WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Framework for a police state
US government phone spying targets all
Americans
போலீஸ் அரசிற்கான கட்டமைப்பு
அமெரிக்க அரசாங்கத்தின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் அனைத்து அமெரிக்கர்களையும் இலக்குவைக்கின்றது
By the editorial board
12 May 2006
Back to screen
version
அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசை உருவாக்குவதற்கு தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுகிறது
என்பதற்கான மேலும் சான்றளிக்கின்ற வகையில் 100 மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தொலைபேசி தொடர்புகள்
திரட்டப்பட்டிருப்பது பற்றி USA Today
ஒரு பரவலான இரகசிய தேசிய பாதுகாப்பு அமைப்பின் புள்ளிவிவர சேகரிப்புமைய தகவலை வெளியிட்டிருக்கிறது.
NSA புள்ளி
விவர திரட்டு ஒரு பாரியளவிற்கு மக்களை மிரட்டலுக்கும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்குமான திட்டமாகும்.
இந்த அப்பட்டமான சட்டவிரோத அரசாங்க கண்காணிப்பு ஜனாதிபதி புஷ் கூறுவதை
போன்றும் அதன் பல்வேறு அம்சங்களை விமர்சிக்கின்ற ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் எதிரொலிப்பதை போன்றும்
இந்த நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு எதிரானது அல்ல. அரசாங்க சாதனங்களால் அமுல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டம்
தமக்கான பெரும் எதிர்ப்புக்கள் சிதறிக் கிடக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து அல்லாது அமெரிக்க மக்களிடமிருந்து
வருவதை அவர்கள் காண்பதன் விளைவாகும். சமூக எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்ற நேரத்தில் அரசாங்கம், மக்கள்
என்ன நினைக்கிறார்கள்? யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க திட்டமிட்டு அரசாங்கம் புள்ளி
விவரங்களை திரட்டி வருகிறது.
தொலைபேசி தொடர்புகளை கண்டுபிடிக்கும் திட்டம் செப்டம்பர் 11 2001 பயங்கரவாத
தாக்குதல்கள் நடைபெற்று சற்று பின்னர் செயல்படுத்தப்பட்டு வருவதாக
USA Today
செய்தி தெரிவிக்கிறது. அமெரிக்காவிலுள்ள மூன்று மிக பெரிய
தொலைதொடர்பு நிறுவனங்களான AT&T
Verizon,
BellSouth
ஆகியவை புஷ் நிர்வாகத்தோடு இரகசியமாக ஒத்துழைக்க சம்மதித்தன மற்றும் அவைகளின் ஏறத்தாழ 200 மில்லியன்
வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு பற்றிய பதிவேடுகளையும்
NSA இற்கு கையளிக்க இணங்கின. இத்திட்டம் நீதிமன்ற பிடியாணை
அல்லது நாடாளுமன்ற கண்காணிப்பு இல்லாமல் நடத்தப்பட்டுவருவதாகும். இது மத்திய சட்டங்களையும் அத்துடன்
குடிஉரிமைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சிவில் உரிமைகளையும் அப்பட்டமாக மீறுவதாக அமைந்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால் அரசாங்கத்திடம் மிகப்பெரும்பாலான அமெரிக்க மக்களின்
தனிப்பட்ட, வர்த்தகம் மற்றும் அரசியல் தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. அந்தத்
தகவலை அரசாங்கம் FBI, CIA,
பென்டகன் மற்றும் இதர அரசாங்க அமைப்புக்களுக்கு தந்து விட
முடியும்.
