WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Egyptian police kill at least 20 Sudanese
protesters
சூடான் கண்டனக்காரர்கள் குறைந்த பட்சம் 20 பேரை எகிப்து போலீசார் கொன்றனர்
By Harvey Thompson
3 January 2006
Back to screen version
கொய்ரோவிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடு கமிஷ்னர் (UNHCR)
அலுவலகத்திற்கு வெளியில் டிசம்பர் 30 அன்று கண்டனங்கள் நடத்திய சூடான் அகதிகளின் கூட்டத்தில் எகிப்திய கலவரத்
தடுப்பு போலீசார் கொடூரமாக தாக்கியதால் குறைந்தபட்சம் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருபது கணக்கிலான
மற்றவர்கள் காயமடைந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக சூடானை சேர்ந்த சுமார் 2,000 அகதிகளும் தஞ்சம் புக
விரும்புவோரும் தலைநகரின் உயர் நடுத்தர- வர்க்க புறநகரைச்சார்ந்த மொகான்திசீன்னில் உள்ள முஸ்தபா முஹமது
சதுக்கத்தில் முகாமிட்டிருந்ததுடன், பலர் திறந்த வெளியில் படுத்துறங்கி வந்தனர். எகிப்தில் தாங்கள் நடத்தப்படுகின்ற
விதம் குறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் மற்றொரு நாட்டில் குடியமர்த்தக்கோரி வருகின்றனர்.
சூடான் புகலிடம் கோருவோரின் வழக்குகளை விசாரிப்பதை
UNHCR செப்டம்பர்
மாதம் நிறுத்திவிட்டது. மனுச் செய்து அகதி அந்தஸ்து பெறத் தவறி விட்டவர்களுக்கு
UNHCR உதவிகளை நிறுத்திய
பின்னர் இந்தக் கண்டனங்கள் தொடங்கின. சூடானில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவிற்கு
கொண்டு வருவதற்காக ஜனவரியில் ஒரு அதிகாரபூர்வமான சமாதான உடன்படிக்கை கையெழுத்தானதின் விளைவாக ஐ.நா.
இந்த முடிவிற்கு வந்ததாக வலியுறுத்திக் கூறியது என்றாலும், தங்களில் பலர் சூடானுக்கு திரும்ப அனுப்பப்பட்டால்
ராஜதுரோகத்திற்காக தூக்கிலிட அல்லது சித்திரவதை செய்வதற்கான ஆபத்து உள்ளதாக தஞ்சம் புக விரும்பிய பலர் தெரிவித்தனர்.
மேற்கு பிராந்தியத்தின் டர்புரில் நடைபெற்ற ஒரு பிரிவினை மோதல்களில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்
இடம்பெயர்ந்தனர் மற்றும் பத்தாயிரக் கணக்கானோர் மடிந்தனர்.
சில வழக்குகள் விசாரணையை மீண்டும் தொடக்குவதாக உறுதியளித்தும் வீட்டிற்காக 700
டாலர்களை வரை (ா406)
ஒரே தவணையில் தந்து விடுவதாகவும் உறுதியளித்தும், கண்டனம் செய்து வரும் சில தலைவர்களோடு ஒரு பேரத்திற்கு
வந்திருப்பதாக UNHCR
சென்ற வாரம் அறிவித்தது. அந்த முகாமிலுள்ள மிகப்பெரும்பாலோர் இந்த பேரத்தை
ஏற்றக் கொள்ள மறுத்துவிட்டனர். ஜ.நா. ஆதரவை ஓரளவு பெற்று வரும் அகதிகளும் அது போதுமானதாக
இல்லையென்று புகார் கூறினார்.
டிசம்பர் 30 அதிகாலையில் 30,000 எகிப்து கலவரத் தடுப்பு போலீசார் அந்த ஆட்டங்காணப்படுகின்ற
முகாமைச் சுற்றி அனுப்பப்பட்டனர். பல மணி நேரம் மோதலுக்கு பின்னர் கண்டனம் செய்தவர்கள் பெரும்பாலும் அட்டைகளாலும்
பிளாஸ்டிக் தகடுகளாலும் அமைக்கப்பட்ட, தங்களது முகாமை இடித்து தள்ளிவிட்டனர் ஆனால் அவர்களில் மிகப்
பெரும்பாலோர் காத்துக் கொண்டு நின்ற பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவதற்கு மறுத்தனர். இது சம்மந்தமாக
போலீசாருக்கும் கண்டனம் செய்பவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே
பாதுகாப்புப் படைகள் வேகமாக தண்ணீரை பீச்சிக் கொண்டு அந்த முகாமிற்குள் ஒட்டு மொத்தமாக படையெடுத்தனர்.
