World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

As Australian media covers up Howard's role

Racial violence continues in Sydney

ஹோவாட்டின் பங்கை ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் மூடிமறைக்கையில்

சிட்னியில் இன வன்முறை தொடர்கிறது

By Rick Kelly
13 December 2005

Back to screen version

வடக்கு கிரோனுல்லா கடற்கரையில் முஸ்லீம்கள், மத்திய கிழக்கு புலம் பெயர்ந்தோர் மீது ஞாயிறன்று இனவெறித் தாக்குதல்களை நடந்ததை அடுத்து, சிட்னியின் கிழக்கு புறநகர்ப்பகுதிகளில் நேற்று இரவு வன்முறைப் பூசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு ஆண்கள் கூட்டம் முஸ்லிம் குடிபெயர்ந்தோர் ஏராளமாக இருக்கும் லேகேம்பா தென்மேற்குப் புறநகர்ப்பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிறன்று மரோப்ரா புறநகர் கடற்கரைப் பகுதியில் மத்திய கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்தோர் செய்த இதேபோன்ற செயல்களுக்கு பதிலடியான அழிப்பு வேலை என்பது வெளிப்படையாகும். ஓர் தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற அச்சுறத்தல் வதந்தியை அடுத்து, ஏராளமான முஸ்லீம் ஆண்கள் பின்னர் லேகெம்பா மசூதியில் கூடினர். ஒரு சிலர் சில கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மாரோப்ரா கடற்கரையில் "Bra Boys" கும்பலுடன் தொடர்புடைய 300 இளைஞர்கள் இரும்புத்தடிகளுடனும் கிரிக்கெட் மட்டைகளுடனும் முன்னரே ஏற்பாடுசெய்திருந்த மோதலுக்காக கூடினர். செய்தியாளர்கள் அச்சுறுத்தலுக்குட்பட்டு, எச்சில்துப்பப்பட்ட பின்னர் இடத்திலிருந்து ஓடினர்; கற்களும், தீச்சுடர்களும் போலீசாரின்மீது வீசப்பட்டன. கைத்துப்பாக்கி போன்ற கருவியை கடற்கரையில் கண்டுபிடித்த போலீசார் தெற்கு மாரோப்ராவில் 30 பெற்றோல் வெடிகுண்டுகள் மற்றும் ஏராளமான கற்களையும் கைப்பற்றினர்.

சுற்றியிருந்த கிழக்குப் புறநகர்ப் பகுதிகளில், மேற்குப் புறநகரில் உள்ள மத்திய கிழக்கு இளைஞர்கள் வராமல் தடுக்கும் வகையில் போலீசார் பெரிய செயற்பாட்டை மேற்கொண்டனர். மாநில தொழிற்கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகாரம் நிறைந்த "கும்பல்-எதிர்ப்பு" அதிகாரங்களை பயன்படுத்தி, சாலைகள் மூடப்பட்டு சோதனைச் சாவடிகள் கிழக்கு புறநகர்ப் பகுதிகள் முழுவதும் அமைத்திருந்தனர். துப்பாக்கி முனையில் இளைஞர்கள் அவர்களுடைய காரில் இருந்து கீழிறக்கப்பட்டனர்; பின்னர் அவர்கள் முகம் தரையில் பதியுமாறு படுக்க வைக்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்களும், உடல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Sydney Morning Herald கொடுத்துள்ள தகவலின்படி, 20 கார்களில் இருந்த இளைஞர்கள் போலீஸ் சாலைத் தடைகளை தவிர்த்து கிரோனுல்லாவில் கடைகளின் சன்னல்களையும் கார்களின் கண்ணாடிகளையும் நொருக்கினர். ஒரு பெண்மணி கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது; மற்றொரு பெண்மணி மயங்கும் அளவிற்கு அடிக்கப்பட்டார். ஒரு 51 வயது மனிதன் பேஸ்பால் மட்டையால் தாக்கப்பட்ட பின்னர் ஒரு கையில் பெரும் காயம் அடைந்தது உட்பட, மற்ற காயங்களும் தகவல்களாக வந்துள்ளன. மாரோப்ராவில் துப்பாக்கிவெடிச் சத்தம் கேட்டதாக சில சாட்சியங்கள் கூறியுள்ளன. குறைந்தது ஆறு பேராவது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெருக்கடி பெருகிய அளவில், போட்டிக்குழு இளைஞர்கள் எரியூட்டும் செய்திகளை சுற்றறிக்கைக்கு விட்ட வகையில், இந்த வன்முறையைத் தூண்டுவதில் செய்தி ஊடகத்திற்கு இருந்த பங்கிற்கான கூடுதலான சான்றுகள் கிடைத்துள்ளன; ஞாயிறன்று வடக்கு கிரோனுல்லா கடற்கரையில் இனவெறி கொண்ட 5,000 பேர் கொண்ட கும்பல் கூடியதில் இந்த வன்முறை தொடங்கியது.

