:
வட அமெரிக்கா
New York City transit strike was quashed by the unions
நியூயோர்க் நகர போக்குவரத்து வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் நசுக்கப்பட்டது
By Bill Van Auken
24 December 2005
Back to screen
version
நியூயோர்க் நகரத்திலுள்ள தலைமை தொழிற்சங்க அதிகாரிகள் குழு ஒன்று நியூயோர்க்
நகர போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் திடீரென்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலைக்கு கொண்டு வருவதற்கு
ஒரு முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் 34,000 சுரங்கப் பாதை மற்றும் பஸ் தொழிலாளர்களை தண்டிக்கும் வகையில்
நிதி அபராதங்கள் விதிப்பதற்கும் மற்றும் நீண்டகால விளைவுகளை கொண்ட விட்டுக்கொடுப்புகளை பெற்றுக்கொள்ளும் மாநகர
போக்குவரத்து ஆணையத்தின் முதலாளிகளின் தொடர்ச்சியான முயற்சிக்கும் ஒரு பேர இடைத்தரகர்களாக செயல்பட்டனர்.
25 ஆண்டுகளில் தேசத்தின் மிகப் பெரிய வெகுஜன போக்குவரத்து முறையான இது முதலாவதாக
மூடப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் இந்த பிரிவு பாரிய ஆத்திரம் மற்றும் தியாகம் செய்வதற்கு விருப்பத்தோடு உள்ளதையும்
அது வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது மற்றும் அது தன்கையில் வைத்திருக்கக் கூடிய மகத்தான சமூக சக்தியையும் எடுத்துக்
காட்டுவதாக அமைந்திருந்தது. அதன் ஒரு விளைவாக நியூயோர்க் நகரம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள உழைக்கும் மக்களிடையே
பரந்த அனுதாபத்தை அந்த வேலைநிறுத்தம் வென்றெடுத்து.
ஆனால் நகரத்தின் அதிகாரபூர்வமான தொழிற்சங்க தலைமையால் இந்த வெளிநடப்பு
விரோதப்போக்கோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின்
போராட்டம் கட்டுமீறிப் போய்விடும் என்றும் உலக முதலாளித்துவத்தின் நிதி மையமான அவ்விடத்தில் நிலவுகின்ற சமூக
வெடிமருந்தை வெடிக்கச்செய்வதாக அமைந்து விடும் என்று அஞ்சினர். இந்த நகரத்தில் வறுமைவயப்பட்ட மற்றும்
போராடிக்கொண்டிருக்கின்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும்
Wall Street
கோட்டீஸ்வரர்களின் ஒரு செல்வந்த தட்டினருக்குமிடையில் சமூகப்பிளவுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.
தொழிலாளர் அதிகாரத்துவத்தின் பிரதான கவலை போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு
வெற்றிகரமான வேலைநிறுத்தம் வர்க்கப் போராட்டமாக மேலும் வெடிப்பதற்கு உற்சாகமூட்டிவிட கூடும் என்பதாகயிருந்தது.
எனவே அவர்கள் அந்த வேலைநிறுத்தத்தை நாசவேலை செய்வதற்கும் ஒடுக்குவதற்கும் முயற்சி செய்தனர்.
New York Times
தொழிற்சங்க அதிகாரத்துவம் வகித்த பங்கை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தது.
அது ஒரு துணைத்தலைப்பில் ''இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதற்காக உதவியவர்களில்
இடம்பெற்றவர்கள் மேயரும் மற்றும் இதர தொழிற்சங்கங்களின் தலைவர்களும் ஆவர்'' என்று அந்தக் கட்டுரையை
வெளியிட்டிருந்தது. டைம்ஸ் புதன் கிழமை பிற்பகலில் வெளியிட்டிருந்த செய்தியில் போக்குவரத்து
தொழிலாளர்கள் சங்கம் லோக்கல் 100 தலைவர் ரோஜர் டொசய்ன்ட்டுக்கும் 40 இதர தொழிற்சங்க
தலைவர்களுக்கும் இடையில் ஒரு தொலைபேசி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தது இந்த
தொழிற்சங்கம் போக்குவரத்து தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
New York Times
எழுதியிருந்தது என்னவென்றால் ''அதில் கலந்து கொண்ட மக்கள் தந்துள்ள தகவலின்படி பொது மக்கள் ஆதரவு
காட்டுவதில் அவரது விரக்தியை திரு. டொசன்ட் வெளிப்படுத்த முயன்றார்''.
