WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
New York City transit worker speaks:
"They're churning up the next American revolution"
''அடுத்த அமெரிக்க புரட்சிக்கு அவர்கள் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்''
நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர் சொல்கிறார்
By Jerry Isaacs
24 December 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
போக்குவரத்து தொழிலாளர் தொழிற்சங்கம் (TWU)
லோக்கல்100 34,00 தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை எந்த விதமான ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் வியாழனன்று
கைவிட்டது குறித்து உலக சோசலிச வலைத் தளம் நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர்
ஒருவரை பேட்டி கண்டது.
வியாழன்
பிற்பகலில் போக்குவரத்து தொழிலாளர் தொழிற்சங்க
(TWU) அதிகாரிகள் நகர் முழுவதிலும் தொழிலாளர்கள் மறியல்
செய்யும் இடங்களுக்கு வந்து என்ன அடையப்பட்டது என்பது பற்றி விளக்கமும் தராது பணிக்கு திரும்பவேண்டும் என்று
கட்டளையிட்டனர். இது மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்து வந்த மற்றும் டெய்லர் சட்டம் என்கிற தொழிற்சங்கத்திற்கு
எதிரான சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான டாலர்கள் ஊதிய இழப்பை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்ட பல
தொழிலாளர்களிடையே கணிசமான அளவிற்கு ஆத்திரத்தை உருவாக்கியது.
TWU விற்கும் மற்றும் போக்குவரத்து
ஆணையத்திற்கும் இடையில் நடைபெற்று வந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் தொடர்பான செய்திகள் ஒரு
இருட்டடிப்பிற்கு உட்பட்டதை தொடர்ந்து திடீரென்று வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்ற அறிவிப்பு வந்தது.
நிர்வாகம் ஓய்வூதிய பாதுகாப்புக்களை வெட்டுவது சம்மந்தமான தனது கோரிக்கையை கைவிட அல்லது குறைத்துக்
கொள்வதற்கு கைமாறாக தங்களது உறுப்பினர்களின் உடல் நல சேவைகளுக்கான செலவினத்தில் பெருமளவை ஏற்றுக்
கொள்ளச் செய்வதாக TWU
முன்வந்ததாக பரவலாக செய்திகள் வந்தன.
பல போக்குவரத்து தொழிலாளர்களிடம்
TWU தலைமையின்
செயல்பாடுகள் தொடர்பாக ஒரு சந்தேகம் நிலவியது மட்டுமல்லாமல், குறிப்பாக நியூயோர்க் நகர
தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த மற்றவர்களது ஆதரவு இல்லாமல் மற்றும் நகரம் முழுவதிலும் உள்ள உழைக்கும்
மக்களுக்கு நேரடியானதொரு வேண்டுகோளை விடுக்காமல் வேலைநிறுத்தத்தை அப்படியே நீடிப்பதன் பயனற்ற தன்மைப்
பற்றிய ஒரு உணர்வும் ஏற்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் ஒரு துணிச்சலான நிலையை எடுத்திருப்பதாகவும் மற்றும்
எதிர்காலத்தில் போராட்டங்கள் நடைபெறப் போவதை அவை எடுத்துக்காட்டுவதாகவும் தொழிலாளர்கள் கருதினர்.
புரூக்லினை சேர்ந்த ஒரு பேருந்து திருத்துனரான ஹொரேஸ் தனது கருத்துகளில் வேலைநிறுத்தம்
கைவிடப்பட்டதையும் மற்றும் நியூயோர்க் நகர போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டு மொத்தமாக
தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதற்கு எந்த வகையான போராட்டம் தேவைப்படுகிறது என்பதையும் விவாதித்தார்.
''என்ன நடந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன் மற்றும் முழுமையாக நான்
அதில் உடன்படவில்லை. வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மாநகராட்சியும் மற்றும் அரசும்
உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மறுத்தன. குறைந்த பட்சம் மேலும் இரண்டு நாட்களுக்காவது
தொடர்ந்து வேலைநிறுத்தத்தை நாம் நடத்தியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அப்போது நமது செய்தி
உண்மையிலேயே என்ன என்பது தெரிந்திருக்கும். என்றாலும் நாம் ஒரு வலுவான செய்தியையே தந்திருக்கிறோம்.
''நாம் இறங்கி வந்து விட்டதாக மேயர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால்
அது பொதுமக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு மகிழ்ச்சியூட்டும் பேச்சு. பேச்சு வார்த்தைகள் தோல்வியடையுமானால்
அதனுடைய தர்க்கரீதியான முடிவு நாம் வேலைநிறுத்தத்தை நீடிப்பதுதான். தொழிற்சங்கம் அதைச் செய்யுமா என்று
எனக்கு தெரியாது. ஆனால் நாம் செய்தாக வேண்டும். மேயர் என்ன சொல்கிறார் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
நான் வென்றெடுக்க விரும்புவதுடன் மற்றும் எங்களது ஓய்வூதியங்களையும் மற்றும் எங்களது உரிமைகளையும்
பாதுகாக்க விரும்புகிறேன்''.
வேலை நிறுத்த காலம் முழுவதிலும் ஊடகங்களின் தொடர்பு எங்களுக்கு இல்லை அவை
எங்களை தாக்குவதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. உங்களது வலைத் தளத்தை தவிர எங்களது குரல்கள்
நசுக்கப்பட்டன. ஆனால் எங்களை ஆதரித்த ஓட்டுநர்களில் எத்தனை பேருடைய பேட்டியை நீங்கள் தொலைக்காட்சிகளில்
பார்த்தீர்கள், ஒன்றுமில்லை. ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி கவலைப்படாமல் மக்கள் சிந்திக்க
தொடங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு காலத்தின் அருமை தெரியும் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் எங்களை
ஆதரித்தார்கள்.
