World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democratic operatives aim to bar SEP from Illinois ballot

Who are Jim Rogal and Liz Brown?

ஜனநாயகக் கட்சிச் செயலர்கள் இல்லிநோய் வாக்குச் சீட்டுப் பதிவில் SEP ஐ தடை செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளனர்

யார் இந்த ஜிம் ரோகலும் லிஸ் பிரெளனும்?

By Jerome White
30 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

இல்லியோயின் ஜனநாயகக் கட்சி அலுவலர்கள், மாநிலத்தின் இரு சக்தி வாய்ந்த அரசியல் வாதிகள் இயந்திரங்களுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள், சோசலிச சமத்துவக் கட்சியால் கொடுக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை பிரதி எடுத்து, பரிசீலித்து வருகின்றனர்; இதன் நோக்கம் SEP வேட்பாளரான ஜோ பர்னாரெளஸ்கிசை வாக்குச் சீட்டில் இடம்பெறுவதிலிருந்து தடை செய்யும் நோக்கத்துடன் சவால் விடுதல் என்பதாகும். மாநில செனட்டிற்காக 52வது சட்ட மன்ற தொகுதியில் வேட்பாளராவதற்காக வாக்குச் சீட்டுப் பதிவில் ஈடுபட்டுள்ள பர்னாரெளஸ்கிஸ் ஜூன் 26ம் தேதியன்று 4,991 வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மனுவைக் கொடுத்துள்ளார்; இத்தொகுதியில் இரட்டை நகரங்களான சாம்பெயன்-அர்பனாவும் உள்ளன.

2004ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி, SEP வேட்பாளராக மாநிலச் சட்ட மன்றத்திற்கு நிறுத்தப்பட்டிருந்த ரொம் மக்காமனுடைய மனுக்களில் பாதிக்கும் மேலான கையெழுத்துக்கள் செல்லாதவை என்று எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலைப்பாடு ஒரு மாத கால சட்ட, அரசியல் போராட்டத்திற்கு பின்னர் பொய் என்று நிரூபணம் ஆயிற்று; அப்பொழுது ஜனநாயகக் கட்சியினரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட கையெழுத்துக்களில் பெரும்பாலானவை சட்டபூர்வமான வாக்காளர்களுடையதுதான் என்பது தெளிவாயிற்று; SEP பிரச்சாரத்தை குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடனும் கட்சி மிக அதிகமான சட்டவகை செலவுகளை செய்ய கட்டாயப்படுத்த வேண்டும் என்பதுதான் அம்முயற்சியின் நோக்கம் என்பதும் தெளிவாயிற்று.

இரு பெரிய கட்சிகளின் போரையும், வணிகச் சார்பையும் எதிர்க்கும் ஒரு சோசலிச வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு மீண்டும் மறுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகக் கட்சியினர் இத்தகைய கறைபடிந்த தந்திர உத்திகளை பயன்படுத்துவதற்கு தயாரிக்கின்றனர் என்பது தெளிவாகி வருகிறது. புஷ் நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக ஜனநாயகக் கட்சியினர் ஒத்துழைத்து வருகையில், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு குரல் கொடுக்கும், இருகட்சி முறையின் ஏகபோகம், அதை காக்கும் முதலாளித்துவ முறைக்கு சவால் விடும் ஒரு அரசியல் கட்சி எழுச்சி பெற்று வருவதை தடுப்பதற்கு எதையும் இவர்கள் செய்வர் என்பது புலனாகின்றது.

SEP தன்னுடைய மனுக்களை சமர்ப்பித்த 24 மணி நேரத்திற்குள் இல்லிநோயிலுள்ள ஸ்பிரிங்பீல்டை சேர்ந்த ஜிம் ரோகல் மாநிலத் தேர்தல் குழுவின் வலைத் தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பக்கங்களை பிரதி எடுத்தார். அதற்கு மறுநாள், ஜூன் 28 அன்று காலை 8:54 க்கு ஸ்பிரிங்பீல்டைச் சேர்ந்த லிஸ் பிரெளனும் மனுக்களை பிரதி எடுத்துக் கொண்டார். ஜூன் 28, 9:56 அளவில் ரோகல் மீண்டும் SEP மனுக்களை பார்ப்பதற்கு தேர்தல் குழு அலுவலகத்திற்கு வந்தார். ரோகலும் பிரெளனும் இல்லிநோயில் இருந்து பசுமைக் கட்சி வேட்பாளர்கள் சமர்ப்பித்திருந்த மனுக்களை பரிசீலனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டனர்.

