World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

East Asian Summit plagued by tension and rivalry

பதட்டங்கள் மற்றும் போட்டியினால் பீடித்த கிழக்கு ஆசிய உச்சி மாநாடு

By John Chan
23 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 14ல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) ஒரு ''கிழக்கு ஆசிய சமுதாயம்'' என்ற திட்டமே தொடங்குமா என்பதை கேள்விக்குறியாக விட்டுள்ளது.

1997-98ல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியை தொடர்ந்து 10 நாடுகள் அடங்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அமைப்பு ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவையும் சேர்த்துக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஆசியான்+3 குழுவின் (ASEAN+3) ஒரு விரிவாக்கம் தான் EAS கூட்டமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக ஒரு ஆசிய வர்த்தக அணியை நோக்கி நகர்வதுதான் அதன் நோக்கம். ஆனால் இந்த பிராந்தியத்திலுள்ள இரண்டு பெரிய பொருளாதார வல்லரசுகளான சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூர்மையான பதட்டங்கள் முதல் கூட்டத்திலேயே இப்போக்கிற்கு முட்டுக் கட்டை போட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் முதல் தடவையாக ஆசிய பசிபிக்கில் மேலாதிக்கம் செலுத்துகின்ற வல்லரசான அமெரிக்கா ஒரு பெரிய பிராந்திய அரங்கு என்று திட்டமிடப்பட்டுள்ள ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கூட கேட்டுக் கொள்ளப்படவில்லை. யார் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது தொடர்பாக ஆசியான் இற்குள்ளே கூர்மையான பிளவுகள் ஏற்பட்ட பின்னர் தான் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்தியா அழைக்கப்பட்டன. ரஷ்யா ஒரு பார்வையாளராகவே பங்கெடுத்துக் கொண்டது.

ஆசியான் உச்சிமாநாடு மற்றும் அதற்கு பின்னர் ஆசியன்+3 உச்சிமாநாட்டை தொடர்ந்து அதே வாரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற EASஇன் கடைசி மூன்றாவது தொடர் கூட்டம் நடைபெற்றது. மூன்று உச்சிமாநாடுகள் தொடர்பான முக்கியத்துவத்தை அவை வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து ஊகிக்கலாம். ஆசியான் இந்த பிராந்தியத்தின் ''உந்து சக்தி'' மற்றும் இந்த பிராந்தியத்து ஒருங்கிணைப்பிற்கு ''பிரதான வாகனம்''தான் ஆசியான்+3 என்று கூறப்பட்டது. ஆனால் EAS ''பொதுவான நலன்கள் மற்றும் கவனங்கள்'' குறித்த பரந்த பிரச்சனைகளை ''கலந்துரையாடுகின்ற ஒரு அரங்கு'' என்று வர்ணிக்கப்பட்டது.

EAS ஒழுங்குமுறையாக சந்திக்கும் மற்றும் ஒரு ஆசியான் உறுப்பு அரசு அதற்கு தலைமை வகிக்கும். சூழ்நிலைகள் மாற்றமடையும் என்பதால் இப்போதுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு குழு (APEC) போன்ற மற்றுமொரு EAS கூடியளவில் பயனற்ற ஒரு பேச்சுப்பட்டறையாக தரமிறக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்படலாம். ''பொருளாதார ஒத்துழைப்பிற்கான ''பிரதான வாகனமாக'' ஆசியான்+3 தொடரும் அதில் அமெரிக்கா அதேபோல் ஆஸ்திரேலியா நியூஸிலாந்து மற்றும் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய மற்றும் வடக்கு அமெரிக்க வர்த்தக அணிகள் வளர்ந்து வருவதை எதிர்ப்பதற்காக 1990களின் தொடக்கத்தில் ''காக்கசியன்ஸ்கள் இல்லாத கிழக்கு ஆசிய காக்கஸ்'' என்ற ஒரு கருத்தை மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொகம்மது முதலில் முன்னெடுத்து வைத்தார். ஜப்பானின் நலன்களை பிரதிபலிப்பதாக அமைந்திருந்த அந்தத் திட்டம் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் உதவியோடு அமெரிக்கா அவற்றை செயல்திறனோடு முடக்கி அனைவரும் உள்ளடங்கிய, அதனால் பயனற்ற APEC ஐ உருவாக்கியது.

அதற்கு ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அமெரிக்கா இல்லாத ஒரு பிராந்திய அரங்கு இறுதியாக உருவாயிற்று. ஆனால் பூகோள பொருளாதாரத்தில் சீனா ஒரு பெரிய காரணியாக உதித்தெழுந்ததை தொடர்ந்து கிழக்குஆசிய உறவுகளில் மிக ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக EAS முன்மொழிவு சீனாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான போட்டியினாலும் ஆரம்பத்திலிருந்தே பாதிப்பிற்குள்ளானது. அதேபோல் அத்தகைய ஒரு அணி ஒரு முக்கியமான ஏற்றுமதி சந்தையும் மற்றும் ஒரு மேலாண்மை இராணுவ வல்லரசான அமெரிக்காவுடன் கொள்ள வேண்டிய உறவு பற்றிய சிக்கலான பிரச்சனையை ஏற்படுத்தியது.

