World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Québec Solidaire: a new mechanism for tying workers to the Parti Québécois

கியூபெக் ஐக்கியம்: கியூபெக் கட்சியுடன் தொழிலாளர்களை கட்டிப்போடுவதற்கான ஒரு புதிய இயங்குமுறை

By Richard Dufour
31 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

கியூபெக் சொலிடேர் என்கின்ற ஒரு புதிய கட்சி, பெப்ரவரியில் அமீர் காதரின் UFP கட்சி மற்றும் பிரான்சுவாஸ் டேவிட்டின் Option Citoyenne என்ற கட்சிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்டது, சென்ற மாதம் தேர்தல் களத்தில் கலந்துகொண்டு, ஏழ்மை பீடித்த மொன்டிரியால், சென்ட்-மேரி- சென்ட்-ஜாக் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

கியூபெக் சொலிடேர் கட்சியின் வேட்பாளர் மாகாண இடைத்தேர்தலில் 22 சதவீத வாக்குகளை பெற்றார். இது கியூபெக்கின் மூன்றாவது கட்சியான வலதுசாரி அணியைச் சார்ந்த Action Démocratique (AQQ) கட்சியைவிட அதிகமாகும். மற்றும் ஆளும் Parti Libéral du Québec (PLQ) வேட்பாளரைவிட 6 சதவீதம் குறைவாகும். எதிர்பார்க்கப்பட்டதைப்போல் Parti Québécois (PQ) சென்ட்-மேரி-சென்ட்-ஜாக் தொகுதியை தக்கவைத்துக் கொண்டது. ஆனால் PQ அதிகாரிகள் மூன்றாவது கட்சி 41 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது குறித்தும், மிகக்குறைந்த அளவிற்கு 32 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது குறித்தும் கவலை தெரிவித்தனர்.

Québec Solidaire (QS) கட்சித் தலைவர்கள் இடைத்தேர்தலில் தங்களது கட்சியின் சாதனை குறித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். ஒரு புதிய இடதுசாரி மாற்றுக்கட்சி அமைக்கப்பட்டிருக்கிறது, என்று அமீர் காதிர் உறுதிபடக் கூறினார். அதே நேரத்தில் கட்சியின் இணைத்தலைவரான பிரான்சுவா டேவிட் "கியூபெக்கில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக நீதியை சுருட்டிக்கொண்டு போகவைத்த நவீன தாராளவாத கருத்துக்களுக்கு ஒரு உண்மையான மாற்றை முன்மொழிந்திருப்பது எங்கள் கட்சி ஒன்றுதான்" என அறிவித்தார். 2008 கடைசியில் நடைபெறவிருக்கும் அடுத்த மாநில தேர்தலில் QS கட்சி ஒவ்வொரு நிலையிலும் போட்டியிடும் என்று கட்சித்தலைவர்கள் கூறினர்.

கியூபெக் ஸ்தாபனத்திற்கு ஒரு நியாயமான இடது - மாற்றை கியூபெக் சொலிடேர் பிரிதிநிதித்துவம் செய்கிறது என்ற பாசாங்கு ஆய்வை எதிர்கொள்ள முடியாது.

புதிய கட்சியின் தெளிவற்ற "முற்போக்கு" வாய்வீச்சு, இலாப அமைப்புமுறையை சவால்விடும் எந்த உறுதிமொழியும் இல்லாமல் வந்திருக்கிறது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்ற வகையில் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்கள் பற்றிய எந்த வேலைத்திட்டத்தையும் முன்மொழியவில்லை. பழமைவாத அரசியல்வாதிகளால் அகநிலைத் தேர்வாக சாதாரணமாய் முன்வைக்கப்பட்ட "நவீன தாராளவாதம்" பற்றிய அதன் கண்டனங்கள் கனடா மற்றும் அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் உத்தியோக ரீதியிலான அரசியலில் வலதுசாரி பக்கம் சாய்வதற்கு அகநிலை அடிப்படையாக, அமைதியாக கடந்து செல்லப்படுகிறது.

பூகோள முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசு அமைப்பு முறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில், தொழிலாளர்கள் நாடுகளின் எல்லைகளை கடந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கியூபெக் சொலிடேர் வாதிடவில்லை. மாறாக, மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களை அறிவார்ந்த முறையில் ஈடுபடுத்துவதற்கு மாபெரும் தடையாக இருக்கும் முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பு முறையை, செல்வத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களின் தனிச்சொத்துடைமையுடன் சேர்த்து சமூக முன்னேற்றத்தின் ஒரு நெம்புகோலாக முன்வைக்கப்படுகிறது. இந்த பிற்போக்குவாத தேசிய முன்னோக்கு அடிப்படையில் QS, கியூபெக் ஆளும் செல்வந்தத்தட்டினரின் ஒரு பிரிவினர் ஒரு சுதந்திரமான முதலாளித்துவ கியூபெக் குடியரசை உருவாக்குவதன் மூலம் வட அமெரிக்காவில் தேசிய அரசு அமைப்புமுறையை மறுஒழுங்கமைக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறது.