இந்தத் திட்டமும் இதற்கு முந்திய கசிந்த திட்டமான சர்வதேச தொலைபேசி மற்றும்
மின்னஞ்சல் தொடர்புகள் தொடர்பான NSA
ஒட்டுக்கேட்கும் சட்டவிரோத நடவடிக்கைகளும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி
ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்து மற்றும் அவர்களது ஒப்புதலோடு
முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் பற்றிய தகவல் அம்பலத்திற்கு வந்ததும் எந்தக் கட்சியை சேர்ந்த
அரசியல்வாதிகள் என்ன கண்டனங்களை தெரிவித்திருந்தாலும் மற்றும் எத்கைய நாடாளுமன்ற விசாரணைகள்
நடைபெற்றிருந்தாலும் முன்னோடியில்லாதளவிற்கு ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதலுக்கு குடியரசு
மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஒத்துழைத்து அரசியல் முகமூடியை வழங்குவதுதான் அவர்களது பிரதான நோக்கமாக
இருக்கிறது.
புஷ்சிடமிருந்து தொடங்கி, அமெரிக்க மக்களுக்கு திட்டமிட்டு பொய்களை கூறி ஒரு போலீஸ்
அரசின் கட்டமைப்பை உருவாக்க சட்டத்தை சிதைத்தவர்களை சட்டவிரோத வேவுபார்ப்பது அல்லது அதற்கான பொறுப்பு
ஏற்கச் செய்வதற்கு எதுவும் செய்யப்பட மாட்டாது.
பெரிய பெரு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையில் விருப்பத்துடன் பங்கெடுத்துக்
கொண்டிருப்பது அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரிடையே ஒட்டுமொத்தமாக ஜனநாயக உரிமைகளுக்கு எந்தவித தீவிர
ஆதரவும் இல்லாமல் சிதைந்து விட்டதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதுடன் மற்றும் செல்வம் நிதியாதிக்க
ஒருசிலவராட்சியில் குவிந்திருப்பதற்கு உழைக்கும் மக்களிடையே எதிர்ப்பு வளர்ந்து வருவதை ஒடுக்குவதற்கு எதேச்சதிகார
வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும் அது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
USA Today பத்திரிகையில்
வெளியிடப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு திட்டம் பற்றிய செய்தி சென்ற டிசம்பரில் நியூயோர்க் டைமிசில் இரகசியமாக
அம்பலத்திற்கு வந்த சர்வதேச தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்கும் நடவடிக்கைகளுக்கும் அப்பால்
சென்று கொண்டிருக்கிறது. UAS Today
செய்தியில் ஒரு தகவல்வட்டாரம் குறிப்பிட்டிருப்பதைப் போல் அது ''உலகிலேயே எப்போதும் திரட்டப்பட்டிராத
அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ள மிகப் பெரிய புள்ளி விவரமாகும்''.
NSA 9/11க்கு பின்னர்
அமெரிக்காவில் நடைபெற்ற ஒவ்வொரு தொலைபேசி தொடர்பு பற்றியும் தகவல் திரட்டியுள்ளது. அத்துடன் அதற்கு பல
ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய ஒரு வரலாற்று பதிவேடும் உள்ளது. இந்த
பதிவேடுகளில் ஒவ்வொரு அழைப்பும் எந்த தொலைபேசி எண்ணிலிருந்து தொடங்கியது எந்த எண் அழைக்கப்பட்டது மற்றும்
எவ்வளவு நேரம் தொடர்பு கொள்ளப்பட்டது என்ற விவரங்களும் அடங்கியுள்ளன.
தொலைபேசி தொடர்பு கொண்டவர்கள் பெயர்
NSA புள்ளிவிவர
தொகுப்பில் இல்லையென்றாலும் அத்கைய தகவலை மிக எளிதாக இதர அரசாங்க மற்றும் வர்த்தக புள்ளி விவரத்
தொகுப்பை சரிபார்த்து கண்டுபிடித்து விட முடியும்.
