WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Socialist Equality Party public meeting
Australian anti-terror laws: framework of a police
state
சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டம்
ஆஸ்திரேலிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்: ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கான
வடிவமைப்பு
By Nick Beams
1 December 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
சிட்னியிலும், மெல்போர்னிலும் முறையே நவம்பர் 22, 29 தேதிகளில் ஆஸ்திரேலிய
அரசாங்கத்தின் "பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டவரைவு 2005" பற்றி சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த
பொதுக்கூட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரான நிக் பீம்ஸினால் வழங்கப்பட்ட அறிக்கையை
உலக சோசலிச வலைத் தளம் இன்று வெளியிடுகிறது.
மாணவர்கள், வேலையற்றோர், தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர்,
இந்த ஜனநாயக விரோத சட்டங்களுக்கு கொண்டுள்ள ஆழ்ந்த மக்கள் அதிருப்தியை இக்கூட்டங்களில் கலந்து கொண்ட
வகையில் வெளிப்படுத்தினர்.
தொழிற்கட்சி, பசுமைக் கட்சி என்ற இரு கட்சிகள் மற்றும் ஆஸ்திரேலிய ஜனநாயக
கட்சியினர் ஆதரவு கொடுத்திருந்த இந்தப் புதிய சட்டங்களின் ஆபத்தான உட்குறிப்புக்களை பீம்ஸின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இச்சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் உலக பொருளாதார அரசியல் காரணிகளும் அவரால் விளக்கப்பெற்றன; இவ்வறிக்கை
பரந்த வகையில் வினாக்களை எழுப்பி விவாதத்தையும் உருவாக்கியது.
மெல்போர்ன் கூட்டம் முடிந்த பின்னர் 11ஆவது வகுப்பு மாணவரான சாம் அவருடைய
பாட்டனார் ஸ்பெயனில் பிராங்கோவின் பாசிச ஆட்சியின்போது சிறையில் அடைக்கப்பட்டார் என்று விளக்கி இப்பொழுது
அதேபோன்ற நிலைமைகள் ஆஸ்திரேலியாவிலும் தோற்றுவிக்கப்படுவது பற்றி கவலை தெரிவித்தார். சிட்னி கூட்டத்திற்கு
வந்திருந்த ஜேர்மனிய இளவயதுப் பெண்மணி ஒருவர் ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல்களின் சர்வதேச தன்மை
பற்றி ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி நவம்பர் 3ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில்,
தொழிற்கட்சி பிரதம மந்திரிகள், வட்டார முதலமைச்சர்கள் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்கள் "ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கு சட்டபூர்வமான தளத்தை அமைத்துக்
கொடுக்கும் வகையில்" உள்ளன என்பதை நாங்கள் விளக்கியிருந்தோம்.
இப்படிக் கூறப்பட்டுள்ளது ஒன்றும் செய்தித்துறை மிகைப்படுத்தல் அல்ல; அல்லது அதன்
அரசியல் விளைவிற்காக கூறப்பட்ட அடைமொழியும் அல்ல; உண்மையில் நாங்கள் நிரூபிக்க இருப்பதுபோல், புதிய
சட்டங்கள், அவற்றின் அரசியல் தாக்கங்கள் பற்றிய மிகவும் நிதானமான, வரலாற்று அடிப்படையை கொண்ட
பகுப்பாய்வு ஆகும்.
பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுபவற்றின் முக்கியத்துவம்
மிகப் பரந்தளவில் நீதித்துறை வட்டாரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
Human Rights and Equal Opportunity
Commission இன் தலைவரான
John von Doussa
அக்டோபர் 31ம் தேதி ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கு உள்ள இலக்குகளைத்தான் இவையும் கொண்டுள்ளன என்று
விளக்கினார்.
"திட்டமிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கான அடையாளம் எனக்
கூறுதல் கூடுதலான அதிர்ச்சியானதாக ஒலிக்கலாம்; ஆனால் இந்த முன்கருத்தைப் பற்றி சற்று சிந்தித்துப்
பார்ப்போம்" என்று அவர் கூறினார். "போலீஸ் அரசாங்கத்தின் கூறுபாட்டை வரையறுக்கும்போது, நிறைவேற்று
அதிகாரத்தின் (Executive)
சார்பாக அதிகாரத்தை போலீஸ் செலுத்துகிறது என்றும் போலீசாரின் நடவடிக்கைகள் நீதித்துறையால்
எதிர்க்கப்படாது என்றும் பொருளாகும். வருந்தத்தக்க வகையில், இப்பொழுது விவாதத்திற்குட்பட்டுள்ள சட்டங்கள்
அந்த நிலையைத்தான் ஏற்படுத்தும்."
Sydney Morning Herald
ல் நவம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், சிட்னி நகர முன்னணி வக்கீல்களான
Ian Baker, Robert Toner
இருவரும் இச்சட்ட வரைவின் விதிகளின்படி அரசாங்கம் எந்தக் குற்றமும் செய்யாத, எந்தக் குற்றச்சாட்டிற்கும்
உட்பட்டிராத, மக்களை கட்டுப்படுத்தி, கண்காணித்து சிறையிலும் அடைக்க முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
"இன்று, 21ம் நூற்றாண்டில் நமது சொந்த பாசிச அமைப்பினுள்
வழுக்கிசெல்வதற்கான விளம்பில் இருக்கிறோம்; இரகசியமான கைது, இரகசிய காவல், இரகசிய விசாரணை
அனைத்தும் இரகசிய போலிசாரால் மேற்கொள்ளப்படும். இவைதான் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தில் விளைவாக
இருக்கும். அதாவது இதனால் ஆபத்திற்கு உட்படுத்தக்கூடியவர்கள் இதனை சரியாக பரிசீலனைக்குட்படுத்துவதை
தவிர்க்குமுகமாக கடைசி நிமிஷம் வரை, இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது: அதாவது ஆஸ்திரேலிய மக்களிடம்
இருந்து'' என அவர்கள் எழுதுகின்றார்கள்.
