WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Bush administration drags Iraq towards the abyss of civil war
புஷ் நிர்வாகம் ஈராக்கை உள்நாட்டுப்போரின் படுகுழியை நோக்கி இழுத்துச் செல்கின்றது
By the Editorial Board
1 March 2006
Use this version
to print |
Send this link by email |
Email the author
சமாராவில் சென்ற புதன்கிழமையன்று அல்-அஸ்காரியா மசூதி அழிக்கப்பட்டதற்கு
பின்னர் ஈராக் ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம் குடிப்படைகளுக்கிடையேயான மதக்குழு வன்முறைகள் ஈராக்கை அதிரவைத்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்தாக்குதல்களின் மூர்க்கமான தொடர்ச்சி நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை
பறித்துவிட்டது. அதில், இரண்டு மதத்தை சேர்ந்த டசின் கணக்கான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியே
இழுத்துவரப்பட்டு, தெருக்களில் கொலை செய்யப்பட்டதும் அடங்கும். அமெரிக்க படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு
நிறைவு நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், உள்நாட்டுப்போர் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.
நிகழ்ச்சிகளின் இந்த திருப்பம் குறித்து புஷ் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் அதிர்ச்சியையும்
ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளன. நியூயோர்க் டைம்சில் வெள்ளிக்கிழமை தலையங்கம் சுட்டிக்காட்டப்படவேண்டிய
ஒன்றாகும். "அனைத்து மத குழுக்களையும், சமுதாயங்களையும் சேர்ந்த ஈராக் தலைவர்கள் ஒரு அமைதியை
உண்டுபண்ணுவது அவசியமாகும்," என்று அது போதித்திருக்கிறது, "ஒரேநேரத்தில் ஜனநாயகம், ஐக்கியம் மற்றும்
ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு புதிய ஈராக்கை உருவாக்குவது என்பது எப்போதுமே எளிதாக நடந்துவிடக்கூடியதல்ல.
தற்போது அது பெருமளவிற்கு கடினமாகிவிட்டது." என மேலும் குறிப்பிட்டது.
இந்த வரிகளை எழுதுவதற்கு வெறுப்பு மனப்பான்மையையும் ஏமாற்றுத்தன்மையையும்
மிகப்பெருமளவிற்கு தேவைப்படும். மதக்குழு மோதல்களை எதிர்கொண்ட நிலையில் அமெரிக்க ஆளும்தட்டின் ஒலிபெருக்கிகளான
டைம்ஸ் போன்றவை 2003 மார்ச்சில் புஷ் நிர்வாகம், ஈராக்கிற்கு எதிராக ஒரு சட்ட விரோத
மற்றும் எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாத போரை நடத்தியதை மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த கொடூரமான, கவனத்திலெடுக்காத குற்றத்திலிருந்தே நேரடியாக இச்சகோதரர்களுக்கிடையேயான
மோதலுக்கான சாத்தியக்கூறு உருவாகியுள்ளது.
அந்த படையெடுப்பு ஜனநாயகத்தை, ஐக்கியத்தை அல்லது ஸ்திரத்தன்மையை
ஈராக்கிற்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் உலகில் இரண்டாவது பெரிய எண்ணெய்
இருப்புக்களை அமெரிக்க பெருநிறுவனங்கள் சூறையாடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும் ஒரு அமெரிக்க
பொம்மை ஆட்சியை தினிப்பதற்கும்தான். ஒரு பாதுகாப்பற்ற நாட்டில் இராணுவத்தின் அழிவை பென்டகன் அறிந்தே
இருந்தது. மேலும் அது அமெரிக்க நலன்களுக்கு சவால்விடுவதன் விளைபயன்கள் என்ன என்பதை அமெரிக்காவின்
எதிர்கால போட்டியாளர்களாக இருக்ககூடிய ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகளில் இருந்து சீனா வரை அனைத்திற்கும்
ஒரு எச்சரிக்கை விடுக்கும் நோக்கமாக கொண்டிருந்தது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் ஒரு பெரும்பகுதி கிடைக்கின்ற அந்த
பிராந்தியத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு மத்திய கிழக்கில் பல்வேறு தலையீடுகளில்
முதலாவது நடவடிக்கைதான் ஈராக் மீதான படையெடுப்பு என்று அந்தப்போருக்கு முக்கியமாக
திட்டமிட்டவர்களுக்கிடையில் கருதப்படுகிறது. ஈரானின் அணுத்திட்டங்கள் என்று கூறப்படுவது தொடர்பாக தற்போது
புஷ் நிர்வாகம் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருக்கிறது. அவை, ஈராக் மீது தாக்குதலுக்கு உருவாக்கப்பட்டது
போன்று ஆபத்தானதை நினைவுப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. சிரியாவும் திரும்பத்திரும்ப ஆத்திரமூட்டலுக்கான
இலக்காக இருக்கின்றது.
