World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

EuropeanUnion ban on LTTE heightens danger of war in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இலங்கையில் போர் அபாயத்தை அதிகரிக்கின்றது

By K. Nesan
2 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் முறைப்படி தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டுள்ளது. மே 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய நிதி இருப்புக்களை முடக்குமாறும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் வழங்குவதை தடை செய்வதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பாளர்கள் பயணத்தை தடை செய்வதையும் உள்ளடங்குகின்றது.

ஒருதலைப்பட்சமானதும், அரசியல் நோக்கம் கொண்டதுமான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் இன்னும் கூடுதலான வகையில் ஐரோப்பா முழுவதும் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மிதித்து துவைக்கும் வகையில் உள்ளது. இலங்கையை சூழ்ந்துள்ள போர் இரு தசாப்தங்களாக இருந்துள்ளவகையில் ஐரோப்பா முழுவதும் பெரிதும் பரவியுள்ள குடிபெயர்ந்தோருள் 300,000 தமிழர்கள் உள்ளனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று எவர் இப்பொழுது சந்தேகத்திற்கு உட்பட்டாலும் ஐரோப்பாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அவர்களது உரிமை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்.

ஒரு சிறிய முதலாளித்துவ தமிழ் ஈழம் என்னும் நாட்டை உருவாக்கும் அரசியல் ரீதியாக திவால் தன்மையான ஒரு முன்னோக்கை அடித்தளமாக கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கம், வகுப்புவாத முறையில் வன்முறையை தூண்டிவிடும் உந்துதலை கொண்ட வரலாற்றை கொண்டுள்ளது. ஆனால் போருக்கான பொறுப்பு ஐயத்திற்கிடமின்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசாங்கங்களிடம்தான் உள்ளது; ஏனெனில் இவை மிக திட்டமிட்டமுறையில் தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டு போக்கினை காட்டிவருவதுடன் சிங்கள ஆளும் உயரடுக்குகளின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மிருகத்தனமாக போர் ஒன்றையும் தொடர்ந்து வந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று முத்திரை குத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது, தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிகழும் வன்முறைகள் மற்றும் கொலைகளின் மத்தியில் வந்துள்ளது. நவம்பர் மாதம் மகிந்த இராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குறிப்பாக தற்போதைய மோதல்கள் பெருகிவிட்டன. ஏதோ நடுநிலையில் நிற்பதுபோல் போலித்தனமாக காண்பித்துக் கொள்ளுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பானது, இலங்கை அரசாங்கத்தை "எதையும் செய்து தப்பிக்கலாம் என்ற கலாச்சாரத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்குமாறும், அதன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் "வன்முறையை அடக்குவதில்" ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமானது அரசாங்க சார்புடைய தமிழ் துணை இராணுவ பிரிவினர்கள் நிகழ்த்திய கொலைகளையோ, தமிழர்களுக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு படைகள் எடுத்துள்ள அடக்குமுறை நடவடிகைகளையோ கண்டிக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைத் தவிர்ப்பதற்கும், புதிய சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அது பங்கு பெறுவதற்கும் அதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பாகமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை முன்வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடருமாறு விடுக்கப்பட்ட முந்தைய எச்சரிக்கை, அது எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மீது ஐரோப்பா முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டதுடன் பொருந்தியிருந்தது என்பதையும் அதன் பிரகடனம் குறிப்புக்காட்டுகிறது. வேறுவிதமாகக் கூறினால், தமிழீழ விடுதலைப் புலிகளை "பயங்கரவாத அமைப்பு" என்று முத்திரையிட்டுள்ள முடிவு, அது ஏற்கனவே செய்ததாக கூறப்படும் நடவடிக்கைகளுக்காக அல்லாமல், கொடுக்கல்வாங்கல் மேசைக்கு (பேச்சுவார்த்தை) திரும்புமாறு கோரும் பிரதான வல்லரசுகளின் கோரிக்கைகளை அது ஏற்றுக்கொள்ளத் தவறியதற்காகவாகும்.

அமைதி, சமாதானத்தை கொண்டுவருவது என்பதற்கு மாறாக, இந்த தடையானது 2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை முற்றிலும் உடைத்துவிடும் அபாயத்தைத்தான் தீவிரப்படுத்தியுள்ளது. புஷ் நிர்வாகம் சர்வதேச அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி, அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது உட்பட வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்காக நடத்திவரும் இராஜதந்திரரீதியான பிரச்சாரங்களின் விளைவுதான் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ஆகும். இலங்கை தமிழ் சமூகத்தினர் நிறைய வசிக்கும் கனடா இதே போன்ற நடவடிக்கை எடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த தடையும் வந்துள்ளது.

