:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
New Orleans police gun down mentally ill man
நியூ ஓர்லியன்ஸ் போலீஸ் மனநலமற்ற மனிதனை சுட்டனர்
By Joanne Laurier
29 December 2005
Back to screen version
உறவினர்களால் மனநோய்வாய்ப்பட்டவர் என்று வர்ணிக்கப்பட்டும் நியூ ஓர்லியன்ஸ் நகர
மனிதர் ஒருவர் திங்களன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 38 வயதான அந்தோனி ஹயேஸ் ஒரு மூன்று அங்குல
கத்தியை வைத்துக்கொண்டு போலீசாரை நோக்கி பாய்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டபின் அவர் கொல்லப்பட்டார். ஏறத்தாழ
18 போலீஸ் அதிகாரிகளுடன் ஹெய்ஸ் மோதியதின் ஒரு பகுதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற மூன்று நபர்கள்
வீடியோ நாடாவில் பதிவு செய்தனர். 18 போலீஸாரில் மூன்று பேர் அந்த மனிதர் மீது ஒன்பது குண்டுகளை சுட்டனர்.
பலியானவர் நோய்வாய்ப்பட்டவர் என்று தெளிவாகத்தெரிந்தும் மரணம் உண்டாகக்கூடிய அளவிற்கு
பலாத்காரம் பயன்படுத்தப்பட்டது குறித்து நேரில் கண்டவர்கள் தங்களது ஆத்திரத்தை வெளியிட்டனர். ஹெய்ஸ் ஒரு பழக்கப்பட்ட
ஆனால் தனித்திருப்பவர். அச்சுற்றாடலில் காட்சியளிப்பவர் என்று அவர்கள் கூறினர். ஹயேஸ் உணவு விடுதி மேஜையில் மணிக்கணக்காக
செலவழித்து மற்ற வாடிக்கையாளர்களை பற்றி கவலைப்படாமல் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பார் என்று பேர்கர்
கிங் ஊழியரான மைக்கேல் டாவ்சன்கூறினார்.
ஒரு தொழில் நிபுணத்துவ வீடியோகிராபரான பின் பேர்சி ஒரு இரண்டாவது மாடி ஜன்னல்களிலிருந்து
வீடியோ படம்பிடித்தார். அது அந்த தெருவில் ஹெய்ஸ் பின்னங்காலில் பின்னோக்கி நகர்ந்து போலீசாரிடமிருந்து விலகியே
சென்றார் என்று காட்டுகிறது. அவர் ஒரு சிறிய கத்தியை தனது வலது கையில் வைத்திருந்தார். அப்போது ஒரு டசினுக்கு
மேற்பட்ட போலீசார் அந்த மனிதரை இலக்கு வைத்து அவர்கள் துப்பாக்கியுடன் விரைந்து ஓடினர்.
தனது சேதமடைந்த வீட்டை பார்வையிடுவதற்காக டெக்ஸாஸ் அஸ்டினிலிருந்து வந்து சேர்ந்த
மோனிக் சேம்பாக்னேயும் சூடு நடப்பதற்கு முன்னான நிகழ்வினை படம்பிடித்திருக்கிறார். ''அந்த மனிதனை சுற்றி
அத்தனை போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்ததால் அவரை ஏதாவது ஒரு போலீஸ்காரர் சுட்டிருக்கவேண்டும் என்று
நான் நினைத்தேன்'' என்று சேம்பைன் குறிப்பிட்டார். அந்த இடத்தில் நின்றவர்கள் போலீஸ் சுடவேண்டாம் மற்றும்
ஹயேசை சரணடைந்துவிடுமாறு மன்றாடினர் என்று அவர் வர்ணித்தார்.
''அது முதலில் ஐயத்திற்கிடமின்றி அமைதியாகவும் மெதுவாகவும் அதன்பின்பு அதிகமான
போலீசார் தோன்றியதும் வேக வேகமாக நடைப்பெற்றது. அதற்குப் பின்னர் ஒரு துப்பாக்கி வெடித்தது அதை அடுத்து
பல துப்பாக்கிகள் வெடித்தன........இப்படி நடந்து கொண்டது அநீதி என்று நான் நினைக்கிறேன். அந்த மனிதன்
இறந்திருக்கக்கூடாது. அது வெட்கக்கேடானது.'' என்றும் அவர் கூறினார்.
மோதலில் ஒரு பகுதியை தனது கடையின் ஜன்னல் வழியாக பார்த்த அந்தக்கடையின்
சொந்தக்காரர் ராபர்ட் ஸ்டிக்கன்சி ''அவர்கள் அவரை கொன்றது ஒரு வெட்கக்கேடான செயல்.'' என்று
குறிப்பிட்டார்.
