World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆபிரிக்காSouth Africa: Factional war intensifies between Mbeki and Zuma supporters in ANC தென் ஆபிரிக்கா: ஆபிரிக்க தேசிய காங்கிரசின் சூமா பிரிவு ஆதாரவாளர்களுக்கும் ம்பெகிக்கும் இடையேயான கட்சிப்பிளவு வலுக்கிறது By Barbara Slaughter மே மாதம் 8ம் திகதி, தென் ஆபிரிக்காவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர், ஜாக்கோப் சூமா, ஜெஹனஸ்பேர்க் நீதிமன்றத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டிலிருந்து குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். சென்ற டிசம்பர் மாதம் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அரசின் தென் ஆபிரிக்காவின் குடியரசு துணைத்தலைவர் பதவியிலிருந்து இந்த தீர்ப்பு வரும் வரை அவர் பதவி விலக வேண்டியிருந்தது. சூமாவின் முன்னாள் நிதி ஆலோசகராக இருந்த ஸ்சாபீர் ஷேய்க், "பெரும்பாலும் ஊழல் குற்றச்சாட்டுகளின்" பேரில் தண்டிக்கப்பட்டு 2005ம் ஆண்டு மே மாதம் ஐந்து வருடம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார், சூமாவுக்கு இவருடன் பொதுவாக ஊழல் உறவு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டு தொடர்பாக சூமா இரண்டாவதாக நீதிமன்ற விசாரணையை இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை பகிரங்கமாக வெளிப்பட்டவுடனேயே குடியரசுத்தலைவர் தாபோ ம்பெகி, சூமாவை நாட்டின் குடியரசு துணைத்தலைவர் பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டார். கற்பழிப்பு விசாரணை இரண்டு-மாத காலம் நடந்த பின்னர், சூமாவின் வசிப்பிடத்தில் குற்றம் சாட்டியவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்குமிடையில் நிகழ்ந்துள்ள பாலியல் மோதல் இருவர் சம்மதத்தின் பேரிலேயே நிகழ்ந்தது என்னும் விளக்கம் "நியாயமானதாக" உள்ளது எளிதில் "நம்பத்தக்கதாகவே" உள்ளது என்பதால் அதனை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார். புகார்தாரரின் பிரமாண வாக்குமூலத்தை நிராகரிக்கையில், "தன்னை கற்பழித்ததாக தவறான புகார்களை கூறும் சரித்திரமுடையவர் இந்தப் புகார்தாரர்" என நீதிபதி தெரிவித்துள்ளார். ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இருக்கும் பிளவுப் போராட்டங்களுக்கு ஒரு முடிவு கட்டாத நிலையில் சூமாவை தண்டிக்க தவறியது கொடூரத்தை இன்னும் அதிகரிக்கும். [ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமான] ''லுதுலி ஹவுஸ்க்குள் தற்போது சூமா அணிவகுத்து வருகிறார்... இது சூமாவின் அரசியல் வாழ்வில் அவருக்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும்" என பிசினஸ் டுடே பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கரிமா ப்ரவுன், எழுதியுள்ளார். 2009ம் ஆண்டு நிகழவிருக்கும் தென் ஆபிரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சார்பில் தான் போட்டியிடுவதை தடுக்குமுகமாகவே "சில முகம் தெரியாத நபர்களால்" திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த கற்பழிப்பு குற்றச்சாட்டு என சூமா தெரிவித்துள்ளார். ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைமைக்கு எதிராக சூலுவில் தனது அதிகார தளத்தின் பலத்தை திரட்டி காண்பித்துள்ளார், க்ஸ்ஹோஸா (Xhosa) பழங்குடியை சார்ந்தவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருவதை "க்ஸ்ஹோஸா-நோஸ்ட்ரா" என சூமாவின் ஆதரவாளர்கள் பிரகடனம் செய்கிறார்கள். இந்த விசாரணை நடக்கும்போது தினமும் க்வாசூலு நாடல் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களை பேருந்துகளில் ஜோஹன்னஸ்பேர்க் நகருக்கு வரச்செய்து நீதிமன்றம் முன்பாக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட செய்யப்பட்டனர். "ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மலைச்சாதியினருக்கு எதிரான-கோட்பாடு-ஆராய்ச்சியை, அழிவு வேலையில் குழிபறிக்கும் பாங்கில் வேண்டுமென்றே மலைச்சாதியினரை தன்னுடைய சண்டையில்" சூமா நுழைத்து வருகிறார் என கார்டியன் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. "கட்சியில் பலமாக இருக்கும் க்ஸ்ஹோஸாஸ் இனத்தவரால் பாதிக்கப்பட்டவரான சூமா தான் தங்களின் 100 சதவிகித சூலு பையன்" என சூமாவின் ஆதரவாளர்கள் பறைசாற்றுவதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் அணியும் மற்றும் பொதுவுடைமை கட்சியின் இளைஞர் அணியும் சூமாவை ஆதரித்தனர். தென் ஆபிரிக்க பொதுவுடைமைக் கட்சி (SACP), ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் தென் ஆபிரிக்க ட்ரேட் யூனியன் காங்கிசுரம் (COSATU), ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பங்குதாரர் ஆகும். இந்த COSATU கட்சியில் சூமாவை ஆதரிப்பதில் பிளவு உள்ளது. விசாரணை முடிவுற்றதுமே ஆபிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பினை இயன்ற அளவில் விரைவாக ஏற்க விரும்பும் தனது உள்நோக்கத்தை சூமா தெரிவித்துவிட்டார். இந்த வழக்கு நடைபெறும் காலத்தில் மட்டும் தனது அலுவலக பொறுப்புகளை தானே நீக்கி கொண்டதாகவும் மற்றும் தற்போது தனது கடமைகளை தொடரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தேசிய மாநாட்டை மறு அட்டவணை இடவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோருகிறார்கள். கட்சித்தலைமை பதவிக்கு ம்பெகி ஆதரவு வேட்பாளர் யாரையும் தோற்கடிக்கும் அளவில் சூமா வலிமையாக இருப்பதாகவும் இதன் மூலம் 2009ம் ஆண்டின் தென் ஆப்பிரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் சூமாவின் நிலை அசைக்க முடியாத வகையில் பலமாக இருக்கும் என சூமாவின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். பிளவுகளால் ஏற்பட்டுள்ள சச்சரவுகளுக்கு அப்பாலும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும் மற்றும் முத்தரப்பு கூட்டணியினரும் கிழிபடுகிறார்கள். ஜேக்கப் சூமாவின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான சண்டையினால் காய்ச்சல் வந்துள்ளது போன்ற சூழ்நிலையில் அதிகாரத்தை பெற்றே தீர வேண்டும் என்று காமத்துக்கு ஒப்பான ஆசைகள், பேராசை பொறாமை, பயம், பழிக்குப்பழி மற்றும் சதித்திட்டங்கள் ஆகியவை ஆபிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியை இறுக்கிப்பிடித்து வருவதாக" மெயில் மற்றும் கார்டியன் பத்திரிகையில், கட்டுரையாளராக இருக்கும் சாம் சோல், என்பவர் சமீபத்தில் விளக்கியுள்ளார். SACP கட்சியில் நிலவும் ஆழமாகி கொண்டே இருக்கும் முறிவுகளை குறிப்பிட்டு "இந்த கட்சியின் சரித்திரத்திலேயே மிகவும் மோசமான நிலை" என இக்கட்சியின் தேசிய நிர்வாகக் கமிட்டி கூட்டத்தில் ஒரு உறுப்பினர் விளக்கியுள்ளதாக, இதே பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சூமாவின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ம்பெகியின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான எதிர்ப்பதமான போராட்டங்கள் இருவரின் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்துள்ளவை அல்ல. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் வணிகர்களுக்கு சாதகமான கொள்கைகளை, இரு தரப்பினருமே பெருவாரியாக எதிர்த்து வருகின்றனர், ஒரு ஆண்டுக்கு முன் பிஷப் டெஸ்மண்டு (Desmond Tutu) "ஒரு வலிமையான வெடிமருந்துக்கு ஒப்பான" நாடாக இருக்க வேண்டும் என விரும்பினார். சிறிய அளவே உள்ள தனிச்சலுகைகளை உடைய சிறுபான்மையினரின் உரிமைகளை நன்கு பாதுகாத்து வருவதினால், நாட்டின் ஸ்திரத்தன்மையை எப்படி பாதுகாக்க முடியும் என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நிதி முதலீடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் அக்கறைகள் குறித்து வெகு நேரடியாகவே ம்பெகி தெளிவாகப் பேசுவார். உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகியவற்றின் கோரிக்கையான தாராளச்-சந்தை அதிக அளவில் தனியார் முதலீடுகள் மற்றும் தொழிலாளர்கள் ஊதியம் நலத்திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றை இன்னும் குறைத்தல் ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்த ம்பெகி உறுதியாக உள்ளார். அவர் மேலும் ஒரு முறை குடியரசுத்தலைவராக வேண்டுமென்றால்; அரசியல் நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதால் தான் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மாறாக, அடுத்த குடியரசுத் தலைவராக ஒரு பெண் வரவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். அவரது திருக்கோவில் ஏவலர், பம்சிலி ம்லாம்போ-நீக்குகாவுக்கு (Phumzile Mlambo-Ngcuka) குடியரசுத் தலைவர் பதவியை பெற்றுத் தருவதற்கான முயற்சி இது. அவர் கனிமவள அமைச்சராக இருந்தபோது, கனிமத்துறையில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை பறிக்கும்படியாக தாராளச்-சந்தை முறைகளை அமுல்படுத்துவதில் பெரிதும் பங்கு வகித்துள்ளார். பதவி பறிக்கப்பட்ட சூமாவுக்குப் பதிலாக இவர் ம்பெகியால் தென் ஆபிரிக்காவின் குடியரசுத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்கையில், சூமா இடதுசாரியாக காட்சியளிக்கிறார்-இதற்கு முக்கிய காரணம் அவர் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் கடந்த கால அடிப்படை கூறு உடையவர்களுடன் இணைந்து செல்பவராக இருப்பதும் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் சுதந்திரமான சிறப்புரிமை பட்டைய கோட்பாடுகளை பூர்த்தி செய்வதில் மக்களாட்சி தத்துவம் குறித்த அவருடைய ஜனரஞ்சகமான பிரச்சாரமும் தான். ஆனால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சூறையாடிய அரசாங்கத்தின் தாராளச்-சந்தை, தனியார்மய கோட்பாடுகளை ஒருபோதும் எதிர்த்ததில்லை, அரசாங்கத்தின் புதிய-தாராளமய நினைவுகளை எதிர்ப்பவர்களை சமாளிப்பதற்காக 1999ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவுக்கு பின் தென் ஆபிரிக்க-நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற ம்பெகி "இடதுசாரி" போல கருதப்பட்டு மக்கள் பாராட்டுக்குரியவாறு இருந்த சூமாவை நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக்கினார். SACP மற்றும் COSATU, ஆகியவற்றில் இந்த அளவில் ம்பெகிக்கும் மற்றும் சூமாவுக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் பெரிய பணக்காரர்களின் நலன்களை பாதுகாத்தல் நடவடிக்கைகளில் உழைக்கும் வர்க்கத்தினரின் பலத்த எதிர்ப்பு மற்றும் கொந்தளிப்புக்களை தடுப்பதில் தேவையான எச்சரிக்கையை மேற்கொள்வதில் இருவருமே தந்திரசாலிகளாகவே உள்ளனர்.