WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany's Left Party and the Public Service Strike
ஜேர்மனியின் இடது கட்சியும் பொது சேவை வேலைநிறுத்தமும்
By Lucas Adler
1 March 2006
Use this version
to print |
Send this link by email |
Email the author
உழைக்கும் மக்களுக்காக போராடும் ஒரு வெற்றியாளனாக தன்னை காட்டிக்கொள்வதற்கு
தற்போது நடைபெற்றுவரும் பொது சேவை ஊழியர்களின் தொழிற்துறை நடவடிக்கையை சுரண்டிக்கொள்வதற்கு ஜேர்மனியின்
இடது கட்சி மற்றொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. உரையாற்றுவதிலும் பத்திரிகைகளை வெளியிடுவதிலும்
ஆழ்ந்த ஆத்திரத்தை வெளிப்படுத்தி கட்சியின் பிரதிநிதிகள் பணிநேரங்களை நீடிக்கும் முதலாளிகளுடைய திட்டங்களை
மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வேலைகள் இழப்பை கண்டிக்கின்றன. என்றாலும் மாநில மற்றும் நகரசபை அரசாங்கத்தில்
எங்கெல்லாம் இடது கட்சி பங்குபெறுகிறதோ அது, ஊதியங்கள், வேலைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்
நிலைமைகளை தாக்குதலுக்கு உட்படுத்துவதில் ஒரு முன்னோடி பாத்திரத்தை வகித்து வருகிறது.
இடது கட்சி 2005 ஜுலையில் ஒரு மாநாட்டை நடத்தியது, அப்போது
PDS (ஜனநாயக
சோசலிச கட்சி - கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிச கட்சியான
SED-ன் முன்னோடிக் கட்சி) தன்னை இடது கட்சி என்று பெயர்
மாற்றம் செய்துகொண்டது மற்றும் மேற்கு ஜேர்மனியை தளமாகக் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் சமுகநீதிக்கான
தேர்தல் மாற்றீட்டின் (WASG)
உறுப்பினர்கள் இணைந்து கொள்வதற்கு அனுமதியளித்தது.
பெப்ரவரி 2-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இடது கட்சியின் மத்திய நாடாளுமன்ற
உறுப்பினர்களும், லோவர் சாக்சோனியின் பிராந்திய தலைவர்களான, டோரத்தி மென்ஸ்னர், மற்றும் டயத்தீர்
டெஹம் ஆகிய இருவரும், பொதுசேவையில் ஊழியர்கள் வெட்டு பற்றி குறிப்பிட்டு அது ''பொருளாதார பைத்தியக்காரத்தனம்''
என்றனர். மற்றும் லோவர் சாக்சோனியின் நிதியமைச்சரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின்
(CDU) உறுப்பினருமான
ஹார்ட்மட் மோல்ரிங், தொழிலாளர்களுடன் நேரடியாக மோதுவதற்கு முயன்று வருவதாக குற்றம் சாட்டினர். அவர்கள்
லோவர் சாக்சோனி அரசாங்கம், ஊதியங்களில் ஒரு 4 சதவீத குறைப்பிற்கு சமமாக 9,000 பொதுசேவை,
வேலைகளை அழிப்பதற்கும் மீதமுள்ள தொழிலாளர்களின் கூடுதல் நேர பணியை வெட்டுவதற்கும் திட்டமிட்டதையும் விமர்சித்துள்ளனர்.
பெப்ரவரி 6-ல் கட்சியின் துணைத் தலைவரான, டக்மார் எங்கல்மன் நீண்ட நேரம்
வேலை செய்ய அவர்கள் மறுப்பதற்கும் ஊதிய உயர்விற்கான தொழிலாளர் கோரிக்கைகளை முற்றிலும்
நியாயப்படுத்தி விவரித்தார். தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இல்லாமல் நீண்ட நேரம் பணியாற்ற சம்மதிப்பது
மற்றும் ஊதியங்களை தியாகம் செய்வது ஆகியவை தொடர்பான அண்மை ஆண்டுகளின் அனுபவம் வேலைகள் அழிப்பதை
தடுப்பதற்கு தவறிவிட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளின்
அழிவுதரும் நிதிகொள்கைக்காக, பொதுசேவை ஊழியர்கள் தங்களது ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கூறுவது
சரியல்ல என்று அவர் கூறினார்.
மத்திய நாடாளுமன்றத்தில் இடது கட்சியின் இரண்டு தலைவர்களில் ஒருவரான ஓஸ்கார்
லாபொன்டைன் "வேலையில்லாதிருப்போர் 5 மில்லியனுக்கு மேல் உயர்ந்திருக்கின்ற ஒரு நேரத்தில்" பணியாற்றும்
நேரத்தை நீடிப்பதற்கான எந்த முயற்சியும் பொறுப்பற்றவை என்று பெப்ரவரி 3-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்
குறிப்பிட்டிருக்கிறார். அவர்களது "ஒருதலைப்பட்சமான செலவின வெட்டுக்கொள்கையை," அமுல்படுத்துவதன் மூலம்
மாநில அரசாங்கங்களும் தொழிலதிபர் கூட்டமைப்புகளும் பொது சேவைகளுக்கான வழங்களுக்கும், வேலைகளுக்கும்,
ஆபத்துக்களை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சொத்துக்களின் மீது வரிகளை மீண்டும் உயர்த்துவது போன்ற
மாற்று நடவடிக்கைகளிலிருந்து மாநில அரசாங்கங்கள் தவிர்த்துக் கொண்டிருக்கும் காலம் வரை மாநிலங்களின் வரவு
செலவுத்திட்ட வளங்களை தோற்றுவிக்க வேண்டுவது என்பது ஒரு வெற்றுவாதம் என்று லாபொன்டைன் கூறுகிறார்.
ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் டாக்டர் ஜெக்கில் மற்றும் திரு. ஹைடு என்ற நூல்
முரண்பட்ட பாத்திரங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. எங்க்கல்மேனும் அவரது கூட்டாளிகளும் ஒரு சமுக
அனுதாபத்தின் ஒரு உணர்வை கொண்டுவர முயலுகின்றனர் அதே நேரத்தில் இடது கட்சி தனது அன்றாட நடவடிக்கை
ஒரு மிகவும் வேறுபட்ட சித்திரத்தை காட்டுகிறது.
பேர்லினில் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடு மிகவும் தெளிவாக தெரிகிறது
அங்கு இடது கட்சி SPD
-யுடன் கூட்டணி சேர்ந்து மாநில அளவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நகரத்தில்
ஆட்சி நடத்தி வருகிறது. பல சந்தர்ப்பங்களில் இந்த ''இடது சாரி'' நிர்வாகம் என்றழைக்கப்படுவது,
நாட்டிலேயே முதல் தடவையாக, தொழிலாள வர்க்கத்தின் வாழும் நிலைமைகள் மீது தீவிரமாக தாக்குதல்களை
நடத்தி வந்திருக்கிறது. அது இப்போது, உரத்தக்குரலில் கண்டிக்கின்ற சமுக வேலைத்திட்டங்களை தாக்குதலுக்குட்படுத்தும்
பேர்லின் கொள்கைகளை இடது கட்சி ஏற்கனவே அமுல்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே
SPD கூட்டணியுடன்,
பேர்லினில் இடது கட்சி அமுல்படுத்திய, அதே நடவடிக்கைகளை ஜேர்மனி முழுவதும் அமுல்படுத்துவதை, தடுப்பதற்காகத்தான்
உண்மையிலேயே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
SPD -க்கும்
CDU-விற்கும் (கிறிஸ்தவ
ஜனநாயக யூனியன்) இடையில் ஒரு தசாப்காலம் நீடித்துவந்த ஆளும் கூட்டணி மாநில அளவில் 2001
கோடைக்காலத்தில் வீழ்ச்சியுற்றது (பேர்லின் ஜேர்மனியிலுள்ள 16 மாநிலங்களில் சொந்த அதிகாரபூர்வமான மாநில
நிர்வாகமாக நடைபெறுகின்ற நகரமாகும்), PDS
தனது தேர்தல் பிரசாரத்தை அதிக அளவில் சமுகநீதிக்கான
போராட்டத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் பேர்லின் வங்கி நிறுவனத்தின்
(BGB) குற்றவியல்
கட்டுப்பாட்டையும் (wheelings)
பேரங்களையும் கண்டித்தது. அப்படியிருந்தும் ஜனவரி 2002-ல்
PDS-ம்
SPD-யும் ஆட்சி
அதிகாரத்தில் அமருவதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகளில், இரண்டு கட்சிகளும் பணிநேரத்தை
அதிகரித்து, ஊதிய வெட்டை அறிமுகப்படுத்தி மற்றும் பொது சேவைகளில் 15,000 வேலைகளை அழித்து பல நூறு
மில்லியன் யூரோ சேமிப்புக்களை கொண்டுவர கருதியிருப்பதாக அறிவித்தன.
இருக்கும் ஊதிய ஒப்பந்தங்களை ஒருதலைபட்சமாக மீறுவதாக அமைந்திருந்த இந்த
திட்டமிட்ட நடவடிக்கைகளின் காரணமாக ''இடது'' கூட்டணி "ஒருமைப்பாடு உடன்படிக்கை" என்று அழைக்கப்படுவது
தொடர்பாக சம்மந்தபட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்த வழியில், நடைமுறையில்
இருந்த வரி ஒப்பந்தங்களை மீறுவதற்கு பேர்லினில் சிறப்பு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. 10 சதவீத ஊதியக்குறைப்புடன்
நாட்டின் கிழக்குப்பகுதியில் நடைமுறையிலுள்ள, 40 மணி நேரத்திற்கு மேற்கு ஜேர்மனியில் பொதுவாக உள்ள வாரத்திற்கு
39.5 நேரத்திலிருந்து வேலை செய்யும் நேரங்களை அதிகரிக்க புதிய செனட் திட்டவட்டமாக கோரியது.
என்றாலும், தொழிற்சங்கங்களிலிருந்து பொதுமக்களிலிருந்து பல்வேறு கண்டனங்களால், இந்தக் கோரிக்கைகளை
ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
2003 ஜனவரியில் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியுற்ற பின்னர், பேர்லின் நகரம்
நகரசபை தொழிலதிபர் கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று செனட் முடிவு செய்தது.
பெரியளவிலான தொழிலதிபர் என்ற நெறிமுறைகளை இனி நகர நிர்வாகம் பின்பற்ற வேண்டியதில்லை என்ற நிலை
ஏற்பட்டது. நடைமுறையில் இருந்த ஊதிய ஒப்பந்தங்கள் பேர்லின் நகரசபைக்கு செல்லுபடியாகாது என்ற நிலை
ஏற்பட்டது மற்றும் செனட் உடனடியாக வாரத்திற்கு 40 மணியிலிருந்து, 42 மணி வரை ஊழியர்களுக்கான வேலை
நேரத்தை நீடிக்க வேண்டும் என்று அமுல்படுத்தியது.
அதே நேரத்தில் பேர்லினின் நான்கு பல்கலைக்கழகங்களையும் மற்றும் அதன் மூன்று
உயர்மட்ட தொழிற்நுட்ப கல்லூரிகளையும், மாநில மானியங்களை நிறுத்திவிடுவதாக, அச்சுறுத்தி தொழிலதிபர்
கூட்டமைப்புக்களில் இருந்து விலக செனட் கட்டாயப்படுத்தியது. அதன் பின்னர் நகரங்களுடைய பொதுப்போக்குவரத்து
மற்றும் துப்பரவு சேவைகளில் மிகவும் தீவிரமான செலவின-வெட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு அதே
அச்சுறுத்தலை பயன்படுத்தியது.
ஊதிய ஒப்பந்தங்கள் அங்கு இனி செயல்படாது என்ற ஒரு சூழ்நிலையில், பேர்லின்
செனட் தொழிற்சங்கங்களை அழைத்து --ஒரு இறுதி எச்சரிக்கையின் வடிவிலும் எந்தவிதமான சலுகைகளும்
இல்லாமல்-- ஒரு சிறப்பு வரி ஏற்பாட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியது. உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள்
தோல்வியடைய போகின்றன என்ற சூழ்நிலையில் தொழிற்சங்கங்களின் வெர்டி அமைப்பின் தலைவர் பிராங் பெர்ஸ்கி
தனிப்பட்டரீதியாக தலையிட்டார் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் செனட்டின் அடிப்படை கோரிக்கைகளுக்கு
சம்மதித்தார்.
இதன் விளைவாக ஏற்பட்ட ஒரு ஊதிய உடன்படிக்கை பொது தொழிலாளர்களது
ஊதியங்களில் 8 முதல் 12 சதவீதம் மட்டத்திற்கு வெட்டுவதாக அமைந்தது அதற்கு கைமாறாக குறைந்தபட்ச
வளைந்து கொடுக்கும் சலுகைகளும் வாராந்திர பணியில் சிறிய குறைப்பும் செய்யப்பட்டது. 2009 கடைசி வரை
பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக வேலைநீக்கம் தொடர்பாக சம்பிரதாயமாக விதிக்கப்பட்ட தடையை
தங்களது பேரங்களை நியாயப்படுத்துவதற்கு, தொழிற்சங்கங்கள் பயன்படுத்தி வருவது ஒன்றிற்கும் பயனற்றது மற்றும்
எந்தவிதமான தொய்வும் இன்றி ஆட்குறைப்பு நடைபெற்று வருகிறது.
எனவே, பேர்லின் நிர்வாகம், இடது கட்சி (அந்த நேரத்தில்
PDS) மற்றும்
SPD
ஒன்றிணைந்து, அதன் நிர்வாக பதவிக் காலத்தில் இரண்டாம் ஆண்டில் ஊழியருக்கான தொழிலாளர் செலவினத்தை
262 மில்லியன் யுரோக்கள் வரை குறைக்க அதனால் சாத்தியமாகியுள்ளது. மாநில புள்ளியியல் அலுவலகம், 2004
மார்ச் 15-ல் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ஐந்து ஆண்டுகளில் முதல் தடவையாக பேர்லினில் பொதுசேவை
ஊழியர்களின் செலவினங்களில் ஒரு வரவு செலவை குறைப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. "இந்த
சேமிப்புக்கள், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதிலிருந்து மட்டுமல்லாமல், ஊதிய மற்றும் சம்பள
வெட்டுக்களாலும் கிடைத்தவை" என்று பத்திரிகையில் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான வாசகம் கூறுகிறது.
பேர்லினின் பொது சேவை ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டது சம்மந்தமான
புள்ளி விவரம், 2002-க்கும் 2004-க்கும் இடையில் 14,779 வேலைகள் இழக்கப்பட்டதை காட்டுகிறது. இடது
கட்சியின் ஏமாற்று திட்டம் இல்லாமல் பொதுமக்களிடமிருந்து ஒரு தவிர்க்க முடியாத எதிர்த்தாக்குதலை
எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த சாத்தியமாகியிருக்கமுடியாது.
பேர்லின் நிர்வாகத்தின் சிக்கன கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு,
"உருவாக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட வளங்களை" எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று
வாதிடப்பட்டது அதாவது, தற்போது லாபொன்டைன் "ஒருதலைபட்சமான செலவின வெட்டுக்கருத்தியல்" என்று
ஆர்வத்துடன் கண்டிக்கின்ற விளைவுகள் அவை. மேலும் இடது கட்சி-SPD
நகர நிர்வாகமே பேர்லினின் காலி கருவூலத்திற்கு பெரும்பகுதி
பொறுப்பாகும்.
இந்த நிர்வாகம் பதவிக்கு வந்த நேரத்தில் அதன் முதலாவது பணி பேர்லின் வங்கி,
நிறுவனத்திற்கு, உத்தரவாதம் தருபவராக செயல்பட்டது. ஜேர்மனி மறு ஐக்கியம் உருவானதால் தலைநகரத்திற்கு
மத்திய மானியங்கள் தவிர்க்கப்பட்ட பின்னர் இந்த வங்கிகள் உருவாக்கப்பட்டது இதன் நோக்கம் பொது
திட்டங்களின் நிதிகளுக்காக ஒரு புதிய வளத்தை வழங்குவதற்கு அமைந்தது. முதலீட்டாளர்கள் வங்கி நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள், தனிப்பட்ட முறையில் சொத்துக்களை திரட்டுவதற்கு, பல்வேறு
வகைப்பட்ட ஆபத்துக்கள் நிறைந்த ரியல் எஸ்டேட் முதலீடுகள் பலவற்றிற்கு
BGB உத்தரவாதம்
தந்தது. என்றாலும், காலப்போக்கில் பேர்லின் நகரசபை
(C4 மில்லியன் அளவிற்கு) சிதைந்துவிட்ட முதலீடுகளுக்கும்,
வராக்கடன்கள் பெருகியதற்கும் அந்த நகரசபைக்கு சொந்தமான வங்கி நிறுவனத்திற்கு நகரசபை பணம் செலுத்த
வேண்டி வந்தது.
இந்த வங்கி நெருக்கடிதான்
CDU/SPD கூட்டணி பதவி விலகியதற்கும், அதற்கு பின்னர்,
2001-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டதற்கு காரணம் என்றாலும், புதிய
PDS-SPD செனட்
ஆட்சிக்கு வந்தவுடன் பழைய நிர்வாகத்தின் கொள்கையையே தொடர்ந்து செயல்படுத்தியது. பங்குகளை வாங்கியவர்களுக்கு
இலாப உத்தரவாதம் தருகின்ற வகையில், 2030 வரை 21.6 பில்லியன், யுரோக்கள் அளவிற்கு அந்த வங்கியின்
சார்பில் அனைத்து நிதி ஆபத்துக்களையும் ஏற்றுகொள்கின்ற வகையில் செனட் சட்டம் இயற்றியது. இதை செயல்படுத்துகின்ற
வகையில் நகரத்தின் வரவு செலவில் ஒரு சிறப்பு தலைப்பு ஒன்றை உருவாக்கி அதன் காரணமாக ஆண்டிற்கு அந்த
வங்கி நிறுவனத்திற்கு 300 மில்லியன் யுரோக்கள் செலுத்த பட்டியிலடப்பட்டது.
இந்தக் கொள்கையை நியாயப்படுத்துகின்ற முயற்சியில் இடது கட்சியின் பிரதிநிதிகள்
(அந்த நேரத்தில் PDS)
குறிப்பாக ஹரால்டு உல்ப் - கிரிகோர் கீசிக்கு வாரிசாக வந்தவர், கீசியும், (இவரும் இடது கட்சியின் ஒரு தலைவர்தான்)
பேர்லினின் வர்த்தகத்துறைக்கான பொருளாதார செனட்டராக பணியாற்றினார் நடைமுறை சிக்கல்கள் என்றழைக்கப்பட்டவற்றையும்,
செனட்டை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களையும், வழக்கமாக எடுத்துக்காட்டின. ஆனால், பொது ஊழியர்களின்
ஊதியங்களை சம்பளங்களை குறைப்பது, என்று வரும்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்களை, குப்பைக்கூடையில்,
தூக்கி எறிய வேண்டும். மற்றும் நடைமுறையிலுள்ள ஊதிய உடன்படிக்கைகளை சிதைப்பதற்கு எந்த வழிமுறைகளையும்
பின்பற்றுவதற்கு இடது கட்சி அமைச்சர்கள், நியாயப்படுத்தினர். இது மட்டுமே இந்தக்கட்சியின் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிரான தன்மையை முழுமையாக அம்பலப்படுத்துவதாக உள்ளது. பணக்கார
செல்வந்தத்தட்டினருக்கான இலாபங்கள் புனிதமானவையாக கருதப்படுகின்றன மற்றும் அவை, பொதுமக்களின் பரந்த
வெகுஜனங்களால் செலுத்தியாக வேண்டும்.
இடது கட்சியின் இரட்டை பாத்திரம் வகித்தது பெருமளவில் அம்பலமாகிக்கொண்டு வருகிறது.
ஒரு பக்கத்தில் நிலைபெற்றுவிட்ட கட்சிகள் நீண்டகாலத்திற்கு இனி செயல்படுத்த முடியாது என்று கருதுகின்ற அனைத்து
வலித்தரக்கூடிய நடவடிக்கைகளையும் தொழிலாள வர்க்கத்தின் மீது எங்கு வேண்டுமானாலும் செயல்படுத்தி வருகிறது.
மற்றொரு பக்கம், சமுக நீதி என்ற வாய்வீச்சை சுரண்டிக்கொண்டு அதே நடவடிக்கைகளுக்கு எதிராக தோன்றுகின்ற
எந்த எதிர்ப்பையும் சமுக சீர்திருத்தவாதத்தின் அரசியல் முட்டுச்சந்திற்கு அது வழியை திறந்துவிடுகிறது.
Top of page |