World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Ariel Sharon: a political assessment

ஏரியல் ஷரோன் : ஓர் அரசியல் மதிப்பீடு

பகுதி 1|பகுதி 2

By Jean Shaoul
18 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

வரவிருக்கும் நாட்களில் ஏரியல் ஷரோன் மருத்துவ சிகிச்சையை எப்படி எதிர்கொண்டாலும், ஜனவரி 4ம் தேதி பெரும் நோய்த்தாக்குதலை அவர் கொண்டபோதே, அவருடைய அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது. எனவே அவருடைய வாழ்க்கைத் தொழிலைப்பற்றிய ஓர் அரசியல் மதிப்பீட்டைக் காண்பது பொருத்தமானதாகும்.

ஏகாதிபத்திய அரசியல்வாதிகள், தாராளவாத மற்றும் பழமைவாத செய்தி ஊடகம், மற்றும் ஷரோனுடைய விரோதிகள் உட்பட இஸ்ரேல் அரசியல் நிறைமாலையினூடாக உள்ள நபர்களிடம் இருந்து "சமாதானவாதிக்கு" வரும் அருவருப்பூட்டும் புகழுரைகள் மற்றும் அவருடைய மிருகத்தனமாக வாழ்வின் பணியை இருட்டடிப்புசெய்வதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதில் இவை அனைத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

ஏரியல் ஷரோன்பற்றி இத்தகைய போலிப் புகழ்ச்சிகள் இருந்தபோதிலும்கூட, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால், அவரது இன அழிப்பு மற்றும் பாலஸ்தீனிய விரோத கொலைக் கொள்கைக்காக நினைவிற் கொள்ளப்படுவார். பாலஸ்தீனிய மக்கள் மற்றும் இஸ்ரேலின் அண்டை அரபு நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கைப்பட்ட தொடர்ச்சியான அட்டூழியங்களால் குறிக்கப்படும் வாழ்க்கையை உடைய ஒரு போர்க்குற்றவாளி ஆவார். ஹாக்கில் (Hague) உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த கால, தற்கால அரசாங்கத் தலைவர்கள் தங்களின் இராஜதந்திர பாதுகாப்பின் காரணமாக, ஓர் வெளிநாட்டு அரசினால் போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க முயற்சிக்க முடியாது என்றும், தங்கள் நாட்டிலேயேதான் அவர்கள் பொறுப்புக் கூற வைக்கப்பட முடியும் என்று அறிவித்ததால்தான் 1982ல் லெபனானில் அவர் இழைத்த போர்க்குற்றங்களுக்கான விசாரணையில் இருந்து அவர் தப்பினார்

ஒரு தனிமனிதனின் குற்றத்தன்மை என்பதைவிடக் கூடுதலானதைத்தான் ஷரோன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சியோனிச நோக்கமான அகன்ற இஸ்ரேலை, பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பாலஸ்தீனிய மக்களுடைய இழப்பில், உலகெங்கிலும் உள்ள யூத உழைக்கும் மக்களின் உண்மையான நலன்களையும் சுமைகளையும் தாங்கக்கூடிய இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் இழப்பில், தொடர்ந்து பின்பற்றுவதற்கு அர்ப்பணித்த அவருடைய முழு இராணுவ, அரசியல் வாழ்க்கைப்போக்கின் காரணமாக, அவர் பிரதம மந்திரி நிலைக்கு உயர்ந்தார். தன்னுடைய நோக்கங்களை அவர் வன்முறை மற்றும் இராணுவ வழிவகைகளில்தான் அடையக் கூடும்.

ஒரு தொழிற்கட்சி சியோனிஸ்ட் என்ற நிலையில் இருந்து, முதன்மை-பேரினவாத விளாடிமீர் ஜாபோடின்ஸ்கி வெளிப்படுத்திய மேலே செல்லமுடியாத சியோனிச செயல்திட்டத்திற்கு திரும்பும் போக்கின் தலையாய பிரதிநிதி என்பதுவரை ஷரோனுடைய அரசியல் பரிணாமம் இருந்தது; அத்திட்டம் மேலே செல்லமுடியாத தன்மையைக் கொண்டிருந்தது; இறுதியில் அனைத்து தேசிய இயக்கங்களுமே, அவை யூதராயினும், பாலஸ்தீனியராயினும், அரேபியராயினும் சரி, மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இயலாமையை காட்டின.

இளமைக்காலமும் இராணுவத் தொழிலும்

ஷரோன் தீவிர ஆர்வம் கொண்ட யூத தேசியவாதிகள் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். அவருடைய பிறந்த ஊரான, அப்பொழுது ஜாரிச ரஷ்ய பகுதியாக இருந்த பேலாரசின் பிரெஸ்ட் லிடோவ்ஸ்க்கில் உள்ள அவரது தாத்தாவின் நெருங்கிய நண்பர் எதிர்கால சியோனிச பயங்கரவாதியும், லிக்குட் கட்சியின் நிறுவனரும் மற்றும் இஸ்ரேலிய பிரதமராக இருந்தவருமான மெனாச்சேம் பெகினின் தந்தையார் ஆவார். முதலாம் உலகப் போர் ஏற்பட்டபோது, குடும்பம் ஜோர்ஜியாவில் இருந்து திபிலிசிக்கு சண்டையில் இருந்து தப்பிக்கும் வகையில் நகர்ந்தது.

போர்வீரன் என்ற தன்னுடைய சுயசரிதையில் ஏரியலின் தந்தையார் சாமுயில் ஷரோன், தன்னுடைய முந்தைய தந்தையாரை போலவே "ஒரு எளிமையான, தூய்மையான யூதத் தேசியவாதியாக" இருந்தார் என்று ஷரோன் குறிப்பிட்டுள்ளார். "அவர்களுக்கு வேறு எவ்வித அரசியல் விசுவாசமும் கிடையாது. சோசலிசம், கம்யூனிசம், வேறு எந்த ஒன்றிலும் ஈடுபாடு கிடையாது." பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்து செல்லவேண்டும் என்ற விருப்பத்தை சாமுயில் ஷரோன் கொண்டிருந்தார்.