ஆயிரக்கணக்கான போலீசார் துப்பாக்கிகளை திருப்பிப் பிடித்து எல்லா திசைகளிலும் கண்டனம் செய்தவர்கள் மீது
தாக்குதல்களை நடத்தினர்.
போலீசார் குண்டாந்தடிகளால் அகதிகளை தாக்குவதை நேரில் பார்த்த அசோசியேட்
பிரஸ் நிருபர் ஒருவர் பல சம்பவங்களில் அவர்கள் வெளியில் இழுத்து வரப்பட்ட நேரத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டதாக
குறிப்பிட்டார். இரண்டு இளைஞர்களும் நான்கு வயது பெண் குழந்தை ஒன்றும் சுய நினைவற்ற நிலையில் இழுத்துவரப்படுவதை
அந்த நிருபர் பார்த்தார். மருத்துவ உதவி வாகனத்தில் அமர்ந்திருந்த ஒரு மருத்துவ ஊழியர் அந்தப் பெண்
இறந்துவிட்டதாக குறிப்பிட்டார். இரண்டு போலீஸ்காரர்களால் இழுத்து வரப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மூன்றாவது
அதிகாரியால் மனிதனின் கை அளவில் உள்ள ஒரு மரக்கிளையால் தாக்கப்பட்டார்.
கண்டனம் செய்தவர்களில் 25 பேர் மடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மற்றும்
உள்துறை அமைச்சக அறிக்கை ஒன்று மேலும் 50 பேர் ''பெரும்பாலும் முதியவர்களும் குழந்தைகளும்''
காயமடைந்ததாக தெரிவித்தது. 75 போலீசாரும் காயமடைந்ததாக அந்த அறிக்கை கூறியது.
வன்முறைக்கு கண்டனக்காரர்கள் மீது உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. "அவர்கள்
கலைந்து செல்வதற்கு இணங்க வைக்க முயற்சிக்கப்பட்டன, ஆனால் பயனில்லை" என்று அது குற்றம் சாட்டியது.
"புலம்பெயர்ந்தோர் தலைவர்கள் போலீசாருக்கு எதிராக ஆத்திரமூட்டுவதிலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்" என
அமைச்சகம் தந்துள்ள தகவலின்படி ஒரு கூட்ட நெரிசலினால் கண்டனக்காரர்கள் பலியாயினர்.
கூட்ட நெரிசல் எதையும் தான் பார்க்கவில்லை என்று
AP நிருபர் கூறினார்
மற்றும் அந்த முகாம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் கண்டனக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஒட முடியாது.
"அவர்களது தற்காலிக கொட்டகையை தாங்கி நின்ற கம்புகளை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு போலீசாருடன்
போராடிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது" என்று அந்த நிருபர் எழுதினார்.
ஒரு சூடானிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவான----சவுத் சென்டரை சேர்ந்த
அதிகாரிகள்---1280 கண்டனக்காரர்கள் நிர்பந்த முறையில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கெய்ரோவிற்கு வெளியிலிருந்த
மூன்று முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
முகாமை விட்டு வெளியேற மறுத்ததால் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட அகதிகள்
பேருந்துகளை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதை பார்த்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். "அவர்கள் எங்களை
கொல்ல விரும்புகின்றனர் எங்களது கோரிக்கைகள் நியாயமானவை, இங்கே கண்டனம் தெரிவிப்பது எங்களது
உரிமையாகும், அது ஒன்று தான் எங்களிடம் இருக்கும் உரிமை" என்று ஒரு கண்டனக்காரர் சத்தமிட்டார்.
