World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush administration renews "preemptive war" strategy

புஷ் நிர்வாகம் "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்" மூலோபாயத்தை புதுப்பிக்கிறது

By David North
17 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளை மாளிகையால் வியாழனன்று வெளியிடப்பட்ட தேசியப் பாதுகாப்பு மூலோபாயம் என்ற ஆவணம் விரோதிகள் எனக் கருதப்படும் நாடுகளில் இருந்து தோன்றக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்" நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு உண்டு என்பதை மறு உறுதி செய்துள்ளது.

செப்டம்பர் 2002ல் இந்தக் கொள்கைவழி முதலில் நிறுவப்பட்டபோது, புஷ் நிர்வாகத்தின் "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்" என்பது ஈராக்கின் மீது தொடரப்பட இருந்த படையெடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியாகத்தான் பொதுவாக பார்க்கப்பட்டது; அமெரிக்காவிற்கு உடனடியாக நிகழக்கூடியதா என்பது ஒரு புறம் இருக்க, அந்த நாடோ எந்த விதமான உண்மையான அல்லது முன்னுணரக்கூடிய, எத்தகைய அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. அக்கொள்கைவழி பரந்த அளவில், அமெரிக்காவிற்கு வெளியே சர்வதேச சட்டத்தில் அஸ்திவாரம் இல்லாத ஒரு கொள்கையை அமெரிக்கா முன்வைக்கிறது என்ற கண்டனத்திற்கு ஆளானது.

தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் புதுப்பிக்கப்பட்ட இப்பதிப்பை வெளியிட்டதில், புஷ் நிர்வாகம் முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்க் கொள்கை வழியில் இருந்து பின் வாங்குதல் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதுடன், ஒருநாடு எவ்வித வெளிப்படை விரோதப் போக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றாலும், எந்த நேரத்திலும் தனக்கு ஆபத்து அல்லது எதிர்கால ஆபத்தைக் கொடுக்கக் கூடிய எந்த நாட்டின் மீதும் தாக்குதலை நடத்தும் உரிமையை அமெரிக்கா பெற்றுள்ளதாவும் கூறியுள்ளது.

"நீண்ட காலமாக நிலவி வரும் தற்காப்பு கோட்பாடுகள்" என்ற கருத்தின் கீழ், புஷ் நிர்வாகம், அமெரிக்கா "விரோதியின் தாக்குதல் எப்பொழுது, எங்கு என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், தாக்குதல் நிகழ்வதற்கு முன்னால் பலத்தை உபயோகிக்க தயங்காது என்றும்" அறிவித்துள்ளது.

ஆவணம் கூறுவதாவது: "எமது எதிரிகளுடைய விரோத நடவடிக்கைகளை தடுக்கும் அல்லது எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்கா தேவையானால், நம்முடைய இயல்பான தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி முன்னரே தாக்கித் தனதாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும்."

தன்னுடைய கொள்கைவழியில் உள்ள அடிப்படை சட்ட முரண்பாட்டை பற்றி புஷ் நிர்வாகம் சிறிதும் பொருட்படுத்தவில்லை: எந்தவிதமான வெளிப்படையான விரோதச் செயலை ஒரு நாடு செய்யாவிடினும், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு தாக்குதல் தவிர்க்க முடியாமல் வருகிறது என்பதற்கு சான்று இல்லமாலும், குறைந்த பட்சம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்டு அமெரிக்கா எவ்வாறு பாதுகாப்பு என்ற காரணத்தைக் கொண்டு மற்றொரு நாட்டின்மீது இராணுவத் தாக்குதலை நடத்த முடியும்.