பல்கலைக்கழகத்தில் தன்னுடைய விவசாயத்துறைப் படிப்பை முடித்தபின், 1921ம் ஆண்டு சாமுயில் தன்னுடைய இளம் மனைவியுடன் திபிலிசியிலிருந்து ஓடி பாலஸ்தீனத்தை அடைந்தார். சுற்றிலும் இருந்த விரோதப்போக்கு அரபு விவசாயிகளின் ஒரு விவசாய குடியேற்றப்பகுதிகளில் அவர்கள் வீடுகளை உருவாக்கினார்கள். இது டெல் அவிவில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. இங்குதான் 1928ல் ஏரியல் ஷரோன் பிறந்தார்.

தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனக்கு ஒரு கத்தி ஒன்றைத் தனது தந்தையார் 13வது வயதில் பரிசாகக் கொடுத்ததை நினைவுகூர்வதில் ஷரோன் பெரிதும் விருப்பம் கொண்டிருந்தார். "எங்களுடைய விரோதிகளிடம் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதில் இந்தக் கத்தி ஓர் அடையாளம் ஆகும். அந்தப் படிப்பினையை நான் ஒருபொழுதும் மறந்தது இல்லை" என்று ஷரோன் குறிப்பிட்டார்.

1948-49ல் இஸ்ரேலின் அண்டை அரேபிய நாடுகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு, இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு (Israeli Defence Force -IDF) முன்னோடியாக இருந்த தலைமறைவு இயக்கமான, யூதர் பாதுகாப்புப் படையான ஹகனாவில் சேர்வதற்கு முன்பே, இளவயதிலேயே அவர் யூதர் குடியிருப்பு போலீசில் சேர்ந்தார். இதில் அவர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் அனுபவத்தை பெற்றதோடு, தன்னுடைய முன்கூட்டியே தாக்கும் நடவடிக்கை பற்றிய கொள்கையையும் இங்குதான் வளர்த்தெடுத்தார். "முதலில் கடுமையாகத் தாக்கு", "எப்பொழுதும் போர்மூளும் அபாயத்தை அதிகரி" என்பதை அவர் தனது நடத்தை விதியாகக் கொண்டிருந்தார்.

பாலஸ்தீனியர்கள் தங்கள் பங்கிற்கு பல முதலாளித்துவ அரபு அரசுகளின் ஆதரவை நாடி நின்றனர். ஆனால், இந்த ஆட்சிகள் இழிந்த நிலையில் பிளவுற்று அமைந்திருந்தன மற்றும் மேலான பயிற்சி பெற்றிருந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக தங்களின் சொந்த நலன்கள் மேலோங்கி இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன. 1950களில் முழுமையான-அரபுவாதம் என்ற பதாகையின்கீழ் அதிகாரத்திற்கு வரவிருந்த அரபு தேசிய அரசாங்கங்களும் தங்கள் வேறுபாடுகளை சரிசெய்ய முடியாது திறனற்று இருந்தன மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிந்திருந்த நிலையையும் அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, தங்கள் முன்னோர்களையும் விட, பாலஸ்தீனியர்களை காப்பாற்றுவதற்கு அவர்களால் இயலவில்லை.

1948-49 போருக்குப் பிறகு ஷரோன் ஒரு சிப்பாயாக இருந்து மெதுவாக அதிகாரத்தில் உயர்ந்து ஒரு ஜெனரல் ஆனார். இவருடைய ஆணவத்தினாலும், கீழ்படியாத தன்மையினாலும், பொறுப்பற்ற தன்மையினாலும் அரசியல், இராணுவ உயரதிகாரிகளுக்கு உவப்பு கொடுக்காததால் இவர் ஒருபோதும் தலைமைத் தளபதி ஆகவில்லை. ஓர் அதிகாரிக்கு உகந்த குணநலன் இல்லை என்பதற்காக 1955ம் ஆண்டு ஒரு விசாரணையை கூட அவர் எதிர்கொண்டார்.

தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப ஷரோன் பொய் கூறியதோடு, மேலிடத்து கட்டளைகளையும் அசட்டை செய்தார். 1956ம் ஆண்டு சூயஸ் படையெடுப்பின் போது, மேல் ஆணைகளை புறக்கணித்து தன்னுடைய துணை இராணுவப் பணியாளர்களை கொண்டு பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டார். 1973ம் ஆண்டுப் போரில் இஸ்ரேலிய படைகளை வழிநடத்தி இறுதியில் சூயஸ் கால்வாயை கடந்து எகிப்திய இராணுவத்தை தோற்கடித்து அதில் வென்றார். இதில் எவ்வளவு நண்பர்கள் கிட்டினரோ அவ்வளவு விரோதிகளும் அவருக்கு கிடைத்தனர். ஏனெனில் அவர் ஆணைகளையும் போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் மீறினார்.

ஆயினும்கூட, ஷரோனுடைய செயல்களும் வழிமுறைகளும் பாலஸ்தீனியர்கள்பால் இஸ்ரேல் கொண்ட அணுகுமுறை, அதன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவுகளின்மீது செல்வாக்கைக் கொண்டன. ஷரோன் 1953ம் ஆண்டு 101 வது பிரிவின் தளபதியானார். இப்பிரிவு முன்னணிக்குப் பின்னால் இருந்து நடத்திய தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்றதால், பாலஸ்தீனியர்கள் தங்கள் இல்லங்களை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் அவர் 1956ம் ஆண்டு சினாய் தாக்குதலுக்கு வழிவகுத்த மூலோபாய வழியை வரைந்தார்.