இல்லிநோய் மாநில அரசாங்க ஊழியர்கள் பற்றிய தொகுப்பேடான http://illinois.gov/teledirectory/ யில் இருவரையும் பற்றித் தகவல்கள் ஆராய்ந்ததில், மாநில செனட் மன்றத்தின் "அலுவலர்களின் துணைத் தலைவர்" என்று ரோகல் குறிக்கப்பட்டுள்ளார்; எலிசபத் ப்ரெளன் இல்லிநோயின் பிரதிநிதிகள் சபையின் "மன்ற ஜனநாயகக் கட்சி அலுவலர்" என்று குறிக்கப்பட்டுள்ளார். இல்லிநோய் ஜனநாயகக் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல் வாதிகளுள் ஒருவரும், செனட் மன்றத் தலைவரும் சிகாகோவை தளமாகக் கொண்டவருமான எமில் ஜோன்சிடம் ரோகல் வேலை பார்க்கிறார். அமெரிக்க செனட்டர் பாராக் ஒபாமாவின் "அரசியல் ஆசைத் தந்தை" என்று நன்கு அறியப்பட்டுள்ள இவரைப் பற்றி ஏப்ரல் 2005ல் வந்த கட்டுரையில் Ebony என்னும் ஏடு "கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜோன்ஸ் அரசியல் உத்திகளில் கரை கண்டவராக விளங்கி அவருடைய தற்போதைய பதவியில் உறுதியாக இருக்கிறார். அவருடைய நடத்தை விதியாக கொள்ளப்படும் பொன்மொழி : "உங்கள் எதிரியைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்; நேர்த்தியான முறையில் தயாராக இருங்கள்" என்பதாகும்.

இல்லிநோய் அரசியலில் "நான்கு உயரிடத்தினரில்" மற்றொருவரான பிரதிநிதிகள் சபைத் தலைவர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மைக்கேல் மாடிகனிடம், லிஸ் பிரெளன் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். உயரிட மற்ற மூவரில் ஜோன்சும், மாநில செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றத்தின் தலைவர்கள் இருவரும் அடங்குவர். சிகாகோவை தளமாகக் கொண்ட ஜனநாயகக் கட்சியாளரான மாடிகன் 2004ம் ஆண்டுத் தேர்தலில் இல்லிநோய் வாக்குச் சீட்டில் இருந்து சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரான ரால்ப் நாடரைத் தள்ளி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்; லிஸ் பிரெளன் உட்பட அவருடைய அலுவலர்கள் சாம்பெயன்-அர்பனாவில் SEP வேட்பாளர் டாம் மக்காமனை வாக்குச்சீட்டில் பதிவு செய்யமுடியாத முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

நாடெர் மற்றும் SEP க்கு எதிரான முயற்சிகளில், பிரெளன் உட்பட அரசாங்கத்தில் ஊதியம் பெறும் ஊழியர்கள் மனுக்களுக்கு சவால்விடுவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தனர். இவை மாநிலத் தேர்தல் நெறிகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழியர்கள் நன்னடத்தை முறை ஆகியவற்றை மீறிய செயலாகும். அது கூறுவதாவது: "அரசாங்க ஊழியர்கள் ஊதியம் வாங்கும் நேரத்தில் தடுக்கப்பட்டுள்ள எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் விருப்பத்துடன் ஈடுபடக்கூடாது." "தடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை" என்பதில், "தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் ஒருவருக்காக எந்தப் பிரச்சினையை ஒட்டியும் வரக்கூடிய வாக்கெடுப்பை பொறுத்த வரையில் மனுக்களை சுற்றறிக்கைக்கு விடுதல், பரிசீலித்தல், தாக்கல் செய்தல்" ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அரசு ஊழியர்கள் பணிநேரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மாடிகன் நிராகரித்துவிட்டார்; மாநிலத் தலைமை வழக்கறிஞரான அவருடைய மகள் லிசா மாடிகன் இந்த விஷயத்தை ஆராய மறுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட தடைகளை சுற்றி மீறும் வெளிப்படையான வகையில் இம்முறை, ஜனநாயகக் கட்சி அலுவலர்கள் அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில் "விடுப்பு" அளிக்கப்படுகின்றனர்; ஜனநாயகக் கட்சி போன்ற, பல "அரசியல் செயல் குழுக்களின் கீழ்" தற்காலிக வேலை பெறுகின்றனர்; இதனால் அவர்கள் தங்கள் அரசியல் முதலாளிகளின் கறை படிந்த வேலையை செய்யும் அதேவேளை, ஊதியத்தை தொடர்ந்து பெற முடிகிறது. ஸ்பிரெங்பீல்ட் அரசியலைப் பற்றி தகவல் சேகரிக்கும் நிருபர் ஒருவர் (அடையாளம் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளவர்) கூறியதாவது: "குறைந்தது 2000த்தில் இருந்தே பிரெளன் மாடிகன் கீழ் வேலைபார்த்து வருகிறார். இவர்கள் அனைவருமே விடுப்பில் சென்று இதே சம்பளத்தை பிரச்சார அமைப்பில் இருந்து பெறுகின்றனர். அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள், மிகச் சரியான முறையில் கூறவேண்டும் என்றால் அரசிற்காக உழைக்கவில்லை."

இந்த நிருபர் இல்லிநோயின் செனட் தலைவர் எமில் ஜோன்சின் அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த வரவேற்பாளர் உண்மையில் ரோகல் அங்கு அலுவல் செய்கிறார் என்பதைத்தான் உறுதிபடுத்தினார். SEP மனுக்கள் பரிசீலனையின் அவருடைய பங்கு பற்றி ரோகலுடன் நான் பேச விரும்புகிறேன் என்று விளக்கியபோது என்னை சற்று பொறுத்திருக்கச் சொன்னார். இதன் பின் வரவேற்பாளர் தான் "ஒரு தவறு செய்துவிட்டதாகவும்" ரோகல் அங்கு வேலை செய்யவில்லை என்றும் கூறினார். ஒரு செய்தித் தொடர்பாளரிடம் என்னை அனுப்பினார்; அவர் ஜோன்ஸிடம் வேலைபார்ப்பவர்களில் ஒருவராக ரோகல் மூன்று ஆண்டுகளாக இல்லை என்றும் அத்தகைய நடவடிக்கைகளில் மாநில ஊழியர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் மாநில ஊழியர் நன்னடத்தை சட்டம் இருப்பது பற்றி எனக்குத் தெரியாதா என்றும் வினவினார்.

"ஜிம் ரோகல்" பற்றி கூகிள் தேடுதல் நடத்தப்பட்டது, ஜோன்ஸ் கடந்த ஆண்டு அங்கு வேலைபார்த்திருந்தார் என்ற தகவலைக் கொடுக்கிறது. மாநில செனட் கூட்டம் 2005 ஜூலை 3ல் நடைபெற்றபொது, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோர்ஜ் சாடிட் தன்னுடைய மாநிலத்தில் இருந்து வந்த புகழ் பெற்ற கல்லூரிக் கால்பந்து விளையாட்டு வீரர் "பூமர் கிரிக்ஸ்பி" பற்றி பேசுகிறார். இந்த வீரரின் குடும்பத்தை செனட் தலைவர் ஜோன்சிற்கு அறிமுகப்படுத்துகையில் சாடிட் கூறுகிறார், "பூமருடன் சேருபவர்கள் இன்று அவருடைய சகோதரியும் அவருடைய கணவருமான ஜிம், மற்றும் ஜென்னி கிறிஸ்பி ரோகலும் ஆவர். உங்களுக்கு ஜிம் ரோகலைத் தெரியும், தலைவர் அவர்களே, உங்களுடைய அலுவலராக அவர் வேலை பார்க்கிறார்."

