WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பால்கன்
Montenegro: Independence vote completes dismemberment of
Yugoslavia
மொண்டிநீக்ரோ: சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு யூகோஸ்லாவிய துண்டாடலை பூர்த்தி
செய்கிறது
By Paul Bond
27 May 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
சேர்பியாவிலிருந்து மொண்டிநீக்ரோவை தனிநாடாக ஆக்குவதை ஆதரித்து, மே
21-ல் நடத்தப்பட்ட வாக்குப்பதிவு பால்கன்கள் துண்டாடப்பட்டதில் ஒரு புதிய கட்டத்தை எட்டுவதாகும். இந்த
சிறிய குடியரசு பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பில் வாக்களித்தது யூகோஸ்லாவியாவின் பழைய எல்லையிலிருந்து
பிரிக்கப்பட்ட ஆறாவது நாடட்டை கொண்டுவந்துள்ளது.
ஊடக விமர்சகர்கள் புதிதாக சுதந்திரம் அடைந்துள்ள மொண்டிநீக்ரோவிற்கு திறந்து
விடப்பட்டிருப்பதாக கருதப்படும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டி, யூகோஸ்லாவியா இறுதியாக பிளவுபடுத்தப்பட்டதை
பொதுவாக எந்தவிதமான கட்டுத்திட்டமும் இல்லாமல் வரவேற்றுள்ளனர். ஆயினும், உண்மை என்னவென்றால்,
பால்கன்கள் முழுவதிலும் வளர்ந்துவரும் வறுமையும் ஸ்திரமற்ற தன்மையும்தான்.
இந்த பொதுவாக்கெடுப்பில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி:
"மாண்டிநீக்ரோ குடியரசு முழு சர்வதேச
மற்றும் சட்ட உள்ளுணர்வோடு கூடிய ஒரு சுதந்திர அரசாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?" தனி நாட்டிற்கு
ஆதரவான-மற்றும் எதிர்ப்பான இயக்கங்களை நடத்தியவர்கள் ஒரு பெரும்பான்மை உச்சவாக்கு பற்றிய ஒரு உடன்பாட்டிற்கு
வர தவறிவிட்டதால், ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச ஒப்புதலுக்கு ஒரு 55 சதவிகித பெரும்பான்மை வேண்டும்
என்று முன்மொழிவு செய்தது. சுதந்திரத்திற்கு-ஆதரவான பிரசாரத்திற்கு மிக குறுகலான வெற்றி கிடைத்தது,
55.4 சதவிகிதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு 86 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.
"சுதந்திரம்" என்ற சொல் மிகவும் தவறான வழியில் இட்டுச்செல்லப்பட்டு
கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நடப்பு மொண்டிநீக்ரோ பிரதமர், மிலோ ஜூகனோவிக் போன்ற
பிரிவினைவாத அரசியல்வாதிகள், அமெரிக்க அரசினாலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும், தீவிரமாக ஊட்டி
வளர்க்கப்பட்டவர்கள் இந்த மூலோபாய பிராந்தியத்தில் தங்களின் புவிசார் அரசியல் அக்கறைகளை முன்னெடுத்து
செல்வதற்கு ஒரு வழியாக பிரிவினையை கருதினர்.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி சுலோபோடன் மிலோசெவிக்கின், முன்னாள்
நண்பராக விளங்கிய, ஜூகனோவிக், 1991 முதல் 1997 வரை மொண்டிநீக்ரோவின் பிரதமராக பணியாற்றி
வந்தார். இவர் 1997-ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பால்க்கன் நாடுகளில் தங்களது நலன்களுக்கு
எதிரான எந்த தடைக்கற்களையும் நீக்குவதற்கு யூகோஸ்லாவிய கூட்டாட்சி குடியரசை சிதைக்க வேண்டும் என்று
முயன்ற மேற்கு நாட்டு வல்லரசுகளின் நடவடிக்கைகளில் அடுத்த காலகட்டத்தில் அவர் ஒரு முக்கிய பங்களிப்பு
செய்தார்.
இந்த குறுகலான மலைப்பகுதி பிராந்தியம், ஏறத்தாழ அமெரிக்க கணக்டிகட்
மாகாணத்தின் பரப்பளவைக் கொண்டது மற்றும் 630,000 மக்களைக் கொண்டது, இந்த நாட்டில் வல்லரசு
செல்வாக்கு பெல்கிரேட்டை முற்றுகை இடுவதன் ஓர் அங்கமாக பார்க்கட்டிருந்தது, அது 1999-ல் சேர்பியாவிற்கு
எதிரான விமானப்போரில் முடிவடைந்தது. மொண்டிநீக்ரோ கட்டுப்பாட்டின் மூலம் சேர்பியாவிற்கு ஆட்ரியாட்டிக்
கடல்வழித்தடம் மறுக்கப்பட்டது. போருக்கு முன்னர், சேர்பியாவிற்கான எண்ணெய் அளிப்புக்களில் பெரும்பகுதி
டாங்கர் லாரிகள் மூலம் தரை வழியில் வந்தன.
