World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Collaboration with CIA renditions highlights France's assault on democratic rights

சிஐஏ கைதிகளை விமானத்தில் அழைத்துச் சென்றதில் துணை நின்றமை ஜனநாயக உரிமைகள் மீதான பிரான்சின் தாக்குதலை நன்கு புலப்படுத்துகிறது

By Antoine Lerougetel
16 January 2006

Back to screen version

IFHR என்னும் சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பும் (La Fédération internationale des droits de l'homme), LHR (la Ligue française des droits de l'homme) என்னும் மனித உரிமைகளுக்கான பிரெஞ்சு கழகமும், "தாங்கள் பொபினி நகர நிர்வாக நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞரிடம் ஒருதலைப்பட்ச சிறைவைப்புக்கள், சட்டவிரோத காவல், சித்திரவதை மற்றும் போர்க்கைதிகள் பற்றியதில் மூன்றாம் ஜெனீவா மாநாட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளதை அடுத்து புகார் தெரிவிக்க போவதாக" கடந்த மாதம் அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவாண்மை (CIA) இரகசிய விமானங்களை பயன்படுத்தி "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பின்னணியில் கைதிகளை சட்டவிரோதமாக இரகசிய காவல் மையங்களுக்கு" எடுத்துச் சென்றது பற்றி நீதி விசாரணை கோரப்போவதாக IFHR மற்றும் LHR அறிவித்துள்ளன. "மிகத் தீவிரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு" CIA இந்த விமானங்களை பயன்படுத்தியதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும் இவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இரு அமைப்புக்களின் படி, "ஐ.நா. மரபுகள் சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இழிவு தரும் தண்டனை அல்லது நடத்தும் முறை இவற்றுக்கெதிராக ஐக்கிய நாடுகள் தீர்மானத்தால் தடுக்கப்பட்ட ....... சித்திரவதை, தவறாக நடத்துதல்" நடைமுறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. "இரண்டு சந்தேகத்திற்குரிய விமானங்களில் கைதிகள் அனுப்பப்படும்போது அவர்கள் மீது அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கருதுவதற்கு போதிய ஆதாரம் உள்ளது" என்றும் அவை மேலும் கூறியுள்ளன.

"குறைந்த பட்சம் இருமுறையாவது விமானங்கள், சந்தேகத்திற்குரிய முறையில், தாங்கள் இறுதியில் போய்ச்சேருமிடம் எது என்று தெளிவாக்காமல், பிரெஞ்சு விமான நிலையங்களில் (Brest-Guipavas, Paris- Le Bourget) இறங்கியுள்ளன. இந்த விமானங்களில் சிஐஏ யினர் கைதிகளை அழைத்து சென்றிருக்கலாம் என்பது பெரும் அச்சம் தரும் விஷயமாகும்; இதன் விளைவாக, நீதிமன்றத்தால் விரைவில் இந்த நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்த தேவையானவை செய்யப்பட வேண்டும் என்று IFHR, LHR இரண்டும் கோருகின்றன" என்றும் அறிக்கை கூறியுள்ளது. இந்த அமைப்புக்கள் "இந்நடவடிக்கைகள் பற்றி விசாரித்தல், தவறு செய்தவர்களை கண்டுபிடித்தல் என்பவை பிரெஞ்சு அதிகாரிகளுடைய ஆரம்பப் பொறுப்பு என்பதையும்" தாங்கள் வலியுறுத்த இருப்பதாக அவை கூறியுள்ளன.

சித்திரவதை, படுகொலை, ஒருதலைப்பட்ச காவல் ஆகியவற்றின் மீது உள்ள சட்டபூர்வ தடைகளை தவிர்க்கும் பொருட்டு, CIA இத்தகைய வழியில் கைதிகளை அத்தடைகள் அசட்டை செய்யப்படும் நாடுகளுக்கு அழைத்துச் செல்லுகிறது; இந்த வழக்கம் வாஷிங்டனுடைய ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு பெரும் சங்கடம் தருபவையாக உள்ளன; ஏனெனில் அவற்றின் உடந்தைத்தன்மை சான்றாக உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரிகள் சாமர்த்தியமான முறையில் அறிக்கைகளை வெளியிட்டு, இரண்டு அடையாளம் காணப்பட்ட CIA விமானங்களில், பிரான்சில் நிறுத்தப்பட்ட விமானங்களில், எந்தச் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன என்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.

