World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்As violence spirals in Iraq Prosecutor demands death penalty in Hussein show trial ஈராக்கின் வன்முறை பெருகி வளரும் நிலையில், ஹுசைன் கபட நீதிவிசாரணையில் அரசாங்க வழக்கறிஞர் அவருக்கு மரண தண்டனை கோருகிறார் By David Walsh பாக்தாத் ஆட்சியை எதிர்த்த ஒரேகுற்றத்திற்காக ஈராக்கியர்கள் மீதான சித்திரவதை, கொலைகள் உட்பட 1982 அடக்குமுறையின்போது முன்னாள் ஜனாதிபதியான சதாம் ஹுசைனின் பங்கிற்காக - அவருக்கும் மற்ற மூன்று உயர் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சதாம் ஹுசைன் மீதான விசாரணையில் அரசாங்க வழக்கறிஞர் கோரியுள்ளார். இவ்வழக்கு பற்றிய முடிவான விளக்கம் இடம்பெறுகின்ற அதேவேளை, ஆக்கிரமிப்பு படைகளை தடுத்தல், அவர்களுடைய கைப்பாவை அரசாங்கத்தை எதிர்த்துவருகின்ற ஒரே குற்றத்திற்காக அமெரிக்கா ஈராக்கியர்களை சித்திரவதை மற்றும் கொலை செய்தல் உள்பட ஈராக்கியர்கள் மீதாக பரந்த ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டுவருகின்றது. இந்த அடிப்படை உண்மை சட்ட நடவடிக்கையின் பாசாங்குத்தனமான, மோசடித் தன்மையை நன்கு அம்பலப்படுத்துகிறது. தற்போதைய விசாரணை 1982ம் ஆண்டு ஒரு ஷியைட் கிராமமான டுஜைலில், ஹுசைனை கொல்ல முயற்சித்ததற்கு பழிவாங்கும் முறையில் அப்பொழுது இருந்த ஈராக்கிய ஆட்சி மக்களை துன்புறுத்தியமை சம்பந்தப்பட்டுள்ளது. இந்த அரைகுறை படுகொலைமுயற்சியை அடுத்து 148 பேர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டுஜைல் வழக்கு ஹூசைன் மீது தொடர்ச்சியாக வரவிருக்கும் பல வழக்குகளில் முதல் வழக்காகும்; 1988ல் ஹலப்ஜாவில் 5,000 குர்துகளை விஷவாயுவினால் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட இருக்கிறார்; 1991ம் ஆண்டு பாரசிகவளைகுடா போரை தொடர்ந்து ஷியைட்டுக்களுக்கு எதிராக மிருகத்தனமான கொடூரங்கள் புரிந்ததாகவும் ஒரு வழக்கு உள்ளது. ஆனால் டுஜைல் தீர்ப்பு பற்றிய முறையீடுகள் தீர்ந்துவிட்டால், அந்த வழக்குகள் கேட்கப்படுவதற்கு முன்பே ஹுசைனின் மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடும். றேகன் நிர்வாகம், ஹுசைன் ஈரானுடன் போரிடும்போது அவருக்கு ஆதரவு கொடுத்த நேரத்தில், ஈராக்கின் வடபகுதியில் உள்ள குர்து பகுதியில் நிகழ்ந்த குருதி கொட்டும் அன்பல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹலப்ஜா நிகழ்வு இருந்தபோது, றேகன் நிர்வாகம் அவருடைய குற்றங்களையெல்லாம் மூடி மறைக்க முயன்ற நிலையில் நடந்தபோது, இந்த குற்றச் சாட்டுக்களை வாஷிங்டன் முழுமையாக ஆராயுமோ என்ற வினா எழத்தான் செய்கிறது. டுஜைல் வழக்கில் உள்ள நீதிபதிகள், அரசாங்க வழக்குரைஞர்கள் மற்றும் அவர்களுக்கு பின் உந்துதலாக உள்ள அமெரிக்க இராணுவ, உளவுத்துறை கருவிகளும் விசாரணை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நடைபெற்று வருவதாக பாசாங்கு செய்து, புதிய ஈராக் ஒரு "சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நாடு" என்பதற்கு முன்னோடியாக உள்ளது என்பதை நிறுவ முற்படுகின்றன. பொதுவாக அமெரிக்க செய்தி ஊடகம் இந்தப் போலித்தனத்தில் பங்கு கொண்டுள்ளது. மரண தண்டனை "ஓர் தக்க தண்டனைதான்" என்பதுபோல் அமெரிக்க செய்தித்தாள், தொலைக்காட்சி தலையங்க ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கருத்தை கொண்டுள்ளனர். உண்மையில் இது வெற்றி பெற்றவரின் நீதி என்பதில் ஐயமில்லை. 