ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: National student protest held against government
attack on young workers
பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு
எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By Rick Kelly and Antoine Lerougetel
17 March 2006
Use this version
to print | Send this link by email
| Email the author |
Featured
Articles
கோலிச அரசாங்கத்தின்
CPE (Contrat de Première Embauche - முதல்
வேலை ஒப்பந்தம்)
எனப்படும் வேலைத்தல சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நூறாயிரக்கணக்கான
மாணவர்களும் இளவயதுத் தொழிலாளர்களும் நேற்று பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். எதிர்ப்புக்களை
அமைத்தவர்கள் குறைந்தது 500,000 மாணவர்கள் பங்கு பெற்றனர் என்றும் இது மார்ச் 7ம் தேதி நடைபெற்ற
கடைசி எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கு பெற்றவர்களைவிட இருமடங்கு அதிகம் என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். பெருகிவரும்
மக்கள் இயக்கம் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கத்திற்கு தீவிர நெருக்கடியை
கொடுத்துள்ளது.
Contrat de premiere embauche -
(முதல் ஒப்பந்தச் சட்டம்) 26 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை முதல் இரண்டு ஆண்டுகள் வேலையில்
இருக்கும்போது எவ்விதக் காரணமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யும் உரிமையை கொடுத்துள்ளது. பிரான்சின்
இளைஞர்களுடைய வேலையின்மை விகிதமாகிய 23 சதவிகிதத்தைக் குறைப்பதற்கு இச்சீர்திருத்தம் முக்கியம் என்று
அரசாங்கம் வாதிடுகிறது. நாட்டின் பல வறுமை நிறைந்த இடங்களில் வேலையின்மை விகிதம் 40ல் இருந்து 50
என்ற உயர் விகிதத்தில்கூட உள்ளது. உண்மையில் CPE
தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை தரம்தாழ்த்துவதன் மூலம் சர்வதேசப் போட்டிக்கு ஏற்ப பிரான்சின் முதலாளித்துவ
அமைப்பிற்கு வலிமை கொடுப்பதை, இலக்கு கொண்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
CPE என்பது அண்மையில்
தொழிலாளர்களுடைய நிலைமைகளை தாக்கும் வகையில் வரையப்பட்ட சமீபத்திய சட்டங்களில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பெரும் ஆர்ப்பாட்டம் பாரிசில் நடைபெற்றது; இதில் நகரமையத்தின் வழியே
120,000 மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். கலவரத்தடுப்பு போலீசார் பல இளைஞர்கள் ஓரிடத்தில் கற்களை
வீசி தடுப்புக்களை அகற்ற முற்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். வடக்குப் புறநகரமான
Raincy
மற்றும் Sorbonne
பல்கலைக் கழகத்திலும் மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது; பிந்தைய இடத்தில் கடந்த சனியன்று போலீசார்
300 ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையில் அப்புறப்படுத்தினர்.
போலீசார் நேற்று
Rennes என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது
கண்ணீர் புகைக் குண்டை வெடித்தனர்; மாணவர்கள் நகர அரங்கிற்குள் நுழைந்து அதன் வெளிப்புறத்தில் "முழு பிரான்சும்
CPE
க்கு எதிராக இணைந்துள்ளது" என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை தொங்க விட்டபோ இது நடந்தது.
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் பிரான்சின் நகரங்கள், வட்டார மையங்கள் எல்லாவற்றிலும் நடைபெற்றன; அமைதியாகத்தான்
இருந்தன. 15,000 இளைஞர்கள் Marseilles,
Bordeaux என்னும் இடங்களில் எதிர்ப்பைக் காட்டினர்; பெரும்
ஆர்ப்பாட்டங்கள் Grenoble, Limoges
மற்றும் Le
Havre ஆகிய இடங்களில் நிகழ்ந்தன.
எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்தவர்களின் கருத்தின்படி, பிரெஞ்சு பல்கலைக் கழகங்களில்
மூன்றில் இரு பகுதிகளும், பாரிஸ் நகர உயர்நிலை பள்ளிகளில் நான்கில் முன்று பங்கும் ஆர்ப்பாட்ட தின நடவடிக்கைகளால்
பாதிப்புக்கு உள்ளாயின. மாணவரல்லாத பலரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்; அவர்களுள் ஓய்வூதியம் பெறுவோர்,
பள்ளி ஆசிரியர்கள், மற்றும் தொழிலாளர்களும் இருந்தனர். மாணவர்களாலும் தொழிற்சங்கங்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
CPE
க்கு எதிரான ஒரு தேசிய நடவடிக்கை தினம் சனிக்கிழமையன்று நடக்க உள்ளது; இதில் ஒரு மில்லியனுக்கு மேலான
மக்கள் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தொழிற்சாலை பற்றிய நடவடிக்கை பெரும்பாலான பிரெஞ்சு
மக்களால் எதிர்க்கப்படுகிறது. அண்மையில் நிகழ்ந்த ஒரு கருத்துக் கணக்கின்படி மாணவர்களுடைய ஆர்ப்பாட்டம் 68
சதவிகித மக்களுடைய ஆதரவைக் கொண்டுள்ளது. CPE
எதிர்ப்பு இயக்கம் அரசாங்கம், அதன் வலதுசாரி, வணிக
சார்புடைய செயற்பட்டியலுக்கு எதிரான பிரெஞ்சு மக்களின் குவிப்பை கொண்டுள்ளது. கருத்துக் கணிப்புக்கள் பிரதம
மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கத்திற்கு ஆதரவு சமீப வாரங்களில் மிகவும் சரிந்துவிட்டதைக்
காட்டுகின்றன. அவருடைய சொந்தமுறையிலான மதிப்பு ஒப்புதலும் 35 சதவிகித்தில்தான் உள்ளது.
நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் காணப்பட்ட பல கோஷ அட்டைகள், முழக்கங்கள் பலவும்
வில்ப்பன் இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
"பழைய பிரதமர் பலடூரை விரட்டினோம்; ரஃபரனை விரட்டினோம்; இப்பொழுது வில்ப்பனை விரட்டுவோம்"
என்று ஒரு அட்டையில் எழுதப்பட்டிருந்தது. மற்ற பதாகைகளும்
CPE உண்மையில்
எதை இலக்கு கொண்டுள்ளது என்பதை மாணவர்கள் அறிந்துள்ளதை காட்டுகிறது; "தொழிலாளர்களு பேரழிவு"
(Catastrophe Pour le Employés),
"அடிமைகளாக ஒப்பந்தங்கள்" (Contrat Pour
Esclaves), "தேர்தல்களில் தோற்பது எப்படி"
(Comment Perdre les Elections)
என்று சில அட்டைகளில் எழுதப்பட்டிருந்தது. சில மாணவர்கள்
இளந் தொழிலாளர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுவதை குறியீடாக காட்டும் வகையில் தங்கள் உடலின்மீது
குப்பைகள் சேகரிக்கும் பைகளை சுமந்திருந்தனர்.
ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஆண்டு பாரிஸ் புறநகர்ப்பகுதிகளில்
இளைஞர்களுடைய கலவரத்திற்கு அரசாங்கம் கொடுத்திருந்த ஆத்திரமூட்டல் தன்மை நிறைந்த சர்வாதிகார விடையிறுப்பையும்
குறிப்பிட்டனர். "யார் கழிசடைகள்?" என்று Le
Havre இல் எடுத்துச் செல்லப்பட்ட ஓர் அட்டையில் வினா
தொடுக்கப்பட்டிருந்தது. "எவர் குண்டர்கள்? இந்த அரசாங்கத்தை வெளியேற்று, வெளியேற்று" என்றும் அட்டைகள்
இருந்தன. பிரெஞ்சு சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கில் இருந்தும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்;
இதன் புலம்பெயர்ந்தோர், கறுப்பு இளைஞர்கள் என்று கடந்த ஆண்டு பாரிஸ் புறநகர் கலகத்தினால் பாதிக்கப்பட்டவர்களும்
அடங்குவர். இந்த இளைஞர்கள் CPE
எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டமை, வில்ப்பன் அரசாங்கம் அதன்
வேலைத்தல சீர்திருத்தங்கள் வறுமைப் பகுதியில் வேலையின்மையால் வாடுபவர்களுக்கு உதவும் என்ற கூற்றை மறுத்தது.
உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழக மாணவர் சங்கங்களின் பதாகைகள் பாரிஸ்
ஆர்ப்பாட்டத்தில் முக்கியமாக இருந்தன. முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்,
CGT (தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு) மற்றும் FO (தொழிலாளர்
சக்தி) பிரதிநிதிகளும் தொழிற்சங்கம், மாணவர்கள் எதிர்ப்புடன் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் சேர மறுத்திருந்த
போதிலும், பங்கு பெற்றனர். அதிகாரபூர்வ பிரெஞ்சு "இடது" போலவே தொழிற்சங்கங்களின் முன்னோக்கு,
அரசாங்கத்தின் முழு வலதுசாரி செயற்பட்டியலுக்கு எதிராக
தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சுயாதீன இயக்கம்
பரந்த தன்மையில் எழுச்சி பெறுதலை தடுக்க வேண்டும் என்பதாகும்.
