World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government launches rural employment guarantee

Band-aid for a social calamity

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத்தை இந்திய அரசாங்கம் தொடக்கியது

ஒரு சமூக துயருக்கான துரித-தற்காலிக உதவி
By Parwini Zora and Kranti Kumara
14 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அதிகம் பேசப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தை (National Rural Employment Guarantee Program -NREGP) ஆந்திர பிரதேசத்திலுள்ள ஒரு வறுமைமிக்க கிராமத்தில் பெப்ரவரி 2ல் முறைப்படி தொடக்கி வைத்தனர்.

குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தில் (CMP) இந்தியாவின் வேலையில்லாதிருப்போருக்கான பொதுவேலைத் திட்டம் முக்கியமாய் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது ----காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் சட்டமியற்றும் வேலைதிட்டத்திற்கான அடிப்படையை அமைப்பதாகக் கூறப்படும் இந்த உடன்படிக்கை இடது முன்னணியின் உதவியோடு வரைவுச்சட்டமாக இயற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி "வெளியிலிருந்து" அரசாங்கத்தை ஆதரிக்கிறது.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டம் (NREGP) ஆறு மாதங்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்டு விட்டபோதிலும், இந்தியாவின் பெரும்பாலான அரசியல் மற்றும் பெரு நிறுவன செல்வந்த தட்டினர் இதில் மிகவும் தாராளம் காட்டப்படுவதாக கருதியதன் காரணமாக இந்த திட்டம் அமுல்படுத்துவது காலதாமதப்பட்டது.

உண்மையிலேயே வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டம் இரத்தக் கசிவை தடுப்பதற்கு கட்டுபோடுவதற்கு சமமானதாகும். இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கடுமையான துன்பம் நிலவுகின்ற சூழ்நிலைகளில் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினருக்கு ஆண்டில் 100 நாட்களுக்கு நாளாந்தம் 60 ரூபாய் ஊதியத்தில் (1.33 டாலர்) தினசரி வேலை தர உறுதியளித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த உத்தரவாதம் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிகளில்தான் செயல்படுத்தப்படும். பிரதமர், இந்த அம்சத்தை வலியுறுத்தி கூறும்போது, "நாடு முழுவதற்கும் [NREGP] விரிவுபடுத்த நாங்கள் உறுதியளித்திருந்தாலும், 200 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் தற்போது நாங்கள் குவிமையப்படுத்தயிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

வேலையில்லாதிருப்போர் பொதுவாக இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் தொழிற்திறமையற்ற கடின உழைப்பு குறிப்பாக நீர்ப்பாசனம், நீர் சேமிப்பு, சாலைகள் அமைப்பு மற்றும் கட்டுமானத்திட்டங்களுக்கான மண் தோண்டும் வேலைதரப்படும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

சோனியா காந்தி அமைத்துள்ள தேசிய ஆலோசனை சபையின்படி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டத்தை இப்போதிருந்து 5 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும்போது ஆண்டிற்கு 400 பில்லியன் ரூபாய்கள் (சுமார் 9 பில்லியன் டாலர்கள்) செலவாகும். (பார்க்கவும் http://nac.nic.in/communication/FinancialREGA.pdf) இது, அரசாங்கம் ஒரு டாலருக்கும் குறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதும் 300 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆண்டிற்கு 30 டாலருக்கு சமமான வருவாயாகும்.

இந்தியாவின் மொத்த சமூக உற்பத்தியில் (GDP) ஒன்பது பில்லியன் டாலர்கள் சுமார் ஒரு சதவீதத்தை குறிக்கும். ஆனால் அரசாங்கம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கான 8 சதவீதத்தை எட்டுமானால் 2012ல் இது கணிசமான அளவிற்கு குறைந்த தொகையையே காட்டும். ஒன்பது பில்லியன் டாலர்கள் இன்றைய இராணுவ வரவு செலவுத்திட்டத்தில் பாதி அளவை குறிக்கும் என்பதையும் மேலும் குறிப்பிட வேண்டும் ஆனால் இந்தியா வரும் ஆண்டுகளில் அதன் இராணுவ செலவினங்களை கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ வரவு செலவு மொத்த சமூக உற்பத்தியில் 3 சதவீத அளவிற்கு உயர்த்தப்படுவதை தான் விரும்புவதாக அண்மையில் பிரதமர் சிங் தெரிவித்தார்.

தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒதுக்கப்படும் 9 பில்லியன் டாலர்கள் வறுமையை ஒழிப்பதற்கு செலவிடப்படும் புதிய பணம் அல்ல. பணத்தில் சில பகுதி ஏற்கெனவே செயல்பட்டுவரும் வறுமையை மட்டுப்படுத்தும் திட்டங்களிலிருந்து எடுக்கப்படுகிறது.

UPA அரசாங்கம் வலதுசாரிப்பக்கம் இடைவிடாது நகர்ந்துக்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்ற நேரத்தில் வேலை உத்திரவாதத்திட்டத்தின் தொடக்கம் வருகிறது. அரசாங்கம் பல்வேறு அரசு நிறுவன முதலீடுகளை தனியாருக்கு விற்பது மற்றும் இதர முதலீட்டாளர்களுடன் நட்புறவுக்கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது --மிக அண்மைக்காலத்தில் சில்லறை விற்பனைத்துறையை வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு திறந்து விட்டிருக்கிறது--- அதனால் தொழிலாளர்களின் வேலைகள் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளது மற்றும் அது திரும்ப திரும்ப தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி வைக்கும் கட்டுப்பாடுகளை இரத்து செய்யவும் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை ஒதுக்கவும் மற்றும் தொழிற்சாலைகளை மூடுவதற்கான தங்களது எண்ணத்தையும் அறிவித்து வருகின்றன. கிராம புறங்களில் உள்ள கடுந்துன்பங்கள்-----2004 மே மாதம் UPA வியப்பளிக்கும் வகையில் தேர்தல் வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கியமான காரணியாகும். அவை தொடர்ந்து ஆழமாகிக்கொண்டு வருவதாக மிகப்பெரும்பாலான பார்வையாளர்கள் கருதுகின்றனர். புஷ் நிர்வாகத்தோடு கூட்டு சேர்ந்து கொள்வதற்கு UPA அரசாங்கத்தின் ஆர்வம் குறித்து பொதுமக்களிடையே ஆத்திரமும் வளர்ந்து கொண்டு வருகிறது.

நவீன-தாராளவாத ''பொருளாதார சீர்திருத்தங்கள்'' பதினைந்து ஆண்டுகளாக முன்னெடுப்பதால் ஏற்கனவே அவர்களின் பாதுகாப்பற்ற சமூக-பொருளாதார நிலை நாசமடைந்துவிட்ட நிலையில் இந்தியாவின் கிராம வெகுஜனங்களின் அவலத்தை குறித்துதான் கவலைப்படுவதாக பாவனைகாட்டுக்கின்ற காங்கிரஸ் தலைமையிலான UPA மேற்கொள்கின்ற ஒரு அப்பட்டமான முயற்சிதான் தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டம். கிராம்ப்புற இந்தியாவை பீடித்துள்ள துன்பங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்ற அதே பொருளாதார கொள்கைகளை வேகமாக செயல்படுத்தும்போது UPA-விற்கு ஒரு அரசியல் கவசமாகவும் அதை பயன்படுத்த முடியும்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டத்தை அமுல்படுத்தப்படும் நேரம் ஐந்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறவிருக்கின்ற தேர்தல்களை ஒட்டி காங்கிரஸ் கட்சி வகுத்துள்ள மூலோபாயத்தால் ஈர்க்கப்பட்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. பெப்ரவரி 2ல் தொடக்கவிழாவில் உரையாற்றிய பிரதமர் சிங் இந்த சட்டம் அடிமட்டத்து ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார். அந்நடைமுறை திட்டத்தை செயல்படுத்துவது (தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற அமைப்புக்கள்) பஞ்சாயத்துக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற உண்மையை குறிப்பதாகும்.

