World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

திஷீஷீtதீணீறீறீ கீஷீக்ஷீறீபீ சிuஜீ 2006ணீ னீuறீtவீதீவீறீறீவீஷீஸீ-மீuக்ஷீஷீ தீusவீஸீமீss

உலகக் கோப்பை கால்பந்து 2006-பல மில்லியன்-யூரோ வர்த்தகம்

By Marianne Arens
31 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

18-வது உலக கால்பந்து வெற்றிக்கோப்பைக்கான போட்டி ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு குறைந்த நாட்களேயுள்ள இந்தவேளையில், ஜேர்மனியின் பொதுவாழ்வில் வரலாறு காணாத அளவிற்கு உலகக்கோப்பை பித்துப்பிடித்தாட்டுகிறது. எந்த நகர மையமாக இருந்தாலும், இரயில் நிலைய முன்பகுதியாக இருந்தாலும் அல்லது பொது சதுக்கமாக இருந்தாலும், திறந்தவெளி கடையாக இருந்தாலும், எந்த செய்திபத்திரிகையாக இருந்தாலும், தொலைக்காட்சி நிலையமாக இருந்தாலும், விளம்பங்கள் ஒரு புறம் இருக்கட்டும், எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், வரவிருக்கின்ற கால்பந்துப்போட்டிகள், முன்னர் போடப்பட்ட பந்து எண்ணிக்கைகள் பற்றிய விவரங்களும், மகிழ்ச்சி பெருக்கோடு கொடிகளை அசைக்கின்ற ரசிகர்கள் பற்றிய விளம்பர குறிப்புக்களும் இடம்பெற தவறவில்லை.

உண்மையான கால்பந்து விளையாட்டு நிகழ்ச்சிகளை --64 கால்பந்து போட்டிகள் 12 விளையாட்டு மைதானங்களில், 32 தேசிய நாடுகளின் அணிகள் உலக வெற்றிக் கிண்ணத்திற்காக ஒன்றையொன்று எதிர்த்து விளையாடப் போகின்றன-- மங்கச்செய்து பின்னணிக்கு தள்ளுகின்ற அளவிற்கு எங்கும் நிறைந்த விளம்பரங்களும் வர்த்தக நாட்டமும் நிறைந்துள்ளன.

2006 உலகக்கோப்பை, பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பிற்கான ஒரு வர்த்தகமாகும், தொலைக்காட்சிகளில் அந்த விளையாட்டுக்களை ஒளிபரப்புகின்ற உரிமைகளுக்காக மட்டுமே 1 பில்லியனுக்கு மேற்பட்ட யூரோக்கள் வருமானம் கிடைக்கிறது. இந்த போட்டிகளை வகுத்தளிக்கும் ஆதரவாளர்களுக்கு ஸ்பான்ஸர்களுக்கு மார்க்கெட்டிங் உரிமைகள் விற்பனை மூலமே 400 மில்லியனுக்கு மேற்பட்ட யூரோக்கள் வருமானமாக கிடைக்கிறது இது நுழைவுச்சீட்டுகள் விற்பனையில் எதிர்பார்க்கும் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதற்கு முன்னர் மறைமுகமான விளம்பரங்கள் --என்று முகம் சுளிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அவற்றில் இடம்பெறுகின்ற வர்த்தகப்பொருட்கள் பற்றிய குறிப்புக்களும் விவரங்களும் இந்த ஒளிபரப்புக்களின் பிரதான நோக்கங்களாகும். உத்தியோகபூர்வமான இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள், உலகம் தழுவிய விளையாட்டு போட்டிகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு பூகோள விளம்பரத்திற்கு உறுதி செய்துள்ளனர்.