CPE எதிர்ப்பு இயக்கம்
2007 ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்கள் வகையில் பன்முக இடது என சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும்
பசுமைக் கட்சிக்காக திருப்பிவிடப்படுவதற்கு முயற்சிகள் உள்ளன.
இவ்வாறு இருந்த போதிலும்கூட, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய ஆர்ப்பாட்டம்
வில்ப்பனுடைய அரசாங்கத்தை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. பெரும் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும்கூட, தன்னுடைய
வலதுசாரி செயற்பட்டியலை தொடர்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆளும்
UMP (Union
for a Popular Movement - UMP) யில் உள்ள முக்கியமான
பிரமுகர்கள், ஜனாதிபதி ஜாக் சிராக் உட்பட CPE
க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். UMP
ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவில் வில்ப்பனுடைய கடுமையான போட்டியாளராக இருக்கும் உள்நாட்டு மந்திரியான
நிக்கோலா சார்க்கோசியும் இச்சீர்திருத்தத்திற்கு தன்னுடைய ஆதரவைக் கொடுத்துள்ளார்.
மார்ச் 15 தலையங்கத்தில், "பிரான்சின் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுகின்றனர்"
என்ற தலைப்பில் Financial Times
முழு அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் நெருக்கடிக்கு
ஆளாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. "இந்தப் பிரச்சினை மூன்று மைய வலது தலைவர்களையும் இழுத்துள்ளது; (அதாவது
சிராக், வில்ப்பன் மற்றும் சார்க்கோசி). இவர்கள் மூவரும் மலையேறுபவர்போல் உள்ளனர்; அதாவது ஒருவர்
தவறி விழுந்தால் மற்றவர்களும் விழுவர்."
பிரதம மந்திரி வில்ப்பன் பல அமைப்புக்களுடனும் பேச்சுக்களை நடத்த விருப்பம்
கொண்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். ஆனால் CPE
சட்டத்தின் முக்கிய அம்சங்களில் சமரசத்திற்கு இடம் இல்லை என்று நிராகரித்துவிட்டார். பல்கலைக் கழகங்களின்
தலைவர்களை இன்று அவர் சந்திக்கின்றார்; பின்னர் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் பேச உள்ளார். "CPE
முன்னேற்றம் காண்பதற்காக, சட்டத்தின் வடிவமைப்பிற்குள் நான் விவாதங்களுக்கு தயார்" என்று நேற்று அவர்
கூறினார். "விரைவில் செயலாற்ற விரும்புகிறேன் என்பது உண்மையே. நாம் இப்பொழுது அதை விளக்க வேண்டும்,
மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருப்பதால் இறுதிவரை அதை
இயக்கிச்செல்வேன்."
சார்க்கோசியும் அவருடைய அரசாங்கத்தில் உள்ள நண்பர்களும் மிகவும் எச்சரிக்கையுடன்
கூடிய குறைகூறல்களை, CPE
செயல்படுத்தப்படும் தன்மை பற்றி, நேற்று வெளியிட்டு இன்னும் பேச்சுவார்த்தைகள் தேவை என்று கூறியுள்ளனர்.
ஆண்டிற்கு இருமுறை சட்டம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை சில மந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்குள்ளேயே சில பிரிவுகள் பெயரளவிற்கேனும் சில சலுகைகள் கொடுக்கப்படாவிட்டால்,
CPE க்கு எதிரான
இயக்கம் விரைவில் கட்டுப்பாட்டில் இருந்து அகன்றுவிடும் என்ற அச்சத்தை தெரிவித்துள்ளனர். நேற்று
Liberation
ல் வந்துள்ள தலையங்கம் "சார்க்கோசி தன்னுடைய போட்டியாளர் வளைந்து கொடுக்கும் தன்மையை
கொண்டிராமல் இருப்பது மோசமான நிலைக்கு வழிவகுத்துவிடும் என்றும், ஆபத்தைத் தரக்கூடிய தீவிரமயப்படுதலுக்கு
வகைசெய்துவிடும் என்றும் கருதுகிறார்" என்று எழுதியுள்ளது.
See Also:
பிரான்ஸ்: கலவரத் தடுப்புப்
போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது
CPEக்கு
எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை
பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்
Top of page |