1980களில் ஹுசைனின் முன்னாள் நட்பாக இருந்த வாஷிங்டன் ஒரு நீதி விசாரணையை அமைத்துள்ளது; இதன் முடிவு எந்த அளவு அரசியல் ஆதாயத்தை அது கொண்டாலும், முற்றிலும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது ஆகும். ஆயினும், இந்த வழக்கு, இதன் கோரமாக வரக்கூடிய விளைவு ஈராக்கில் உள்ள தற்போதைய நிலைமையை பாதிக்கக் கூடும் என்பது கேள்விக்குரியதே ஆகும். அமெரிக்க செய்தி ஊடகங்களில் சில பிரிவுகள் கூட ஹுசைனின் வழக்கு "சிதறியும் கேலிக்கூத்தாவும் சில நேரம்" - (Christian Science Monitor) மோசமாகவும் இருக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதை ஏற்றுள்ளன. ஈராக்கிய ஜனாதிபதியின் முக்கிய தற்காப்பு வழக்குரைஞர்களில் ஒருவரான கமிஸ் அல்-ஓபெய்டி, ஜனாதிபதி மற்றும் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் இருவருடைய சார்பிலும் வாதாடுபவர், போலீஸ் சீருடை அணிந்த சிலரால் கடத்தப்பட்டு புதனன்று கொல்லப்பட்டார். அக்டோபர் 2005ல் வழக்கு தொடங்கிய பின் நிகழ்ந்த இத்தகைய கொலைகளில் இது மூன்றாவதாகும். நடவடிக்கைகள் தொடங்கிய முதல் மூன்று வாரங்களுக்குள்ளேயே மற்ற இரு குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி மாதம் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் அவர் கூடுதல் சுதந்திரத்தை சதாம் ஹுசைனுக்கு கொடுத்ததால் ஈராக்கிய ஆட்சி மற்றும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் இராஜிநாமா செய்துவிட்டார். அவருடைய துணையாளரும் அவர் முன்னாள் பாத் கட்சி உறுப்பினர் என்று கூறப்பட்டபின், பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சட்ட நெறிகள் பொதுவாக தூக்கியெறியப்பட்டன; குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜனநாயக உரிமைகள் வாடிக்கையாக மிதிக்கப் பெற்றன. இம்மாத தொடக்கத்தில் இறுதி தலைமை நீதிபதியான Raouf Abdel Rahman மற்ற சாட்சிகளை மிரட்டும் வகையில் உள்ளது என்று ஹுசைனின் வழக்கறிஞர்கள் கூறியபடி பொய்ச்சாட்சி கூறினர் என்ற சந்தேகத்தை ஒட்டி நான்கு சாட்சிகளை சிறையில் அடைக்க வைத்தார். ஜூன் 13ம் தேதி "நான் எல்லா சாட்சியங்களையும் கேட்டுவிட்டேன்" என்று அறிவித்தபடி குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் இனி சாட்சிகளை கூண்டில் ஏற்ற வேண்டாம் என்று கூறிவிட்டார். தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையில், அப்டெல் ரஹ்மான் தற்போதைய நிலைபற்றி, அதுவும் அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றி எவ்விதக் குறிப்பும் வரக்கூடாது என்பதில் தீவிர உணர்வைக் காட்டுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை முறைகேடானது, அரசியல் உந்ததுல் பெற்றது என்ற கருத்தை முன்வைக்க வந்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. சாட்சியங்களின் இறுதி நாளன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான முன்னாள் துணை ஜனாதிபதியான டாகா யாசின் ரமதன் தன்னுடைய பங்கை மறுத்து பலவற்றையும் பேசுகையில் "சட்ட விரோத அமெரிக்க ஆக்கிரமிப்பு" என்று குறிப்பிட்டபோது, தலைமை நீதிபதி அவருடைய வாயை அடைத்துவிட்டார். அரசியல் அளவில் முன்வைக்கப்படும் காப்பு வாதங்கள் அனைத்தும் வெறும் உரைகள் என்றும் "வனப்புரை சொற்பொழிவுகள்" என்றும் அப்டெல் ரஹ்மான் நிராகரித்துவிட்டார். இந்த விசாரணை நடைமுறைகள் முற்றிலும் நெறி பிறழ்ந்தவை ஆகும். ஒரு காட்சிக்கான