EAS உச்சிமாநாட்டிற்கு முன்னர் ''ஆசியான் மூலோபாயம்'' பற்றிய தனது உரையில் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் டாரோ ஆசோ முன்னணி பங்கு வகிக்க முயன்று வந்ததாக குறிப்பிட்டார். ஆசியாவில் ''ஒரு சிந்தனை தலைவர்'' என்ற அபிலாஷையை ஜப்பான் கொண்டிருப்பதாக அறிவித்தார். அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்குமிடையே கூட்டணியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஜப்பான் ''ஒரு ஸ்திரத்தன்மை கொண்டது அது பாதுகாப்பை வழங்கும் சாத்தியத்தை உறுதிசெய்கிறது பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு இரண்டு பகுதிகளிலுமே ஆசிய செழிப்பிற்கான ஒரு அடித்தளமாகும்'' என்று கூறினார்.

சீனாவின் பிரதமர் வென் ஜியோபோ ஆசியான்+3 உச்சி மாநாட்டிற்கு முன்னர் ஜப்பானுடனும் தென்கொரியாவுடனும் ஒரு மூன்று-வழி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மறுத்து பதிலளித்தார். ஜப்பான் பிரதமர் ஜீனிசிரோ கொய்சுமி அண்மையில் யாசுக்குனி நினைவாலயத்திற்கு விஜயம் செய்ததற்கு பெயரளவில் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் இந்த இராஜதந்திர நிராகரிப்பாக அமைந்தது. ஆனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஆழமான பதட்டங்களை பிரதிபலிப்பதாக அது அமைந்திருந்தது.

இந்த போட்டி பற்றி கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி பகிரங்கமாக வெளியிட்ட எச்சரிக்கையில் ''கிழக்கு ஆசிய ஒத்துழைப்பில் பிரதான தூண்களில் ஒன்று என்று நாங்கள் கருதுவது ஜப்பானுக்கும், சீனாவிற்கும் இடையில் நிலவுகின்ற உறவுகளாகும். அதில் பிளவுகள் உருவாவது குறித்து நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்'' என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்புநோக்குதல்

கிழக்கு ஆசிய சமுதாயம் அமைப்பது அடிக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்புநோக்கப்படுகிறது. என்றாலும் ஐரோப்பிய ஒன்றியம் போருக்குப்பிந்திய காலத்தில் அமெரிக்காவின் ஊக்குவிப்பினாலும் அதன் மேலாதிக்கத்தின் கீழும் பிரான்சிற்கும், ஜேர்மனிக்கும் இடையில் ஏற்பட்ட சமரசத்தினால் உருவானது. அதற்கு பின்னர் இதர ஐரோப்பிய நாடுகளையும் அரவணைத்துக்கொண்டது. பனிப்போரின் முடிவைத்தொடர்ந்து அமெரிக்காவுடனும் ஐரோப்பாவிற்குள்ளேயும் பதட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

கிழக்கு ஆசியாவில் அத்தகைய ஒப்புமை இல்லை. 1970களின் தொடக்கத்தில் பெய்ஜிங்குடன் அமெரிக்கா உறவுகளை உருவாக்கிய பின்னரும் கூட பனிப்போர் காலத்து போட்டிகள் சீனாவிற்கும் ஜப்பானுக்குமிடையில் தொடர்ந்தன. இந்த பிராந்தியத்தின் பொருளாதார இயக்கவியல் மற்றும் ஆசிய புலிகள் என்றழைக்கப்பட்ட ஊக்குவிப்பில் ஒரு முக்கிய பங்கை ஜப்பான் வகித்தது. என்றாலும் இப்போது ஜப்பானினதும் பூகோள பொருளாதாரத்தினதும் செயல்பாட்டிற்கு உயிர்நாடியான மலிவுக்கூலியை சீனா மிகப்பரவலாக இருப்பாக வைத்திருக்கும் நிலையை டோக்கியோ எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

வாஷிங்டன் ஆதரவோடு டோக்கியோ ஆசியாவில் தனது முத்திரையை பதிப்பதற்கும் ஒரு பெரிய இராணுவ வல்லரசாக மீண்டும் ஸ்தாபிப்பதற்கும் தன்னை முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் சீனா தனது பொருளாதார வலிமையை பயன்படுத்தி தனது பாதுகாப்பை பெருக்கிக் கொள்ளவும் இந்த பிராந்தியத்தில் ஒரு பெரும் அரசியல் மற்றும் மூலோபாய பங்கை அமைப்பதற்கு முயன்று வருகிறது. இரண்டு நாடுகளும் ஏற்கனவே முக்கியமான சிறிய தீவுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மற்றும் அவற்றின் மூலம் கிழக்கு சீன கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களுக்காக மோதிக் கொண்டிருக்கின்றன.