கட்சியிலும் மற்றும் தொழிலாளர் ஒன்றியங்களின் ஆளுமை பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவினையும் சூமா கூடுதலாகக் கொண்டுள்ளார். தங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கினை ம்பெகி குறைத்து விடுவாரோ என்ற பயம் தான் இதற்கு காரணம். அரசாங்கத்தின், மேல் மட்டத்திலும் "ஊழலை ஒழிப்போம்," என்று குடியரசுத் தலைவர் ம்பெகி அறைகூவல் விடுத்து வருவது மேலை நாட்டு சக்திகள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஆதாயத்துக்கு சாதகமாக தான் செயல்படத்தயார் என நம்பவைப்பதற்கான ஒரு முயற்சி தான். அரசாங்க மட்டத்திலும் மற்றும் மாநில அரசு அலுவலகங்களிலும் நிலவி வரும் ஊழல் பெரிய வணிக நிறுவனங்களின் வணிக இலாபத்தில் ஒரு பெரிய பங்கினை பறிப்பதற்கான உள்ளூர் மேன்மக்களின் ஒரு மன்னிக்க முடியாத முயற்சி என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காண்கிறார்கள். சூமா ஒரு ஊழல் பேர்வழி எனத் தாக்குவது பல காரணங்களுக்கேற்ப அரசியல் தேவையாகிறது. மேலை நாடுகள் தன்னிடம் கேட்டவைகளை தான் நிறைவேற்றி வருவதாக ம்பெகி நிரூபிக்கவும்; சூமாவின் ஜனரஞ்சக கோஷங்களுக்காக அவரை ஆதரிக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எவ்விதச் சலுகைகளும் வழங்காது என்று தெளிவாக்கும் வகையிலும்; மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அப்பாலும் நீண்டிருக்கும் செல்வாக்குடைய ஒரு போட்டியாளரை அகற்றியதன் மூலம் SACP மற்றும் பெரும்பாலான தொழிற்சங்க ஆளும் வர்க்கத்தினரையும் தழுவிக் கொள்வதற்காகவும் தான் சூமாவின் மீதான இந்தத் தாக்குதல். அரசுக்கெதிராக பெருமளவில் அதிருப்தி நிலவுகிறது, குறிப்பாக நகரங்களில் மக்கள் மிக மோசமான ஏழ்மையினால் அவதியுறுகின்றனர். அரசாங்கத்தின் கறுப்பர் முன்னேற்றத்திட்டம் என்னும் கொள்கையின் பயனால் குறிப்பாக ஒரு சிறு தன்னலக்குழு போன்ற கறுப்பர் இன வியாபாரிகளும் மற்றும் பெண்களும், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உறுப்பினராக்கப்பட்டுள்ளவர்கள், பணக்காரராகி வருகிறார்கள். மற்றபடி, தென் ஆபிரிக்க சமுதாயம் ஆட்டம் காண்பது அதிகரித்து வருகிறது, மாறாக, கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே அரசியல் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் முன்பு ஏற்படுத்தப்பட்ட பாகுபாடுகள் 12 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுற்ற போதிலும் தென் ஆபிரிக்கர்களின் வாழ்க்கைத் தரம் உண்மையில் மோசமாகவே உள்ளது என தென் ஆப்பிரிக்க இன உறவுகள் குறித்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலிருந்து தெரிகிறது. 1995ம் ஆண்டு மற்றும் 2004-05ம் ஆண்டுகளுக்கிடையே வீடுகளில் தண்ணீர் வசதி இருப்பது 10 சதவிகிதம் விழுக்காடுகள் குறைந்துள்ளது. தண்ணீர் இருக்கும் இடங்களில், தண்ணீரின் உபயோகம் குறைக்கப்பட்டுள்ளது அல்லது துண்டிக்கப்பட்டுள்ளது தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோக நிறுவனங்களின் தண்ணீர் கட்டண பட்டியல் தண்ணீர் பயன்பாட்டினை ஊனமாக்கியுள்ளது. ஆபிரிக்கர்கள் பலர் மிக ஏழ்மையில் வாழ்கிறார்கள். 1996ம் ஆண்டில் முழுமையான ஏழ்மையாக 16 மில்லியன் மக்கள் இருந்துள்ள நிலையில் இது 2004ம் ஆண்டில் 22 மில்லியனாக, 39 சதவிகிதம் விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், வேலையின்மை 1.3 மில்லியனிலிருந்து 3.9 மில்லியனாக 200 சதவிகிதம் விழுக்காடுகள் உயர்ந்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆறு மில்லியன் மக்கள் எச்.