ஷரோன் தன்னுடைய சுயசரிதையில் விளக்கியுள்ளபடி, தன்னுடைய இலக்கை வழமையான அர்த்தத்தில் வெறுமனே பதிலடி அல்லது பொதுவாக தடுத்தல் என்று கூட கருதவில்லை. அவர் எழுதியதாவது: "இது அரேபியர்களுடைய உளவியலில் ஒரு தோல்வியை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு முறையும் அவர்களை நசுக்க வேண்டும். முற்றிலுமாக அடிக்கும் வகையில் அவர்களிடையே தாங்கள் ஒருபொழுதும் வெற்றியடைய மாட்டோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். இந்தக் காரணத்தை ஒட்டித்தான் குறைந்த அளவு பாதிப்புக் கொடுக்கும் தாக்குதல் திட்டத்தை நான் எதிர்த்தேன். அத்தகைய செயற்பாடுகள் நுட்பமுறையில் பொருந்தாது என்பது மட்டுமின்றி, நாம் தாக்குதல் நடத்தும்படி நிர்பந்திக்கப்படும்போதெல்லாம், விரோதிகளின் படைகளில் மிகப் பெரிய இழப்புக்களை ஏற்படுத்துவது நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று நம்பினேன்."

அவர் முதலாவதாக 1953ல் ஜோர்தான் மீது படையெடுத்து, ஜோர்தானிய ஆட்சியின் கீழ் இருந்த மேற்குக்கரை கிராமமான குபியாவில் குறைந்தது 45 வீடுகளை அழித்த போது, பெரும் இழிவை பெற்றார். 101ம் படைப்பிரிவு 69 மக்களை கொன்றதில் பாதிப்பேர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். மத்திய இஸ்ரேலில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் மிருகத்தனமாக கொலைசெய்யப்பட்டதற்கு இத்தாக்குதல் பதிலடி என்று கூறப்பட்டது, ஆனால், குபியாவிற்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அதே ஆண்டு, ஷரோனின் படைப்பிரிவு அப்பொழுது எகிப்திய ஆட்சியின் கீழ் இருந்த காசாவிற்குத் தெற்கே எல்- புரீக் முகாமைத் தாக்கி 50 அகதிகளை கொன்றது.

ஜோர்டான் மீதான நடவடிக்கை சர்வதேச கண்டனத்தை தூண்டியபோதிலும், இஸ்ரேலுக்குள் அது ஷரோனை ஒரு மாவீரனாக்கியது. அவருடைய 101வது படைப்பிரிவின் பணிகள் விரிவாக்கப்பட்டன. ஜோர்டான், காசா மற்றும் சிரியாவில் இதர கொடூரமான தாக்குதல்களை அவர் வழிநடத்தினார். 1970களின் தொடக்கத்தில், தெற்கு இராணுவத் தலைவர் என்ற முறையில் அவர் காசாப் பகுதியில் பாலஸ்தீனிய எதிர்ப்பை மிருகத்தனமான ஒடுக்கியதற்கு பொறுப்பாவர்.

1967ஆண்டு போர் ஷரோனால் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்தும் நீண்ட காலத் திட்டங்களை செயற்படுத்தவும், அண்டை அரேபிய நாடுகளில் இருந்து பெரும் நிலப்பகுதிகளை அபகரித்துக் கொள்ளவும் அது இஸ்ரலுக்கு உதவியது. இந்த விரிவாக்கத்தில் சினாயில் கோட்டத் தளபதி என்னும் முறையில் ஷரோன் ஒரு முக்கிய பங்கை வகித்தார்.

1967 ம் ஆண்டுப் போர்

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிற்கான ஒரு பெரியதொரு திருப்புமுனையாக ஆறுநாட்கள் போர் நிரூபிக்கப்பட இருந்தது. பாலஸ்தீனியர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதன் அடிப்படையில் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும்கூட, நாஜி இனஅழிப்பால் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் அழிக்கப்பட்டதினால் இதற்கு ஒருவித அறநெறி முறைத்தன்மை இருந்தது. 1967ம் ஆண்டுப் போர் இஸ்ரேலிய அரசின் சாரத்தை பாலஸ்தீனியர்களை நிரந்தர அகதிகளாக மாற்றுவதற்கான நோக்கத்தைக் கொண்ட ஒரு விரிவாக்க தன்மையுடையது என்று முன்னிறுத்தியது.

போர் தொடங்கிய சில வாரங்களுக்குள், தொழிற்கட்சி தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறி புதிதாக வென்றுகைப்பற்றப்பட்ட பகுதிகளில் குடியிருப்புக்களை நிறுவியது. இந்த நிகழ்வு இஸ்ரேலின் அரசியல், கருத்தியல் மற்றும் சமூக சாமுத்திரிகா லட்சணங்களை வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு வடிவமைக்க இருந்தது. மேலைநாடுகளில் இருந்து அலைபோல் புதிதாக குடியேறுபவர்கள், குறிப்பாக அமெரிக்காவில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து குடியேறினர். இந்தக் குடியிருப்புக்கள் மத வலதுசாரி அடிப்படைவாதிகளுக்கு ஓர் ஈர்ப்பு முனையாக அமைந்தது. அவர்கள் குடியேறுவோர் இயக்கத்தை ஸ்தாபித்து நிலவர அமைதிகாப்பு தந்திரத்தை மேற்கொண்டு பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தி, அவர்களுடைய நிலத்தில் இருந்தே அவர்களை வெளியேற்றினர். அந்நிய ஆட்சிக்குட்டபட்ட யூத பகுதிகளின் விஸ்தரிப்பு விரிவாக்கக் கொள்கையில் நேரடி சொந்த நலன்களை கொண்ட ஒரு சமூக தட்டை உருவாக்கியது.

அவர்களுடைய படைகள் மிகக் குறைவாக இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே குடியேறியவர்களும், தீவிர மதவாதக் குழுக்களும் இஸ்ரேலிய அரசியலை வலதிற்கு மாற்றும் வகையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அரசியல் தளம் ஒன்றை வழங்கியதோடு மட்டும் இல்லாமல், தாராளவாத மனபான்மை கொண்ட மதச்சார்பற்ற யூதர்களுக்கு எதிராகவும் போராடினர். இதற்கு ஓரளவேனும் காரணமாக இருந்தது அவர்கள் ஜெனரல் ஏரியல் ஷரோன் என்னும் முக்கிய கூட்டாளியை பெற்றதுதான்.