USA Today கூறியிருப்பதைப்
போல் இந்த திட்டத்தில் உண்மையிலேயே என்ன பேசினார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை---ஏனென்றால்
கண்காணிக்கப்படுகின்ற பில்லியன் கணக்கான தொலைபேசித் தொடர்புகளில் பேசியது என்ன என்பதை கண்டுபிடிக்க
இயலாது--- ஆனால் மாறாக புள்ளிவிவரங்களுக்கான பெரும்பாலான தகவல்களை சிக்கலான மென் பொருள்களை
கொண்டு எந்த வகையான தொலைபேசித் தொடர்புகள் என்று கண்டுபிடித்து விட முடியும். அதைக் கொண்டு
NSA அமெரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்த எந்த தனிமனிதரது
அரசியல், சமூக, வணிக மற்றும் தனிப்பட்ட தொடர்புகளையும் கண்டுபிடித்து விட முடியும்.
அந்த செய்தியை வெளியிட்ட நிருபர் வெஸ்லி எழுதியிருப்பதைப்போல் ''உங்களது கை
தொலைபேசி அழைப்புக்களையும் அத்துடன் உங்களது வீட்டு தொலைபேசி அழைப்புக்களையும் கண்டுபிடித்து விடலாம்
என்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு''. இந்தத் தகவல் FBI
மற்றும் CIA
இற்கு வழங்கப்பட்டிருப்பதற்கான "வாய்ப்புக்கள் அதிகம்" உள்ளன என்று
அவர் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளார்.
AT&T ,
Verizon, BellSouth
நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதிகளில் உள்ளூர் நீண்ட தொலைத்தொடர்பு மற்றும் கைத்தொலைபேசி சேவையை
தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. நான்காவது நிறுவனமான, மிகச்சிறிய
Qwest நிறுவனம்
NSA திட்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது. டென்வரை அடிப்படையாகக்கொண்ட
Qwest நிறுவனம் 14 மேற்கு மாநிலங்களில் உள்ளூர் தொலைபேசி
சேவையையும் மற்றும் சில பகுதிகளில் நெடுந்தொலைவு சேவையையும் நடத்தி வருகிறது.
NSA திட்டம்
சந்தேகத்திற்குரிய சட்டபூர்வமான தன்மையை கொண்டிருப்பதால்
Qwest நிறுவனம் அதை
ஏற்றுக் கொள்ள மறுத்ததாக USA Today
கட்டுரை தெரிவிக்கிறது.
தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களது கடந்த கால தொலைபேசி
தொடர்பு விவரங்களை தர வேண்டும் என்றும் அத்துடன் நடப்பு தொலைபேசி பயன்பாடு பற்றியும் முறையான புள்ளி
விவரங்களை தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால் மிகப் பழைய
பதிவேடுகள் இல்லாவிட்டாலும் 1984 இல் பழைய AT&T
ஏக போக நிறுவனம் நிலைமுறிவுற்ற பின்னர் தொடங்கி இப்போது வரை அனைத்து தொலைபேசி தொடர்பு விவரங்களும்
NSA இடம் உள்ளன. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு
அமெரிக்கர்களது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் தொலைபேசி தொடர்புகள் இப்போது அரசாங்க பதிவேடுகளில்
உள்ளன.
NSA புள்ளி விவரங்களை பயன்படுத்தி
சோசலிச, போர் எதிர்ப்பு, சிவில் உரிமைகள், சிவில் சுதந்திர குழுக்கள் போன்ற புஷ் நிர்வாகத்தின் கொள்கையை
எதிர்க்கும் அரசியல் அமைப்புகளுடன் சம்பந்தபட்ட எவரையும் கண்டுபிடித்துவிட முடியும். அது போன்ற அமைப்புக்களோடு
தொடர்புடையவர்கள் NSA
புள்ளி விவரங்களின்படி எதிர்காலத்தில் ''பயங்கரவாதி'' என்று முத்திரை குத்தப்படலாம்
என்ற சந்தேகத்திற்கு இடமில்லை. அத்தகைய அரசியல் எதிரிகளை கைது செய்வதற்கான சம்பவத்தில் இந்த புள்ளி
விவரங்களை கொண்டு கைது செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டவர்களோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும்
நபர்களது பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கண்டுபிடித்து விட முடியும். அதன் மூலம் மேலும் கைதுகள் செய்வதற்கும்,
சிறை வைப்பதற்கும் ஒரு வழியமைக்கப்பட்டுவிடும்.
NSA புள்ளி விவரத்தை சோதனையிட்டு
குறிப்பிட்ட வெளிநாடுகளோடு முறையாக தொடர்பு கொண்டவர்களை கண்டுபிடித்து விட முடியும். அதன் மூலம்
புலம்பெயர்ந்தோர் தொடர்பான அதிரடிச் சோதனைகளில் இலக்குகளை கண்டுபிடித்து விட முடியும். இந்த புள்ளி
விவரங்களை பயன்படுத்தி தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களையும் கண்டுபிடித்து
விட முடியும். உதாரணமாக கிழக்கு ஐரோப்பாவில் CIA
இரகசிய சிறைச்சாலைகள் பற்றி வாஷிங்டன் போஸ்ட்டுடன் பேசியவர்களை
அல்லது சர்வதேச தொலைபேசி தொடர்புகளை
NSA கண்காணிப்பது
தொடர்பான சட்ட விரோத நடவடிக்கை குறித்து இரகசியங்களை அம்பலப்படுத்துவோர் போன்றவர்களை கண்டுபிடித்து
விட முடியும். முறையாக நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்
அரசாங்க ஊழியர்களையும் வெள்ளை மாளிகை அடையாளப்படுத்தி விட முடியும்.
இந்த தகவலை பயன்படுத்தி தனிமனிதர்களை மிரட்டவும், பயமுறுத்தவும் அவர்களது
நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வர்த்தக சகாக்கள் பற்றி தகவல் திரட்டவும் முடியும்.
ஜனநாயக உரிமைகள் மீது புஷ் நிர்வாகம் இதர எல்லாவித தாக்குதல்களையும் நடத்தி
வருவது போன்று பாரியளவிலான NSA
தொலைபேசி உளவுவேலையையும் ''பயங்கரவாத-எதிர்ப்பு'' நடவடிக்கை என்று ஆதரித்து வருகிறது. ஒரு சில
பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு அமெரிக்கர்களின் தொலைபேசி தொடர்புகள் பற்றிய தகவல் மத்திய
அரசாங்கத்திற்கு தேவை என்பது ஒரு அபத்தமான கூற்றாகும். அல்கொய்தா தோன்றுவதற்கு நெடு காலத்திற்கு முன்னரே
நடைபெற்ற தொலைபேசி தொடர்புகளை பதிவேடாக திரட்டுவது
NSA இன் பயங்கரவாத-எதிர்ப்பு புலன்விசாரணையோடு
சம்மந்தப்பட்டது என்பதற்கு எந்த விதமான அடிப்படையும் இல்லை.
USA Today செய்தி
ஊடகங்களிலும் தலை நகரிலும் ஒரு விமர்சன விறுவிறுப்பை கிளப்பியதும் வியாழனன்று ஜனாதிபதி புஷ் வெளியிட்டுள்ள ஒரு
சிறிய தயாரிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையிலேயே அந்தக் கட்டுரையை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அந்த
செய்தி பத்திரிகை விபரத்தின் சாராம்சத்தை புஷ் மறுக்கவில்லை அதே நேரத்தில் நிர்வாகத்தின் அனைத்து கண்காணிப்பு
நடவடிக்கைகளுமே சட்டபூர்வமானவை மற்றும் அல்-கொய்தாவிற்கும் இதர வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுக்கும்
எதிராக மட்டுமே எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ''எங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் சாதாரண
அமெரிக்கர்கள் தனித்து இருக்கும் உரிமைக்கு கடுமையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ''மில்லியன் கணக்கான
அப்பாவி அமெரிக்கர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை நாங்கள் தோண்டி ஆராயவில்லை அல்லது அதை ஏறி
மிதிக்கவில்லை'' என்று அவர் கூறினார்.
நியூயோர்க் டைம்ஸ் முதலில்
NSAவின் இரகசிய விஷேட
அனுமதி இல்லாத சர்வதேச தொலைபேசி தொடர்புகள் கண்காணிப்பு பற்றிய செய்தியை வெளியிட்டபோது புஷ் என்ன
கூறினார் என்பதை கொண்டுதான் இந்த அறிக்கையின் நம்பகத் தன்மையை முடிவு செய்ய முடியும். அந்த நேரத்தில் புஷ்
பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பவர்கள் கண்காணிக்கப்படுகிறது அல்லது சர்வதேச தொலைபேசி அழைப்புகளை
கண்காணிக்கப்படுவதாக கூறினார். ''இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ''தொடர்பின் ஒரு முனை
அமெரிக்காவிற்கு வெளியில் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். அதற்கு பின்னர்
NSA சட்ட விரோதமாக
ஆயிரக்கணக்கில் உள்நாட்டு தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்ட தகவல் வெளியாயிற்று.
அதேபோன்றதொரு மோசடியான வடிவத்தை வியாழனன்று புஷ் தனது அறிக்கையில்
உருவாக்கிறார். ''நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் உள்நாட்டு தொலைபேசி தொடர்புகளை அரசாங்கம்
ஒட்டுக்கேட்கவில்லை'' என்று அவர் அறிவித்தார். ஆனால்
USA Today வெளியிட்டிருந்த செய்தி தொலைபேசி
தொடர்புகளை ஒட்டுக் கேட்பது பற்றி கவலைப்படுவது அல்ல ஆனால் தனிப்பட்டவர்கள் தொலைபேசி தொடர்பு வைத்துக்
கொள்கின்ற தகவலை பதிவு செய்வது 1934 தகவல் தொடர்புகள் சட்ட 222 ஆவது பிரிவுப்படி சரிசமமான
சட்டவிரோத நடவடிக்கை ஆகும். புஷ் நிர்வாகம் 1978 வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தின் கீழ் இரகசிய
நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி தொடர்புகளை கண்காணிப்பதற்கான ஒப்புதலை பெறவில்லை. விஷேட அனுமதி இல்லாமல்
தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதில் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்ட நீதிமன்றத்தை புறக்கணித்துவிட்டு புஷ்
நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது.
இந்தக் கூற்று தொடர்பாக புஷ் மேலும் குறிப்பிட்டார்: ''நான் அங்கீகாரம் அளித்துள்ள
புலனாய்வு நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை மற்றும் அவை பற்றி நாடாளுமன்றத்தின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி
ஆகிய இரண்டு கட்சிகளின் தகுதி வாய்ந்த உறுப்பினர்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கிறது.'' வெள்ளை மாளிகை ஒரு சில
உறுப்பினர்களுக்கு தான் சுருக்கமாக விளக்கம் தந்தது--- என்றாலும் இதில் உள்ள நிபந்தனைகள் என்னவென்றால் செனட்
மற்றும் கீழ்ச்சபை புலனாய்வு குழுக்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கம் தர வேண்டும். அப்படி இருந்தும்
ஜனநாயகக் கட்சியினரின் அதிகளவு ஒத்துழைப்புடன் அவரது நிர்வாகத்தின் உள்நாட்டு உளவு திட்டம் தொடர்பாக முக்கிய
ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே விளக்கம் தரப்பட்டது என்று திரும்பத் திரும்ப புஷ் கூறி வந்தது அவர்களது
சம்பிரதாய-சார்பு கண்டனத்திற்கு பின்னணியாக உள்ள இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
திங்களன்று இந்த திட்டங்களை நீடிக்க புஷ் கருதியிருப்பதை எடுத்துக்காட்டும் வகையில்
சென்ற வாரம் போட்டர் ஹோஸ் இனை வெளியேற்றிவிட்டு அவருக்குப்பதில்
CIA தலைவராக விமானப்படை தளபதி ஜெனரல் மைக்கேல் ஹேடனை
நியமித்திருக்கிறார். தேசிய புலனாய்வுத் துணை இயக்குனராக தற்போது பணியாற்றி வருகின்ற ஹேடன், 1999 மார்ச்
முதல் 2005 ஏப்ரல் வரை NSAவின்
தலைவராக பணியாற்றி வந்தார். எனவே தொலைபேசி தொடர்புகளை கண்டுபிடிக்கும் திட்டத்தை உருவாக்கியதற்கு
அவர்தான் பொறுப்பு.
ஹேடனை CIA
தலைவர் பதவியில் ஊர்ஜிதம் செய்வதற்கு அடுத்த வாரம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உறுதிப்படுத்தும்
விசாரணைகளில் அவரை இந்தத் திட்டம் குறித்து கேட்கப் போவதாக செனட் புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள
ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி ஆகிய இருதரப்பு உறுப்பினர்களும் தெரிவித்தனர். சர்வதேச தொலைபேசி
தொடர்புகளில் விஷேட அனுமதி இல்லாமல் இடைமறிக்கும் NSA
இன் திட்டத்தை மிக ஆவேசமாக ஹேடன் ஆதரித்தவர். அது இலக்கு வைக்கப்பட்டது மற்றும் மத்தியப்படுத்தப்பட்டது''
என்று அவர் குறிப்பிட்டார். "இது அமெரிக்காவிற்குள் மக்களுக்கு இடையில் நடைபெறுகின்ற தொலைபேசி தொடர்புகளில்
குறுக்கிடுவது அல்ல" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். தொலைபேசி தொடர்புகளை கண்டுபிடிக்கும் திட்டம் இதற்கு
எதிரானது. அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு மனிதரது ஒவ்வொரு தொலைபேசி தொடர்பும் ஒட்டுக்கேட்கும் நோக்கத்தில்
ஒரு பாரியளவு வலை நிர்ணயிக்கப்பட்டது.
சென்ற மாதம் கீழ்சபை நீதி நிர்வாகக் குழுவில் உரையாற்றிய அட்டர்ணி ஜெனரல்
அல்பேர்ட்டோ கொன்சலேஸ் சர்வதேச தொலைபேசி தொடர்புகளையும் மற்றும் உள்நாட்டு தொலைபேசி
தொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்கு அனுமதி எதுவுமில்லாமல் சட்டபூர்வமாக கட்டளையிடுவதற்கு வெள்ளை மாளிகைக்கு
அதிகாரம் இருக்கலாம் என்று வலியுறுத்திக்கூறினார். கொன்சலேசிடம் தொலைபேசி தொடர்புகளை கண்டுபிடிப்பது பற்றி
கேட்கப்படாமல் குறிப்பாக தொலைபேசியை ஒட்டுக்கேட்பதை மட்டுமே குறித்து கேட்க்கப்பட்டபோது கொன்சலேஸ்
"அதை நான் தள்ளுபடி செய்துவிடுவதற்கு இல்லை" என்று பதிலளித்தார்.
ஜனாதிபதி புஷ் ஒரு இரகசிய நிர்வாக கட்டளையை தொலைபேசி தொடர்பை கண்டுபிடிப்பதற்காக
பிறப்பித்தாரா அல்லது அந்த திட்டம் அத்தகைய சம்பிரதாய அங்கீகாரம் எதுவுமில்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறதா
என்பது பற்றி இன்னும் விபரம் தெரியவில்லை. சர்வதேச தொலைபேசி தொடர்புகளையும் மின்னஞ்சல்களையும் ஒட்டுக்கேட்பதற்கு
NSA விஷேட அனுமதி எதுமில்லாமல் நடவடிக்கை எடுக்கலாம் என்று புஷ்
ஒரு நிர்வாக கட்டளையை பிறப்பித்தார்.