Nouvel Observateur வலைத் தளம் டிசம்பர் 5 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான Baptiste Mattei ஐ மேற்கோள் காட்டியது, அவர் கூறியதாவது: "ஒருவேளை இந்த விமானங்கள் அங்கு இருந்திருக்க அதிகம் சாத்தியமுள்ளது ...பிரச்சினை என்னவென்றால் இந்த விமானங்கள் எதைச் சுமந்து சென்றன என்பதை அறிவதாகும்."

டிசம்பர் 2ம் தேதி இந்த வலைத் தளம் இரகசிய துறைகளுக்கு ஆதரவு கொடுத்து பேசிய பெயரிட விரும்பாத முன்னாள் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி ஒருவரை பேட்டி கண்டது; "CIA அங்கு இறங்கியது என்றால், எமது துறையினர் அது பற்றி அறிந்திருப்பர்; ஆனால் விமானங்களில் என்ன இருந்தது என்பது பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்று அவர் கூறினார். ஆனால் அவர் மேலும் கூறியதாவது: "அரசியல்வாதிகள் ஒப்புதல் கொடுத்திருந்தால், அவர்களுக்கு விமானம் எதைச் சுமந்து செல்கிறது என்பது தெரியும்."

உண்மையில், பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க பயங்கரவாத-எதிர்ப்பு அமைப்புக்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பு என்பது நீண்டகால வரலாற்று உண்மையாகும்; இவை இன்னும் கூடுதலான வகையில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் அல் கொய்தாவால் நடத்தப்பட்ட பின்னர் அதிகமாகியுள்ளன. பன்முக இடது சோசலிச அரசாங்கத்தின் முன்னாள் பிரதம மந்திரியான லியோனல் ஜோஸ்பன் 2002ல் Alliance Base என்று அழைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டு மையம் ஒன்றை நிறுவியிருந்தார்.

வாஷிங்டன் போஸ்ட், 2005 நவம்பர் 18, பதிப்பில் Dana Priest, இரண்டு டஜன் நாடுகள் கூட்டாக அமைத்திருந்த அமைப்புக்களின் இணைத் தளத்தின் ஒரு பகுதியாக இந்த மையம் இருந்தது என்றும், "அமெரிக்க, வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களுடைய வலைப்பின்னல்களை தகர்க்க அல்லது அவற்றில் ஊடுருவ திட்டமிட்டனர்" என்று எழுதியுள்ளார்.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு உளவுத்துறை மையங்கள் (CTICs Counterterrorist Intelligence Centres) "எவ்வாறு சந்தேகத்திற்குரியவர்களை எதிர்கொள்ளுவது, அவர்களை விரைவில் அழைத்து வேறு நாடுகளுக்கு விசாரணை, காவலில் வைப்பதற்கு பிடிப்பதா போன்றவை மீதாக அன்றாட முடிவுகளை எடுக்கும்.... செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர் ஒவ்வொரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் ஈராக்கிற்கு வெளியே பிடிக்கப்பட்டது அல்லது கொல்லப்பட்டது --மொத்தம் 3,000 இருக்கும்-- இது வெளிநாட்டு உளவுத்துறை பிரிவுகள் CIA உடன் இணைந்து செயலாற்றியதின் விளைவு ஆகும்; CIAஇன் துணை செயற்பாட்டு இயக்குனர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு இரகசிய சட்டமன்றக்குழு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்."

"பாரிசில், ஈராக் படையெடுப்பு பற்றி அமெரிக்க பிரெஞ்சு காழ்ப்பு உச்ச கட்டத்தில் இருந்தபோது, CIA மற்றும் பிரெஞ்சு உளவுத் துறை பிரிவுகள் CIAஇன் ஒரே சர்வதேச நடவடிக்கைகளை தொடக்கி உலகம் முழுவதும் கடுமையான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.... Alliance base என்று இரகசியப் பெயரிடப்பட்ட இதில் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இருந்தனர்."

