World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Supreme Court rules against Bush administration's military commissions

புஷ் நிர்வாகத்தின் இராணுவக் குழுக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

By John Burton
30 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜோன் பேர்ட்டன், கலிபோர்னியாவின் 29வது சட்டமன்றத் தொகுதியில் அமெரிக்க தேசிய சட்ட மன்றத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராவார்.

கியூபாவில் உள்ள குவாண்டநாமோ பே கைதிகளை விசாரணை செய்வதற்கு புஷ் நிர்வாகம் இராணுவ விசாரணைக் குழுக்களை பயன்படுத்துவதை, வியாழனன்று உச்ச நீதிமன்றம் 5-3 என்ற வாக்கில் சட்ட விரோதம் எனக் கூறியுள்ளது. அமெரிக்க குற்றவியல் முறையினாலோ, போர் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களின்படியோ பாதுகாப்பு இல்லாத வகையில் சட்ட இருட்டுப் பொந்துக்களில் பிடிக்கப்பட்டவர்களை வைத்து "எதிரிப் போராளி" என்ற வகையில் புஷ் நிர்வாகம் விசாரணை நடத்துவதை இந்த முடிவு நிராகரித்துள்ளது.

புஷ் நிர்வாகத்திற்கு இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் கடிந்துரை என்றாலும்கூட, இன்னும் அமெரிக்க இராணுவத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட கைதிகள் எவரையும் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு இடவில்லை. கைதிகளை அங்கு அல்லது மற்ற உலகெங்கிலும் உள்ள அமெரிக்க வாய்ப்பு வளங்களில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதின் "தீவிரமான விரோதச் செயல்கள் காலத்தில்" காலவரையற்று வைத்திருக்கலாம் என்னும் புஷ் நிர்வாகத்தின் கூற்று பற்றியும் அது ஏதும் கூறவில்லை.

ஆயினும்கூட, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் சான்றுகளை பார்க்கும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் அல்லது போர்க்குற்றங்களுக்காக கொடுக்கப்படும் மரண தண்டனை உட்பட பல தண்டனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கும் உரிமைகள் இல்லாத வகையில், கங்கரு (கட்டப்பஞ்சாயத்து) நீதீமன்றங்களை நிறுவியுள்ள புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளை சட்ட விரோதமாக்கியுள்ளது.

வியாழனன்று காலை நீதிமன்றம் தீர்ப்பை அளித்த சிறிது நேரத்தில், ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிசிரோ கோய்சுமியுடன் நிகழ்த்திய, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, செய்தியாளர் கூட்டத்தில் இத்தீர்ப்பு பற்றி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையிறுக்கையில் புஷ் பலமுறையும், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை தீவிரமாக கருத்திற்கொள்ளுகிறோம்" என்று கூறினார்; இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் உடனடியாக நாட்டுச் சட்டமாகிவிடும் என்பதை அரைமனத்துடன் ஏற்கும் சலுகைகள் போல் கூறப்பட்டது. தீர்ப்பின் சாரத்தை, எழுத்துக்களையும் முடிந்தால், ஒதுக்கிவைக்க நிர்வாகம் முயற்சி செய்யும் என்று குறிப்பட்ட புஷ், "மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இந்த இராணுவ விசாரணைக் குழுக்கள் உகந்தவையா என்பது பற்றி பரிசீலிக்க சட்டமன்றத்துடன் இணைந்து முடிவிற்கு வரும்" என்று கூறினார்.

செனட் மன்றத்தின் இராணுவக்குழுவிற்கு தலைவராக இருக்கும் வர்ஜினியா மாநிலக் குடியரசுக் கட்சி செனட்டரான ஜோன் வார்னர், புஷ்ஷின் அறிக்கைக்கு முன்னரே, "எமது சட்டத்தின்படி அவர்களுக்கு எவ்வாறு நீதிவழங்கலாம் என்பதை நாம் ஆராயலாம் என்று நான் உறுதியாக உள்ளேன்" என்றார். செனட் பெரும்பான்மை கட்சித் தலைவரான டெனெசி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பில் பிரிஸ்ட், "எமது சாதாரண குற்றவியல் நீதிமன்றங்களில் இல்லாமல் பயங்கரவாதிகளை இராணுவ விசாரணைக் குழுக்களினால் விசாரிப்பது என்பது பற்றி" சட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார்.