வாஷிங்டன் விடுத்துள்ள கோரிக்கையை தொடர்ந்து இந்த ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கை வந்துள்ளது. கொழும்பில் மே 16ம் தேதி அரசாங்க தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான டொனால்ட் காம்ப், தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதற்கு புஷ் நிர்வாகம் "கடுமையான முயற்சிகளை" மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் ஊக்குவித்துள்ளோம். அத்தகைய முத்திரையை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நல்ல தகுதி பெற்றுவிட்டதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம். நிதிய உதவிகள் மற்றும் ஆயுதங்கள் பெறுதல் அவர்கள் விரும்பிய வகையில் இப்பொழுது நடைபெறுவது தடைப்படும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு நோர்டிக் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே அதிகாரபூர்வமாக உதவியாளராக உள்ளதுடன், சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் இலங்கை கண்காணிப்பு குழு (Sri Lanka Monitoring Mision-SLMM) பணியாளர்களுடன் இணைந்து 2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட்டு வருகிறது. நடுநிலைமை என்ற தங்களின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை இத்தீர்மானம் சமரசத்திற்குட்படுத்திவிடும் என்ற கவலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நோர்டிக் உறுப்பினர்களும் ஒத்துப் போயுள்ளனர்.

ஆயினும், இந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் கோரும் தடைகளை செயல்படுத்துமா என்பது தெளிவாக இல்லை. இந்த முடிவு வருவதற்கு முன்பாக நோர்வே பேச்சுவார்த்தையாளர் எரிக் சொல்ஹைம் செய்தி ஊடகத்திடம், "இது நோர்வேக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலை பயன்படுத்துவதில்லை, நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலைத்தான் பயன்படுத்துகிறோம்." ஆயினும், "இன்னும் கூடுதலான வகையில் இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் நோர்வே தனிமைப்படலுக்கு ஆளாகலாம்" என்று அவர் கவலை தெரிவித்தார். நோர்வே ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்ல.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையும் அமெரிக்காவின் தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் முயற்சியும் இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான வகையில் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை கொள்ளுவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளன. இந்த முடிவை உடனடியாக இராஜபக்ஷ பாராட்டினார். நேற்றைய Wall Street Journal, "புலிகளை அடக்கியாள்வது" என்ற தலைப்பில் வந்துள்ள வர்ணனையில் அவர் மற்ற நாடுகளும் இந்த விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று முறையிட்டுள்ளார். தன்னுடைய போலிக் கூற்றான "சமாதான மனிதர்" என்பதை மீண்டும் நினைவுகூர்ந்த அவர், போர் ஏற்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளுகு நிதி, இராணுவ உதவிகள் தடுக்கப்பட வேண்டும் என்பது தன்னுடைய தலையான இலக்கு என்பதை இராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

"நான் ஏனைய நாடுகளையும், குறிப்பாக தமிழ் புலிகளுக்கு நன்கொடைதருமாறு நிர்பந்திக்கப்படும் தமிழ் புலம்பெயர்ந்தோர் வேலைசெய்கின்ற மத்தியகிழக்கில் உள்ளவர்களை அதேவழியை பின்பற்றுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் புலிகளின் ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய குடியரசுகள் போன்ற இடங்களில் இருந்து சட்டவிரோத ஆயுதக் கொள்முதல், அதேபோல தாய்லாந்தில் தங்களின் ஆயுதங்களை கடத்திவரல் ஆகியவற்றை வெளிநாட்டு அரசாங்கங்கள் இன்னும் கடுமையாக ஒடுக்க முடியும்" என அவர் எழுதினார்.

போருக்காக ஆர்வத்துடன் வாதிக்கும், ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (JHU) என்னும் இராஜபக்ஷவின் சிங்கள தீவிரவாத கூட்டாளிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர் ஆனால் அது விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவை அறிவித்துள்ளன. அவர்களின் கருத்துக்கள், கொழும்பு செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும், ஐரோப்பியநாடுகளும் மற்றையோரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலவருடங்களாக கோரிவருகின்றனர் என்ற உண்மையை உயர்த்திக் காட்டுகின்றன. முக்கியமான மாறுதல் என்ன என்றால், வாஷிங்டன் மறைமுகமாக இப்பிரச்சாரத்தின் பின் தனது பலத்தை உபயோகித்துள்ளது.

பகிரங்கமாக அமெரிக்க அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும் என்று கூறினாலும்கூட, இலங்கையின் அமெரிக்க தூதராக உள்ள ஜெப்ரி லன்ஸ்டெட், அமெரிக்கா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்த் தயாரிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது என்ற குறிப்பை தன்னுடைய கருத்துக்களில் காட்டியுள்ளார். வாஷிங்டனில் மே 16 அன்று நிகழ்ந்த மாநாடு ஒன்றில் அவர் கொடுத்த எச்சரிக்கையாவது: "தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறை பாதையை கையாண்டால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும். ...அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்ப் புலிகள் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டால், இலங்கையின் இராணுவம் மிக பலமுடையதாகும் வகையில் மாற அமெரிக்கா உறுதிப்படுத்தும்."

