WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
47,600 GM and Delphi workers accept buyouts and early
retirement
A vote of no confidence in the United Auto Workers
union
47,600 ஜெனரல்
மோட்டர்ஸ்
மற்றும் டெல்பி தொழிலாளர்கள் உரிமையாளர் மாற்றத்தையும்
காலத்திற்கு முந்திய பதவி ஓய்வையும் ஏற்கின்றனர்
யுனைட்டெட் ஓட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையில்லா
வாக்கெடுப்பு
By Andre Damon and Barry Grey
29 June 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
அமெரிக்க கார்த்தொழிலின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பெருநிறுவன எண்ணிக்கை
குறைப்பு என்ற வகையில் வெளியேறுதலையும் விரைவில் ஓய்வு பெறுதல் என்பதையும் திங்களன்று 47,600
GM மற்றும்
டெல்பித் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டதாக ஜெனரல் மோட்டர்ஸ் அறிவித்துள்ளது.
பணிநீக்கத்திற்குரிய விதிகளை ஏற்றுக் கொண்டு வெளியேறும் தொழிலாளர்களின்
எண்ணிக்கையானது, 30,000 தொழிலாளர்களை தொடர்ச்சியாக பதவிவிலகச்செய்யும் இலக்கை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த
அதிகூடிய ஆரம்ப மதிப்பீடுகளையும் தாண்டி, GM
திட்டமிட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அடையப்பட்டுவிட்டன. இந்த எண்ணிக்கைகள் பெரும் திகைப்பை ஏற்படுத்துவதோடு
UAW
தலைமையின் மீது மோட்டார் தொழிலாளர்கள் கொண்டுள்ள மதிப்பிழப்பின் தவிர்க்க முடியாத வெளிப்பாடும் ஆகும்;
மேலும் தொழிற்சங்கம் தங்கள் நலன்களைக் காக்க விருப்பமோ திறனோ கொண்டிருக்கவில்லை என்ற முற்றிலும் நியாயப்படுத்தப்பட்ட
முடிவையும் இவை வெளிப்படுத்துகின்றன.
இப்படி மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் வெளியேறுவது என்பது,
தொழிற்சங்கம் ஒரு சலுகைமிக்க மற்றும் உறுப்பினர்களுக்கு பொறுப்பு கூறாத ஊழல் நிறைந்த, அதிகாரத்துவத்தின்
கருவியாக மாறிவிட்டது என்ற உண்மைக்கு நிரூபணமாக உள்ளதுடன், இவ்வதிகாரத்துவம் அவர்களால் விரோதமிக்க
மற்றும் தமக்கு எதிரான சக்தியாக பார்க்கப்படுகிறது. எந்தவிதத்திலாவது
UAW ஓர்
உண்மையான தொழிலாளர்கள் அமைப்பு என்று இருக்குமேயானால், ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்
கீழ்மட்ட உறுப்பினர்கள் தங்களை அமைப்புடன் பிணைத்துக் கொண்டிருப்பார்களேயாயின், தங்களை வெளியேறுமாறு
கட்டாயப்படுத்தும் நிறுவனத்தின் அழுத்தத்தை தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்து, தொழிற்சங்கம்
தங்களுடைய நலன்களுக்கு போராடும் என்றும் எதிர்பார்த்திருப்பர். நடந்ததோ இதற்கு முற்றிலும்
எதிரிடையானதுதான்.
வெளியேறும்போது கிடைக்கும் நடப்பிலிருக்கும் சலுகைக்கும், சம்பள, சலுகைகள்
குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு ஆகியவற்றுடன் வேலையில் இருந்தால் சந்திக்கும் நிலை இவற்றிற்கும் இடையே
அகப்பட்டுக் கொண்ட தொழிலாளர்கள் (இதைத்தவிர பணிநீக்கம் என்னும் நிறைந்த அபாயமும் எப்பொழுதும்
இருந்துகொண்டிருக்கின்றது) GM
இன் தொழிலாளர் பிரிவின் மணித்தியால ரீதியில் வேலையில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள்,
UAW
ஏற்றுக்கொண்டு நிர்வாகம் அளித்த வெளியேறும் விதிமுறைகள் பொருளாதார கஷ்டங்கள் பாதுகாப்புத் தன்மை
ஆகியவற்றை தங்களுக்கு கொண்டுவரும் என்று இருந்தாலும்கூட, நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பினர்.