அருகாமையில் உள்ள மது அருந்தும் நிலைய உரிமையாளரான டிரே பிரோக்கா ''அவருக்கு
அருகில் வேறு எவரையும் நான் பார்க்கவில்லை. எவரும் காயம் அடையப்போகிறார்கள் என்று தோன்றவில்லை'' என்று
நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர்களின் அளவிற்கு அதிகமான சக்தியை கொண்டு ஹெய்ஸ் காலில் சுட்டிருக்கலாம் (அல்லது
அவர் கத்தியை கீழே போடும் வரை காத்துக்கொண்டிருக்கலாம் அல்லவா) என்ற கேள்விகளுக்கு பதிலளித்த நியூ
ஓர்லியேன்ஸ் போலீஸ் தலைமை அதிகாரியான வாரன் ரிலே கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தினார்.
Associated Press
இற்கு பேட்டியளித்த அவர் மரணத்தை விளைவிக்காமல் அதிகாரிகள் துப்பாக்கி
பிரயோகம் செய்திருப்பார்களானால் அது அவர்கள் பெற்ற பயிற்சியை காட்டிக்கொடுப்பதாக ஆகிவிடும் என்று
தெரிவித்தார். கத்தியால் தாக்கப்படும்போது அதற்கு எதிராக பயங்கரமான பலாத்காரத்தை பயன்படுத்த
அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது மற்றும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக மோதி
சந்தேகத்திற்குரியவர்களிடமிருந்து ஆயுதங்களை பறித்துக்கொள்வதற்கு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் அவர்
கூறினார்.
''மிகப்பெரும்பாலான போலீஸ்துறைகள்----மாநில உள்ளூர் மற்றும் மத்திய அரசுகளில்
தலையிலோ அல்லது மார்புப்பகுதியிலோ சுட்டுக்கொல்வதற்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்று ரெய்லி
கூறினார்.
ஹெய்ஸ் இன் கொலை நியூ ஓர்லியேன்ஸ் போலீசார் சம்பந்தப்பட்ட முதலாவது
கொடூரமான சம்பவம் அல்ல. அக்டோபர் 8ம் திகதி நகர போலீஸ் அதிகாரிகள் நகரின் பிரெஞ்சு குடியிருப்பு பகுதியில்
ஓய்வு பெற்ற 64 வயது ஆசிரியர் ராபர்ட் டேவிசை மிக கொடூரமாக தாக்கியமை வீடியோ
படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்ற வாரம் இரண்டு அதிகாரிகள் பதவியிலிருந்து
நீக்கப்பட்டனர் மற்றும் மூன்றாவது அதிகாரி நான்கு மாதங்களுக்கு தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டார்.
காத்தரீனா சூறாவளிக்கு பின்னர் நடைபெற்ற போலீஸ் வன்முறை சம்பவங்கள் இரண்டும்
வீடியோ படம் எடுக்கப்பட்டிருக்காவிட்டால் நியூ ஓர்லியேன்ஸ் ஊடகங்களில் கவனத்திற்கு இடமளியாமல் விடப்பட்டிருக்கும்.
உண்மையிலேயே லூசியானாவின் அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் கடந்த ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக
போலீசாரின் அட்டூழியங்கள் பற்றி குறைந்தபட்சம் 10 புகார்களை விசாரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தது.
நியூ ஓர்லியேன்ஸ் பெருநகர மெட்ரோபாலிட்டன் குற்றவியல் குழுவைச்சேர்ந்த ரபேல்
கொயனேச்சே கருத்துப்படி போலீஸ்துறையிலிருந்து பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிற்பதாக கருதுகின்றனர் ''ஊழல்
நீடித்துக்கொண்டிருப்பதில் தனிச்சிறப்பையும் புதிய பிரச்சனைகள் அதை மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
காத்தரினா நெருக்கடி காலத்தில் பாதுகாப்பற்ற வர்த்தக நிலையங்களிலிருந்து 13
அதிகாரிகள் திருடியதாக கூறப்படுவது குறித்து இன்னும் விசாரணை நடைப்பெற்றுக்கொண்டுதான் உள்ளது. டிசோபிட்டோலஸ்
தெருவில் இருக்கும் Wal-Mart
இல் போலீஸ்காரர்கள் விற்பனைப் பொருட்களை திருடுவதை வீடியோக்களும்
புகைப்படங்களும் காட்டுகின்றன. ஒரு கடிலாக் கார் வியாபாரிடமிருந்து ஏறத்தாழ 200 கார்களை அப்புறப்படுத்தியது
தொடர்பாக 40 அதிகாரிகள் அனைவரின் மீதும் மாநில சட்டமா அதிபர் அலுவலகம் தலையிட்டு தனியாக வழக்குப்பதிவு
செய்து விசாரணை செய்து வருகிறது.