QS கட்சியின் இரண்டு பிரதான தலைவர்களின் அரசியல் வாழ்வே அதன் ஆணிவேர் பெருவர்த்தக கட்சியான PQ மேலாதிக்கம் செலுத்துகின்ற, கியூபெக் தேசியவாத சூழலில் வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது- PLQ பிளவுபட்டதிலிருந்து 1968-ல் அதன் உருவாக்கம் முதல் PQ சுதந்திர கியூபெக்கை உருவாக்குவதற்கு வலியுறுத்தி வருகிறது.

பதினைந்து ஆண்டுகள் வலதுசாரி அணி PQ அரசாங்கங்கள் பணியாற்றிய பின்னர் 2000-ல் PQ-வின் நவீன தாராண்மைவாத அரசியல் குறித்து பிரான்சுவாஸ் டேவிட் அம்மையார் தனது ஏமாற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். 1966-ல் டேவிட் PQ பிரதமர், லூசியன் வவுச்சர் "பூஜ்ஜிய பட்ஜெட் பற்றாக்குறை" என்ற பெயரால் ஒரு தீவிரமான சமூக செலவின வெட்டுக்களை தொடக்குவதற்காக நடத்திய முத்தரப்பு உச்சி மாநாட்டில், அரசாங்கம் வர்த்தகம் மற்றும் தொழிற்சங்ககள் அடங்கிய மாநாட்டில் கலந்துகொண்டார்.

PQ மேலாதிக்கம் செலுத்தி வந்த கியூபெக் தேசியவாத அணியில் இருந்து அண்மையில் அமீர்காதிர் இந்த அணிக்கு தாவியிருக்கிறார். 2000-தில் நடைபெற்ற மத்திய தேர்தலில் PQ-வின் சகோதர கட்சியான Bloc Québécois (QB) வேட்பாளராக போட்டியிட்டார்.

கியூபெக் சாலிடர் அமைக்கப்பட்டது மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இரண்டு நெருக்கமான நடைமுறைகளின் பிரதிபலிப்பாகும்: ஒரு பக்கம், PQ பதவியில் இருந்தபோது 1994-க்கும் 2003-க்கும், இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான எதிர் சீர்திருத்த நடவடிக்கைகளால் (மருத்துவமனைகள் மூடப்பட்டன, 10,000 கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.) மறுபக்கம் உழைக்கும் மக்களது தீவிரமயப்படல் வளர்ந்து வந்தது. அது வேலை நிறுத்தங்களாக வெடித்தது மற்றும் 2003 டிசம்பரில் சாரஸ்ட் தாராளவாத அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன கண்டனங்களாக வெடித்தது மற்றும் சென்ற ஆண்டு பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களது இடைவிடாத வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இந்த வர்க்க துருவ முனைப்பு, PQ தன்னை ஒரு மக்கள் கட்சி என்று சித்தரித்துக் கொள்ளும் வல்லமையையும் மற்றும் இந்த பெருவர்த்தக நிறுவனக்கட்சி கியூபெக் தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஏற்றுக்கொள்ள செய்யும் வல்லமையையும் சீர்குலைப்பதாக அமைந்தது. PQ-வின் சிதைந்துவிட்ட "இடது" செல்வாக்கை, மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவு அண்மையில் PQ-விற்குள் ஒரு அதிகாரபூர்வமான SPQ (Unionists and Progressive for a free Quebec) என்கின்ற குழுவை அமைத்தது, அது ஒரு சுதந்திர கியூபெக்கிற்கு குரல் கொடுக்கின்ற தொழிற்சங்கவாதிகளும் முற்போக்காளர்களும் அடங்கிய ஒரு குழுவாகும்.

இந்த சூழ்நிலையில் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இடது கொள்கைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் 1000 இழைகளால் பின்னப்பட்ட கியூபெக் அரசு மற்றும் ஆளும் செல்வந்தத்தட்டோடு முடிச்சுபோடப்பட்டவர்கள், அவர்கள் PQ-விடமிருந்தும் அதன் தேசியவாத திட்டத்திலிருந்தும் ஒரு நியாயமான அரசியல் பிளவை தடுப்பதற்கு தலையிட வேண்டி வந்தது.