போர்களை ஆதரிப்பவரும், அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு
கருத்தியலாளரும் மற்றும் முன்னாள் செய்திகள் வழங்குனரான டெட் கோப்பல், வெள்ளிக்கிழமையன்று நியூயோர்க்
டைம்சில் "ஒரு அரைநூற்றாண்டிற்கு மேலாக அமெரிக்க வெளியுறவு கொள்கையின் அடித்தளமாக அமைந்திருப்பது
ஹார்மஸ் ஜலசந்திவழியாகவும் பாரசீக வளைகுடாவிலிருந்தும் எண்ணெய் வந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்"
என எழுதினார். டைம்சின் தலையங்கம் ஜனநாயகம் பற்றிய பிரசாரத்தை திரும்பத்திரும்ப கூறி
வந்தாலும், கோப்பல் அப்பட்டமாக முடிவு செய்திருந்தது என்னவென்றால், ஈராக்கின் படையெடுப்பு
இராணுவத்தளங்களை ஸ்தாபிப்பதையும் இந்த பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதையும் "எண்ணெய் பற்றியதும்"
ஆகும்.
இதனுடைய விலையாக ஈராக் சமுதாயம் சிதைக்கப்பட்டுவிட்டது. முதலில் 1991
வளைகுடா போரில் அந்த நாட்டை அழித்த பின்னர் மற்றும் 12 ஆண்டுகள் பொருளாதாரத்தடைகள்
செயல்படுத்தப்பட்டப்பின்னர், 2003 மார்ச்சில் அவற்றின் உள்கட்டமைப்புகளை சிதைப்பதற்கு உயர்-தொழில்நுட்ப
ஆயுதங்கள் கட்டவிழித்துவிடப்பட்டன. பாக்தாத்தில் நுழைந்தும் அமெரிக்க துருப்புக்கள் படுகொலைகளை நடத்தின
மற்றும் பொதுத்தேவைகளுக்கான அமைப்புக்களை சிதைப்பதற்கு சூறையாடலின் தோற்றுவாயை ஊக்குவித்தது. மற்றும்
ஏற்கனவே அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட மக்களை சோர்வடையச் செய்தது.
படையெடுப்பிற்கு பின்னர் எதிர்ப்பு நிலவுகிறது என்ற முதலாவது சமிக்கைகளுக்கு
ஒடுக்குமுறையுடன் பதிலளித்தது. கண்டனக்காரர்களை தாறுமாறாக கொன்றனர், இரவில் அதிரடிச் சோதனைகள்
ஒட்டுமொத்தமாக கைது செய்யப்படல் மற்றும் அபு-கிரைப் போன்ற சிறைச்சாலைகளில் முறைகேடான சித்திரவதை
நடந்தது, இவை அனைத்தும் மக்களின் எதிர்ப்பிற்கான உறுதிப்பாட்டை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டது.
நாட்டின் சுன்னி அரபுப்பகுதிகளில் முன்னாள் பாத்திஸ்ட் ஆட்சியினருக்கு மிகப்பெரும் ஆதரவு தளம் இருப்பதாக
கருதப்பட்டு அப்பகுதிகள் குறிப்பாக கொடூரமான இலக்குகளுக்குள்ளாக்கப்பட்டன.