வேறுவிதமாகக் கூறினால், முந்தைய சட்ட, அரசியல் அமைப்புகளுக்கு புறத்தே
புதியவகையிலான ஆட்சி வடிவமைப்பிற்கு உறுதியான நகர்தல் ஏற்பட்டுள்ளது.
முதலாளித்துவ முறையின் பூர்ஷ்வா-ஜனநாயக அரசியலமைப்புக்கள் ஜனநாயக
உரிமைகளை தக்கவைத்து கொள்ளுவதற்கு எப்பொழுதுமே உத்தரவாதம் கொடுக்காது என்று மார்க்சிச இயக்கம்
வலியுறுத்தியுள்ளது; மேலும் தங்களுடைய முந்தைய ஆட்சி வடிவமைப்புக்களில் இருந்து நகர்தல் என்பது மிகப் பெரிய
அரசியல் முக்கியத்துவத்தை கொண்டதும் ஆகும் என்றும் இது வலியுறுத்தியுள்ளது. ஹோவர்ட் அரசாங்கத்தின்
பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களுக்கு இவை முற்றிலும் பொருந்தும்.
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முறையைக் கவனியுங்கள். அரசாங்கம்
பிரச்சினைகள் குறித்த சிறிய அறிக்கை கொடுக்கும் வகையிலோ, சட்டவரைவை பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு
கொடுக்கும் வகையிலோ இந்த நடவடிக்கைகள் வெளிவரவில்லை. மாறாக, அரசாங்கமும், மாநில பிரதம
மந்திரிகளும், வட்டார முதல் அமைச்சர்களும் குழுமியிருந்த கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று, இவை முதலில்
முன்வைக்கப்பட்டன; இவை இரகசியமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ACT முதல் மந்திரி
John Stanhope
சட்டவரைவை வலைத் தளத்தில் வெளியிட்டதை அடுத்து ஏற்பட்ட பெரும் பரபரப்பும் கூச்சலுமே காரணத்தை
தெளிவாக காட்டுகின்றன.
புதிய நடவடிக்கைகளின் முக்கிய விதியான 14 நாட்கள் "தடுப்புக் காவல்" என்று
அழைக்கப்படுவதில், காமன்வெல்த் அரசியலமைப்பை நேரடியாக தாக்குவதாக அமைந்து, மாநில பிரதமர்கள்
தொடர்பு கொள்ள வேண்டி இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே இத்தகைய தடுப்புக் காவலை
சுமத்துவதற்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு மாநிலங்களின் ஆதரவு தேவையாகும். வேறுவிதமாக கூறினால்,
இச்சட்டம் அரசியலமைப்பை ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் நம்பிக்கை இழக்கவைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
வடிவமைப்பும் உள்ளடக்கமும் எப்பொழுதும் நெருக்கமாக தொடர்பு உடையவை;
இந்த விவகாரத்திலும் அப்படித்தான் உள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை குறைக்கும் புதிய சட்டங்கள்
மரபார்ந்த பாராளுமன்ற வகைகளின் மூலம் அறிமுகப்படுத்தப்பட முடியாதவையாகும்; அவற்றிற்கு, அவற்றின்
உள்ளடக்கத்திற்கு பொருந்தும்வகையில் இரகசிய, நேரடிச் சதி வகைகள்தான் தேவைப்படும்.
கிளர்ச்சி தொடர்பான சட்டம் புதுப்பிக்கப்படல்
பல காலமாக கையாளப்படாதிருந்த, கிளர்ச்சி என வகைப்படுத்தும் செயல்கள்
பற்றிய சட்டங்கள் இச்சட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதன் முக்கியமான தன்மையாகும். ஆஸ்திரேலிய இராணுவத்தின்
தற்போதைய நவ-காலனித்துவ நடைமுறைகளின் தன்மையை ஒட்டி, கடைசித் தடவையாக அவை பயன்படுத்தப்பட்டது.
1960ம் ஆண்டு அப்பொழுது இருந்த ஆஸ்திரேலிய குடியேற்ற ஆட்சியின் கீழ் பப்புவா நியூகினியாவின் (PNG)
சுதந்திரத்திற்காக செயல்பட வேண்டும் என்று வாதிட்ட பிரியன் கூப்பர் என்னும் ஆஸ்திரேலிய காவல் அதிகாரிக்கு
எதிராக என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கூப்பர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் தற்கொலை செய்து
கொண்டார்.
புதிய சட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிரான குறைகூறல்கள் குற்றம் சார்ந்தவை எனக்கூற
இடம் அளிக்கின்றன; அதையும்விட முக்கியமாக ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு
ஆதரவு கொடுப்பதும் குற்றம் எனக் கூறுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், ஆஸ்திரேலிய படைகள் உட்பட அமெரிக்க
தலைமையிலான இராணுவமுறை ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு ஈராக்கியர்களின் எதிர்ப்பு படைகளுக்கு உரிமை உண்டு
என்று எவரேனும் கூறினால், இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினால்,
அத்தகைய அறிக்கைகள் நாட்டிற்கு நாசம் விளைவித்து கிளர்ச்சி என்று கருதப்பட்டு விடலாம்.
இத்தகைய நாட்டிற்கு அழிவு என விளக்கும் சட்டங்கள் புதுப்பிக்கப்படுதல்,
காலத்திற்கு ஒவ்வாதவை என்ற அடிப்படையில் குறைகூறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் மற்றும்
அதன் தலைமை வக்கீல் பிலிப் ரக்டோக்கை பொறுத்தவரையில் அதனால்தான் அவை நவீனப்படுத்தப்படும் தேவையை
கொண்டுள்ளன. வேறுவிதமாக கூறினால், 50 ஆண்டுகள் பயன்படுத்தப்படாததால், அவை நவீனமயப்படுத்தப்பட்டு
பயன்படுத்தப்பட வேண்டும்.