FIFA (உலக கால்பந்து சங்க கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது, கால்பந்து ரசிகர்கள் 2 பில்லியன் யூரோக்கள், மதிப்புள்ள பொருட்களை வாங்குவார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறது, இது 2002 போட்டிகளைவிட 25 சதவிகிதம் அதிகமாகும், இதன்மூலம் அந்த கூட்டமைப்பிற்கு 15 முதல் 20 சதவிகிதம் மொத்த வருவாய் கிடைக்கும். FIFA சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அது இலாபம்-ஈட்டுவதற்கான ஒரு அமைப்பல்ல, அது 4.25 சதவிகிதம் வர்த்தக வரிகளை செலுத்தி வருகிறது. FIFA தலைவராக செப் பிளாட்டர் பதவியேற்றது முதல் உலகின் முன்னணி சம்மேளனத்தின் தலைவராக அவர் பதவியேற்றதை சுற்றி நிலவுகின்ற ஊழல் பற்றிய வதந்திகளை ஒழித்துக்கட்டிவிட அவரால் எப்போதுமே இயலவில்லை.

15 உத்தியோகபூர்வமான ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) உலகக் கோப்பை நிகழ்ச்சியை சந்தைப்படுத்துவதற்கான முழு உரிமைகளை பெற்றதற்காக, FIFA-விற்கு மில்லியன் கணக்கான யூரோக்களை செலுத்தியுள்ளனர். "உலக கோப்பை கால்பந்து 2006" என்ற பதத்தை ஒரு வர்த்தக அடையாளமாக பாதுகாக்க வேண்டும் என்று ஜேர்மனியின் மத்திய நீதிமன்றத்தை கூட FIFA நாடியது, ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. "கார் தயாரிப்பாளரான BMW 'காரை ஓட்டுவது,' என்ற சொல்லை உரிமமாக, பதிவு செய்ய வேண்டும் என்று சொல்வதைப் போன்று இது அமைந்திருக்கிறது," என Süddeutsche Zeitung விமர்சித்துள்ளது.

உத்தியோகபூர்வமான ஸ்பான்சர்களில் Adidas, Coca Cola, MacDonalds, Yahoo, American Express, Anheuser-Busch, Avaya, Deutsche Telecom, Continental, Toshiba, Philips, Hyundai, MasterCard, Fujifilm, Fly-Emirates மற்றும் Gillette ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவை தவிர ஆறு தேசிய ஊக்குவிப்பாளர்களும் இடம்பெற்றிருக்கின்றனர், அதில் ஜேர்மனியின் அரசு இரயில் நிறுவனமும் Post bank கும் இடம்பெற்றுள்ளது.

FIFA கூட்டமைப்புக்குரிய ஆதரவாளர்களுக்கு பெருநிறுவன ஸ்பான்சர்களுக்கு உலகக்கோப்பை சின்னங்களை, பயன்படுத்திக் கொள்வதற்கு தனியுரிமை வழங்கியிருப்பதுடன் மிகப்பெரிய எண்ணிக்கையிலான இலவச நுழைவுச்சீட்டுக்களையும் அன்பளிப்பாக கொடுக்கிறது, அத்துடன் விளையாட்டு அரங்குகளில் உள்ள VIP அரங்குகளை பயன்படுத்திக் கொள்வதிலும் புதிய ஒப்பந்தங்களை வழங்குவதில் முதலாவது முன்னுரிமையும் தந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, Adidas நிறுவனம், இந்த சாம்பியன்சிப் போட்டிகளுக்கான கால்பந்துகளையும் விளையாட்டு உடுப்புக்களையும் உத்தியோகபூர்வமாக வழங்கி வருகிறது. மேலும் அந்த நிறுவனம் 2010 உலக சாம்பியன்சிப் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடக்கும் போதும் 2014-ல் இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் போதும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. FIFA-வுடன் கொக்கோ கோலா செய்திருக்கும் ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதாகும்.