மேற்கு நாடுகளின் ஆதரவை அரவணைத்துக்கொண்ட, ஜூகனோவிக் ஆட்சி இந்த
பகுதியில் ஒரு சலுகை பெற்ற அந்தஸ்த்தை அடைந்தது. சேர்பியாவுடன் யூகோஸ்லாவியா நாட்டின், ஒரு பகுதியாக
கருதப்பட்டு வந்தாலும், மொண்டிநீக்ரோ சலுகை அடிப்படையிலான நாணயப்புழக்க அந்தஸ்த்தை பெற்றது மற்றும்
கொல்லைப்புற வழியாக யூரோ நாணய மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் சேர்பிய
பொருளாதார அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நின்றது. மொண்டிநீக்ரோவிற்கு மேற்கு நாடுகள்
நிதி ஆதரவு தந்தன, 2001-ல் 89 மில்லியன் டாலர்களை அமெரிக்கா உதவியது. இதற்கு கைமாறாக,
ஜுகனோவிக் அரசாங்கம் தீவிர தனியார்மய மற்றும் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல
முன்வந்தது.
இந்த சலுகை பெற்ற பொருளாதார அந்தஸ்த்தை பயன்படுத்தி தனது பிரிவினைவாத
செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜுகனோவிக் முயன்றார். என்றாலும், இதனால் ஏற்பட்ட பயன்களை
நாட்டின் மிகப்பரவலான பெரும்பான்மை பகிர்ந்து கொள்ளவில்லை. தொழிற்துறை அடித்தளம் ஒன்றில்லாமல்
பொருளாதாரத்தில் கள்ளச்சந்தை மேலாதிக்கம் செலுத்தியது, குறிப்பாக சிகரெட் கடத்தல் நடைபெற்றது.
வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்றைக்கும் 30 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது, மற்றும்
சராசரி மாதாந்திர ஊதியம் 250 டாலர்கள்தான்.
ஜுகனோவிக் பிரிவினைவாதத்தை நோக்கிச் சென்றாலும், பொதுமக்கள் இந்தப் பிரச்சினை
தொடர்பாக பிளவுபட்டு நின்றனர். சுதந்திரத்திற்கான ஒரு பொதுவாக்கெடுப்பாக 2001 நாடாளுமன்ற
தேர்தல்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ஜுகனோவிக் நம்பினார், ஆனால் 50 சதவிகிதம் வாக்குகள்
சுதந்திரத்திற்கு எதிரான வேட்பாளர்களுக்கு சென்றது.
BBC,
தந்துள்ள தகவலின்படி வெளிநாடுகளில் வாழ்ந்து
கொண்டிருக்கின்ற மொண்டிநீக்ரோவினர் அண்மையில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்,
அதே நேரத்தில் சேர்பியாவில் வாழ்கின்ற மொண்டிநீக்ரோவினர் வாக்களிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. சேர்பியர்களுக்கும்
மற்றும் மொண்டிநீக்ரோவினருக்கும் இடையில் நிலவுகின்ற நெருக்கமான தொடர்புகளை (மொண்டிநீக்ரோ மக்களில்
32 சதவிகிதத்தினர் சேர்பியர்) எடுத்துக் கொண்டால் இது இறுதி முடிவில் நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்க வேண்டும், ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
மிலோசெவிக் அகற்றப்பட்டதை தொடர்ந்து மற்றும் அவருக்கு பதிலாக
யூகோஸ்லாவிய தலைமை அரசுக்கு அதிகம் வளைந்து கொடுக்கும் ஓஜ்ஜிஸ்லவ் ஹோஸ்டனிக்கா ஜனாதிபதி பதவியை
ஏற்றதும் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்கள் மொண்டிநீக்ரோ சுதந்திரத்தை நோக்கிச் செல்லும் வழி
மங்கிவிட்டதாக கருதின. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஜுகனோவிக்கின் அபிலாஷைகளை, கட்டுப்படுத்த
முயன்றது, மற்றும் நாடு சுதந்திரம் பெறுவது தொடர்பாக, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிராக
எச்சரித்தது. அந்த எச்சரிக்கைக்கு ஒரு காரணம் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மொண்டிநீக்ரோ பிரிவினை
உருவாக்கும் விளைபயன்கள் தான், ஸ்பெயின் நாட்டில், கட்டலன் மற்றும் பாஸ்க் தேசியவாதிகள் ஒரு சுதந்திர
மொண்டிநீக்ரோ தங்களது சொந்த பிரிவினைவாத அபிலாஷைகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்றாலும், இறுதியில், ஐரோப்பிய ஒன்றியம்
வாஷிங்டனோடு சேர்ந்து பணியாற்ற
முடிவு செய்தது மற்றும் மொண்டிநீக்ரோ மற்றும் கொசோவா ஆகிய இரண்டு நாடுகளின் சுதந்திரத்தையும்
வலியுறுத்த முடிவு செய்தது. கொசோவா தற்போது ஒரு ஐ. நா. பாதுகாப்புக்கு உட்பட்ட எல்லைப்பகுதியாக
இருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் சேர்பியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒருங்கிணைப்பதற்கான
கடைசி சுற்று பேச்சுவார்த்தைகளை இரத்து செய்வதற்கு சென்ற மாதம் ஐரோப்பா முடிவு செய்தது,
பெல்கிரேடு, ஜெனரல் ராட்கோ மலாடிக்கை கைது செய்து மற்றும் அவரை ஹேக்கிலுள்ள ஐ. நா. போர்
குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத்தில் ஒப்படைக்க தவறிவிட்டது என்ற அடிப்படையில், இந்த முடிவு
எடுக்கப்பட்டது. மலாடிக், பொஸ்னிய சேர்பிய இராணுவத்தின் முன்னாள் தலைவர், அவர் 1995-ல்
ஸ்ரேபிரெனிக்காவில் 8,000 முஸ்லீம் ஆண்களையும் மற்றும் சிறுவர்களையும், கொன்று குவித்தது தொடர்பாக
இனக்கொலை குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் சேர்பியா-மொண்டிநீக்ரோ
இடையில் நெருக்கமான உறவுகள் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு அவர் கைது செய்யப்படுவது ஒரு முன்
நிபந்தனையாக விதிக்கப்பட்டது, ஆனால் அவர் ஒப்படைக்கப்படுவதற்கான இறுதிகாலக்கெடு ஏப்ரல்
மாதக்கடைசியில் முடிவடைந்தது.
பொஸ்னியாவுடன், சேர்பியா மட்டுமே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு
ஸ்திரத்தன்மை மற்றும் உறவு உடன்படிக்கை,
(SAA)
செய்து கொள்ளாத ஒரே பால்கன் நாடாகும்.
ஐரோப்பிய ஒன்றிய
விரிவாக்க கமிஷனர், ஒல்லி ரெஹான்,
சேர்பியாவிற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுத்தார், சேர்பியா, "முழு ஒத்துழைப்பிற்கு சம்மதிக்கும்
வரை" பேச்சுவார்த்தைகள் இரத்துச் செய்யப்படும் என்று கூறினார்.
மலாடிக், ஹேக் நீதிமன்றத்தில் ஆஜரானால்தான் மொண்டிநீக்ரோவிற்கு 2006ம்
ஆண்டில் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இந்த பிரச்சினையை மொண்டிநீக்ரோ
பிரிவினைவாதிகள், சேர்பியாவினால் "பிணையாக பிடிக்கப்பட்டிருக்கிறது" என்று அதற்கு எதிராக பிரச்சாரம்
செய்ய சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒருங்கிணைக்கப்படுவது வெற்றி பெறுவதற்கு ஹோஸ்டுநிக்கா
ஆர்வமாக உள்ளார். அண்மையில் ஜேர்மனிக்கு விஜயம் செய்த அவர்
SAA
பேச்சுவார்த்தைகள், நீடிக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கு பால்கன் நாடுகளில் சேர்பியா "ஸ்திரத்தன்மைக்கான ஒரு
காரணி" என்று சித்தரித்தார். என்றாலும், அவர் ஒருங்கிணைப்பை நிதானமாக கொண்டு சென்று தேசியவாத
ஜனரஞ்சகவாதத்திற்கு ஒரு உள்நாட்டு வேண்டுதல் விடுப்பதுடன் சமன்படுத்த முயன்றார். மொண்டிநீக்ரோ
பொதுவாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ள "முடியாது" என்ற தரப்பிற்காக பிரசாரம் செய்த ஹோஸ்டுநிக்காவை
வாக்குப்பதிவில் "அளவிற்கு அதிகமாக தலையிட வேண்டாம்" என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது.
அந்த பிராந்தியம் கட்டுத்திட்டம் எதுவுமில்லாமல் துண்டாடப்படுவது குறித்து மிக
கவனமாக அணுகும், ஐரோப்பிய ஒன்றிய
வெளியுறவுக் கொள்கை தலைவர்
ஜேவியர் சோலனா, "அமைதியான" பொதுவாக்கெடுப்பை வரவேற்றார் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
அதை ஏற்றுசெயல்படுத்தும் என்று
கூறினார். ஐரோப்பிய ஒன்றியம்
தற்போது மொண்டிநீக்ரோவுடன் ஒரு
SAA
உடன்படிக்கையில் கையெழுத்து வாங்குவதற்கு
தனிமுன்மொழிவுகளை தாக்கல் செய்யும் என்று ரேஹன் குறிப்பிட்டார், அதன்மூலம் சேர்பியாவை விட வேகமாக
புதிய அரசு ஐரோப்பிய
ஒருங்கிணைப்பை செயல்படுத்தும் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் வாக்கில் மொண்டிநீக்ரோ ஐ. நா.வில் இடம்பெறும் என்று
ஜுகனோவிக் தெரிவித்தார். பொதுவாக்கெடுப்பு முடிந்தவுடன் அவர் வெளியிட்ட அறிவிப்பில் தனது "மூலோபாய
குறிக்கோள்" "NATO-விலும்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதுதான்" என்று அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துவன் மூலம் பலவீனமான
பொருளாதாரத்திற்கு உற்சாகம் ஏற்படும் என்று மொண்டிநீக்ரோ பிரிவினைவாதிகள் கருதுகின்றனர், ஜனாதிபதி
பிலிப் ஊஜனோவிக், "மிக வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன் வாழ்க்கைத்தரமும் உயரும்" என்று
எதிர்பார்ப்பதாக கூறினார். அவர்களது முக்கியமான பொருளாதார திட்டம் சுற்றுலா தொழிலை வளர்ப்பதாகும்.
மிகப்பெரும்பாலான மொண்டிநீக்ரோ மக்களுக்கு இது சொற்ப உதவியையே தரும்.
அதன் சிறிய பொருளாதாரம் பெரிய பூகோள நிறுவனங்களையும் சர்வதேச நிதியமைப்புக்களையுமே சார்ந்திருக்கிறது.
சில விமர்சகர்கள் பால்கன் நாடுகளில் மீண்டும் குழப்பம் ஏற்படுவதால் ஆபத்து
உருவாகும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளனர். 1999-2000 ஆண்டுகளில் முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிராசிகியூட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய டிமோத்தி வில்லியம் வாட்டர்ஸ், அண்மையில்
நியூயோர்க் டைம்சில் ஒரு எச்சரிக்கை விடுத்து, எழுதியிருந்தார் சேர்பியாவில் முதலீடு செய்வதற்கு ஒரு
முன் நிபந்தனையாக, மலாடிக்கை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, எதிர்பார்ப்பதற்கு
மாறான விளைவுகளை ஏற்படுத்தும், "நடப்பு கொள்கையின், விளைவு நிச்சயமற்றது" என எழுதுகிறார்.
சுலோபோடன் மிலோசெவிக் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியபோது, "நம்பகத்தன்மையுள்ள கூற்றுக்கள்"
வந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் "சேர்பியாவின் அரசியல் இன்னும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை" என்று
வாட்டர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐரோப்பாவின் பிற பகுதிகளையும் கொளுத்துகின்ற ஒரு வெடிமருந்து பீப்பாயாக
பால்க்கன் நாடுகள் மீண்டும் உருவாகக்கூடும் என்ற சாத்தியக் கூறுகளுக்கு மிகவும் வெளிப்படையாக சோலனா
இருந்தார். "பிரஸ்சல்சையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் நோக்கி சேர்பியா நடைபோடாத வரை," "பால்கன்
நாடுகளில் ஸ்திரத்தன்மை இருக்காது மற்றும் அதனால் ஐரோப்பிய கண்டத்திலேயே ஸ்திரத்தன்மை இருக்காது" என்று
அவர் எச்சரித்தார்.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்
மாண்டிநீக்ரோவை இணைப்பதை முடுக்கிவிடுவதில் ஐரோப்பிய ஒன்றிய
தூதர்களும் தயக்கத்தை வெளிப்படுத்தினர்,
ஏனெனில் சேர்பியாவிற்குள் இது ஒரு உள்நாட்டு எதிர்ப்பை உசுப்பிவிடக்கூடும் என்பதாலாகும்.
Top of page |