ஆப்கானிஸ்தானத்தில் நவம்பர் 2001 அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து அமெரிக்க கூட்டணி குடிப்படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சலிம் அஹ்மெத் ஹம்டன் என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் இவ்வழக்கு தொடரப்பட்டது. அவர் ஜூன் 2002ல் குவாண்டநாமோ குடாவிற்கு மாற்றப்பட்டார்; ஒரு இராணுவ விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட வேண்டிய போர்க்குற்றம் சாட்டப்பட்ட முதல் ஐந்து கைதிகளில் இவரும் ஒருவராவார்.

"போர்க் கைதிகள்" என்பதற்கு பதிலாக "எதிரியான போரிடுபவர்கள்" என்று முத்திரையிடப்பட்ட இக்கைதிகளை விசாரணை செய்வதற்காக, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்பு இராணுவ விசாரணைக் குழுக்களை நியமிக்க புஷ் உத்தரவு இட்டார். "எதிரிப் போராளிகள்" என்ற புதிய வகையை கண்டுபிடித்ததும், இராணுவ விசாரணை குழுக்களை நிறுவியதும் ஜெனீவா மரபுகள் மற்றும் அமெரிக்க சட்டத்தின் முறையான நெறிமுறைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் போராளிகளுகளுக்கு இல்லாமற் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதாகும்.

ஹம்டான் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் குவாண்டநாமோவில் உள்ள இன்னும் ஐந்து பேர்மீதும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன; அரசாங்கம் இன்னும் 70 கைதிகள் மீது போர்க்குற்ற விசாரைணகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லாடனுக்கு காரோட்டியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருந்ததாக கூறப்படும் ஹம்டான் ஆயுட்கால சிறைத் தண்டனையை எதிர்கொள்ளக்கூடும்.

புஷ் நிர்வாகத்தின் இராணுவ விசாரணைக் குழுக்களின் விதிகள் முறையான சட்ட வகைகளுடன் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானதாகும். தனக்கு எதிராக அளிக்கப்படும் சாட்சியங்களை பார்க்கவோ கேட்கவோ ஹம்டானுக்கு உரிமை இல்லை; தேவையானால் விசாரணையில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்கப்படவும் கூடும். விசாரணைக் குழுவின் நடைமுறை விதிகளுக்கு எதிராக பெருங்குரல்கொண்ட ஆட்சேபனைகள் லெப்டினென்ட் கமாண்டர் சார்லஸ் ஸ்விப்ட் என்னும் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டவை ஆகும்; இவர் ஹம்டான் சார்பில் வாதாட நியமிக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்தின் குற்றவியல் வழக்கறிஞர்கள்கூட தங்களுடைய மேலதிகாரிகளுக்கு விதி நடைமுறைகள் நியாயமற்றவை என்ற புகார்களை மின்னஞ்சல் மூலம் கொடுத்துள்ளனர். (ஷிமீமீ "விவீறீவீtணீக்ஷீஹ் நீஷீனீனீவீssவீஷீஸீs ஜீக்ஷீஷீsமீநீutஷீக்ஷீs நீலீணீக்ஷீரீமீ: tக்ஷீவீணீறீs க்ஷீவீரீரீமீபீ ணீரீணீவீஸீst நிuணீஸீtஊஸீணீனீஷீ பீமீtணீவீஸீமீமீs").