ஸ்பான்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் ஏற்கனவே போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வதில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுக்கள் நடைபெறும் 12 கால்பந்து அரங்குகளும் முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு அரங்கிலும், VIP-களுக்கான அரங்குகள் கட்டப்பட்டுள்ளன, இதன் விளைவாக உள்ளூர் கால்பந்து விளையாட்டு ரசிகர்களும் அந்த கால்பந்து சங்க பாரம்பரிய உறுப்பினர்களும் "தங்களது" விளையாட்டு அரங்கை தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல விளையாட்டு அரங்குகள் பணத்திற்காக தங்களது பாரம்பரிய பெயர்களில் மாற்றங்கள் செய்துள்ளன. Gelsenkirchen இன் Gelsenkirchen's Auf Schalke stadium தற்போது Veltlins (இது ஒரு பீர் வகையின் பெயர்) விளையாட்டு அரங்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, அதேபோன்று Frankfurter Waldstadion இப்போது Commerzbank விளையாட்டு அரங்காகவும், Hamburger Stadion, AOL விளையாட்டு அரங்காகவும் மற்றும் நூரம்பேர்கிலுள்ள Frankenstadion, EasyCredit விளையாட்டு அரங்காகவும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. என்றாலும், இந்த புதிய சீரமைப்பிற்கு பணம் தருபவர்கள் உத்தியோபூர்வமான உலகக் கோப்பை ஸ்பான்சர்களாக இல்லாத காரணத்தினால், சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெறுகின்ற நேரத்தில் Frankfurt World Cup Stadium, Gelsenkirchen World Cup Stadium முதலியவை மற்றும் புதிதாக சூட்டப்பட்டுள்ள அனைத்து விளையாட்டு அரங்குகளின் பெயர்களும் நீக்கப்படும்.

உள்ளூர் கால்பந்து ரசிகர்களுக்கு இதைப்பற்றி கவலையில்லாமல் இருக்கலாம், மற்றும் அவர்கள் சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில், தங்களின் உள்ளூர் மைதானத்தை பயன்படுத்த குறைந்த வாய்ப்பே உண்டு. ஆயினும் பொது மக்களுக்கு உலக கால்பந்து போட்டிகள் பற்றி ஒவ்வொரு நாளும் அவர்களது காதுகள் செவிடுபடும் அளவிற்கு பிரசாரம் நடத்தப்பட்டு வந்தாலும், அந்த போட்டிகளை காண்பதற்கான நுழைவுச்சீட்டை பெறுவதற்கு ஏராளமான பணம் செலவிட வேண்டியுள்ளது. மூன்றில் ஒரு பகுதி இருக்கைகள்தான் வலைத் தளம் மூலம் ஏற்பாடு செய்வதால் கிடைக்கிறது.

இந்த நுழைவுச்சீட்டுக்களை நீண்ட நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும், நுழைவுச்சீட்டு வாங்குபவர் தனது தனிப்பட்ட விவரங்களை தந்தாக வேண்டும். லாட்டரி நடைமுறை மூலம் உண்மையில் யார் நுழைவுச்சீட்டை வாங்க முடியும், மற்றும் எந்த விளையாட்டு போட்டியை எந்த நகரத்தில் காணமுடியும் என்று முடிவு செய்யப்படும். யாராகிலும் நுழைவுச்சீட்டை அன்பளிப்பாகவோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ வாங்குவார்களேயானால், அவர்கள் விளையாட்டு போட்டி நடக்கும் அரங்குகளில் அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்படும் ஆபத்தும் உண்டு. ஏற்கனவே இதுபற்றிய பல புகார்கள் வந்ததை தொடர்ந்து நுழைவுச்சீட்டுக்களை மீண்டும் விற்க சம்மதித்தனர்.

நுழைவுச்சீட்டு பெறாத பலர், ஒவ்வொரு பெரிய நகரத்திலும் ரசிகர்களுக்காக அமைக்கப்படும் சிறப்பு இடத்தில் கூடி பெரிய திரையில் விளையாட்டு போட்டிகளை காண முடியும். பேர்லினில், Adidas நிறுவனம் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் ஒரு சிறிய ஒலிம்பியா அரங்கை அமைத்திருக்கிறது அதில் 10,000 பார்வையாளர்கள், பெரிய திரைகளில் விளையாட்டு போட்டிகளை பார்க்க முடியும். சாதாரண மக்கள் கால்பந்தை தொடுவதற்குகூட இதற்கு முன்னர் அனுமதிக்கப்படாத விளையாட்டு அரங்கு ஒவ்வொன்றிலும், Adidas உலக கால்பந்து அமைப்பு, 40,000 சதுர மீட்டர் கால்பந்து அரங்கு ஒன்றை அமைத்திருக்கிறது.