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை நிதி கொடுத்து நடத்தும் வலைத் தளமான MIPT Knowledge Base பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பற்றி ஆண்டுச் சுருக்க அறிக்கைகளை தயாரிக்கிறது. 2001ம் ஆண்டு பற்றிய குறிப்பில், "அமெரிக்கா மீதான தாக்குதல்களை அடுத்து, பிரான்ஸ் பயங்கரவாதத்திற்கு ஐ.நா. விடையிறுப்பு ஒன்றைத் தயார் செய்வதில் முக்கிய பங்கை கொண்டிருந்தது மற்றும் NATO உடன்பாட்டில் விதி 5ன் கீழ் இருந்த கூட்டுப்பாதுகாப்பு உள்விதியை ஆதரவாக கொண்டு NATO நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டது. அமெரிக்க விமானங்கள் பிரான்சின் மீது பறந்து செல்லுவதற்கு மூன்று மாதகாலத்திற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் பாரிஸ் சடுதியில் அறிவித்தது; மேலும் ஆகாய, கடல், தரைப் படை இருப்புக்களையும் உதவிக்கு கொடுத்து அவை Operation Enduring Freedom உடன் இணைக்கப்பட்டன."

நவம்பர் 2001ல் ஜொஸ்பன் அரசாங்கம் "அன்றாட பாதுகாப்புச் சட்டம்" ஒன்றை இயற்றியது; அதில் கூடுலான போலீஸ் சோதனைகள் மற்றும் தொலைபேசி, இணையதள கண்காணிப்பிற்கு வகைசெய்யப்பட்டிருந்தது ...நிதி மந்திரி [Laurent] Fabius அமெரிக்காவின் வேண்டுகோளான தாலிபன், அல் கொய்தா சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்பதை விரைவில் ஏற்றுக் கொண்டார் ...ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு நிறுவப்படவேண்டும் என்று முக்கியமாக வாதிட்டவர்களில் பிரெஞ்சுக்காரர்கள் முன்னின்றனர்; அவர்கள் G-8 பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டங்களில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்தனர்" என்று MIPT குறிப்பிட்டுள்ளது.

2002க்கான MIPT கீழ்க்கண்ட குறிப்புடன் தொடங்கியது: "மிகச் சிறந்த முறையில் இராணுவ, நீதித்துறை, சட்டத்தை செயல்படுத்தும் துறைகளில் ஆதரவை பிரான்ஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கொடுத்துள்ளது. Operation Enduring Freedom என்னும் திட்டத்திற்கு பிரான்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் இராணுவ உதவியை அளித்துள்ளது; இதில் ஆப்கானிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்காக 4,200 வீரர்களை அனுப்பியதும் அடங்கும். சார்ல்ஸ் டு கோல் கடற்படைக் கப்பல் குழுவின் போர்விமானப் பிரிவு 2,000க்கும் மேற்பட்ட விமான முன்கணிப்பு, தாக்குதல் மற்றும் மின்னணு போர்த்தாக்குதலை ஆப்கானிஸ்தானத்தில் நடத்தியுள்ளது. அமெரிக்க, கூட்டணிப் படைகளுக்கு Operation Anaconda நேரத்தில் பிரான்ஸ் நெருக்கமான விமான பிரிவு ஆதரவைக் கொடுத்துள்ளது."

"அக்டோபர் மாதத்தில், நீதித்துறை அமைச்சரகம் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகளை கொண்ட குழுவில் ஐந்தாவது விசாரணை நீதிபதியை நியமிக்கவும் முடிவு எடுத்தது" என்றும் வலைத் தளம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

2003ம் ஆண்டு பற்றிய கண்ணோட்டத்தில் MIPT வலைத் தளம் குறிப்பிடுகிறது: "சர்வதேச நீதித்துறை ஒற்றுமைக்கான நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு பிரான்ஸ் தன்னுடைய உள்நாட்டுச் சட்டத்தை மாற்றும் வகையிலும், European Arrest Warrant விதிகளை இணைக்கும் வகையிலும் தற்பொழுது ஈடுபட்டுள்ளது."

பிரெஞ்சு அரசாங்கம் ஜேர்மனி, ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து, ஐ.நா. முடிவெடுக்கும் நடைமுறைகளுக்கு எதிராக, வாஷிங்டன் ஈராக்மீது படையெடுப்பதை மார்ச் 2003ல் பிரான்சின் அரசாங்கம் எதிர்த்தது. ஐ.நா.வில் இருக்கும் நடைமுறைகளை பயன்படுத்தி ஈராக் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள தன்னுடைய எண்ணெய் நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ வாஷிங்டன் கொண்ட முயற்சியையும் எதிர்த்தது. ஆனால், இது, உலகில் மூலோபாய வளங்கள் மீதான கட்டுப்பாட்டிற்கு போட்டி தரக்கூடிய சக்திகள் என்று கருதுபவர்களுக்கு எதிராக ஒத்துழைப்பதை நிறுத்தவில்லை.