அதே நேரத்தில், போரினாலும், பொருளாதார தடைகளாலும் ஏற்பட்டுவிட்ட
சேதத்தை சரிசெய்வதற்கு கடுமையான முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை. மறுசீரமைப்பு நிதி என்று
அழைக்கப்பட்டுவதற்கு பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை திருடப்பட்டன அல்லது ஹாலிபேர்ட்டன்
போன்ற நிறுவனங்களின் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்களுக்காக வீணாக்கப்பட்டது.
மில்லியன் கணக்கான ஈராக்கியர் நரக வாழ்வில் தள்ளப்பட்டு விட்டனர் வேலைகள்
இல்லை அல்லது நாகரீக வாழ்விற்கான முன்நிபந்தனையான மின்சாரம், குடிதண்ணீர், கழிவு நீரகற்றம் மற்றும்
சுகாதார சேவைகள் போன்றவை வழங்கப்படவில்லை. மக்களுக்கான மீதமிருக்கும் சில நலன்புரி வழங்கல்களான
மானிய எரிபொருள் மற்றும் உணவு போன்றவை திட்டமிட்டு இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கு
வீழ்ச்சியுற்றன ஒவ்வொரு மாதமும் குற்றவியல் வன்முறைகளால் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். எந்த மாற்றீடான
முன்னோக்கும் இல்லாத நிலையில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் உதவி ஆகிய இரண்டிற்கும் குடும்ப,
இன அல்லது மத வலைப்பின்னல்களை நோக்கி திரும்பவேண்டியிருக்கிறது.
பிளவுகள் தூண்டிவிடப்பட்டன
பிப்ரவரி 24ல் நியூயோர்க் டைம்சில் கருத்து தெரிவித்த கட்டுரையாளர்
தோமஸ் பிரீட்மான் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நீடிப்பதை நியாயப்படுத்துவதற்கு உள்நாட்டுப்போர் ஆபத்தை
அகந்தைப்போக்குடன் பயன்படுத்தியிருக்கிறார். "இந்தப் புள்ளி எளிதானது. உலகம் ஒரு பரந்த மதவாத மற்றும்
குறுங்குழு பிளவை நோக்கி ஆபத்தான அளவிற்கு சரிந்து கொண்டிருக்கிறது----இவற்றை போன்று ஒரு நீண்ட
நெடுங்காலமாக நாம் பார்த்ததில்லை. இந்த நச்சுதன்மை கொண்ட போக்கை தடுத்து நிறுத்துகின்ற வல்லமையுள்ள
ஒரே நாடு அமெரிக்கா" என்பது அவர் கருத்து. என்றாலும் அமெரிக்க இராணுவம் அங்கிருப்பது பெருகிவரும்
மோதலுக்கு நேரடியாக பொறுப்பாகும்.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க ஆக்கிரமிப்பு, இனவாத அரசியலை அடிப்படையாகக்
கொண்டது. நாட்டைவிட்டு வெளியேறியவர்கள், CIA
கொத்தடிமைகள் மற்றும் ஈராக்கில் எந்த அடித்தள ஆதரவும் இல்லாத, இயத் அல்லாவி மற்றும் அஹமது சலாபி
போன்ற புலம்பெயர்ந்த வர்த்தகர்கள், பல்வேறு காலங்களில் ஆளும் நிலைகளில் நியமிக்கப்பட்டனர். என்றாலும்,
அமெரிக்கா நம்பியிருக்கின்ற குர்து தேசியவாதிகளின் பிரதான அமைப்பு, இனவாத அடிப்படையில் மாநிலப்பகுதியை
வடபகுதியில் நிறுவும், மற்றும் ஷியைட் அடிப்படைவாதிகள் ஈரான்-பாணியில் இஸ்லாமிய அரசை அமைக்க அபிலாஷை
கொண்டிருக்கின்றனர்.