முயூனிச் நகரத்தில், ஜூன் 9-ந் தேதி உலக கால்பந்து கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன, அதையொட்டி ஒரு ஊடக நகரமே செயற்கைக்கோள் ஆன்டனாக்கள் மூலம் ஒரு காடுபோல் பெருமளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முயூனிச்சிற்கு வடக்கே, 340 மில்லியன் யூரோக்கள் செலவில் அலையன்ஸ் அரங்கு (பேயர்ன் மியூனிக் என்ற பெயரில் உள்ளூர் குழுவின் முக்கிய ஆதரவாளர்கள்) என்ற ஒரு புதிய கால்பந்து விளையாட்டு அரங்கு, Allianz அரங்கு என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதி ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற "திமிராக நடந்து கொள்கின்ற வட்டரங்கு" என்றழைக்கிறார்கள்.

"நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய நேரம்?"

உத்தியோகபூர்வமாக இந்த விளையாட்டு போட்டிகளுக்கான முழக்கம் "நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டிய நேரம் இது"-என்பது இன்றைய ஜேர்மனியின் உண்மையான நிலவரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது, அந்த முழக்கத்தின்படி வெளிநாட்டவர் விருந்தினர்களாக வரவேற்கப்படுகிறார்கள் என்பது வெறும் பகல் கனவாகும்.

பால்க்கன் போரின்போதும், ஆபிரிக்கா, ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து தப்பி ஓடி ஜேர்மனிக்கு வந்தவர்களும், இப்போது திட்டமிட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். பிராங்போர்ட், ஹம்பேர்க் அல்லது முயூனிச்சில் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுக்கள் முடிந்தவுடன், அதிகாலை 3 மணிக்கு கால்பந்து மைதானத்திலிருந்ருது சில கி.மீ. அப்பால் உள்ள வெளிநாட்டவர்களை பதிவு செய்யும் அலுவலகத்திலிருந்து ஒரு போலீஸ் பிரிவு மாடி குடியிருப்புக்களில் புகுந்து குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பங்களையும் நாடு கடத்துகின்ற நிலை ஏற்படக்கூடும், அவர்கள் அங்கே 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடும். அங்கு குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள், பணியாற்றியும் இருப்பார்கள், "இதுதான் நண்பர்களாக, ஆவதற்கான தருணம்?"

வலதுசாரி தீவிரவாதிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற வன்முறை செயல்கள் அதிகரித்துள்ளன. உலக கால்பந்து கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர், இனவெறிக்கு எதிரான அமைப்பான "உனது முகத்தைக் காட்டு" என்ற அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர், முன்னாள் அரசாங்க, பேச்சாளரான உவே காஸ்டன் ஹே, திட்டவட்டமாக உலகக்கோப்பை போட்டி காணவரும் கருப்பு நிறத்தவர்கள் அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தும் சாத்தியக்கூறு அதிகமுள்ள நவீன நாஜிக்கள் நடமாடுகின்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று திட்டவட்டமாக எச்சரித்திருக்கிறார். "பிரான்டன் பேர்க்கில் அல்லது இதர பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் கருப்பர் இனத்தை சேந்தவர்கள் நடமாட வேண்டாம் என்று நான் ஆலோசனை கூறுகின்றேன். ஏனென்றால் அந்த நகரங்களில் இருந்து அவர்கள் உயிரோடு வெளியேறி வரமுடியாது."

அவரது எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் இரகசிய சேவை ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் சென்ற ஆண்டு வலதுசாரிகளின் வன்முறை 25 சதவீதம் அதிகரித்துள்ளது அண்மையில் போஸ்ட்டாம் பகுதியில் ஜேர்மனியை சேர்ந்த எத்தியோப்பிய பூர்வீகத்தை கொண்ட ஒருவர் தாக்கப்பட்டதும், இடது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜியாசெட்டின் சயான் பேர்லினில் தாக்கப்பட்டதும் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும்.