எப்பொழுதும் போலவே, வெள்ளை மாளிகை முன்கூட்டியே தாக்கித் தனதாக்கும் போரை நியாயப்படுத்துவதற்கு பேரழிவு ஆயுதங்கள் என்ற மாயத் தோற்றத்தை எழுப்புகிறது. "பேரழிவு ஆயுதங்களை கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களின் விளைவுகள் பெரும் அழிவை தரக்கூடும் ஆதலால், நாம் பெரும் ஆபத்துக்கள் விளைய இருப்பதை பார்த்துக் கொண்டு வெறுமே இருக்க முடியாது. இதுதான் முன்கூட்டியே தாக்கித் தனதாக்கும் போர்த் தன்மையின் கொள்கையும் தர்க்கமும் ஆகும். எமது தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தில் முன்கூட்டியே தாக்கி தனதாக்கிக் கொள்ளும் தன்மையின் இடம் முன்போல்தான் உள்ளது."

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோட்பாடு ஈராக்கை இலக்கு வைத்து தொடக்கப்பட்டது. இப்பொழுது தவிர்க்க முடியாத தாக்குதலின் இலக்கு அநேகமாக ஈரானாக இருக்கும்; ஆவணத்தின்படி இதுதான் அமெரிக்காவை மிகப் பெரிய அறைகூவலுடன் எதிர்கொள்ளுகிறது.

அணுஆயுத வளர்ச்சி திட்டத்தை கொண்டுள்ளதை மறைக்கும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற தன்னுடைய கூற்றை புஷ் நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது. "அமெரிக்கா இன்னும் பரந்த அளவிலான அக்கறைகளை ஈரானை பொறுத்தவரையில் கொண்டுள்ளது; அவை அணுவாயுத பிரச்சினைகளுக்கும் அப்பால் செல்கின்றன." நிறைய குற்றங்களை மீண்டும் மீண்டும் புஷ் நிர்வாகம் வலியுறுத்துகிறது. "ஈரானிய ஆட்சி பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கிறது; இஸ்ரேலை அச்சுறுத்துகிறது; மத்திய கிழக்கில் உள்ள சமாதானத்தை குலைக்கிறது; ஈராக்கில் ஜனநாயகத்திற்கு இடையூறு விளைவிக்கிறது; சுதந்திரத்தை விழையும் மக்களுடைய அபிலாஷைகளை மறுக்கிறது." ஆவணம் மேலும் கூறுவதாவது: "அணுவாயுதப் பிரச்சினை மற்ற அக்கறைகளும் இறுதியில் ஈரானிய ஆட்சி இக்கொள்கைகளை மாற்றும் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து, அரசியல் முறையை திறந்த முறையில் கொண்டு தன்னுடைய மக்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் தீர்வு காணப்பட முடியும். இதுதான் அமெரிக்க கொள்கையின் இறுதி இலக்கு ஆகும்."

வேறுவிதமாகக் கூறினால் ஈரானிய அணுவாயுத அச்சுறுத்தல் என்பது வெறும் பாசாங்குதான்: இருக்கும் ஈரானிய அரசாங்கம் அமெரிக்க பூகோள மூலோபாய நலன்களுக்கு குறுக்கே இருப்பதுதான் உண்மையான பிரச்சினை. அணுக்குரு ஆற்றல் வளர்ச்சியை நிறுத்தவேண்டும் என்பது புஷ் நிர்வாகத்தின் விருப்பம் அல்ல; மாறாக தெஹ்ரானில் "ஆட்சி மாற்றம்" எற்பட்டு புரட்சிக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்; அதாவது, அமெரிக்காவின் வாடிக்கை அரசாக ஈரானை மீண்டும் அளிக்கும் பொம்மை அரசாங்கம் ஒன்று, முன்பு ஷா ரேசா பஹ்லவி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன் இருந்தது போல், மீண்டும் இருக்க வேண்டும்.

இப்படி சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய சொல்ஜாலங்களுக்கு பின்னணியில், அமெரிக்காவின் மூலோபாய இலக்கு மேலாண்மையும் ஆதிக்கமும் ஆகும் என்பதை ஆவணம் தெளிவாக்கியுள்ளது. புஷ் நிர்வாகம் உலகம் அமெரிக்காவுடைய நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறது. மற்ற நாடுகளும் பகுதிகளும் அமெரிக்காவிற்கு சாதாரணமாய் அடிபணிந்து நிற்க வேண்டும்.

