World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்US military massacres 80 villagers in Afghanistan ஆப்கனிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் 80 கிராமமக்கள் படுகொலை By Tom Carter ஆப்கனிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நடைபெற்றுள்ள மிக அண்மையில் நடந்த அட்டூழியத்தில், அமெரிக்க போர்விமானங்கள், திங்களன்று அதிகாலை தென்பகுதி மாகாணமான காந்தஹாரில் அமெரிக்க போர்விமானங்கள், குறைந்தபட்சம் 80 கிராமமக்களை படுகொலை செய்தன. 2001 அக்டோபரில் அமெரிக்கப் படையெடுப்பிற்கு பின்னர் மிகக்கடுமையான வன்முறை வெடிப்பு ஒன்றில் கடந்த வாரம் ஆப்கனிஸ்தானில் 350 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் காலை வரை தொடர்ந்து அஜீசி கிராமத்தில் குண்டு வீசி தாக்குமாறு அமெரிக்காவின் இராணுவ A-10 "வார்தாக்" போர்விமானங்கள் அழைக்கப்பட்டன. A-10 விமானங்களில் 30 மில்லிமீட்டர் குண்டுகள் நிமிடத்திற்கு 4,200 வீதம் சுடுவதற்கு அந்த குண்டுவீச்சு விமானத்தில் வகைசெய்யப்பட்டிருக்கிறது, அவை டாங்கி கவசங்களை ஊடுருவித் தாக்குகின்ற வல்லமை படைத்தவை. எனவே சாதாரண கட்டுமானப்பகுதிகள் மற்றும் மனிதர்களது உடல்கள் மீது இருக்கின்ற எல்லா கவசங்களையும் துளைத்துக்கொண்டு எளிதில் உள்ளே ஊடுருவுகின்ற வல்லமை படைத்தவை. இந்த போர்விமானங்கள் அந்த கிராமத்தின் மீது பல குண்டுகளை போட்டன. ஒரு 18 வயது இளைஞனான அஜீஸ்உல்லா, அந்த குண்டுவீச்சில் முகத்திலும், மார்பிலும் வெட்டுக்காயங்கள் பட்டநிலையில், அந்த கிராமத்திலிருந்து தப்பி ஓடுகின்ற நிலையில் "இருபதுகள் கணக்கில்" சிதைக்கப்பட்டுக்கிடந்த உடல்களை பார்த்ததாக வர்ணித்தார். "ஒரு குண்டு எனது வீட்டைத் தாக்கியது. நான் காயமடைந்தேன் மற்றும் எனது இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டனர்" என்று அவர் AFP-யிடம் தெரிவித்தார். AFP ஆல் நேர்காணல் செய்யப்பட்ட அட்டா முகமது, அந்த குண்டுவீச்சில் தமது குடும்பத்தை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டதாக சொன்னார். மற்றொருவர் நசரத்துல்லா அவர் அவரது மருமகன்களுடன், இரவு விருந்திற்கு அமர்ந்திருந்த நேரத்தில் தீடீரென்று தாக்குதல் தொடங்கியது. "நான் தப்பிக்க முடிந்தது, ஆனால் என்னுடைய மருமகன்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்கு தெரியாது" என அவர் சொன்னார்.அந்தப் பகுதியை சுற்றி வளைத்து போர்விமானங்கள் தாக்கிய பின்னர், ஆப்கனிஸ்தான் பாகாப்புப் படைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து மூடிவிட்டன, மற்றும் அந்த கிராமத்திற்குள் மருத்துவர்களும், மருத்துவ உதவி வாகனங்களும், செல்ல முடியாதவாறு தடுத்தனர். அந்த நடவடிக்கையில் பாரியளவு அழிவுசக்தி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பலியானவர்கள் பற்றிய துல்லியமான விவரங்களை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. அந்த நாசவேலையும், மற்றும் அதன் விளைபயனாக எழுந்த பொதுமக்களது ஆவேசமும் அமெரிக்க பொம்மை ஆட்சியின் ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் கூட ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது அந்த அறிக்கை அந்த விமானத்தாக்குதல் குறித்து ஒரு இராணுவ புலன்விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அமைந்தது. அவரது ஆட்சிக்கு ஏற்கெனவே, உள்ள சொற்ப ஆதரவையும் சீர்குலைக்கின்ற வகையில் இந்த விமானத்தாக்குதல்கள் பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்க இராணுவம், அந்த நடவடிக்கையில் "80 தலிபான்கள்" கொல்லப்பட்டதாக கூறியது. பின்னர் சில சிவிலியன்கள், கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர்கள், ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால், "தலிபான் போராளிகள்" சிவிலியன்களுக்கு இடையில் மறைந்திருந்ததால் இந்த சாவுகள் ஏற்பட்டதாக அகந்தைப்போக்குடன், குற்றம் சாட்டினர். "ஏன் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்," என்பதற்கு இறுதிக் காரணம் என்னவென்றால், "தலிபான் தெரிந்தே அந்த மக்களின் வீடுகளை பிடித்துக் கொண்டனர்" என்று அமெரிக்க இராணுவ பேச்சாளர் ரொம் கொலின்ஸ் அறிவித்தார். லெப்டினட் கேர்னலான போல் பிட்ஸ்பாட்ரிக் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், "அன்றைய