''ஒன்றிலும் பங்குபெறாமல், என்னுடைய கோட்டை பிடித்துக் கொண்டு நிற்பதற்கு எனக்கு
எவரும் தேவையில்லை. அவர்களது கோட்டுக்களை கழற்றிவிட்டு நிற்கின்ற எவராவது ஒருவர்தான் எனக்குத் தேவை''
என்று அவர் சொல்லியதாக ஒருவர் நினைவுபடுத்தினார்.
ஆனால் அத்தகைய ஆதரவு எதுவும் வரவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டரை
நாட்கள் வேலைநிறுத்தம் செய்தபோது பேருந்துகளையும் சுரங்க ரயில் சேவையை நிறுத்தி விட்டு மறியல் செய்தபோது
நகரத்தில் இதர தொழிற்சங்கத்தின் எந்த ஒரு அதிகாரியும் வேலை நிறுத்தத்திற்கு வாய் மொழியாக ஆதரவு தருவதற்குக்
கூட முன்வரவில்லை.
இது எந்தச் சூழ்நிலைகளில் என்றால் அரசாங்கத்தின் முழு அதிகாரமும் போக்குவரத்து
தொழிலாளர்களை நசுக்குவதற்கு அணிதிரட்டப்பட்டிருந்தபொழுதாகும். மறியல் செய்த ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு
நாட்கள் ஊதியத்தை தொழிலாளர்களுக்கு அபராதமாக விதிப்பதற்கு வகை செய்யும் தொழிலாளர்களுக்கு விரோதமான
டெய்லர் சட்டத்தின் கீழ் அரசு ஒரு தடையுத்தரவை பெற்றது. மூன்று நாள் ஊதிய இழப்போடு சேர்த்து இந்த
அபராதத்தினால் வருகின்ற நிதி இழப்பு ஒரு சராசரி போக்குவரத்து தொழிலாளரது ஊதிய காசோலையிலிருந்து
அண்ணளவாக 2000$ வெட்டப்படுகிறது என்ற பொருளாகும். அதேபோன்று இந்த தடையுத்தரவு தொழிற்சங்க தலைமை
அதிகாரிகளையும் மற்றும் சாதாரண தொழிலாளர்களையும் சிறைக்கு அனுப்பும் சாத்தியப்பாட்டிற்கும் வகைசெய்கிறது.
நியூயோர்க்கின் பில்லியனரும் குடியரசுக் கட்சி மேயருமான மைக்கேல் புளூம்பேர்க் தனது
சொந்த தடைகளை விதிக்க முயன்றார். வேலைநிறுத்தம் செய்பவர்கள் ''குண்டர்கள்'' போன்று செயல்படுகிறார்கள்
என்று கண்டித்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட வேண்டும்
என்று வெற்றிகரமாக வாதிட்டார்----அது கூடுதலாக வேலை நிறுத்தம் நடைபெறும் ஒவ்வொரு நாளைக்கும்
தொழிற்சங்கத்திற்கு எதிராக இரட்டிப்பு அபராதம் விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வேலைநிறுத்தம் முடிந்தவுடன்
நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 25,000 டாலர்கள் ஒவ்வொரு வேலை நிறுத்தம் செய்தவருக்கும் எதிராக அபராதங்கள்
விதிக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளைக்கும் அந்த அபராதம் இரட்டிப்பாக்கப்படவேண்டும்.
வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக விசாரணையற்று தூக்கிலிடும் ஒரு சூழ்நிலையை
கிளப்பிவிடுவதற்கு பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் அளவிற்கு அதிகமாகவே முயற்சிகளை மேற்கொண்டன.
அவர்களை சிறையில் அடைக்க வேண்டும், வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரின. பாசிச நடவடிக்கை என்று
மட்டுமே வர்ணிக்கத்தக்க வசைமாரிகளை ஏவுவதில் ரூபர்ட் மூர்டோக்கின்
New York Post
பத்திரிகை தலைமை தாங்கியது.
வேலைநிறுத்தத்தின் கடைசி நாளன்று
New York Post
போக்குவரத்து தொழிலாளர்களை பரபரப்பான முதல் பக்க தலைப்பு செய்தியில்: ''எலிகள்'' என்று முந்திய நாளில்
மேற்கோள் காட்டியிருந்தது மற்றும் சிறைக்கதவுகள் அவரது முகத்தின் மேல் தெரிகின்ற அளவிற்கு ஒரு படத்தை போட்டு
டோசன்டை வியாழனன்று சித்தரித்திருந்தது. 2001 செப்டம்பர் 11ல் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை
செலுத்தி தாக்கிய பயங்கரவாதிகளோடு போக்குவரத்து தொழிலாளர்களை ஒப்பிட்டு பகிரங்கமாக ஒரு கட்டுரையை
பிரசுரித்திருந்தது.
''பொருளாதாரங்களை அழிப்பதை தங்களது திட்டமாக பயங்கரவாதிகள் உருவாக்கி
வருகின்றனர். உள் நாட்டில் பிறந்த இந்த வகையான எதிரி நகரத்தின் நலன்களை தங்களது இதயத்தில் கொண்டிருப்பதாக
பாசாங்கு செய்கிறார்கள். அதேநேரத்தில் அந்த எதிரி மிக பலவீனமான தொழிலாளர்களை குறிவைத்து
செயல்படுகிறார்'' என்பதாக New York Post
இன் கட்டுரையாளர் ஆன்டிரியா பேசேர் எழுதினார்.
''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்'' என்ற அமெரிக்காவின் உண்மையான
பொருளடக்கத்தை இதை விட அதிகமாக வேறு எவரும் அம்பலப்படுத்தியிருக்க முடியாது. உள்நாடு அல்லது வெளிநாடுகளில்
அமெரிக்க வங்கிகளும் மற்றும் பெரு நிறுவனங்களும் இலாபத்தை அறுவடை செய்வதற்கு எந்த தடைக்கல்லுக்கும் எதிராக
இது அமைந்திருக்கிறது. மற்றும் இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தடை விதிப்பதற்கான
சூழ்நிலைகளை உருவாக்குகிறது.
இவை அனைத்திற்கிடையிலும் நியூயோர்க்கிலுள்ள தொழிற்சங்க அதிகாரிகள் வாய் மூடிக்
கிடந்தனர். போக்குவரத்து தொழிலாளர்களை ஆதரித்து ஒரு சிறிய துண்டறிக்கையை கூட விநியோகிக்கவில்லை.
ஒருமைப்பாட்டு நடவடிக்கையில் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் சொந்த உறுப்பினர்களை கொண்டுவரவோ அல்லது
குறைந்தபட்சம் ஒரு பகிரங்க பேரணிகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. ''போக்குவரத்து தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தை நான் ஆதரிக்கிறேன்'' என்று வாய்விட்டு சொல்கின்ற அறிக்கையை கூட எந்த ஒரு தொழிற்சங்க
அதிகாரிகளும் வெளியிடவில்லை.