இந்த நிருபரிடம், ரோகல் தான் ஜோன்சின் அலுவலராக இல்லை என்றும் இல்லிநோய் ஜனநாயக செனட் நிதியத்தில் "பல ஆண்டுகளாக" வேலைபார்ப்பதாகவும் கூறினார். இந்த நிதியம் இல்லிநோய் ஜனநாயகவாதிகளால் மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி கொடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அரசியல் செயற்பாட்டுக் குழு ஆகும். (Centre for Public Integrity) பொதுவாழ்வில் நேர்மை மையம் என்ற அமைப்பின்படி ரோகலுக்கு இல்லிநோய் ஜனநாயகக் கட்சி செனட் 2003-04 தேர்தலில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது; இக்காலக்கட்டத்தில் அது $4,243,741 தொகையை சட்ட அலுவலகங்கள், தொழிற்சங்கங்கள், மின் விசை பகிர்வு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், காசினோ சூதாட்ட இடங்கள் மற்றும் உணவு, புகையிலை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து திரட்டியிருந்தது.

ஜனநாயகக் கட்சியில் நிழல் போன்ற வலையில் ரோகலுடைய சரியான தகுதி என்ன என்பதை அறிவது கடினமாகும். ஆயினும்கூட ரோகலும் பிரெளனும் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி அரசியலை எதிர்க்கும் எந்த அரசியல் சவாலையும் தடுப்பதை வேலையாக கொண்டுள்ளனர் என்பது தெளிவு. SEP, பசுமைக் கட்சியினரை தவிர முன்னாள் ஜனநாயகக் கட்சியாளரான பில் ஷூரைர் என்பவரையும் இலக்கு கொண்டுள்ளனர்; இவர் இல்லிநோயின் 8வது சட்ட மன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இப்பொழுது உறுப்பினராக இருக்கும் மெலிச்சா பீனை எதிர்த்து, போரை எதிர்க்கும் சுயேச்சையான வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மே மாதத்தில் AR Consulting என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்டனி கான்ஸ்டன்டைன் என்பவர் ஷூரருக்கு கையெழுத்துச் சேகரிக்கும் பணிகளுக்கு தான் உதவுவதாக முன்வந்தார். ஜனநாயகக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் டான் லிபின்ஸ்கியின் சிகாகோ அலுவலகத்தில் கான்ஸ்டன்டைன் வேலை பார்ப்பதாக பின்னர் தெரியவந்தது. ஜூலை 3ம் தேதி மனு அளித்தலுக்கான காலகெடு என்று நிர்ணியக்கப்பட்டுள்ள நேரத்தில் தான் சேகரிப்பதாக கான்ஸ்டன்டைன் கூறிய ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் சேகரிக்கப்படவே இல்லை. தான் ஷூரரைச் சந்தித்ததே இல்லை என்று கான்ஸ்டன்டைன் மறுத்துவிட்டார்.

2004ம் ஆண்டு SEP வேட்பாளர் ரொம் மக்காமனை வாக்குச்சீட்டுப் பதிவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஜனநாயகவாதிகளின் பிரச்சாரம் அதன் அரசியல் எதிரிகளுக்கு எதிராக நிகழ்த்தும் செயல்களின் முன்மாதிரியாக உள்ளது. SEP "போலி கையெழுத்து மனுக்களை" தயாரித்தது என்று பொய்க்குற்றச்சாட்டான அவதூறை மாடிகனின் அலுவலகம் கூறியது. உண்மையில் எந்த ஆதாரத்தையும் அவர்களுடைய எதிர்ப்புக்கள் கொண்டிருக்கவில்லை; தீய கருத்துடன் கூறப்பட்டவையாகும். சாம்பெயின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள மார்க் ஷெல்டனுடைய கருத்துக்கள் இதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; ஜனநாயகக் கட்சியினால் சவாலுக்குட்பட்ட கையெழுத்துக்களை பரிசீலனை செய்யும் அலுவலகத்தில் அவர் இருந்தார்.

Ilinipundit.com. web site, என்ற கட்டுரைத் தளத்தில் எழுதிய ஷெல்டன் ஜூன் 28ல் குறிப்பிட்டதாவது: "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மக்காமன் வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருந்தது என்றால், அந்த எதிர்ப்பு என்பது முற்றிலும் உளைச்சலை கொடுக்கக் கூடிய சவால்தான் என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஜனநாயகக் கட்சித் தலைவர் கெரி பர் எதிர்த்த கையெழுத்துக்களில் பலவும் உண்மையில் ஒதுக்கி எறியப்பட்டன. இதைப் பரிசீலனை செய்த எங்களுக்கு உரிய சட்ட விதி இருந்திருந்தால் மக்கமனுக்கு வழக்கறிஞர் கட்டணம் வழங்குமாறு உத்தரவிட்டிருப்போம்."

சிகாகோவிலும் மற்ற நகரங்களிலும் செயலர்கள் பல மாதமாக மைக்கேல் மாடிகன் 2006 தேர்தல்களில் மூன்றாம் கட்சி கையெழுத்து மனுக்களை எவ்வாறு சவாலுக்கு உட்படுத்துவது என்பது பற்றி "ஒரு சிறிய பிரச்சாரப் படைக்குப் பயிற்சி" கொடுத்து வருவதாக தகவல் கொடுத்துள்ளனர். இல்லிநோய் மாநிலம் ஏன்கனவே நாட்டில் இருக்கும் வாக்குச் சீட்டுப்பதிவில் மோசமான நிலையை கொண்டுள்ளது; அமெரிக்காவிலையே கடுமையான வகையில் கையெழுத்து சேகரித்தல், காலக் கெடு ஆகியவை இங்கு உள்ளன. இந்த ஜனநாயக விரோத தடைகளை கடந்த பின்னரும், எதிர்க்கும் வேட்பாளர்கள் இரு கட்சிகள் சதியினால் வாக்குச் சீட்டுப் பதவில் இருந்து தங்களை அகற்றும் முயற்சிகளை எதிர்கொள்ளுகின்றனர்.

இல்லிநோய் மாநில அரசியலமைப்பின்படி, "அனைத்து தேர்தல்களும் சுதந்திரமாக, சமத்துவ முறையில் நடத்தப்பட வேண்டும்" என்று உள்ளது. இல்லிநோய் ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புக்களை தாக்கல் செய்வது இல்லிநோய் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுகின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்; அவ்விதிகள், "அமெரிக்க அல்லது இல்லிநோய் மாநிலத்தில் தேர்தல்கள், வாக்களித்தல், வேட்பு மனுத் தாக்கல் செய்தல் என்று பொது அரசியல் கட்சிப் பதிவுகளுக்கு எவரேனும் "ஏமாற்றுத்தனம், பொய்க்கையழுத்து, இலஞ்சம்" கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பிறருடைய உரிமைகளை தடுக்க முற்படுவது தடுக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளன. இது, மேலும் கூட்டாட்சி வாக்களிக்கும் உரிமைச் சட்டங்களை மீறுவதாகவும் இது அமையும்; ஏனெனில் "மாநிலச் சட்டம் என்ற பெயரில்" அரசியலமைப்புக்கள் விதியை மீறக்கூடாது என்று இருப்பதையும் மீறுவதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் தன்னுடைய வாசகர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்க நினைப்பவர் அனைவரையும் இந்த ஜனநாயக மீறலை எதிர்க்கவும் இல்லிநோய் மாநிலத் தேர்தல் குழுவிற்கு எதிர்ப்பு மின்னஞ்சல்களை அனுப்புமாறும் அழைப்பு விடுகிறது; முகவரி webmaster@elections.state.il.us.

அக்கடிதங்களின் நகல்களை தயவு செய்து WSWS க்கு அனுப்பவும்.

Top of page