1991 வளைகுடா போருக்குப்பின் விமானம் பறக்காத மண்டலம் என்ற சட்டம்
உருவாக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே செயலூக்கத்துடன் பிரிக்கப்பட்டுவிட்ட ஈராக்கின் வடபகுதி இப்போது
ஒரு தனி குர்திஸ் பிராந்தியம் என்று வரையறுக்கப்பட்டு அதற்கு சொந்த அரசாங்கம், சட்டங்கள் மற்றும்
இராணுவப்படைகள் உண்டு. இதற்கு கைமாறாக குர்திஸ் துருப்புக்கள் பலூஜா, மொசூல், மற்றும் இதர சுன்னி
பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் எதிர்ப்பை நசுக்குவதற்கு உதவுவதற்காக
அனுப்பப்பட்டிருக்கின்றன. கிர்குக் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு இனச்சுத்திகரிப்பிற்கான பிராச்சாரம்
தொடரப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான அரேபியரும், துர்க்கோமேனியர்களும் எண்ணெய் வளம்மிக்க
பிராந்தியத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி
செய்வார்களானால் அடுத்த ஆண்டு குர்திஸ் சிறிய-அரசில் அதை இணைத்துக் கொள்ள முடியும். குர்திஸ் தேசியவாத
செயல்திட்டத்தை எதிர்ப்பதை ஒடுக்க குடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஷியைட் செல்வந்தத்தட்டினர் ஆட்சியில் பங்கெடுத்துக்கொள்வதற்கு கைமாறாக, புஷ்
நிர்வாகம் அரசு அதிகாரம் மற்றும் இலாபம் தரும் எண்ணெய் வருவாய் ஆகிய இரண்டிலும் பங்கு வழங்க
உறுதியளித்துள்ளது. 2005 ஜனவரி தேர்தலில் ஷியைட் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்தது மற்றும் ஷியைட்
அடிப்படைவாத இப்ரஹிம்-அல்-ஜப்பாரி பிரமராக நியமிக்கப்பட்டார். புதிய அரசியல் சட்டம் 2005ல் அமெரிக்க
தூதர் சல்மே கலீல்ஷாத் ஆலாசனையில் எழுதப்பட்டது. அது ஷியைட்டுகளுடைய தென்பகுதியில் நாட்டின் எண்ணெய்
மற்றும் எரிவாயுவில் 60 சதவீதத்திற்கு மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒரு பிராந்திய
அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளை நிறுவியது.
அரசாங்கத்தின் மீது தங்களுக்குள்ள பிடிப்பை ஷியைட் கட்சிகள் பயன்படுத்தி அவர்களது
எதிரிகள் மீது ஒரு பயங்கரவாத அரசை உருவாக்கின. இன்னும் அமெரிக்க துருப்புக்களின் கட்டளையின்கீழ்
செயல்பட்டு வருகின்ற கிளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஈராக் இராணுவத்தின் பல பிரிவுகள்
ஷியைட் பகுதிகளிலிருந்து சேர்க்கப்பட்டவை. சிலர் தங்களது முதல் விசுவாசம் ஷியா மதபோதகர்களிடம் உள்ளது
என்ற உண்மையை மறைக்க முயலவில்லை மற்றும் சுன்னிக்கள் மீது தங்களது குறுங்குழு பகை உணர்வுகளையும்
மறுக்கவில்லை.