அவர்களது நடவடிக்கை போக்குவரத்து தொழிலாளர்கள் சர்வதேச சங்கத்தின்
செயல்பாட்டிலிருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. அது வேலைநிறுத்தத்தை சட்ட விரோதமானது அனுமதி பெறாதது
என்று பகிரங்கமாக அறிவித்தது. தொழிலாளர்கள் தங்களது மறியலை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டு
வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கும் கோரிக்கைவிட்டு, தனது வக்கீல்களை நீதிமன்றத்திற்கு அனுப்பி நகர நிர்வாகத்தின்
நிலையை ஆதரித்து தொழிற்சங்கம் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது என்று வாதிட அனுப்பியது.
டொசன்ட் எந்த விதமான ஆதரவும் இல்லாமல் விடப்பட்ட நிலையில் டைம்ஸ்,
தந்துள்ள தகவலின்படி இரண்டு தொழிற்சங்க அதிகாரத்துவங்களான
UNITE-HERE இன்
தலைவர் புரூஸ் ரேனர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் தொழிற்சங்கமான சேவை ஊழியர் சர்வதேச சங்கம்
லோக்கல் 32BJ
தலைவரான மைக் பிஷ்மேன் பக்கம் திரும்பியிருந்தார். அவர்கள் இருவரும் புளூம்பேர்க் இரண்டவாது முறையாக நகர
மேயராக பதவியேற்பதற்கு 70 மில்லியன் டாலர்கள் செலவிட்டு நடத்திய பிரசாரத்தை ஆதரித்தனர். அவர்கள் இருவரும்
மேயர் தலையிடுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று டொசன்ட் கேட்டுக் கொண்டார்.
புதிதாக பணிக்கு சேர்பவர்களின் ஓய்வூதிய விகிதங்களை மாற்ற வேண்டும் என்ற அதன் மூல
கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க மாநகர போக்குவரத்து ஆணையம் (MTA)
முன்வருமானால் சுகாதார சேவைகள் மற்றும் இதர பணிகளில் தொழிலாளர்களுக்கான செலவினத்தை வெட்டுவதற்கு
மாநகர போக்குவரத்து ஆணையத்திற்கு டொசன்ட் உதவுவார் என்று புளூம்பேர்க்கை அவர்கள் நம்பவைக்க செய்தனர்
என்று அந்த செய்திப் பத்திரிகை தகவல் தந்திருக்கிறது. டொசன்ட் தெரிவித்துள்ள யோசனையை ஏற்று அவர்
வேலைநிறுத்தத்தை இரத்துச் செய்ததும் போக்குவரத்து தொழிலாளர்களிடமிருந்து போதுமான அளவிற்கு உரிமைகளை
பறித்துக் கொள்ளலாம் என்று புளூம்பேர்க் தெளிவாக நம்பினார்.
இவர்கள் மட்டுமே இந்த பேரத்தில் தொழிற்சங்கம் சம்மந்தப்பட்ட முக்கிய உறுப்பினர்கள்
அல்லர். நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டவர் டீம்ஸ்டர்களின் தொழிற்சங்க முன்னாள் அதிகாரியான பாரி பியன்ஸ்டீன்.
அவர் 1989 முதல் மாநகர போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
பியன்ஸ்டீன் 1970களின் தொடக்கத்தில் சிறிது காலத்திற்கு ஒரு ''போர்குணமிக்கவர்'' என்று கருதப்பட்டவர்.
அப்போது அவர் தனது உறுப்பினர்கள் நியூயோர்க்கிற்கு செல்லும் பாலங்களில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை
முடக்கி நிர்வாகம் கேட்க்கும் சலுகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தொழிற்சங்க நிதியில் ஐந்து லட்சம் டாலர்களை
தனது சொந்த உபயோகத்திற்காக மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்ற கட்டளையால் அவர்
டீம்ஸ்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
மாநகர போக்குவரத்து ஆணைய தலைவரும் மற்றும் நில-கட்டிட விற்பனை ஊக பேரங்களில்
பில்லியனர் ஆனவருமான பீட்டர் காலிகவ் அந்த வேலை நிறுத்தத்தை தூண்டிவிட்டு கடுமையான நிலைவரமடைய காரணமாக
இருந்தார் என்று முன்னாள் தொழிற்சங்க அதிகாரத்துவவாதி மில்லியனராக உயர்ந்தவர் கூறியிருப்பதை
Times
மேற்கோள் காட்டியது.