கடந்தவாரம் குறைந்தது ஒரு வானொலி பேச்சுநிகழ்ச்சி நடத்துபவராவது அவருடைய சொற்களை கேட்பவர்களை கூட்டத்தில் சேர அழைப்பு விடுத்தார். Sydney Morning Herald இன்படி, சிட்னியின் முன்னணி "shock jock" விடுத்த அழைப்பாவது: "ஒரு போராட்ட அணி, ஒரு தெருக்கள் வழியேயான அணிவகுப்பு, எப்படியாயினும் சரி (வாருங்கள்). சமூகத்தின் சக்தியைக் காட்டுவதாக இது இருக்க வேண்டும்." ஏன் இனவெறிபிடித்த தகவல்கள் வினியோகிக்கப்படுகின்றன என்பது தமக்குப் "புரிவதாகவும்" ஞாயிறன்று "Leb and wog bashing day" தேவை என்ற அழைப்பையும் விடுத்தார். அவருடைய நேயர்களில் ஒருவர் "ஜோன்" பின் வானொலியில் கூறினார்: "ஒருவரை சுடுங்கள், மற்றவர்கள் ஓடிவிடுவர்." ஜோன்ஸ் உரக்கச் சிரித்து விடையிறுத்தார்: "இல்லை, நீங்கள் ஒன்றும் Queensabury விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டாம். நன்றாக கூறினார்கள், ஜோன்."

ஆளும் தாராளவாத கட்சிக்கு முன்பு பேச்சுக்கள் தயாரித்துக் கொடுப்பவராக ஜோன்ஸ் இருந்தார்; இப்பொழுதும் அரசாங்கத்தில் முக்கியமானவர்களோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார்; இதில் பிரதம மந்திரியும் அடங்குவார். அவருடைய வெளிப்படையான இனவெறி வானொலி உரைகள் ஹோவர்ட் அரசாங்கத்தின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

"குலமரபுத்தன்மையை" (tribalism) ஹோவர்ட் கண்டிக்கிறார்

வடக்கு கிரோனுல்லா கடற்கரையில் நிகழ்ந்த வன்முறையை ஹோவர்ட் எதிர்கொண்ட விதம் அவர் அரசாங்கம் எப்பொழுதும் செய்யும் நடைமுறையைத்தான் சுட்டிக்காட்டியது. கும்பல் தாக்குதல்களை இனவெறித் தாக்குதல்கள் என்று பெயரிட பிரதம மந்திரி மறுத்தார்; மாறாக உண்மையான பிரச்சினை லெபனான் கும்பல்களின் "குலமரபுத்தன்மை" (tribalis) என்றும் அவர்கள் "ஆஸ்திரேலிய சமூகத்துடன்" இணைந்து வாழ மறுக்கிறார்கள் என்றும் கூறினார்.

"இந்த நிகழ்வுகள் பற்றி ஒரு தீர்மானத்திற்கு அவசரப்பட்டு நாம் வந்துவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் அறிவித்தார். "இந்த நாட்டில் அடிமட்டத்தில் இனவெறி இருக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை.... மக்களை பரந்த சமூகத்துடன் இணைப்பதில் கூடுதலான வலியுறுத்தலை நாம் காட்டவேண்டும் என்பதும் முக்கியமானது ஆகும்; நம்மிடையே குலமரபுத்தன்மையை தவிர்த்தலும் முக்கியம். ஆஸ்திரேலியர்கள் குலமரபுத்தன்மையை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஆஸ்திரேலியர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நம் மக்கள் விரும்புகின்றனர்."