வெளியேற்ற சலுகை ஏற்ற தொழிலாளர்கள்,
GM இல் 35,000
பேர், கார் உதிரி பாகம் தயாரிக்கும் டெல்பி ஆலையில் உள்ள 12,600 பேர் ஆகியோர் தன்னுடைய முந்தைய
காட்டிக் கொடுப்புக்களையும்விட UAW, GM
உடன் அதிகமாக ஒத்துழைத்து, 70 ஆண்டுகளாக கார் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் போராடிப்
பெற்ற மிக அடிப்படை ஆதாயங்களை அழிக்கக்கூட தயாராக உள்ளது என்பதை உணர்ந்து வெளியேறுகின்றனர்;
GM இன் "சிறப்பு வகைத் திட்டம்"
என்பது உயர்மட்ட முதிர்நிலை தொழிலாளர்கள் சீக்கிரத்திலேயே ஓய்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது;
இதன்படி நிறுவனத்தில் 26 ஆண்டுகளுக்கு மேல் உழைத்தவர்கள் முழு சலுகைகளுடனும் ஓய்வு பெறலாம். ஆனால் இந்த
தொழிலாளர்கள் பல ஆண்டுகள் உழைத்து அதனால் வரும் வருமானம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, மிகக்
குறைந்த ஓய்வூதிய உதவித் தொகையில் வாழவேண்டும்.
சற்று குறைந்த அளவு முதிர்நிலையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் சேமித்துள்ள
ஓய்வூதியத் தொகையை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் முழு ஓய்வூதிய நலன்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
முழு ஓய்வூதிய நலன்களுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட
முதிர்நிலை ஊழியர்களை பொறுத்த வரையில் இச்சிறப்புத்திட்டம் அவர்கள் இப்பொழுதே ஓய்வு பெற விரும்பினால்
அற்ப தொகையான $35,000 ஊக்கத் தொகையை பெற வகைசெய்துள்ளது.
இத்திட்டம் மொத்த தொகை $70,000, $14,000 இவற்றிற்கு இடையே ஒன்றை
பெறலாம் என்றும் கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக
GM ல்
பணியாற்றியவர்கள் $140,000 பெற்று விலகலாம்; இதையொட்டி (சட்டரீதியான ஓய்வூதியத்தை தவிர) ஏனைய
சலுகைகள், திரும்பப்பெறப்படலாம். 10 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவத்தை கொண்ட தொழிலாளர்கள்
$70,000 தொகுப்புப் பணத்தை இதே திட்டத்தின்கீழ் பெறுவர்.
வெளியேறும் GM
தொழிலாளர்கள் 35,000
பேரில் குறைந்தது 30,400 பேர் சீக்கிரம் ஓய்வு பெறுகிறோம் என்ற
விருப்பத்தை எடுத்தனர்; 4,600 பேர் உரிமையாளர் மாற்றத்தை விரும்பினர். 33,800 தொழிலாளர்கள்
UAW
யினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர்; இன்னும் 1,200 தொழிலாளர்கள்
International Union of Electrial Workers
ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர். டெல்பியும் இத்தகைய வெளியேறுதல்-இழப்பீட்டுத் திட்டத்தை
முன்வைத்தது; இதன்படி 33,000 தொழிற்சங்கத்தில் உள்ள மணித்தியால ரீதியாக வேலைசெய்யும்
தொழிலாளர்களில் 12,600 பேர் வெளியேறும் சலுகைகளுக்கு உடன்பட்டுள்ளனர்.
தன்னுடைய 113,000 தொழிலாளர்களில் இருந்து, 2008 இற்குள் அமெரிக்காவில்
மணித்தியால ரீதியாக வேலைபார்க்கும் தொழிலாளர்களில், 30,000 தொழிலாளர்களை குறைக்கும் வகையில்
GM
திட்டமிட்டிருந்தது. ஆனால் அலையென வெளியேறும் தொழிலாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தன்னுடைய
சிறப்புத் திட்டத்தின் இலக்கை அடைய வைத்துவிடும். தற்போதைய வேலைகுறைப்பு கடந்த ஆண்டு 6,500
தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை வெட்டிற்கு பின்னர் வருவதாகும்.
எதிர்பார்த்ததையும் விடக் கூடுதலான தொழிலாளர்கள் வெளியேறினாலும், குறுகிய
காலத்தில் மூடப்படுவதாக இருந்த ஆலைகளின் எண்ணிக்கையை அது உயர்த்துவதாக இல்லை என்று
GM கூறிவிட்டது.
இதன் விளைவாக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டு, தன்னுடைய தொழிலாளர்களை சுழற்சி
முறையில் வேலைவாங்கும்போது பெரும் குழப்பம் ஏற்படும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர். 2008 இற்குள்
12 ஆலைகளையும், பொறியியல் மையங்களையும் மூட GM
உத்தேசித்துள்ளது.
சீக்கிரமான ஓய்வு, மற்றும் வெளியேறும் சலுகைகள் திட்டத்தினால்
GM நிறுனத்திற்கு
கிட்டத்தட்ட $3.8 பில்லியன் தொகையாகவும் மற்றும் சலுகைகளில் மாற்றங்களை செய்யவும் உடனடியாக
கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் அதன் நடைமுறை செலவினங்களையும் கணிசமாகக்குறைக்கும். திங்களன்று
செய்தியாளர் மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி
Rick Wagoner எதிர்பார்த்தைவிட அதிகமாக
தொழிலாளர்கள் வெளியேறுவதால் நிறுவனம் தன் அமெரிக்க கட்டுமானச் செலவினங்களில் சேமிப்பு பற்றிய இலக்கை
$7 பில்லியனில் இருந்து $ 8 பில்லியனுக்கு உயர்த்தும் என்று கூறினார்.
Burnham Securities
பகுப்பாய்வாளரான டேவிட் ஹிலீயின் கருத்தின்படி வெளியேறும்
GM தொழிலாளர்களில் பலருக்கு பதிலாக $19 மணி ஒன்றுக்கு
ஊதியம் கொடுக்கப்படும் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவர் என்றும், இது தற்போதைய ஊதிய விகிதத்தைவிட 30
சதவிகிதம் குறைவு என்றும் தெரிகிறது. வேறு நலன்கள் எதையும் இவர்கள் பெறமாட்டார்கள்.
மணி ஒன்றிற்கு 80 டாலர்கள் என ஊதியங்கள், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்கள்
பெறும் தொழிலாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். ஒவ்வொரு ஆண்டும்
GM இற்கு இதனால்
செலவினங்களில் சேமிப்பு என்பது ஒரு தொழிலாளருக்கு 129,000 டாலர்கள் ஆகும்; கூடுதல் பணிநேர செலவினம்
இதில் அடங்காது.
டெல்பியின் புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு, வேறு சலுகைகள்
ஏதுமின்றி, ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர்கள் கொடுக்கப்படுகிறது. இந்நிறுவனம் வெளியேறும் தொழிலாளிகளுக்கு
பதிலாக ஒரு பகுதியாக ஏற்கனவே 2,000 தற்காலிக தொழிலாளர்களை நியமித்துள்ளது
புதிதாக வேலைக்கு சேரும் தற்காலிக தொழிலாளர்கள்
UAW இற்கும்
கார்த் தொழில் முதலாளிகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தப்படி தொழிற்சங்கத்தில் சேருமாறு
கட்டாயப்படுத்தப்படுவதுடன் UAW
அதிகாரத்துவத்திற்கு அங்கத்துவ சந்தா கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
ஏராளமான கார்த் தொழிலாளர்கள் இப்படி வெளியேறுவது, சீக்கிரம் ஓய்வு
பெறுவது என்று எடுத்த முடிவு பல தசாப்தங்களாக UAW
அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்பினால் ஏற்பட்ட விளைவு
ஆகும். கார்த்தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்கும் பங்கு மற்றும் தொழிலாளர்கள்மீது நிர்வாகம் நடத்தும்
தாக்குதல்களுக்கு ஒத்துழைத்தது என்ற பங்கு UAW
உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் சரிவில் பிரதிபலிப்பாகிறது. லாஸ் வேகாசில் இம்மாத தொடக்கத்தில்
நடைபெற்ற UAW
மாநாட்டு அறிக்கையில் தொழிற்சங்கத் தலைமை UAW
சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனில் இருந்து 1942ல் இருந்ததற்கும் மிகக்குறைவான 557,000
ஆகிவிட்டது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
அடிவானத்தின் இன்னும் கூடுதலான காட்டிக் கொடுப்புக்களையே கண்ணுறும் பல மூத்த
கார்த் தொழிலாளர்கள் GM
ன் வெளியேறும் சலுகைகள், விரைவில் ஓய்வு என்ற திட்டத்தை தங்கள் வாழ்வில் போராடிப் பெற்ற சலுகைகளின்
ஒரு பகுதியையாவது காப்பாற்ற ஒரே ஒரு வழியாக நினைக்கின்றனர்.
GM மற்றும் டெல்பியின்
தொழிலாளர்கள், சிறப்புத் திட்டத்தில் கொடுத்த சலுகைகளை ஏற்கவில்லை; ஏனெனில் அவை நியாயம் அற்றவை,
போதுமானவை அல்ல என்று அவர்கள் நினைத்தனர். GM
உறுதியளிக்கும் ஓய்வூதிய நலன்கள் காப்பாற்றப்படும் என்ற தீவிர உத்தரவில்லாமல் பல தொழிலாளர்களும்
பொருளாதார சிரமங்களுக்கு தள்ளப்படுவர். டெல்பியின் உதாரணம் அவர்களுக்கு முன்பு இருந்தது. உலகின் மிகப் பெரிய
கார் உதிரிபாகங்கள் நிறுவனமான இது, 1999ல் GMல்
இருந்து தோற்றுவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் திவால் முறை பாதுகாப்பை நாடி, தன்னுடைய தொழிற்சங்க
ஊழியர்களை 60 சதவிகித ஊதிய வெட்டிற்கு உடன்படுமாறும் சுகாதாரக்காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பல நலன்களை
இழப்பதற்கு உடன்படுமாறும் கட்டாயப்படுத்திவிட்டது.