''அழுத்தங்களை அவரால் சமாளிக்க இயலாது என்று பலர் நினைத்தனர். அவர் பணிந்து
விடுவார் ஒரு வேலைநிறுத்தத்தை தடுப்பதற்கு தன்னால் இயன்றதைச் செய்வார் மாநகர போக்குவரத்து ஆணையம்
எப்படியும் எந்த விலை கொடுத்தாவது வேலைநிறுத்தத்தை தவிர்த்து விடும் என்று நம்பினார் அது நடக்கவில்லை'' என்று
பியன்ஸ்டீன் அந்த செய்தி பத்திரிகையிடம் தெரிவித்தார்.
ஆரம்பத்திலிருந்தே தாங்கள் எதிர்த்து வந்த ஒரு வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கும் மற்றும்
தனிமைப்படுத்துவதற்கும் தவிர்க்க முடியாத பங்களிப்புச் செய்த முன்னாள் மற்றும் இன்றைய தொழிற்சங்க அதிகாரிகளின்
ஊழல் மிக்க பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதுதான்.
ஆனால் டொசன்ட்டின் நிலை என்ன? வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது அவர்
என்ன எதிர்பார்த்தார்? மற்ற தொழிற்சங்கங்கள் தனக்கு ஆதரவாக வரும் மற்றும்
TWU மிக பெருமளவில் தேர்தல் பிரசார நன்கொடைகளை வாரி
வழங்கிய ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் தொழிற்சங்கத்திற்கு அரசியல் முகமூடியாக செயல்படுவார்கள் என்ற
முற்றிலும் அடிப்படையற்ற ஒரு மாயையை அவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது. முற்றிலும்
முன்கணித்தப்படி இவை எதுவும் நடக்கவில்லை.
இந்த வேலை நிறுத்தத்தின் விளைவு பற்றி
Wall Street Journal
தனது செய்தி பக்கங்களில் அதன் பெரு நிறுவன வாசகர்களுக்கு ஒரு கடுமையான
மதிப்பீட்டை தந்திருக்கிறது. ''போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கம் லோக்கல் 100 ஒரு ஒப்பந்தம் அல்லது
பாரியளவு அபராதங்களிலிருந்து பொது மன்னிப்பு எதுவும் பெறாமல் வேலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
தொழிற்சங்க அதிகாரிகளின் பலவீனமான போக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. சேதம் விளைவிக்கும் வேலைநிறுத்த
ஆபத்துக்களையும் எதிர்கொண்டு எப்படி தொழிலதிபர்கள் தொழிலாளர்களிடமிருந்து ஓய்வூதிய மற்றும் சுகாதார
விட்டுக்கொடுப்புகளை பெறுவதற்கு தொழிற்சங்கங்களை எதிர்நோக்கினர் என்பதை அந்த போராட்டம் காட்டுகிறது. ஒரு
பலவீனமான தொழிற்சங்க இயக்கம் எதிர்நோக்கும் சவால்களை அது காட்டுகிறது. தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள்
எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது மற்றும் அடிக்கடி தனது போராட்டங்களில் நிச்சயமற்ற ஆதரவை பெற்று வருவது
மிக அப்பட்டமான உண்மையாகும்'' என்று அது எழுதியது.