ஷரோனை பொறுத்த வரையில், தான் ஒரு மதச்சார்பற்ற யூதராகவும் இராணுவ மனிதராகவும் இருந்தபோதிலும்கூட, சியோனிச அரசின் விரிவாக்கம், குடியேற்றங்களின் அமைப்பு ஆகியவை அவர் கருதிய "பாதுகாக்கப்படக்கூடிய எல்லைகள்" மற்றும் பொதுப் பாதுகாப்பு இவற்றுடன் பிணைந்திருந்தது. ஆனால், இந்த நோக்கங்களை பின் தொடர்வதற்காக அவர் மத இயக்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். மத வெறியர்கள் புதிய யூதர்கள் குடியிருப்பிற்கான தேவையான சக்திகளை வழங்குவர் என்று வாதித்தார்.

1967ல் அரேபியர்கள் அடைந்த தோல்வியானது யாசர் அரஃபாத்தின் தலைமையில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் (PLO) வளர்ச்சிக்கு வழிசெய்தது. அது அல்ஜீரியர்களும், வியட்நாமியர்களும் மேற்கொண்ட கொரில்லா தந்திரங்களை ஏற்று, காட்டிக் கொடுத்திருந்த மற்றும் கைவிடப்பட்டிருந்த நாசரிச அனைத்து அரபு இயக்கத்தின் பகுதி என்பதைவிட, இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனிய தேசியம் என்ற பதாகையின் கீழ் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

இந்தப் போரானது, இஸ்ரேலை இந்த பிராந்தியத்தில் ஆதிக்க இராணுவ சக்தி என்னும் முறையில், தீவிர அரசியல் இயக்கங்களை நசுக்குவது உள்பட, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது நலன்களை சிறப்பாக முன்னெடுக்கக்கூடிய இன்றியமையாத வாகனமாக வாஷிங்டனை நம்பச்செய்தது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில், இஸ்ரேலின் அரேபிய அண்டை நாடுகளுக்கு எதிரான ஒவ்வொரு மற்றும் அனைத்து இராணுவ வெற்றியும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சாரமும், பகிரங்கமாக வாஷிங்டனால் விமர்சனத்திற்குட்பட்டாலும், அவை பெருகிய முறையில் அமெரிக்க உதவியைப் பெற்றிருந்தன.

ஷரோன் அரசியலில் நுழைகிறார்

உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் ஆளும் தொழிற்கட்சிக்கும் இருந்த உறவு நெருக்கமான ஒன்றாகும். ஷரோன் கேர்னல் பதவிக்கு வந்த பின்னர் அதிகாரிகள் தொழிற்கட்சியில் சேரவேண்டும் என்று எதிர்பார்த்தனர். அதேபோல் அவரும் 1958 ல் அக்கட்சியில் சேர்ந்தார். இராணுவத்தை விட்டு நீங்கியதும், இஸ்ரேலின் பெரும்பாலான தளபதிகள் அரசியலில் ஈடுபட்டனர். இதற்கு ஷரோனும் விதிவிலக்கல்ல. ஆனால், தொழிற்கட்சியிலிருந்து பிளவுற்றதில் அவர் முதலாவதாக இருந்தார்.

டேவிட் பென் குரியன் மற்றும் மோஷே தயான் தலைமையில் இருந்த தொழிற்கட்சியின் மிகவும் வலதுசாரி தேசியவாதிகளுடன் ஷரோன் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த தொடர்பு அவரை அவருடைய இராணுவப் பதவிக் காலத்தில் பலமுறையும் பாதுகாத்தது. அவர் கொடுத்த பதிலடித் தாக்குதல்கள் தொழிற் கட்சிக்குள் இருந்த கழுகுப்பார்வை கொண்டவர்களின் ஆதரவையும் பெற்றது. அவர்கள்தான் 1955க்குப் பிறகு கட்சியில் கூடுதலான ஆதிக்கத்தைப் பெற்றனர்.

1969ம் ஆண்டு, பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு, தன்னுடைய இராணுவ ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதை அறிந்த ஷரோன் சினமடைந்தார். இதற்குக் காரணம் அவர் இராணுவத் தலைமைத் தளபதி Chaim Bar Lev உடன் சினாய் பாதுகாப்பு பற்றி மாற்றுக் கருத்துக்கள் கொண்டது ஆகும். வேறு சிறந்த வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், ஷரோன் அரசியலில் நுழையலாம் என்று கருதினார். ஆளும் தொழிற்கட்சியுடன் கோலான் குன்றுகள், மேற்குக் கரை, காசா பற்றிய அரசியல் தீர்வில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவர் மெனச்செம் பெகினுடைய ஹிரட் கட்சியுடன் (Herut Party) தொடர்பு கொண்டார்.

ஜாபோடின்ஸ்கியின் திருத்தல்வாத இயக்கத்தின் அரசியல் மரபுவழித்தோன்றலாக ஹிரட் கட்சி இருந்தது. பாலஸ்தீனியர் தொடர்பான அதன் அணுகுமுறை "இரும்புச்சுவர்" என்ற தலைப்பின் கீழ் 1923 வெளிவந்த கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது: "சியோனிஸ்டுக்கள் குடியேற்றம் ஒன்றில் நிறுத்தப்பட வேண்டும் அல்லது உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடத்தப்பட வேண்டும். இக் குடியேற்றம் உள்ளூர் மக்களிடமிருந்து சுதந்திரமான ஒரு அதிகாரத்தின் .....ஒரு இரும்புச் சுவர் ....பாதுகாப்பின் கீழ் மட்டும்தான் முன்னேற்றம் காணப்பட முடியும் மற்றும் தொடரப்பட முடியும், அது உள்ளூர் மக்களுடைய அழுத்தத்தை எதிர்க்கும்.. அரேபியர்கள்பால் நாம் கொண்டுள்ள கொள்கையின் முழுமையே இதுதான்... அரேபியர்களுடன் மனமுவந்த சமரசம் என்பது இப்பொழுதோ அல்லது அண்மையிலான வருங்காலத்திலோ இருக்க முடியாது."