அரசியல் செயல்ப்பாடு

ஹேயின் கருத்துக்களை அரசியல்வாதிகள் கடுமையாக மறுத்தனர், அவர் தனது சொந்த நாட்டையே இழிவுபடுத்தியிருப்பதாக கண்டித்தனர். வரவிருக்கின்ற விளையாட்டுப் போட்டிகள் ஒரு தவறான அடிப்படையில் சித்தரிக்கப்படுவதை தடுப்பதற்கு முயன்றுள்ளனர். ஜேர்மன் அதிகாரிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி சிறப்பாக நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர். அடிக்கடி அதிகாரிகள் சொல்வதை போன்று கஜானா காலியாக இருக்கக்கூடும் FIFA-வின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை, புதிய விளையாட்டு அரங்குகளை அமைப்பது மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற திட்டங்களுக்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை.

இதற்கான காரணம், உலகக்கோப்பை கால்பந்து ஒரு முக்கியமான அரசியல் செயல்பாட்டை பூர்த்தி செய்கிறது. சமுதாயத்தின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்கும் அது பயன்படுகிறது, பெருகிவரும் சமூக துருவமுனைப்பு, பெரும் எடுப்பிலான ஆட்குறைப்பு, பரவலாக நிலவும் வேலையில்லாத நிலை, சிதைந்துவிட்ட சுகாதார கட்டுக்கோப்பு, பள்ளிக்கூட பிரச்சினைகள், ஓய்வூதியங்கள் குறைப்பு, பத்திரிகையாளர்கள் மீது ரகசிய சேவை வேவுபார்ப்பதை சுற்றியுள்ள மோசடிகள், காங்கோவிற்கு ஜேர்மனியின் ஆயுதப்படைகள் அனுப்பப்படுவது தொடர்பான விவாதங்கள் ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும்.

ஜேர்மனியின் தேசிய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் அதன்மூலம் வெற்றிக் களிப்பில் இன்றைய நெருக்கடியான சமூக பிரச்சினைகள் தற்காலிகமாக, மறைந்துவிடும் என்று ஜேர்மனியின் அரசியல் செல்வந்தத்தட்டினர் நம்புகின்றனர். ஆனால் எந்த அணி நிச்சயமாக உலகக்கோப்பை வென்றெடுக்கும் என்பதை எவரும் திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் ஏற்கனவே நிச்சயமாகிவிட்டது: அரசுடன் உயர்ந்திருக்கும், 12 விளையாட்டு அரங்குகளை கட்டுவதற்கு அல்லது சீரமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே செலவு ஆகியிருக்கும், மற்றும் அந்த அரங்குகளை நடத்துபவர்களும் சேர்ந்து தோராயமாக 1.38 பில்லியன் யூரோக்களை செலவிட்டிருப்பார்கள். இதுதவிர உள்ளூர் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டது, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது ஆகிய வகைகளில் 100 மில்லியன் கணக்கான யூரோக்கள் செலவாகியிருக்கும்.

உலக கால்பந்து கோப்பை போட்டியின் மற்றொரு முக்கியமான அரசியல் செயல்பாடு என்னவென்றால், சாதாரணமாக பொதுமக்களது பரவலான எதிர்ப்பை கிளறிவிடும் நடவடிக்கைகளை, தற்போது மிக வேகமாக செயல்படுத்திவிட முடியும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை குறிப்பாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கை பற்றிய ஆபத்தின் விளைவுகளை அரசாங்கமும் ஊடகங்களும் உருவாக்கிய காரணத்தினால் இந்த கால்பந்து விளையாட்டு போட்டிகளுக்கு போலீஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புகள் அளவிற்கு அதிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது நூற்றுக்கணக்கான CCTV காமிராக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் முதல் தடவையாக ஆயுதப்படைகள், ஜேர்மனியின் உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகின்றன, AWACS ரக வேவுபார்க்கும் விமானங்கள் விளையாட்டு போட்டிகளின்போது அப்பகுதிகளின் வான்வெளியை கண்காணிக்கும்.

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போலீசாருக்கு அனைத்து விடுமுறைகளும், விடுப்புக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. மற்றும் 2000 இராணுவத்தினர் போலீசாருக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் ஆபத்து காரணமாக தயார் நிலையில் 5000 மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, கிரேக்கம், லுக்சம்பர்க், நெதர்லாந்து நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் உட்பட 15 நாடுகளுக்கு இடையில் விமானப்போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆகியவை, சுதந்திரமாக நடைபெறுவதற்கு வகை செய்கின்ற Schengen ஒப்பந்தம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்ற நாட்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து இரசிகர்களிடையே புகுந்து எந்த சமூக விரோதியும் ஜேர்மனிக்குள் நுழைந்துவிடாது தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னர் சமூகவிரோத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களது DNA, சோதனை செய்வதற்கு முதல் தடவையாக பேர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கால்பந்து போட்டியின் போதும், சுமார் 6,000 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்கு அனுப்பப்படுவர், கால்பந்து மைதானத்திற்கு மேல் உள்ள வான்வெளி விமானங்கள் பறக்காமல் மூடப்படும். முயூனிச்சில் கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் தொடங்குகின்ற நேரத்தில் ஏறத்தாழ 60 கி. மீ. வரை வான்வெளி மற்றும் தரைபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். FIFA 20,000 தனியார் பாதுகாப்பு காவலர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் முழுவதுமே, வெள்ளோட்டம் போல் ஒரு அவசர நிலைக்காக அரசிற்கு பயிற்சியாக அமைந்திருக்கிறது.

கால்பந்து இரசிகர்கள் கூட்டத்தின் பாதுகாப்பிற்கு குறைந்த அளவிற்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்று 2006 ஜனவரியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. 12 விளையாட்டு அரங்குகளில் 4 -Berlin, Gelsenkirchen, Kaiserslautern மற்றும் Leipzig ஆகியவற்றில்- தீ தடுப்பு மற்றும் இரசிகர்கள் தப்பி ஒடுவதற்கான முன்னேற்பாடுகள் மனநிறைவு தரும் வகையில் அமையவில்லை அல்லது உலகக்கோப்பை போட்டிகளுக்கான தரத்திற்கு அவை ஏற்பாடு செய்யப்படவில்லை.

கட்டுமானப் பணிகளில் உலகக்கோப்பை போட்டிக்காக புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்குகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவிற்குள் முடிப்பதற்காக கட்டுமான நிறுவனங்கள் 10, 12 மணிநேர ஷிப்ட்டுகளில் பாதுகாப்பு நிறுவனங்களும் அவ்வாறே செய்து கொண்டிருக்கின்றன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தற்போது பணியாற்றுவது வழக்கமாகிவிட்டது. மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது ஜேர்மனியில் தளர்த்தப்பட்டுள்ளன.

சாதாரணமாக மிக நெருக்கடியான அவசர நடவடிக்கைகள் என்று கடந்த காலங்களில் செயல்படுத்துவதற்கு சங்கடமாக இருந்த நடவடிக்கைகள் தற்போது உலகக்கோப்பை போட்டிகளை ஒட்டி மிக வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன, இந்தப் போட்டிகள் முடிந்ததும் பழையநிலைக்கு நாடு திரும்புமா என்பதற்கு யார் உறுதி தருவது?

அதிக செலவு பிடிக்கும் ஊடகக்காட்சி

உலக்கோப்பை போட்டிகள் நெருங்கி வருகின்ற நேரத்தில் கவனமாக திட்டமிடப்பட்ட அதிக செலவு பிடிக்கும் ஊடகக்காட்சிகள், மிகவேகமாக நடைறுெம். சாதாரணமாக இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளை தங்களது பொழுதுபோக்கு நேரத்தில் மிகப்பெரும்பாலான மக்கள் கண்டுகளிப்பார்கள் என்றாலும், இந்த "பெரிய நிகழ்ச்சி" பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

