ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Hundreds of youth arrested following anti-government
protests
பிரான்ஸ்: அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து நூற்றுக்கணக்கான
இளைஞர்கள் கைது
By Rick Kelly and Antoine Lerougetel
18 March 2006
Use this version
to print | Send this link by email
| Email the author |
Featured
Articles
பிரான்சில், இளந்தொழிலாளர்களின் நிலைமைகள் பற்றிய அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு
எதிராக நடந்த மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்களை அடுத்து, வியாழனன்று இரவு 272 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குறைந்தது 18 ஆர்ப்பாட்டக்கரர்களும் பல போலீசாரும் மோதல்களில் காயமுற்றனர். பெரும்பாலான கைதுகளும்
காயங்களும் பாரிசில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டன; அங்கு 120,000 உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்
கழக மாணவர்கள் முதலாளிகள், முதல் இரண்டு ஆண்டு வேலைக்காலத்தில் எவ்வித காரணமும் இன்றி
தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய அனுமதிக்கும் CPE
க்கு (முதல் வேலை ஒப்பந்தத்திற்கு) எதிராக அணிவகுத்து நின்றனர்.
ஒரு
சிறு அளவு முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரக்கள் கற்களையும் மற்றவற்றையும் எறிந்த பின்,
187 இளைஞர்களை போலீசார் தலைநகரில் கைது செய்தனர்.
கலவரத் தடுப்பு போலீசார் கண்ணீர்ப்புகை குண்டையும், நீர்ப்பீய்ச்சல்களையும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பிரிவினருக்கு
எதிராக பயன்படுத்தினர். ஒரு சிறு கடையும், ஏராளமான வாகனங்களும் மோதல்களின் போது தீக்கிரையாக்கப்பட்டன,
சில கடைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆர்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையிலான
மற்ற மோதல்கள் சோர்போன் மற்றும் இன்னும் பல புறநகர்ப்பகுதிகளிலும் நிகழ்ந்தன.
Nouvel Observateur
இடம் போலீஸ் தரப்பினர் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் வெவ்வேறு புதிய பாசிச குழுக்களில் உள்ளவர்கள்
என்றும் இதில் Front National de la
Jeunesse (FNJ), என்ற
Jean Marie Le Pen
இன் தேசிய முன்னணியின் இளைஞர் இயக்கமும் அடங்கியுள்ளது என்றும் கூறினர்.
FNJ இன் தலைவரான
Alexandre Ayroulet
காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஒருவராவார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதில்
பாசிஸ்ட்டுக்கள் இருந்தனர்; பின்னர் அவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
பல பல்கலைக் கழகங்களிலும் நிலைமை பதட்டம் தரக்கூடிய நிலையில்தான் உள்ளது.
நேற்று, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள்
Sorbonnne (பாரிஸ்
பல்கலைக் கழகம்) இல் உள்ள மாணவர்களை பேட்டி காண முயன்றனர்; ஆனால் அவர்கள் போலீசாரால் அனுமதிக்கப்படவில்லை.
பல அதிகாரிகள், கண்ணிர்ப்புகை செலுத்துபவர்கள் உட்பட, வளாகத்தை சூழ்ந்து நின்று அங்கு வேலைபார்ப்பவர்களை
மட்டும்தான் உள்ளே அனுமதித்தனர். Rue des
Ecoles இல் இருந்த ஒரு சிறிய பிரிவில், ஏழு பெரிய போலீஸ்
வண்டிகளும் 20 போலீஸ் வாகனங்களும் இருந்தன. மூன்று மீட்டர் உயர உலோகப் பாதுகாப்புத் தடைகள்
குறைந்தது ஒவ்வொரு நுழைவாயிலிலாவது வைக்கப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்புக்கள்
ஏற்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தில் வகுப்புக்கள் நடத்துவது திங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வன்முறைப்
பூசல்களை கண்டித்தனர். "நேற்று மாலை நிகழ்ந்த சிறிதும் பொறுத்துக் கொள்ளமுடியாத வன்முறை நிகழ்வுகளை
கண்டிக்க விரும்புகிறேன்." என்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளரான
Jean Francois Cope
அறிவித்தார். உள்துறை மந்திரியான நிக்கோலா சார்க்கோசி, "நேற்று மாலை நடந்தவை ஏற்க முடியாதவை"
என்று கூறினார். மேலும் "ஒரு சில நூறு தீய இளைய சக்திகள் போரிட வந்தன.... தீவிர வலது, தீவிர இடது,
காலிக் கும்பல்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள கழிசடைகள் எனப் பலரும் வந்தனர்." என்றார் அவர்.
அரசாங்கத்தின் CPE
சட்டத்திற்கு எதிர்ப்பு பெரிதாக வளரத் தொடங்கிவிட்டது. நேற்று
Le Parisien
இல் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு 68 சதவிகிதத்தினர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும்
என்று கோரியதாக தெரிவித்துள்ளது; ஒரு வாரம் முன் இந்த விகிதம் 55 ஆக இருந்தது. 27 சதவிகிதத்தினர்தான்
CPE
க்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பு இருந்தபொழுதிலும், அரசாங்கம் சட்டத்தை திரும்பப் பெற
முடியாது என்று வலியுறுத்தியுள்ளது. வில்ப்பனும் மற்ற மந்திரிகளும் மாணவர்களுடனும் தொழிற்சங்கத்தினருடனும் பேச்சு
வார்த்தைகள் நடத்துவதாக வெறுமே உறுதி மொழி கொடுத்துள்ளனர்.
"பேச்சு வார்த்தைகளுக்கு அரசாங்கம் தயார்; இது விரைவில் தொடங்கும் என்று
நம்புகிறேன்." என்று ஜனாதிபதி ஜாக் சிராக் நேற்று கூறினார். "கஷ்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு
CPE வாய்ப்புக்களையும்
புதிய உத்தரவாதங்களையும் கொண்டு வரும்" என்றார் அவர்.
அரசாங்கத்திற்கு எதிராக தேசிய நடவடிக்கை தினம் சனிக்கிழமை அன்று நடக்க உள்ளது;
இதில் நாடெங்கிலும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்ளுகின்றனர். மில்லியனுக்கும்
மேலான மக்கள் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
* * *
நேற்று பாரிஸ் பல்கலைக் கழகத்தின்
Jussieu
வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் சிலருடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர்.
மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததோடு வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டிருந்தனர். ஆசிரியர்களும்
மாணவர்களுடன் ஒற்றுமையை காட்டும் வகையில், CPE
க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓர்
ஆங்கில மாணவியான Audrey
ஆசிரியராக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார். "நான் எந்த அமைப்பிலும் அல்லது தொழிற்சங்கத்திலும்
இல்லை. நான் ஒரு மாணவி" என்று அவர் கூறினார். "CPE
திரும்பப் பெறப்படும் என்று நான் நம்புகிறேன் --நாங்கள் அதை அடைவோம். ஆனால் பிரச்சினை
என்னவென்றால், நாங்கள் CPE
அகற்றுவதோடு மட்டும் நிற்கவில்லை; ஏனெனில் இந்த நடவடிக்கையின் பின்னணியில் சமவாய்ப்பு சட்டம் முழுவதும் உள்ளது;
அதில் ஏற்கமுடியாதவைதான் உள்ளன; 14 வயதில் வேலைப் பயிற்சி
(Apprenticeship),
15 வயதில் இரவு வேலை என்று; இவை அனைத்தும் அனுமதிக்கப்படமுடியாத பிற்போக்குத்தனங்களை பிரதிநிதித்துவம்
செய்கின்றன.
"நாங்கள் CPE
க்கு எதிராகப் போரிடுகிறோம் என்று மட்டும் மக்கள் நினைக்கக் கூடாது. ஏராளமான கோரிக்கைகள் எங்களிடம்
உள்ளன. ஆசிரிய பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு வேலைகொடுக்கும் பிரச்சினைகளும் உள்ளன; ஆய்வு மாணவர்கள்,
தொழிலாளர்கள் கோரிக்கையும் உள்ளது; கடந்த ஆண்டு (கல்வி மந்திரியாக இருந்த)
Fillon இன்
கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்ப்பின்போது கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் விடுதலைப்
பிரச்சினையும் உண்டு."
CPE எதிர்ப்பு இயக்கம்
அரசாங்கத்தை அகற்றுவதாக இருக்கவேண்டுமா என்று
WSWS அவரைக் கேட்டது. "ஆம். ஆனால் வேறு எந்த
அரசாங்கம் வரும்?:" என்று அவர் பதில் கூறினார். "அதுதான் பிரச்சினை; என்னிடம் அதற்கு விடையில்லை.
