிப்படையாக உள்ளது.

WSWS உடன் பேசிய எதிர்ப்பாளர்களில் சிலர்கூட எதிர்பார்க்கப்படும் வருங்கால பிரெஞ்சு இடது அரசாங்கம் --சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், பசுமைக் கட்சிகளை கொண்டது-- UMP, பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய தற்போதைய அரசாங்கத்தின் வலதுசாரி திட்டத்தில் இருந்து எந்தவகையான உண்மையான முறிவையும் கொள்ளும் என்று நினைக்கவில்லை. 1997ல் இருந்து 2002 வரை பதவியில் இருந்த, லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான "பன்முக இடது" கூட்டணி அரசாங்கம் தொடர்ச்சியான பல சுதந்திர சந்தை சீர்திருத்த நடவடிக்கைகளை சுமத்தியது; அவற்றில் தனியார் மயங்கள் இருந்ததுடன் சமூகச் செலவீனக் குறைப்புக்களும் இருந்தன. இந்த அனுபவம் சோசலிஸ்ட் கட்சியை இழிவு படுத்திவிட்டது; சனிக்கிழமை எதிர்ப்பில் பங்கு பெற்ற பல ஆர்ப்பாட்டக்காரர்களும் WSWS இடம் மற்றொரு சமூக ஜனநாயக அரசாங்கம் "இன்னும் மோசமாகத்தான்" செயல்படும் என்று கூறினர்.

"தாங்கள் வறுமையில் வாடப்போகிறோம் என்பதால் மக்கள் வருங்காலம் பற்றிப் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்." என்று WSWS இடம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியையான Ann-Claire கூறினார். "இப்பொழுது பாதுகாப்பற்ற தன்மைதான் அதிகம் உள்ளது; வேலைப் போக்கு உடைய செயற் திட்டங்களில் மாணவர்களை கவனத்துடன் ஈடுபட வைப்பது மிகக் கடினமாக உள்ளது. ஒரு ஆசிரியை என்னும் முறையில் நான் மாணவர்களுக்கு எந்த வேலை சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை சீராக இழிவிற்கு உட்பட்டுவிட்டது. இந்த அரசாங்கம் ஒரு புதிய-தாராளவாத திட்டத்தை கொண்டுள்ளது; அது மிகவும் கடினமானது. அரசாங்கம் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் என நான் நினைக்கவில்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

"இப்பொழுது நீங்கள் எல்லா இடங்களிலும் பாதுகாப்பற்ற தன்மையைத்தான் காண்கிறீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் நிறைய கடினமான போராட்டங்களை நடத்தியுள்ளோம் -- உதாரணமாக, (2003ல்) நாங்கள் தோற்றுவிட்ட ஓய்வூதியத்திற்கான போராட்டத்தை கூறலாம். அதற்கு பின்னர் சிறிது காலம் பின்வாங்கியிருந்தோம். கல்வி என்பது தனியார்மயமாகிக் கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி இன்னும் நனவோடு, கீழிருந்து வரும் அழுத்தங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். ஆனால் ஓய்வூதிய பிரச்சினையிலும் எங்களை அவர்கள் ஆதரித்து நிற்கவில்லை."

Ann-Claire ஐ ஈராக் போர் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று WSWS கேட்டது. CPE-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கத் தலைமையில் நடந்த படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு தினத்தோடு இணைந்திருந்தாலும், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவருமே போர்ப் பிரச்சினை பற்றி ஏதும் கூறவில்லை.

"ஈராக் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன என்பதை நான் அறிவேன்" என்று Ann-Claire கூறினார். "அது எண்ணெயை பற்றியது; அது புதிய தாராளவாத கொள்கையுடன் பிணைந்துள்ளது. எனவேதான் மக்கள் போருக்கு எதிராகவும், தாராளவாத கொள்கை தாக்குதலுக்கு எதிராகவும் திரண்டு வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போருக்கு எதிராக தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதே மக்கள்தான் இன்று இவ்வார்ப்பாட்டத்தையும் நடத்துகின்றனர். பல போராட்டங்களையும் ஒன்றாக இணைக்கும் இயக்கம் ஒன்று தேவை."