சூடானிலிருந்து தஞ்சம் நாடி வந்தவர்களில் ஒருவரான நெப்போலியன் ராபர்ட்ஸ்
BBC-ன் "ஃபோகஸ் ஆன்
ஆபிரிக்கா" நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தபோது தலைநகருக்கு தெற்கிலுள்ள ஒரு தங்குமிடத்திற்கு அவரை அழைத்துச்
சென்றதாகவும் அங்கு வெறுப்பை தூண்டுகின்ற சூழ்நிலைகளில் மேலும் சுமார் 1700 அகதிகளுடன் தங்க
வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "காலையிலிருந்து எங்களை மிகவும் வெறுப்பைத்தூண்டுகின்ற சூழ்நிலையில்
வைத்திருந்தனர், குடிதண்ணீர் இல்லை, குளியல் அறை இல்லை.....அவர்களது உடல்களில் உள்ள காயத்தோடு மக்கள்
அங்கே தங்கியிருந்தனர்" என்று அவர் BBC
நிகழ்ச்சிக்கு தெரிவித்தார்.
"UNHCR
ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை தருகிறது ஆனால் வீடுகள் இல்லை, கல்வியில்லை, வேலை எதுவுமில்லை. வாரக்கணக்காக
நாங்கள் மொச்சைக்கொட்டைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று ராபர்ட்ஸ் விளக்கினார்.
ராபர்ட்சின் மனைவி இந்த மறியல் போராட்டத்தின் போது குழந்தை பெற்றவர்களில்
ஒருவர் நவம்பரில்---கெய்ரோ விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னனிடம் பாதுகாப்பு
அதிகாரிகளையும் மீறி அவர் பயணம் செய்த காரை நெருங்கி தாவிச் சென்று தன்னை ஒரு மேற்கு நாட்டில்
குடியேற்றுமாறு கேட்டுக்கொள்ளும் கடிதத்தைக் கொடுத்தார்.
"எந்த நாடு எங்களை ஏற்றுக் கொள்கின்ற வசதி படைத்ததோ அவற்றில் புகலிடம் கோர
1951 ஜெனீவா ஒப்பந்தப்படி எங்களுக்கு உரிமையுண்டு" என்று அவர் கூறினார்.
கண்டனம் செய்பவர்களின் நெருக்கடியான நிலையும் அவர்களது உறுதிப்பாடும் அதிகாரிகளுக்கு
நன்றாகவே தெரியும். மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏழு ஆர்பாட்டக்காரர்கள் இறந்து
விட்டனர், மூன்று குழந்தைகள் பிறந்தன, நான்கு பெண்களுக்கு குறை பிரசவம் ஆயிற்று பலர் சாகும் வரை உண்ணாவிரதம்
இருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நியூ யோர்க்கை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு "பெருமளவிற்கு உயிர்
சேதம் ஏற்பட்டிருப்பது போலீசார் மிகத்தீவிரமான கொடூரத்துடன் செயல்பட்டிருப்பதைக் காட்டுகிறது" என்று
கூறியிருக்கிறது மற்றும் பலாத்காரம் பயன்படுத்தப்பட்டது பற்றி புலன் விசாரணை செய்வதற்காக சுதந்திரமானதொரு
கமிஷனை அமைக்குமாறு எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு "அவசரமாக" வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
ஜெனீவாவிலுள்ள UNHCR
பேச்சாளரான அந்தோனியோ கட்டரஸ் "என்ன நிகழ்வுற்றது என்பது எங்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாகவும் மிகவும்
துன்பகரமானதாகவும் உள்ளது. அத்தகைய பலாத்காரத்திற்கும் உயிர்கள் இழப்பிற்கும் எந்தவிதமான நியாயமும் இல்லை"
என்று கூறினார்.
ஆனால் ஐ.நா மீண்டும் ஒரு முறை சூடான் அகதிகள் தொடர்பாக தனது கையை
கழுவிடுவதற்கு மிகவும் ஆர்வத்துடன் உள்ளது. தனது அலுவலகங்களுக்கு வெளியில் நடந்த வெளிப்படையான சங்கடமான
அகதிகளுடைய எதிர்ப்பு பிரச்சினையை எகிப்து அதிகாரிகள் ''தீர்த்து வைப்பதற்காக''
UNHCR-ன் தூண்டுதலை
தொடர்ந்து கெய்ரோவில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
குடியமர்த்தப்பட்ட வேண்டும் என்ற ஐ.நா விற்கு விடுக்கப்பட்ட அகதிகளுடைய கோரிக்கை
மீதாக கருத்துத்தெரிவிக்கையில், ''[மீண்டும்
குடியமர்த்தப்படுவது]
உண்மையில் UNHCR-யுடைய
நன்கொடையல்ல---- அது அவர்களை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கின்ற
மூன்றாவது நாட்டை பொறுத்ததாகும். கண்டனம் செய்து வருபவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த நாங்கள் முயன்று
வந்தோம் மற்றும் பல சமரச முயற்சிகள் நடைபெற்றன. அவர்கள் எகிப்தில் தங்களது நிலைமை கடுமையாக உள்ளது
என்று கூறுவதாக தோன்றுகிறது ஆனால் அவர்கள் [சூடானுக்கு]
திரும்ப அனுப்பப்படக் கூடிய ஆபத்து எதுவுமில்லை. எகிப்தில் அவர்கள் பணியாற்றலாம் மற்றும் கல்வி கற்கலாம்.
கெய்ரோவிலுள்ள UNHCR-ன்
லைலா ஜேன் நாசிப் குறிப்பிடும்பொழுது, ``[ஆர்பாட்டக்காரர்களது]
முடிவை பொறுத்துத்தான் நடவடிக்கைகள் அமையுமென்று நான் நினைக்கிறேன். அவர்களது கவலைகள் தொடர்பாக நாங்கள்
என்ன செய்ய முடியம் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்துவதற்கு நாங்கள் கடுமையாக முயன்று
வருகிறோம். முகாமிட்டுள்ளவர்கள் அனைவரும் சூடானை சேர்ந்தவர்களா? அல்லது ''இதர தரப்பினரை சேர்ந்தவர்களா''
என்பது எப்போதுமே தெளிவில்லாமல் உள்ளது" என்று கூறினார்.
கெய்ரோ சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை பரப்புவதில் எகிப்து மற்றும் சூடான் பத்திரிகைகளுக்கு
இடையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. பிரதானமாக அரசிற்கு சொந்தமான எகிப்து ஊடகங்கள் போலீசாருக்கு
சாதகமாகவும் பெரும்பாலும் கண்டனம் செய்தவர்கள் மீது பழி போடுவதாகவும் அகதிகள் மற்றும் தஞ்சம் புக
விரும்புவோருக்கு எதிராக பொது மக்களது எதிர்ப்பை ஊக்குவிக்க முயல்கின்றன.
இதற்கு மாறான வகையில், கார்ட்டூம் மானிட்டர் எழுதியதாவது: "தங்களது
சொந்த நட்டின் கொதித்துக் கொண்டிருக்கின்ற எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எகிப்து என்கின்ற எரியும் நெருப்பிற்குள்
விழுந்து விட்ட மக்களின் மிகுந்த துக்ககரமான முடிவை இது காட்டுகிறது. பொருத்தமற்ற மிகக் கொடூரமான பலாத்காரம்
தேவையற்ற முறையில் மனித நேயமற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
"அல் அத்வா, சூடானில் அரசாங்கத்தின் உடந்தையை சுட்டிக்காட்டியுள்ளது.
"இதற்குத் தான் பொறுப்பல்ல என்று சூடான் அரசாங்கம் நினைக்குமானால் அது தவறு
மற்றும் அந்த சம்பவம் தொடர்பாக அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடாதது வியப்பளிப்பதாக உள்ளது.
இறந்தவர்கள் சூடான் குடிமக்கள் மற்றும் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் அரசாங்கம் அவர்களது
பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்."
எகிப்தில் 30,000 சூடான் மக்கள் மட்டுமே அகதிகள் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும்
சூடானிலிருந்து 2.5 மில்லியன் அகதிகள் எகிப்திற்குள் ஓடி வந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது- போதுமான
அளவிற்கு சமூக சேவைகள் கிடைக்காத நிலையிலும் அதிகாரபூர்வமாக 25 சதவீத வேலையில்லாத நிலையிலும் ஏற்கனவே
வறுமையில் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் உத்தியோகபூர்வ பொருளாதார தடை வேறுபாட்டை மட்டுமே
எதிர்கொண்டுள்ளது. எகிப்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போய்விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சூடான்
அகதிகளின் புகைப்படங்கள் கெய்ரோ முகாமைச் சுற்றி காட்சிக்கு தொங்கவிடப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ''கருப்பர்களை வேட்டையாடும் நடவடிக்கை'' என்று ஒரு
போலீஸ் ஆவணத்தை மேற்கோள்காட்டி, எகிப்து போலீசார் நூற்றுக்கணக்கான ஆபிரிக்கர்களை கைது செய்தார்கள்
என்று, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. |