உள்துறை அமைச்சகம் ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான சுப்ரீம் கவுன்சிலின் (SCIRI)
கட்டுப்பாட்டில் உள்ளது அது ஈரானில் பயிற்சி பெற்ற பாதர் படைப்பிரிவு குடிப்படையினரை நூற்றுக்கணக்கில்
போலீஸ் பிரிவுகளில் நியமித்தது மற்றும் அவர்களை கொலைக் குழுக்களாக அனுப்பியது. நூற்றுக்கணக்கான
சுன்னிக்களும் அல்லது மதச்சார்பற்றவர்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஷியைட் அரசாங்கத்தின் இந்த கறைப்படிந்த போர், ஷியைட் மக்கள் அனைவருமே
ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்து வருவதாக குற்றம்சாட்டும் சுன்னி அதிதீவிரவாத அமைப்புக்களான அல்-கொய்தா
போன்றவை ஷியைட் பொதுமக்கள் மீதான பிற்போக்குத்தன தாக்குதல்களை தீவிரமாக்க காரணமாகியது. இப்படி
பழிவாங்கும் நடவடிக்கைகளின் தேவைக்கேற்ப கடந்த ஓராண்டிற்கு மேலாக ஷியைட் குடிப்படைகளின் எண்ணிக்கை
பெருகிவிட்டது.
தற்போது, வாஷிங்டனுக்கும் ஈரானிலுள்ள ஷியைட் மதவாத ஆட்சிக்கும் இடையில்
பதட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஈராக்கிலுள்ள ஷியைட் கன்னைகள் தங்களது குடிப்படைகளை
களைத்துவிட்டு தங்களது பாதுகாப்பு அமைச்சகங்களின் அதிகாரத்தை சுன்னிக்களை அடிப்படையாகக் கொண்டு
இயங்கும் கட்சிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று புஷ் நிர்வாகம் கோரி வருகிறது - அதே சக்திகளைத்தான்
அவர்கள், ஓரங்கட்ட முயன்று வருகின்றனர். அமெரிக்கா மற்றும் சுன்னி அமைப்பு ஆகிய இரண்டிற்கும் எதிராக
ஷியைட் தலைவர்கள் மறுபடியும் கடுமையான குற்றங்களை வெளியிட்டு வருகின்றனர்.
வகுப்புவாத விரோதப்போக்கு வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், ஒரு சம்பவம்
பகிரங்க மோதலை கிளப்பிவிடப்போகிறது என்பது தவிர்க்க முடியாதது. சமாராவிலுள்ள ஷியைட் புனித தளங்கள்
அழிக்கப்பட்டது இப்போது அதை செய்துவிட்டது.
ஒரு சோசலிச முன்னோக்கு
ஈராக்கில் ஒரு உள்நாட்டுப்போர் உருவாகுமானால் அது லெபனான் அல்லது முன்னாள்
யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனவாத மோதல்களைவிட மிகப்பெரும் பயங்கரத்தை
உருவாக்குகின்ற தன்மை கொண்டதாகும். மிகப்பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நகரமான பாக்தாத்தின் ஆறு
மில்லியன் மக்களில் இஸ்லாத்தின் இரண்டு கிளைகளை பின்பற்றுகிறவர்கிடையில் சரிசமமாக பிரிந்துவாழ்கின்றனர்.
எனவே ஈராக்கில் எந்த மோதல் நடந்தாசலும் அது அதன் எல்லைகளை தாண்டி தவிர்க்க முடியாத அளவிற்கு
சுன்னிக்கள் மேலாதிக்கம் செலுத்தும் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் மற்றும் ஷியைட்டுக்களின் ஈரான்
ஆகியவற்றிற்கு பரவிவிடும்.
பாத்திஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பது ஈராக்கை இனவாத மோதல்களில் ஆழ்த்திவிடுவது
மட்டுமல்லாமல் பரந்தரீதியாக மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத்தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதை அமெரிக்க ஆளும்
செல்வந்தத்தட்டினர் அறிந்தே இருந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், அதற்காக உறுதியாக வாதிடுபவர்களான
நவீன-பழமைவாதிகள் என்றழைக்கப்படுபவர்கள் அத்தகையதொரு விளைவை துல்லியமாக கணக்கிட்டே
அப்பிராந்தியத்திற்கான மூலோபாயத்தை அடிப்படையாக கொண்டனர்.
எடுத்துக்காட்டாக இப்போது தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை
துணை உதவியாளராக துணை ஜனாதிபதி டிக் சென்னியிடம் பணியாற்றி வருகின்ற டேவிட் வுரும்சர் 1997இல், சிரியாவிலும்,
ஈராக்கிலும் உள்ள பாதிஸ்ட்டு ஆட்சிகள் நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மதிப்பிட்டிருந்தார்.