வில்ப்பன் இதை சொந்தப் பிரச்சினையாக ஆக்கியுள்ளார். அவர் இராஜிநாமா செய்தால் பிரச்சினைக்கு தீர்வு
கிடைக்கும்; ஆனால் அது குறுகிய காலத் தீர்வாகத்தான் இருக்கும்; ஏனெனில் அவருக்குப் பின்வருபவரும் ஒன்றும்
சிறந்து விளங்கப் போவதில்லை. இன்றைய அரசியல்வாதிகள் பற்றி நான் பொதுவாக கூறுகிறேன். என்னுடைய
கருத்தில் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்தாம்."
தொழிற்சங்கங்களின் பங்கு பற்றியும்
Audrey
திருப்தியாக இல்லை. "Jussieu
வில் நாங்கள் மூன்று வாரமாக போராட்டத்தில் உள்ளோம்; நாங்கள் பல்கலைக் கழகத்தை மூடியுள்ளோம்;
ஆனால் தொழிற்சங்கங்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவர்கள் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன;
பின் நாங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்; நாங்கள் ஏதும் செய்யாவிட்டால், அவர்கள்
எதுவும் செய்திருக்க மாட்டார்கள்."
பல்கலைக் கழகத்தின் மற்றொரு மாணவரான
Hicham உம்
WSWS
உடன் பேசினார். "CPE
விரைவில் என்னை பாதிக்கும்; ஏனெனில் சீக்கிரம் நான் வேலைதேடுபவராக இருப்பேன்.
CPE இருந்தால்,
முதலாளி, ஒருவரை எந்தக் காரணமும் இல்லாமல் எக்கணமும் வெளியே அனுப்ப முடியும். வீடுவாங்குவது, கடன்
வாங்குவது என்றால், ஒரு நிலையான தொழிலாளியாக ஒருவர் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு புறநகர்ப் பகுதிகளில் நிகழ்ந்த கலகங்களுக்கு முக்கியகாரணம் வேலை
கொடுப்பதில் பாகுபாடு இருந்ததுதான்; CPE
நிலைமையை இன்னும் மோசமாக்கியியுள்ளது. அரசாங்கம் பாகுபாடு கூடாது என்று பேட்டி ஆளவில் கூறினாலும், மக்கள்
பின்னர் எந்த நேரத்திலும் வெளியே அனுப்பப்படலாம். உதாரணமாக புலம்பெயர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு
கொடுக்க வணிகம் வந்தாலும், பின்னர் முதலாளிகள் அவர்களை வெளியே அனுப்பவதை நிறுத்த முடியாது."
Hicham ä
WSWS,
CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால்
என்ன விளைவு ஏற்படும் என்று கேட்டது. "CPE
ஐ வேறுவிதமாக அரசாங்கம் கொண்டுவரும்; சற்று மாற்றங்களுடன் இருக்கும், ஆனால் உண்மை விளைவுகள் இப்படித்தான்
இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். "ஆனால் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால்,
CPE அகற்றப்பட்டுவிட
முடியும். சட்டம் அனைவரையும்தான் பாதிக்கிறது --தொழிலாளர்கள், நிலையான உத்தியோகத்தில் இருப்பவர்களும்தான்
பாதிக்கப்படுகின்றனர். வருங்காலத்தில், பணிநீக்கங்கள் இருக்காது; இத்தொழிலாளர்கள் வேலை தேடும்போது அவர்கள்
இதேவித பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். எனவே இந்தப் பிரச்சினைக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு
ஒரு பொது இயக்கம் நமக்குத் தேவைப்படுகிறது. இப்பொழுது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவ
அமைப்பினால் ஒரு தீர்வு காண முடியாது. வலதுசாரி அரசாங்கத்தால் முதலாளி மற்றும் தொழிலாளி இருவரையும்
திருப்திப்படுத்த முடியாது. பிரான்சிலும் மற்ற இடங்களிலும் தொழிலாளர்களை திரட்டுவதற்கு ஒரு பொது இயக்கம்
தேவையாகும். CPE
மற்ற நாடுகளிலும் இதேவகையில் கொண்டுவரப்படக்கூடும். இந்த பணி ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு ஒரு சர்வதேச
இயக்கம்தான் தேவைப்படும்."
See Also:
பிரான்ஸ்:
இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள்
ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ்: கலவரத் தடுப்புப்
போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது
CPEக்கு
எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை
பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்
Top of page |