அரசியல் விசாரணை என்று இது அமைந்துள்ளபோது, அப்பட்டமான காலனித்துவ முறையிலான ஆக்கிரோஷமான ஈராக்கிய படையெடுப்பு ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புஷ் நிர்வாகத்திற்குப் பயன்படும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த நீதிமன்றமே ஒரு சட்ட விரோதப் போர், ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் விளைவுதான்; இது நடைபெறுவதே சர்வதேச சட்டத்தை மீறும் செயல்தான்; அதன்படி தன்னுடைய நீதி அமைப்புக்களை வெற்றி கொண்ட நாடுகளில் ஒரு வெற்றியடைந்த நாடு சுமத்துவதை தடுக்கிறது. ஹுசைன் பல குற்ங்களுக்கு பொறுப்பு உடையவர்தான், ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சார்பாகச் செயல்படுபவர்கள் நீதிபதியாகவும் நடுவர்களாக விளங்கும் யோக்கியதை அற்றவர்கள் ஆவர். இந்த விசாரணையின் துன்பியலான கேலிக்கூத்து வாஷிங்டனுடைய புகழிற்கு எந்த ஆதாயத்தையும் கொடுக்கவில்லை. ஈராக் போருக்கு ஆதரவு கொடுத்த தாராளவாதிகளுக்கு இது உளைச்சலை கொடுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட்டின் ரிச்சார்ட் கோஹன் அண்மையில் ஒரு பொன்னான வாய்ப்பை குழப்பி விட்டதற்காக புஷ் நிர்வாகத்தை கடுமையாகச் சாடியுள்ளார். ("Trials and Errors in Iraq," May 23, 2006). இந்த விசாரணை ஒரு "பெரும் தீமை"; ஏனெனில் இது ஈராக்கிய போரில் ஏற்கத்தக்கதாக இருந்த ஒரே கூறுபாட்டையும், அதன் அறநெறி தன்மையை மறைத்துவிட்டது; அதாவது சில மக்கள் உலகிற்கு நன்மை செய்யும் வகையில் ஒரு குண்டரையும் அவருடைய ஆட்சியையும் அகற்றலாம் என்பதைக்கூட மறைத்துவிட்டது என்று கோஹென் கூறியுள்ளார். மாறாக இவ்விசாரணை "வெற்றுத்தனமான காட்சியாக" மாறிவிட்டது; "எப்பொழுதேனும் பேசலாம் என்ற வாய்ப்பு ஹுசைனுக்கு கொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தின் அதிகார வரம்பையும் வினாவிற்கு உட்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது; இதையொட்டி முழு விசாரணையும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு பெரும் குழப்பகரமானது, முடிவற்றது, இதையும் விட மோசமாக பொருளற்றது என்பதற்கு உவமையாக்கிவிட்டது." இந்த அமெரிக்க தாராளவாத பண்பாடற்றவர் வாதிடுகிறார்: "இது எப்படி நடந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டு கருத்துக்களை சாதிக்க புஷ் நிர்வாகம் நினைத்தது; ஒன்று அரசியல் ரீதியானது, மற்றது கருத்தியல் ரீதியானது. விசாரணை ஒரு அனைத்து ஈராக்கிய நடவடிக்கையாக இருத்தல் முக்கியமானது; அதேபோல் மரண தண்டனை விதிப்பதும் முக்கியமானது." விசாரணையின் தோல்வி "வரவிருப்பது" போரின் தன்மை மற்றும் அமெரிக்க இலக்குகள் தம்மில் இருந்து ஊற்றெடுக்கிறது; அதாவது தன்னுடைய கொடூர அடக்குமுறை செயல்களை நடத்திக் கொண்டிருந்தபோது வாஷிங்டன் அவருடன் மகிழ்ச்சியாக ஒத்துழைத்த அக்குண்டருடைய உலகில் இருந்து விடுதலைபெறும் ஆவலில் இருந்து அல்ல, மாறாக அமெரிக்க புவிசார் அரசியல் அபிலாசைகளை ஈவிரக்கமற்று பின்பற்றுவதில் இருந்து ஊற்றெடுக்கிறது என்று கோஹனுக்கு ஒருபோதும் தோன்றவில்லை. இந்த விசாரணை முறையானதாக இல்லை, நம்பகத்தன்மை உடையதாக இல்லை, மற்றும் ஜனநாயகத் தன்மையுடையதாக இல்லை, ஏனெனில் இறுதிப்பகுப்பாய்வில் அது ஒரு குற்ற நடவடிக்கையின் விளைவாக இருந்தது. டுஜைல் வழக்கின் பிந்தைய கட்டங்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக் சரிவுறுவதுடன் இயைந்து