முந்திய வரலாற்றை பார்க்கும்போதும் இந்திய அரசியல் செல்வந்தத்தட்டினரின் இலஞ்சம் வாங்கும் தன்மையை பார்க்கும்போதும், உள்ளூர் கட்சித் தலைவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி வாக்குகளை கோரி பெறுவதற்கு ஒரு வகையில் சலுகை தரும் முறையில் பயன்படுத்திக்கொள்வதுடன் நிதிகளை தங்களுக்கே சொந்தத்திலும், தங்களுக்கு வேண்டிய வர்த்தக துதிபாடிகளுக்கும் ஒதுக்கிவிடுவர். அத்தகையதொரு சாத்தியக்கூறு உருவாகும் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட சிங் இந்தத் திட்டத்திற்கு "ஒரு வலுவான கண்காணிப்பு முறை தேவை அப்போதுதான் இந்தத்திட்டத்தின் பயன்கள் ஏழைகளுக்கு முடிந்தவரை அதிகபட்சமாக சென்று சேரும்" என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைமை தற்போது தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டத்தை தனது ஏழை-சார்பு ஆதாரச்சான்று என்று கூறிக்கொண்டு வந்தாலும், அந்தத் திட்டத்தை உருவாக்குவதிலும், அமுல்படுத்துவதிலும் அவசர உணர்வு எதையும் காட்டவில்லை. சென்ற ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும், தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டம் இந்தமாதம்தான் அறிவிக்கப்பட்டது. மற்றும் அந்த சட்டத்தில் கண்டுள்ள நிபந்தனைகளின்படி மாநில அரசாங்கங்களுக்குத்தான் திட்டத்தை செயல்படுத்துகின்ற பொறுப்பு தரப்பட்டிருக்கிறது அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவற்றிற்கு மேலும் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும்.

2004 காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் மையமாக அமைந்திருந்தது, ஒவ்வொரு ஏழை மற்றும் கீழ் மட்ட மத்தியதர வர்க்க வீடுகள் ஒவ்வொன்றிலும் கிராம்ப்புறங்களிலும் நகரப்பகுதிகளிலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 100 நாட்கள் வேலைதர ஒரு உறுதி தரப்பட்டது, அப்படியிருந்தும் அத்தகையதொரு வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவருவதற்கான திட்டங்கள் எதுவும் UPA-வின் முதலாவது வரவு செலவு திட்டத்தில் இடம்பெறவில்லை. மற்றும் இந்தத் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட சட்டம் மோசமானதாக அமைந்திருந்ததால் ஒரு அரசியல் கண்டக்குரலை அது கிளறிவிட்டது.

அந்தத் திட்டம் UPA ஆட்சிக்கு வந்து 15 மாதங்களுக்கு பின்னர் இறுதியாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. நகர்புற ஏழைகளுக்கும் மற்றும் வேலையில்லாதவர்களுக்கும், எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்ட சட்டம் "ஒரு குடும்பத்தினர்'' என்பதற்கு தந்துள்ள விளக்கம், "இரத்தம் சம்மந்தப்பட்ட, திருமண அல்லது தத்து எடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் ஒருவரோடு ஒருவர் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் வழக்கமாக ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றும் உணவை பகிர்ந்து கொள்பவர்கள் அல்லது ஒரு பொதுவான விநியோக அட்டை வைத்திருப்பவர்கள்." அத்தகைய ஒரு சட்ட விளக்கத்தில் அடங்கியுள்ள உள்ளார்ந்த கெட்ட நோக்கமும் தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டத்தின் முற்றிலும் போதுமான தேவைக்கு உதவாத தன்மையும் எப்போது வெளிப்படையாக தெரிந்தது என்றால் அந்த சட்டம் ஒரு தனிநபர் அடங்கிய வீடுகளை ஒரு பெரிய விரிவான குடும்பம் தனித்தனி வீடுகளில் வாழ்கின்றபோது அந்த குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டாக ஒரே விநியோக அட்டையில் பெயர்களை பட்டியலிட்டிருப்பது உணரப்படுகின்றபோதுதான். (அரசாங்கம் கொடுக்கின்ற அடையாள அட்டை சிறு வெளியீட்டில் அரிசி கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை குறைந்த விலையில், தரம் தாழ்ந்த பொருட்களை ஒரு குடும்பம் குறைந்தபட்ச அளவிற்கு வாங்குவதற்கு வகை செய்கிறது.)