அவர் "அரசு ஒடுக்குமுறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ஐக்கியம், வெளிவேடங்களுக்கு பின்னணியில், அவர்களது
அரசியல் பழங்குடி குறுங்குழுவாத மற்றும் கும்பல்/தலைவரின் முதன்மை கொண்டதாக விளக்கப்பட்டிருக்கிறது.
கொடுங்கோன்மை மதச்சார்பற்ற-அரபு தேசியவாத தலைவர்களினால் உருவாக்குகின்ற எந்த அமைப்பும் குறிப்பாக,
இராணுவம் சிதைவதை தடுக்க முடியாது.... இங்கே பிரச்சனை என்னவென்றால், மேற்கு நாடுகளும் இஸ்ரேலும்
இந்த குழப்பம்மிக்க சீர்குலைவை கட்டுப்படுத்துவதற்கும் விரைவுப்படுத்துவதற்கும் ஒரு மூலோபாயத்தை
உருவாக்க முடியுமா. அது சிறந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்ற ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு
வகை செய்யும்" என எழுதினார். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]
2001 செப்டம்பர் 11ல் அமெரிக்கா மீது பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து
இந்த மூலோபாயம் மேற்கொள்ளப்பட்டது. புஷ் நிர்வாகம், ஹூசேன் ஆட்சியை கவிழ்க்கவும், ஈராக் இராணுவத்தை
கலைக்கவும் ஒரு அமெரிக்க-சார்பு பொம்மை அரசாங்கத்தை திணிக்கவும் புஷ் நிர்வாகம் ஈராக் மீது படையெடுக்க
திட்டமிட்டது. பொதுமக்களை பயமுறுத்தவும் பழங்குடி குறுங்குழு மற்றும் சமூக எதிர்ப்புணர்வுகள் தோன்றுவதை ஒடுக்குவதற்கு
இராணுவம் "அதிர்ச்சியூட்டி பயமுறுத்தச்செய்ய" வேண்டும் என்பது வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின்
கருத்துருவாகும்.
இறுதி ஆய்வின்படி, முதலாம் உலகப்போரின் பின்விளைவாக பிரான்சும், பிரிட்டனும்,
மத்தியக்கிழக்கில் உருவாக்கிய அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கும் ஒரு கவனமற்ற முயற்சியில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டது. அப்போது மிகப்பெரும்பாலான அரபு அரசுகள்
விருப்பமான வகையில் பாலைவனத்தில் முன்னாள் ஒட்டோமான் சாம்ராஜிய மண்ணில் எல்லைகளை மேலோட்ட
அடிப்படையில் அமைத்துக்கொண்டது. 1991ல் வோல் ஸ்டிரீட் ஜோர்னல் வெளியிட்ட, இழிபுகழ் பிரகடனமான
"பலாத்காரம் தான் பணியாற்றும்!" என்பதை புஷ் நிர்வாகம் தனது ஒரு மூலோபாயமாக வைத்திருந்தது.
சிக்கலுக்குரிய வரலாற்றுரீதியான முரண்பாடுகளை, குண்டுகளை வீசி தீர்த்துவிட முடியாது என்ற உண்மையை இப்போது
நேருக்குநேராக அது எதிர்கொள்ளச் செய்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு போன்ற ஒடுக்கப்பட்ட பிராந்தியங்களிலுள்ள, முதலாளித்துவ
வர்க்கத்தின் பலவீனத்திலிருந்துதான் அமெரிக்க இராணுவவாதத்தின் முன் அரபு ஆட்சிகளின் சரணாகதி
ஊற்றெடுக்கின்றது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி தனது, நிரந்தர புரட்சி
தத்துவத்தில் அத்தகைய நாடுகளில் உள்ள முதலாளித்துவங்கள் இயல்பாகவே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிலையாக
எந்த போராட்டத்திற்கும் தலைமை ஏற்று நடத்துவதற்கு வல்லமை இல்லாதவை, அவற்றில் தொழிலாள வர்க்கமும்
மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் கிளர்ந்தெழுவது அவசியம் சம்மந்தப்படுத்தியாக வேண்டும். சாதாரண
உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக, அபிலாஷைகளை தீர்த்து வைக்க இயலாத தேசியவாத தலைவர்கள்,
பெரும்பாலும், ஏகாதிபத்திய கட்டளைகளுக்கு தலைவணங்கி மற்றும் சமூக குமுறல்களை அடக்குவதற்கு அப்பட்டமான
பலாத்காரத்தை பயன்படுத்துவர்.
ஈராக்கில் பாத்திஸ்ட் ஆட்சி ஒரு ஆராய வேண்டிய அம்சமாகும். பிரிட்டனின்
ஆட்சிக்குட்பட்டிருந்த முன்னாள் ஒட்டோமான் சாம்ராஜியத்தின் மூன்று மாகாணங்களில் இருந்து உருவாக்கப்பட்டதுதான்
ஈராக். சுன்னி அரபு சொத்துடைமை வர்க்கத்தினர், பாக்தாத்தில் ஆட்சி செய்துவந்த ஒட்டோமானியர்களிடம்
பணியாற்றி வந்தனர். அவர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஈராக்கின் தென்பகுதியிலுள்ள ஷியா
பழங்குடியினர்களையும், வடபகுதியில் உள்ள குர்திஸ் மக்களையும் ஆட்சிசெய்வதற்கு அதிகாரத்தில் அமர்த்தியது.
மற்றும் ஈரான், ஈராக், துருக்கி மற்றும் சிரியா ஏகாதிபத்தியத்தால் தன்னிச்சையாக பிரிக்கப்படுகின்ற நிலை
உருவாயிற்று.
தொழில்துறை வளர்ச்சியும், ஒரு பெரிய தொழிலாள வர்க்கமும் நாட்டிற்குள்
பகைமைகொள்ளும் நிலை அதிகரித்தது. தீர்க்கப்படாத தேசிய மற்றும் சமூக பிளவுகள் ஷியைட் அமைப்புக்களும்,
குர்து இயக்கங்களும், அதற்கெல்லாம் மேலாக தொழிலாள வர்க்கத்தினதும் தொடர்ச்சியான மோதல்களுக்கும்,
கிளர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தது. பாதிஸ்ட்டுகள் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கியதன் மூலம், குறிப்பாக,
கம்யூனிஸ்ட் கட்சி போர்குணமிக்க பிரிவுகளை ஒடுக்கியதன் மூலம் ஆட்சிக்கு வந்தது. அந்த நேரத்தில் இந்த
தாக்குதல்களை முழுமையாக சுன்னி மற்றும் ஷியிட் மத உயர்நிலை அமைப்பினரும் வாஷிங்டனும் ஆதரித்தன.
அதற்குப்பின்னர் சுன்னி நிர்வாகத்தினர் குர்து மற்றும் ஷியைட் எதிரிகள்மீது ஒட்டுமொத்த ஒடுக்குமுறையை
மேற்கொண்டனர்.
அதேபோன்று, சுன்னிக்கள் அதிகமாக வாழ்கின்ற ஈராக்கின் மத்திய மற்றும் மேற்கு
பிராந்தியங்களில் சுன்னிக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்ப்பு இயக்கம்
உருவானது. இது ஈராக்கின் ஆளும் வர்க்கத்தின் விலைபோகும் தன்மையை எதிரொலிப்பதாக இருந்தது. அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு பொதுமக்களின் விரோதப்போக்கை நியாயப்படுத்தியும் பரந்தரீதியாக சுரண்டிக்கொண்ட அதே நேரத்தில்,
அரசியல் தலைமையின் வெளியில் கூறப்படாத நோக்கம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அழுத்தங்களை கொடுத்து
பாரம்பரிய சுன்னி நிர்வாகத்திற்கு சலுகைகளை மீட்டுத்தருவதாகும். சுன்னி ஆளும் செல்வந்தத்தட்டினர் வெகுஜனங்களின்
அபிலாஷைகளுக்கு இன்னும் விரோதம் காட்டுவது ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த நாட்டை தன் கையில் எடுத்துக்
கொண்டதைவிட அவர்களின் நலன்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என்று கருதுகின்றன.
எனவே இந்த எதிர்ப்பு இயக்கம் மில்லியன் கணக்கான ஷியைட்டு மற்றும் குர்திஸ்
தொழிலாளர்கள் மற்றும் பாத்திஸ்ட்டுகள் கரங்களில் பல தசாப்தங்களாக, ஒடுக்குமுறையில் துன்புற்ற கிராமப்புற
ஏழை மக்கள் ஆகியோரின் பரவலான ஆதரவை பெற இயலவில்லை. மாறாக, எல்லா பின்னணிகளையும் சேர்ந்த
வெகுஜனங்களும், பல்வேறு வகைப்பட்ட வகுப்புவாதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்று வருகின்ற ஒரு
போராட்டத்தில் ஒரு அமெரிக்க ஆதரவான அரசில் பதவிகளை பெறுவதிற்காக சுன்னிக்கள், ஷியாக்கள், மற்றும்
குர்துகளால் கையாட்களாக பயன்படுத்தப்பட்டது.
மத்திய கிழக்கிலுள்ள பிற ஆட்சிகளும், இதிலிருந்து மாறுபட்டவையல்ல. ஒரு சிறிய ஆளும்
வர்க்கத்தின் சார்பில், அவை ஜனநாயகம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை தரத்திற்காக அபிலாஷைகளை
கொண்டிருக்கும் வெகுஜனங்களை ஒடுக்குகின்றன. அதே நேரத்தில் பன்னாட்டு பெருநிறுவனங்கள், அந்த பிராந்தியத்தை
சூறையாடுவதில் உதவிக்கொண்டிருக்கின்றன. நிம்மதியற்ற, தொழிலாள வர்க்கத்தை பிளவுப்படுத்தவும் வகுப்புவாத
மோதல் என்கின்ற முடிவற்ற முட்டுச்சந்தில் சமூக பதட்டங்களை திருப்பிவிடவும், அவை அத்தனையும் தேசியவாதம்
இனவாதம் மற்றும் குறுங்குழுவாதத்தில் அதிகளவில் சார்ந்திருக்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒரே முற்போக்கான மாற்றீடு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின்
முன்னோக்கில் மட்டும்தான் உள்ளது: தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெகுஜன சோசலிச
இயக்கத்தை முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை ஒழித்துக்கட்டி அனைத்து அறிவுக்கொவ்வாத தேசிய எல்லைகளையும்
ஒழித்துக்கட்டி மத்தியக்கிழக்கு ஐக்கிய சோசலிச அமைப்பு ஒன்றை உருவாக்குவதாக அமையும்.
இந்த போராட்டம், சோசலிசத்திற்கான பரந்தரீதியான சர்வதேச
போராட்டத்தின் ஓர் அங்கமாகும். உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துகின்ற வழியாக சுன்னிக்கள் மற்றும் ஷியாக்கள்,
அரபுகள் மற்றும் யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், குர்துகள் மற்றும் துருக்கி இனத்தவர் அனைவரும் முதலாளித்துவ
வர்க்கத்தின் அனைத்து கன்னைகளிலிருந்து அரசியல் சுயாதீனம் நிலை நாட்டப்படவேண்டும். அமெரிக்காவிலும் மற்றும்
சர்வதேச அளவிலும் அதே முன்னோக்கு உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், இந்த பிராந்தியத்திலிருந்து
அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புக்களையும் விலக்கிக்கொள்ளக் கோருவது அதே முன்னோக்கின் உந்துதலாக
அமைய வேண்டும்.
Top of page |