ஐ.வி, நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருவது உண்மையான நிலவரத்தின் பயங்கரத்தை காட்டுவதாக உள்ளது மற்றும் இவர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் விழுக்காடுக்கு குறைவானவர்களே அவர்களுக்குத் தேவையெனில், அரசாங்கத்தின் எய்ட்ஸ் நோய் பரவல் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. ஏழ்மை மிகுந்த பெரும்பாலான நகரங்களை சேர்ந்த மாவட்டங்களில் சுகாதார வசதியுடன் கழிப்பிட வசதியுடன் கூடிய அடக்கமான வீட்டுவசதியும், மற்றும் மின்வெட்டுக்கள் மற்றும் தண்ணீர் வினியோக கட்டுப்பாடுகளை நீக்கவும் கோரி மின்வெட்டுகளை முடிவுக்குக் கொண்டுவரவும், தண்ணீர் விநியோகக் கட்டுப்பாடுகளை நீக்கவும் கோரி மக்கள் கோபமாக எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். ஜனநாயகத்தை தூக்கி எறிய இத்தகைய தொந்தரவுகளை ஒரு "இரகசியப் படை" ஒத்தடம் கொடுத்து வருவதாக மேற்கண்ட கோரிக்கைகளுக்கான பதிலாக அரசாங்கம் பிரகடனம் செய்கிறது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தேசிய தலைவர், மோசியவா லெகோட்டா, 170,000 மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கனிவள நகரமாகிய குட்சாங்கில், இந்த ஆண்டு உள்ளூர் அரசாங்க தேர்தலின் போது ஒரு கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது நடந்த எதிர்ப்பானது அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரசை சேர்ந்த 100-க்கும் குறைவானவர்களே இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் எனவும், ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியே எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றும் பத்திரிகை செய்திகள் வந்தன. இறுதியாக இரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் வாயு ஆகியவற்றை பிரயோகித்து காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் இருபத்தியெட்டு பேர்கள் கைது செய்யப்பட்டனர். நகரங்களில் ஆபிரிக்கன் தேசிய காங்கிரஸ் பிரசாரம் செய்ய இயலவில்லை, மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும் உடனுக்குடன் கிழித்து எறியப்பட்டன. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பலமான பகுதியாக இருந்த ஒரு பகுதியில் அங்கு வசித்து வருபவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே தங்கள் வாக்குகளை அளித்தனர். பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பின்னர் கவுன்சிலர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர். ம்பெகி மற்றும் அரசாங்கத்தின் மீதான இத்தகைய வெறுப்பில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின்
கூட்டணி உடையும் நிலையில் உள்ளது. அடுத்த தேர்தலில் தனித்து நிற்பது குறித்து விவாதித்து வரும் ஒரு
SACP இரகசிய ஆவணம்
கசிந்து வெளிவந்துள்ளது. இத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அல்லது எடுக்கப்படாவிட்டாலும்
SACP மற்றும்
COSATU தென்
ஆபிரிக்காவில் முதலாளித்துவ அக்கறைகளுக்கான ஆதரவை பயமுறுத்தும் உழைக்கும் வர்க்கத்தினரிடம் சுதந்திரமான அரசியல்
முன்னேற்றம் ஏற்படுவதை தடுக்கும் வாயிலாக "மக்களின் குடியரசுத் தலைவராக" கருதப்படும் சூமாவை ஆதரிப்பதில்
இருக்கும் ஐயம் மிகச் சிறியது தான். |