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட 34,000 போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும்
அவர்களது போராட்டத்தை ஆதரித்த மில்லியன் கணக்கான மற்ற தொழிலாளர்கள் ஆகியோரை பொறுத்தவரை
நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் மகத்தான முக்கியத்துவம் நிறைந்த ஒரு மூலோபாய
அனுபவமாகும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக இந்த வேலை நிறுத்தம் அம்பலப்படுத்தியது என்னவென்றால்
தொழிற்சங்கங்கள் சமூக போராட்டங்களுக்கு ஒரு முற்றிலும் பயனற்ற கருவி என்பதாகும். தொழிலாள வர்க்கத்தை
கட்டுப்படுத்தி தோல்விக்கு ஏற்பாடு செய்வது தான் அவர்களது பணியாக இருக்கிறது.
செல்வக் குவிப்பிற்கும் இலாபத்திற்கும் தடையாக தோன்றும் அனைத்தையும் ஒழித்துக்
கட்டுவதற்கு Wall Street
இனால் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக ஒரு சமூக மற்றும் பொருளாதார
வேலைதிட்டம் மற்றும் ஒரு சுயாதீனமான அரசியல் மாற்றீடு இல்லாமல் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவது
இயலாத காரியமாகும்.
நியூயோர்க் மாநிலத்தின் டெய்லர் சட்டத்தையும் மற்றும் அதில் பொதுத்துறை ஊழியர்கள்
வேலை நிறுத்தத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் மட்டுமே போக்குவரத்து தொழிலாளர்கள் சந்திக்கின்ற
பிரச்சனைகள் அல்ல. தொழிலாளர்களில் எந்தப் பிரிவை சார்ந்தவர்களும் இன்றைய தினம் எந்த கடுமையான
போராட்டத்தில் ஈடுபட்டாலும் உடனடியாக அரசாங்கம் இரண்டுக் கட்சி முறை மற்றும் அமெரிக்க பெரு நிறுவனங்களின்
நலன்களை காப்பாற்றுவதற்காக அணிவகுத்துவருகின்ற ஒட்டு மொத்த நீதித்துறை மற்றும் போலீஸ் அதிகாரங்களையும்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
போக்குவரத்து வேலை நிறுத்தத்தை எஞ்சிய தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்கள் எதிர்த்தது
ஏன்? மற்றும் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கு டொசன்ட் தலைமையிலான
TWU லோக்கல்-100 விருப்பம் இல்லாமலும் மற்றும் இயலாத
நிலையிலும் இருப்பது ஏன்?
இந்த அமைப்புக்கள் இலாபமுறையை பாதுகாக்கவும் ஆதரிக்கவும் செய்கின்றன.
தொழிலாளர்களின் உழைப்பில் உற்பத்தித்திறனை பெருக்க வேண்டும் என்பதற்கு தொழில் அதிபர்களுடன் அவர்கள்
ஒத்துழைக்கிறார்கள் அதே நேரத்தில் அவர்களது உறுப்பினர்களை அரசியல்ரீதியாக ஆளும் செல்வந்தத் தட்டிற்கும் மற்றும்
அதன் இரண்டு கட்சி முறைக்கும் அடி பணிந்து நடக்கச் செய்கிறார்கள்------பிரதானமாக ஜனநாயகக் கட்சிக்கு
அவர்களது ஆதரவு மூலம் இதைச் செய்கிறார்கள்.
ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார சேவைகள் மீது பொது மற்றும் தனியார் துறை முழுவதிலும்
தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. புஷ் நிர்வாகம் சமூக பாதுகாப்பை இரத்து செய்வதில் உறுதி கொண்டிருக்கிறது.
மற்றும் அரசாங்கம் நிதியளிக்கும் சுகாதார சலுகைகளை கடுமையாக வெட்டுவதற்கும் உறுதிகொண்டிருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது மிகவலுவான அடிப்படையில்
கிளம்பிய சமூக மற்றும் வர்க்க பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை. புளூம்பேர்க் காலிக்கோ மற்றும் அவர்களது சக பில்லியனர்களும் மற்றும் பன்முக மில்லியனர்களும் கருதுவது
என்னவென்றால் பலாத்காரத்தையும் மற்றும் அச்சுறுத்தலையும் பயன்படுத்தி தொழிலாளர் போராட்டங்களை நசுக்கிவிட
முடியும் என்றும் மற்றும் தாங்கள் பயனடைந்துள்ள சமூக ஏற்றத்தாழ்வு முறையை நிலை நாட்டிவிட முடியும் என்றும் கருதிக்
கொண்டிருப்பது தவறானது.
தொழிலாள வர்க்கத்தின் பழைய தொழிற்சங்க அமைப்புக்களின் திவால்தன்மையால் அவர்கள்
மிகப் பெருமளவிற்கு இலாபம் ஈட்டினர். அவை கடந்த தலைமுறைகளில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த எந்த பயனையும்
பாதுகாக்கும் வல்லமையை முழுமையாக இழந்து விட்டன என்பதை நிரூபித்துள்ளன. ஆனால் உழைக்கும் மக்களது புதிய
போராட்டங்கள் தோன்றும் என்பது தவிர்க்க முடியாதது மற்றும் அரசியல் ரீதியில் ஆயுதபாணியாக்கி கொள்ளுமானால் இந்தப்
போராட்டங்கள் வெற்றி பெறும். அவர்கள் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வாழ்க்கைத் தரங்களையும்
மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும்பாலோரது வேலைநிலைகளையும் படிப்படியாக சிதைப்பதன் மூலம் தங்களை
வளப்படுத்திக்கொள்ள சூறாவளியில் அறுவடை செய்வார்கள்.
பெருவர்த்தகங்களுக்கு எதிராக ஒட்டு மொத்தமாகவும் மற்றும் குடியரசுக் கட்சி
ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிற்கும் எதிராகவும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒட்டு மொத்த தொழிலாள
வர்க்கத்தையும் அணி திரட்டுவதன் மூலம் ஒரு அரசியல் போராட்டம் நடத்துவதால் மட்டுமே தொழிலாளர்களின் எந்தப்
பிரிவினரது நலன்களையும் பாதுகாத்து நிற்க முடியும்.
நியூயோர்க் போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கிய நேரத்திலிருந்து சோசலிச
சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும்
நியூயோர்க்கிலும் மற்றும் நாடு முழுவதிலும் அமெரிக்காவில் சமூக போராட்டம் இதன் மூலம் புத்துயிர்
கொடுக்கப்பட்டிருப்பதை வரவேற்ற அனைவரையும் அரசியல்ரீதியாக ஆயுதப்பாணியாக்குவதற்கு முயன்றது.
இந்த அனுபவத்தை அரசியல் அடிப்படையில் செயல்படுத்த தொடங்குவதற்கு இதுதான் தக்க
தருணமாகும். ஏதாவது ஒரு தொழிற்சங்கமோ அல்லது மற்றைய தொழிற்சங்கமோ தன்னியல்பாக இதில் சாதனை புரியும்
என்று நம்புவது பயனற்றது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய சோசலிசத் தலைமையை உருவாக்குவதை தவிர
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு வேறு வழியில்லை.
போக்குவரத்து வேலை நிறுத்தத்தின் முக்கிய படிப்பினை என்னவென்றால் தொழிலாள
வர்க்கத்திற்கு புதிய வடிவங்களிலான அமைப்பு தேவை. அதற்கெல்லாம் மேலாக சமூக சமத்துவத்திற்கு போராடும் தனது
சொந்த வெகுஜனக் கட்சி தேவை மற்றும் மிகப்பெருமளவில் தனிப்பட்ட செல்வத் திரட்சி அதிகரிப்பதற்கு பதிலாக மிகப்
பெரும்பாலான மக்களது தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இதை சாதிப்பதற்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. அது
வெற்றி பெறுவதற்கு இந்தத் தேவைவை புரிந்து கொண்டவர்கள் முடிவுகளை எடுப்பதுடன் மற்றும் நடவடிக்கைகளில்
இறங்கியாக வேண்டும். இதற்கெல்லாம் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியில் சேர வேண்டும். |