இலத்தீன் அமெரிக்க மக்கள் "தடையற்ற சந்தைக்கு எதிராக ஏமாற்றுத்தனமான மக்கள் விருப்பம் பற்றிய முறையீட்டை" நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய முறையீட்டைத்தான் வெனிசூலிய ஜனாதிபதி Hugo Chavez செய்துவருகிறார் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய "புவியியல் மற்றும் சக்தியை" பயன்படுத்திக் கொண்டு "பரந்த மத்திய கிழக்கில், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில்" ரஷ்யா அமெரிக்க செல்வாக்கை குறைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பத்தியில் ஆவணம் "வளரும் புவியியல் உத்தி முக்கியத்துவத்தை ஆபிரிக்கா கொண்டுள்ளது; இந்த நிர்வாகத்தில் அது உயர்ந்த முன்னுரிமை பெற்றுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக வெள்ளை மாளிகை "சீனத் தலைவர்கள் அமெரிக்காவுடன் மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்றால் தங்களுடைய பழைய சிந்தனைப் போக்கிலேயே நிற்க முடியாது என்பதை அறிய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

அமெரிக்க மேலாண்மை நிறுவப்படல் என்பது முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தடையற்ற வெற்றி என்பதுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது; இந்த ஆவணம் அதை "வறுமைக்கு மிகப் பெரிய மாற்று மருந்து என்றும் தலைசிறந்த ஒற்றைப் பொருளாதார முறை" என்றும் விளக்கியுள்ளது.

உலகம் முழுவதும் வறுமை விகிதம் என்பது உலக மக்கள் முதலாளித்துவ சந்தை முறையின் இலாபத் தேவைகளுக்கு ஏற்ப தாழ்ந்து நிற்பதால் ஏற்பட்டுள்ள நேரடி விளைவுகள் முன்னோடியில்லாத மட்டங்களுக்கு வந்துவிட்ட நிலையில் இவ்வாறு கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பைத்தியக்காரத்தனத்தின் கூறுபாடு உள்ளது. பொய்களின் தொகுப்பு, தர்க்கரீதியான அபத்தங்கள் அனைத்தும் பிற்போக்குத்தனமும், தானே உயர்ந்த நாடு என்ற இறுமாப்பும் உள்ள தன்மை உலகப்பார்வையை கொள்ள பயன்படுத்ப்பட்டுள்ளன.

"அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளது" என்று அறிவிக்கும் முன்னுரையுடன் ஆவணத்தை ஜனாதிபதி புஷ் தொடக்கியுள்ளார். இவர் ஈடுபட்டுள்ள போர் பிரகடனப்படுத்தப்பட்ட போர் இல்லை என்பதை குறிக்க மறந்துவிடுகிறார்; தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த நிர்வாகம் காங்கிரஸ் தீர்மானங்களை இயற்ற உதவியது மோசடி, ஏமாற்றுத்தனம் இவற்றின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதையும் அவர் கூறவில்லை.

ஆவணத்தில் பொறிக்கப்பட்டுள்ள மூலோபாயம் "எமது பெரும் உறுதியான கடமையை பிரதிபலிக்கிறது; அதாவது அமெரிக்க மக்களுடைய பாதுகாப்பை பேணுவது என்பதே அது."

சட்ட நெறியின்படி இக்கருத்து தவறானது; ஜனாதிபதி எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியின்படி, அவர் "அமெரிக்காவின் அரசியலமைப்பை தக்க வைத்து, பாதுகாத்து, நிலைத்திடுவதற்கு வகை செய்ய வேண்டும். இது ஒன்றும் சிறிய பிழை அல்ல. எவ்வித தயக்கமும் இல்லாமல் எந்த இராணுவ, பாசிச சர்வாதிகாரியும் அவருடைய "மிக மேன்மையான கடமை" மக்களுடைய "பாதுகாப்பை" காப்பது என்றுதான் கூறுவார்; அதிலும் சட்டத் தடைகள் ஏதும் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் நலம் என்றுதான் வர்ணிப்பார்.

Top of page