''அவர்கள் அடுத்த அமெரிக்க புரட்சியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள்
ஒரு சிலர்நலவாட்சி உருவாவதையும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்துவதையும்
பார்த்துக்கொண்டு வருகிறோம். ரோனால்டு றேகன் செய்த பணியை மாநகர போக்குவரத்து ஆணையத்தில்
புளூம்பர்க் மற்றும் பட்டாக்கி செய்து கொண்டிருக்கிறார்கள். தொழிலாள வர்க்கம் ஒரு அறிக்கையிட வேண்டியது
அவசியமாகும்.''
அதற்குப் பின்னர் ஹொரேஸ்
TWU சர்வதேச
அமைப்பும் மற்றும் நகர தொழிற்சங்கங்களும் எப்படி அந்த வேலைநிறுத்தத்தை சதி வேலை மூலம் சிதைத்தனர்
என்பது குறித்து கருத்து தெரிவித்தார். ''தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அமைப்பாக
இருப்பதை நிறுத்திக் கொண்டு விட்டன. TWU
சர்வதேச தலைவான மைக்கேல் ஓ' பிரையன் ஒரு ஆண்டிற்கு 2,25,000 டாலர்களை சம்பாதிக்கிறார் மற்றும்
அது அவரது நிலையை விளக்குவதாக உள்ளது. அவர் வேலைநிறுத்தத்தோடு உடன்படவில்லையென்றால் அவர் வாயை
மூடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
''இதர நகர தொழிற்சங்கங்களான----ஆசிரியர்கள், பொது ஊழியர்கள் தீயணைப்புப்படையினர்
- அவர்கள் எங்களை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்கள். இந்தத் தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் பேரணிகளில்
கலந்து கொண்டார்கள் மற்றும் ஒரு வேலைநிறுத்த நிதியை உருவாக்குவதாக உறுதியளித்தனர். இறுதியில் தொழிற்சங்க
தலைவர்கள் ஒரு வெறும் பிதற்றலில்தான் சம்மந்தப்பட்டனர். தொழிற்சங்க அதிகாரிகள் 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்,'
மற்றும் அவர்களது நிலைகளை அச்சுறுத்துகின்ற எதையும் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.
''நான் ஜமேக்காவிலிருந்து வந்தவன், மற்றும் மக்கள் மூன்றாவது தரப்பு கட்சிகளை
பற்றியும் சிந்திக்கிறார்கள். பொது மக்கள் தங்களது சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு கற்பிக்கப்படுகின்றனர்.
பெரிய வர்த்தகக் கட்சிகள் சமூக பிரச்சனைகளான கருக்கலைப்பு, ஆன்மீக ஒழுக்கம் மற்றும் அறிவுபூர்வமான
திட்டம் பற்றிய சட்டவாக்கம் போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டு பாதுகாக்க வேண்டிய இரண்டு
அடிப்படை பொருளாதார நலன்களை மூடி மறைத்து விடுகின்றனர்.
''நான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவன் என்று கருதவில்லை. நான் தொழிலாள
வர்க்கத்தை சேர்ந்தவன். நான் ஆண்டு முழுவதிலும் சம்பாதிக்கின்ற பணத்தை விட 10 மடங்கு அதிகமான
டாலர்களை Wall Street
இல் பணியாற்றுகிறவர்கள் மிகையூதியமாக பெறுகின்றனர். பெரு நிறுவனங்கள்
உண்மையிலேயே எந்த பண இழப்பிற்கும் உள்ளாகவில்லை மற்றும் மிகக் குறைந்த தொழிலாளர்களை வைத்துக்
கொண்டு மேலும் மேலும் உற்பத்தி செய்கின்றனர். டெல்பி மற்றும் டெட்ராய்ட் கார் கம்பெனிகளில் என்ன நடந்து
கொண்டிருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். அதையே தான் இங்கு எங்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
''கொரியாவில் தயாரிக்கப்படும் கார்கள் குறைந்த தரமுள்ளவை என்று கருதப்படுகின்றன.
ஆனால் அவர்கள் தங்களது இலாபங்களை ஆய்வு மற்றும் அபிவிருத்தித்துறையில் மறுமுதலீடு செய்திருக்கிறார்கள் மற்றும்
அது டெட்ராய்டில் தயாரிக்கப்படும் எந்தக் கார்களுக்கும் இணையான தரம் உள்ளவை தான். அமெரிக்காவில் அவர்கள்
பெறுகின்ற இலாபம் முழுவதையும் உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு சம்பள இழப்பீட்டுத் தொகைகளாக தருகிறார்கள்.
எங்களது ஓய்வூதிய நிதிகள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன? அவை பங்குச் சந்தையின்
திடீர் மாற்றத்தைச் சார்ந்திருக்கின்றன மற்றும் நிறுவனங்களும் பொதுத்துறை தொழில்வழங்குனர்களும் அவற்றிற்கான
நிதிகளை குறைத்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன
தொழிலாள வர்க்கம் தாங்கள் பெற்ற இலாபங்களை பாதுகாத்து நின்றாக வேண்டும்.''
Top of page |