நவம்பர் 14 அன்று
Sydney Morning Heraldல் வெளியிடப்பட்ட
கட்டுரை ஒன்றில் தடையற்ற பேச்சுசுதந்திரத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும், "அரசாங்கத்திற்கு எதிரான
அதிருப்தி" என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் பல குடிமக்களும் கைதுசெய்யப்படாமல் தங்களுடைய
அதிருப்தியை வெளியிட்டுத்தான் வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் வேறு ஒரு ஒலிக்குறிப்பை அவர்
பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
"வன்முறையை பயன்படுத்துதல், உயிர்களை கவர்தல் இவற்றை அவர்கள்
வலியுறுத்தினால் அல்லது அவற்றிற்கு உதவியளித்தால், அது வேறு விஷயம்; அரசாங்கம் சட்டத்தின் முழுத்
தன்மையையும் பயன்படுத்த நேரிடும்."
ஆனால் இந்த நிலைமைதான் ஈராக், சொலோமன் தீவுகள் அல்லது பாபுவா
நியூகினியா ஆகியவற்றில் ஆஸ்திரேலிய படைகள் செயல்படுவதனை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
என்று யாராவது அழைப்புவிட்டால் துல்லியமாக ஏற்படும்.
"தற்போதுள்ள, முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கான
நல்லநோக்கத்துடனான பாதுகாப்பை கொடுத்துள்ளதால்" ருடோக்கின் கூற்றின்படி சுதந்திரமான பேச்சுரிமை
அச்சுறுத்தலுக்கு உட்படவில்லை.
அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கம் என்ற கோட்பாடு மிகப் பரந்த
தன்மையில் செயல்படும் வகையில், இவை இருக்கும் சட்ட நெறி அடிப்படைக் கருத்துகளை முற்றிலும் தகர்ப்பதை
எவரும் கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் ருட்டோக் இப்படிப்பட்ட வரிகளை எழுதியுள்ளார்; அதுவும்
குறிப்பாக நிரபராதி என்பது நிரூபிக்கப்படும் வரை ஏற்கப்படவேண்டும் என்ற கோட்பாட்டை எவரும் கவனிக்க
மாட்டார் என்று நினைத்தார் போலும். இக்கோட்பாட்டின்படி குற்றச் சாட்டில் இருந்து தங்களை காத்துக்
கொள்ளுபவர்கள் எதையும் வெளிப்படுத்த தேவையில்லை. அரசாங்கம்தான், குற்றவியல் துறை மூலம் ஐயத்திற்கு
இடமின்றி ஒரு குற்றம் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வாதங்களிலும் இந்த எண்ணம்தான் இழையோடி
நிற்கிறது என்பதையும் நாம் காணவியலும். அவை மிகத் தெளிவான வடிவமைப்பில் விவரிக்கப்பட்டது தாராளவாதிகள்
என்றில்லாமல் தொழிற்கட்சித் தலைவர்களால் என்பது குறிப்பிடத்தக்கது; இருக்கும் பயங்கரவாதச் சட்டங்களுக்கு
அவசரமாக கூட்டப்பட்டிருந்த செனட் கூட்டம் நவம்பர் 3ம் தேதி அன்று அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதாக
உறுதியளித்தனர்.
தன்னுடைய உரையில், செனட்டில், தொழிற்கட்சி தலைவர் கிறைஸ் ஈவான்ஸ்
எதிர்க்கட்சி ஏன் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.
"நம்முடைய பாதுகாப்பு நிறுவனங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள, குறிப்பிட்ட
பயங்கரவாத தாக்குதல் ஒன்றின் விளைவாக நாம் இன்று இந்தச் சட்ட வரைவைப் பற்றி விவாதிக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவரும் உள்துறை பாதுகாப்பு நிழல் மந்திரியும் நாம் விவாதித்திக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட
அச்சுறுத்தல் பற்றிய உளவுத்துறை தகவல்களை பெற்றுள்ளனர். இந்நாட்டின் மாற்றீடு அரசாங்கம் அமைக்கும் உரிமை
உண்டு என்ற நிலையில், தொழிற்கட்சி பாதுகாப்புத் துறைகளினால் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை
ஏற்கிறது."
இன்னும் கீழே இந்தக் கருத்தை அவர் வலியுறுத்திப் பேசியதாவது: "பாதுகாப்புப்
பிரிவுகள் மற்றும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை நல்ல எண்ணத்தில் ஏற்க வேண்டியது எங்கள் கடமை என்று லேபர்
கருத்தைக் கொண்டுள்ளது."
மீண்டும்: "அரசாங்கமும், அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைப்புக்கள் இந்தச் சட்டம்
தேவையானது, அவசரமானது என்று வாதிட்டுள்ளனர்... ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு நாங்கள் கொண்டுள்ள
பொறுப்பை கருத்திற்கொண்டு இதை நாங்கள் ஏற்க வேண்டியுள்ளது. மக்கள் தங்களுடைய நம்பகமற்ற தன்மையை
வெளிப்படுத்தக் கூடும்; ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள்
இது அவசரம் என்று வாதிட்டுள்ளன. மாற்றீட்டு அரசாங்கம் என்ற முறையில் எங்களுக்கு வேறு விருப்பம் இல்லை;
இந்த வாதத்தை ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற கட்டாயத்தின் பேரில் ஏற்கிறோம்." என்றார்.
இதே அரசாங்கமும், பாதுகாப்பு அமைப்புக்கள் ஈராக்கிற்கு எதிரான போர்
சதாம் ஹுசைன் "பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருந்தார்", அவை பயன்படுத்தப்படக் கூடிய தவிர்க்க
முடியாத ஆபத்து உள்ளது என்று வலியுறுத்தியபோது, ஈவான்ஸ் தெரிவித்த வகையில், "நாம் எங்குள்ளோமோ,
அங்குள்ளோம்", "நாங்கள் கையாளத்தேவையானதுடன் கையாளுகின்றோம்" என்ற அடிப்படையில் முக்கிய
காரணங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட்டிருந்தார்.
பதினைந்தே நிமிஷங்கள் ஆற்றப்பட்ட உரையில் ஈவான்ஸ் குறைந்தது 10 தடவையாவது
அரசாங்கம், போலீஸ் மற்றும் உளவுத் துறை பிரிவுகள் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் கூறும்
ஆலோசனையை ஏற்பதை தவிர வேறு வழியில்லை என்று வலியுறுத்திக் கூறினார்.