பேர்லினில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி உலகக்கோப்பை போட்டிகளில் மக்களில், இருவரில் ஒருவர்தான் அக்கறை கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த போட்டிகளில் நேரடியாக, பங்கெடுத்துக் கொள்வது பெருமளவில் செலவாகும் நடவடிக்கையாகும். போட்டிகள் நடைபெறும் நகரங்களில் பல ஓட்டல்களில் பல்வேறு இலவச அறைகள் இருப்பதால் அவை பெரும் இழப்புக்களை சந்திக்க வேண்டி வரும். அந்த ஓட்டல்கள் முன்கூட்டியே அறைகளை பதிவு செய்வதை FIFA மார்க்கெட்டிங் நிறுவனமான WCAS-யிடம், ஒப்படைத்துவிட்டன. பேர்லினில் அத்தகைய 8,000 அறைகளில் 5,000 அறைகள் ஏப்ரல் மாத கடைசி வரை முன்பதிவு செய்யப்படாமல் இருந்ததால் அந்த அறைகளை WCAS மீண்டும் அந்த ஓட்டல்களிடமே திருப்பி அளிக்கப்பட்டன. FIFA திட்டமிட்டிருந்த ஒரு தொடக்கவிழா நிகழ்ச்சி மிகக்குறைந்த அளவிற்கே நுழைவுச்சீட்டுகள் விற்றதால் இரத்து செய்யப்பட்டது.

மே மாத நடுவில் "கோலியோ VI" என்கின்ற உலகக்கோப்பை பொம்மையை தயாரித்து வந்த நிசி என்கின்ற பொம்மை உற்பத்தி நிறுவனம் திவாலாகிவிட்டது. அந்த நிறுவனம் 500-க்கு மேற்பட்ட ஊழியர்களின் பணிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஏற்கனவே நெருக்கடியிலுள்ள அந்த நிறுவனம், தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, உலக்கோப்பை வர்த்தகத்தில் 5 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்தது, ஆனால் கால்பந்து ரசிகர்கள் அந்த நிறுவனத்தின் பொம்மைகளை வாங்குவதில் அக்கறை காட்டவில்லை.

ஒரு சில கால்பந்து விளையாட்டிற்காக, ஏராளமான பணம் எல்லா இடங்களிலும் செலவிடப்பட்டு வருவது பொதுமக்கள் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றது. இந்த விளையாட்டுக்களில் ஸ்பான்ஸர்கள் ஈடுபட்டிருப்பதால் மட்டுமல்ல, எடுத்துக்காட்டாக பாரம்பரியமாக, இதுபோன்ற விளையாட்டுக்களில் ரசிகர்கள் குடிக்கின்ற கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட மற்றும் ஆப்பிள்களில் தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்த முடியாது. ரசிகர்கள் Coca Cola வையும், Budweiser beer யும்தான் அருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் அதிக கலவரத்தை பொதுமக்களில் பலரிடம் ஏற்படுத்தியிருப்பது, உலகக்கோப்பை போட்டிகள் உறுதியளிக்கப்பட்ட பொருளாதார வேகத்தை முடுக்கிவிட முடியாது, அதற்கு மாறான விளைவைத் தான் ஏற்படுத்தும் என்பது பெருமளவில் தெளிவாகி வருகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற கூடுதல் பணிகள் மூலம் குறைந்த ஊதியம்தான் கிடைக்கும், அதுவும் சில வாரங்கள் தான் கிடைக்கும். விளையாட்டு அரங்குகளுக்குள் நடத்தப்படும் மிகப்பெரும்பாலான பணிகளை ஊதியம் பெறாத தொண்டர்களே மேற்கொண்டுள்ளனர்.

உலகக்கோப்பை ஸ்பான்சர்களில் ஒருவரான Deutsche Telekom நிறுவனம் வரும் மாதங்களில் 30,000 பணிகளை வெட்ட திட்டமிட்டிருக்கிறது.

உலகக்கோப்பை வரும், முடிந்துவிடும் ஆனால் அதற்காக செலவிடப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், பிரதானமாக பணக்காரர்களின் பைகளில் போய் சேர்ந்துவிடும், அதனால் இலாபம் அடைபவர்கள், ஊடக நிறுவனங்களும் ஸ்பான்சர்களும் ஓட்டல்களும் சூதாட்ட விடுதிகளும் சிறந்த உணவு விடுதிகளும், இவை போன்ற நிறுவனங்களும்தான், ஆனால் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஒன்றும் கிடைக்காமல், அவர்கள் மிச்சம் மீதி விட்டெறிவதை சேகரிக்கின்ற நிலைக்குத் தான் தள்ளப்பட்டு வருகின்றனர்.

Top of page