இராணுவத்தில் இருந்து 1973ல் ராஜிநாமா செய்த பின்னர் ஷரோன் தாராளவாத கட்சியின் பதாகையின் கீழ் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது லிக்குட் கட்சியின் முன்னோடிகளில் ஒன்றாகும். ஆனால் தனது இராணுவ இருப்புப் படை ஆணையக பொறுப்பை பாதுகாக்கும்பொருட்டு, தன்னுடைய பதவியை இவர் ஓராண்டிற்குள் இராஜிநாமா செய்து தொழிற்கட்சிக்கு தாவினார். அவர், தொழிற்கட்சி பிரதம மந்திரி யிட்ஷாக் ராபினுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஆலோசகராக ஆறுமாதங்கள் பணிபுரிந்தார். அதன் பின்னர் தன்னுடைய கட்சியை ஸ்தாபித்து லிக்குட்டில் அதை 1977ல் கரைத்துக் கொண்டார்.

1977ம் ஆண்டை ஒட்டி தொழிற்கட்சி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டு காரணத்தை இழந்துவிட்டது. 1967ம் ஆண்டு போரின் விளைவாக இயங்கத் தொடங்கிய சமூக சக்திகள் ஒன்றாக இணைந்து தொழிற்கட்சி சியோனிஸ்டுகளை 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதவியில் இருந்து இறக்கி, பல தசாப்தங்கள் அது கொண்டிருந்த ஏகபோக அதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, இஸ்ரேலின் வலதுசாரி அரசியல் வளைவரைபாதைக்கும் அதிகரித்த ஸ்திரமற்ற தன்மைக்கும் வழி வகுத்தன. இராணுவ வெற்றியின் மூலமான இஸ்ரேலிய ஆட்சியின் விரிவாக்கம் வேறுவிதமான அரசாங்கம் தேவை என்று காட்டியது.

ஷரோனை தவிர, இரண்டு இதர முன்னாள் தளபதிகளான மோஷேதயான் மற்றும் எசர் வெய்ஸ்மன் ஆகியோரும் திருத்தல்வாத முகாமிற்காக தொழிற்கட்சி மற்றும் அதன் கூட்டணி பங்குதாரர்களை கைவிட்ட முதல் முக்கிய இராணுவ நபர்கள் ஆயினர். தயானும், வெய்ஸ்மனும் லிக்குட்டில் சேர்ந்து முறையே வெளியுறவுச் செயலராகவும், பாதுகாப்பு மந்திரியாகவும் 1977ல் பதவி ஏற்றனர். மற்ற முக்கிய இராணுவ அதிகாரிகளும் விரைவில் இவ்வழியை பின்பற்றினர்.

பெகினின் லிக்குட் அரசாங்கத்தில் விவசாய இலாக்காவைக்கோரி ஷரோன் பெற்றார். அப்பதவியில் அவர் குடியேறியவர்களுடைய நலன்களுக்கு வாதிட்டு அரேபிய நிலங்களைப் பறிமுதல் செய்ய ஊக்குவித்தார். "கூடுதலான மலைப்பகுதிகளை அபகரியுங்கள்'' எதை எடுத்துக் கொண்டாலும், அவை நம்முடையதாகிவிடும், அபகரிக்காத நிலங்கள் அவர்களிடம் போய்விடும்" என்று அவர் வலியுறுத்தினார். "நிலத்தில் உண்மைகளை தோற்றுவிப்போம்" என்ற அவருடைய குறிக்கோள் பாலஸ்தீனியர்களுடன் ஒத்துப்போதலை அடைய முடியாத நிலையை ஏற்படுத்துவதை நோக்கம் கொண்டிருந்தது.

ஈராக்கின் மீது வேண்டுமென்றே செய்யப்பெற்ற போர்த்தாக்குதலை நடத்தவும், ஜூன் 1981ல் ஓசிரெக் அணு ஆற்றல் நிலையம் மீது குண்டுவீச்சு நடத்தவும், காபினெட்டின் இசைவைப் பெற்ற மூன்று முக்கிய மந்திரிகளில் இவரும் ஒருவராக இருந்தார்.

லிக்குட்டில் அவர் சேர்ந்திருந்தாலும், ஷரோன் தான் முக்கியப் பாத்திரம் வகிக்கும், தேசிய ஐக்கிய அரசாங்கங்கள் தேவைப்படும் ஒரு நிரந்தரமான நெருக்கடி நிலையில் இருப்பதாக இஸ்ரேலை பார்த்தார். பல நேரங்களில் தொழிற்கட்சியை மீண்டும் அரசாங்கத்திற்குள் கொண்டுவர அவர் முயன்றார். 1984ல் இருந்து 1992க்குள் லிக்குட் மற்றும் தொழிற்கட்சிக்கான சுழற்சி முறையுடன் கூடிய பிரதம மந்திரிகளுடன் தேசிய ஐக்கிய அரசாங்கங்கள் இருந்தன.

போர்க்குற்றவாளி ஷரோன்

1981ல் லிக்குட் அரசாங்கத்தில் பாதுகாப்பு மந்திரியாக ஷரோன் இருந்தபோது, 1982ல் பெய்ரூட்டில் இருந்த சப்ரா, ஷட்டில்லா அகதி முகாம்களில் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் அவர் பங்கு பெற்ற வகையில், குற்றம்சாட்டப்படாத போர்க்குற்றவாளியாக சர்வதேச அளவில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்

இஸ்ரேலுக்கும் மிக முக்கியமான அரபு நாடான எகிப்துக்கும் 1978ல் ஏற்பட்டிருந்த சமாதான உடன்பாடு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, ஷரோன் மத்திய கிழக்கில் ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்தும் வகையில் லெபனான் மீது படையெடுத்தார். இவருடைய நோக்கம் பாலஸ்தீனிய தலைமையான PLO வை அழிக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஜோர்டான் இஸ்ரேலின் உதவியுடன் 1970ல் PLO வை வெளியேற்றிய நிலையில், இது அப்பொழுது லெபனானை தளமாக கொண்டிருந்தது. PLO உடன் அரசியல் உடன்பாட்டை தன்னால் தடைசெய்துவிட முடியும் என்று ஷரோன் கணக்குப் போட்டார் மற்றும் இஸ்ரேலுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளை நிரந்தரமாக பொருளாதார ஒருங்கிணப்புச்செய்ய முடியும் என்றும் நினைத்தார்.

இப்பிராந்தியத்தில் சிரியாவிற்கு இருந்த வலிமையை அழிக்கவும், லெபனானில் இஸ்ரேலின் பால் நட்புறவுடன் இருக்கும் ஒரு வலதுசாரி கிறிஸ்தவ அரசாங்கத்தை நிறுவவும் விழைந்தார்.

அரஃபாத் மற்றும் PLO விற்கு விரோதமாக இருந்த பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழு ஒன்று பிரிட்டனில் இருந்த இஸ்ரேல் தூதுவர் மீது ஒரு படுகொலை முயற்சி மேற்கொண்டதை சாக்குப்போக்காக பயன்படுத்தி, ஷரோன் இஸ்ரேலின் முழு இராணுவ சக்தியின் வலிமையையும் லெபனானுக்கு எதிராக ஜூன் 1982ல் பாவித்தார். ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட சிரியாவின் விமானங்களை வீழ்த்தியதும், சிரியா இஸ்ரேலுக்கு எதிரான லெபனான் பாதுகாப்பு முயற்சியைக் கைவிட்டது, PLO தனிமைப்படுத்தப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவ இயந்திரம் லெபனானின் தெற்குப் பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தி, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரக்கமற்ற வகையில் பெய்ரூட்டின் மீது குண்டுவீச்சுக்களை நடத்தி அராஃபத்தையும் PLO-வையும் அகற்றுமாறு லெபனிய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. மற்றொரு நாட்டின் தலைநகரத்தின் மீதான கட்டுப்பாட்டை ஷரோன் மேற்கொண்டு, போர்க்குற்றவிதிகளில் இருக்கும் ஒவ்வொரு விதியையும் மீறி, பெய்ரூட்டின் (மேற்கு பெய்ரூட்டில் இருந்தவர்கள்) பாதிக்கும் மேலான மக்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்தார். PLO மற்றும் அதன் இராணுவத் தளங்களை இலக்கு கொண்டதோடு மட்டும் இல்லாமல், அதன் சமூக தளத்தையும் நலன்புரி வலைப்பின்னல்களையும் அவர் தாக்கினார். அதாவது சுகாதார, கல்விப் பணிக் கூடங்கள், அரசியல், சமூக அமைப்புக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பாலஸ்தீனிய அகதிகள் தங்கியிருந்த சேரிகளும் தாக்குதலுக்கு ஆளாயின.

அழிவு, துன்பங்கள் இவற்றின் அளவு மிகப் பெரிதாக இருந்தது. பாலஸ்தீனிய முகாம்கள் தவிர, மேற்கு பெய்ரூட்டில் மட்டும் 13,500 வீடுகள் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டது. இன்னும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இதர இடங்களில் சேதமுற்றன. மின்சாரம், தண்ணீர் வசதிகள் தொடர்ச்சியாக தடைக்கு உட்பட்டன. உணவு, மருந்துப் பொருட்கள் நிறுத்தப்பட்டன. சர்வதேச உதவி அமைப்புக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜூன் ஆரம்பத்திலிருந்து டிசம்பர் முடிவிற்கிடையில் 19,000 மக்களுக்கு மேல் உயிரிழந்ததாகவும், 30,000 பேர் காயமுற்றதாகவும் லெபனான் போலீசார் மதிப்பிட்டனர்.

இத் தாக்குதலில் இருந்து லெபனான் மற்றும் பாலஸ்தீனிய மக்களை பாதுகாக்க ஒரு அரபு தேசிய ஆட்சி கூட ஒரு விரலைக்கூட எழுப்ப முன்வரவில்லை.

பெய்ரூட்டில் இருந்த அமெரிக்க சிறப்புத் தூதர் லெபனான் அரசாங்கம் ஷரோனின் நிபந்தனைகளை அராஃபத் ஏற்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உறுதிமொழிகளை ஷரோன் ஏற்கமாட்டார் என்பதை அறிந்திருந்த தூதர், தன்னுடைய போராளிகள் அனைவருடனும் நாட்டை விட்டு நீங்குவேன் என்று கையொப்பமிட்ட உறுதிமொழியை அராஃபத்திடம் இருந்து பெற்றார். பெய்ரூட்டில் எஞ்சியிருந்த பாலஸ்தீனிய மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது மற்றும் இஸ்ரேல் மீண்டும் பெய்ரூட்டில் நுழையாது என்ற உறுதிமொழியும் பெறப்பட்டது.

ஆனால், சில நாட்களுக்குள்ளாகவே ஷரோன் தன்னுடைய உறுதிமொழியை மீறினார். லெபனானில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்த ஒரு இஸ்ரேலிய கைக்கூலி படுகொலைசெய்யப்பட்ட பின்னர், வெளிவேஷத்திற்கு ஒழுங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுதல் என்று மீண்டும் செப்டம்பர் 15 அன்று மேற்கு பெய்ரூட்டை தாக்குமாறு இஸ்ரேலிய படைக்கு உத்தவிட்டார். இதற்குச் சில நாட்களுக்கு பின்னர் அவர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில், "மேற்கு பெய்ரூட்டில் நாம் நுழைந்தது பயங்கரவாதிகளின் உள்கட்டுமானங்களுக்கு எதிராக போரிடத்தான்" என்று கூறினார், இதன் பொருள் பாலஸ்தீனிய குடிமக்கள் மற்றும் அவர்களுடைய முஸ்லிம் கூட்டணியினருக்கு எதிராக ஆகும்.

இஸ்ரேலிய இராணுவ சக்திகள் நகரத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டதும், மேற்கு பெய்ரூட் பகுதியில் இருந்த சப்ரா, ஷட்டில்லா பாலஸ்தீனிய அகதிகள் முகாம்கள் முற்றுகையிடப்பட்ட நிலையில், இதர சிறிய முகாம்களை தாக்கிய பின்னர், நீண்டகால திட்டத்தை கொண்டிருந்த ஷரோன் இஸ்ரேலிய தலைமை தளபதிக்கு லெபனான் பாசிச சக்திகளான பலாஞ்சிஸ்டுகளை அம்முகாம்களுக்கு அனுமதிக்க உத்தரவிட்டார். பலாஞ்சிஸ்டுகள் பழைய கணக்கை முடிப்பார்கள் என்று ஷரோன் திட்டமிட்டிருந்தார். இஸ்ரேலியர்களைவிட பாலஸ்தீனிய போராளிகள் மீது அவர்களுடைய தாக்குதல் இன்னும் இரக்கமற்றதாகவும் திறமையுடனும் இருக்கும் என்றும் அவர் கருதினார்.

ஒரு நிராயுதபாணியான மக்கள் மீது ஆத்திரமூட்டாத மற்றும் கொலைவெறி தாக்குதலாக இது அமைந்தது. இறந்தவர்கள், காயமுற்றவர்கள் பற்றிச் சரியான மதிப்பீடு இல்லை என்றாலும், பாலஸ்தீனிய செம்பிறை சங்கத்தின் (Palestinian Red Crescent) கணக்கின்படி குறைந்தது 2,000 பேராவது கொல்லப்பட்டனர், இதில் 25 சதவிகிதத்தினர் லெபனிய ஷியைட் முஸ்லிம்கள் ஆவர். இப்படுகொலைக்கு முன்பும் பின்பும் நூற்றுக்கணக்கான மக்கள் சிறைபிடிக்கப்பட்டு தெற்கு லெபனானில் இருந்த இஸ்ரேலிய தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் மீண்டும் காணப்படவில்லை.

இக்கொடுமைகள் இஸ்ரேலியப் படைகளின் முழுப் பார்வையில் நிகழ்ந்தன. முகாம்களை சுற்றி அவர்கள் கண்காணிப்பு சாவடிகளை நிறுவியிருந்தனர். ஆக்கிரமிக்கும் நாட்டின் பாதுகாப்பு மந்திரி என்னும் முறையில், சர்வதேச சட்டத்தின் படி மக்களுடைய மொத்தப் பாதுகாப்பிற்கு இவர்தான் பொறுப்பு என்பதால், ஷரோன் படுகொலைக்கு பொறுப்பு ஏற்றார். மேலும் பாலஸ்தீனியர்களை பாதுகாப்பதற்கு அமெரிக்கா இடைத்தரகாரக இருந்து கொண்டுவந்திருந்த உடன்பாட்டையும் இஸ்ரேல் ஏற்றிருந்தது.

பலாஞ்சிஸ்டுகள், அகதி முகாம்களில் நுழைவதற்கு ஷரோன்தான் பொறுப்பு. இஸ்ரேலியப் படைகள் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் ஆரம்ப படுகொலையை செய்ததற்கும் அவர்தான் பொறுப்பு. இதன் பின்னர் நிகழ்ந்த சிறை வைப்பு, சித்திரவதை மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் மீதான கொலை ஆகியவற்றையும் அவர் அனுமதித்தார்.

இப்படுகொலை உலகம் முழுவதும் சீற்றத்தை தூண்டியது. பெகின் அரசாங்கத்தை எதிர்த்து இஸ்ரேலுக்குள்ளேயே மக்கட்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரான 400,000 மக்கள் டெல் அவிவ் தெருக்களுக்கு வந்தனர் மற்றும் ஒரு விசாரணையையும் கோரினர். பொதுமக்களுடைய சீற்றத்தை குறைக்கும் வகையில், அரசாங்கம் ககான் குழுவை நியமித்தது. ஆனால், அதன் பரப்பெல்லை குறைந்திருந்தது. அடிப்படையில் அது ஒரு கண்துடைப்புக்குத்தான். ஆனால், இப் படுகொலையில் இஸ்ரேலியர்களுக்கு குறைந்த அளவில் "மறைமுக பொறுப்பு" இருந்தது என்பதை அது மறைக்கமுடியாமல் போயிற்று.

பெகின், ஷரோன் மற்றும் தளபதிகளை மாறுபட்ட கடுமையில் இவ்விசாரணைக்குழு கண்டித்தது. முகாம்களில் நடந்ததற்கு ஷரோன் "தனிப்பட்ட பொறுப்பை" கொண்டார் என்றும் முடித்தது. ஷரோன் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் "பொதுப் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர்'' என்றும் இக் குழு கூறியது

படுகொலை நிகழ்வதற்கு தனிப் பொறுப்பு கொண்டவர் என்று கண்டறியப்பட்ட பின்னர் சர்வதேச அளவில் ஷரோன் ஒரு தீண்டத்தகாதவராகக் கருதப்பட்டு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வரவேற்பை இழந்தார்.

என்றாலும், இஸ்ரேலுக்குள் அவர் ஒரு முக்கிய அரசியல்வாதியாக தொடர்ந்தார். வலதுசாரிக்கு அடையாள சின்னமாக அவர் மாறினார். பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாலும், அமைச்சரவையில் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் வந்த ஒவ்வொரு லிக்குட் தலைமையிலான அரசாங்கத்திலும் மந்திரிப் பதவியை கொண்டிருந்தார். (1984 முதல் 1989 வரை) வர்த்தக தொழில் மந்திரியாகவும், (1990ல் இருந்து 1992 வரை) கட்டுமானம், வீடமைப்பு மந்திரியாகவும், (1996ல் இருந்து 1998 வரை) தேசிய உள்கட்டமைப்பு மந்திரியாகவும் இருந்தார்.

இக்காலகட்டம் முழுவதும், ஷரோன் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசெலத்தில் குடியேற்றங்களை விரிவாக்குவதற்கு வேலை செய்து அவற்றிற்கு வளங்களை திருப்பினார். 1992-ம் ஆண்டின் அரசு தணிக்கையாளர் அறிக்கையில், தவறான நிர்வாகத்தின் பேச்சு, சந்தேகத்திற்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள், கூடுலான செலவினங்கள் ஆகியவை இருந்தன என்று கூறியுள்ளது. ஷரோனே ஜெருசலேம் பழைய நகரத்தில் 20,000 அரேபியர்களுக்கும் நாற்பதே யூதர்களுக்கும் இடையே இருந்த ஒரு குடியிருப்பை விலைக்கு வாங்கினார்.