அமெரிக்க உளவுத்துறை மற்றும் வெளியுறவுத் தொடர்பு அதிகாரிகள் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் பிரெஞ்சு எதிர்ப்பு குறைகூறலை வளர்த்ததை எதிர்த்ததுடன் பெரும் சங்கடத்திற்கு ஆளாயினர். பிரான்ஸ்-அமெரிக்க ஒத்துழைப்பு பற்றி, வாஷிங்டன் போஸ்டில் Dana Priest எழுதிய மற்றொரு கட்டுரையில் (ஏப்ரல் 3, 2005) குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "பிரெஞ்சு முக்கியமற்றவர்கள் 'சுதந்திர முக்கியமற்றவர்களாக' விமானப்படை எண் 1ல் (அமெரிக்க ஜனாதிபதியின் விமானம்) மாற்றப்பட்டனர்; அதேபோல்தான் பெயர்மாற்றம் காங்கிரஸ் உணவு விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது; பெரும் அதிகாரிகள் தங்களுடைய பிரான்சில் இருக்கும் ஒத்த அதிகாரிகளுக்கு தொலைபேசித் தொடர்பு கொள்ள ரம்ஸ்பெல்டினால் தடைக்கு உட்படுத்தப்பட்டனர். பாரிசில் நடந்த விமான கண்காட்சியில் அமெரிக்க விமானங்கள் பங்கு பெறவில்லை; ஒரு முக்கிய அமெரிக்க இராணுவப் பயிற்சியான Red Flag ல் பல தசாப்தங்களாக பங்கு கொண்டிருந்த பிரான்ஸ் அழைக்கப்படவில்லை."

கட்டுரை தொடர்கிறது: "பூசல் ஏற்பட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர், வெளியுறவுத்துறையும் CIA வும் பிரான்சுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தைக் கூறின; உளவுத்துறையில் அது எப்படி ஒத்துழைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர்தான் புஷ், ரம்ஸ்பெல்டிடம் காழ்ப்புணர்வுடன் பேசவேண்டாம் என்று உத்தரவிட்டார் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கொலின் எல். பவல் பிரான்சை தண்டனைக்கு உட்படுத்துவது ஒன்றும் அமெரிக்க கொள்கை இல்லை என்ற குறிப்பை வெளியிட்டார். ...ஆனால் ஒராண்டிற்கு பின்னும் ரம்ஸ்பெல்ட், 2004 Red Flag பயிற்சியில் இருந்து பிரான்சை ஒதுக்கியதின் மூலம் தன்னுடைய போக்கை தொடர்ந்திருந்தார்... உளவுத்துறை பிரிவுகள் பின்னர் தங்களை இப்பூசலில் இருந்து ஒதுக்கிக் கொள்ள முற்பட்டன... 'தாங்கள் ஒன்றும் ஆதரவை குறைத்துவிடவில்லை என்பதை வெளிப்படுத்திய வகையில்தான் பிரெஞ்சு அதிகாரிகள் செயல்பட்டனர்' என்று அமெரிக்கத் தூதராக இருந்த வுல்ப் கூறியுள்ளார்."