NSA சட்டவிரோத வேவு பார்க்கும்
நடவடிக்கை தொடர்பாக எந்த விசாரணையும் நசுக்குவதற்கு புஷ் நிர்வாகம் ஏற்கனவே முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
நீதித்துறையின்
நிபுணத்துவ பொறுப்பாளர் துறை அலுவலகம் (OPR)
புதன் கிழமையன்று வெளியிட்ட அறிவிப்பில் NSA, OPR-க்கு
விசாரணை நடத்துவதற்குரிய தேவையான பாதுகாப்பு அனுமதிகளை வழங்குவதற்கு
NSA மறுத்துவிட்டதால்
NSA மேற்கொண்ட
விஷேட அனுமதிஇல்லாத தொலைபேசி ஒட்டுக்கேட்கும் திட்ட்டத்திற்கு ஒப்புதல் தந்ததில் நீதித்துறை வக்கீல்கள் முறைகேடான
நடவடிக்கையில் ஈடுபட்டார்களா என்பது குறித்து ஒரு புலனாய்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தெரிவித்தது. இதை வேறு
வார்த்தைகளில் சொல்வது என்றால், சட்டவிரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டவர்கள் தங்களது நடவடிக்கைகள்
தொடர்பாக எந்த புலனாய்வு நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துவதற்கு ''இரகசியம்'' என்ற முத்திரையை பயன்படுத்தினர்.
போலீஸ் அரசு நடவடிக்கைகள் தொடர்பான ஒவ்வொரு தகவலும் அம்பலத்திற்கு
வரும்போது அரசியல் நிர்வாக அமைப்பிற்குள் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த நியாயமான உறுதிபாடும் இல்லை என்பது
அதிகமாக தெளிவாகிக்கொண்டு வருகிறது. சென்ற டிசம்பரில்
NSA தொலைபேசி ஒட்டுக்கேட்பது பற்றிய தகவல் அம்பலத்திற்கு
வந்ததும் முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எவரும் முன்னணி அமெரிக்க செய்தி பத்திரிக்கைகள் எதுவும் அந்தத்
திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரவில்லை. இந்த சட்டவிரோதமான நடவடிக்கை தொடர்பாக புஷ்சை
கண்டிக்கும் வகையில் ஒரு அடையாளபூர்வமான தீர்மானத்தை நிறைவேற்றுவதைக்கூட ஜனநாயகக் கட்சி தலைமை எதிர்த்தது.
ஏற்கனவே ஊடகங்களும் இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளும் தொலைபேசி தொடர்புகளை
கண்டுபிடிக்கும் திட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முயன்று வருகின்றனர், அதேநேரத்தில் "பயங்கரவாதத்தின்
மீதான போர்" என்றழைக்கப்படுவதன் தாறுமாறான போக்குகளால் உந்தப்பட்டு அத்தகைய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சாக்குப்போக்கை விமர்சனமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர். இதிலுள்ள உண்மை
என்னவென்றால் இந்த திட்டம் அமெரிக்க மக்களது ஜனநாயக உரிமைகள் மீது உடனடியாகவும் மிக பிரமாண்டமான
அளவிற்கும் நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதலை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
இந்த அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அமெரிக்க ஜனநாயகம் இடையறாது
நிலைமுறிவுற்று வருவதன் விளைவு அது. அவை முதலாளித்துவ முறையின் நெருக்கடியில் வேரூன்றியுள்ளது மற்றும் சமூக
சமத்துவமின்மையின் தீய வளர்ச்சியின் விளைவாகும்.
ஜனநாயக உரிமைகள் மீது ஒரு நியாயமான அக்கறையும் உறுதிமிக்க நிலைப்பாடும் கொண்ட
ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம். பெரு நிறுவன ஒரு சிலராதிக்கவாதிகள் தங்களது ஆட்சியை நிலைநாட்டி
வருகின்ற இருகட்சி முறைக்கு எதிராக ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை உருவாக்குவதன்மூலம் மட்டுமே இந்த
உரிமைகளை உழைக்கும் மக்கள் பாதுகாக்க முடியும். |