நிற்கிறது; அதேபோல் வன்முறை, குருதிக் களம் என சொல்லொணா கொடுமைகளுடனும் இயைந்து நிற்கிறது. குறுகிய பூசல் எங்கும் நிறைந்து இப்பொழுது முழு அளவிலான உள்நாட்டுப் போர் தோன்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மரணம் அளிக்கும் குழுக்கள் சிறிதும் அச்சமின்றி உள்துறை மந்திரி, ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன. தற்கொலை படைகள் மற்றும் பல கொடுமைகளும் அன்றாட வாழ்வின் உண்மைகளாகிவிட்டன. பாக்தாத்தின் சவக் கிடங்கிற்கு ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் பிணங்கள் வருகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில் LA Times இன் நிருபர் ஒருவர் நிலைமையை அப்பட்டமான வர்ணனையில் விளக்கியிருந்தார்: "சாலையோரக் குண்டுத் தாக்குதலால் கொல்லப்படுவோமா அல்லது இரு தரப்பினர் பூசல்களுக்கு இடையே வரும் குண்டுகளினால் உயிர் போகுமோ அல்லது ஒரு சோதனைச் சாவடியில் தவறாக அடையாளம் காணப்பட்டு உயிர் போகுமா அல்லது தங்களுடைய வாகனத்தில் இருந்து எப்பொழுதும் இழுத்தெறியப்பட்டு கொலையுண்டுபோமா அல்லது பணிக்கு, பள்ளிக்கு, கடைக்கு அல்லது உறவினர்களைக் காணும்போது மரணம் நேருமோ என்று கலங்கியிருக்கும் மக்களை கொண்ட நகராக பாக்தாத் இப்பொழுது ஆகிவிட்டது." 2003ல் நாட்டை அமெரிக்க தலைமையிலான படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து மிகுந்த கொலைகளை கண்ட மாதத்தின் வழியே பாக்தாத் குருதிப் பயணத்தை இப்பொழுது கொண்டுள்ளது என்பதை புதிய ஈராக்கிய அரசாங்க ஆவணங்கள் குறிக்கின்றன. பல மக்கள் குண்டுகளுக்கு இரையாயினர் அல்லது குத்தப்பட்டனர் அல்லது வேறுவித வன்முறையில் படையெடுப்பில் வேறு எந்த மாதமும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மந்திரி சபையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. "இந்த எண்ணிக்கையில் கொல்லப்பட்ட படையினர்கள் அல்லது குண்டுவீச்சுக்களினால் உயிரிழந்த சாதாரண மக்கள் சேர்க்கப்படவில்லை; பாதிப்பாளர்களுக்கு பிரேத பரிசோதனைகூட நடத்தப்படுவதில்லை. "கடந்த மாதம் மட்டும் 1,398 சடலங்கள் பாக்தாத்தின் மையச் சவக்கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டன என்று அமைச்சரகம் தெரிவித்துள்ளது. தலைநகரம் முழுவதும், இன்னும் மாநிலங்கள் முழுவதும் அன்றாட வாடிக்கையாக குப்பை கூளத் தொட்டிகளில் பிணங்கள் காணப்படுகின்றன; கைவிடப்பட்ட கார்களில் அல்லது பரந்து செல்லும் சாலைகளில் அவை வெளிப்படுகின்றன. தளைகளுக்குட்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களை அவை பல நேரமும் கொண்டுள்ளன. இதற்கு முழுப் பொறுப்பையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு முன் வியட்நாமில் இருந்தது போல் அமெரிக்கா ஈராக்கில் எதிர் கொண்டுள்ளது, இது இரு நாடுகளுக்கும் பேரழிவு நிகழ்வாகும். கடந்த 15 ஆண்டுகளில் பாரசீக வளைகுடாப் போர், பொருளாதார தடைகள், இடைப்பட்ட "சமாதான" காலத்தில் குண்டுவீச்சுக்கள், இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய போரின் காரணமாக வந்துள்ள தற்போதைய போர், ஆக்கிரமிப்பு இவற்றினால் இறந்தவர் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் போய்விட்டது. இவை அனைத்தும் ஈராக்கிய எண்ணெய் இருப்புக்களுக்காக பலியாக்கப்பட்டவை. ஹுசைனுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அமெரிக்காவின் கரங்களில் இருந்து "இந்த இரத்தக் கறையை கழுவிவிட முடியாது." |