அமெரிக்காவின் புதிய குடியேற்ற இராணுவத் தலையீடுகளில் பிரான்சின் தொடர்பு உளவுத்துறை தகவல் பகிர்வு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் மேலாகவேதான் இருந்தது. மற்றொரு அமெரிக்க தளமான National Defense, தன்னுடைய ஏப்ரல் 7, 2005 நிகழ்வு வரை நிறைவாக கூறியவற்றில், பிரான்சின் இராணுவத் திறன், போர்த்திற செயற்பாடு பற்றி விரிவான அளவீட்டை கொடுத்துள்ளது. NATO வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களில் பிரான்ஸ் முழுமையாக பங்கு கொண்டிருந்தது, வர்ஜீனியா நார்போக்கில் Stratgeic Allied Command Transformation ல் சில அதிகாரிகளும் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்ட பின், இப்பதிப்பு பிரெஞ்சு தளபதிகள் அண்மையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ISAF (International Security Assistance Force) லும் கொசோவாவில் உள்ள KFOR லும், இரண்டு பெரிய NATO சக்திகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானத்தில், அமெரிக்காவின் இரண்டாம் பெரிய பங்காளியாக ஜேர்மனிக்கு அடுத்து பிரான்ஸ் இருந்தது என்றும் அந்த வலைத் தளம் கூறியுள்ளது. பிரான்சின் அளிப்பில் IASF ல் 900 வீரர்கள் இருந்தனர்; அதாவது அப்படைகளில் 11 சதவிகிதம் என்றும் அதைத்தவிர சில கடற்படை கப்பல்களும் விமானங்களும் இருந்தன என்றும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 29, 2005ல் Associated Press பிரான்சின் விமானப் படை கேர்னல் Gilles Michel, ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத்தளத்தில் இருந்து பேசுகையில், "உங்களுக்கு ஏதேனும் பொருட்கள் தேவையானால், நாங்கள் அவற்றை அளிப்போம்" என்று அமெரிக்கர்களிடம் தெரிவித்தார். ஆப்கான் படையெடுப்பின் ஆரம்ப நாட்களில் இருந்ததைவிட பிரான்சின் தற்போதைய படைவீரர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்றும் இதில் 500 பிரெஞ்சு விமானிகள், விமானக் கட்டுப்பாட்டாளர்கள், தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அடங்குவர், அவர்கள் புதிதாக அமெரிக்க நடைமுறை தளங்களில் ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கத்தார் ஆகிய பகுதிகளில் சேர்ந்துள்ளனர் என்றும் மிசேல் கூறினார்.

அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான ஆக்கிரமிப்பை, மகத்தான முறையில் எதிர்த்து, பிரான்சின் அரசாங்கம் போருக்கு எதிர்ப்பை கொண்டுள்ளது என்று பெரிதும் நம்பிய பிரெஞ்சு மக்களுக்கு அதிகம் தெரியாத உண்மை என்னவென்றால், பிரான்ஸ் முக்கியமான இராணுவ அளிப்பை ஆக்கிரமிப்பு படைகளுக்கு கொடுத்துள்ளது என்பதுதான்.

அசோசியேடட் பிரஸ் கட்டுரை, "பிரான்ஸ் இப்பொழுதும் நேரடியாக ஈராக்கில் எந்தப் பங்கையும் கொள்ளவில்லை.... ஆனால் பிரான்ஸின் தலைமையில் கடல் ரோந்துகள் பாக்கிஸ்தான் மற்றும் ஆபிரிக்க கொம்புப் பகுதிகளில் மறைமுகமாக நடத்தப்பட்டன, அவை அங்கிருக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கின்றன; இதையொட்டி ஈராக்கிய எழுச்சியாளர்கள், வளைகுடாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் ஆகியோருக்கு கடல்வழியே உதவிகள் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது... கிட்டத்தட்ட ஒரு டஜன் பிரெஞ்சு கப்பல்கள் செளதி அரேபியா, கிழக்கு ஆபிரிக்கா, ஈரான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் கடலைச் சுற்றி நின்று ஹார்முஸ் ஸ்ட்ரைட்ஸிற்குச் செல்லும் கப்பல்களை நிறுத்துகின்றன; அங்கு பாரசீக வளைகுடா, ஈராக் ஆகியவற்றின் நுழைவாயிலுக்கு பாதுகாப்பு இதுதான்." என்று பிரெஞ்சு, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக எழுதியுள்ளது.

CIA பாரிசை Alliance Base க்கு தளமாக்க விரும்புவதற்கு அடிப்படைக் காரணம் பிரான்ஸின் ஐந்து பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகளின் மட்டிலா அதிகாரம் ஆகும்; இவர்கள் Jean-Louis Bruguiere தலைமையில் செயல்படுகின்றனர்; கைது செய்தல், காவலில் வைத்தல், பிரான்ஸ் மற்றும் அதன் பகுதிகள் முழுவதிலும் விசாரணை நடத்தல் ஆகியவை உள்பட அதிகாரங்களை இக்குழு கொண்டுள்ளது

வாஷிங்டன் போஸ்ட்டில் நவம்பர் 2, 2004ல் எழுதிய Craig Whitlock சுட்டிக் காட்டுவதாவது: "ஐரோப்பாவிலேய கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் வலிமையைக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கம் இஸ்லாமிய தீவிரப் போக்கினரையும், பயங்கரவாதத் திறனும் அச்சுறுத்தலும் உள்ளவர்கள் என்று நினைப்பவர்களையும் கடுமையாக இலக்கு வைத்துள்ளது. மற்ற நாடுகள் பாதுகாப்பு, தனிமனித உரிமைகள் இவற்றிற்கு இடையே இருக்க வேண்டிய சமநிலை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது, பிரான்ஸ் தான் கொண்டிருந்த தந்திரோபாயங்கள் சட்டவிரோதமானவை இல்லையெனில், பூசலுக்குரியதாக அமெரிக்காவிலும் மற்ற சில நாடுகளிலும் கொள்ளப்படும் என்பது பற்றி பொது அதிருப்தியை அற்பமாகவே கொண்டிருந்தது."

