WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German SEP candidates protest Democratic Party drive to
bar socialist candidate from the ballot in Illinois
ஜேர்மனிய SEP
வேட்பாளர்கள் இல்லிநோயில் வாக்குச்சீட்டு பதிவில் இருந்து சோசலிஸ்ட் வேட்பாளரை தடை செய்யும் ஜனநாயகக்
கட்சியின் உந்துதலுக்கு எதிர்ப்பு
10 July 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இந்த செப்டர்பர் மாதம் பேர்லின் மாநிலத்தில் நடக்கவிருக்கும் செனட் மன்ற தேர்தலில்
வேட்பாளர்களாக நிற்க உள்ள ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் இல்லிநோய் மாநில
தேர்தல் குழுவிற்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி இல்லிநோய் வாக்குச் சீட்டில்,
52வது சட்டமன்ற தொகுதியில் இருந்து செனட்டிற்கு நடக்கவிருக்கும் தேர்தலில் அதன் வேட்பாளரான ஜோ
பர்நாரெளஸ்கிசை சேர்ப்பதற்கு சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் போராடி வருகின்றது. ஜூலை 3ம் தேதி
இல்லிநோயின் ஜனநாயகக் கட்சியினர் பர்நாரெளஸ்கிசின் வேட்பு மனுக்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்; மாநில
தேர்தல் குழுவிற்கு SEP
அளித்துள்ள 4,991 கையெழுத்துக்களில் பாதிக்கும் மேலானவற்றிற்கு அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.
ஜூலை 11 அன்று ஜனநாயகக் கட்சியினர் பர்நாரெளஸ்கிசின் வேட்புமனுக்களுக்கு
கொடுத்துள்ள சவால்களை பற்றிய ஆரம்ப விசாரணை இல்லிநோய் தேர்தல் குழுவினால் நடத்தப்படவுள்ளது;
இக்குழுவில் நான்கு ஜனநாயகக் கட்சியினரும் நான்கு குடியரசுக் கட்சியினரும் உள்ளனர். நம் ஆதரவாளர்கள் மற்றும்
உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்கள் மற்றும் ஜனநாயக உரிமையை காக்க முற்பட விரும்பும்
அனைவரையும் மாநிலத் தேர்தல் குழுவிற்கு webmaster@elections.state.il.us
என்ற முகவரிக்கு எதிர்ப்புக் கடிதங்களை அனுப்புமாறு கோருகிறோம்.
அனைத்து கடிதங்களின் நகல்களையும்
WSWS க்கு தயவு
செய்து அனுப்பி வைக்கவும்.
உரியவர்களின் கவனத்திற்கு,
வரவிருக்கும் பேர்லின் மாநில செனட் தேர்தல்களின்
(Partei fur Soziale Gleichheit),
ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் என்ற
முறையில், இல்லிநோய் செனட் மன்றத்திற்கு அம்மாநிலத்தின் 52வது சட்டமன்ற தொகுதியில் அமெரிக்க சோசலிச
சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நிற்கும் ஜோ பர்நாரெளஸ்கியை முற்றிலும் ஜனநாயகமற்ற முறையில்
நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் பட்டியலில் எங்களுடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ள
விரும்புகிறோம்.
ஜேர்மனியில் இப்பொழுதுதான் நாங்கள் பேர்லின் தேர்தல்களில் பங்கு பெறத்
தேவையான பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சேகரித்து பரிசீலனை செய்யும் வழிவகையை முடித்துள்ளோம்.
எனவே எங்களுக்கு வாக்குச் சீட்டுப் பதிவு பெறுவதில் சிறிய கட்சிகள் எதிர்கொள்ளும் சில இடர்பாடுகளை பற்றி
நன்கு அறிவோம்.
அமெரிக்காவில் தற்பொழுது நிலவும் தன்மையைப் போல், எந்த விதத்திலும்
ஜேர்மனிய தேர்தல் முறையைப் பெருமைப்படுத்த நாங்கள் விழையவில்லை; உங்கள் நாட்டில் அரசியல் வாழ்வு இரு
கட்சிகளின் ஏகபோக உரிமைக்கு உட்பட்டுள்ளது; தனிப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி அல்லது தோல்வி அவர்கள்
தேர்தல் செலவிற்காக மேற்கொள்ளும் நிதியத்தை ஒட்டியுள்ளது; இந்த நிலை, வெளிப்படையாக கூறப்பட வேண்டும்
என்றால், எங்கள் நாட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாகும். இரண்டாம் உலகப் போரில் இருந்தே,
ஜேர்மனிய பாராளுமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு கட்சிகள் 5 சதவிகிதத்திற்கும் மேலான
வாக்குகளைப் பெற வேண்டும் அதன் விளைவாக Free
Democratic Party, மற்றும் பசுமைக் கட்சியினர்,
முறையாக எப்பொழுதும் மொத்த வாக்குகளில் 5ல் இருந்த 10 சதவிகிதத்தை பெறும் கட்சியினர்,
பாராளுமன்றத்தில் கணிசமான பிரதிநிதித்துவத்தை பெற்று அரசாங்கத்தில் இருந்து தாராளமான நிதிய உதவித்
தொகைகளை (அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்) பெறுகின்றனர்.
இரு கட்சிகளும் கூட்டணி அரசாங்கங்களில், கூட்டாட்சி மற்றும் மாநிலங்கள், உள்ளூர்
மன்றங்கள் உட்பட அனைத்திலும் பங்கு பெறுகின்றனர்; அவர்களுடைய முக்கிய உறுப்பினர்கள் பொறுப்பான
மந்திரிசபை பொறுப்புக்களையும் தேசிய அரசாங்கத்தில் வகித்துள்ளனர்.
அமெரிக்காவில் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்படும் தடைகள் பற்றிய சுருக்கமான
ஆய்வு கூட அமெரிக்க அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளுக்கும் தற்கால அரசியல் வாழ்வின்
உண்மைகளுக்கும் இடையே இருக்கும் மகத்தான பிளவுகளை வெளிப்படுத்துகிறது. இல்லிநோய் விவகாரம் நிரூபிப்பது
போல், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு குறுக்கே மாபெரும் அதிகாரத்துவ, நிதியத்
தடைகளை அளிப்பதோடு கூட, ஜனநாயகக் கட்சி அதன் பெரும் திகைப்பில் மிரட்டல், அச்சுறுத்தல் போன்றவற்றில்
கூட இறங்கத் தயாராக இருப்பது நிலவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்திற்கு உட்படுத்துகிறது. ஜோ
பர்நாரெளஸ்கிஸை வாக்குச் சீட்டுப் பதிவில் இருந்து ஒதுக்குவதற்காக துன்புறுத்தும் இல்லிநோய் ஜனநாயகக்
கட்சியின் அப்பட்டமான, நயமற்ற முயற்சிகளைக் காண்டு நாங்கள் எச்சரிக்கையும் சீற்றமும் அடைகிறோம்.
2000ம் ஆண்டு தேர்தல்களை மாற்றி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை ஜனாதிபதிப் பதவியில்
இருத்துவதற்கான குடியரசுக் கட்சியின் பிரச்சாரத்தை ஜேர்மனியில் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தோம்.
இப்பொழுது இல்லிநோயில் ஜனநாயகக் கட்சியும் ஓர் அரசியல் மாற்றீடு எழுச்சியுறுவதை தடுப்பதற்கு அதேபோன்ற
வகைகளை கையாண்டு வருகிறது.
பர்நாரெளஸ்கிசின் பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமான, வெளிப்படையாக
தெரியும் போலிக் காரணங்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் ஜனநாயகக் கட்சி ஒரு சிறிய வழக்கறிஞர்கள்
படை, மற்றும் அரசியல் செயலர்கள் படையையும், செய்தி ஊடகத்தின் பெரும்பகுதியினரின் ஆதரவையும் நம்பலாம்.
இதற்கு விடையிறுக்கும் வகையில் SEP
தன்னுடைய வளங்களையும் நிதியங்களையும் நேரத்தையும் வீணடிக்கும் முயற்சிகளை பெருக்கும், நடவடிக்கைகளை மேற்கொண்டு
அதன் வேட்பாளர் வாக்குச் சீட்டில் பதிவு பெற வேண்டியுள்ளது. எதைக் கண்டு ஜனநாயகக் கட்சி பயப்படுகிறது?
ஒரு போர் எதிர்ப்பு வேட்பாளர் இத்தேர்தலில் பங்கு பெறுவதை தடுப்பதற்கு அது ஏன் இத்தனை உறுதியைக்
காட்டுகிறது?
இல்லிநோயில் பயன்படுத்தும் குண்டர் தந்திரோபாயங்களில் இருந்து பெறக்கூடிய ஒரே
முடிவு, ஈராக்கிய போர் மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் அமெரிக்க
மக்களுக்கு புலப்படக்கூடாது என்பதற்கு புஷ் நிர்வாகத்துடன் அது கொண்டுள்ள மிகப் பரந்த அளவு ஒற்றுமையை நிலைநிறுத்த,
அது எந்த அளவிற்கும் செல்லும் என்பதுதான்.
ஜேர்மனியிலும், ஐரோப்பா முழுவதும் தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு எதிராக
கொண்டுள்ள பரந்த இகழ்வுணர்வு, ஐரோப்பாவின் இராணுவவாதம், சர்வாதிகாரம் மற்றும் அரசியல் அடக்குமுறைகள்
இருபதாம் நூற்றாண்டில் கையாளப்பட்டதின் துயரம் நிறைந்த அனுபவங்களில் வேர்களை கொண்டுள்ளது.
எனவே SEP
வேட்பாளர் ஜோ பர்நாரெளஸ்கிசிற்கு எதிராக பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்களை நாங்கள்
கண்டிக்கிறோம்; ஜேர்மன் தலைநகரில் நடக்கவிருக்கும் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு வாய்ப்பையும்
பயன்படுத்தி இல்லிநோயில் ஜனநாயகக் கட்சி மேற்கொள்ளும் ஜனநாயக விரோத வழிவகைகள் பற்றி
அம்பலப்படுத்துவோம்.
நேர்மையுள்ள,
உல்ரிக் ரிப்பேர்ட்
பாபியன் ரேய்மன்
கிறிஸ்டோப் வன்ட்ரேயர்
Top of page |