கியூபெக் சொலிடேர் கட்சியில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு சிறிய அதிருப்திக்குழு இணைந்துள்ளது. இவர்கள் ஆக்ஷன் சிட்டோயின் உறுப்பினர்கள் அந்த குழுவினர் இதுவரை பட்ஜெட் வெட்டுக்களை ஆதரித்து வந்தவர்கள். 1966-ல் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் பிரான்சுவாஸ் டேவிட் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அதற்கு அங்கீார முத்திரை தந்தவர்கள், இறுதியாக UFP-யும் சேர்ந்து கொண்டது. UFP ஒரு கூட்டணி தான். இது 2002-ல் நிறுவப்பட்டது NDP-யின் முன்னாள் கியூபெக் பிரிவாகும். இது, அதிருப்தி கொண்ட, PQ ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டது. கியூபெக் கம்யூனிஸ்ட் கட்சி ஆலன் கிர்கிரிவைனின் ஐக்கிய செயலகம் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட்டுக்கள் அடங்கிய குழுவாகும். அவர்கள் மாக்சிஸ்ட்டுக்கள் என்று தங்களை கூறிக்கொள்கிறார்கள்.

இத்தகைய மாக்சிஸ்ட்டுக்கள் அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதில் பொறுமையிழந்து காணப்படுகின்றனர். ஆக UFP, PQ-வை எதிர்ப்பதாக கூறி வந்தாலும், 2003 ஏப்ரலுக்கு முன்னர் ஒரு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக PQ தலைமை விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

PQ வலதுசாரி பக்கம் சாய்ந்து விட்டது- இது டேவிட் காதிர் மற்றும் இதர தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் கட்சியின் வர்க்கத்தன்மையில் ஊறிக்கிடப்பதால் அதைப்பற்றி மூச்சுவிடவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்பிற்கு நிர்பந்தம் கொடுத்து PQ-வை மட்டுப்படுத்த முயன்று வருகிறது.

எனவே பிரான்சுவாஸ் டேவிட் அடுத்த தேர்தலில் PQ-வுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்திருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. இந்த கருத்தை நாடாளுமன்ற PQ உறுப்பினர் ஜோன் பியரி சார்பனோ முன்னெடுத்து வைத்தார். PQ-வுடன் சம்பிரதாய விவாதங்கள் நடப்பதை தள்ளிவிடுவதற்கு இல்லை என்று டேவிட் சொன்னார். "ஆனால் எங்களது உறுப்பினர்களுடன் மட்டுமே விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார்.

அதற்குப்பின்னர் டேவிட் PQ-வின் சிறப்பை ஒப்புக் கொண்டார்: "PQ திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை எப்போதுமே மறுத்துவிட முடியாது. அவர்களை நவீன தாராளவாதிகள் என்றழைப்பது நியாயமற்றது. சமுதாய பயன்களை சிதைப்பதில் தாராளவாதக் கட்சியோடு PQ-வை ஒப்பிட முடியாது."

உண்மையிலேயே, தாராளவாதிகளும் PQ-வும் ஒன்றுபட்டே செயல்பட்டு வருகின்றனர். கியூபெக்கின் அரசியல் சட்ட அந்தஸ்த்து தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்திடமிருந்து அறைகூவல் எதுவும் வருமானால் இரண்டு கட்சிகளும் இணைந்து கொள்கிறார்கள். உண்மையிலேயே தொழிலாளர் அதிகாரத்துவத்தில் அதற்குள்ள உறவுகளின் காரணமாக, PQ ஆனது PLQ-வை விட பெருவர்த்தக செயல்திட்டத்தை கொண்டு வருவதில் அதிக வெற்றி பெற்றிருக்கிறது.

வாக்குப்பதிவில் கியூபெக் சொலிடேர் PQ மற்றும் தாராளவாதிகளின் வலதுசாரி கொள்கைகளால் ஆத்திரம் கொண்ட உழைக்கும் மக்களது ஆதரவை வென்றெடுத்திருந்தாலும் அதன் தலைவர்கள் தங்களது கட்சி பொறுப்பான ஒன்று என்று நிர்வாகத்திற்கு, உறுதியளிப்பதில் அக்கறை கொண்டிருக்கின்றனர். அதாவது தற்போதுள்ள சமூக கட்டுக்கோப்பை ஏற்றுக்கொண்டு நிர்வாகக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது ஆகும்.

"நாங்கள் ஒரு செயல்திட்டத்தை விரிவுபடுத்தி விளக்கம் தரும்போது அது மிகுந்த தாராள தன்மை கொண்டதாகவும் அதே நேரத்தில் நடைமுறைக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கும் என்று பிரான்சுவாஸ் டேவிட் சொன்னார், அவரது இணைத்தலைவர் அமீர் காதர் தனது ஆக்கபூர்வ நிலையை வலியுறுத்த ஓடி வந்தார். "நாங்கள் ஒரு புதிய இடது அணியை நிறுவுவோம், ஒரு புதிய ஜனநாயக இடது அணி பெண்களுக்கு சமபிரதிநிதித்துவ உரிமை தரும், அது பன்முக கருத்துக்களை, ஒருங்கிணைப்பதாக அமையும், அது சுற்றுப்புற சூழல் பற்றி செயல்புரிவோம் என்ற பகல் கனவு கொண்டது அல்ல. மனித இனத்திற்கு மகிழ்ச்சியை உத்தரவாதம் செய்து தரவில்லை என்று அமீர்காதர் சொன்னார்.