ஹம்டான் v. ரம்ஸ்பெல்ட் வழக்கில், மிகப் பரந்த முறையில் கூறப்பட்டுள்ள 73 பக்க தீர்ப்பில் பெரும்பான்மையுடைய கருத்து, புஷ், குடியரசுக் கட்சியினருக்கு தொடர்புடைய ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற பெரும்பான்மையால் 2000 தேர்தல் திருடப்பட்டதன் பின்னணிக்கு மீண்டும் சென்றால், புஷ் நிர்வாகத்தின் அதிகாரக் கைப்பற்றல்களுக்கு வலுவான எதிர்ப்பாளராக இருந்த மற்றும் உயர்நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினராக உள்ள இணை நீதிபதி ஜோன் போல் ஸ்டீவன்சினால் எழுதப்பட்டுள்ளது. டேவிட் செளடர், ரூட் பேடர் கின்ஸ்பர் மற்றும் ஸ்டீபன் ப்ரேயெர் ஆகிய சக தாராண்மைவாதிகளும் இவருடன் ஒத்த கருத்துடையவர்கள் ஆவர். முக்கியமான ஐந்தாம் வாக்கு இந்தத் தொடரில் ஓய்வு பெற்றுவிட்ட சாண்ட்ரா டே ஓ கானருக்குப் பிறகு ஊசலாடும் நீதிபதியாக வெளிப்பட்ட ஆன்டனி எம். கென்னடியினால் அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை கருத்துக்களை ஏற்காத மூன்று இணை நீதிபதிகளும் தீவிர வலது சாரியினர் ஆவர்; இவர்கள் மாற்றுத் தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்; அவற்றில் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் கிட்டத்தட்ட சர்வாதிகாரப்போக்கு உடைய "போர்க்கால" அதிகாரங்கள் ஏற்கப்பட்டுள்ளன. புதிதாய் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதியான சாம்வெல் ஏ. அலிடோ ஜுனியர், அவரை போன்றே உணர்ச்சியற்ற, விதிமுறை வழுவாத் தீர்ப்பை எழுதியுள்ளபோது, அன்டோனின் ஸ்காலியா புஷ் நிர்வாகத்தை "எதிர்க்கும் அதிகாரம் அல்லது பெரும் தைரியத்தை" எங்கிருந்து பெறமுடியும் என்று வியப்புடன் உரக்கக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை தீர்ப்பிற்கு தன்னுடைய எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில், கிளாரன்ஸ் தோமஸ் தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பை அவை நாற்காலியில் இருந்தே படித்துக் கூறும் அசாதாரணமான முறையை மேற்கொண்டார். இந்த முடிவு "ஏற்கத் தக்கது அல்ல", "ஆபத்தானது" என்று கூறிய தோமஸ் "படைத் தளபதியின் போர்க்கால முடிவுகளை இன்று உதாசீனம் செய்யும் நீதிபதிகள், "ஒரு புதிய மற்றும் ஆபத்தான எதிரியை ஜனாதிபதி எதிர்கொள்ளும் திறமைக்கு" தடை செய்கின்றனர்" என்றும் கூறியுள்ளார்.

மேல்முறையீட்டு மன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது ஹாம்டனுக்கு எதிராக புஷ் நிர்வாகத்திற்காக தீர்ப்புக் கொடுத்திருந்த, தலைமை நீதிபதியான ஜோன் ஜி. ரோபர்ட்ஸ் ஜூனியர், உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் பங்கு பெறுவதற்கு உரிமையற்று இருந்தார்.

கென்னடியும், பிரெயரும் தனியான ஒத்துப்போகும் தீர்ப்புக்களை வழங்கியிருந்தனர்; இந்த ஆறு கருத்துக்களும் ஜனநாயக உரிமைகள் மற்றும் உரிய சட்ட வகை என்னும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் ஆழ்ந்த, கிட்டத்தட்ட வன்முறையை கொண்டுள்ள பிளவுகள் ஏற்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகின்றன. அநேகமாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளக்கூடிய நிலையில் கூட இல்லாத நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கள்தான் இந்த கருத்துக்கள் என்றும், வாஷிங்டன் டி.சி.யில் அவர்கள் உறவாடும் சக்திவாய்ந்த உயரடுக்கினரின் மாறுபட்ட கருத்துக்களை பற்றித் தீவிரமாக அறிந்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

ஆனால் செய்தி ஊடகத்தில் சிலசமயம் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது போல், இந்த வழக்கு ஒன்றும் குவாண்டநாமோ குடா காவல் முகாம் பற்றியோ உலகில் எங்கு வேண்டுமானாலும் இருக்கும் மக்களை சிறைபிடித்துக் காலவரையின்றி அடைத்து வைக்காலம் என்று இருக்கும் புஷ் நிர்வாகத்தின் கொள்கையுடைய சட்டநெறி பற்றியோ அல்ல. அந்தப் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன.

ஹாம்டன்மீது போர்க்குற்ற சாட்டுக்கள் எழுப்ப ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றால், அந்த விசாரணை குறைந்த பட்சம் United States Uniform Code of Military Justice (UCMJ), இராணுவ நீதித்துறையின் சீரான சட்டத்தொகுப்பிற்குட்பட்ட இராணுவநீதி மன்றத்தின் செயற்பாடுகளுக்கு இணங்கவாவது இருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், தனக்கு எதிராகப் போடப்பட்டுள்ள சதி வழக்கு போல் இருக்கக்கூடாது என்றும், இது சர்வதேச சட்டத்தின்படி உண்மையில் போர்க்குற்றம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் வாதிட்டிருந்தார்.