ஹோவர்ட் தொடர்ந்தார்: "வார இறுதியில் ஏராளமான மக்கள் இணைந்தது, மற்றும் மிக அதிகமான மதுபானமும் சேர்ந்து, துன்பங்கள் கூடிய நிலையும், ஏற்கனவே வெடிப்புத் தன்மையும் சேர்ந்து நேற்றைய நிகழ்வுகள் ஏற்பட்டன; இதன் முழு அளவையும் நான் அறிந்துவிட்டேன் என்று பாசாங்கு செய்யத் தயாராக இல்லை."

"தற்போதைய நிகழ்வுகள்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேசியக் கொடியை கும்பல் ஏந்திவந்தது பற்றி என்ன நினைக்கிறார் என்று ஹோவர்ட் கேட்கப்பட்டார். "பாருங்கள், ஆஸ்திரேலியக் கொடி பற்றி பெருமிதம் கொள்ளுவதற்காக மக்களை நான் கண்டனத்திற்கு உட்படுத்தமாட்டேன். இதைப் பற்றி எனக்குக் கவலையில்லை -- பெருமிதம் இருப்பதற்காக நான் ஒருபோதும் மக்களைக் கண்டிக்க மாட்டேன்." என்று அவர் பதில் கூறினார்.

இவை அனைத்தும் புத்தகத்தில் இருக்கும் "நாய் குரைக்கும்" அரசியல் ஆகும். வன்முறையை ஹோவர்ட் கண்டிக்கிறார், அடுத்த கணத்தில் அதைச் செய்வோரின் குறைகளையும், "குலமரபுத்தன்மை" பிரச்சினை பற்றியும் வலியுறுத்துகிறார்; உட்குறிப்பாக லெபனிய எதிர்ப்பு இனவெறிக்கு பரிவுணர்வை வெளிப்படுத்துகிறார்.

1996 இல் பிரதம மந்திரி பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே ஹோவார்ட் ஆட்சி அரசாங்கத்திற்கு தளமாக ஒரு இனவெறி வலதுசாரித் தேசிய தன்மையைத்தான் வளர்க்க முற்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் மிகத் தீவிர வலதுசாரி உறுப்பினர் Pauline Hanson பூர்விக குடிமக்களையும், குடிபெயர்ந்தோரையும் தாக்கியபோது, ஹோவர்ட் அவ்வம்மையாரின் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்; ஆனால் உடனேயே இப்பிரச்சினைகள் பற்றி ஒரு "விவாதத்திற்கு" அழைப்பு விடுத்தார்; அதற்குக் காரணம் தன்னுடைய செயற்பட்டியலுக்கு ஆதரவைத் திரட்டுவதுதான்.

2001ம் ஆண்டு மூன்றாம் முறையாக பதவியை ஹோவர்ட் வெற்றியடைந்தார்; இதன் பின்னணி கடுமையான கெடுதல்கள் நிறைந்த முற்றலும் நேர்மையற்ற அகதிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டதும், ஆஸ்திரேலியக் கடலுக்குள் தங்கள் குழந்தைகளை தஞ்சம் கோருவோர் தூக்கி எறிந்துவிட்டனர் என்ற பொய்யை மையமாகக் கொண்ட பிரச்சாரத்தை மேற்கொண்டதும்தான்.

அந்தப் பிரச்சாரத்தில் தாராளவாத கட்சியின் மத்திய கோஷமாக இருந்தது பிரதம மந்திரியின் பிரகடனமான, "இந்த நாட்டிற்கு எவர் வரவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வோம், எந்தச் சூழ்நிலையில் அவர்கள் வரலாம் என்பதையும் முடிவு செய்வோம்." என்பதுதான்.

சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்கம் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை பயன்படுத்தி அனைத்து மத்திய கிழக்குக் குடிபெயர்ந்தோர் மீதும் சந்தேக நிழலை அரசாங்கம் பயன்படுத்திய வகையில் முஸ்லிம் ஆஸ்திரேலியர்கள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டுள்ளனர். நியூ செளத் வேல்சில், இது மாநில தொழிற்கட்சி அரசாங்கத்தின் "சட்டம், ஒழுங்கு" பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரியான பொப் கார் லெபனிய "கும்பலை" அரக்கத்தனமாக சித்தரிப்பதில் தேர்ச்சி பெற்று, போலீஸ் இருப்புக்கள் அதிகமாவதற்கும் அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகாரங்களை கூட்டவும் உதவி புரிந்தார். 1995ல் வெற்றி பெற்றதில் இருந்து மாநில அரசாங்கம் ஒவ்வொரு லெபனிய இளைஞரும் "சமூக விரோத" குற்றவாளி, கூட்டமாக கற்பழிக்கும் தன்மை உடையவர் என்று செய்தி ஊடகம் முடிவில்லாமல் தகவல்கள் தருவதற்கு உடந்தையாக இருந்துள்ளது.

இளைய முஸ்லிம்களின் கணிசமான பிரிவின் அந்நியப்படுதல், அதிருப்தி ஆகிய தன்மைகள் விரைவுபடுத்தப்படுவதைத்தான் இத்தகைய பிரச்சாரங்கள் செய்தன; ஏற்கனவே அவர்கள் மிக மோசமான அளவில் வறுமையையும், வேலையின்மையையும் கொண்டு துயரத்தில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இடையேயான இளைஞர் வேலையின்மை விகிதம் மற்ற ஆஸ்திரேலியர்களைவிட ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. சிட்னியின் மேற்கு புறநகர் பகுதிகளில் சமூக நலன்கள் இழப்பு ஏராளமான தொழிலாள வர்க்க இளைஞர்கள் பெருந்திகைப்பில் இருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த இளைஞர்களுக்கு கெளரவமான வருங்கால வாய்ப்பு என்பதற்கும் இடமில்லை என்று உள்ளது.

இதேபோன்ற போக்குகள்தான் கிழக்கு புறநகர் கடற்கரைப் பகுதியிலும் காணப்படுகின்றன; அங்கு ஏராளமான இளைஞர்கள் கெளரவமான ஊதியமுள்ள வேலையைப் பெற முடியவில்லை. பலரும் மதுவிற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாகி தற்கொலைக்கும் தயாராகின்றனர். வேண்டுமென்றே இனவெறி அழுத்தங்களை கிளப்பிவிடுவதும், இளைஞர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிடுவதும், சமூக நெருக்கடியை தோற்றுவிப்பதற்கு பொறுப்புக் கொண்டவர்கள் திசை திருப்பும் வகையில் நடந்து கொள்ளுவதைத்தான் தொழிலாள வர்க்க இளைஞர்கள் எங்கும் எதிர்கொள்ளுகின்றனர்.

ஹோவர்ட் அரசாங்கச் செயற்பாடுகளுக்கு செய்தி ஊடக மூடிமறைப்பு

கடந்த இரண்டு நாட்களாக இந்நிகழ்வுகளில் உள்ள எந்தப் பிரச்சினை பற்றியும் செய்தி ஊடகம் பகுத்தாராய மறுக்கிறது. வலதுசாரி பரபரப்பு பத்திரிகைகளில் இருந்து பெயரளவிற்கு தாராளக் கொள்கை என்று கூறும் ஏடுகள் வரை செய்தி ஊடகத்தின் ஒவ்வொரு பிரிவும் வேண்டுமென்றே ஹோவர்ட் அரசாங்கத்தின் பொறுப்பை மூடி மறைக்கிறது.

இன்றைய ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில்தான் விமர்சனக் குரல்கள் வெளிவந்துள்ளன; ஆஸ்திரேலியன் மற்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் கருத்து கேலிச்சித்திரங்களிலும் இத்தன்மை வெளிப்பட்டுள்ளது. ஹெரால்டின் Alan Moir ஒரு மொட்டைத்தலையன் ஆஸ்திரேலியக் கொடியை சுற்றிக் கொண்டிருக்கும் படம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த மனிதன்தான் ஹோவர்டின் 2001 தேர்தல் கோஷத்தை எதிரொலிக்கிறான்: "நம்முடைய புறநகர்ப்பகுதிக்கு எவர் வருகிறார் என்பதை நாம் நிர்ணியிப்போம்; எந்த விதத்தில் அவர்கள் வரலாம் என்பதையும் முடிவு செய்வோம்". இதேபோல் ஆஸ்திரேலியன் ஏட்டின் Bill Leak ஒரு லெபனான்-எதிர்ப்பு இனவெறிக் கும்பல் ஒன்று "கிரோனுல்லாவிற்கு எவர் வருவர் என்பதை நாம் முடிவு செய்வோம், எந்த சூழ்நிலையில் ...." என்று கூறியபடி வருவதைச் சித்தரித்துள்ளார். இப்படத்திற்குக் கீழே "ஹோவர்டிற்காக போரிடுபவர்" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான வாசகர் கடிதங்கள் ஹோவர்ட் அரசாங்கத்தின் போக்கிற்கும் கிரோனுல்லா இனவெறிக் கும்பலின் போக்கிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக் காட்டியுள்ளன. "ஹோவர்ட் அரசாங்கமும் அதற்குக் கைதட்டும் செய்தி ஊடகமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இனவெறி எழுப்பும் நாய்க்குரலைக் கொடுத்துவருகின்றன. அவை பதிலடி கொடுக்கும்போது இவர்கள் ஏன் இந்த அளவிற்கு ஆச்சரியப்படுகிறார்கள்?" என்று Anthony Smith எழுதியுள்ளார்.