Bruguiere சான்றுகள் சேகரிக்கும் நேரத்தில், சந்தேகத்திற்கு உரியவர்களை "தவறு செய்பவர்களுடன் தொடர்பு" என்ற குழப்பமான விதிகளுடன், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இடைக்கால காவலில் வைத்தலின் பொருள், பிரான்ஸ் மக்களின் முழுப் பிரிவுகளும் அரசாங்க அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளனர் என்பதாகும். கடந்த ஆண்டு எந்த எதிர்ப்பும் சோசலிஸ்ட் கட்சியிடம் இருந்து இல்லாமல் இயற்றப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மேற்கூறிய குற்றத்திற்கான தண்டனையை இருமடங்காக்கி 20 ஆண்டு சிறை தண்டனை என்று ஆக்கியுள்ளது. Bruguiere பீற்றிக் கொள்ளுகிறார்: "இதற்கு இணையாக ஐரேப்பாவில் எங்கும் இல்லை" என்று.

DST என்னும் பிரான்ஸின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான நாட்டுக் கண்காணிப்பு அமைப்பு (Direction de la surveillance du territoire) ஏராளமான அரபு மொழி அறிந்தவர்களையும் முஸ்லிம்களையும் தீவிரக் குழுக்களில் ஊடுருவச் செய்துள்ளது.

அதேநேரத்தில், பிரான்சின் ஆய்வு நீதிபதிகள் செலுத்தும் அதிகாரம் மற்ற நாடுகளில் உள்ள ஒருதலைப்பட்ச கைதுக்கு எதிரான சட்ட வரம்புகளை புறக்கணிப்பதற்கு பிரெஞ்சு அரசுக்கு மிக அதிக சலுகைகளை கொடுத்துள்ளது.

இதற்கு ஒரு உதாரணம், அல் கொய்தா காரியாளர் என்று கருதப்படுகிற ஜேர்மன் நாட்டவரான Christian Ganczarski பற்றிய விஷயமாகும். செளதி அதிகாரிகள் இவரை ஜேர்மனிக்கு வெளியேற்ற தயாராக உள்ளனர், ஆனால் ஜேர்மனிய அதிகாரிகள் அவரைக் கைது செய்வதற்கு தங்களிடம் போதுமான சான்றுகள் இல்லை எனக் கூறினர்.

இதன் பின்னர் செளதியர்கள் அவரை பாரிசுக்கு ஊடாக ஜேர்மனிக்கு செல்லும் வகையில் விமானம் ஒன்றில் அனுப்பிவைத்தனர். அவர் ஜூன் 2, 2003ல் பிரெஞ்சு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். பிரான்சில் இன்னும் 17 மாதங்களுக்கு பிறகும் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்; எந்த வித சான்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி கிடையாது, அவர்மீது குற்றச் சாட்டுக்களும் இல்லை; அவர் மீதுள்ள சந்தேகம் ஒரு துனீசிய குண்டுவீச்சில் அவர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதுதான். அந்தக் குண்டுவீச்சில் சில பிரெஞ்சு நாட்டினர் இறந்து போயினர் என்ற உண்மை, Bruguiere க்கும் அவருடைய குழுவிற்கும் பிரெஞ்சு சட்டத்தின்படி அவரை, இந்த ஜேர்மனிய நாட்டவரை, காலவரையின்றி காவலில் வைத்திருக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது.

பிரான்சின் மனித உரிமைகள் குழுவின் தலைவரும், ஒரு வக்கீலுமான Michael Tubiana, அறிவிப்பதாவது: "பிரான்சில் குடியுரிமைகளில் உறுதியாக அரிப்பு ஏற்பட்டுள்ளது; இது பயங்கரவாதத்தை பொறுத்து மட்டும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத செயல்களை இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved