World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada's new Conservative government will intensify assault on workers' and democratic rights

கனடாவின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் தொழிலாளர்கள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதலை உக்கிரப்படுத்தும்

By Keith Jones
25 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

திங்கட்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ்கள், புதிய கன்சர்வேட்டிவ் சிந்தனையாளரான ஸ்டீபன் ஹார்ப்பெர் தலைமையில் பாராளுமன்ற கீழவையில் அதிக இடங்கள் பெற்றுள்ள கட்சி என்று வெற்றி பெற்றதை அடுத்து, பிரதம மந்திரி போல் மார்ட்டின் தான் விரைவில் தன்னுடைய லிபரல்களின் அரசாங்கத்தை சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதாக கூறியுள்ளார். பதவி இழப்பு அறிவிப்பு உரையில் 12 ஆண்டு கால லிபரல் ஆட்சியில் பிரதம மந்திரியாக டிசம்பர் 2003ல் இருந்து வந்த மார்ட்டின் தானும் விரைவில் லிபரல் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு கூட்டாட்சி தேர்தலில், கனடாவில் பெருவணிக உயரடுக்கினரின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகள் அரசாங்க கொள்கை தீவிரமாக வலதுபுறம் இருக்க வேண்டும் என்ற கருத்தில் கன்சர்வேட்டிவ்களுக்கு தங்களுடைய ஆதரவை கொடுத்துள்ளன. நாட்டின் முக்கிய நாளேடுகள் கன்சர்வேட்டிவ்களுக்கு ஆசிரிய தலையங்கங்கள் மூலம் ஆதரவை வெளிப்படுத்தியதின் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டது என்பதோடு, இன்னும் கூடுதலான வகையில் லிபரல்கள் மிக ஊழல் வாய்ந்துவிட்டதால் ஒழுக்கநெறிப்படி ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என்ற கன்சர்வேட்டிவ்களின் கருத்தையும் முழக்கமிட்டதோடு, ஹார்ப்பெரின் புதிய கன்சர்வேட்டிவ்களுடைய வேர்கள், இலக்குகள், பிணைப்புக்கள் ஆகியவற்றை சுண்ணாம்பு அடித்து மறைத்ததில் இருந்தும் வெளிப்படுத்தியது (வலதுசாரி மக்கள் ஈர்ப்புக் கொள்கை பேசும் Reform/Canadian Alliance Party மற்றும் Progressive Conservatives என்ற இரு பிரிவுகளின் இணைப்பினால் தோன்றியுள்ள புதிய கன்சர்வேட்டிவ் கட்சி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் குடியரசுக் கட்சியை முன்மாதிரியாகக் கொண்டுள்ளது).

ஹார்ப்பெர்-தலைமையிலான ஒரு கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் மூலம், பெருவணிக கனடா, பொதுநல அரசில் எஞ்சியிருக்கும் அம்சங்களை தகர்ப்பதில் முன்னிற்கவும், விரிவாக்கப்பட்ட, கூடுதலான ஆயுதங்களை கொண்ட கனேடிய இராணுவத்தின் மூலமும் புஷ் நிர்வாகத்தின் மூலமும் நெருக்கமான நட்பை கொண்டு உலக அரங்கில் தன்னுடைய சூறையாடும் நலன்களை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் விழைகிறது.

பிரதம மந்திரியாக நியமிக்கப்படவுள்ள ஸ்டீபன் ஹார்ப்பெர் இந்த இரு இலக்குகள் பற்றியும் தன்னுடைய வெற்றி உரையில் குறிப்பிட்டார். "சமச்சீருடைய வரவு செலவுத்திட்டங்கள், குறைவான பணவீக்கம், கடன் திருப்பித் தரல்" ஆகியவை சீராக நடைபெறும் என்ற முகமலர்ச்சியுடன் ஹார்ப்பெர் உறுதியளித்தார்; மேலும் கனடாவின் இராணுவ மரபை கனேடிய ஜனநாயகத்தின் முக்கிய அரண் என்றும், தற்போதைய கனேடிய இராணுவப் படைகள் (CAF) அமெரிக்க உதவியில் ஆப்கானிஸ்தானத்தில் இருத்தப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவும் வகையில் செயல்படுவதை பாராட்டியும் பேசினார்.

"உலகம் முழுவதிலும் எமது மதிப்பீடுகள் மற்றும் ஜனநாயக இலக்குகள் ஆகியவற்றை காப்பதில் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். இது இளைய கனேடிய வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தியாகம் செய்தமை மற்றும் இப்பொழுது பணியாற்றிவருவது ஆகியவற்றில் இருந்து தைரியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று ஹார்ப்பெர் பிரகடனப்படுத்தினார்.

"கனடாவின் நலன்களுக்காக எப்பொழுதும் பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் போதே, நாம் நம்முடைய நண்பர்களுடனும் நட்பு நாடுகளுடனும் ஒத்துழைக்கும் வகையில் செயல்புரிவோம்" என்றார் அவர்.

ஹார்ப்பெர் தேர்தலில் வெற்றிபெற்றதை வரவேற்கையில், Canwest செய்தி ஊடகப் பேரரசின் முன்மாதிரி வெளியீடான National Post, ஹார்ப்பெர் தன்னுடைய கட்சியின் பெரும் கிறிஸ்துவ அடிப்படையாளர்கள் பிரிவின் செல்வாக்கை தொடர்ந்து குறைத்து, பெருவணிக செயற்பட்டியலான பொது, சமூக செலவினக் குறைப்புக்கள், தனியார் மயமாக்குதல், கட்டுப்பாடுகளை அகற்றுதல், பெருவணிகம், சமூகத்தின் சலுகை பெற்ற அடுக்குகளுக்கு வரிகளை குறைத்தல் ஆகியற்றில் கவனக்குவிப்பு காட்டுமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. "அரசாங்கத்தின் தெளிவான பொறுப்புடைய துறைகள் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் கன்சர்வேட்டிவ்கள் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும்: ஏனைய துறைகளில் குறைவான செயற்பாடுகளையே, அதுவும் தேவைப்பட்டால், செய்தால் போதுமானது. இதுதான் டோரிகளுடை வெற்றிப் பிரச்சாரத்தின் குறிப்பிடத்தக்க மேலோங்கிய அம்சமாகும் -- குழந்தை பாதுகாப்பு வரிக்கடன் போல் இதுதான் கொள்கைகளில் தனிக் குடிமக்களுடைய பொறுப்பிற்கு முடிவுகளை விடும் தன்மையை கொள்ளும்." என்று போஸ்ட் அறிவித்துள்ளது.

"லிபரல் ஆட்சியின் கீழ் குறைந்த செயல்களை செய்தால் போதும் அரசாங்கம் என்பது நாளுக்கு நாள் தொலைவான கனவாகப் போய்க்கொண்டிருந்தது. திரு ஹார்ப்பெர் வெற்றியினால் அது அடையப்படாலாம் என்று வந்துள்ளது."

கன்சர்வேட்டிவ் வெற்றி அரசியலை இன்னும் கூடுதலாக வலதிற்கு தள்ளக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது பற்றி மகிழ்ச்சி அடைந்தாலும்கூட, பெருவணிக செய்தி ஊடகம் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் குறைவாக 124 இடங்களையே மட்டும் --மொத்த வாக்குகளில் 36.3 சதவிகிதம்தான் -- கொண்டுள்ள கன்சர்வேட்டிவ்கள் தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்புக்களைவிட கணிசமாக குறைவாகத்தான் செயல்படமுடியும் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது. லிபரல்களுடன் கோபமடைந்திருந்தாலும், பல வாக்காளர்களும் இன்னும் பாராளுமன்ற பெரும்பான்மையுடன் இயைந்திருக்கும் தடையற்ற அதிகாரத்தை கன்சர்வேட்டிவ்களுக்கு கொடுக்கத் தயாராக இல்லை.

உண்மையில், 2006 தேர்தல்களின் முடிவுகள் வரவிருக்கும் அரசாங்கத்தின் அரசியல், சமூகத் தளம் எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

செய்தி ஊடகங்கள், ஊழலை இடையறாமல் சுட்டிக்காட்டியதற்காக கன்சர்வேட்டிவ்களுக்கு வலுவாக ஆதரவு கொடுத்திருந்தபோதிலும்கூட, ஹார்ப்பெரை, "நிதானமான, முக்கிய சிறப்புடைய அரசியல்வாதி" என்று உருவகப்படுத்தியிருந்தாலும்கூட, கன்சர்வேட்டிவ்கள் 36 சதவிகித வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்யவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கனேடிய மக்களில் 23.5 சதவீதத்தினருடைய ஆதரவைத்தான் கொண்டுள்ளனர்; இது நான்கு கனேடியர்களில் ஒருவருக்கும் குறைவானவருடைய ஆதரவு என்ற பொருளைத் தரும்.

கன்சர்வேட்டிவ்களுக்கான ஆதரவு விகிதாசாரமுறையில் கிராமப்பகுதி, சற்று குறைந்த அளவில் நகரங்களில் புறநகர்ப்பகுதிகளின் ஆதரவையும், நான்கு மேற்கு மாநிலங்களிலும்தான் குவிப்பைக் கொண்டிருந்தது -- அதிலும் குறிப்பாக எண்ணெய் வளத்தில் அதிகமாக இருக்கும் ஆல்பெர்ட்டாவில் இது அதிகம்; அங்கு மொத்த 28 தொகுதிகளிலும் கன்சர்வேடிவிற்கு வெற்றி கிடைத்தது.

கியூபெக் மற்றும் ஓன்டேரியோ, சென்ட் லோரென்ஸ் பள்ளத்தாக்கு, பெரிய ஏரிப் பகுதிகளில் கன்சர்வேட்டிவ்கள் 181 இடங்களில் 50 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது; இவை கனடாவின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கொண்டுள்ளவையாகும்.

நாட்டின் மூன்று முக்கிய நகர்ப்புற மையங்களில் கன்சர்வேட்டிவ்கள் வெற்றி காண முடியாததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மோன்ட்ரீயல் தீவிலோ, டொரன்டோவிலோ, வான்கூவரிலோ கன்சர்வேட்டிவ்களால் ஒரு இடத்தைக் கூட அடைய முடியவில்லை. மெட்ரோ டோரோன்டோ புறநகர்ப்பகுதிகளில் தாங்கள் அமோக வெற்றியடைவோம் என்று கன்சர்வேட்டிவ்கள் பறைசாற்றியிருந்த போதிலும்கூட, 905 வட்டம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் தொடர்ந்து லிபரல்களுடைய பிடியில்தான் உள்ளன.

ஒரு அரசியல் காயப்படுத்தல்

வேறுபட்ட வகைகளிலும், அளவிலும் மற்ற மூன்று கட்சிகளும் அரசியல் சிராய்ப்பை, காயத்தை பெற்றுள்ளன.

லிபரல்களை பொறுத்தவரையில் 2004 தேர்தலில் அவர்கள் பெற்ற 135 தொகுதிகள் இப்பொழுது 103 ஆக குறைந்து, அவர்கள் மொத்த வாக்குகளில் 30.2 சதவிகிதத்தைத்தான் பெற முடிந்தது; அதாவது 2004 தேர்தலில் இருந்து 5 சதவிகித புள்ளி குறைவாகும் இது.

ஓன்டோரியோவில் லிபரல்கள் 21 இடங்களை இழந்துள்ள போதிலும், அவர்களுடைய நிலைக்கு பெரும் பாதிப்பு கியூபெக்கில் ஏற்பட்டது; இந்த மாநிலம் 20ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இக்கட்சியின் முக்கிய கோட்டையாக விளங்கியது. ஒரு வலதுசாரி திட்டமான அரசாங்கத்தின் செயற்பாட்டை குறைக்கும் வகைகளில் ஈடுபட்ட மாநில அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாலும், ஊழல் விவகாரத்தில் பங்கு கொண்டிருந்ததாலும் லிபரல்கள் ஆங்கிலம் அதிகம் பேசப்படும், புலம்பெயர்ந்நவர்கள் நிறைந்துள்ள மோன்ட்ரீயல் அடிப்படையில் புற அரணாக குறைந்துவிட்டது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 சதவீதத்தையும், கியூபபெக்கின் தொகுதிகளில் 13 மட்டும் கொண்டுள்ள நிலையில், லிபரல்கள் தேர்தலை பொறுத்தவரையில் கியூபெக்கில் இதுகாறும் இல்லாத அளவு மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளனர்.

சுதந்திர போக்கு உடைய Bloc Quebecois லிபரல்கள் பற்றிய ஊழல் குற்றச் சாட்டுக்களை பெரிதும் வெளிப்படுத்தியும், புதிய தேர்தல்களில் கூடுதலான வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதற்காக தேர்தல்களை முன்கூட்டி நடத்துவற்கு காரணம் என்ற குற்றச் சாட்டை சுமத்துவதில் முக்கிய பங்கையும் கொண்டிருந்தனர். தன்னுடைய நீண்ட கால எதிரிகளான லிபரல்களிடம் இருந்து BQ கணிசமான தொகுதிகளை கைப்பற்றினாலும், BQ உடைய நிலை நீண்ட காலம் அதிக செயலைக் காட்டாமல் இருந்த க்யூபெக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிப் பிரிவின் திடீர் எழுச்சியினாலும் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டது.

கியூபெக்கிற்கு கூடுதலான தன்னாட்சியையும் கியூபெக் அரசாங்கத்திற்கு சர்வேதேச விவகாரங்களில் புதிய பங்கினையும் உறுதிமொழியாக கூறிய அளவில், கன்சர்வேட்டிவ்கள், வலதுசாரி கியூபெக் தேசியவாதிகள் மற்றும் கியூபெக் வணிக, அரசியல் நடைமுறையில் முக்கிய பிரிவுகளின் ஆதரவை திரட்ட முடிந்தது. கியூபெக்கில் 10 இடங்களைத்தான் கன்சர்வேட்டிவ்கள் பெறமுடிந்தது என்றாலும், அவர்களுடைய திடீர் எழுச்சி BQ வினருக்கு முற்றிலும் எதிர்பாராத நிகர இழப்பான 3 தொகுதிகள் மற்றும் மக்கள் வாக்கில் 5 சதவிகிதப் புள்ளி இழப்பையும் அளித்தது. இந்தப் பாதிப்பு சுதந்திர இயக்கத்திற்குள் இருக்கும், பிரிவினை நாடுவோருக்கும் கியூபெக்கின் மாநில அரசாங்கத்திற்கு பிரிவினைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் வகை கூடுதலான அதிகாரத்திற்கு வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கும் பிரிவுகளுக்கும் இடையே அழுத்தங்களை உயர்த்தவும் இந்தப் பாதிப்பு வகை செய்யலாம் என்று கருதப்படுகிறது.

புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party - NPD) இன் சோசல் டெமக்ராட்டுக்கள், தொகுதிகள், மக்கள் வாக்கு ஆகியவற்றில் சுமாரான ஆதாயங்களை அடைந்தது. NDP கூடுதலாக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது; இது முக்கியமாக ஓன்டோரியோவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் கிடைத்தது; மக்கள் மன்றத்தில் இதன் விளைவாக அதற்கு 29 இடங்கள் கிடைத்துள்ளன; மேலும் மக்கள் வாக்கில் 1.8 சதவிகிதம் கூடுதலாகக் கிடைத்து 17.5 சதவிகித ஆதரவும் உள்ளது.

ஆனால் பிரச்சாரத்தில் குவிப்பாகக் காட்டியிருந்த அதன் இலக்கை அடைவதில் NDP தோல்வியுற்றுள்ளது: சிறுபான்மையினருக்கு செல்வாக்கு கூடியுள்ள பாராளுமன்றத்தில் சமச்சீர் தன்மையை நிலைநிறுத்தும் வகையில் போதுமான இடங்களில் அது வெற்றிகொள்ளவில்லை என்பதே அத்தன்மையாகும். அப்படி கிடைத்திருந்தால் NDP கடந்த பாராளுமன்றத்தில் தனக்கென போடப்பட்டிருந்த பாதையில் தொடர்ந்திருக்கும்; அப்பொழுது அது முதலில் சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை நிலைநிறுத்த உதவியது; அதன் பின்னர் ஊழல் பற்றிய வாக்கெடுப்பு போல் தேர்தலை நடத்துவதற்கு அது கன்சர்வேட்டிவ்களுக்கும் உதவியது.

ஜனவரி 23க்கு பின்னர் அதிகாரத்தில் பங்கு என்பதற்கான முயற்சியில், கூட்டாட்சி NDP தன்னுடைய வலதுசாரி பிரச்சாரத்தை மேலும் முடுக்கி விட்டது; பெரும் செல்வந்தர்களுக்கும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் கூடுதல் வரிவிதிப்பு வேண்டும் என்று முந்தைய தேர்தலின்போது கூறிய கருத்தையும் கைவிட்டது; ஜனநாயக விரோத தெளிவுச் சட்டத்தையும் தழுவிக் கொண்டது; லிபரல்களுடனும், கன்சர்வேட்டிவ்களுடனும் சேர்ந்துகொண்டு இராணுவத்திற்கு கூடுதலான ஆதரவு, குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கையிலும் இணைந்தது.

இப்படி NDP இன் பிற்போக்கான, பாராளுமன்ற உத்திகளின் இறுதி முடிவு இன்னும் கூடுதலான வலதுசாரி கன்சர்வேட்டிவ் பிரிவின் அரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்குத்தான் உதவியுள்ளது; இந்த அரசாங்கம் மிக விரைவில் இப்பொழுதே மிகக் குறைவாக உள்ள சமூகச் செலவினங்களை அகற்றப் பாடுபாடும்; அதை பாதுகாக்கத்தான் சோசல் டெமக்ராட்டுக்கள் லிபரல்களுக்கு தோல்வியை தவிர்க்க கடந்த பாராளுமன்றத்தில் உதவியிருந்தனர்.

வர்க்கப் பூசல் தீவிரமாகுதல்

தொழிலாள வர்க்கத்தை தூக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், பெருவணிக செய்தி ஊடகமும் பல சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்க அதிகாரிகள் அனைவரும் பாராளுமன்ற பெரும்பான்மை கணக்கு கன்சர்வேடிவகளுக்கு அதிக வகையில் தங்கள் வலதுசாரி திட்டத்தை செயல்படுத்த முடியாமல் செய்துவிடும் என்றும் நடைமுறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்றும் வாதிட்டுள்ளன.

கியூபெக் லேபர் கூட்டமைப்பின் தலைவர் ஹென்ரி மாசே உடைய கருத்துக்கள் இக்கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பு மாதிரியாகத்தான் உள்ளன: "கன்சர்வேட்டிவ்கள் ஒரு சிறுபான்மையினராக இருப்பர் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுடைய தலைவருக்கு (ஹார்ப்பெர்) இது அவருடைய வலதுசாரியை கட்டுப்படுத்த எளிதில் வகைசெய்யும். தொழிலாளர்களுக்காக நான் அதிகம் கவலைப்படவில்லை. அரசாங்கத்தை செயலற்றதாகவோ, பணிகளுக்கு வெட்டு என்றோ திரு ஹார்ப்பெர் ஒன்றும் உறுதியளித்துவிடவில்லை. ஆட்சித்துறையின் உயர்மட்டங்களை நன்கு துப்புரவாக்கும் பணிகளைத்தான் அவர் செய்வார்."

இது பொருளற்ற பேச்சாகும். வரவிருக்கும் காலத்தில் வர்க்கப் பூசல் விரைவில் தீவிரத்தைக் காணும் என்ற எச்சரிக்கையை தேர்தல்கள் கொடுக்கின்றன என்பதை தொழிலாள வர்க்கம் அறிய வேண்டும்.

Jean Chretien மற்றும் Paul Martin உடைய 12 ஆண்டு கால லிபரல் அரசாங்கம் பெருமந்த காலத்திற்கு பின் மிகக் கூடுதலான வலதுசாரி தனைமையக் கொண்டிருந்த கூட்டாட்சி அரசாங்கம் ஆகும். கனேடிய வரலாற்றிலேயே மகத்தான அளவில் சமூக செலவினங்கள் குறைப்பை இது நிகழ்த்தியது; செல்வ மறுபங்கீட்டில் பெருவணிக நிறுவனங்கள், செல்வந்தர்களுக்கு மிகப் பெரிய அளவில் வரிகுறைப்பு கொடுத்த வகையில் செயற்பாடுகளை நிகழ்த்தியது; பிரிவினை கோரும் கியூபெக்கை தடுத்து நிறுத்தும் வகையில் கியூபெக்கின் தனிநாட்டுக் கோரிக்கை இயக்கத்தில் வருங்காலத்தில் மோதல் கூடாது என்னும் வகையில் கூட்டரசிற்கு அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் சட்டத்தை இயற்றியது; 2001க்கு பின்னர் மிகப் பெரிய முறையில் கனடாவில் இராணுவத்தின் விரிவாக்கத்தை மேற்கொண்டு, யூகோஸ்லேவியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்க தலைமையிலான போர்களில் CAF ஐ ஈடுபடுத்தியது.

ஆயினும்கூட, ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் இன்னும் தீவிர, கூடுதலான வகையில் வலதுசாரிப் போக்கை மேற்கொள்ளாததற்காக லிபரல் அரசாங்கத்திடம் ஆர்வக்குறைவு கொண்டது; 'மறுபங்கீட்டு முறையில்' சமூச் செலவுகளை இன்னும் குறைக்காததற்காக அதிருப்தியை காட்டியது; கனேடிய சமாதானத் தன்மை என்ற வாய்ச்சவடால் காட்டி CAF -ஐ இன்னும் கூடுதலான முறையில் கனேடிய புவிசார்-அரசியல் அதிகாரத்தை 21ம் நூற்றாண்டில் வலியுறுத்திக் காட்டும் வகையில் பெருக்காததற்காக குறைகண்டது; கனேடிய அமெரிக்க உறவுகளை தவறாகக் கையாண்டதிலும் ஏமாற்றமுற்றது.

மரபார்ந்த வகைகளில் கொள்கையில் மாற்றத்தை தோற்றுவிக்க முடியாத வகையில், கனடாவில் பெருநிறுவன மேற்தட்டுக்கள் மற்ற வகைகளை கையாள முற்பட்டுள்ளன. முதலில் Jean Chretien ஐப் பதவியில் இருந்து வெற்றிகரமாக இறக்குவதற்கு அது மார்ட்டினை தூண்டியது. பின்னர், மக்களுக்கு பிடிக்காத கொள்கைகளை செயல்படுத்த சற்று "தயங்கியபோது", புதிய கன்சர்வேட்டிவ்களுக்கு ஆதரவாக அது போயிற்று; இக்கட்சியோ Globe and Mail கூற்றின்படி "நினைவுக்காலத்திலேயே மிகப் பிற்போக்குத்தன்மையுடைய நபரின் தலைமையில் உள்ளது -- இந்த விலங்கு முன்னாள் முன்னேற்ற கன்சர்வேட்டிவ் பிரதம மந்திரிகளான Brian Mulroney, Joe Clark ஆகியோரிடம் இருந்து மாறுபட்டது"; மேலும் அது கன்சர்வேட்டிவ்களை அவதூறு இறைத்து அதிகராத்தை கைப்பற்றும் வகையில் ஆதரிக்கவும் செய்தது.

இத்தோடு இணைந்த வகையில், ஆளும் வர்க்கம் கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிமன்றம் Chaouilli வழக்கில் கொடுத்த தீர்ப்பின்படி சுகாதார பாதுகாப்பு தனியார்மயத்தை திறப்பதற்கு வகை செய்ததற்கு ஒரு கருவியையும் கண்டது; அரசியல் வாதிகள் மக்களுடைய எதிர்ப்பில் மருத்துவ பராமரிப்பு தகர்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க தயங்குகையில் இந்த நீதிமன்ற உதவி கிடைத்தது.

கனடாவில் அனைவருக்கும் பொதுச் சுகாதார காப்பீட்டு முறைக்கு தேர்தல் காலத்தில் ஹார்ப்பெர் ஆதரவு கொடுத்தபோதிலும்கூட, அவருடைய இரு நெருக்கமான நண்பர்களான கியூபெக்கின் பிரதம மந்திரி Jean Charest (முற்போக்கு கன்சர்வேட்டிவ்களின் முன்னாள் தலைவர்) மற்றும் ஆல்பெர்ட்டாவின் கன்சர்வேட்டிவ் பிரதம மந்திரி Ralph Klein இருவரும் தங்களுடைய திட்டமான சுகாதார காப்பு தனியார்மயத்தை தொடரும் திட்டத்தை தேர்தல்கள் "இடையூறு செய்துவிடுமோ" என்ற அச்சமின்றி தொடர இருப்பதாக அமைதியாக காத்திருந்தனர்.