"கிரோனுல்லாவின் கும்பல் 'ஆஸி, ஆஸி, ஆஸி, ஒய், ஒய், ஒய்' என்று குரலெழுப்பியது; சிலர் தங்களை ஆஸ்திரேலிய கொடியினால் மூடிக்கொண்டனர்." என்று ஆஸ்திரேலியனின் Isabelle Wharley எழுதியுள்ளார். "வெளிப்படையான இனவெறி மறைப்பில் தேசப்பற்று எப்படி வந்தது? எளிதான விடை. நம்முடைய நாடு, தன்னை பெரும் நாட்டுப்பற்றாளர் எனப் பிரதிபலித்துக் கொண்டு, அதேநேரத்தில் அரசியல் ஆதாயத்தை பெறுவதற்காக சமூகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இனவெறி உணர்வுகளை தூண்டுவதற்கு தயங்காத பிரதம மந்திரியினால் வழிநடத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகள் திரு ஹோவர்டுடையவை; ஆனால் சகிப்புத் தன்மை பரந்தளவில் தோல்வியுற்றதால் ஏற்பட்ட சேதத்தை திருத்துவதற்குப் பல தசாப்தங்கள் பிடிக்கும்."

இத்தகைய உணர்வுகள் செய்தி ஊடகத்தின் வர்ணனையில் பிரதிபலிக்கவில்லை. இனவெறி வன்முறைக்கு ஒருமித்த விடையிறுப்பு பிரச்சினைக்கு லெபனிய இளைஞர்கள்தான் காரணம் என்று கூறி கூடுதலான போலீஸ் அதிகாரத்தை கோருவதாகத்தான் உள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்டின் தலையங்கம் "மணல், பீர், வெறுப்பில் ஒரு நாள்" என்பது கூடுதலாக போலீசார் நகரத்தின் கடற்கரைகளில் இருக்கு வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளது. செய்தித் தாள் தொடர்ந்து கூறியது: "இந்தப் பிரச்சினை இளைய லெபனிய ஆண்கள் குழுக்களால் தூண்டப்படுவது. மற்ற இன இளைஞர் குழுக்களை விட வெளிப்படையான முறையில் இவர்கள் ஏன் சாதாரண ஆஸ்திரேலிய வாழ்க்கையை ஏற்கத் தயங்கவேண்டும்?"

Daily Telegraph உடைய தலையங்கம் மற்ற கடற்கரைக்கு கிரோனுல்லாவில் வருபவர்களை எவ்வாறு முஸ்லிம் இளைஞர்கள் தொந்திரவு கொடுக்கிறார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டும் நிகழ்வுகளை தொகுத்துக் கூறுகிறது. செய்தித்தாளின் தலையங்க பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள முக்கிய கட்டுரை Piers Ackerman ஆல் எழுதப்பட்டுள்ளது; இதில் பாதிக்கப்பட்டவர்களை குறைகூறும் பழைய உத்திமுறை கையாளப்பட்டுள்ளது; இளைய முஸ்லிம்கள் "இரண்டாந்தர குடியுரிமையையும் பிரிவினையையும் அவர்களுடைய செயல்களின் விளைவுகளினாலேயே ஏற்கின்றனர்" என்று அவர் கூறுகிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved