:
இலங்கை
Sri Lankan president postures as a
peacemaker
இலங்கை ஜனாதிபதி தன்னை சமாதான சிருஷ்டியாக காட்டிக்கொள்கிறார்
By K. Ratnayake
8 July 2006
Back to screen
version
இலங்கை உள்நாட்டு யுத்தத்திற்குள் இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷ கடந்த செவ்வாய் கிழமை இந்திய தொலைக்காட்சி சேவையான
NDTV யில் தோன்றி
முட்டாள்த்தனமாக தன்னை ஒரு சமாதான சிருஷ்டியாளனாக காட்டிக்கொண்டார். அவரது அரசாங்கத்தின் யுத்தத் தயாரிப்புகளையும்,
அதற்கான சர்வதேச ஆதரவை, குறிப்பாக அயலில் உள்ள இந்தியாவின் ஆதரவை திரட்டுவதையும் மறைக்கும் முகமாக
கொழும்பு ஊடகங்களில் அவரது கருத்துக்களுக்கு பரந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.
கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
மற்றும் இராணுவம் மற்றும் அரசாங்க சார்பு துணைப்படைகளுக்கு இடையிலான அதிகரித்துக்கொண்டிருக்கும் மோதல்களின்
மத்தியிலேயே ஆட்சிசெய்துவந்தார். அவர் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யும் கோரிக்கையை
பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்குமாறு தமது சிங்கள தீவிரவாத பங்காளிகள் விடுத்த கோரிக்கைக்கு தலைசாய்த்ததன்
மூலம் கடந்த பெப்பிரவரியில் ஜெனீவாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுக்களை அழிவிற்குள்ளாக்கினார். அது முதல்
புலி காரியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஆத்திரமூட்டும் வகையில் படுகொலை செய்தமை உக்கிரமடைந்து மற்றும் வெளிப்படையான
வன்முறையாக அதிகரித்ததுடன் எந்தவொரு மேலதிக பேச்சுவார்த்தையையும் நிறுத்திவைத்தது.
NDTV க்கு பேட்டி வழங்கிய போது,
இராணுவமானது கருணா குழு மற்றும் ஏனைய புலி விரோத ஆயுதக் குழுக்களுடன் ஒத்துழைக்கின்றது என்பதை மீண்டும் இராஜபக்ஷ
உறுதியாக மறுத்தார். "புலிகளின் அல்லது கருணாவின் பிரிவினரோ அல்லது வேறு எவரும் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்
ஆயுதங்களுடன் நுளைய முடியாது," என அவர் பிரகடனம் செய்தார்.
இலங்கை கண்காணிப்புக் குழுவும் ஏனைய அமைப்புக்களும், புலி ஆதரவாளர்களை படுகொலை
செய்வதில் ஆயுதப் படைகளுக்கும் மற்றும் பலவித துணைப்படைக் குழுக்களுக்கும் இடையில் வெளிப்படையான கூட்டு இருப்பதற்கான
ஆதாரங்களை சேகரித்துள்ள அளவில் இந்தப் பொய் மேலும் மேலும் கந்தலாகிக்கொண்டிருக்கின்றது. கருணா குழு, கிழக்கில்
இராணுவத்தின் பாதுகாப்புடன் ஒரு அரசியல் அலுவலகத்தை இயக்குவதோடு ஆளும் கூட்டணியின் பங்காளியான ஈழமக்கள்
ஜனநாயக் கட்சியின் (EPDP)
ஆயுதக்குழுவும் ஊர்காவற்துறை தீவுக்கு அருகில் நடந்த படுகொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
NDTV நேர்முகம் கண்டவர் குறிப்பாக
சுட்டிக்காட்டி "இரு சாராருக்கும் (அரசாங்கத்திற்கும் மற்றும் புலிகளுக்கும்) உருவாகியுள்ள நிலைமையில் இருந்து அப்பால்
செல்வது எப்படி என்பதையிட்டு ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லாதது பற்றி சர்வதேச சமூகத்தின் மத்தியில் நிச்சயமாக
குறிப்பிடக்கூடியளவு நம்பிக்கையீனம் இருந்துகொண்டுள்ளது. தங்களிடம் ஒரு பாதை வரைபடமோ அல்லது திட்டமோ
உள்ளதா?" என கேட்டார்.
இராஜபக்ஷ இன்னுமொரு பொய்யுடன் பதிலளித்தார். பெப்பிரவரி பேச்சுக்களின் போது
தமது பேச்சுவார்த்தைக் குழு எந்தவொரு அர்த்தமுள்ள கலந்துரையாடலிலும் ஈடுபடுவதில் இருந்து தடுக்கப்பட்டது என்ற
உண்மை ஒரு புறம் இருக்க, அவர் தயார் நிலையில் பிரகடனம் செய்ததாவது: "ஆம் நிச்சயமாக. நாங்கள்
அனுபவசாலிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளோம்." "சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள்,
புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், அரசாங்க ஊழியர்களும் கூட," அரசியல் அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட்ட வகையில்
பகிர்ந்தளித்து 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கான ஒரு தீர்வை வரைவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கன்றனர், என
விளக்கப்படுத்த அவர் மேலும் முனைந்தார்.
இந்த "பாதைவரைபடம்" மீதான எந்தவொரு ஆய்வும் அது ஒரு அரசியல் மோசடி
என்பதை உடனடியாக வெளிப்படுத்தும். இந்த குழு கொழும்பில் ஜூன் 2 அன்று இராஜபக்ஷ கூட்டிய ஒரு சர்வகட்சி
மாநாட்டை அடுத்தே ஸ்தாபிக்கப்பட்டது. இந்த மாநாடும், இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலமை நாடுகளான
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை
செய்யும் நோர்வேயும் நடத்திய கூட்டத்தை அடுத்தே இடம்பெற்றது. இணைத் தலைமை நாடுகள் அரசாங்கத்தையும்
புலிகளையும் விமர்சித்ததோடு வன்முறைகளுக்கு முடிவுகட்டி பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு அழைப்புவிடுத்தன.
அரசாங்கம் புலிகளுடன் எந்தவொரு சமரசத்தையும் ஏற்படுத்திக்கொள்ள மறுக்கின்ற
அளவில், இந்த குழுவும் மற்றும் "பாதைவரைபடமும்" இணைத்தலைமை நாடுகளை ஒதுக்கிவைப்பதற்கான ஒரு போலி
நடவடிக்கையே அன்றி வேறொன்றுமல்ல. இந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பதற்காக இராஜபக்ஷ ஒரு முன்னணி
சட்டத்தரணியான எச். எல். டி. சில்வாவை நியமித்துள்ளார். இவர் புலிகளுக்கு எதிரான தனது கடும்போக்கான
எதிர்ப்பிற்கு பேர்போனவராவார். இதனோடு தொடர்புபட்ட ஒரு ஆலோசனை சபையும் இராஜபக்ஷவின் சிங்களப்
பேரினவாத பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட அதிகளவில்
பாராளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாரப் பரவலாக்கல்
திட்டமொன்றை வரையும் முயற்சியை "அர்த்தமற்றது" எனவும் "மடைத்தனமானது" எனவும் விமர்சித்த ஜே.வி.பி, இந்தப்
பிரேரணையை கைவிடுமாறு இராஜபக்ஷவிற்கு வேண்டுகோள்விடுத்தது.
இராஜபக்ஷவின் செவ்வியின் கேலிக்கூத்தான பண்பு என்னவெனில், அவர் புலிகளுக்கு அவர்களது
சொந்த பிரேரணைகளை உருவாக்குமாறு அழைப்புவிடுத்ததாகும். தன்னை பரந்த மனப்பான்மையுள்ள ஜனாதிபதியாக
காட்டிக்கொண்ட அவர்: "நான் அவர்களுக்கு ஏதாவது கொடுத்து அதை இப்போது சாப்பிடுங்கள் என்று சொல்லவோ
அல்லது அவர்களை ஒரு நெருக்கடியான நிலைக்குள் தள்ளி அதை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்ல வேண்டிய தேவையோ
எனக்கில்லை... புலிகளும் வந்து முழு முன்னெடுப்பிலும் பங்களிப்பு செய்ய இடமளிக்க வேண்டும்," என்றார்.
எந்தவொரு அதிகாரப் பரவலாக்கல் முன்னெடுப்பிற்கும் புலிகள் ஆதரவளிக்க மறுத்தமையே
கடந்தகாலத்தில் பிரச்சினைகளாக இருந்து என ஜனாதிபதி கூறுகின்றார். அவர் 1987இல் இந்திய இலங்கை
உடன்படிக்கையின் கீழ் மாகாண சபைகளை ஸ்தாபிப்பது மற்றும் 2000 ஆண்டில் அரசியலமைப்பு மாற்றத்தை
ஏற்படுத்துவதற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் திட்டத்தையும் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு குறிப்பும் பொய்யானது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையானது புலிகளை நிராயுதபாணிகளாக்கவும் மற்றும் தமிழ்
சிறுபான்மையினரின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காகவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய
அமைதிகாக்கும் படையை கொண்டுவருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியால் கைச்சாத்திடப்பட்ட ஒரு
உடன்படிக்கையாகும். மாகாண சபைகளை வழங்கும் நடவடிக்கையும் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கவர்ச்சிப்
பொருளாகும். புலிகள் இந்த உடன்படிக்கையை முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், பின்னர் இந்திய இராணுவத்துடன்
மோதிக்கொள்ள நேரிட்டது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), இந்த உடன்படிக்கையை
இனத்தைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என அதை கடுமையாக எதிர்ப்பதில் ஜே.வி.பி. உடன் இணைந்து கொண்டது.
ஜே.வி.பி. இந்த உடன்படிக்கைக்கு எதிராக ஒரு திட்டமிட்ட இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்ததோடு அரசியல்
எதிரிகள் மீது தமது பாசிச குண்டர்களை கட்டவிழ்த்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்தது.
2000 ஆண்டில், புலிகள் இராணுவத்தின் மீது ஒரு தொடர்ச்சியான அழிவுகரமான
தோல்விகளை சுமத்தியதை அடுத்து, குமாரதுங்க தமிழ் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை வழங்குவதை அனுமதிக்கும்
அரசியலமைப்பு மாற்றங்களை பிரேரிப்பதன் மூலம் சமாதானப் பேச்சுக்களுக்கான அடித்தளத்தை ஸ்தாபிக்க
முயற்சித்தார். மீண்டும் இந்தப் பிரேரணையை எதிர்த்த ஜே.வி.பி. இது தனியான அரச அமைப்புக்கான புலிகளின்
கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் திட்டம் என கண்டனம் செய்தது. ஜே.வி.பி. யின் பேரினவாதப் பிரச்சாரத்தின்
அழுத்தத்தின் கீழ் ஐ.தே.க. தமது ஆதரவை விலக்கிக்கொண்டதுடன், ஸ்ரீ.ல.சு.க. உள்ளேயே இந்தப் பிரேரணையை
கீழறுக்க முயற்சித்த ஒரு எதிர்ப்புக் குழுவுக்கு இராஜபக்ஷ தலைமை தாங்கினார். 1987 அல்லது 2000 ஆண்டு
பிரேரணைகளில் எதுவும், நாட்டின் இனவாத அரசியலமைப்பில் அதன் வெளிப்பாட்டைக் கொண்டுள்ள திட்டமிட்ட தமிழர்
விரோத வேறுபாடுகளை களைவது பற்றி அக்கறைகொள்ளவில்லை.
சொந்தப் பிரேரணைகளை முன்வைப்பதற்காக புலிகளுக்கு இராஜபக்ஷவால் விடுக்கப்பட்ட
அழைப்புக்காக, வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபை என்ற திட்டம் மட்டுமே மேசையில்
இருந்துகொண்டுள்ளது. 2003 கடைப்பகுதியில் அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கைக்கு வழிவகுப்பது முடிவில் யுத்தத்திற்கு
முடிவுகட்டுவதன் பேரில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அடிப்படையாக புலிகள் இந்தப் பிரேரணையை
முன்வைத்தனர். ஜே.வி.பி மற்றும் இராணுவத்தின் தூண்டுதலால் சில நாட்களின் பின்னர் ஐ.தே.க. அரசாங்கத்தின் மூன்று
பிரதான அமைச்சர்களை பதவிவிலக்கியதன் மூலம் குமாரதுங்கா இதற்கு பதிலளித்ததோடு அவசரகால நிலையைப்
பிரகடனம் செய்வது வரை முன்சென்றார். மூன்று மாதங்களின் பின்னர் முழு அரசாங்கத்தையும் வெளியேற்றிய அவர்,
2004 ஏப்பிரல் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஜே.வி.பி. உடன் ஒரு தேர்தல் கூட்டணியையும்
ஏற்படுத்திக்கொண்டார். இடைக்கால நிர்வாக சபைக்கான புலிகளின் பிரேரணை கலந்துரையாடப்படவில்லை.
தான் புலிகளை ஒரு மூலைக்குள் தள்ளி ஒரு யுத்தத்தை தூண்ட முயற்சிக்கவில்லை என இராஜபக்ஷ
கூறிக்கொண்ட போதிலும், நவம்பரில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அவரது மூலோபாயம் அதுவாகவே
இருந்துவருகின்றது. இராஜபக்ஷவின் சிறுபான்மை அரசாங்கம் பாராளுமன்ற ஆதரவுக்காக தங்கியிருக்கும் ஜாதிக ஹெல
உறுமய மற்றும் ஜே.வி.பி. யின் அழுத்தத்தால், அவர் 2002 யுத்தநிறுத்தத்தைப் பற்றி மீள் பேச்சுவார்த்தை நடத்த
முன்சென்றதோடு மற்றும் சமாதான முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வே சம்பந்தமாகவும்
அதிகரித்தளவில் விமர்சனங்களை கொண்டிருந்தார். அவர் எந்தவொரரு அதிகாரப் பகிர்வும் "சமஷ்டி" அரசை விட "ஒற்றை"
ஆட்சிக்குள்ளேயே மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பாக வலியுறுத்துவதானது, சமாதானப் பேச்சுக்களுக்கான முன்னைய
அடித்தளத்தை நேரடியாக குறுக்கே வெட்டுவதோடு வடக்கு கிழக்கில் எந்தவொரு புலிகளின் நிர்வாகமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட
அதிகாரங்களைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இராஜபக்ஷவின் NDTV
பேட்டியானது இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரன் இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்ட நிலைமையின் மத்தியிலேயே
இடம்பபெற்றது. யுத்த நிறுத்தத்தின் தொடர்ச்சிக்கும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்புவிடுத்த
அதே வேளை, "பாதுகாப்பு ஒத்துழைப்பானது இலங்கை பாதுகாப்பு படைகளின் தடுக்கும் திறனின் தகமையை
கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டது" எனக் கூறிய சரன், இந்தியா கொழும்புக்கு இராணுவ உதவிகளை வழங்கும்
எனவும் சுட்டிக்காட்டினார். புது டில்லியின் இராணுவ ஆதரவு, குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள
அரசியல் கட்சிகள் யுத்தத்தை நிறுத்துவதற்காக இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துவரும் நிலையில்
அங்கு எதிர்ப்பை கிளப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இலங்கை ஜனாதிபதி இந்தியத் தொலைக் காட்சியில்
தோன்றி சில ஆறுதலான பொய்களையும் மற்றும் வெற்று வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்.
யதார்த்தத்தில், அரசாங்கமும் இராணுவமும் யுத்தத்திற்கான தமது தயாரிப்பை துரிதப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
ஜூன் 26 அன்று லெஃப்டினன்ட் ஜெனரல் பாரமி குலதுங்க கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவம் சோதனைச்
சாவடிகள், அடையாள அட்டைகளை பரிசோதித்தல் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வரும்
பொருட்களை அல்லது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திற்குள் செல்லும் பொருட்களையும் பரிசோதித்தல் உட்பட
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.
கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை
ஒன்று குறிப்பிட்டதாவது: "பெருமளவில் ஒட்டுமொத்த யுத்தத்திற்கான ஆபத்து அச்சுறுத்தலுக்கு மத்தியில், அவசரத்
தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய இராணுவத் தளபாடங்கள் அவசர அவசரமாக கொள்முதல்
செய்யப்படுகின்றன, தாக்குதல்களை சந்திப்பதற்காக அவசர மோதல் திட்டங்கள் வகுக்கப்படுவதோடு கெரில்லாக்கள்
மேலாதிக்கம் செய்யும் எல்லைக் கிராமங்களுக்கு பாதுகாப்பு தயாரிப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இந்தக்
கிராமங்களை "எல்லைக் கிராமங்கள்" என அழைக்க வேண்டாம் எனவும் "அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள" கிராமங்கள்
என அழைக்குமாறும் பாதுகாப்புப் படைகளுக்கு அரசாங்கம் இந்தவாரம் கட்டளையிட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும்
பாதைகள் மூடப்பட்டுள்ளதோடு சோதனைச் சாவடிகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன."
பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பில் உள்ள அனைவரையும் பதிவு செய்வது உட்பட
பல தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "பயங்கரவாத அச்சுறுத்தலின்" விளைவாக இத்தகைய விபரங்கள்
தேவையாக இருப்பதோடு அவை ஜனாதிபதி செயலகத்தில் மத்தியப்படுத்தப்பட உள்ளன என கொழும்பு உதவி பொலிஸ்
மா அதிபரான பூஜித ஜயசுந்தர கடந்தவாரம் அறிவித்தார். இதே நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களிலும்
அமுல்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமாதானம் என்ற பதாகையின் கீழ், இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள்
தள்ளிக்கொண்டிருக்கின்றார். |