கலந்துரையாடலுக்காக கொழும்பிற்கு வந்திருந்த தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் உதவிச் செயலர் ரிச்சார்ட் பெளச்சர் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு ஆதரவு தெரிவித்தார். வாஷிங்டன் இராணுவ உதவி கொடுக்குமா என்று கேட்கப்பட்டபோது, நேரடி விடையை கொடுப்பதை தவிர்த்த அவர், ஏற்கனவே அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ ஒத்துழைப்பு கொடுத்துவருவதாக குறிப்பிட்டார். இலங்கையின் பாதுகாப்பு பிரிவினருக்கு பயிற்சி கொடுப்பதில் பென்டகன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், இதில் சிறப்பு படைப் பிரிவு மற்றும் கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்படி சமாதான வழிவகை என அழைக்கப்படுவதற்கு வாஷிங்டன் கொடுத்துள்ள ஆதரவு எப்பொழுதுமே தந்திரோபாயம் சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் உள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற பெரும் அக்கறையை புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது, ஏனெனில் இந்த அமைதியற்ற நிலை நீடித்த வகையில் தெற்கு ஆசியாவில் அதன் செல்வாக்கை, குறிப்பாக அமெரிக்கா வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை கொண்டிருக்கும் இந்தியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை தொடர்ந்து சீர்குலைக்கும் தன்மையை பெற்றுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் பேச்சுவார்த்தை மேசைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டாயப்படுத்தப்பட முடியாவிடில், அமெரிக்கா போரை புதுப்பிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுக்கலாம்.

கொழும்பில் இருக்கும் மிக இராணுவவாத கூறுபாடுகளுக்கு ஊக்கம் தருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது போர் வரக்கூடும் என்பதை காட்டுகிறது. அனைத்து வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை வலிந்து சண்டைக்கு போகும் அமைப்பாக சர்வதேச ஊடகத்தில் சித்தரிக்கப்படும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவக் குழுக்கள் மற்றும் பல சிங்கள தீவிரவாத குழுக்கள் ஆகியவற்றின் மறைமுகமான கூட்டு ஒன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதற்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை முக்கியமான தாக்குதல் ஆகும். கனடாவில் இருப்பதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருக்கும் தமிழ் சமூகங்கள் கணிசமான நிதி, அரசியல் ஆதரவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கொடுத்துவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கொண்டிருக்கும் செய்தி ஊடக அமைப்புக்கள், வணிகங்கள் ஆகியவை இப்பொழுது தடைக்கு உட்படக்கூடும்.

ஐரோப்பிய ஒன்றியம் பாரபட்சத்துடன் நடந்து கொள்ளுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டி அதில் போருக்கான ஆபத்துக்கள் இருப்பதையும் எச்சரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம், கடந்த வாரம் Financial Times இடம் "சர்வதேச சமூகம், தமிழீழ விடுதலைப் புலிகளை அதிகரித்தவகையில் எதிர்த்தால், இன்னும் கூடுதலான வகையில் அது கடுமையான தனிப்பாதையை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படும்." என தெரிவித்தார். ஆனால் இன்னும் கூடுதலான வகையில் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று "சர்வதேச சமூகத்திற்கு" செயலற்ற வகையில் விடும் கோரிக்கை என்பதை தவிர இந்த எச்சரிக்கை வேறெந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.

தீவின் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு சிறிய முதலாளித்துவ அரசை தோற்றுவிக்க ஒன்று அல்லது அதற்கும் அதிகமான வல்லரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதுதான் இதுகாறும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோக்காக இருந்து வருகிறது. 2002 பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தின்போது, கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப்பகிர்வு ஏற்பாடு கிடைத்தால் தமிழ் ஈழ கோரிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டுவிடுவர் என்று பாலசிங்கம் தெளிவுபடுத்தியிருந்தார்.

2003ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் என்று கூறப்பட்ட அத்தகைய உடன்பாடு விவாதிக்கப்படாமலேயே முறிந்து விட்டது. இந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் முறிந்துவிடும் நிலைக்குப் போய், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை வலியுறுத்தியதோடு அது முடிந்து போயிற்று. ஏப்ரல் மாதம் நடந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் பயண ஏற்பாடுகள் பற்றிய கருத்து வேறுபாடுகள் மற்றும் போர்ப்பிரதேசங்களில் அதிகரித்த வன்முறைகளோடு நின்று விட்டன. இரு பகுதியும் இப்பொழுது ஒஸ்லோவில் தற்காலிகமாக ஜூன் 8, 9 தேதிகளில் பேச்சுக்களை தொடர்வதாக உள்ளன. ஆனால் இன்னும் அதிக விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் போரை நோக்கிச்சரிவதை தடுத்து நிறுத்துவது என்பது சாத்தியமற்றதாகவுள்ளது.

See Also:

இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கான தயாரிப்பில் புதிய தேசப்பற்று சட்டத்தை இயற்றுகிறது

Top of page