:
செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா
:
கொரியா
US and Japan seize on missile tests to
tighten noose around North Korea
ஏவுகணை சோதனைகளை பயன்படுத்தி வட கொரியா மீதான சுருக்குக் கயிறை அமெரிக்காவும்
ஜப்பானும் இறுக்குகின்றன
By Peter Symonds
6 July 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
புஷ் நிர்வாகம் விரும்புகிறவாறு நேரடியாக நடக்கும் வகையிலான செயற்பாட்டில்,
வட கொரிய ஆட்சியானது, ஆறு குறைந்த தூர ராக்கெட்டுக்கள் மற்றும் நீண்ட தூர
Taepodong-2
ஏவுகணைகள் என ஏழு ஏவுகணைகளை சோதனை முறையில் ஏவியது. வாஷிங்டனும் டோக்கியோவும் உடனே
இச்சோதனைகளை கண்டித்தது மட்டுமின்றி, பியோங்யாங்கின் மீது தூதரக, பொருளாதார தடைகளை சுமத்துவதற்காக
ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் அவசரக்கால கூட்டதொடருக்கு அழைப்புவிடுத்தன; அது இன்று கூடுகிறது.
ஐ.நா. விவாதத்தின் விளைவுக்கு கூடக் காத்திராமல், ஜப்பானிய அரசாங்கம் வட
கொரியாமீது தடைகளை விதித்துள்ளது; கப்பல் போக்குவரத்து, சிறப்பு விமானப் பணிகள் ஆகியவை இரு நாடுகளுக்கும்
இடையே தடுக்கப்படுவதுடன் வட கொரிய அதிகாரிகளும் ஜப்பானுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவின் அண்டை நாடுகள், குறிப்பாக சீனா, ஆகியவை பியோங்யாங்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா.பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை பயன்படுத்திக்
கொள்ளும். செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் அடுத்த வாரம் நடக்க உள்ள ஜி-8 கூட்டத்தில், ஈரான், மற்றும் வட
கொரியாவிற்கு எதிரான கடும் நடவடிக்கைகளுக்கு வழிகோலுவதற்கு இது மற்றொரு வழிவகையாகும்.
இந்தச் சோதனையின் தயாரிப்புக்களை பயன்படுத்தி, தன்னுடைய சர்ச்சைக்குரிய பாலிஸ்டிக்
எதிர்ப்பு ஏவுகணை முறையை (anti-ballistic
missile system ABM) "செயற்பாட்டு வகையில்" இருத்துவதற்கு
அமெரிக்கா ஏற்கனவே முந்திக் கொண்டுவிட்டது. அமெரிக்கா வரை டேபோடாங்-2 வரக்கூடிய திறன் உடையது
என்பதைக் காட்டி, வெள்ளை மாளிகை அதிகாரிகள் வட கொரிய ஏவுகணையை பென்டகன் தகர்த்து ஏறியும் முயற்சியில்
ஈடுபடக்கூடும் என்று குறிப்பாக தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும், பியோங்யாங்கின் காட்சிப் பொருள்
தன்னுடைய சோதனை ஒட்டத்தில் 40 கணங்களே நீடித்து ஜப்பானியக் கடலில் விழுந்தது. ஆனால் இதனால் அமெரிக்கா
ABM
திட்டம் விரைவுபடுத்தப்படுவதை நிறுத்தப் போவதில்லை. அமெரிக்காவும் ஜப்பானும் ஏவுகணை பாதுகாப்பு முறை
ஒன்றைக் கூட்டாக கொள்ளும் முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளன.
ஏவுகணைச் சோதனைகளுக்கு விடையிறுக்கும் வகையில் புஷ் நிர்வாகம் வடகொரியாவிற்கு
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அறுதரப்பினர் பேச்சு வார்த்தைகளை தொடர்வதற்கு வருமாறு பாசாங்குத்தனமான அழைப்பை
விடுத்துள்ளது. இந்த அறுவர் பேச்சுவார்த்தைகளை பெய்ஜிங் ஏற்பாடு செய்திருந்தது; இதல் அமெரிக்கா, வட
கொரியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளன; இதன் நோக்கம் பியோங்யாங்கின் அணுவாயுதத்
திட்டங்களையொட்டி மோதல்கள் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். 2003ல் இப்பேச்சு வார்த்தைகள்
தொடங்கின; செப்டம்பர் 2005ல் அதன் கடைசி சுற்று நடைபெற்றது.
"தூதரகமுறையில் தீர்வு" என்றெல்லாம் பேசினாலும், புஷ் நிர்வாகம்தான் வட
கிழக்கு ஆசியாவில் அழுத்தங்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை கொண்டுள்ளது. ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகளில்
அது சமரச ஒப்பந்தத்தை காணக் கலந்து கொள்ளவில்லை; மாறாக மற்ற நாடுகளின் மீது அழுத்தும் கொடுத்து
பியோங்யாங்கின் மீது பொருளாதார, தூதரக தடைகளை எடுப்பதற்கு அது ஒரு வழிவகையாக அமையும் என்ற
முறையில்தான் கலந்து கொண்டது. ஈராக்கிலும், ஈரானிலும் உள்ளது போலவே வட கொரியாவிலும் "ஆட்சி
மாற்றம்" வேண்டும் என்பதுதான் தன்னுடைய இலக்கு என்பதை வாஷிங்டன் அதிகம் மூடிமறைக்கவில்லை. பேச்சு
வார்த்தைகளில் கலந்து கொள்ளாததற்காக அவநம்பிக்கையுடன் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பியோங்யாங்கை
குறைகூறினாலும், இப்பேச்சு வார்த்தைகளை எப்பொழுதும் புஷ் நிர்வாகம் குறைமதிப்பிற்கு உட்படுத்தத்தான்
முயன்றிருந்தது.
சர்வதேச செய்தி ஊடகத்தில், கடந்த செப்டம்பர் பேச்சு வார்த்தைச் சுற்றுக்கள்
மிகப் பரந்த அளவில் "பெரும் தடையை அகற்றக்கூடியன" எனப் பாராட்டப்பட்டன. "அனைத்து அணுவாயுத,
அணுசக்தித் திட்டங்களையும் கைவிடுவதற்கு வட கொரியா" ஒப்புக்கொண்டதன் "மிகக் குறுகிய காலத்தில்"
அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என்று கூறப்பட்டது. அதற்கு ஈடாக வாஷிங்டன் அதிகம்
கொடுக்கவில்லை; "வட கொரியா மீது தாக்குதல் அல்லது படையெடுப்பை மேற்கொள்ளமாட்டோம்" என்ற
வெற்று உறுதி மொழியும், "தக்க நேரத்தில்" மென்னீர் ஈணுலை (light
water power reactor) பற்றி விவாதமும் ஒத்துழைப்பும்
நடக்கும் என்ற தெளிவற்ற உறுதி மொழிகளும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சொற்களைவிடச் செயல்தான் எடுத்துக் காட்டாக இருக்கும் என்று பழமொழி கூறுகிறது.
கூட்டு அறிக்கை வெளிவந்தவுடனேயே, புஷ் நிர்வாகம் அதன் விதிகளை அலட்சியம் செய்யத் தொடங்கியது. அதே
மாதத்தில் வாஷிங்டன் வட கொரியா சர்வதேச நிதிய முறையில் உதவி பெறும் நிலைமையை முடக்குவதற்கான
ஆக்கிரோஷ பிரச்சாரத்தில் முதல் கட்டத்தை தொடங்கியது. பியோங்யாங் பரந்த அளவில் சட்டவிரோத நடவடிக்கைகளில்
தொடர்பு கொண்டுள்ளது என்ற குற்றச் சாட்டைக் கூறி, அமெரிக்க கருவூலம் மாக்காவை தளமாகக் கொண்ட
வங்கியான Banco Delta Asia
வை பண மாற்று செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனம் என்றும் "வட கொரிய அரசாங்கத்தின் முகவர்கள், அதன்
போலி நிறுவனங்களின் குற்ற நடவடிக்கைகளுக்கு" உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
1953ம் ஆண்டு கொரியப் போர் முடிவுற்றதில் இருந்தே வட கொரியா மீது அமெரிக்கா
கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது; ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் நாட்டின் நிதிநிலையை
முற்றிலும் முடக்கும் நோக்கத்துடன் அதன் வெளிச் செலாவணி மாற்று இருப்புக்களையே மூடிவிடும் அளவிற்கு இலக்கைக்
கொண்டன. அமெரிக்கா தன்னை கறுப்பு பட்டியிலில் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தில் பான்கோ டெல்டா ஏசிய
வங்கி அமெரிக்காவிற்கு உடன்பட்டு பெப்ருவரி மாதத்தில் வட அமெரிக்க இருப்புக்கள் 24 மில்லியன் டாலர்களை
முடக்கிவிட்டது. இதே வழிவகையை கையாண்டு, வாஷிங்டன் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் பல வங்கிகளையும்,
நிதிய அமைப்புக்களையும் வட கொரிய நிறுவனங்களுடன் உறவை முறித்துக் கொள்ளமாறு மிரட்டுவதில் வெற்றியடைந்தது.
ஏப்ரல் மாதம் புஷ் நிர்வாகம் வட கொரியாவில் உள்ள எட்டு அரசாங்க நிறுவனங்கள் பேரழிவு ஆயுதப்
பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன என்று குற்றம் சாட்டி அமெரிக்க நாட்டில் இருந்த அவற்றின் இருப்புக்களை முடக்கிவிட்டது.
Knight Ridder ல் வந்த மே
மாதக் கட்டுரை ஒன்று இலக்கு கொள்ளப்பட்ட நிதிய நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவையா இல்லையா
என்று அமெரிக்கா அக்கறை காட்டவில்லை என்று தெளிவாக்கியுள்ளது. "குருட்டாம்போக்கில் நிகழ்த்தப்பட்ட
அணுகுமுறையாகும் அது; முனைப்புடன் குவிப்பை காட்டவில்லை; இதற்கு உத்தரவாதம் அளித்த பாதிப்பாளர்களில்
பிரிட்டிஷ் வங்கியாளர் குழு ஒன்றும் இருந்தது; இது வட கொரியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வணிகர்களுக்கும்,
இறக்குமதியாளர்களுக்கும் உதவும் வகையில் ஒரு சிறிய தனியார் வங்கியை நிறுவியிருந்தனர்." என்று கட்டுரை
தெரிவிக்கிறது. வங்கியின் நிர்வாக இயக்குனர் நைஜெல் கோவி நிருபரிடம் கூறியதாவது: "அவர்கள் ஒரே
பிரஷ்ஷினால், சட்டநெறிப்படியோ, இல்லாமலோ, அனைவர் மீதும் தார் பூசிக் கறுப்பு அடிக்கின்றனர்."
வடகொரியாவில் செயல்படும் மனிதாபிமான, ஐ.நா. நிறுவனங்களும் அமெரிக்க நிதியத் தடுப்புக்களினால்
பாதிப்பிற்குட்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நெருக்கடிக் குழுவின் வட கிழக்கு ஆசியப் பிரிவின் இயக்குனரான பீட்டர்
பெக் விளக்கினார்: "நிதியத் தடுப்புக்களின் விளைவினால் புஷ் நிர்வாகம் சற்றே மலர்ந்த மகிழ்ச்சியுடன் உள்ளது
... புஷ் நிர்வாகம் பதவியில் இருக்கும் வரை இவை தொடரும்." பெக்கின் கருத்தின்படி தெற்கு கொரிய
அரசாங்கம் அமெரிக்காவிற்கு "பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் அதிகமில்லை" என்று உணர்ந்துள்ளது. தென்
கொரியாவும் சீனாவும், தென்கொரியாவவும், செப்டம்பர் 2005க்கு பிறகு தொடங்க வேண்டிய ஆறு நாடுகள்
பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீய நோக்கம் என்று வாஷிங்டனுடைய நிதியத் தடுப்புக்களை வட கொரியா
கண்டித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை; மேலும் அவை அகற்றப்படும் வரை பேச்சு வார்த்தைகளில் கலந்து
கொள்ளவும் மறுத்து விட்டது. மார்ச் மாதம் அபூர்வமாக நடைபெற்ற அமெரிக்க, வட கொரிய அதிகாரிகளுக்கு
இடையேயான கூட்டத்தில், வட கொரிய உயர் பிரதிநிதி லி கன் அமெரிக்க அதிகாரிகளிடம் தடைகளை நிறுத்துமாறு
முறையிட்டதுடன் போலி நாணயம் மற்ற சட்டவிரோத செயல்கள் பற்றிய அமெரிக்கக் கவலைகளுக்கு கூட்ட
நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். "ஆறு நாடுகள் பேச்சு வார்த்தைகளுக்கு இத்தொப்பி எங்களை தலைகளை
மறைத்திருக்கும் வகையில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது" என்றும் அவர் அறிவித்தாக கூறப்படுகிறது.
அமெரிக்கா இம்முறையீட்டை நிராகரித்துவிட்டது.
வட கொரியாவின் அணுசக்தித்திட்டம் அல்லது ஏவுகணைத்திட்ட பிரச்சினைகளுக்கு
அமைதியான தீர்வு காணவேண்டும் என்பதில் புஷ் நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை. நாட்டின் மக்கள் மீது ஏற்படும்
பாதிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அமெரிக்கா வட கொரியப் பொருளாதாரம் சரியவேண்டும் என்ற
முன்னோக்கைக் கொண்டுள்ளது; அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் போது, அதைப் பயன்படுத்தி "ஆட்சி
மாற்றத்திற்கு" வழிவகுக்கலாம் என்று அது நினைக்கிறது. அணுவாயுதத் திட்டங்கள் பற்றிய அனைத்து அமெரிக்க
கோரிக்கைகளையும் வட கொரியா இறுதியில் ஒப்புக் கொண்டாலும், தன்னுடைய இடையறா பிரச்சாரத்தை
தொடர்வதற்கு வாஷிங்டன் புதிய போலிக் காரணங்களை கண்டுபிடிக்கும். தொடர்ச்சியான முறையில் மூலையில் தள்ளி
நசுக்கப்படுகையில் பியோங்யாங் நேற்றைய ஏவுகணைச் சோதனைகளை பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தியது.
தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்காதான் முக்கிய பொறுப்பு என்றாலும்,
பியோங்யாங்கின் நடவடிக்கைகளும் முற்றிலும் பொறுப்பற்றதனமாக இருந்து வாஷிங்டனில் இருந்து ஆக்கிரோஷமான
விடையிறுப்பை வரவழைக்கும் தன்மை உடையனவாக உள்ளன. கிம் ஜோங்-இல் உடைய சிறு குழுத் தன்னாட்சி ஒரு
"சோசலிச" அல்லது "கம்யூனிச" ஆட்சி அல்ல; மாறாக தீவிரத் தேசியம், ஸ்ராலினிசம், மாவோயிசம் இவற்றின்
கலவையின் அடிப்படையில் அது உள்ளது; இது வட கொரிய மக்களுக்கு முற்றமுழு பொருளாதார, சமூகப்
பேரழிவாக உள்ளது.
வாஷிங்டனுடைய போர் முரட்டுத்தனத்திற்கு கிம்மின் விடையிறுப்பு இரத்தத்தை உறைய
வைக்கும் அச்சுறுத்தல்களை வெளியிடுவதும், சாகசங்களை காட்டுவதுமாக உள்ளது. வட கொரிய கடலுக்கு அருகே
ஏராளமான அமெரிக்க போர்க்கப்பல்கள் குழுமியபின், வரவிருக்கும் ஏவுகணைச் சோதனைகளுக்கு எதிராக
நடவடிக்கை வேண்டும் என்று அமெரிக்க செய்தி ஊடகம் குரல் கொடுத்த பின்னரும், அரசாங்க நிறுவனமான
கொரிய மத்தியச் செய்தி அமைப்பு திங்கள் அன்று அறிவித்தது: "DPRK
(வட கொரியா) இராணுவமும் மக்களும் தவிர்க்க முடியாத போரை எதிர்கொள்ளும் வகையில் முழுத்
தயாரிப்புடனும், தளரா முயற்சியுடன் தாக்கிச் சிதைத்துவிடும் தாக்குதலை மேற்கொள்ளவும், மகத்தான அணுசக்தி
தடுப்பைக் கொண்டு அணுவாயுதப் போரை தொடங்கவும் உள்ளனர்."
வட கொரியா, சோதனைக்குட்படுத்தப்படாத, ஒருவேளை இல்லாமல்கூட இருக்கக்
கூடிய சில அணுவாயுதங்களை கொண்டு, ஒற்றை தொலைதூர ஏவுகணையை செலுத்துவோம் எனப்படும் கருத்து
அமெரிக்காவின் இராணுவத்திற்கு ஈடு எனக் கூறுதல் மகா அபத்தமாகும். உண்மையில் வட கொரியாவை காப்பதற்கு
பதிலாக, அணுவாயுதம் கொண்ட ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுவிட்டால், அது பேரழிவு
தக்கூடிய அமெரிக்க இராணுவத் தாக்குதல் என்ற ஆபத்து வரும் என்பதைத்தான் உயர்த்திக் காட்டும். இதற்கு
பியோங்யாங்கிடம் விடை கிடையாது. வாஷிங்டன் போஸ்ட்டில் ஜூன் 22 அன்று வந்த கட்டுரை ஒன்றில்,
அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலராகவும், துணைப் பாதுகாப்புச்
செயலராகவும் முறையே இருந்திருந்த வில்லியம் பெர்ரியும், ஆஷ்டன் கார்ட்டரும் வெளிப்படையாகவே தவிர்க்க
முடியாத தாக்குதலை நடத்தி டேபோடாங்-2 ஏவுகணை, ஏவும் தளத்தில் இருக்கும்போதே அழித்துவிட வேண்டும்
என்று வாதிட்டனர்.
பியோங்யாங்கின் வெற்றுச் சவடால் ஆட்சியின் அரசியல் திவால்தன்மைக்கு நிரூபணம்
ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முறையீட்டையும் செய்ய முடியாத தன்மையை கொண்டிருக்கும்
அதன் வனப்புரை அச்சத்தையும் உறுதியற்ற தன்மையும்தான் உயர்த்திக் காட்டுகிறது; மேலும் தொழிலாளர்களை
பிரிவினைக்கு உட்படுத்துகிறது; அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ளமிகுந்த வலதுசாரி, தேசிய
அரசியல் வாதிகளுக்கு ஊக்கத்தைத்தான் கொடுக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் உண்மையான
போராட்டம் வட கொரிய முயற்சியினால் நடக்கும் என்று எவரும் போலிக் கனவைக் காணவேண்டியதில்லை. அமெரிக்காவுடன்
உறவுகளை சீராக கொள்ள வேண்டும் என்பதற்காக பியோங்யாங் மேற்கொண்ட பெருந்திகைப்பு நடவடிக்கைதான்
ஏவுகணைச் சோதனைகள் ஆகும். வேறுவிதமாகக் கூறினால், இன்னும் நலம் தரக்கூடிய வகையில் ஏகாதிபத்தியத்துடன்
உறவு கொள்ள வேண்டும் என்பதே அது.
அமெரிக்க நிர்வாகத்தை பொறுத்தவரையில், வட கொரிய நடவடிக்கைகள் தெய்வமே
அனுப்பியுள்ள அரசியல் செயல் போல் ஆகும்; இதை வைத்துக் கொண்டு அது ஈராக்கின் ஆழ்ந்த புதைசேற்றில்
சிக்கியுள்ள தன் நிலையில் இருந்தும் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் மக்களுடைய கவனத்தைத் திசை
திருப்பி அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க முடியும். இன்னும் கூடுதலான தண்டனைகள் வட கொரியாவிற்கு
வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதுடன், புஷ் நிர்வாகம் ஐயத்திற்கு இடமின்றி இவ்வாய்ப்பை பயன்படுத்தி
சீனா மீது தூதரக அழுத்தம் கொடுக்கவும் விரைந்து நிற்கும். வட கொரியாவில் அமெரிக்காவின் இலக்குகள்
பொருளாதாரத் தன்மை உடையவை அல்ல; மாறாக அவை மூலோபாய ரீதியானவைதான்; போட்டி சீனாவை
சூழ்ந்து கொள்ளுவதற்கு ஒரு பிணைப்பைக் கொடுக்கும்; சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் முழுவதும் உடன்படிக்கைகள்
மூலம் இராணுவத் தளங்களை அமைக்கும். அவ்வாறு செய்கையில் அது இன்னும் பரந்த அளவிலான பூசலுக்கு வழிவகுக்கும்.
Top of
page |