இடது தொழிற்கட்சி தலைவர்களில் ஒருவரான
John Faulkner, ஈவான்சின் நிலையில் இருந்து தனக்கு எந்த
வேறுபாடுகளும் கிடையாது என்பதைத் தெளிவாக்கினார். மூன்றே நிமிஷங்கள் நிகழ்த்திய உரையில் "அரசாங்கம்
கூறியதை ஏற்கிறது" என்றும் "நாட்டின் பாதுகாப்பு கொள்கையுடன் விளையாட்டு எதுவும் இல்லை" என்றும் அவர்
அறிவித்தார். ஹோவர்டுக்கு ஆதரவு கொடுத்ததற்காக பீஜ்லிக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பு என்ற தகவல்களின்
உண்மை இவ்வளவுதான். ஒரு எலிகளின் கலகம் என்பதைவிட வேறு ஏதும் இல்லை என்றுதான் அது ஆயிற்று.
ஒரு தொழிற் கட்சியாளர் நிலைப்பாட்டை பற்றிக் கூறிய தர்க்கம் தெளிவாகத்தான்
இருந்தது: அதாவது, இராணுவம், போலீஸ், உளவுத்துறை அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பது
ஒருபுறம் இருக்க, பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி உண்மையான விவாதங்கள் கூடாது
என்பதே அது. உளவுத்துறை அமைப்புக்கள் அன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்களிடமும், எதிர்க்கட்சி எனக்
கூறுப்படும் உறுப்பினர்களிடமும் தகவல் தெரிவித்தால் போதும். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுடைய
கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிடும். பாராளுமன்றத்தின் ஒரே பங்கு, ஏதோ ஒருவகையான ஜனநாயகம் இருப்பது
போன்ற போலித்தோற்றத்தை காட்டும் வகையில் ரப்பர்-முத்திரை இடுவது போல்தான். இந்த வழிவகை
முழுவதிலும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதின் தேவை பற்றிய தகவல்கள் கொடுக்கப்படுவதில்லை;
ஏனெனில் அது போலீஸ், மற்றும் உளவுத் துறையின் பணியை சீர்கேட்டிற்கு உட்படுத்திவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த கோட்பாட்டில் இருந்து அரசாங்கம் அல்லது பாதுகாப்பு நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கான
காரணங்களை பற்றி வினா எழுப்புதல் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து என்பதால், அத்தகைய வினா
எழுப்புதல் ஒரு குற்றம்சார்ந்த செயல் என்று கொள்ளப்படும் நிலை வந்துள்ளது.
இதுகாறும் அரசாங்கம் அத்தகைய முன்கருத்தை வைக்கவில்லையே ஒழிய, செய்தி
ஊடகத்தில் இருக்கும் அதன் ஆதரவாளர்கள் அவ்வாறு கூறத் தயாராக உள்ளனர்.
சிட்னி, மெல்போர்ன் நகரத்தில் நடந்த போலீஸ் சோதனைகள் கொடுத்த வாய்ப்பை
பயன்படுத்தி, வலதுசாரி ஏடான Sydney
Morning Herald ன் கட்டுரையாளர் மிரண்டா
டேவைன் ஹோவர்ட் அரசாங்கத்தையும், மாநிலங்களின் பிரதம மந்திரியையும் கண்டித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதியவர்களை
கண்டித்துள்ளார். க்வீன்ஸ்லாந்தில் இருந்து கடிதம் எழுதிய ஒருவர், பலருடை கருத்துக்களையும் ஒத்தே கூறியிருந்தவர்,
இந்த சோதனைகள் "அரசியல் ஊக்கம் கொண்டவை" என்று கண்டித்து "ஜோன் ஹோவர்ட் மீண்டும் மீண்டும் தனக்குத்
தேவையானதை அடைவதற்கு எதையும் செய்வார்; இது ஒன்றும் விதி விலக்கல்ல" என்று எழுதிய கருத்துக்கு
இவ்வம்மையார் கடும் சீற்றத்தை குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றைய பலரும் நம்புவதாக தெரிவித்த, அதாவது ஹோவர்டே இந்த
சோதனைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடும் என்பது நடக்கக்கூடியதே என்று ஜனநாயகக் கட்சியினரின் தலைவர்
Lyn Allison கூறியுள்ளதை, டேவைன் "இத்தகைய சதிகார
கற்பனைதிட்டத்தில் பரந்த பயணத்தை செய்வதாக" உள்ளது என்றும் கண்டித்துள்ளார்.
"இவர்களுடைய சிதைந்த உலகப் பார்வை திரித்தலுடன் நம்பிக்கையற்ற தன்மையும்
நிறைந்துள்ளதால் அவர்களுக்கு வானம் நீலமாக உள்ளதா என்பது பற்றிக்கூட உறுதியாகத் தெரியாது; பயங்கரவாத
அச்சுறுத்தலை அதன் உண்மை தன்மையில் புரிந்து கொள்ள இவர்களால் முடிவில்லை" என்று அவர் எழுதியுள்ளார்.
பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்கள், மற்ற போலிக் காரணங்கள் அனைத்தும்
புஷ், பிளேயர் மற்றும் ஹோவரடால் ஈராக்கிய படையெடுப்பிற்கு முன் கூறப்பட்டதை அடுத்தும், அதற்கும் முன்னரே
ஹோவர்டும் அவருடைய மந்திரிகளும் அகதிகள் படகுகளில் இருந்து குழந்தைகள் தூக்கி எறியப்பட்டது பற்றிக் கூறிய
பொய்களை கருத்திற் கொண்டாலும், எவருக்கு உலகப் பார்வை சிதைவுற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ள பெரும்
அறிவாற்றல் தேவையில்லை.