இரண்டு நாடுகளிளலும் உள்ள அரசாங்கங்கள் தேசியவாத உணர்வுகளை ஒன்றின் மீது மற்றொன்று கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக கொய்சுமி ஜப்பானிய இராணுவவாதத்ற்கு புத்துயிர் கொடுக்க அப்பட்டமாக முயன்று வருகிறார். ஜப்பானின் போர் கால அட்டூழியங்களை தவறாக சித்தரிக்கின்ற பள்ளிக்கூட பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் தந்திருக்கிறார் மற்றும் யாசுக்குனி நினைவாலயத்திற்கு விஜயம் செய்து கொண்டிருக்கிறார். பெய்ஜிங்கும் சீனாவின் தேசியவாதத்தை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது அது சீனாவிலுள்ள ஜப்பானியர்கள் மீது இனவாத தாக்குதல்களை நடத்துவதற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

கிழக்கு ஆசிய அணி உருவாவதற்கான சாத்தியக் கூறு பற்றி சுருக்கமாக டிசம்பர் 14-அன்று தனது தலையங்கத்தில் Financial Times ''பிரான்சும் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இதயம் போன்று அமைந்திருமப்பது போலல்லாமல் இரண்டாம் உலகப் போரின் பின்னணியை வைத்து சீனாவும், ஜப்பானும் செயற்படவில்லை அல்லது தங்களது பொருளாதார சார்பு நிலையை பிரதிபலிக்கின்ற அரசியல் ஒத்துழைப்பிற்கான ஒரு சமுதாயத்தை உருவாக்கவில்லை. அப்படி அந்த இரண்டு நாடுகளும் செய்கின்ற வரை மகதீரின் கனவான ஆசிய ஒற்றுமை குறித்து அமெரிக்கா அஞ்ச வேண்டியதில்லை. ஆசிய நாடுகள் சமுதாயம் போன்ற எதையும் வைத்திருப்பது பற்றி பெருமைப்படக்கூடியதற்கு ஒன்றும் இல்லை'' என குறிப்பிட்டிருந்தது.

சென்ற ஆண்டு சீனா EAS உச்சிமாநாட்டை பெய்ஜிங்கில் நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தது ஆனால் ஜப்பானின் வலுவான எதிர்ப்பினால் செயலூக்கத்துடன் அந்த திட்டம் இரத்து செய்யப்பட்டது. EAS பெரும்பாலும் ஆசியான்+3 அணியோடு சார்ந்திருக்க வேண்டும் என்ற மலேசியாவின் திட்டத்தை பெய்ஜிங் வலுவாக ஆதரித்து நிற்கிறது. அவற்றில் சீனா கணிசமான அளவிற்கு பொருளாதார வலிமை பெற்றதாகும். மற்றொரு பக்கத்தில் ஜப்பான் EAS யை விரிவுபடுத்தி அதில் அமெரிக்காவை சேர்த்து கொள்ளாவிட்டாலும் அவற்றின் ஆதரவாளர்களான ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்தை சேர்க்க முயன்று வருகிறது.

ஜப்பானின் Yomiuri Shimbun பத்திரிகை தனது டிசம்பர் 4 தலையங்கத்தில் தெரிவித்த கருத்தில்: ''சீனா தற்போது ஆசியான்+3 கூட்டத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதற்கு காரணம் ஆசியான் உறுப்பினர்கள் மீதான தனது பொருளாதார வலிமையை வலியுறுத்திக்காட்டி ஜப்பானை ஓரங்கட்டி விட சாத்தியக்கூறு உண்டு என்றும் வரலாற்று பிரச்சனை தொடர்பாக தென்கொரியாவுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க முடியும் என்றும் கருதுகிறது''. சீனாவைப் போன்று தென்கொரியாவும் திரிக்கப்பட்ட ஜப்பான் வரலாற்றுப் பாடநூல்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தது.

ஆசியான் உறுப்பினர்களை கவருகின்ற வகையில் ஜப்பான் பறவை காய்ச்சல் நோயினால் வரும் ஆபத்தை எதிர்த்து போரிடுவதற்காக 70 மில்லியன் டாலர்கள் நன்கொடையையும் 1.35 மில்லியன் உதவியையும் அறிவித்திருக்கிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பொருளாதார ரீதியாக மிகப்பெருமளவில் பின்தங்கியுள்ள மூன்று நாடுகளான லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாமிற்கு உள்கட்டமைப்பு உதவிக்கு நிதி உறுதியளித்துள்ளது.

சீனாவை ஓரங்கட்டுவதற்கு டோக்கியோ மேற்கொண்டுள்ள முயற்சிகள் தெளிவாக வாஷிங்டனின் ஆதரவை பெற்றிருக்கிறது. டிசம்பர் 14இல் Washington Post வெளியிட்டுள் கருத்தின்படி EAS இல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்தியா சேர்க்கப்பட்டிருப்பது ''சீனாவின் செல்வாக்கை சமநிலைபடுத்துவதற்கு போதுமான எடை உள்ளது மற்றும் குறிப்பாக அமெரிக்க கவலைகளுக்கு தயார் நிலையிலுள்ள வடிகாலான ஆஸ்திரேலியா மூலம் அதை செய்ய முடியும் என்று காட்டுகிறது. ஆனால் அமெரிக்காவின் நேச நாடுகள் அதில் இருப்பது சாத்தியமான ஒரு அணியை உருவாக்குவதில் சிக்கலை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா, வடக்கு கிழக்கு ஆசியாவிற்கு குறிப்பாக சீனாவிற்கு நடத்தப்படும் ஏற்றுமதிகளை வலுவாக சார்ந்திருக்கிறது. எனவே EAS இல் ஒரு இடத்திற்காக கடுமையாக அது ஆதரவு திரட்டியது. இதற்கு முன்னர் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வந்த நிலையிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் கன்பெராவிற்கு ஏற்பட்டது. அவற்றை பிரதமர் ஜோன் ஹோவர்ட் கடந்த காலத்து பொருத்தமற்ற நினைவு சின்னம் என்று கூறியிருந்தார்.

என்றாலும் மாநாட்டில் ஒரு இடத்தை வென்றெடுத்தாலும் ஆஸ்திரேலியா உடனடியாக மேலும் தடைக்கற்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது அதற்கு ஒரு பகுதி காரணம் ஹோவர்ட் அரசாங்கம் பரவலாக புஷ் நிர்வாகத்தின் எடுபிடி என்று கருதப்படுகிறது. கூட்ட முடிவில் மலேசிய பிரதமர் பதாவி ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் உண்மையிலேயே ''கிழக்கு ஆசிய நாடுகள்'' அல்ல என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இந்தியாவிற்கு பதாவி சற்று சிறப்பான வரவேற்பு அளித்தார். ''உண்மையிலேயே கிழக்கு ஆசிய நாடாக இல்லாவிட்டாலும் [இந்தியா] நமக்கு உடனடியாக பக்கத்திலிருக்கின்ற நாடு'' என்று குறிப்பிட்டார். சென்ற மாதம் புதுடெல்லி ஜப்பானையும், சீனாவையும் தென் ஆசிய பிராந்திய கூட்டமைப்பு கழகத்தில் (SAARC) துணை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதை ஆதரித்தது. ஆசியான் உடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை இந்தியா வற்புறுத்தி வருகிறது. ஆனால் ஒரு இருதரப்பு வர்த்தக பேரம் தொடர்பாக இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் சரியான வரவேற்பில்லை என்ற நேரத்தில் EAS ரஷ்யாவை ஒரு அபேட்சக (Candidate) உறுப்பினராக ஏற்றுக் கொண்டதுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். சீனாவும், ஜப்பானும் ரஷ்யாவை எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு ஒரு பெரிய வளமாக கருதுகின்றன. சென்ற மாதம் ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2020 வாக்கில் தற்போது 3 சதவீத அளவை ஒப்பிடும்பொழுது ரஷ்யாவின் 30 சதவீத எண்ணெய் ஏற்றுமதி ஆசிய நாடுகளுக்கு செல்லும்.

இராஜ தந்திர மொழியை புரியுமாறு விளக்குவது என்றால் சீனாவின் ஆதரவோடு மலேசியாவின் ஒரு குறுகிய குழுவாக்கல் முயற்சி நிலைநாட்டப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. EAS இற்கு எந்த கணிசமான பங்களிப்பும் இல்லாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளியிட்ட கொய்சுமி ''கலந்துரையாடல் நடத்துவதற்கு மட்டுமேயானதாக இராது உண்மை ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பாக நமது கூட்டங்களை நாம் உருவாக்குவோமானால், பங்குபெறுவோரின் ஐக்கியம் மிகவும் திடமானதாகயிருக்கும்.'' என்று குறிப்பிட்டார்.

என்றாலும் இந்தக் கட்டத்தில் EAS ஒட்டு மொத்தத்திட்டமும் குறைமாத குழந்தையாக தோன்றுகிறது. ஒத்துழைப்பை விட பெரிய வல்லரசுகளுக்கிடையில் போட்டியும் பதட்டங்களும்தான் அதிகமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Top of page