GM மற்றும்
UAW இரண்டும்
GM
தொழிலாளர்களுக்கு முன் இதே வழி அவர்களுக்கும் ஏற்படக்கூடும் என்ற நிலையைக்காட்டி இன்னும் கூடுதலான
வேலைவெட்டுக்கள் சலுகை குறைப்புக்களை ஏற்கவேண்டும் என்று மிரட்டிச் செயல்படுத்திவிட்டன.
இப்படி வெளியேறும் திட்டத்தின்கீழ் செல்லும் தொழிலாளர்களின் நிலைமை
துன்பியலானதாகும். அனைவரும் எதிர்பார்த்திருந்த வாழ்நாள் முழுவதும் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய நலன்கள்
என்பதற்கு பதிலாக வெளியேறும் தொழிலாளர்களுக்கு ஓரிரு ஆண்டுகளின் ஊதியம், சலுகைகளுக்கும் மேலான
ஆதாயங்கள் ஏதும் கிடைக்காது.
கடந்த இலையுதிர் காலத்தில்
GM மற்றும்
UAW
இரண்டும் முன்னோடியில்லாத வகையில் சலுகை இழப்பு தொகுப்பை கொண்டுவந்தன; இதன்படி ஓய்வு பெற்ற
தொழிலாளர்கள் நூறாயிரக்கணக்கான டாலர்களை தங்கள் சுகாதார காப்புறுதி நலன்களுக்காக செலவழிக்க
வேண்டியதாயிற்று; வேலையில் இருக்கும் தொழிலாளர்களோ நிறுவனத்தின் சுகாதாரக் காப்புறுதி செலவினங்களுக்கு
உதவிநிதி அளிக்கும் வகையில் தங்களுடைய ஊதிய உயர்வை ஒத்திப் போட வேண்டியதாயிற்று.
UAW இன் தலைவரான
Ron Gettelfinger
இந்த மாத தொழிற்சங்க மாநாடு ஒன்றில் கூறிய கருத்துக்கள் இந்த இழப்புக்கள் தொடக்கம்தான் என்பதை தெளிவுபடுத்துகிறது.
கார் உற்பத்தியாளர்கள் முன்னோடியில்லாத வகையில் நீண்ட கால நெருக்கடியை எதிர்கொள்ளுகின்றனர் என்றும்
தொழிற்சங்கங்கள் சுகாதார நலன்கள், ஓய்வூதியங்கள், வேலைகள், ஊதியங்கள் ஆகியவற்றில் இன்னும் வெட்டுக்களை
எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெளிவாக்கினார். வெளியேறும் தொகுப்பை ஏற்பது குறித்த காலக் கெடு இன்னும்
இரண்டு வாரங்கள்தான் என்று இருந்த நேரத்தில் வந்த இந்த உரை பெரும்பாலான தொழிலாளர்களை வெளியேறும்
முடிவிற்கு தள்ளியதில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது.
UAW நிறுவனங்களுடன் தற்போதைய
தொழிலாளர் பிரிவை பெரிதும் குறைத்து புதிய இரத்தத்தை கொண்டுவரும் கொள்கையுடன் ஒத்துழைக்கிறது; இதன்
விளைவு இளந் தொழிலாளர்கள் பழைய தொழிலாளர்கள் செய்து வந்த வேலையை அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில்
ஒரு பகுதிக்கு செய்யவேண்டும்; தவிரவும் சுகாதார, ஓய்வூதிய நலன்கள் இவர்களுக்கு கிடையாது. இத்திட்டம்
வேண்டுமென்றே தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; இதன் விளைவாக கார் உற்பத்தி
நிறுவனங்களின் வருமான குறைப்பு ஈடுகட்டப்பட முடியும் என்றும் உத்தரவாதம் அளித்து ஒரு குறைவூதிய, நிறைந்த
அனுபவம் உடைய சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் அளிப்பை வழங்கும் தொழிலாளர் ஒப்பந்தக்காரர் என வகையில்
UAW
இருக்கும். வேலை கிடைப்பதற்காக இத்தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்துவ சந்தை தொகைகளை செலுத்துவதற்கு
கட்டாயப்படுத்தப்படுவர்.
Top of page |