Astrid Fromentin கூறினார்: "மற்றவர்களை போலவே நாங்களும் CPE யினால் பாதிக்கப்பட்டுள்ளோம். இளம் சிறார்களுடன் வேலை செய்வதற்கான பயிற்சியை நான் பெற்றுவருகிறேன். ஒரு வேலை கிடைப்பது பற்றி நான் கவலைப்படுகிறேன்; அதன்பின் எங்கு வசிப்பது, எப்படி என் செலவுகளைச் சமாளிப்பது என்ற கவலைகள் வருகின்றன. அரசாங்கம் ஏற்குமா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் எங்களால் முடிந்ததை அதைக் கட்டாயப்படுத்த நாங்கள் செய்வோம். அரசாங்கம் பின்வாங்கும் என்று நினைக்கிறோம்; ஆனால் அது உறுதியாகக் கூறப்படமுடியாது. வெற்றி பெறுவதற்கு என்ன தேவை என்று நான் கூறமுடியாது; ஆனால் எங்களால் இயன்றவற்றை நாங்கள் செய்வோம்."

வில்ப்பன் அரசாங்கம் அகற்றப்பட்டால் மாற்றீடு எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டதற்கு Astrid விடையிறுத்தார்: "அது ஒரு பெரிய கேள்வி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் முடிவுசெய்யப்படும். இப்பொழுது நாங்கள் மையப்படுத்தியிருப்பது CPE பிரச்சினை ஆகும். இந்த அரசாங்கம் அகற்றப்பட்டால், அது நல்லதுதான்; ஆனால் அது நடக்குமா என்று நான் கூறவியலாது."

Maeva Cornet, WSWS இடம் கூறியதாவது: "விளம்பரத் துறையில் நான் ஒரு வேலை தேடி வருகிறேன். அப்பிரிவில் வேலைப்பாதுகாப்பின்மை அதிகமாகும். ஆர்ப்பாட்டத்தில் சிலர் வெள்ளை முகமூடி அணிந்து உள்ளனர் (அவர்கள் Generation Precaires அமைப்பில் இருந்து வந்தவர்கள்); அவர்கள் வேலை அனுபவமற்ற மக்களை சுரண்டுவதை எதிர்த்துப் போரிட விரும்புகின்றனர். ஊதியம் இல்லா வேலை அனுபவம் பற்றி ஏதேனும் செய்வோம் என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இதுவரை ஒன்றும் செய்யவில்லை. வேலைப்பாதுகாப்பே இல்லாமற் செய்வதன் மூலம் வேலையின்மை எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரும்புகிறது. ஆறு மாதம் வேலை அனுபவத்திற்காக நான் மிகக் குறைவான ஊதியத்தில் வேலை பார்த்தேன். இப்பொழுது ஒரு வேலை தேடிவருகிறேன். அரசாங்கம் பின்வாங்காது என்றுதான் நான் நினைக்கிறேன்; வில்ப்பன் பிடிவாதக்காரர் வெற்றிபெறுவதற்கு நம்முடைய மே '68 க்குக் காத்திருப்போம்."

கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கத்தின் உறுப்பினரான Bruno ஆர்ப்பாட்டத்தில் தன்னுடைய நண்பர்களான Marianne, Marjorie, Chris ஆகியோருடன் கலந்து கொண்டார். "நாங்கள் இச் சட்டத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் கூறினார். "நாங்கள் வெற்றி பெற வேண்டும்; இல்லாவிடில் நிலைம மோசமாகும். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்; அவர்கள் எங்களுக்கு சபிக்கமுடியாது; எனவேதான் நாங்கள் தெருக்களுக்கு வந்துள்ளோம்; இங்குதான் வன்முறை வெடிக்கும். அவர்கள் கேட்பதில்லை; நாங்கள் தெருவில் வந்தாலும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. CPE இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை மேலும் அதிகப்படுத்தும். எங்களுக்கு இருக்க இடம் கிடைக்காது; கடனும் கிடைக்காது; ஏனெனில் எக்கணமும் முதல் இரண்டாண்டு காலத்தில் நாங்கள் வேலையில் இருந்து வெளியே அனுப்பப்படலாம். அவர்கள் இணங்கும் வரை நாங்கள் போராடுவோம்; அதற்கு முன்னால் போராட்டத்தை கைவிடமாட்டோம்."

சோசலிஸ்ட் கட்சி, வில்ப்பன் அரசாங்கத்தை விட சிறந்ததாக இருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, புரூனோ விடையிறுத்ததாவது: "மக்கள் எளிதில் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர் --- ஜோஸ்பன் அரசாங்கம் ஒன்றும் சிறந்து விளங்கிவிடவில்லை. சோசலிஸ்ட் கட்சி அதைவிட மட்டம் என்று நாம் கூறலாம். இதற்குப் பின் எப்படி இருக்கும்? உறுதியாகக் கூறமுடியாது. நாம் ஒரு சிறப்புச் சூழ்நிலையில் உள்ளோம். நிறைய மக்கள் உள்ளனர்; எங்கள் இயக்கத்தில் கூட எப்படி முடிவெடுப்பது என்பது பற்றி உடன்பாடு இல்லை. இது 2007ல் முடிவெடுக்கப்படும்."

ஐரோப்பா அளவிலான பரந்த இயக்கம் ஒன்றைக் கட்டியமைக்க வேண்டும் என்பது உண்மைதான்; ஏனெனில் நாம் ஐரோப்பிய முறையில் உள்ளோம். ஒரு நாட்டில் ஏற்படும் இயக்கம் அதேபோன்ற இயக்கங்களை மற்ற நாடுகளிலும் ஏற்படுத்துகிறது. இந்த நெருப்பை எரிந்து கொண்டிருக்குமாறு வைத்திருக்கவேண்டும்; அப்பொழுதுதான் சங்கிலி போன்ற விளைவுகள் ஏற்படும்; அதன் பின் ஒரு வெடிப்பு ஏற்படும். ஐரோப்பியத் தரத்தில் அதை வைக்க வேண்டும். அது அனைத்துக் கட்சிகளையும் கட்டாயம் ஒன்றாகக் கொண்டுவரவேண்டும்; அது மிகவும் கடினமாகும்."

Guadeloupe வில் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் படிக்கும் Jeremy Celoc ஆர்ப்பாட்டத்திற்கு தன்னுடைய நண்பர் A.. Konde உடன் வந்திருந்தார். "CPE குறிப்பிட்ட வகையில் தீமை கொடுக்கும்; ஏனெனில் வருங்காலம் பற்றிய எவ்விதப் பாதுகாப்பையும் அது அழிக்கிறது. அப்பொழுது உங்கள் வேலை, நிலைமை பற்றியே நிலையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளுகிறீர்கள். இந்த எதிர்ப்புக்கள் மிக முக்கியமானவை; ஏனெனில் அரசாங்கத்தை நாங்கள் அதன் முடிவிற்கு எதிராக இருக்கிறோம் என்பதை இது உணர வைக்கும். ஆனால் வில்ப்பன் இணங்குவார் என்று நான் நினைக்கவில்லை; அப்படி அவர் விட்டுக்கொடுத்தாலும், இன்னும் அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக, நாங்களும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. உண்மையில் எப்படி இதற்கு தீர்வு காண்பது என்று எங்களுக்கு தெரியவில்லை --அடிப்படையில் வெளியே வருவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றார் அவர்.

"இது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்பதும் உண்மையே; ஒரு ஐரோப்பிய எதிர்ப்பு இயக்கம் வளர்ச்சி பெற்றால் மிகவும் நன்றாக இருக்கும்; ஆனால் அது நடக்கவில்லை; ஏனெனில் பல நாடுகளிலும் நிலைமை வெவ்வேறு விதமாக உள்ளது. மாறாக, ஒரு சர்வதேசப் போராட்டம் என்பது நம்மை பெரும் வலுவாக ஆக்கும்; ஏனெனில் ஒருவருக்கு ஒருவர் மோதும் ஆபத்து எப்பொழுதும் இருக்கிறது."

See Also:

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page