புதிய கட்சியான கியூபெக் சொலிடேர் உலகத்தை மாற்றி விடுகிறோம் என்று கடுமையான அபிலாஷை கொண்டிருப்பதாக, உறுதியளிக்கவில்லை மற்றும் PQ-வுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக கோடிட்டுக்காட்டியது, ஆனால் PQ நிர்வாகம் புதிய கட்சியை புறக்கணித்து வருகிறது புதிய PQ தலைவரான ஆண்டிரி பாய்க்கலர் வலதுசாரிப்பக்கம் மற்றொரு மாற்றத்தை ஏற்படுத்தினார். சுகாதார சேவைகள் தனியார்மயமாதலை வரவேற்றார் மற்றும் எதிர்கால PQ அரசாங்கம் 7 ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒப்பந்தங்களை மீண்டும் தாராளவாத மாநில அரசாங்கம் மறுபரிசீலனை செய்யாது. PQ-விற்கும் புதிய கட்சிக்கும் ஒரு தேர்தல் கூட்டு சாத்தியக்கூறு எதுவுமில்லை. PQ தனது போட்டிக்கட்சிக்கு எந்தவித சட்டபூர்வ அந்தஸ்த்தும் தராது ஏனென்றால் கியூபெக் சொலிடேர் கட்சியின் இடதுசாரி செல்வாக்கு வர்த்தக நிறுவனங்களின் ஆதரவை PQ பெறுவதை வெட்டி முறித்துவிடும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் சாரட் அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க வர்த்தக அமைப்புகளுக்கிடையில் நிலவுகின்ற பரவலான உறவுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆத்திரமடைந்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களக்கு மேலாக இந்த உறவுகள் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. PQ-வுடன் நீண்டகாலமாக நிலவி வருகின்ற உறவுகளை எந்த வகையிலும் தளர்த்துவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

CSN தேசிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் நடப்பு SPQ-வின் தலைவருமான மார்க் லேவிலெட் "அடுத்த பொதுத்தேர்தலில் சாரஸ்ட் அரசாங்கத்தை வீழ்த்துவதும் கியூபெக்கின் இறையாண்மயை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான்" முன்னுரிமை நடவடிக்கைளாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இன்றைய தினம் இறையாண்மை கவுன்சிலின் தலைவராக உள்ளவரும், CSN-ன் மற்றொரு முன்னாள் தலைவரான ஜெரால்ட் லாரோஸ், இன்னும் வெளிப்படையாக QS மாநாட்டு முடிவில் வெளியிட்ட அறிவிப்பில் QS கட்சி ஒன்றுதான் இறையாண்மையை கொண்டு வரக்கூடியது என்று கூறினார்.

இந்த மாகாணத்தின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான FTQ தலைவர் ஹென்றி மாசி சற்றும் தயக்கமில்லாமல் புதிய கட்சி அளவிற்கு அதிகமாக இடதுசாரி பக்கம் சென்று கொண்டிருப்பதாகவும் அவர்களது கருத்துக்கள் கற்பனை சாம்ராஜியம் என்றும் கூறினார். "எங்களது உறுப்பினர்களிடையே, நீண்டகால குறைபாடுகள் நிச்சயமாக உண்டு ஆனால் அவர்கள் அதிக ஆக்கபூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

அமீர் காதிரின் பதில் "ஏற்கனவே CSN-ன் மொன்டிரியால் பிரிவு கியூபெக்கில் புதிய இடது கட்சி உருவாவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக இருந்தது.". கியூபெக்கின் தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ அரசியல் என்கின்ற மலட்டுத்தன்மை கொண்ட கட்டுக்கோப்பிற்குள் உழைக்கும் மக்களிடையே வளர்ந்து வரும் தீவிரப்போக்கை கட்டுப்படுத்த விட முடியக்கூடிய மற்றும் PQ விற்கு அழுத்தம் கொடுக்கவுமான ஒரு அரசியல் வாகனமாக உருவாக்குவதற்கான அதன் முயற்சியில், தொழிற்ங்க அதிகாரத்துவத்தின் ஒரு பகுதியை இணங்கச்செய்வதற்கு கியூபெக் சொலிடேர் இன்னும் நம்பிக்கைகொள்கிறது.

Top of page