ஹம்டான் கோரியவை பற்றிய தகுதிகள் பற்றித் தீர்ப்பளிக்கத் தலைமை நீதிமன்றம் அதிகாரவரம்பு கொண்டிருக்கவில்லை என்ற புஷ் நிர்வாகத்தின் வாதங்களை தன்னுடைய பெரும்பான்மைக் கருத்தில் ஸ்டீவன்ஸ் ஏற்கவில்லை. Detainee Treatment Act (DTA) காவலில் அடைக்கப்பட்டவர்களை நடத்தும் சட்டம் என்பது சட்டமன்றத்தான் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்ற வாதத்தை அவர் உதறித்தள்ளினார். இதன் பின்னர் ஹம்டான் வழக்கில் இராணுவக் குழு இறுதி தீர்ப்பு கொடுக்கும் வரையிலாவது பரிசீலனை செய்வதை நீதிமன்றம் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கூற்றையும் நிராகரித்தார்.

"சட்டத்தின் அடிப்படை எதையும் கொள்ளாமல், இராணுவ நீதிமன்றங்களுக்காக காங்கிரசால் வகுத்தமைக்கப்பட்டுள்ள பல நடைமுறைவிதிகளையும் பொருட்படுத்தாமல் உள்ளது என்ற வாதத்திற்குரிய இராணுவ குழுவினால் தான் விசாரிக்கப்படலாமா என்பதை ஹம்டான் முன்கூட்டியே தெரிந்து கொள்ளவேண்டும்; அவ்விதிகள்தான் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புக் கொடுக்கும் மற்றும் எவ்வித தண்டனைக்கும் நம்பிக்கையை உத்திரவாதப்படுத்தும்" என்று ஸ்டீவன்ஸ் எழுதியுள்ளார்.

வழக்கின் தன்மைகள் பற்றிக் கூறுகையில், புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலுக்கான காரணங்களின் அடிப்படையில் இருப்பது "இராணுவத் தலைமை தளபதி" என்னும் முறையில் எவ்வித சட்டமன்ற அல்லது நீதிமன்றத் தடுப்பிற்கும் அவர் உட்பட்டவரல்லர் என்ற கருத்து உள்ளது என்று ஸ்டீவன் தொடங்கினார். சட்டமன்றம் "போர் அறிவித்தல்", "நிலங்கள், நீர் ஆகியவற்றை கைப்பற்றுவது பற்றி விதிகள் அமைத்தல்" மற்றும் "நாடுகளுக்கு எதிரான குற்றங்களை வரையறுத்து தண்டனை கொடுத்தல்", "நாட்டின் தரைப்படை, கடற்படை பற்றிய கட்டுப்பாட்டை அரசாங்கம் எவ்வாறு கொள்ளவேண்டும்" என்று சட்ட மன்றம் கொண்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் ஜனாதிபதியின் பங்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சி சட்ட மன்றம் சுமத்தியுள்ள விதிகள் UCMJ உடைய உரிய வழிவகை தேவைகளாகும் என்று ஸ்டீவன்ஸ் விளக்கினார். புஷ் நிர்வாகம் பரந்த அளவில் நம்பியிருந்த இந்நிலைப்பாட்டை ஸ்டீவன்ஸ் நிராகரித்தார்; உதாரணமாக அண்மையில் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் ஒற்றுக் கேட்டல் திட்டத்தை அது ஆதரித்திருந்தது; செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் சட்டமன்றம் இராணுவ சக்தியை பயன்படுத்திக் கொள்ள ஒப்பதல் கொடுத்த நிலை நிர்வாகத்தை UCMJ போன்ற விதிகளின் தடுப்பில் இருந்து புஷ்ஷை விடுவித்துள்ளது என்பது நிராகரிக்கப்பட்டது.

இராணுவ விசாரணைக்குழுக்களுக்கு அரசியலமைப்பு தளம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டீவன்ஸ், ஒரு போர்க்களத்தின் அருகே ஹம்டன் பிடிபட்டார் என்பதால் புஷ் நிர்வாகம் அதன் தேவை உண்டு என்பதற்காக இவ்வாறு வாதிடுகிறது என்ற அபத்தங்களை சுட்டிக்காட்டினார். "ஓசாமா பின் லாடனுடனும் மற்றவர்களுடனோ சேர்ந்து போர்க்குற்றங்கள் செய்ய இருந்தார் என்பதோ, செப்டம்பர் 11, 2001க்கு பின்னர் தனிஒரு வெளிப்படையான நடவடிக்கை போர்க்களத்தில் நடந்தது என்பதோ போதுமானவை அல்ல."

"ஹம்டான் வெளிப்படையாக செய்தார் என்று கூறப்படும் எந்தச் செயல்களும் போர்விதியை மீறவில்லை" என்பதுதான் உண்மை என்று ஸ்டீவன்ஸ் சேர்த்துக்கூறினார். சதிபற்றிய போர்க்குற்றம் தொடர்பாக அவர் கூறியது: "போர் பற்றிய பெரும் ஒப்பந்தச் சட்டங்களான ஜெனீவா மரபுகளிலோ அல்லது ஹேக் மரபுகளிலோ இவ்வாறு இருப்தாகத் தெரியவில்லை."

"குறைந்த பட்சம், போர்க்குற்ற விதிக்கு எதிராகவாவது குற்றம் சாட்டப்பட்டவர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அரசாங்கம் கணிசமாக நம்பத் தகுந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் இராணுவ விசாரணை ஏற்கப்படமுடியும். அப்படிப்பட்ட வகையில் திருப்திகரமாக இங்கு நிரூபணம் ஆகவில்லை." என்று ஸ்டீவன்ஸ் முடிவுரையாகக்கூறினார். உதாரணத்திற்கு அவர் மேற்கோளிட்டதாவது: "குற்றம் சாட்டும் வழக்கறிஞருடைய எதிர்ப்புக்களையும் மீறி நியூரம்பெர்க்கில் இருந்த சர்வதேச இராணுவ விசாரணைக்குழு போர்விதிச் சதித்திட்ட மீறலைக் கொண்டு போர்க்குற்றங்கள் என ஏற்க தெளிவாக மறுத்து ஹிட்லரின் மிக மூத்த சக ஊழியர்களைத்தான் ஆக்கிரமிப்புப் போருக்குச் சதி செய்தவர்கள் என்று கூறியுள்ளது."

இறுதியாக, தீர்ப்பின் தொலைநோக்குடைய பகுதியாக ஸ்டீவன்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தார்; அதில் அமெரிக்க நீதிமன்றங்களில் ஜெனீவா மரபுகள் பாதுகாப்பு வேண்டும் என்று ஹம்டான் கூறியது மறுக்கப்பட்டிருந்தது. (ஷிமீமீ: "ஹிஷி நீஷீuக்ஷீt uஜீலீஷீறீபீs னீவீறீவீtணீக்ஷீஹ் tக்ஷீவீணீறீs யீஷீக்ஷீ நிuணீஸீtஊஸீணீனீஷீ ஜீக்ஷீவீsஷீஸீமீக்ஷீs").

"எதிரிப் போராளிகள்" சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் குற்றவியல் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடையாது என்று புஷ் நிர்வாகத்தை சுற்றி நிற்கும் வாதத்தை உடைக்கும் வகையில், ஸ்டீவன்ஸ், மக்களை குற்றவியல் முறையில் பாதுகாப்பில் இருந்து அகற்றுதல், இராணுவ நீதிக்கு அவர்களை உட்படுத்துதல் என்ற அரசாங்கத்தின் முடிவிற்கு பொருள், போர்ச் சட்டங்கள் முழுமையாக ஏற்கப்படவேண்டும் என்பது போலாகும் என்றார்.

ஆப்கானிஸ்தானிற்காக என்றில்லாவிடினும் அல் கொய்தாவிற்காக அவர் போரிட்டார் எனவே அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு சக்தியுடனை இணைந்தவர் அல்ல என்று புஷ் நிர்வாகம் வாதிட்டிருந்தது; இதற்கு ஜெனீவா மரபுகளின் இரண்டாம் விதியின் படி ஹம்டான் "போர்க் கைதி" என்ற தகுதி பெற்றாலும் பெறாவிட்டாலும், மூன்றாம் விதியில் உள்ள பாதுகாப்புக்களுக்கு அவருக்கு உரிமை உண்டு என்று ஸ்டீவன்ஸ் முடிவாகக் கூறினார்; மூன்றாம் விதியின்படி கையெழுத்திடும் நாட்டின் "நிலப்பரப்பிற்குள்" பிடிக்கப்படும் கைதிகள் பற்றிக் கூறுகிறது; இதில் ஆப்கானிஸ்தானும் அடங்கும். குறிப்பாக விதி 3 : "நாகரிகமுடைய மக்கள் எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாதவை என்று ஏற்றுக்கொள்ளும் அனைத்து நீதிமன்ற உத்தரவாதங்களை கொண்டு நிறுவப்பட்ட முறையான நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் இல்லாமல் தண்டனைகள் வழங்குதலோ, மரணதண்டனை நிறைவேற்றுவதோ" தடை செய்யப்படுகிறது என்று கூறுகிறது.

ஸ்டீவன்ஸ் குறிப்பிட்டுள்ளவாறு, "ஜனாதிபதி ஹம்டான் மீது விசாரணை நடத்துவதற்கு கூட்டியுள்ள விசாரணைக் குழு இந்தத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை".

Top of page