தினம் குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தலிபான் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள், அவர்கள் ஆப்கானிஸ்தான் கூட்டணி மற்றும் ஆப்கனிஸ்தான் படைகள் மீதும் சிவிலியன்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வந்தவர்கள் என்று குறிப்பிட்டார்." "கூட்டணிப்படைகள் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பாளர்களை தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ளவை என்று தெரிந்த கட்டிடங்களிலும் மற்றும் வளாகங்களிலும் தாக்குதல் நடத்தியதாக," அந்த அறிக்கை தெரிவித்தது. அந்த கிராமத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள தலிபான் கிளர்ச்சிப் போராளிகளிடமிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக அமெரிக்கா இப்போது கூறிவருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க இராணுவம் தந்துள்ள சம்பவங்கள் பற்றிய அறிக்கையில், உடல் சிதைக்கப்பட்ட நிலையில் பலியான சாதாரண ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் "மனித கேடயங்கள்," என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர், A-10 விமானத்தாக்குதல் "தற்காப்பு," நடவடிக்கை என்றும் அந்த நடவடிக்கை "தலிபான் போர்வீரர்களில் மிகத்தீவிரமானவர்களுக்கு" எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு "வெற்றி" என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. உண்மையிலேயே, அமெரிக்காவின் பொம்மை ஆட்சியும் மற்றும் அதன் இராணுவ படைகளும் ஆக்கிரமிப்பிற்கு மிகப்பெருமளவில் மக்கிளின் எதிர்ப்பை சந்திக்கின்றன. ஆப்கனிஸ்தானிலும், அமெரிக்காவிற்கு உள்ளேயும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்றழைக்கப்படுவதற்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்து கொண்டே வருவதால் அமெரிக்க இராணுவம் பழைய கொடூரமான காலனி ஆதிக்க நடைமுறைகளை அதிக அளவில் பின்பற்றிக் கொண்டு வருகிறது. திங்களன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியம் கண்மூடித்தனமான கூட்டுத் தண்டனை வடிவில் ஒரு விரோதம் கொண்ட மக்களை மிரட்டவும், பயங்கரத்தை கட்டவிழ்த்துவிடவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அமெரிக்க இராணுவம் பெருகிவரும் ஆயுதந்நதாங்கிய எதிர்ப்புக்களிடமிருந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக கடந்த வாரம் செய்திகள் வந்தன. ஹெல்மாண்ட் பகுதியிலுள்ள மூசா கலா என்ற நகரத்தை பிடிப்பதற்காக, 400 கிளர்ச்சிக்காரர்கள் ஒரு எட்டுமணி நேர போரில் ஈடுபட்டிருந்தனர். கடந்த புதன்கிழமையன்று, உரூஸ்கான் மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டமான தாரின் கவுட்டில், ஒரு ஆறுமணி நேர போர் நடந்தது, டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தெற்கு மாநிலங்களான ஹெல்மாண்ட், உரூஸ்கான் மற்றும் காந்தஹாரில் பகிரங்க கிளர்ச்சி எழுச்சியில் இருக்கின்றன. ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை அண்மையில் 19,000-திலிருந்து 23,000-மாக உயர்த்தப்பட்டது, இதன் மூலம் வெளிநாட்டுத் துருப்புக்களின் எண்ணிக்கை 30,000-மாக உயர்ந்தது. 3,500 பிரிட்டிஷ் துருப்புக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கூடுதல் NATO போர்வீரர்கள் ஜூலை மாத இறுதியில் கிளர்ச்சி புரிந்துகொண்டிருக்கும் தெற்கு மாகாணங்களுக்கு, அனுப்பப்படவிருக்கின்றனர். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும், அவரது ஆட்சிக்கும் பரவலான எதிர்ப்புக்கள் நிலவுகின்றன என்பதை அரசியல் காரணங்களுக்காக, கர்சாய் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்குள் நுழைந்துவிட்ட "வெளிநாட்டு போராளிகளால்தான் பலாத்காரம், வெடித்துச் சிதறியிருப்பதாக குற்றம் சாட்டினார், இந்த அனைத்து வழக்கமான நிலைப்பாட்டிற்கு இஸ்லாமாபாத் தரப்பிலிருந்து உறுதியான மறுப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. மேலும் திங்களன்று, புதிய ஆப்கன் நாடாளுமன்றம், சிவில் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் அளவிற்கு அதிகமானது என்று சர்வதேச நன்கொடையாளர்கள் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற அடிப்படையில், ஒரு பட்ஜெட் முன்மொழிவை 116-க்கு 15 என்ற வாக்குகளில் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் பட்ஜெட்டில் எழுபத்தைந்து சதவீதம் நிதி ஒதுக்கீடு வெளிநாட்டு நன்கொடைகள் என்ற வடிவத்தில் வருகிறது. |