நியூ ஓர்லியேன்ஸ் போலீஸ்துறையில் ஊழலும் கொடூரத்தன்மையும் உயர்வது பல தாசாப்தங்களாக
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 1990களில் போலீசார் கடைகளில் திருடுவது, இலஞ்சம் வாங்குவது முதல் வங்கிக்கொள்ளை,
போதைப்பொருள் விற்பனை, கற்பழிப்பு மற்றும் கொலை செய்வது போன்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டது
முதல் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டன. இரண்டு முன்னாள் போலீஸ்காரர்கள் தற்போது தூக்கு மேடைக்கு செல்லவிருக்கிறார்கள்----ஒருவர்
தன் மீது புகார் தாக்கல் செய்த ஒரு பெண்ணை 1994ல் கொலை செய்ததற்காகவும் மற்றொருவர் 1995ல் ஒரு உணவு
விடுதியில் நடைபெற்ற தாக்குதலின்போது மூன்று கொலைகளை செய்ததாகவும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றனர்.
புஷ் நிர்வாகத்தின் காத்தரீனா தொடர்பான இராணுவவாத அணுகுமுறை மற்றும் ஊடகங்கள்
அந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் சூறையாடல் பேர்வழிகள் மற்றும் கற்பழிப்பவர்கள் என்று சித்தரித்தாலும் போலீஸ்துறையிலுள்ள
மிக பிற்போக்குத்தனமான மற்றும் ஒருவரை துன்புறுத்தி இன்பம் காணும் சக்திகளை மேலும் ஊக்குவிப்பதாக
அமைந்துவிட்டது.
Wal-Mart மற்றும் கார்களை போலீஸ்
அதிகாரிகள் திருடியது தக்க ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்----இராணுவம் வருவதற்கு
முன்னர்----காத்தரீனா சூறாவளி தாக்கிய ஒரு வாரத்தில் நடைபெற்ற இதர சம்பவங்கள் மிகக்குறைந்த அளவிற்கே
ஊடகங்களில் இடம்பெற்றன. நியூ ஓர்லியேன்ஸ் போலீஸ் அதிகாரிகளினால் நடத்தப்பட்ட ஏழு தனித்தனி துப்பாக்கி சூடுகளில்
நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இதில் மிக அதிகமான கருத்துவேறுபாடுகளுக்கு இடம்தந்த சம்பவங்கள் செபடம்பர் 4 அன்று
கிழக்கு நியூ ஓர்லியேன்ஸ் டான்சிகர் பாலத்தில் நடைப்பெற்றன. டிசம்பர் 18ல்
Times-Picayune
பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையின்படி போலீஸ் வானொலியில் துப்பாக்கி சூடுபற்றி ஒலிபரப்பப்பட்டபோது
நியூ ஓர்லியேன்ஸ் ஹராஸ் சூதாட்டத்தில் முன்அரங்கில் உள்ள சமையலாளர்
''விடுதி'' 'தலைமையகத்தில்' பல மைல்களுக்கு அப்பால் கூடியிருந்த படைத்தலைவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
செய்தனர். எதற்காக இந்த கொண்டாட்டம் என்று கேட்டபோது ஒரு போலீஸ் அதிகாரி ஆறு பேரை
சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் எங்கள் நபர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை'' என்று ஒரு தலைவர் பதில்
சொல்லியிருக்கிறார்.
முன்னரே ஒரு ஒப்பந்தக்காரர் மீது சுடப்பட்ட அந்த பகுதியில் ''அதிகாரிகள் குண்டு
அடிப்பட்ட'' ஒரு அறிக்கைக்கு தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தபோது 7வது மாவட்ட அதிகாரிகள் மீது
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று போலீசார் குறிப்பிட்டார். புகைமண்டலம் தெளிவான பின்னர் வந்திருந்த எந்த
போலீஸ் அதிகாரியும் காயமடையவில்லை.'' கொல்லப்பட்டவரான நிராயுதபாணியான 40 வயது உடல் ஊனமுற்ற
ரோனால்டு மாடிஷனை முதுகுப்பக்கம் பல முறை சுட்டியிருக்கிறார்கள்.
மன நோயாளி ஒருவர் அவரால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலையில்
மிகக்கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். மற்றும் இந்தக்கொலை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட
''கொல்வதற்கு-சுடு'' என்ற கட்டளையின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய அரசு விவகாரங்கள்
தெரிவிப்பது என்னவென்றால் அமெரிக்க சமுதாயத்தில் வளர்ந்து வரும் கொடூரத்தன்மையையும் அவற்றின் சமூக
துருவப்படுத்தலையும் கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. |