ஆனால் டேவைன் அம்மையார், அவர் வக்காலத்து வாங்கும் மற்றவர்கள்,
அரசாங்கத்தை குறைகூறுபவர்களை வெறுமே கண்டிப்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் அவ்வாறு
குறைகூறுபவர்கள் அரசாங்கத்தின் விரோதிகள் என்று கருதப்பட வேண்டும் என்றும், அவ்விதத்திலேயே அவர்கள்
நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இத்தன்மையில் அவர் எழுதுகிறார்: "மேலை முறை ஜனநாயகங்கள் உள்ளிருந்து எதிர்கொள்ளும்
எதிர்ப்பு, உடனடி வர்ணனை, தகவல் முழுமை என்ற இந்த சகாப்தத்தில்
நாற்காலியில் உட்கார்ந்து வெளிவரும் எதிர்ப்பு, இதற்கு முன்னால்
கண்டிராத அளவிற்கு தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் ஆபத்தை கொண்டுள்ளது.
இதனுடைய உட்குறிப்பு அத்தகைய எதிர்ப்பு அமைதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்
இல்லாவிடின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை மிகப் பெரிய ஆபத்தாகிவிடும் என்பதும் ஆகும். இந்த முன்னோக்கை
முன்வைக்கும் வகையில் புதிய கோட்பாடுகளை கோடிட்டுக் காட்ட டேவைன் முற்படுகிறார்.
"பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகள் சட்டத் திருத்தம் பற்றி சீற்றம் தன்னுடைய
Kirribilli
அறையில் ஒன்றும் ஹோவர்ட் இச்சட்டங்கள் பற்றி கனவு கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரவில்லை, மாறாக
போலீசும் ASIO
வும்தான் பயங்கரவாதத்தின் ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காக அவர்கள் கொள்ளும் பணி நன்கு இருக்க
வேண்டும் என்பதற்காக கோரியுள்ளவை ஆகும். படிகக் கண்ணாடி உருண்டைகளை பார்த்து ஊகிக்கும் மந்திரவாதிகள்
அல்லர் அவர்கள்: சிறு அறைகளில், தொலைபேசி கருவிகளை அணிந்து கொண்டு 24 மணிநேரத் தொலைபேசி
தகவல்கள் குறுக்கிட்டுக் கேட்டு தக்க சான்றுகளை சேகரித்து பேரழிவைத் தகர்ப்பதற்கு முற்படுபவர்கள்
அவர்கள்."
பூர்ஷ்வா பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் அதன் உருவாக்கத்தினதும் கோட்பாடுகள்
அனைத்தும் ஒரு போலீஸ் அரசாங்கத்திற்காக முற்றுமுழுதாக தலைகீழாக்கப்பட்டிருப்பதை இங்கு காண்கிறோம்.
அரசாங்கத்தின் அதிகார அமைப்புக்களான இராணுவம், போலீஸ், உளவுத்துறை போன்றவை சிவிலியன் கட்டுப்பாட்டிற்குள்,
அதாவது பாராளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது பூர்ஷ்வா
ஜனநாயக ஆட்சிகளின் அடிப்படை தன்மை ஆகும். ஆனால், டேவைனுடைய கருத்தின்படி, இந்த அமைப்புக்களின் நடவடிக்கைகள்
பற்றி "நாற்காலியில் உட்கார்ந்து குறைகூறுபவர்களின்" கருத்து, தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதாம்.
தெளிவாக இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வெறும் கடிதம் எழுதும் வகையில் தேசிய பாதுகாப்பு குறைமதிப்பிற்கு
உட்படுத்தப்பட்டுவிடும் என்றால், பாராளுமற்ற உறுப்பினர்களிடம் இருந்து குறைகூறல் வந்தால் அது இன்னும் கூடுதலான
ஆபத்தை கொடுத்துவிடும். அதுவும்கூட தேசிய பாதுகாப்பு நலன்களை கருத்திற்கொண்டு நிறுத்தப்பட வேண்டும் என்பதாக
அவர் கூறுகின்றார்.
டேவைன் அம்மையாருடைய குரல் ஒன்றும் தனிப்பட்டு ஒலிக்கவில்லை. அவருடைய
உணர்வுகள் The Australian
உடைய வெளிநாட்டு விஷயங்கள் ஆசிரியரான Greg
Sheridan கருத்துக்களில் எதிரொலிக்கின்றன. நவம்பர் 12
வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் அவரும் ஜனநாயக கட்சி தலைவர்
Lyn Allison
இன் கருத்தான போலீஸ் சோதனைகள் ஹோவர்டினால் இயக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆட்சேபனை
தெரிவித்துள்ளார்.
"உலகத்தை முடிவில்லாத தொடர் சதித்திட்டங்களாக பார்க்கும் இந்த விபரீத
விருப்பம் இயல்பாகவே முற்போக்கு இஸ்லாமியர்களின் சதி நிறைந்த உலகப் பார்வைக்கு வலிமையைத்தான்
கொடுக்கிறது" என்று Sheridan
கூறியுள்ளார்.
"ஆஸ்திரேலிய ஜனநாயகவாதிகளே பெரும் ஆதாரம் நிறைந்த போலீஸ்
நடவடிக்கைகளை இப்படி விளக்கம் காணும்போது, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் செயல்களை, முஸ்லிம்களுக்கு
எதிராக காழ்ப்புடன் இயக்கப்படுபவை என்று தீவிர இஸ்லாமியர் ஒருவர் எடுத்துக் கொண்டால் அவரை எப்படிக்
குறைகூறமுடியும்?
"வேறுவிதமாகக் கூறினால், ஆஸ்திரேலிய அரசியலில் அதிக செல்வாக்கற்றவர்களிடம்
இருந்து வெளிப்படும் அபத்தமான, முட்டாள்தனமான கருத்துக்கள் இன்னும் கூடுதலான வகையில் இருண்ட கற்பனைகள்,
போலித் தோற்றங்கள் ஆகியவற்றை சற்றே மனப்பாதிப்பு, ஆபத்து நிறைந்த அரசியல்வாதிகளிடம்
ஏற்படுத்தக்கூடும். எனவேதான் அரசியல் தலைவர்கள், செய்தி ஊடகம் மற்றும் அறிவார்ந்த தலைவர்களும் சற்றி
நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளது."
"அத்தகைய நிதானப்போக்கு" விரும்பி ஏற்கப்படவில்லை என்றால், அது சுமத்தப்பட
வேண்டும் என்று பொருளாகிறது. இந்த அளவிற்கு
Sheridan போகவில்லை என்றாலும், அவருடைய வாதத்தின்
தர்க்கம் துல்லியமாக அதைத்தான் வெளிப்படுத்துகிறது.