இப்படி நெடுந்தூரம் வலதிற்கு அரசியலை மாற்றவதற்கு சென்றுள்ள வகையில், பெருநிறுவன கனடா, புதிய அரசாங்கம் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மையை கொள்ளவில்லை என்பதால் அதன் இலக்கை அடைவதில் சிரமப்படப் போவதில்லை; இக்காலக்கட்டத்தில் இதேபோன்ற சூழலில் ஜேர்மனிய ஆளும் வர்க்கம் அதன் இரு முக்கிய கட்சிகளான Socialist Democrats, Christian Democrats இரண்டையும் பெருங்கூட்டணி அமைக்கச் செய்து பிற்போக்கான சமூகக் கொள்கையை செயலாற்ற பணித்துள்ளது போல், இங்குள்ள ஆளும் வர்க்கம் செய்யவில்லை.

ஹார்ப்பெர் மற்றும் அவருடைய கன்சர்வேட்டிவ்கள் தேர்தலில் வெற்றி பெற்றதே கனேடிய வாக்காளர்கள் வலதிற்கு சாய்ந்துள்ளனர் என்று பெருவணிக ஊடகங்கள் வாதிட தலைப்பட்டுவிட்டன. அனைத்துக் கட்சிகளும் அவர்களுடைய திட்டங்களை இதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுமாறும் அது வலியுறுத்தியுள்ளது; அனைவரும் ஒன்றாகப் பாடுபடவேண்டும் என்றும் தேவையில்லாத மூன்றாவது தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

லிபரல் தலைமையை இராஜினாமா செய்தவகையில், மார்ட்டின் தான் கனேடிய ஆளும் மேற்தட்டுகளின் நம்பிக்கையை இழந்துவிட்டோம் எனப் புரிந்து கொண்டதாக அடையாளம் காட்டியுள்ளார்; லிபரல்கள் குறைந்தது இவ்வாண்டாவது தீவிரமுறையில் கன்சர்வேட்டிவ்களுக்கு எதிர்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்பதும் இதன் பொருளாகும்.

NDP ஐப் பொறுத்தவரையில், வரவிருக்கும் அரசாங்கத்துடன் இயைந்து நடக்கப் போவதாக அது ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தல் இரவன்று நிகழ்த்திய உரையில் NDP தலைவர் Jack Layton அறிவித்தார்: "நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடனும், புதிய அரசாங்கத்துடனும் புதிய கனேடிய முன்னேற்றத்தை காண்பதற்கு ஒத்துழைப்பதில் கடுமையாக உழைத்து வழிவகைகளை காண்போம்."

தங்களுடைய பங்கிற்கு, ஹார்ப்பெரும் அவருடைய கன்சர்வேட்டிவ்களும் "விரும்புவோரின் கூட்டை" நாடாளுமன்ற ஆதரவை தங்கள் வலதுசாரி திட்டத்திற்கு பெற்று நிறுவுவதற்கு அனைத்தையும் செய்வர். அவர்கள் லிபரல்களுடன் நட்புக் கொண்டுகூட பெருவணிக நிறுவனங்களின் மீதான வரிக் குறைப்புக்களை கொண்டுவருவதற்கும், இராணுவச் செலவுகளை அதிகரிப்பதற்கும் சேர்ந்து கொள்ளுவர்; கூட்டாட்சி அரசு செலவுகளைக் குறைப்பதற்கு BQ உடன் சேர்ந்து கொள்ளுவர்; பின்னர் நெறியான அரசாங்கத் திட்டத்தை கொண்டுவருவதற்கும் புதிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக சட்டம் இயற்றுதற்கும் NDP உடன் சேர்ந்து கொள்ளுவர்.