இந்தத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாய் (சுமார் 1.33 டாலர்) வழங்கப்படும் என்று தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்ட சட்டம் வகை செய்திருப்பதாக பத்திரிகைகள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தாலும், அந்த சட்டமே சொல்வது என்னவென்றால், மத்திய அரசாங்கம் ஒரு 60 ரூபாய் குறைந்த பட்ச ஊதியத்தை" நிர்ணயிக்கக் ''கூடும்'' என்று கூறப்பட்டிருக்கிறது. என்றாலும் அரசாங்கம் அத்தகையதொரு கட்டளையை வெளியிடுகின்ற வரை பிராந்திய அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கு என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கிராம்ப்புற குறைந்த பட்ச தினக்கூலிதான், வழங்கப்படும். 2002ல் இவை பாண்டிச்சேரி பிராந்தியத்திலுள்ள ஏணாம் பகுதியில் ரூ. 19.25 லிருந்து (சுமார் 0.43 டாலர்) புதுதில்லியில் ரூ. 102.60 (2.28 டாலர்) வரை பல்வேறு வேறுபாடு காணப்பட்டது.

சட்டத்தில் உணவுக்கு வகை செய்யப்படவில்லை மற்றும் ஊழியர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து பணியாற்றும் இடம் 5 கி.மீ அப்பால் இருக்குமானால் ஊதியத்தில் பத்து சதவீதத்தை ஒரு படியாக வழங்குவதற்கு வகை செய்கிறது. பணி சம்மந்தப்பட்ட காயம் அல்லது மரணம் ஏற்படும்போது கட்டுமானப்பணியில் இது ஒரு பொதுவாக நடக்கின்ற ஒன்று குறிப்பாக தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற காலனிகளோ அல்லது பாதுகாப்பு தலைகவசங்களோ தரப்படுவதில்லை, அரசு அவர்களுக்கு ஒரு சொற்பத்தொகையை இழப்பீடாக வழங்குவதற்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்ட சட்டப்படி ஒரு தொழிலாளிக்கு மரணத்தை விளைவிக்கும் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும் விபத்து ஏற்படுமானால் அதிகாரிகள் 25, 000 ரூபாய் (சுமார் 575 டாலர்) வழங்கினால் போதும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டமை விமர்சனத்தை கிளறிவிட்டது மற்றும் பல மாநில அரசாங்கங்கள் எதிர்ப்புக்கூட தெரிவித்தன. அந்த சட்டம் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளிகள் தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றும்போது அவர்களது ஊதியத்தில் கால்பங்கை மாநிலங்கள் நிதியாக தரவேண்டும் என்ற உண்மையை அவை ஆட்சேபித்தன. அத்துடன் பொருட்களின் செலவில் ஒரு கால்பகுதி செலவினத்தையும் மற்றும் ஏதாவது ஒரு வகையில் வேலையில்லாதிருப்போருக்கான இழப்பீட்டையும் (தினசரி ஒரு டாலருக்கும் கணிசமான அளவிற்கு குறைந்தது) அவர்கள் தேவைப்படுகின்ற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலைகொடுக்க முடியாவிட்டால் இழப்பீடு தரவேண்டியதையும் அவர்கள் ஆட்சேபித்தனர். மாநில அரசாங்கங்கள் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடிகளை பார்க்கும்போது உலக வங்கி மற்றும் இதர நிதி அமைப்புகள் வற்புறுத்துதலால் அவை பெற்ற கடன்களால் அந்த நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே சட்டத்திலுள்ள பல ஓட்டைகளை பயன்படுத்தி திட்ட முறையாக செயல்படுத்தப்படுவதை அவை நாசப்படுத்திவிடுகின்ற வாய்ப்பும் உண்டு----- அவற்றில் தகுதியுள்ளவர்களுக்கு பணி ஒதுக்கீடு பற்றிய தகவலை தராமலும் விட்டுவிடலாம்.

ஊதியத்தில் முக்கால் பங்கை பொருட்களாக தரமுடியும் என்பதால் உள்ளூர் அதிகாரிகள் ஊதியத்திற்கு இணையாக உணவு பொருட்களை முடிவு செய்கின்ற அதிகாரம் பெறுகின்றனர். இது பகிரங்கமாக உள்ளூர் அதிகாரிகள் நிதிமோசடிகளில் ஈடுபடுவதற்கு பகிரங்கமாக அங்கீகாரம் தருவதாகும்.

ஒரு கிராமப்புற சமூகப் பேரழிவு

இந்திய ஆளும் வர்க்கம் 1991 இற்கு பின் அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் கிராம வெகுஜனங்களிடம் ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியது, அதற்கு முன்னர் பட்டினி கிடக்கும் நிலையை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அவர்கள் வழங்கி வந்த சொற்பமான உதவியை முற்றிலும் நீக்கிவிட்டதாலும், அல்லது கடுமையாக குறைத்துவிட்டதாலும், அவர்கள் உரமானியங்கள், வித்துக்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை மானிய அடிப்படையில் வழங்கியதை குறைத்து அல்லது இரத்து செய்துவிட்டதால் இந்த பேரழிவு ஏற்பட்டது. 10 இந்தியர்களில் ஆறு பேர் விவசாயத்தை சார்ந்திருந்தாலும் மத்திய அரசாங்கம் விவசாயத்திற்காக செலவிடுகின்ற தொகை அனைத்து வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளிலும் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது.

கிராமப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையில் நிலமற்றவர்கள் இந்திய கிராமப்புற குடும்பங்களில் 40 சதவீதம் பேருக்கு நிலமில்லை - இப்படிப்பட்டவர்கள் வேலைகிடைப்பதில் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்தியாவின் சமூக பொருளாதார புள்ளி விவரங்கள் துல்லியமானவை அல்ல, என்றாலும் பொதுவாக கிராமப்புற மக்களில் 30 சதவீதம் பேர் வேலையில்லாதிருக்கின்றனர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு தேசியரீதியாக நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலிருந்து இந்தியா ஏற்றுமதி மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி மாறியிருப்பது ஒரு மகத்தான வெற்றிக்கதை என்று பெருநிறுவன ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனங்களும் சித்தரிக்க விரும்புகின்றன. ஆனால் இந்திய விவசாயி ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்" என்று மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. விவசாயிகள் வாழ்க்கைதரம் வீழ்ந்துவிட்டது என்பது "100 சதவீதம் சரி".

அரசாங்க வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராம்ப்புற கடன்கள் கிடைப்பது கடுமையாக வெட்டப்பட்டிருப்பதால் தங்களது விதைகள் உரங்கள் மற்றும் இதர சக்திதரும் விவசாய பொருட்களை வாங்குவதற்கு பணத்திற்காக தனியார் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த கடன்களுக்கு மிகப்பெரும் வட்டிவிகிதங்கள் 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதால் அந்த கடன்களை அடைப்பதற்கு விவசாயிகள் அதிரடியாக தங்களது விவசாய வருமானத்தை பெருக்குகின்ற வழிகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதனால் அடிக்கடி சீரழிவு முடிவுகள் ஏற்படுகின்றன.

உதாரணத்திற்காக பருத்தி விவசாயிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை எடுத்துக்கொள்வோம். உலகச் சந்தையில் 1990களின் தொடக்கத்தில் பருத்தி விலைகள் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு அரசாங்க ஊக்குவிப்போடு விவசாயிகளில் கணிசமான தொகையினர் உணவு தானிய உற்பத்தியிலிருந்து பருத்தி பயிரிடத்தொடங்கினர். இதன் ஒரு விளைவாக சிறிய மற்றும் வாரக்குத்தகை விவசாயிகள் தங்களது சொற்ப மகசூலை அரசு உத்திரவாதம் தரும் குறைந்தபட்ச விலைக்கு உள்ளூர் சந்தையில் விற்றுக்கொண்டு வந்தவர்கள், உலக சந்தையின் கருணைக்காக காத்திருக்கவேண்டி வந்தது. 1990களின் நடுப்பகுதியில் பருத்தி விலைகள் வீழ்ச்சியடைந்ததும், விவசாயிகளின் வருமானமும் சிதைந்தது, அவர்கள் தங்கள் கடன்களை அடைக்க இயலவில்லை, பலர் தங்களது சொற்ப நில உடைமைகளையும், இழந்து விட்டனர் மற்றும் அதன் ஒரு விளைவாக அத்தகைய சிறிய விவசாயிகள் ஏராளமான அளவிற்கு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர், அதனால் கிராமப் புறங்களில் வேலையில்லாத நிலை மிகப்பெருமளவிற்கு உயர்ந்தது, இந்த விளைவால் ஏற்பட்ட திருப்பத்தின் காரணமாக, பெரிய மற்றும் சிறிய நகரங்களை நோக்கி ஏராளமான மக்கள் புலம் பெயர்ந்து நகரப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகளோடு சேர்ந்து கொண்டனர்.

கிராமப்புறங்களில் பெருகிவருகின்ற வறுமை மற்றும் பாதுகாப்பற்ற பொருளாதார நிலை ஆகியவற்றின் ஒரு விளைவு என்னவென்றால் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கும் போக்காகும். 1997 இற்கு பின்னர் 25,000 இற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

உணவு தானியங்கள் கிடைக்கும் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. 1991ல் ஒரு நபருக்கான உணவு தானியம் 178 கிலோ ஆனால் 2005ல் இது அதிர்ச்சியூட்டும் வகையில் 154 கிலோவாக குறைந்துள்ளது. இந்த சராசரியில் நகரப்பகுதிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன அங்கு ஏராளமான உணவு தானியம் கிடைக்கிறது. அதோடு ஒப்பிடும்போது கிரம்ப்பகுதி மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மிகத்தீவிரமானதாகும்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகம் 2000ல் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்திய கிராம்ப்புற மக்களில் முக்கால்வாசிப்பேரும் நகரப்புற மக்களில் பாதிப்பேரும் குறைந்தபட்சம் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலோரி சக்திக்கும் குறைந்த உணவுப்பொருட்களையே உட்கொள்ளுகின்றனர்.

கடல் அளவு துன்பத்திற்கு ஒரு கரண்டி அளவு சீர்திருத்தம்

மஹாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட (EGS) பாணியில் தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்திரவாதத்திட்டத்தின் மீது மேல்நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்தத் திட்டம் செயல்பட்டது குறித்தும் அவற்றின் விளைவுகள் பற்றியும் UPA அரசாங்கமும், அல்லது இடதுசாரி கூட்டணியோ வலியுறுத்தவில்லை என்றாலும் இரண்டு உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன. அதிகாரிகள் இந்த திட்டத்திலிருந்து 100 மில்லியன் ரூபாய்களை இலஞ்சமாக ஒதுக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்திற்கு அப்பாலும் 2004-2005-ல் மகாராஷ்டிராவில் சத்தூட்ட குறைவு காரணமாக பல ஆயிரம் பேர் மடிந்தனர் மற்றும் கடன் பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

UPA அரசாங்கம் மிகுந்த அகந்தை போக்கோடு தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டத்தின் மூலம் ''மனிதநேயத்தோடு'' ''சீர்திருத்தங்களை'' கடைப்பிடித்து வருவதாக கூறிக்கொண்டாலும், CPI(M) தலைமையிலான இடது முன்னணி அதைவிட எந்தவகையிலும் குறைவில்லாத மோசடியை கடைபிடித்து வருகிறது. இந்தியாவின் முதலாளித்துவ பாரம்பரிய ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைமையில் நடைபெற்று வருகின்ற ஒரு அரசாங்கத்தை தூக்கிப்பிடித்து நிற்கும் அதன் கொள்கையின் திறமைக்கு ஒரு சான்று வேலைவாய்ப்பு உத்திரவாதம் என்று அது கூறிவருகிறது.

இந்தக் கூற்று இரட்டைத் தவறுகளை கொண்டது. முதலாவதாக அரசாங்கம் தொழிலாளியின் முதுகை முறிக்கும் வேலையை ஒரு கிராம்ப்புற குடும்பத்தில் ஒருவருக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறது அல்லது அது தவறுமானால் வேலையில்லாதவர்களுக்கான உதவித்தொகையாக ஒரு நாளைக்கு சில ரூபாய்களை தருகிறது. இது, நாடு சுதந்திரம் பெற்றபின் ஏற்பட்டுள்ள படுமோசமான கிராமப்புற அவலநிலை என்று CPI(M) மே வர்ணித்துள்ள நிலையை போக்குவதற்கு உதவாது.

இரண்டாவதாக, இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான UPA வை தூக்கிப்பிடித்து வருவதன் மூலம் அரசியல் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி வருகிறது மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் அதன் சமூதாய அடிப்படையில் பிற்போக்குத்தனமான நவீன தாராளவாத சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்த வழி செய்து கொடுக்கிறது என்றாலும் பெருகிவரும் வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலைமைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு 2004 மே தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிப்பட்டது. மற்றும் சென்ற செப்டம்பரில் நடைபெற்ற ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் உட்பட அலை போன்றதொரு போர்குணமிக்க வேலை நிறுத்தங்களால் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

Top of page