ஒரு சர்வதேசப் போக்கு
அரசாங்கத்தின் சட்டம் பற்றிய புறநிலையான ஆய்வுகள் யாவும் பூர்ஷ்வா
பாராளுமன்ற ஜனநாயக முறையின் அடிப்படைக் கோட்பாடுகளை அகற்றுவதில் அதற்கு உள்ள ஆர்வத்தை நிரூபணம்
செய்கிறது; சில அடிப்படை கோட்பாடுகள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்துள்ளன.
அரசியலில் அவ்வளவு பெரிய மாற்றம் என்பதற்கு ஆழ்ந்து வேறூன்றியுள்ள காரணங்கள்
இருக்க வேண்டும். இப்பொழுது இத்தகைய நடவடிக்கைகளை, செயல்படுத்தும் பல அரசியல் தலைவர்களுடைய
நோக்கம் அல்லது தீய கருத்து என்று வெறுமனே அது கூறிவிட முடியாது.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை செய்துள்ள
புஷ், பிளேயர், ஹோவர்ட் அரசாங்கம் உள்நாட்டிலும் ஜனநாயக உரிமைகளை தாக்குவதில் ஆழ்ந்த முயற்சியில்
ஈடுபட்டிருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வோ, சமகாலத்திய தொடர்பு நிழ்ச்சியோ அல்ல; இவை இரண்டுமே
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் நடத்தப்பட்டவை ஆகும்.
தற்போதைய சகாப்தத்தில் உலக முதலாளித்துவத்தின் தன்மை இரண்டு
ஒன்றோடொன்று தொடர்பு உடைய இரு போக்குகளால் எடுத்துக்காட்டப்படுகின்றது. 1) அமெரிக்கா தலைமை
பங்கை கொண்டுள்ள நிலையில் பெரும் சக்திகள் உலக அரங்கில் மற்றொன்றைவிடக் கூடுதலான நிலையை
அடையவேண்டும் என்பதற்காக காலனித்துவ முறை மீண்டும் வெளிப்பட்டுள்ளது; மற்றும், 2) ஒவ்வொரு நாட்டிலும்
முந்தைய சமூக சீர்திருத்தங்கள் அழிக்கப்படுகையில் சமூக துருவப்படுத்தல்கள் ஆழமடைகின்றன.
1930களில் ஒன்றொன்பின் ஒன்றாக சர்வாதிகார, பாசிச வகை ஆட்சிகள்
அறிமுகப்படுத்தப்பட்ட போது, லியோன் ட்ரொட்ஸ்கி ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்பட்ட குறிப்பாக
அமெரிக்கா, பிரிட்டனுக்கும், பாசிச ஆட்சிகளான ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
அந்நாடுகளில் வளர்ச்சியுற்றிருந்த பொருளாதார நிலைமைகளில்தான் அடங்கியிருந்தன என்று குறிப்பிட்டார். இறுதிப்
பகுப்பாய்வில், பிரிட்டிஷ் ஜனநாயகம் பிரிட்டனிடம் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த பெரும் செல்வத்தின்
அடிப்படையில் தங்கியிருந்தது; இது பேரரசின் இருப்புக்களில் இருந்து அடையப்பட்டிருந்தது; அதனால்தான் அது
சலுகைகளை உள்நாட்டில் அளிக்க முடிந்தது. அதேபோல் இதன் அட்லான்டிக் கடந்த தம்பியான அமெரிக்கா ஒரு
முழு கண்டத்தின் இருப்புக்களையும் சுரண்டி செல்வம்மிக்கதாகவும் பலமானதாகவும் இருந்தது.
இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ள நிலை யாது?
அமெரிக்க முதலாளித்துவமுறை ஒருகாலத்தில் அது கொண்டிருந்த சவாலுக்கிடமில்லாத
மேலாதிக்க நிலையை இப்பொழுது பெற்றிருக்கவில்லை. மாறாக அது ஐரோப்பாவிலுள்ள தன்னுடைய பழைய
போட்டியாளர்களுடன் பூசலில் ஈடுபட்டுள்ளது (ஈராக்கின் மீது இது படையெடுத்த காரணங்களுள் ஒன்று அந்நாட்டின்
பரந்த எண்ணெய் இருப்புக்கள் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடாமல் தடுக்கப்பட வேண்டும்
என்பதும் ஆகும்); அதே நேரத்தில் கிழக்கில் குறிப்பாக சீனாவுடன் உள்ள "மூலோபாய போட்டியாளர்களுடன்"
ஏற்படும் போராட்டங்களில் தான் எப்படி மீண்டு வருவோம் என்ற கவலையும் அதற்கு உள்ளது. அமெரிக்க
தொழில்முறை ஒருகாலத்தின் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. இன்று ஜெனரல் மோட்டார் நிறுவனமே 30,000
வேலைகளை குறைக்க போவதாகவும், ஒன்பது ஆலைகளை மூடப்போவதாகவும் அப்பொழுதுதான் அது திவாலாகமல்
இருக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
பிரிட்டனை பொறுத்தவரையில், பேரரசு மாட்சிமை கொடுத்திருந்த காலம் எல்லாம்
மங்கிய நினைவாகப் போய்விட்டது; இப்பொழுது அது அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு கண்டத்தில் இருக்கும்
சக்திகளுக்கு ஒரு எதிர்சக்தியாக நிலைத்துக் கொள்ள முயல்கிறது.
தாராளவாத பிரதம மந்திரி ஹோவர்ட் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம்
ஆர்வத்துடன் அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையெடுப்பில் சேர்ந்து கொண்டது; இது, ஹாக்கின்
தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அமெரிக்க தலைமையிலான வளைகுடாப் போரில் சேர்ந்து
கொண்டதற்கு ஒப்பாகும். இரண்டிலுமே நோக்கம் ஒன்றுதான்: ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் செயல்களை தன்னுடைய
நலன்களை முன்னேற்றுவிக்க நினைக்கும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்திற்காக அமெரிக்காவின் ஆதரவைப் பெறவேண்டும்
என்பதுதான் அது.
அதே நேரத்தில், ஹோவர்ட் அரசாங்கம் பொதுவாக பழைமைவாத தன்மை
கொண்ட Sydney Morning Herald
ஏட்டின் பொருளாதார வர்ணனையாளர் Ross
Gittins விளக்கியுள்ள "வர்க்கப் போர்" என்பதை தொடர்கிறது;
இது தொழிற்துறை உறவுகள் சட்டத்தின் மூலம் தொடரப்பட்டுள்ளது; இச்சட்டங்களானது இந்தியா, சீனா ஆகியற்றின்
பெருகி வரும் போட்டிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இன்றியமையாதவை என்று ஹோவர்ட் கருதுகிறார்.
இப்பொழுதுள்ள நிலைமையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஒன்று தற்செயல்
நிகழ்வு அல்ல. உலக முதலாளித்துவ முறையின் அஸ்திவாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆழ்ந்த போக்குகளில்
அது வேர்கொண்டுள்ளது. இலாப முறையின் உள்ளார்ந்த நெருக்கடி என்பது சந்தைகள், இருப்புக்கள், செல்வாக்கு
மண்டலங்கள் ஆகியவற்றிற்காக பெரும் முதலாளித்துவ சக்திகளிடையே ஏற்படும் போராட்டம் இன்னும் கூடுதலான
ஆழ்ந்த தன்மையை பெற்றுள்ளது என்றும் இது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீது பெருகிய தாக்குதலுடன்
இணைந்து வரும் என்றும் தெரியவரும். இதுதான் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவத்தை கடந்த காலங்களில் அது
ஆட்சிபுரிந்துவந்த முறைகளில் இருந்து மாறவேண்டும் என்ற உந்துதலில் ஈடுபடசெய்துள்ளது. ஒரு புதிய செயற்திட்டத்தை
சுமத்துவதற்கு புதிய வடிவங்களிலான ஆட்சிமுறை உருவாக்கப்படவேண்டியுள்ளது.
இதில் இருந்து அவசியமான முடிவுகள் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். ஜனநாக உரிமைகளின்
மீதான தாக்குதல் என்பது இறுதியில் முதலாளித்துவ முறையின் இதயத்தானத்தில் உள்ள முரண்பாடுகளின் வெடிப்பின் ஆழத்தில்
இருந்து வருகிறது என்பதால், இந்த உரிமைகளின் பாதுகாப்பு என்பதற்கு அதன் ஆதாரத்தில் இறுக்கிப்படிக்கும் உத்தி
ஒன்று தேவைப்படுகிறது. சர்வதேச சோசலிச மூலோபாயம், முதலாளித்துவ முறையையே எதிர்த்து இயக்கப்படுவதற்கு,
ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தொழிலாள வர்க்கத்திற்காக கட்டமைக்கப்பட வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது.
அதிகாரபூர்வ அரசியல் அமைப்பிற்குள் செயல்படும் கட்சிகள் மற்றும் அவற்றின் பல
"இடது" ஆதரவாளர்களும் அத்தகைய முன்னோக்கிற்கு இயல்பாகவே விரோதப் போக்கைக் காட்டுகின்றனர்.
இதனால்தான் அவர்கள் அடிப்படை குடியுரிமை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்காக செயலாற்றுவதில்லை,
செயல்படவும் மாட்டார்கள்.
இது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்கு அமெரிக்க
இராணுவ சக்தியின் ஆக்கிரோஷமான செயற்பாட்டுடன் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது; சொல்லப்போனால்
கிளின்டனுடைய தலைமையில் ஜனநாயக் கட்சியினர்தான் ஈராக்கில் "ஆட்சி மாற்றம்" என்ற திட்டத்தை ஏற்றிருந்தனர்.
பிரிட்டனில் ஈராக்கின் மீதான படையெடுப்பும் ஜனநாயக உரிமைகள்மீதான அதையொட்டிய தாக்குதலும் பிளேயரின்
தொழிற் கட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டன; இதற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவும் உள்ளது. ஜேர்மனியில்,
தொழிலாளர்கள் மீதான தாக்குதல் நடத்துவதற்கு சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடைய
பெரும் கூட்டணியை நாம் காண்கிறோம். பிரான்சில் ஒரு மூன்று மாத கால நெருக்கடி நிலை, அல்ஜீரியாவில்
பிரெஞ்சு குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது முதலில் 1955ல் இயற்றப்பட்டு கொண்டவரப்பட்ட
சட்டம், இப்பொழுது மீண்டும் "இடது" என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகளினால் புறநகர்ப்பகுதிகளில் உள்ள
இளைஞர்கள் பால் ஆழ்ந்த விரோதப் போக்கு காட்டும் வகையில் அவர்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு "சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக" என்ற அழைப்பும் அவர்களால் விடப்படுகிறது.
Beazley யின் தலைமையிலான
தொழிற் கட்சியானது விசேடமாக ஆஸ்திரேலியாவிற்கே உரிய நிகழ்வுப்போக்கு அல்ல. ஒரு சர்வதேசப் போக்கின்
மிகக் கோரமான வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அது.
பசுமைவாதிகளை பற்றி என்ன கூறுவது? அவர்களுடைய உண்மை நிலையை மறைக்கும்
வகையில் பல வெற்றுரைகளைத்தான் நாம் பார்க்கிறோம். நவம்பர் 3 அன்று செனட்டின் அவசரக் கூட்டம்
பயங்கரவாத எதிர்ப்புத் திருத்தங்களை பரிசீலிப்பதற்குக் கூடியபோது, பசுமைவாதிகளின் தலைவர்
Bob Brown
பிரதம மந்திரி பாராளுமன்றத்றை சீற்றம் தரும் வகையில் உட்படுத்திப் பெரிதும் தவறாகப் பயன்படுத்துவது பற்றி
கண்டித்தார்; சட்டத்தை "கடுமையான அரக்கத்தன்மை" வாய்ந்த தொழில் துறை சட்டங்கள் பற்றிப் பேசுவதில்
இருந்து திசை திருப்புவதற்கு வந்துள்ளது என்று தாக்கினார்; "நம்முடைய ஜனநாயகத்தின் பெரிய, முக்கிய
உரிமைகளுக்கு" ஆபத்து என்று எச்சரித்தார். ஆனால் அனைத்து வெற்றுரைகளும், சலசலப்பும் முடிந்த பின்,
பிரெளன் பசுமைக் கட்சியும் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் என்று அறிவித்தார்.
டாஸ்மேனியாவில் இருந்து வரும் பசுமைக் கட்சி செனட்டரான
Christine Milne
"பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட், அவருடைய அரசாங்கம் ஈராக்கின் மீதான போரில் பங்கு கொண்டது, புஷ்
நிர்வாகத்திற்கு தளர்வற்ற ஆதரவைக் கொடுத்தது என்பது ஆஸ்திரேலியா பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எப்படி
விடைகொடுத்தது என்பதை உயர்த்திக் காட்டியுள்ளது" என்பது சான்றுகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
இவ்வம்மையார் போல் நியூ செளத் வேலைஸ் செனட் உறுப்பினரான
Kerry Nettle
"பரந்த அளவு, அரக்கத்தனமான, தீவிர அதிகாரங்கள்" ஏற்கனவே சட்ட
முறையின் அடிப்படைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது என்று கண்டித்தார். தொழிற்கட்சியில் இருந்து
"தலைமைப் பொறுப்பு வரவில்லை" என்றாலும் "மிகப் பெரிய அளவில்" எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், ஒரு
முக்கியமான சட்ட வல்லுனர்கூட அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஆனால் வாக்குப் பதிவு என்று வரும்போது, பசுமை வாதிகள் பேசாமல் இருந்து
விட்டனர். எதிர்த்து ஒரு குரல்கூட எழுப்பப்படவில்லை. செனட்டின் அவசரகால கூட்டத்தொடர் தொடங்கியதில்
இருந்து பசுமைக் கட்சியினரின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகத்தான் வெளிப்பட்டுள்ளது.
அரசாங்க குற்றவியல் வழக்குகள் இயக்குனர் எட்டு மாதங்கள் முன்பே திருத்தங்கள்
தேவை என்று கூறியது பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளிப்பாட்டுக்கு பின், அரசாங்கம் உரிய காலத்தில் நடவடிக்கை
எடுக்காததற்காக பிரெளன் அதைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதாவது அரசாங்கம் அடிப்படை
ஜனநாயக உரிமைகளை தாக்குவதற்கான உரிமைகளை விரிவுபடுத்தும் திருத்த திட்டத்திற்கு பிரெளன் முற்றிலும் ஆதரவு
கொடுத்து, தொடக்கத்தில் இருந்தே அதை வரவேற்கிறார்.
அரசியலில் வெளிப்படையான உண்மை என்னவென்றால், ஒவ்வொரு
நெருக்கடியின்போதும், சாதரண காலம் போல் அல்லாமல், அனைத்து அரசியல் போக்குகளின் உண்மைத்
தன்மையையும் அது வெளிப்படுத்தும் என்பதேயாகும்.
நவம்பர் 3ம் தேதி அவசரமாக செனட் கூட்டப்பட்டது அத்தகைய நெருக்கடிகளில்
ஒன்றாகும். இப்பொழுது அந்த அனுபவத்தின் படிப்பினைகள் நன்கு அறியப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக,
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது இப்பொழுதுள்ள அரசியல் வடிவமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட முடியாது
என்பதாகும்.
வரலாற்று ரீதியாக, ஜனநாயக உரிமைகள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன
அரசியல் போராட்டம் மூலம்தான் அடையப்பட்டது; மேலிருந்து நீதிமன்றங்கள் மூலமோ, பாராளுமன்றங்கள் மூலமோ,
அவை வழங்கப்பட்டதே இல்லை; ஆனால் அவை கீழிலிருந்து போராட்டத்தின் மூலம்தான் அடையப்பட்டவை ஆகும்.
அவ்விதத்திலேதான் அவை பாதுகாக்கப்படவும் முடியும்; அதாவது ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் இயக்கம்
வளர்க்கப்படுவதின் மூலம்தான். அத்தகைய இயக்கத்தின் வளர்ச்சிதான் அரசியல் நிலைமையை மாற்றும்.
உலகம் முழுவதும் இருக்கும் பற்பல பிற்போக்கு அரசாங்கங்களும் வலிமையான நிலைப்பாட்டில்
இருந்து செயல்பட்டுவருகின்றன என்ற தவறான சிந்தனையை எவரும் கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவ் அரசாங்கங்கள்
மீது பெருகிய விரோதப் போக்குத்தான் உள்ளது. உதாரணமாக ஆஸ்திரேலியாவிலேயே உலக வரலாற்றில் காணப்பட்ட
மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்ததை கருத்திற்கொள்ளுங்கள்; அவை 2003 பெப்ரவரியின் ஈராக் மீது
படையெடுப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், இம்மாதம் தொழிற்துறை உறவு பற்றிய சட்டங்களை அரசாங்கம்
கொண்டுவந்ததற்கு எதிரானதும் ஆகும்.
இந்த ஆட்சிகள் இயல்பான பலத்தால் ஆட்சியில் நிலைத்திருக்கவில்லை; மாறாக
தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கின் நெருக்கடியினால்தான் நிலைத்துள்ளன. அதாவது இருக்கும் கட்சிகளை பற்றிய
விரோதப் போக்கு என்பது அவற்றில் இருந்து விலகி, சுயாதீனமான அரசியல் இயக்கம் என்ற வகையில் வெளிப்படுத்தப்பட
வேண்டும்.
பழைய தொழிலாளர் அமைப்புக்கள் அனைத்தும் சீரழிந்துள்ள நிலையில், அத்தகைய
இயக்கத்தை கட்டமைப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயமும், ஒரு புதிய சோசலிசக் கட்சி அதை வழிநடத்தி
செல்லுதலும் வேண்டும். இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியினதும்,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் முன்னோக்கு
ஆகும்.
Top of
page |