தன்னுடைய வெற்றி உரையில் குறிப்பிடத்தக்க முறையில் ஹார்ப்பெர் "கூட்டாட்சி முறையை மறுகட்டமைக்கும்" திட்டங்கள் பற்றி சுட்டிக் காட்டினார். பொதுநல அரசாங்கத்தில் எஞ்சியிருக்கும் கூறுபாடுகளை அகற்றுதல், மைய அரசில் அதிகாரத்தை குறைத்து அடிப்படை மாற்றங்கள் மூலம் கூட்டரசு மாநில அரசுகளுக்கு இடையே அதிகார பகிர்வை ஏற்படுத்துதல், அதையொட்டி ஓட்டோவா மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, பொது நலன் திட்டங்களுக்கு உதவுதல், செல்வம் அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து ஏழை மாநிலங்களுக்கு உதவிகள் அளித்தல் இவற்றின் மறுபெயராகும் இந்தத் திட்டம்.

கியூபெக்கின் ஆளும் மேற்தட்டு இப்பிரச்சினையில் ஹார்ப்பெருடன் இணைந்த கருத்தையே கொண்டுள்ளது; ஏனெனில் அது கூடுதலான தன்னாட்சிக்கு உதவும் என்று அது நம்புகிறது. இதையொட்டித்தான் தன்னுடைய தேர்தல் இரவு உரையில் BQ தலைவரான Gilles Duceppe ஓட்டோவாவிற்கும் மாநிலங்களுக்கும் இடையேயுள்ள நிதிய சமச்சீரற்ற தன்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

கன்சர்வேட்டிவ்கள் மற்றும் அவர்களுடைய ஆளும் வர்க்க எஜமானர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரப்படுத்த இருக்கும் தாக்குதல் முயற்சிகள் மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

ஆனால் இந்த எதிர்ப்பு அரசியலளவில் செயலற்றதாக செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றால், தொழிலாள வர்க்கம் தேசிய, முதலாளித்துவ ஆதரவு சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரிடம் இருந்து முழு உணர்வோடு தங்களை முறித்துக் கொள்ள வேண்டும்.

கியூபெக் தொழிற்சங்கத் தலைவர்கள் BQ விற்கு ஆதரவு, "கியூபெக்கின் நலன்களுக்கு ஆதரவு" என்ற பெயரில் ஏற்கனவே கன்சர்வேட்டிவ்களுக்கு அவர் பிற்போக்குத்தனமான மைய அதிகார குறைப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராகிவிட்டாலும், ஆங்கிலம் பேசும் கனடாவில் உள்ள NDP யும் தொழிற்சங்கத் தலைவர்களும் இதற்கு விடையிறுக்கும் வகையில் லிபரல்களுடனும், ஹார்ப்பெரின் "கூட்டாட்சியை மறுகட்டமைக்க வேண்டும்" என்ற முயற்சிக்கு அஞ்சும் கனேடிய ஆளும் வர்க்கப் பிரிவுடனும் நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது; அவர்களுடைய கருத்தின்படி அத்தகைய மறுகட்டமைப்பு கூட்டரசு அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்துவிடும்; அந்த அரசாங்கம்தான் கனேடிய முதலாளித்துவம் உலக அரங்கில் தன்னுடைய நலன்களை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும்.

தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் வேறுபட்ட மற்றும் தாக்குப்பிடிக்கத்தக்க அரசியல் தேவைப்படுகிறது; ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கத்தை அமைப்பதே அது; கனேடிய நாட்டின் அரசியலமைப்பு பற்றிய பூசல்களில் ஈடுபடும் ஆளும் வர்க்க முகாம்கள் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தல்; மூலதனத்தின் இலாப உந்துதலுக்கு கீழாக சமூகத் தேவைகளை கொள்ளும் நிலையை நிராகரித்தல்; ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் புலம்பெயர்ந்தோர் என்று அனைவரையும், அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாளர்களுடன் ஒரு பொதுப் போராட்டத்தில் உலகளாவிய முதலாளித்துவம், அது வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்புமுறை இவற்றிக்கு எதிராக ஒன்றிணைத்தல் என்பவை அதில் அடங்கும்.

See Also:

கனேடிய தேர்தல்கள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம்

கனடாவின் அடுத்த பிரதம மந்திரியாகக் வரக்கூடும் எனக்கூறப்படும் கன்சர்வேடிவ் ஸ்டீபன் ஹார்ப்பெர் யார்?

Top of page