ஓஸ்லோ உடன்படிக்கைகள்

1992ல் லிக்குட் ஆட்சி முடிவிற்கு வந்தது ----அத்துடன் ஷரோனுக்கு அரசாங்க பதவியும் முடிவுற்றது---- இதற்குப் பல காரணிகள் இருந்தன. முதலாளித்துவ மீட்சிக்கு சோவியத் ஒன்றியம் திரும்பியது மற்றும் உலக ஏகாதிபத்தியத்தில் அது மீண்டும் ஒன்றினைக்கப்படுவதன் சமிக்கை ஆகியன அரபு தேசியவாதத்திற்கு மாஸ்கோவின் ஆதரவை முடிவுகட்டியது. பாலஸ்தீனிய மக்கள் மேற்கு கரையிலும் காசாவிலும் டிசம்பர் 1987ல் தன்னியல்பாக எழுச்சியுற்றது பாலஸ்தீனிய, இஸ்ரேலிய அரபு செல்வந்த தட்டுக்கள் இடையேயும், அதேபோல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஒருவகையிலான பாலஸ்தீனிய அரசு ஒன்றுதான் இப்பிராந்தியம் முழுவதும் தீவிரத்தன்மையிலிருந்து எழுச்சியை தடுக்க ஒரே வழி என்று உறுதிகொள்ள வைத்தது.

1991ம் ஆண்டு, முதலாவது வளைகுடாப்போரில் சதாம் ஹூசைனிற்கு தங்களது ஆதரவை தொடர்ந்ததால் யாசீர் அரஃபாத்தும் PLO வினரும், முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதை உணர்ந்தனர்.

இஸ்ரேலிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இஸ்ரேலின் அண்டை அரபு நாடுகளுடன் சமாதானம் என்பது, இஸ்ரேலிய காவற்படை அரசுஎன்பதை காட்டிலும், கூடுதலான புதிய சந்தைகளுக்கு உறுதி என்று ஆயிற்று. பரந்த பிராந்திய உடன்பாடு, இஸ்ரேலை ஒரு பிராந்திய பொருளாதார சக்தியாக ஆக்கும் சந்தைகளை பெறல் ஆகியவற்றுக்கான விலை, சர்வதேச மரபுகள், ஐ.நா. தீர்மானங்கள் ஆகியவை கூறியபடி ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்தும் ஜெருசேலத்தில் இருந்தும் முழுமையாக வாபஸ்பெறாவிட்டாலும் பாலஸ்தீனியர்களுடன் ஒருவித உடன்பாடாக இருந்தது.

இந்த நிலைப்பாட்டை அறிந்த தொழிற்கட்சி அரசாங்கம் யிட்ஷக் ராபின் தலைமையில் மீண்டும் பதவிக்கு வந்து பாலஸ்தீனியர்களுடன் உடன்பாட்டிற்கு உறுதி கூற வகை செய்தது. இதன் விளைவுதான் துரதிருஷ்ட விதியை கொண்டிருந்த ஓஸ்லோ ஒப்பந்தங்கள் ஆகும். 1993ல் வெள்ளை மாளிகை புல்தரையில் கையெழுத்திடப்பட்டதால் இது புகழ் பெற்றது.

PLO உடன் ஒரு வருங்கால பாலஸ்தீனிய அரசு பற்றிய உடன்பாட்டிற்கு இஸ்ரேல் வரமுடிந்தது. அதன் எல்லைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்கள் கூறியது போல் 1967 இஸ்ரேலிய எல்லைக்கு மீண்டும் வருதல் என்றல்லாமல், இஸ்ரேலுக்கும் PLO க்கும் இடையே ஏற்படும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இருக்கும் என்றிருந்தது. இந்த ஒப்பந்தங்கள் 1948க்கு முந்தைய பாலஸ்தீனத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த நிலப்பகுதியை விட 22 சதவீதத்திற்கு குறைவான நிலப்பகுதி பாலஸ்தீன அரசிற்கு என்று குறிப்பிட்டன.

இந்த உடன்படிக்கையின்படி, ஒரு PLO தலைமையிலான இடைக்கால பாலஸ்தீனிய அதிகாரம் ஆக்கிரமிப்பு பகுதிகளின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டு, அங்கு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் சுமையை குறைக்கும். அதே நேரத்தில் சியோனிச ஆட்சியானது எல்லைகள், வெளியுறவுக் கொள்கை, யூதக் குடியிருப்புக்களின் (மேற்குக் கரையிலும் காசாவிலும் இருப்பவை, சர்வதேச சட்டத்திற்கு முரணானவை) பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பொறுப்புக் கொண்டிருக்கும். மேற்குக்கரையானது அடுத்துள்ள நிலப்பகுதி மற்றும் பெரும் பாதுகாப்பிற்குட்பட்டிருக்கும் யூதக் குடியேற்றங்களை இணைக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சாலைகள் என்று பிரிக்கப்பட்டது.

இதன் விளைவு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பை ஒடுக்கும் பொறுப்பில் இஸ்ரேல் அரஃபாத்தை அமர்த்தியது. ஜெருசலேம் பற்றிய நிலைப்பாடு, அகதிகள் திரும்பும் உரிமை, பாலஸ்தீனிய அரசை ஸ்தாபித்தல் போன்ற பிரச்சினைகளை ஐந்தாண்டுகளுக்குள் தீர்க்க ரபினும் அரஃபாத்தும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வெட்டிக்குறைக்கப்பட்ட அரசிற்கு PLO கொடுத்த ஆதரவு அரசியலில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இதுதான் இஸ்லாமிய அரசியல்வாதிகளால், அதாவது ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத் ஆகியவற்றால் இட்டு நிரப்பப்பட்டது. என்றாலும், ஓஸ்லோ உடன்பாடுகளுக்கு அவை காட்டிய எதிர்ப்பு, பாலஸ்தீனிய வெகுஜனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய கிழக்கில் யூதர்களாயினும், அரேபியர்களாயினும் உழைக்கும் மக்கள், சியோனிசம், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் இல்லை. ஒரு தேசியவாத மற்றும் பிற்போக்கான, வகுப்புவாத முன்னோக்கு அடிப்படையில்தான் அந்த எதிர்ப்பு இருந்தது.

தொடரும்....

Top of page